புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று....! - Page 3 Poll_c10வரலாற்றில் இன்று....! - Page 3 Poll_m10வரலாற்றில் இன்று....! - Page 3 Poll_c10 
25 Posts - 69%
heezulia
வரலாற்றில் இன்று....! - Page 3 Poll_c10வரலாற்றில் இன்று....! - Page 3 Poll_m10வரலாற்றில் இன்று....! - Page 3 Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று....! - Page 3 Poll_c10வரலாற்றில் இன்று....! - Page 3 Poll_m10வரலாற்றில் இன்று....! - Page 3 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று....! - Page 3 Poll_c10வரலாற்றில் இன்று....! - Page 3 Poll_m10வரலாற்றில் இன்று....! - Page 3 Poll_c10 
361 Posts - 78%
heezulia
வரலாற்றில் இன்று....! - Page 3 Poll_c10வரலாற்றில் இன்று....! - Page 3 Poll_m10வரலாற்றில் இன்று....! - Page 3 Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று....! - Page 3 Poll_c10வரலாற்றில் இன்று....! - Page 3 Poll_m10வரலாற்றில் இன்று....! - Page 3 Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
வரலாற்றில் இன்று....! - Page 3 Poll_c10வரலாற்றில் இன்று....! - Page 3 Poll_m10வரலாற்றில் இன்று....! - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
வரலாற்றில் இன்று....! - Page 3 Poll_c10வரலாற்றில் இன்று....! - Page 3 Poll_m10வரலாற்றில் இன்று....! - Page 3 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
வரலாற்றில் இன்று....! - Page 3 Poll_c10வரலாற்றில் இன்று....! - Page 3 Poll_m10வரலாற்றில் இன்று....! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வரலாற்றில் இன்று....! - Page 3 Poll_c10வரலாற்றில் இன்று....! - Page 3 Poll_m10வரலாற்றில் இன்று....! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
வரலாற்றில் இன்று....! - Page 3 Poll_c10வரலாற்றில் இன்று....! - Page 3 Poll_m10வரலாற்றில் இன்று....! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வரலாற்றில் இன்று....! - Page 3 Poll_c10வரலாற்றில் இன்று....! - Page 3 Poll_m10வரலாற்றில் இன்று....! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வரலாற்றில் இன்று....! - Page 3 Poll_c10வரலாற்றில் இன்று....! - Page 3 Poll_m10வரலாற்றில் இன்று....! - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று....!

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon May 05, 2014 11:10 pm

First topic message reminder :

1976 - புதிய தமிழ்ப் புலிகள் என்ற
பெயருடனிருந்த இயக்கத்திற்கு
தமிழீழ விடுதலைப் புலிகள்
என்று பெயர் மாற்றப்பட்டது.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 22, 2014 12:13 am

விமந்தனி wrote:[link="/t110010p15-topic#1065126"]வரலாற்றில் இன்று....! - Page 3 Yz2SXVaS44VZVlfOgWAL+May-22

இன்றைய நாளின் மற்ற முக்கிய வரலாற்று நிகழ்வுகள் "சிலோன் ஸ்ரீலங்கா என பெயர் மாறிய நாள்: மே 22- 1972" என்ற திரியில்.

அப்டியே தனி ஈழம் விடுதலை பெற்ற போட்டோவையும் சீக்கிரமே போடுங்க நண்பரே...

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu May 22, 2014 12:00 pm

ரா.ரா3275 wrote:அப்டியே தனி ஈழம் விடுதலை பெற்ற போட்டோவையும் சீக்கிரமே போடுங்க நண்பரே...
கூடிய சீக்கிரம் அதுவும் நடக்கும் என்றே நினைப்போம். யார் கண்டது...? ராஜபக்சே-வை  அழைப்பதின் சூட்சமம் அதுவாக கூட இருக்கலாம்.... பார்ப்போம்.

வரலாற்றில் இன்று....! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று....! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று....! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 23, 2014 3:22 am

மிக்கி மவுசின் முதலாவது பேசும் கார்ட்டூன் கார்னிவல் கிட் 1929-ம் ஆண்டு மே மாதம் 23-ந்தேதி வெளிவந்தது.

* 1805 - நெப்போலியன் பொனபார்ட் இத்தாலியின் மன்னனாக முடி சூடினான்.

* 1813 - தென்னமெரிக்க விடுதலைப் போராட்டத் தலைவர் சிமோன் பொலிவார் வெனிசுவேலாவின் முற்றுகைக்குத் தலைமை வகித்துச் சென்று விடுவிப்பாளர் எனத தன்னை அறிவித்தார்.

* 1846 - மெக்சிக்கோ ஐக்கிய அமெரிக்கா மீது போரை அறிவித்தது.

* 1865 - வாஷிங்டன், டிசியில் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுற்றமை கொண்டாடப்பட்டது.

* 1915 - முதலாம் உலகப் போர்: இத்தாலி ஆஸ்திரியா-ஹங்கேரி மீது போரை அறிவித்தது.

* 1929 - மிக்கி மவுசின் முதலாவது பேசும் கார்ட்டூன் "கார்னிவல் கிட்" வெளி வந்தது.

* 1949 - ஜெர்மன் கூட்டாட்சி குடியரசு அமைக்கப்பட்டது.

* 1951 - திபெத்தின் விடுதலைக்கான 17 அம்ச உடன்பாட்டில் திபெத்தியர்கள் கட்டாயமாகக் கையெழுத்திட வைக்கப்பட்டார்கள்.

* 1958 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செய்மதி எக்ஸ்புளோரர் 1 தனது பூமியுடனான தொடர்பை இழந்தது.

* 1998 - புனித வெள்ளி உடன்பாட்டிற்கு ஆதரவாக வட அயர்லாந்து மக்களின் 71 விழுக்காட்டினர் வாக்களித்தனர்.

வரலாற்றில் இன்று....! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri May 23, 2014 1:35 pm

வரலாற்றில் இன்று....! - Page 3 MPN3KhBSHaW4a3OmbSzi+May-23

வரலாற்றில் இன்று....! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று....! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று....! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 24, 2014 12:00 am

வரலாற்றில் இன்று....! - Page 3 SLWStCZtTcOd9E4dHPMP+May-24

1738 - மெதடிஸ்த இயக்கம் ஜோன் உவெஸ்லியால் ஆரம்பிக்கப்பட்டது.

1798 - அயர்லாந்தில் பிரித்தானிய ஆக்கிரமிப்புக்கெதிராக ஐரியர்களின் எழுச்சி ஆரம்பமாயிற்று.

1844 - முதலாவது மின்னியல் தந்திச் செய்தி சாமுவேல் மோர்ஸ் என்பவரால் வாஷிங்டன் டிசியில் இருந்து மேரிலாந்துக்கு அனுப்பப்பட்டது. அனுப்பப்பட்ட செய்தி: What hath God wrought.

1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்கப் படைகள் வேர்ஜீனியாவின் அலெக்சாண்டிரியா நகரைக் கைப்பற்றினர்.

1883 - நியூ யோர்க்கில் புரூக்ளின் பாலம் திறந்து விடப்பட்டது.

1901 - தெற்கு வேல்சில் இடம்பெற்ற விபத்தில் 78 சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

1941 - இரண்டாம் உலகப் போர்: வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் "பிஸ்மார்க்" என்ற ஜெர்மன் போர்க்கப்பல் "ஹூட்" என்ற பிரித்தானியக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.

1956 - சுவிட்ஸர்லாந்தில் முதலாவது யூரோவிஷன் பாடல் போட்டி இடம்பெற்றது.

1962 - அமெரிக்க விண்வெளி வீரர் ஸ்கொட் கார்ப்பென்டர் அவ்ரோரா 7 விண்ணூர்தியில் மூன்று முறை பூமியைச் சுற்றி வந்தார்.

1991 - எத்தியோப்பியாவில் இருந்து யூதர்களை இஸ்ரவேலுக்குக் கொண்டு வரும் சொலமன் நடவடிக்கையை இஸ்ரேல் ஆரம்பித்தது.

1993 - எதியோப்பியாவிடம் இருந்து எரித்திரியா விடுதலை அடைந்தது.

2000 - 22 வருட முற்றுகைக்குப் பின்னர் இஸ்ரேலியப் படையினர் லெபனான்னில் இருந்து வெளியேறினர்.

2000 - இலங்கையில் நோர்வேத் தூதரகம் மீது குண்டு வீசப்பட்டது.

2001 - எவரெஸ்ட் சிகரத்தை 15 வயது ஷெர்ப்பா டெம்பா ஷேரி எட்டினார். அச்சிகரத்தின் உச்சியை எட்டிய வயதில் குறைந்தவர் இவாரே.

2002 - ரஷ்யாவும் ஐக்கிய அமெரிக்காவும் மொஸ்கோ உடன்பாட்டை எட்டின.

2006 - விக்கிமேப்பியா ஆரம்பிக்கப்பட்டது.

2007 - ஈழப்போர்: யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவில் இலங்கைக் கடற்படைத்தளத்தைக் கடற்புலிகள் தாக்கியளித்தனர்.

2007 - ஈழப்போர்: கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இரண்டு இராணுவத்தினர் உயிரிழந்து நால்வர் காயமடைந்தனர்.

வரலாற்றில் இன்று....! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று....! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று....! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat May 24, 2014 12:04 am

வரலாற்றில் இன்று....! - Page 3 103459460வரலாற்றில் இன்று....! - Page 3 1571444738

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 24, 2014 11:19 pm

வரலாற்றில் இன்று....! - Page 3 YJXE7XylTVibxqzbqyTK+May-25

1659 - ரிச்சார்ட் குரொம்வெல் இங்கிலாந்தின் "ஆட்சிக் காவலர் பெருமகன்" (Lord Protector) பதவியைத் துறந்தார். பொதுநலவாய இங்கிலாந்தின் இரண்டாவது குறுகிய கால அரசு ஆரம்பமானது.

1810 - ஆர்ஜெண்டீனாவில் இடம்பெற்ற புரட்சியின் போது ஆயுதம் தரித்த பியூனஸ் அயரஸ் மக்கள் ஸ்பெயின் ஆளுனரை வெளியேற்றினார்கள்.

1812 - இங்கிலாந்தில் ஜரோ என்ற இடத்தில் இடம்பெற்ற சுரங்க வெடி விபத்தில் 96 பேர் கொல்லப்பட்டனர்.

1837 - கியூபெக்கில் பிரித்தானியாவின் ஆட்சிக்கெதிராக நாட்டுப்பற்றாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள்.

1865 - அலபாமாவில் "மொபைல்" என்ற இடத்தில் தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடிப்பில் 300 பேர் கொல்லப்பட்டனர்.

1895 - போர்மோசா குடியரசு அமைக்கப்பட்டது.

1953 - நெவாடாவில் ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவதும் கடைசியுமான அணு ஆற்றலினாலான பீரங்கியைச் சோதித்தது.

1955 - ஐக்கிய அமெரிக்காவில் கன்சாஸ் மாநிலத்தில் "உடால்" என்ற சிறு நகரை இரவு நேர சூறாவளி தாக்கியதில் 80 பேர் கொல்லப்பட்டனர்.

1961 - அப்பல்லோ திட்டம்: பத்தாண்டுகளின் இறுதிக்குள் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் ஐக்கிய அமெரிக்காவின் திட்டத்தை அதிபர் ஜோன் எஃப். கென்னடி அமெரிக்கக் காங்கிரசில் அறிவித்தார்.

1963 - அடிஸ் அபாபாவில் ஆபிரிக்க ஒன்றியம் உருவானது.

1966 - எக்ஸ்புளோரர் 32 விண்வெளிக்கு ஏவப்பட்டது.

1977 - ஸ்டார் வோர்ஸ் திரைப்படம் வெளிவந்தது.

1979 - ஐக்கிய அமெரிக்காவின் ட்சி-10 விமானம் ஒன்று சிக்காகோவில் விபத்துக்குள்லாகியதில் அதில் பயணித்த 271 பேரும் தரையில் இருவரும் கொல்லப்பட்டனர்.

1982 - போக்லாந்து போரில் கவெண்ட்ரி என்ற ஆங்கிலக் கப்பல் மூழ்கியது.

1985 - வங்காள தேசத்தில் இடம்பெற்ற சூறாவளியில் 10,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

1997 - சியேரா லியோனியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் அகமது கப்பா பதவியில் இருந்து ஆகற்றப்பட்டார்.

2000 - லெபனானில் 22 ஆண்டுகளாக நிலை கொண்டிருந்த இஸ்ரேல் இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறினர்.

2001 - அமெரிக்காவைச் சேர்ந்த 32 வயது எரிக் வைஹன்மாயர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதலாவது கண் பார்வை இழந்த மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்.

2002 - சீன விமானம் ஒன்று தாய்வானில் நடுவானில் வெடித்துச் சிதறியதில் 225 பேர் கொல்லப்பட்டனர்.

2002 - மொசாம்பிக்கில் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 197 பேர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று....! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று....! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று....! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon May 26, 2014 12:19 am

வரலாற்றில் இன்று....! - Page 3 3enbNmkzT6KQv6PmSmYg+May-26

1293 - ஜப்பான் கமகூரா என்ற இடத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 30,000 பேர் கொல்லப்பட்டனர்.

1538 - ஜோன் கால்வின் மற்றும் அவரது சீடர்கள் ஜெனீவா நகரில் இருந்து வெளியேற்றப்பட்டனர். கால்வின் அடுத்த மூன்றாண்டுகள் பிரான்சின் ஸ்ட்ராஸ்பூர்க் நகரில் வாழ்ந்தார்.

1637 - பீக்குவாட் போர்: புரொட்டஸ்தாந்து, மொஹீகன் படைகள் ஜெர்மன் தளபதி ஜோன் மேசன் தலைமையில் ஐக்கிய அமெரிக்காவின் கனெடிகட்டில் பீக்குவாட் இனத்தவர்களின் ஊர் ஒன்றைத் தாக்கி ஐநூறுக்கும் மேற்பட்ட அமெரிக்கப் பழங்குடியினரைக் கொன்றனர்.

1838 - கண்ணீர்த் தடங்கள்: ஐக்கிய அமெரிக்காவில் செரோக்கீ பழங்குடிகளின் கட்டாயக் குடியகல்வின் போது 4,000 பேர் கொல்லப்பட்டனர்.

1879 - ஆப்கானிஸ்தான் அரசை உருவாக்க கண்டமாக் உடன்பாட்டில் ரஷ்யாவும் ஐக்கிய இராச்சியமும் கைச்சாத்திட்டன.

1896 - ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ் ரஷ்யாவின் சார் மன்னனாக முடி சூடினான்.

1912 - இலங்கையில் இருந்து 7 பேரைக் கொண்ட முதலாவது தொகுதி சிறைக்கைதிகள் அந்தமான் தீவுக்கு அனுப்பப்பட்டனர்.

1917 - இலினொய்யில் நிகழ்ந்த சூறாவளியின் தாக்கத்தினால் 101 பேர் கொல்லப்பட்டு 689 பேர் காயமடைந்தனர்.

1918 - ஜோர்ஜியா மக்களாட்சிக் குடியரசு அமைக்கப்பட்டது.

1958 - இனக்கலவரம் கொழும்புக்குப் பரவியது. தமிழரின் வீடுகள், கடைகள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டனர்.

1966 - பிரித்தானிய கயானா விடுதலை அடைந்து கயானா எனப் பெயர் மாற்றம் பெற்றது.

1969 - அப்பல்லோ 10 விண்கலம் மனிதனை சந்திரனுக்கு அனுப்பும் தனது அடுத்த திட்டத்திற்கு தேவையான சோதனைகளை வெற்றிகரமாக முடித்து விட்டு பூமி திரும்பியது.

1983 - ஜாப்பானைத் தாக்கிய 7.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஆழிப்பேரலையை உண்டு பண்ணியதால் 104 பேர் கொல்லப்பட்டனர்.

1987 - யாழ்ப்பாணம் வடமராட்சியில் இலங்கை ஆயுதப்படையினரின் ஒப்பரேஷன் லிபரேஷன் ராணுவ நடவடிக்கை இடம்பெற்றது.

1991 - தாய்லாந்தின் விமானம் ஒன்று வெடித்ததில் 223 பேர் கொல்லப்பட்டனர்.

2002 - மார்ஸ் ஒடிசி விண்ணூர்தி செவ்வாய்க் கோளில் நீர் பனிப் படிவுகள் இருப்பதை அறிந்தது.

2006 - ஜாவாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 5,700 பேர் கொல்லப்பட்டு 200,000 பேர் வீடுகளை இழந்தனர்.

வரலாற்றில் இன்று....! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று....! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று....! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue May 27, 2014 12:03 am

வரலாற்றில் இன்று....! - Page 3 JaT5ye6mSbWxp639IVfA+May-27

1703 - ரஷ்ய சார் மன்னன் முதலாம் பீட்டர் புனித பீட்டர்ஸ்பேர்க் நகரை அமைத்தான்.

1860 - இத்தாலியின் ஒற்றுமைக்காக கரிபால்டி சிசிலியின் பலேர்மோ நகரில் தாக்குதலை ஆரம்பித்தான்.

1883 - ரஷ்யாவின் மன்னனாக மூன்றாம் அலெக்சாண்டர் முடி சூடினான்.

1937 - கலிபோர்னியாவில் கோல்டன் கேட் பாலம் திறக்கப்பட்டது.

1940 - இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் டன்கேர்க் என்ற இடத்தில் ஜெர்மனியரிடம் சரணடைந்த ஐக்கிய இராச்சியத்தின் நோர்ஃபோக் பிரிவைச் சேர்ந்த 99 பேரில் 97 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

1941 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் பிஸ்மார்க் போர்க் கப்பல் வட அட்லாண்டிக்கில் மூழ்கடிக்கப்பட்டதில் 2,100 பேர் கொல்லப்பட்டனர்.

1960 - துருக்கியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் போது செலால் பயார் அதிபர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1965 - வியட்நாம் போர்: அமெரிக்கப் போர்க்கப்பல்கள் தெற்கு வியட்நாம் மீது குண்டுகள் வீசித் தாக்குதலைத் தொடுத்தன.

1967 - அவுஸ்திரேலியாவில் நடந்த வாக்கெடுப்பில் ஆதிவாசிகளை மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் அடக்கவும் அவர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தவும் அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்க மக்கள் அங்கீகாரம் அளித்தனர்.

1994 - சோவியத் அதிருப்தியாளர் அலெக்சாண்டர் சொல்ஷெனிட்சின் 20 ஆண்டுகளின் பின்னர் ரஷ்யா திரும்பினார்.

1997 - முல்லைத்தீவுக் கடலில் கடற்புலிகள் படகில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.

2006 - ஜாவாவில் நிகழ்ந்த (உள்ளூர் நேரம் காலை 5:53:58, UTC நேரம் மே 26 இரவு 10:53:58) நிலநடுக்கத்தில் 6,000 பேர் வரை பலியாயினர்.

வரலாற்றில் இன்று....! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று....! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று....! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed May 28, 2014 12:00 am

வரலாற்றில் இன்று....! - Page 3 PLexSxQfTWeOABCSauv8+May-28

1503 - ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. இது 10 ஆண்டுகளில் முறிந்தது.

1588 - 30,000 பேர்களுடன் ஸ்பானிய ஆர்மாடா எனப்படும் 130 ஸ்பானியக் கப்பல்கள் பிரித்தானியக் கடற்படையினருடன் மோதும் பொருட்டு ஆங்கிலக் கால்வாயை நோக்கிய பயணத்தை லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தன.

1737 - வீனஸ் கோள் மேர்க்குரி கோளின் முன்னால் கடந்ததை ஜோன் பேவிஸ் என்ற வானியலாளர் அவதானித்தார்.

1905 - ரஷ்ய-ஜப்பானியப் போர்: சூஷிமா என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் ரஷ்யக் கடற்படையின் பால்ட்டிக் பிரிவு ஜப்பானியர்களால் அழிக்கப்பட்டது.

1815 - சிங்கள-முஸ்லிம் கலவரம், 1915: இலங்கையின் கண்டியில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் கலவரம் ஆரம்பித்து ஜூன் 5 இல் முடிவுக்கு வந்தது.

1937 - கலிபோர்னியாவில் கோல்டன் கேட் பாலத்தை பிராங்கிளின் ரூஸ்வெல்ட் அதிகாரபூர்வமாக திறந்து வைத்தார்.

1940 - இரண்டாம் உலகப் போர்: பெல்ஜியம் ஜெர்மனியிடம் சரணடைந்த்து.

1942 - இரண்டாம் உலகப் போர்: நாசிகள் தமது சகாவான ரைன்ஹார்ட் ஹைட்ரிக் படுகொலை செய்யபட்டமைக்குப் பதிலடியாக செக்கோசிலவாக்கியாவில் 1800 பேரைப் படுகொலை செய்தனர்.

1958 - இலங்கை இனக் கலவரம், 1958: இலங்கையின் ஆளுநர் சேர் ஒலிவர் குணதிலக அவசரகாலச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.

1964 - பாலஸ்தீன விடுதலை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.

1974 - வட அயர்லாந்தில் அதிகாரப் பரவலாக்கம் குறித்த சன்னிங்டேல் உடன்பாடு முறிந்தது.

1987 - மேற்கு ஜேர்மனியைச் சேர்ந்த 19-வயது மத்தாயஸ் றஸ்ட் சிறிய ரக விமானம் ஒன்றில் மொஸ்கோவில் செஞ்சதுக்கத்தில் தரையிறங்கினார். உடனடியாகக் கைது செய்யப்பட்ட இவர் ஆகஸ்ட் 13, 1988இல் விடுவிக்கப்பட்டார்.

1991 - எதியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவை எதியோப்பிய மக்கள் புரட்சி சனநாயக முன்னணியினர் கைப்பற்றினர். எதியோப்பிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.

1995 - ரஷ்யாவின் நெஃப்டிகோர்ஸ்க் நகரில் இடம்பெற்ற 7.6 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 2,000 பேர் கொல்லப்பட்டனர்.

1998 - பாகிஸ்தான் ஐந்து அணுவாயுதச் சோதனைகளை நிகழ்த்தியது. ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், மற்றும் சில நாடுகள் பாகிஸ்தானுக்கெதிராக பொருளாதாரத் தடைகளை அறிவித்தன.

வரலாற்றில் இன்று....! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று....! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று....! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக