புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

1,68,099 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!'' - காஞ்சிபுரத்தைத் திகைக்கவைத்த பேனர்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 05, 2014 4:51 pm

1,68,099 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!'' - காஞ்சிபுரத்தைத் திகைக்கவைத்த பேனர்கள் P35a

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பலமுனை போட்டி நிலவியதால், ஜெயிப்போமா... மாட்டோமா என்ற குழப்பத்தில் பல வேட்பாளர்களும் ஆழ்ந்திருக்க... காஞ்சிபுரம் அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் 1,68,099 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்று வைக்கப்பட்டிருக்கும் ஃப்ளெக்ஸ் பேனர்கள், மக்களை கிறுகிறுக்க வைத்திருக்கின்றன. இப்படி ஒரு பேனரை வைத்து தேர்தல் கமிஷனுக்கே அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார் காஞ்சிபுரம் நகரமன்ற உறுப்பினர் பரிமளம்.

கடந்த 28-ம் தேதி மாலை 3.00 மணியளவில் காஞ்சிபுரம் காந்தி சாலையில் 10-க்கு 20 என்ற அளவில் நான்கு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. 'வடக்கே எதிர்நோக்கும் நாளைய பிரதமர் அம்மா அவர்களின் நல்லாசியுடன் கழகத் தோழர்கள் கடுமையாக உழைத்து 1,68,099 வாக்குகள் வித்தியாசத்தில் மரகதம் குமரவேல் அவர்களை வெற்றிபெறச் செய்த வாக்காள பெருமக்களுக்கு நன்றி’ - அந்த பேனர்களில் இடம் பெற்றிருந்த வாசகங்கள் இவைதான். திடீரென்று முளைத்த அந்த பேனரை மக்கள் ஆச்சரியத்தோடு புருவம் உயர்த்தி பார்த்துவிட்டுச் சென்றனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காஞ்சிபுரம் தாசில்தார் பானு, பேனர்களை புகைப்படம் எடுத்துக்கொண்டு, அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

இதுகுறித்து அறிக்கை அனுப்புமாறு தலைமைத் அதிகாரி பிரவீன்குமார், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரனுக்கு உத்தரவிட்டார். பேனர் வைத்த அ.தி.மு.க. கவுன்சிலர் பரிமளம் மீது விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. பேனர்கள் அச்சிட்டவர்கள், அதை வாகனத்தில் ஏற்றி வந்தவர்கள் என நான்கு பேரை கைது செய்தனர். பேனர் தயாரித்த கடைக்கும் சீல் வைக்கப்பட்டது. 30-ம் தேதி காலை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில சரணடைந்தார் கவுன்சிலர் பரிமளம்.

பேனர் குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்த காஞ்சிபுரம் காங்கிரஸ் வேட்பாளரும் சிட்டிங் எம்.பி-யுமான விஸ்வநாதனிடம் பேசினோம். ''கடந்த 22-ம் தேதி பிரசாரம் முடிந்து, 24-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 24-ம் தேதி மாலை 5 மணிக்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருமான பாஸ்கரன், தொகுதியில் 65 சதவிகிதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது என்றார். மறுநாள் காலை 10 மணிக்கு அனைத்து கட்சி தேர்தல் ஏஜென்ட்களையும் அழைத்த மாவட்ட ஆட்சியர், 75.71 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாகச் சொன்னார். இதற்கு இடைப்பட்ட நேரத்தில் மட்டும் 10 சதவிகித வாக்குகள் உயர்ந்திருக்கிறது. அன்று மாலை 5 மணிக்கு மீண்டும் கட்சி ஏஜென்ட்களை அழைத்து 75.91 சதவிகிதம் என்று சொன்னார். இப்போது 0.20 சதவிகித வாக்குகள் அதிகரித்துள்ளது. மூன்றுவிதமான முன்னுக்குப் பின் முரணான தகவல்களை மாவட்ட ஆட்சியர் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், சர்ச்சைக்குரிய பேனர் தொடர்பாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமாருக்கும், டெல்லியில் உள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத்குமாருக்கும் இ-மெயில் மூலம் புகார் கொடுத்தேன். நான் டெல்லியில் இருந்ததால் சம்பத்குமாரை நேரில் சந்தித்தேன். 'தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, ஒரு வேட்பாளர் எப்படி முடிவுகளை அறிவிக்க முடியும்?’ என்று சொன்னேன். 'இது முற்றிலும் தவறானது. உடனே நடவடிக்கை எடுக்கிறேன். உங்கள் புகாரின் அடிப்படையில் நான்கு பேரை கைது செய்திருக்கிறோம்’ என்றார். 'காஞ்சிபுரம் தொகுதி தேர்தல் அதிகாரி மீதுதான் நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிடுத்து பேனர் கட்டியவர்கள் மீதும், அதை எடுத்துச் சென்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளதாகச் சொல்கிறீர்களே!’ என்றும் அவரிடம் ஆதங்கத்தைக் கொட்டிவிட்டு வந்தேன்'' என்று சொன்னார்.

அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல், ''அந்த பேனரை பரிமளம் ஏன் வைத்தார் என்று எங்களுக்குத் தெரியாது. கட்சியில் யாருடைய அனுமதியையும் பெறாமல் தன்னிச்சையாக அவர் இஷ்டம்போல் பேனர் வைத்துவிட்டார். தோராயமாக ஒரு லட்சம், இரண்டு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என்றுதான் சொல்வார்கள். ஆனால், தேர்தல் விதிமுறைப்படி அப்படிக்கூட பேனர் வைக்கக் கூடாது. அவரைப்பற்றி காஞ்சிபுரத்தில் விசாரித்தபோது, 'அவர் விளம்பரத்துக்காக அப்படித்தான் செய்வார்’ என்கிறார்கள். எங்களுக்கும் கட்சிக்கும் அந்த பேனர் வைக்கப்பட்டதில் எந்த சம்பந்தமும் கிடையாது'' என்றார்.

மாவட்ட ஆட்சியர் பாஸ்கரனை பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டோம். மெசேஜும் அனுப்பினோம். அவர் கடைசி வரை நமது அழைப்பை ஏற்கவே இல்லை.

மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரிடம் பேசினோம். ''பேனர் வைத்த கவுன்சிலர் பரிமளம் மற்றும் பேனர் தயாரித்தவர்கள், கொண்டுவந்தவர்கள் என நான்கு பேர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் மீது வழக்குப் பதிவுசெய்யப்படவில்லை. அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் கட்சி பாகுபாடு இல்லாமல்தான் வேலை செய்கின்றனர். மாவட்ட ஆட்சியரின் செயல்பாடுகள் குறித்து புகார் எதுவும் வரவில்லை. தகுந்த ஆதாரங்களோடு புகார் சொன்னால், நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

ஒரு கவுன்சிலரின் விளம்பர ஆசையால் எத்தனை சிக்கல்!

[thanks]ஜூனியர் விகடன் [/thanks]



1,68,099 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!'' - காஞ்சிபுரத்தைத் திகைக்கவைத்த பேனர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon May 05, 2014 5:39 pm

பார்க்கலாம் 16ம் தேதி என்ன நடக்குது என்று



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon May 05, 2014 7:34 pm

அம்மான்னா சும்மா இல்லீங்க, இப்படி ஒரு பேனர் போட்டிருக்கலாம், மறந்துட்டாங்களோ.


கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Mon May 05, 2014 8:25 pm

பாலாஜி wrote:[link="/t110004-168099#1061645"]பார்க்கலாம் 16ம் தேதி என்ன நடக்குது என்று

16ம் தேதி சாயம் வெளுக்கும்...!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக