ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்

+3
krishnaamma
மாணிக்கம் நடேசன்
சிவா
7 posters

Go down

 தங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள் Empty தங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்

Post by சிவா Fri May 02, 2014 4:19 am

 தங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள் 10295730_664850893588011_1154532536976726902_n

தங்க ஆபரணங்கள் வாங்கும்போது வாடிக்கையாளர்கள் கட்டாயம் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.

ஹால்மார்க் நகைகள்:

ஹால்மார்க் தரச்சான்று பெற்ற நகைகளை வாங்குவது முக்கியம். அந்த நகைகளிலும் 5 முக்கியமான விஷயங்களை கவனிக்க வேண்டும்.

ஆண்டு:

நகை எந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது என்பதைக் குறிக்கும் வகையில் ஆபரணத்தில் மேல் ஏ,பி,சி,ஈ உள்ளிட்ட எழுத்துக்கள் அச்சிடப்பட்டிருக்கும். இதன் மூலம் நகை எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது என்பதைக் கண்டறிய முடியும். மேலும் மெருகேற்றி விற்கப்படும் பழைய நகைகளை வாங்காமல் தவிர்க்கலாம்.

விவரங்கள்:

நகையை யார் உற்பத்தி செய்தார்கள், எந்த விற்பனையாளர் விற்கிறார் என்பது குறித்த சீல் ஆபரணத்தின் மேல் இருக்கும். இதன் மூலம் சட்டவிரோதமாகக் கொண்டு வரப்படும் நகைகளை வாங்கி ஏமாறுவதைத் தவிர்க்க முடியும்.

பரிசோதனை:

ஹால்மார்க் தரச்சான்று அளித்த பரிசோதனைக் கூடத்தினை அடையாளப்படுத்தும் வகையில் ஒரு குறியீடு நகையின் மேல் அச்சிடப்பட்டிருக்கும். இதைக் கொண்டு எந்த இடத்தில் நகைக்கு தரச்சான்று வழங்கப்பட்டது என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

தரம்:

அனைத்து ஹால்மார்க் நகைகளும் 22 காரட் (91.6 சதவீதம்) தங்கம் சேர்க்கப்பட்ட நகைகளாக இருக்கும் என கருதக் கூடாது. ஹால்மார்க் என்பது தரத்துக்கு வழங்கப்படும் சான்றிதழ் மட்டுமே. எனவே 18 காரட், 20 காரட் என எந்த மதிப்பிலான தங்கத்திற்கும் ஹால்மார்க் தரச்சான்று பெற முடியும். வாடிக்கையாளர்கள் தங்க ஆபரணங்கள் வாங்கும் போது 22 காரட் என நகையின் மேல் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை சரி பார்ப்பது அவசியம்.

குறியீடு:

ஹால்மார்க் தரச்சான்று பெற்ற நகைகள் என்பதைக் குறிக்கும் முக்கோண வடிவிலான குறியீடு நகையின் மேல் அச்சிடப்பட்டிருக்கும். அதை உறுதி செய்த பின்னரே வாடிக்கையாளர்கள் நகைகளை வாங்க வேண்டும்.

வழக்கு தொடுக்கலாம்:

வாடிக்கையாளர்கள் வாங்கிச் செல்லும் ஹால்மார்க் தரச்சான்று பெற்ற நகைகளில் ஏதேனும் குறைபாடு கண்டறியப்பட்டால் விற்பனையாளர் மற்றும் பரிசோதகர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியும். இத்தகைய வழக்குகளில் பெரும்பாலும் வாடிக்கையாளர்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வெளியாகியுள்ளது.

ரசீது கட்டாயம்:

நம்மில் பலர் ஆயிரக்கணக்கில் செலவு செய்து நகைகள் வாங்கிவிட்டு சில நூறுகளை சேமிப்பதற்காக ரசீது வாங்குவதில்லை. தங்க நகைகளைப் பொருத்த வரையில் 1 சதவீதம் மட்டுமே விற்பனை வரியாக வசூலிக்கப்படுகிறது. உதாரணத்துக்கு ஒரு பவுன் நகை வாங்கினால் வாடிக்கையாளர்கள் ரூ.220 மட்டுமே வரியாக செலுத்த வேண்டும்.

அதை சேமிப்பதற்காக நாம் ரசீதின்றி நகை வாங்கக் கூடாது. நகை திருடப்பட்டாலோ, தொலைந்து போனாலோ ரசீதின்றி எந்த வழக்கையும் பதிவு செய்ய முடியாது. எனவே ஒரு கிராம் தங்கம் வாங்கினாலும் வாடிக்கையாளர்கள் மறவாது ரசீதைக் கேட்டுப் பெற வேண்டும்.

[thanks] தினமலர் [/thanks]


Last edited by சிவா on Sat May 10, 2014 8:05 am; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 தங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள் Empty Re: தங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்

Post by மாணிக்கம் நடேசன் Fri May 02, 2014 10:05 am

இந்தப் பதிவ போன வாரம் போட்டிருக்க கூடாதா, இப்ப தான் அதாவது நேத்து தான் கொஞ்சம் தங்கம் வாங்கினேன். ரொம்ப லேட் மாமா அங்கள் நீங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

 தங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள் Empty Re: தங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்

Post by krishnaamma Fri May 09, 2014 7:31 pm

அவசியமான பதிவு சிவா புன்னகை

மேலும் இந்த விவரம் சூப்பர் புன்னகை நான் கேள்விப்பட்டதில்லை இது வரை !

//நகை எந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது என்பதைக் குறிக்கும் வகையில் ஆபரணத்தில் மேல் ஏ,பி,சி,ஈ உள்ளிட்ட எழுத்துக்கள் அச்சிடப்பட்டிருக்கும். இதன் மூலம் நகை எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது என்பதைக் கண்டறிய முடியும். மேலும் மெருகேற்றி விற்கப்படும் பழைய நகைகளை வாங்காமல் தவிர்க்கலாம்.//
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 தங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள் Empty Re: தங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்

Post by T.N.Balasubramanian Sat May 10, 2014 2:09 am

A B C E எழுத்துகளை நான் கண்டதில்லை .எங்கே பதிவிட்டு இருப்பார்கள்?
அந்த எழுத்துகளின் விளக்கம் கூற இயலுமா? A என்றால் எந்த வருடத்தை குறிக்கும் B C E எந்தெந்த வருடங்களை குறிக்கும் ?

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 தங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள் Empty Re: தங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்

Post by சிவா Sat May 10, 2014 8:01 am

T.N.Balasubramanian wrote:[link="/t109919-topic#1062567"]A B C E எழுத்துகளை நான் கண்டதில்லை .எங்கே பதிவிட்டு இருப்பார்கள்?
அந்த எழுத்துகளின் விளக்கம் கூற இயலுமா? A என்றால் எந்த வருடத்தை குறிக்கும் B C E எந்தெந்த வருடங்களை குறிக்கும் ?

ரமணியன்

இந்தக் குறியீடுகள் புதியவைகளாக இருக்குமோ? எனக்குத் தெரிந்து தரத்தைக் குறிக்க ஹால்மார்க் முத்திரைதான் இருக்கும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 தங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள் Empty Re: தங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்

Post by கிருஷ்ணா Sat May 10, 2014 10:28 am

916 என பொறித்திருப்பார்கள். அந்த கடையின் பெயரில் உள்ள முதலெழுத்துக்கள் இருக்கும். ஆனால் a b c பார்த்ததில்லை.


கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

 தங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள் Empty Re: தங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்

Post by ஜாஹீதாபானு Sat May 10, 2014 3:42 pm

அய்யோ, நான் இல்லை 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 தங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள் Empty Re: தங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்

Post by ரா.ரா3275 Sat May 10, 2014 3:46 pm

பொம்மனாட்டிங்களா உஷாரு...சிவாண்ணன் கட்டுரையப் பாருங்க...நகைய பாக்குறதுக்கு முன்னாடி...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

 தங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள் Empty Re: தங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum