புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...! Poll_c10சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...! Poll_m10சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...! Poll_c10 
21 Posts - 66%
heezulia
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...! Poll_c10சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...! Poll_m10சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...! Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...! Poll_c10சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...! Poll_m10சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...! Poll_c10 
63 Posts - 64%
heezulia
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...! Poll_c10சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...! Poll_m10சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...! Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...! Poll_c10சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...! Poll_m10சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...! Poll_c10சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...! Poll_m10சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Thu May 01, 2014 8:57 am

பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதி...! இன்று காலை சுமார் 7.15 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 9 ம் நடைமேடையில் நின்றிருந்த பெங்களுரூவிலிருந்து கவுகாத்தி செல்லும் ரயிலில் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தது. S - 4 பெட்டியில் ஒரு குண்டும், S - 5 பெட்டியில் மற்றொரு குண்டும் வெடித்துள்ளது. ரயிலின் S-4 மற்றும் S-5 பெட்டிகள் சேதம். 10 பேர் படுகாயம். ஸ்வாதி என்ற 22 வயது பெண் பலி. இவர் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர். சென்னை மாநகரம் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் உதவி மையம் தொடர்பிற்கு தொலைபேசி எண்: 044 - 25357398.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 01, 2014 9:02 am

இதற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும், எத்தனை பேராக இருந்தாலும் கைது செய்யப்படாமல் உடனடியாக சுட்டுக் கொல்லப்பட வேண்டும்.

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Thu May 01, 2014 9:08 am

சிவா wrote:[link="/t109891-topic#1060960"]இதற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும், எத்தனை பேராக இருந்தாலும் கைது செய்யப்படாமல் உடனடியாக சுட்டுக் கொல்லப்பட வேண்டும்.

இதற்கு காரணமானவர்கள் மேல் போர் தான் தொடுக்க வேண்டும்...! போர் ஒன்றே நிரந்தர தீர்வாக இருக்க முடியும்...!

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Thu May 01, 2014 9:43 am

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இன்று காலையில் பயங்கர குண்டு வெடித்தது. இதில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் காயமுற்றதாகவும், 6 பேர் பலியானதாக முதலில் கூறப்பட்டது. பெண் ஒருவர் பலியானதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பிற்கு யார் காரணம் என்ற விவரம் அறியப்படவில்லை. சந்தேகத்திற்கு இடமான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் போலீஸ் அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பு சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த குண்டுவெடிப்பை அடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
காலை 7. 40 மணியளவில் கவுகாத்தியில் இருந்து பெங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றதும். இந்த குண்டு வெடித்தது. 9ம் பிளாட்பாமில் இந்த சம்வபவம் நிகழ்ந்துள்ளது.

காயமுற்றோர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 10 க்கும் மேற்பட்டோர் காயமுற்றதாக தெரிகிறது. சம்பவ இடத்தில் 6பேர் இறந்துள்னர். ரயில் பெட்டிகள் எஸ். -4 எஸ்- 5 முழுமையாக சேதமடைந்துள்ளன.


ரயில்வே மேலாளர் பேட்டி: இந்த சம்பவம் குறித்து ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா கூறுகையில், ரயில் வந்ததும் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. 2 முறை குண்டு வெடித்துள்ளது. பெண் ஒருவர் பலியாகியுள்ளார். 2 பேர் படுகாயமுற்றுள்ளனர். 7 பேர் லேசான காயமுற்றுள்ளனர். கண்காணிப்பு காமிரா மூலம் அடுத்தடுத்து விசாரணைகள் தொடரும். பலியானவர் குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சமும், படுகாயமுற்றோருக்கு 25 ஆயிரமும், லேசான காயமுற்றோருக்கு ரூ. 5 ஆயிரமும் வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. உதவி தொலைபேசிக்கு 04425357398 இந்த எண்ணில தொடர்பு கொள்ளலாம். முழு விசாரைணக்கு பின்னரே அனைத்து விஷயங்களையும் சொல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

மாநிலம் முழுவதும் போலீஸ் உஷார்: சென்னை குண்டு வெடிப்பை அடுத்து கோவை- திருச்சி-நெல்லை, சேலம் , மதுரை உள்ளிட்ட நகரங்களில் போலீஸ் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். மக்கள் கூடும் இடங்கள், ரயில்வே நிலையம், விமான நிலையம் பகுதிகளில் போலீஸ் ரோந்து பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை விளக்கம் கேட்கிறது: இன்று நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக அனைத்து விவரங்களையும் அனுப்பி வைக்குமாறு மத்திய அரசு மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

-- dinamalar

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Thu May 01, 2014 9:44 am

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 9-வது பிளாட்பாரத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பயங்கர சப்தத்துடன் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கவுஹாத்தி-பெங்களூரு விரைவு ரயில் 9-வது நடைமேடைக்கு வந்த போது இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ரயிலின் எஸ் 4 பெட்டியில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்த 10 பேரும் சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பில் 2 ரயில் பெட்டிகள் முற்றிலும் சேதமடைந்துவிட்டதாகவவும் தெரிகிறது.

ஒருவர் பலி:

சென்னை சென்ட்ரலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் குண்டூரைச் சேர்ந்த சுவாதி என்ற பெண் பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. குண்டுவெடிப்பை தொடர்ந்து சென்னை சென்ட்ரலில் போலீஸார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

தீவிரவாதிகள் சதியா?

பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உளவாளி ஜாகீர் உசேன் நேற்று முன்தினம் சென்னையில் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது சென்னை சென்ட்ரல் நிலையத்தில் குண்டுவெடித்துள்ளது.

அறிக்கை அளிக்க உத்தரவு:

சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பு தொடர்பாக அறிக்கை தர தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அறிக்கை அளிக்க உத்தரவு:

சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பு தொடர்பாக அறிக்கை தர தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இழப்பீடு அறிவிப்பு:

குண்டுவெடிப்பில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சமும், படுகாயமடைந்ததோருக்கு ரூ.25,000, லேசான காயமடைந்தோருக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ராதெரிவித்தார். குண்டுவெடிப்பு தொடர்பாக தொலைபேசியில் ரயில்வே அமைச்சர் விசாரித்ததாக ரயில்வே அதிகாரி தெரிவித்தார். பிற ரயில்கள் வழக்கம் போல இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ரயில் குண்டுவெடிப்பு தகவல்களை பெற 044 25357398 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணை தொடங்கியுள்ளதாக கூறினார்.

-- dinakaran

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Thu May 01, 2014 9:47 am

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவராக கருதப்படும் ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் ரயிலில் பதுங்கியிருந்ததாக கூறப்படுகிறது. போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Thu May 01, 2014 9:47 am

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் தர வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Thu May 01, 2014 9:47 am

குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றதை அடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. சென்ட்ரலுக்கு வர வேண்டிய ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.


soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Thu May 01, 2014 9:48 am

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...! BlastSLche0105201401

சென்னை சென்டரல் ரெயில் நிலையத்தில் 9 வது நடைமேடையில் பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. இதில் ஒருவர் பலியாகினார். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Thu May 01, 2014 9:49 am

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இன்று காலை குண்டு வெடித்தது. இதில் ஒருவர் பலியாகியுள்ளார்.

குண்டுவெடிப்பு

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு இன்று காலை அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. ரெயில் 9 வது நடைமேடையில் வந்து நின்றது. அப்போது ரெயிலில் இருந்த பயணிகள் இழே இறங்க தயாரானார்கள். அப்போது ரெயிலில் இருந்த 2 குண்டுகள் பலத்த சத்தத்துடன் வெடித்தது. குண்டு வெடித்ததில் ரெயிலின் எஸ் 4 மற்றும் எஸ் 5 பெட்டிகள் சேதம் அடைந்தன. குண்டு வெடிப்பில் 22 வயது சுவாதி என்ற பெண் ஒருவர் பலியாகினர். மேலும், 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

6 பேரது நிலை கவலைக்கிடம்

குண்டு வெடிப்பை அடுத்து அங்கு போலீசார் விரைந்தனர். போலீசார் அனைத்து பகுதிகளையும் சுற்றி வளைத்தனர். காயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகே உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 6 பேரது நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. போலீசார் கவுகாத்தில் ரெயிலின் அனைத்து பெட்டிகளையும் சோதனை செய்தனர். தொடர்ந்து ரெயில் நிலையம் முழுவதும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ரெயில் சேவை நிறுத்தம்

ரெயில் நிலையத்தில் குண்டு வெடித்தது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பயணிகள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. ரெயில் நிலையத்தில் சோதனை நடைபெறுவதால் வேறு பகுதியில் இருந்து சென்னைக்கு வரும் ரெயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. வெளி இடங்களில் இருந்து வரும் அனைத்து ரெயில்களும் வெவ்வேறு பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வளையத்திற்குள் சென்னை

எப்போதும் மிகவும் பரபரப்பாக இருக்கும் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் குண்டு வெடித்ததை அடுத்து ரெயில் நிலையம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்ட்ரலில் குண்டு வெடித்ததை அடுத்து எழும்பூர் ரெயில் நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து சென்னையில் அனைத்து முக்கிய பகுதிகளிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்புக்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை என்று தமிழக டி.ஜி.பி. தகவல் தெரிவித்துள்ளார். ,மோப்ப நாய்களுடன் அங்கு தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

-- daily thanthi

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக