புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குரு பெயர்ச்சி பலன்கள் ! Poll_c10குரு பெயர்ச்சி பலன்கள் ! Poll_m10குரு பெயர்ச்சி பலன்கள் ! Poll_c10 
20 Posts - 65%
heezulia
குரு பெயர்ச்சி பலன்கள் ! Poll_c10குரு பெயர்ச்சி பலன்கள் ! Poll_m10குரு பெயர்ச்சி பலன்கள் ! Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குரு பெயர்ச்சி பலன்கள் ! Poll_c10குரு பெயர்ச்சி பலன்கள் ! Poll_m10குரு பெயர்ச்சி பலன்கள் ! Poll_c10 
62 Posts - 63%
heezulia
குரு பெயர்ச்சி பலன்கள் ! Poll_c10குரு பெயர்ச்சி பலன்கள் ! Poll_m10குரு பெயர்ச்சி பலன்கள் ! Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
குரு பெயர்ச்சி பலன்கள் ! Poll_c10குரு பெயர்ச்சி பலன்கள் ! Poll_m10குரு பெயர்ச்சி பலன்கள் ! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
குரு பெயர்ச்சி பலன்கள் ! Poll_c10குரு பெயர்ச்சி பலன்கள் ! Poll_m10குரு பெயர்ச்சி பலன்கள் ! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரு பெயர்ச்சி பலன்கள் !


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 12, 2014 6:11 pm

குரு பெயர்ச்சி பலன்கள் ! L2B8rzZnSQqbWeJLBnHc+Guru-peyarchi

திருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். குரு பகவானுக்கு உகந்த குரு வாரமே (வியாழக்கிழமை) குரு பெயர்ச்சியாகிறது. இதனை விசேஷமானதாகவே கருத வேண்டும். கடகத்தில் உச்சம் பெற்ற குரு, நன்மை செய்ய தயங்க மாட்டார். கடகத்தில் இருக்கும் குருவை, சனி 10-ம் பார்வையாக பார்ப்பதால், நாட்டு மக்களுக்கு தெய்வ பக்தி அதிகரிக்கும். ஆலயங்கள் புதுபிக்கப்படும்.

தொழில் கூடங்கள் நல்ல லாபகரமாக நடக்க ஏதுவாகும். மத ஒற்றுமை ஓங்கும். அன்னிய நாட்டவர் பிரச்னை அடக்கப்படும். ரயில், விமானம் போன்ற வாகனங்களில் பயணம் செய்யும்போது கவனத்துடன் இருக்க வேண்டும். கல்வித்துறையில் முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழிற்சாலைகள் உருவாகும். பங்கு சந்தை லாபகரமாக நடக்க வாய்ப்புள்ளது. நவதானியங்கள் விலை குறையும். பொன் ஆபரணங்கள் விலை ஏறும். இரும்பு, எண்ணை பொருட்கள் விலை அதிகரிக்கும். கடக குருவாக இருப்பதால், உலகில் சில பகுதிகளில் சூறை காற்றுடன் கடல் சீற்றம், வெள்ளப் பெருக்கும் ஏற்படலாம். பொதுவாக உச்ச குரு நன்மைகளை செய்வார். ஒருவரின் ஜாதகத்தில் எப்பேர்பட்ட தோஷங்களையும் தன் பார்வையால் நிவர்த்தி செய்பவர் குரு பகவான். “குரு பார்க்க கோடி புண்ணியம்” என்பார்கள். குரு பகவான் நம்மை பார்த்தால் மட்டுமல்ல, குரு பகவானை ஆலயம் தேடி சென்று நாம் கண்டு தரிசித்தாலும் கோடி புண்ணியம்தான்.

உங்கள் வீட்டின் அருகேயே இருக்கும் ஆலயத்தில், நவகிரக சந்நதியில் வீற்றிருக்கும் குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து வணங்கலாம். மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வணங்கினால் மலையளவு உள்ள துயரம் கடுகளவாக குறைந்து விடுவதுடன் மட்டுமல்லாமல், குரு பகவானின் பரிபூரண அருளாசியும், நன்மைகளும் தேடி வரும். துன்பங்கள் நீங்கி இன்பங்களை பெறலாம். இனி பன்னிரெண்டு இராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்களை குரு பகவான் தந்தருளுவார் என்பதை இப்போது நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள். -



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 12, 2014 6:12 pm

மீன இராசி அன்பர்களே…

19.6.2014 உங்கள் இராசிக்கு பஞ்சமத்தில் அதாவது 5-ம் இடத்திற்கு வந்து குரு பகவான் அமர்க்களமாக அமர போகிறார். அடேங்கப்பா இனி தொட்டது எல்லாம் துலங்கும். திடீர் யோகங்கள் வந்து சேரும். வழி தெரியாமல் அடர்ந்த காட்டில் அல்லல்பட்டவர்களுக்கு ஒத்தையடி பாதை தென்படுவதுபோல, முன்னேற்றத்திற்கு வழி கிடைக்கும். இதுவரையில் தேவையில்லா மனக்குழப்பத்தை கொடுத்து வந்த குரு பகவான், உங்கள் இராசிக்கு 5-ஆம் வீட்டில் அமர்ந்ததும் இனி நீங்கள் யோகசாலிகள்தான். அதுமட்டுமல்ல, உடல்நிலையில் பலசாலியாகவும் திகழ்வீர்கள்.

ஆம். குரு பகவான், 5-ஆம் இடத்தில் அமர்ந்து, உங்கள் ஜென்ம இராசியை பார்க்கிறார். அத்துடன், 9-ஆம் இடத்தை, அதாவது பாக்கிய ஸ்தானத்தையும், 11-ம் இடமான லாப ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். இனி என்ன கவலை. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். நோய்நொடியிலிருந்து விடுபடுவீர்கள். நல்ல உடல்நலம் பெறுவீர்கள். வாடகை வீட்டில் படாதபாடுபட்ட நீங்கள், இனி சொந்த வீட்டில் மனமகிழ்ச்சியோடும், குடும்பத்தில் தன, தான்யத்தோடும் வாழ்வீர்கள். நல்லவை அனைத்தும் கிடைக்கும். எப்படி சொல்கிறேன் என்றால், 5-ம் இடம் யோகமான இடம்.

கார், பங்களா என்று வசதியாக கூட வாழ வழி செய்வார் குருபகவான். பிள்ளைகளின் திருமணத்தை உடனே நடத்தி கொடுப்பார். எதிர்காலம் பற்றி கவலை இல்லை. இனி எல்லாம் நல்ல காலம்தான் என்கிற மனஉறுதியும், தெளிவும் உங்களுக்கு வந்து விடும். தெய்வ அனுகிரகத்தால் பல பிரச்னைகள் தீரும். கவலை எல்லாம் பறந்தோடும். உத்தியோகம், வியபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். பொன், பொருள் நன்றாக சேரும். அச்சத்தை போக்குவார் உச்ச குரு. ச

ரி 5-ம் வீட்டில் இருக்கும் குரு, இப்போது உங்களுக்கு சொல்ல விரும்பும் ஆலோசனை என்னவெனில், “குருவாகிய நான் உங்களுக்கு எல்லாம் கொடுக்கிறேன். நீங்கள் உங்கள் மனதை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள். குழப்பத்தையும், சஞ்சலத்தையும் விடுங்கள். “முடியும்” என்ற எண்ணத்தில் இருங்கள். நீங்கள் முடிசூடா மன்னர்தான்” என்கிறார். விநாயகப்பெருமானையும், தட்சிணாமூர்த்தியையும், குருபகவானையும் வணங்கி நம்பிக்கையோடு வெற்றிபடியில் கால் வையுங்கள். ஸ்ரீஅஷ்டலஷ்மிகளும் உங்களை தேடி வருவார்கள். வளங்களை வரங்களாக தருவார்கள். குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள்! -



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 12, 2014 6:13 pm

கும்ப இராசி அன்பர்களே…

19.6.2014 அன்று குருபகவான் உங்கள் இராசிக்கு 6-ம் இடமான ரோக ஸ்தானத்திற்கு குடிபுக போகிறார்.

குரு உங்கள் இராசிக்கு தன, லாபாதிபதி. அதாவது, 2-ம் இடம், 11-ஆம் இடத்தின் அதிபதி ஆவர்.

6-ஆம் இடத்தில் குரு அமரலாமா? என்று யோசித்து பயப்பட வேண்டாம்.

6-ல் குரு அமர்ந்தாலும், அவர் உங்கள் இராசிக்கு 10-ம் இடத்தையும், 12-ம் இடத்தையும், 2-ம் இடத்தையும் பார்வை செய்கிறார்.

இதனால் இந்த இடங்கள் பலம் பெற்று யோகத்தை செய்யப்போகிறது.

இதுவரை உங்கள் பேச்சை துச்சமாக மதித்தவர்கள் இனி உங்கள் வாக்கை வேத வாக்காக எடுத்து கொள்வர்.

தன, தான்யம் உங்களை நாடிவரும். பேச்சால் எதையும் சமாளித்து பிரச்னைகளை ஓவர் டேக் செய்துக்கொண்டு போய்விடுவீர்கள்.

குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். வெளிநாடு தொடர்பால் நல்ல ஆதாயம் உண்டு.

தொழில்துறையில் உள்ளவர்கள் நல்ல முன்னேற்றம் பெறுவர்.

இதுவரை காசு இல்லையே என்று கை பிசைந்து கொண்டு இருந்த நீங்கள், கரன்சி எண்ணப்போகிறீர்கள்.

விரயங்கள் தவிர்க்கப்படும். தேவையற்ற செலவு குறையும். மருத்துவ செலவும் குறைந்து விடும்.

வீடு, மனை வாங்கும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவீர்கள்.

கூட்டு தொழில் நல்ல லாபமாக நடக்கும். சகோதர ஒற்றுமை மேலோங்கும்.

உங்களை பார்த்து கேலி பேசியவர்கள் ஆச்சரியம் அடையும் விதமாக உங்கள் வாழ்க்கை நிலை மேலோங்கும்.

பொதுவாக குரு 6-ல் இருந்தாலும், கவலையே படவேண்டாம்.

காரணம், குருவின் பார்வைதான் பவராக வேலை செய்யும்.

முக்கியமாக சிலருக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு தேடி வரும்.

சரி. 6-ல் இருக்கும் குரு பகவான், என்ன ஆலோசனை சொல்கிறார்? என கேட்டால், “தேடி வரும் வீண் சண்டையை பெரிதுப்படுத்தாமல் விட்டு விடு.

எதிரியே சோர்ந்து சமாதானமாக போய் விடுவான்.

வீண் வாக்குவாதம் வேண்டாம். உடல்நலனில் கவனம் தேவை.

உணவு விஷயத்திலும் கவனம் தேவை.” என்பதே குருவின் ஆலோசனையாகும்.

ஆனைமுகனையும், தட்சிணாமூர்த்தியையும், குரு பகவானையும் வணங்கி வெற்றி நடைபோடுங்கள்.

ஸ்ரீவீரலஷ்மியின் அருட்பார்வை உங்களுக்கு பரிபூரணமாக நிறைந்திருக்கிறது.

குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள். -



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 12, 2014 6:22 pm

மகர இராசி அன்பர்களே…

19.6.2014 அன்று குரு பகவான் உங்கள் இராசிக்கு சப்தம ஸ்தானமான 7-ம் இடத்திற்கு குடிபுக போகிறார்.

இதுவரையில் சப்தமே இல்லாமல் அடங்கி அமைதியாக இருந்த நீங்கள், சப்த நாடியும் புத்துணர்ச்சி பெற்று மகிழ்ச்சியோடு இருக்கப்போகிறீர்கள்.

7-ம் இடத்தில் உச்சமாக இருக்கும் குரு பகவான், உங்கள் இராசிக்கு 12-ம் இடம், 3-ம் இடம் ஆகியவற்றின் அதிபதி ஆவர்.

அதாவது விரயாதிபதி, கீர்த்தி ஸ்தானாதிபதி ஆவார்.

அவர் சப்தமத்தில் அமர்ந்து உங்கள் இராசிக்கு கீர்த்தி ஸ்தானத்தையும், லாப ஸ்தானத்தையும் பார்வை செய்வதோடு மட்டுமல்லாமல், உங்கள் ஜென்ம இராசியையும் பார்வை செய்வதால், இந்த இடங்கள் எல்லாம் ரீசார்ஜ் ஆகிவிட்டது.

இதுவரை இருட்டறையில் அடைப்பட்டிருந்த வண்டு, ஜன்னலை திறந்ததும் வெளியே பறந்தோடியது போல், பிரச்னைகள் எல்லாம் பஞ்சு போல் பறந்து விடும்.

உறவினர்களிடம் வாங்கிய கடன் சுமை தீரும். உறவினர் மனகசப்பு அகலும். திருமண வாய்ப்பு சிலருக்கு அமையும்.

பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பும், திருமணம் அமையவில்லையே என்று கவலைப்பட்ட பெற்றோர் மனதில் சுபச்செய்தி சங்கீதமாக இசைக்கும்.

வேலை வேலை என்று தேடி திரிந்து அலைந்து கொண்டு இருந்தவர்கள் நல்ல இடத்தில் வேலையில் அமர்வீர்கள். அலைச்சல் குறையும். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள்.

கடன் தொல்லை சற்று குறைந்துவிடும். பெற்றோர் உதவி சிலருக்கு கிட்டும். சிலருக்கு நண்பர்களிடத்தில் விரோதம் ஏற்படலாம், எல்லாம் பணத்தால்தான் என்று சப்தம குரு சொல்லுகிறார்.

ஜென்மத்தை குருபார்வை செய்வதால், முக்கியமான திட்டங்கள் நிறைவேறும்.

சரி. 7-ம் வீட்டில் இருக்கும் குரு பகவான் சொல்லும் ஆலோசனை என்னவெனில், “திருமணமானவர்கள் கருத்து வேறுபாடு இல்லாமல் இருங்கள்.

நண்பர்களோடும் பகை வேண்டாம். படிக்காமல் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்து போட வேண்டாம்“ என்கிறார்.

கணபதியையும், தட்சிணாமூர்த்தியையும், குருபகவானையும் வணங்குங்கள்.

அஷ்டலஷ்மிகளின் அருட்பார்வை பெறுவீர்கள்.

குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள். -



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 12, 2014 6:24 pm

தனுசு இராசி அன்பர்களே…

19.6.2014 அன்று குரு பகவான் உங்கள் இராசிக்கு 8-ம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார்.

“குரு அஷ்டமத்தில் வருகிறாரே அகப்பட்டோமடா சாமி” என்று அலற வேண்டாம்.

குரு உங்கள் ஜென்மாதிபதியும், சுகாதிபதியும் ஆவார்.

8-ம் வீட்டில் அமர்ந்தாலும் அவர், 12-ம் இடம், 2-ம் இடம், 4-ம் இடத்தை பார்வை செய்வதால், இந்த இடங்கள் உங்களுக்கு நன்மைகளை வரங்களாக தர காத்திருக்கிறது.

விரயஸ்தானத்தை பார்வை செய்வதால், “சுண்டைக்காய் கால், பணம் சுமைக்கூலி முக்கால் பணம்” கதையாக இருக்கும்.

அதாவது நாலணா சுண்டைக்காய் வாங்கி விட்டு, அதை சுமந்து கொண்டு வந்தவனுக்கு 4 ரூபாய் கூலி என்பார்கள்.

இப்படிபட்ட வீண் செலவு, ஆடம்பர செலவு குறையும்.

குடும்பத்தில் திருமண சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.

உங்கள் பேச்சு மதிப்பு பெற்று, அதனால் வருமானம் கிடைக்கவும் செய்யும்.

உயர் அந்தஸ்தில் உள்ளவர்களின் நட்பால் நன்மைகள் தேடி வரும்.

பழைய இருப்பிடம் இடிக்கப்பட்டு புதுப்பிக்கப்படும். வாகன வசதி பெறும் பாக்கியம் உண்டு.

சகோதர – சகோதரி ஒற்றுமை மேலோங்கும். குடும்ப கோர்ட்டில் பிரச்னை இருந்தால் தீரும்.

பல நாட்களாக இருந்த உறவினர் பகை அகலும். சிலருக்கு வேலைவாய்ப்பு தேடி வரும்.

உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு. மனைவிக்கு சற்று உடல்நலக்குறைவு ஏற்படலாம்.

ஆனால் பெரிய பாதிப்பு இருக்காது. சிலர், “அஷ்டம குரு படாதபாடு படுத்திவிடும்” என்பார்கள்.

கவலையோ, பயமோ அடைய தேவையில்லை.

8-ல் குரு இருந்தாலும், 2-ம் இடம், 4-ம் இடம் ஆகியவை அருமையான பார்வை பெற்று, பவர் ஆகிவிட்டது.

ஆகவே பிரச்னைகள் ஐஸ்கட்டி போல் கரைந்து விடும்.

சரி, 8-ம் வீட்டில் இருக்கும் குரு பகவான் முன்னேச்சரிக்கைகாக சொல்லும் ஆலோசனை என்ன என கேட்டால், “பயணங்களில் கவனம் தேவை.

உடல்நலனில் கவனம் தேவை. ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும்” என்பதே ஆலோசனை.

விநாயகரையும், தட்சிணாமூர்த்தியையும், குருபகவானையும் வணங்கி, வெற்றிபடியில் கால் வையுங்கள்.

ஸ்ரீதனலஷ்மியின் அருட்பார்வை உங்களுக்கு நிறைந்திருக்கிறது.

குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள். -



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 12, 2014 6:25 pm

விருச்சிக இராசி அன்பர்களே…

19.6.2014 அன்று குருபகவான் உங்கள் இராசிக்கு 9-ம் இடமான பாக்கியஸ்தானத்திற்கு குடிபுக போகிறார்.

“ஓடியவனுக்கு ஒன்பதில் குரு” என்று சிலர் தவறாக கூறுவார்கள்.

ஓடினவனுக்கு அல்ல, ஓட்டினவனுக்கு என்பதே சரி.

அதாவது பல விதமான பிரச்னைகளை ஓட்டிவிட்டவனுக்கு ஒன்பதில் குரு.

ஆகவே இந்த குரு பெயர்ச்சியால் பல பிரச்னைகளை ஓட்டி வெற்றி பெற போகிறீர்கள்.

உங்கள் இராசிக்கு தன, பஞ்சமாதிபதி அதாவது 2-ம் வீடு, 5-ஆம் வீட்டின் அதிபதி, 9-ம் இடத்தில் அமர்வது பிரமாதமான யோகமே.

உச்சத்தில் அமர்ந்த குரு உங்கள் ஜென்மத்தை பார்க்கிறார்.

3-ம் இடமான கீர்த்தி ஸ்தானத்தை பார்வை செய்கிறார்.

5-ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்க்கிறார்.

பொதுவாக நல்ல யோகத்தை ஜாதக கட்டத்தில் சில இடங்கள் கொடுக்கிறது.

இந்த 5-ம் இடம் குருவின் பார்வை பெற்றதால், முன்னேற்றத்தில் இருந்த முட்டுகட்டை அகலும். தேவையான வசதி பெருகும்.

இதுவரை இருந்த அலைச்சல், விரயம், அவப்பெயர் அகலும். உழைப்புக்கு மேல் ஊதியம் கிடைக்கும்.

உயர்பதவியும், குடும்பத்திற்கு தேவையான எல்லா வசதிகளும் வந்தடையும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.

தடைபட்ட திருமணம் நடைபெறும். வாடகை வீட்டில் இருந்து, சொந்த வீடு செல்ல வழி வகுக்கும்.

விரோதிகளும் அடி பணிவர். பொதுவாக நீங்களே நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு வசதிகள் பெருகும். பலநாட்கள் ஏன், பல மாதங்கள் கடன்காரர்களிடம் கைகட்டி கொண்டு இருந்த நீங்கள், கடனை தூக்கி எறிவீர்கள்.

வாகன வசதி உண்டாகும். தந்தை வழியில் சில உதவிகள் கிடைக்கும். செய்யும் தொழிலில் பெரிய அளவில் மாற்றம் செய்ய வசதி பெருகும்.

புதிய கூட்டாளி வர வாய்ப்புள்ளது. மேல் படிப்பு, பட்டப்படிப்பு தொடரும்.

வேலை வாய்ப்பு தேடி வரும். சரி, குரு பகவான் என்ன எச்சரிக்கிறார் என்றால், “வரும் பணத்தை பிடித்து வையுங்கள்.

பணத்தை தண்ணீர் போல் செலவு செய்யாதீர்கள்.” இவைதான் 9-ம் இடதின் குரு பகவான் உங்களுக்கு சொல்லும் ஆலோசனை.

விநாயகப்பெருமானையும், தட்சிணாமூர்த்தியையும், குருபகவானையும் வழிபடுங்கள்.

ஐஸ்வரிய லஷ்மியின் அருட்பார்வை உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள். -



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 12, 2014 6:28 pm

துலா இராசி அன்பர்களே…

19.6.2014 அன்று குரு பகவான் உங்கள் இராசிக்கு 10-ம் இடத்திற்கு வருகிறார்.

உங்கள் இராசிக்கு 3-ம் இடம், 6-ம் இடத்தின் அதிபதியான குரு பகவான், 10-ம் இடத்திற்கு வருவது நன்மையே.

அதுவும் உச்சமாக அங்கு அமர்ந்து விடுகிறார்.

உங்கள் இராசிக்கு தனஸ்தானம் என்னும் 2-ம் இடமும், சுகஸ்தானம் என்னும் 4-ம் இடமும், ரோகஸ்தானம் என்கிற 6-ஆம் இடத்தையும் குரு பார்வை செய்வதால், அந்த இடங்கள் தீமைகள் குறைந்து நன்மைகள் நடக்க வழி செய்ய காத்திருக்கிறது.

உங்கள் இராசிக்கு 2-ம் இடத்தை குரு பார்வை செய்வதால், பெரும் உதவிகள் தேடி வரும். கைக்கு கை பணம் வரும்.

பொருளாதர வசதி பெருகும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த காரியத்தை பேசியே சாதித்துவிடுவீர்கள்.

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும். சொந்த வாகனம் வாங்கி அமர்க்களமாக நிறுத்துவீர்கள்.

கல்வி உயரும். மேற்படிப்பு, பட்டப்படிப்பு பிரமாதமாக தொடரும்.

6-ம் இடத்தை பொறுத்தவரையில் கடன், வழக்கு, ரோகம் இவை அனைத்தும் காணாமல் போய்விடும்.

திருமணம் மற்றும் சுபகாரியங்கள் நடக்கும். வீடு, மனை வாங்கும் யோகமும் அமையும்.

அரசாங்க உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் வர வாய்ப்புள்ளது.

இதுவரை புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், புத்திர பாக்கியத்தை குருவின் அருளால் கிடைக்கப்பெறுவீர்கள்.

மனக்குழப்பம் தீரும். சண்டை, சச்சரவு தீரும். பொதுவாக, “பதவி போனவனுக்கு 10-ல் குரு” என்பார்கள்.

அதை பற்றி துளியளவும் கவலைக்கொள்ளவேண்டாம்.

காரணம், 3-ம் இடம், 6-ம் இடதின் அதிபதி, கேந்திரத்தில் இருந்தால் யோகத்தையே செய்வார்.

சோகத்தை கொடுக்க மாட்டார். சரி இவ்வளவு நன்மைகளை செய்யும் குரு பகவான், ஏதாவது பிரச்னையும் தருவாரா? எனக் கேட்டால், ஆம். கூட்டு தொழிலில் கவனமாக இருக்க சொல்கிறார்.

ஆவேசம், பரபரப்பு அடக்கி வையுங்கள். தேவையில்லா பேச்சு வேண்டாம்.

சாந்தமாக இருந்தால், சகலமும் உங்கள் வீடு தேடி வரும்.

ஸ்ரீமகாலஷ்மியின் அருட்பார்வை உங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது.

குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள். -



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 12, 2014 6:29 pm

கன்னி இராசி அன்பர்களே…

19.6.2014 அன்று குரு பகவான் உங்கள் இராசிக்கு 11-ம் இடத்திற்கு வருகிறார்.

11-ம் இடம் லாபஸ்தானம். இனி நீங்கள் மண்ணை தொட்டாலும் பொன்னாகும்.

அப்படி ஒரு யோகம் அடிக்க போகிறது.

உங்கள் இராசிக்கு 4-ம் வீடு, 7-ம் வீட்டின் அதிபதி குரு.

அதாவது சுகாதிபதி, சப்தமாதிபதி குரு பகவான்.

அவர் உங்கள் இராசிக்கு லாபத்தில் அமர்வதால், தடைப்பட்ட காரியங்கள் கைகூடும்.

உங்கள் இராசிக்கு 3-ம் இடம், 5-ம் இடம், 7-ம் இடத்தை பார்வை செய்வதால், அந்த இடங்கள் சுபிக்ஷம் அடைந்து நன்மைகளை கொடுக்கப்போகிறது.

3-ம் இடம் கீர்த்தி ஸ்தானம். உங்கள் செல்வாக்கு உயரும்.

இதுவரையில் அபகீர்த்தி அனுபவித்த சிலர் பெருமைப்பட பேசப்படுவர்.

முடியாத காரியமும் முழு முயற்சியால் முடிப்பீர்கள்.

பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்வை செய்வதால், பூர்வீக சொத்துக்களில் வில்லங்கம் இருந்தால் விலகி உங்கள் கைக்கு வரும். பிள்ளைகளுக்கு சுப நிகழ்ச்சி நடக்கும்.

திருமணம் ஆகுமா என்று ஏங்கி கொண்டு இருந்தவர்களுக்கு மணவாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.

கூட்டு தொழிலில் லாபம் கிடைக்கும்.

மனைவியால் நல்ல யோகம் உண்டு.

பொதுவாக 11-ம் இடம் நல்ல யோகமான இடம். ஆகவே பல வழிகளில் நன்மைகள் நாடி வரும்.

கடல் கடந்து போகும் பாக்கியமும், வெளிநாட்டில் வேலை வாய்ப்பும் கிடைக்கும்.

இதுவரை தடைபட்ட கட்டட வேலை மட, மடவென எழும்.

இவ்வளவு நன்மைகள் செய்ய கூடிய குரு பகவான் சில விஷயங்களில் உங்களை கவனமாகவும் இருக்கச் சொல்கிறார்.

அதாவது வழக்கு இருந்தால் சுமுகமாக பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்.

நீயா-நானா என ஈகோ பார்க்க கூடாது. உடல்நலனில் கவனம் தேவை.

பெற்றோர் வசம் சுமுகமாக இருக்க வேண்டும்.

கணபதியையும், தட்சிணாமூர்த்தியையும், குருபகவானையும் வணங்கி விட்டு முன்னேற காலடி எடுத்து வையுங்கள்.

ஸ்ரீகஜலஷ்மியின் அருட்பார்வை உங்களுக்கு நிறைந்திருக்கிறது.

குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள். -



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 12, 2014 6:29 pm

சிம்ம இராசி அன்பர்களே…

19.6.2014 வியாழன் அன்று குரு பகவான் உங்கள் இராசிக்கு 12-ம் இடத்திற்கு வந்து அமர்கிறார்.

அதாவது கடகத்தில் பட்டா போட்டு அமரப் போகிறார்.

“அய்யய்யோ 12-ல் குரு இருக்கலாமோ” என்று சிலர் பயப்படுவர். பயமே வேண்டாம்.

அந்த குருபகவான் உங்கள் இராசிக்கு 5-ம் வீடு, 8-வீட்டின் அதிபதி.

ஆகவே 8-க்குரிய குரு, 12-ல் வந்தால் இராஜயோகத்தை கொடுப்பார்.

அதாவது 8-க்குரியவன் 12-ல் வந்தால், “விபரீத இராஜயோகம்”. இனி தொட்டது துலங்கும்.

உங்களை தூக்கி எறிந்தவர்கள், உங்கள் முன் தலை வணங்குவார்கள்.

குரு உங்கள் இராசிக்கு 4-ம் இடம், 6-ம் இடம், 8-ம் இடங்களை பார்வை செய்து, அந்த இடங்களை யோகம் பெறச் செய்கிறார்.

ஆகவே தடைபட்ட மேல் படிப்பு தொடரும். தகர டப்பா வண்டியை ஒரங்கட்டிவிட்டு, புதிய வாகனம் வாங்கும் யோகும் உண்டு.

சொந்த வீடு இல்லையே என்ற புலம்பல் தீரும். கடன் தொல்லை பெரும் அளவில் தொலையும்.

தீராத ரோகம் தீரும். கோர்ட், கேஸ் இவைகளில் வெற்றி கொடுக்கும்.

இருப்பினும், பூர்வீக சொத்து இருந்தால் அதனால் பிரச்னை வர வாய்ப்புள்ளது.

குடும்ப ஸ்தானத்திற்கு லாபத்தில் குரு இருப்பதால், குடும்ப வாழ்க்கை அமையும்.

தெய்வ தரிசனம் அதிகரிக்கும். பிரயாணங்கள் அதிகரிக்கும்.

ஜீவனத்திற்கு 7-ம் இடம் பார்வை பெறுவதால், பங்கு வர்த்தகத்தில் யோகத்தை கொடுக்கும்.

கூட்டுதொழில் லாபம் உண்டு. புத்திரஸ்தானத்திற்கு 4-ம் இடம் குரு பார்வை பெறுவதால், புத்திர- புத்திரிகளுக்கு திருமண முயற்சிகள் கைகூடும்.

முக்கியமாக கஷ்டங்களை கொடுக்கும் அஷ்டம ஸ்தானம், குருவின் பார்வை பெறுவதால் வரும் கஷ்டங்கள் காற்றோடு ஓடி விடும்.

உறவினர் வருகையும், அவர்களால் ஆதாயமும் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் எதிர்பாராமல் நடக்கும்.

பொதுவாக 12-ல் அமர்ந்த குரு, வதைக்க மாட்டார். வாழ வழி வகுப்பார்.

இது என் கருத்து. ஸ்ரீவீரலஷ்மியின் அருட்பார்வை உங்களுக்கு நிறைந்திருக்கிறது.

விநாயகரையும், தட்சிணாமூர்த்தியையும், குருபகவானையும் வணங்கி முன்னேறுங்கள்.

குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 12, 2014 6:30 pm

கடக இராசி அன்பர்களே…

19.6.2014 அன்று, குரு பகவான் உங்கள் இராசியில் வந்து அமரப்போகிறார்.

(ஜென்ம குரு). “பொதுவாக வனவாசம் போன இராமருக்கு ஜென்ம குரு” என்பார்கள். இதை கேள்விபட்டு பயந்து விடாதீர்கள்.

உங்கள் இராசியில் குரு அமரப்போகிறார் என்றால், குரு பகவான் உங்கள் இராசிக்கு யார்?.

9-ஆம் அதிபதிக்குரியவர். அதாவது பாக்கியாதிபதி. கோடீஸ்வரன் உங்களுடன் சேர்ந்தால் எப்படி இருக்கும் என்று சொல்லவா வேண்டும்.

வணங்காதவர்களும் உங்களுக்கு வணக்கம் சொல்வார்கள். ஆகவே ஜென்ம குரு உங்களுக்கு நன்மைகள் வாரி வழங்குவார்.

காரணம் உச்சம் பெற்றவர், அச்சத்தை போக்குவார். உங்கள் இராசிக்கு 5-ம் இடம், 7-ம் இடம், 9-ம் இடம் அதாவது புத்திரஸ்தானம், சப்தமஸ்தானம், பாக்கியஸ்தானம் இவைகள் அனைத்தும் FULL POWER பெற்று விட்டது.

இழுபறியாக இருந்த பிள்ளைகளின் திருமணம் டக்கென்று நடக்கும்.

மனைவியால் நன்மைகள் நடக்கும். அல்லது திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரும்.

கூட்டாளிகளால் நல்ல லாபம் கிடைக்கும். வாடகை வீட்டில் இருந்தவர்கள் புது வீட்டில் குடிபுக குரு பகவான் அருள் செய்வார்.

பொதுவாக 5-ம் வீட்டை குரு பார்த்தால், பள்ளத்தில் விழுந்தவன் பல்லாக்கில் அமர்வான்.

பெரும் சோதனைகளை கண்ட நீங்கள் ஆனந்தமான வாழ்க்கை வாழப்போகிறீர்கள்.

சிலர் ஜென்ம குரு நன்மை செய்யாது என்று கூறினாலும் கவலைப்படாதீர்கள்.

அவர் (குரு) பார்வை சுபஸ்தானங்கள் மீது விழுகிறது ஆகவே அந்த ஸ்தானங்கள் உங்களுக்கு நன்மைகளையே செய்யும்.

பல காலமாக புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு மழலைச் செல்வம் கிடைக்கும்.

இந்த குருபெயர்ச்சி சில நேரங்களில் உடல்நலனில் தொல்லைகள் கொடுத்தாலும், கவலைப்படதீர்கள்.

காரணம் அவன் 6-க்குரியவன்.

சிறு பிரச்னைகள் கொடுத்தாலும் அவனே 9-க்குரியவனாகவும் இருப்பதால், உடல்நலனில் பெரும் தொல்லைகளை தர மாட்டார்.

ஸ்ரீதனலஷ்மியின் அருள்பார்வை உங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது.

விநாயகரையும், தட்சிணாமூர்த்தியையும் அத்துடன் குருபகவானையும் வணங்கி வேலையை தொடங்குங்கள்.

குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக