ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...!

4 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

ஈகரை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...!

Post by கோ. செந்தில்குமார் Thu May 01, 2014 8:57 am

First topic message reminder :

பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதி...! இன்று காலை சுமார் 7.15 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 9 ம் நடைமேடையில் நின்றிருந்த பெங்களுரூவிலிருந்து கவுகாத்தி செல்லும் ரயிலில் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தது. S - 4 பெட்டியில் ஒரு குண்டும், S - 5 பெட்டியில் மற்றொரு குண்டும் வெடித்துள்ளது. ரயிலின் S-4 மற்றும் S-5 பெட்டிகள் சேதம். 10 பேர் படுகாயம். ஸ்வாதி என்ற 22 வயது பெண் பலி. இவர் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர். சென்னை மாநகரம் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் உதவி மையம் தொடர்பிற்கு தொலைபேசி எண்: 044 - 25357398.


Last edited by கோ. செந்தில்குமார் on Thu May 01, 2014 9:17 am; edited 4 times in total
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down


ஈகரை Re: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...!

Post by சிவா Fri May 02, 2014 3:25 am

குண்டுவெடிப்பு எதிரொலி: சென்னை விமானநிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

சென்னை சென்டிரல் ரெயில் நிலைய குண்டுவெடிப்பை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நேற்று காலை கவுகாத்தி ரெயிலில் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் பெண் ஒருவர் உயிர் இழந்தார். பலர் படுகாயம் அடைந்தனர்.

இதனைத்தொடர்ந்து ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல், சென்னை விமானநிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமானநிலையத்தில் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ள இடங்களில் விமானநிலைய உதவி கமிஷனர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர் மகிமைவீரன் தலைமையில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். மோப்பநாய்களும் வாகனசோதனையில் ஈடுபடுத்தப்பட்டது. விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

தாம்பரம் ரெயில்நிலையம்

இதேபோல், தாம்பரம் ரெயில் நிலையத்தில் பயணிகள் கடும் சோதனைக்கு பின்னரே ரெயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் பயணிகளின் உடைமைகள் கடுமையாக சோதிக்கப்பட்டது.

சந்தேகப்படும் நபர்களிடம் தீவிரமாக போலீசார் விசாரணை நடத்தியபின்னரே ரெயிலில் செல்ல அனுமதித்தனர். தொடர்ந்து தாம்பரம், பல்லாவரம், திரிசூலம் ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை Re: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...!

Post by சிவா Fri May 02, 2014 3:26 am

பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது ரெயில் பயணிகள் பரபரப்பு தகவல்

பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டுகள் வெடித்ததாகவும், உயிர் பிழைக்க ஒருவர் மீது ஒருவர் மிதித்து தள்ளி ஓடினோம் என்று ரெயிலில் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சியுடன் கூறினர்.

பயங்கர சத்தம்

பெங்களூர்–கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் எஸ்.7 பெட்டியில் பயணம் செய்த திருப்பத்தூரை சேர்ந்த நளினி(வயது 33) என்ற பயணி குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து அதிர்ச்சியுடன் கூறியதாவது:–

கவுகாத்தியில் உள்ள சிலிகுடி எனும் பகுதியில் வசித்து வரும் என்னுடைய சகோதரரை பார்ப்பதற்காக நானும் என்னுடைய குடும்பத்தை சேர்ந்த 13 பேரும் ஜோலார்பேட்டையில் இருந்து அதிகாலை 3.30 மணியளவில் கவுகாத்தி எக்ஸ்பிரசில் ஏறினோம். பின்னர் நாங்கள் அனைவரும் அயர்ந்து தூங்கினோம். காலை 7.05 மணிக்கு ரெயில் சென்டிரல் வந்தது. நாங்கள் அனைவரும் எழுந்து இருக்கையில் அமர்ந்து இருந்தோம். அப்போது திடீரென்று நின்ற ரெயில் குலுங்கியபடி பயங்கர சத்தத்துடன் அதிர்ந்தது.நாங்கள் என்னமோ? ஏதோ? என்று பதறிய வேளையில், ரெயிலில் குண்டுகள் வெடித்து விட்டது என்ற மற்ற பெட்டிகளில் இருந்த பயணிகள் அலறியடித்து கொண்டு ஓடினர். இதையடுத்து நாங்களும், எங்கள் பெட்டியில் இருந்த சக பயணிகளும் வேகமாக ரெயிலில் இருந்து வெளியேறினோம். அப்போது அனைவரும் உயிர் பிழைப்பதற்காக ஒருவர் மீது ஒருவர் ஏறி தள்ளிக்கொண்டு ஓடினார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரத்த சகதியாக...

எஸ்.5 பெட்டியில் பயணம் செய்த பெங்களூரை சேர்ந்த ரம்யா தேவி(வயது 29) கூறும்போது, ‘பெங்களூரில் இருந்து கவுகாத்தியில் உள்ள எனது உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக ரெயிலில் வந்துகொண்டிருந்தேன். காலையில் ரெயில் சென்னை வந்ததும் கழிவறை கண்ணாடி அருகே நின்று பல் துலக்கி கொண்டிருந்தேன்.

அப்போது அருகில் உள்ள எஸ்.4 பெட்டியில் இருந்து, ‘டமார்’ என்று பயங்கர சத்தம் கேட்டது. பின்னர் புகையாக வெளியேறியது. உடனே நான் பதற்றத்துடன் சென்று அங்கு பார்வையிட்டேன். அப்போது அந்த பெட்டியில் இருந்து ஒரே அழு குரல் சத்தமாக கேட்டது. நான் கால் வைத்த இடம் ரத்த சகதியாக இருந்தது. பலர் மயங்கிய நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இந்த காட்சியை பார்த்த நான் அந்த பெட்டியில் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போய் நின்று விட்டேன். உடனடியாக வந்த என் கணவர் மொய்துன் மினியா என்னை ரெயிலில் இருந்து வெளியே அழைத்து வந்தார். கழிவறை அருகே நின்று கொண்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளேன்.’ என்றார்.

22 பவுன் நகை மீட்பு

எஸ்.3 பெட்டியில் பயணம் செய்த பெங்களூரை சேர்ந்த வியாபாரி பதல்சிங்(50) கூறியதாவது:–

நான் என்னுடைய தொழில் சம்பந்தமாக எனது மனைவி சுமந்தாவுடன் கவுகாத்திக்கு சென்று கொண்டிருந்தேன். ரெயிலில் அயர்ந்து தூங்கி கொண்டு பயணம் செய்தேன். காலை 7.05 மணிக்கு ரெயில் சென்னை சென்டிரலை வந்தடைந்தது. அப்போது நான் காபி குடிக்கலாம் என்று எண்ணி பிளாட்பாரத்தில் விற்பனை செய்யப்பட்ட காபியை வாங்கி குடிக்க தயாரானேன். அப்போது திடீரென்று பயங்கரம் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் பயணிகள் அலறும் சத்தம் கேட்டது. பயணிகள் ஒருவரை ஒருவர் இடித்து தள்ளிக்கொண்டு ரெயிலில் இருந்து கீழே இறங்கி ஓடிய வண்ணம் இருந்தனர். இதையடுத்து அசம்பாவிதத்தை உணர்ந்த நான் உடனடியாக ஓடிச்சென்று என்னுடைய உடைமைகளையும், மனைவியையும் அழைத்து கொண்டு ரெயிலில் இருந்து வெளியே ஓடி வந்தேன். அப்போது ரெயிலில் இருந்து பெண் பயணி ஒருவரின் பிணத்தை கொண்டு வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்த நான் என்னுடைய உடைமையை, 22 பவுன் நகைகள் இருந்தும் தூக்கி வீசி விட்டு ஓடினேன். பின்னர் அதிர்ச்சி விலகிய பிறகு நான் என்னுடைய உடைமையை தேடி வந்த போது கிடைக்கவில்லை. பின்னர் போலீசார் என்னுடைய உடைமையை பத்திரமாக மீட்டு ஒப்படைந்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோன்று பல பயணிகளும் அதிர்ச்சியுடன் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து கூறினர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை Re: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...!

Post by சிவா Fri May 02, 2014 3:29 am

ஸ்வாதிக்கு இன்னும் 2 மாதத்தில் திருமணம்… அதற்குள் குண்டு வெடிப்பில் பலியான சோகம்

குண்டூர்: சென்னை ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்புகளில் பலியான ஸ்வாதிக்கு இன்னும் இரண்டு மாதத்தில் திருமணம் நடக்க இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் கடந்த ஜனவரி மாதம் தான் முதல் சம்பளத்தை வாங்கினாராம். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இன்று காலை வந்த பெங்களூர்-குவகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 குண்டுகள் வெடித்ததில் ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த ஸ்வாதி பரச்சூரி(22) என்ற பெண் பலியானார்.

அவர் குறித்த தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது.

ஸ்வாதி குண்டூரில் வசிக்கும் ராமகிருஷ்ணன் - காமாட்சி தம்பதியினருக்கு மகளாக பிறந்தார். இவர் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண். இவரது தாயார் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மாதங்களில் திருமணம் நடக்க இருந்ததாக அவரது பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

விடுமுறையை குண்டூரில் கழிக்க பெங்களூரில் குவகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியுள்ளார் ஸ்வாதி. அவர் தட்கலில் டிக்கெட் எடுத்துள்ளார்.

ஸ்வாதி நேற்று மாலை எனக்கு போன் செய்து ரயில் ஏறிவிட்டதாக தெரிவித்தாள். அவள் பெங்களூரில் உள்ள டி.சி.எஸ். நிறுவனத்தில் சாப்ட்வேர் புரோகிராமராக வேலை பார்த்தாள் என்றார் ஸ்வாதியின் பாட்டி ராஜலக்ஷ்மி.

ஸ்வாதி ஸ்காலர்ஷிப் மூலம் கல்வியை முடித்தாள். படிப்பில் அவள் கெட்டிக்காரி. அவள் பி.டெக் படித்த முடித்தவுடன் வேலை கிடைத்தது. நாங்கள் சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவள் தான் எங்கள் நம்பிக்கையாக இருந்தாள் என்றார் ராஜலக்ஷ்மி.

ஸ்வாதி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெங்களூருக்கு சென்று அங்குள்ள டி.சி.எஸ். நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தாள். அவள் அங்கு மகிழ்ச்சியாக வேலை பார்த்தாள். அவளுக்கு பெங்களூர், அங்குள்ள மக்கள் மிகவும் பிடித்திருந்தது. அவள் தினமும் எங்களுக்கு போன் செய்து பேசுவாள் என்று பேத்தி பற்றி தெரிவித்தார் ராஜலக்ஷ்மி.

ஸ்வாதி கடந்த ஜனவரி மாதம் தான் முதல் சம்பளத்தை வாங்கினாள். கடந்த 2 மாதங்களாக குண்டூருக்கு வர திட்டமிட்டு நேற்று தான் கிளம்பினாள். அவள் இன்று மாலை குண்டூரை அடைய வேண்டும். அவளுக்காக நாங்கள் வீட்டில் அவள் விரும்பி சாப்பிடுவதை தயாரித்து வைத்தோம் என்று ராஜலக்ஷ்மி கூறினார்.

நடந்ததை எங்களால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. கடவுள் எப்படி எங்கள் குழந்தையை இந்த முறையில் எடுத்துக் கொள்ளலாம்? அவள் என்ன தவறு செய்தாள். அவளை ஏன் கொன்றார்கள்? அவள் ஒரு அப்பாவி பயணி என்றார் பாட்டி.

சம்பவம் நடந்த ரயிலில் ஸ்வாதியின் சீட்டுக்கு அடியில் தான் குண்டு வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை Re: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...!

Post by சிவா Fri May 02, 2014 3:30 am

கோழைத்தனமான தாக்குதல்- சென்னை குண்டுவெடிப்புக்கு பிரதமர் கண்டனம்

சென்னை: சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பிரதமர் மன்மோகன்சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோழைத்தனமான தாக்குதல்- சென்னை குண்டுவெடிப்புக்கு பிரதமர் கண்டனம் இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. இது கோழைத்தனமானது.

இதற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவத்தில் பலியானவருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை Re: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...!

Post by சிவா Fri May 02, 2014 3:32 am

குண்டுவெடிப்பு: தமிழகத்திலே அரசு இருக்கிறதா, முதல்வர் இருக்கிறாரா?.. கருணாநிதி கடும் கண்டனம்

சென்னை: சென்னை சென்ட்ரலில் இன்று காலை நடைபெற்ற குண்டுவெடிப்பிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசின் பொறுப்பற்ற தன்மையே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், குண்டு வெடித்து, சிலர் இறந்து விட்டதாகவும், மேலும் பலர் காயமடைந்திருப்பதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த விபத்தில் மறைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தோர் விரைவில் நலம் பெற என்னுடைய விழைவினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்திலே சட்டம், ஒழுங்கு கேட்பாரற்ற நிலையிலே இருப்பதாகவும், அதுபற்றி அக்கறையோடு முறையாக நடவடிக்கைகள் எதுவும் எடுப்பதில்லை என்றும் நான் பல நாட்களாக தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தேன். ஆனாலும் அ.தி.மு.க. அரசினர் அதைக் காதில் போட்டுக் கொள்ளவும் இல்லை; கவனம் செலுத்தவுமில்லை.

தற்போது கூட இரண்டு நாட்களுக்கு முன்பு, பாகிஸ்தான் தீவிரவாதி, ஐ.எஸ்.ஐ. உளவாளி, ஜாகீர் உசேன் என்பவரைத் தமிழகக் காவல் துறை கைது செய்துள்ளது. காவல் துறையினர் என்ன தான் திறமையாகப் பணியாற்றிய போதிலும், அவ்வப்போது ஆய்வு செய்து, அவர்களை வழி நடத்தி உரிய அறிவுரைகளை வழங்கிட வேண்டிய அந்தத் துறையின் பொறுப்பினை ஏற்றுள்ள முதலமைச்சர் நெருக்கடியான நேரத்திலே கூட தலைநகரிலே இல்லாத காரணத்தால், அந்தத் தீவிரவாதி கைது செய்யப்பட்ட பிறகும், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாகவும், துல்லியமாகவும் எடுக்கப்படாத காரணத்தால் தான், இன்று காலையில் சென்ட்ரல் புகைவண்டி நிலையத்தில் குண்டு வெடித்துள்ளது.

வெடிக்காத பைப் வெடி குண்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது அப்படிப்பட்ட நிர்வாகச் செயல்பாடுகள் இல்லாமல் காவல் துறையினர் எப்படி முடிவெடுப்பது என்று புரியாமல் திசை அறியாத நிலையில் இருப்பதாகவும் கூறப் படுகிறது. ஜாகீர் உசேன் கைது செய்யப்பட்டதும், தீவிரவாத நடவடிக்கைகள் என்ன என்று உடனடியாக முறைப்படி முழுமையான விசாரணைகள் நடைபெற்றிருக்குமானால், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றிருக்காமலே கூடத் தவிர்க்கப்பட்டிருக்கலாம். தீவிரவாதிகள் மேலும் என்னென்ன திட்டமிட்டிருக்கிறார்கள் என்பது பற்றியும் நுண்ணறிவுப் பிரிவின் ஆலோசனையுடன் காவல் துறை உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆனால் காவல் துறைக்குப் பொறுப்பேற்றுள்ள தமிழக முதலமைச்சர் மீண்டும் கொடநாடு சென்று விட்டார். தமிழகத்தில் கடும் வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு என்று அனைத்து நாளேடு களிலும் செய்தி வந்து கொண்டிருக்கின்றது.

மக்கள் ஆங்காங்கு காலிக் குடங்களோடு மறியல் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். தேர்தல் வரை மறைந்திருந்த மின்வெட்டு இன்னும் ஒரு சில நாட்களில் கடுமையாகி விடும் என்று சொல்கிறார்கள். இதற்கிடையே மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்தப் போவதாகவும் செய்திகள் வந்துள்ளன. ஆம்னி பேருந்துகளில் இன்று முதல் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதாகவும் இன்று செய்தி வந்துள்ளது. அ.தி.மு.க. அரசின் அனுமதி இல்லாமலா இந்தக் கட்டண உயர்வு நடைபெற்றிருக்கிறது? சட்டம், ஒழுங்கு கேட்கவே வேண்டிய தில்லை.

கொள்ளைக்காரர்கள் ரயிலை நிறுத்தி பெண் பயணிகளிடம் நகைகளைக் கொள்ளை அடித்து விட்டுச் செல்கிறார்கள். கொலை நடக்காத நாட்களே இல்லை. தண்ணீரின்றி காய்ந்து போன நெற்பயிர்களை விவசாயிகளே தீ வைத்து அழித்து வரும் கொடுமை கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் நிலவி வருவதாக "தீக்கதிர்" நாளேடே புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டிருக்கிறது. பாசனத்திற்கான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் குறுவைப் பயிரிட வாய்ப்பில்லை என்றும் விவசாயிகள் வேதனை முகட்டுக்கே சென்று விட்டார்கள் என்றும் செய்திகள் வருகின்றன. இதைப்பற்றியெல்லாம் கவலைப்பட தமிழகத்திலே செயல்படும் ஒரு அரசு இருக்கிறதா? முதலமைச்சர் இருக்கிறாரா? அமைச்சர்கள் இருக்கிறார்களா? என்பது தான் வேதனையிலும் வேதனை" என்று கூறியுள்ளார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை Re: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...!

Post by சிவா Fri May 02, 2014 3:33 am

சென்ட்ரல் குண்டு வெடிப்பு: தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம்

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு தமிழக ஆளுநர் ரோசய்யா, தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை Re: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...!

Post by சிவா Fri May 02, 2014 3:34 am

குண்டு வெடிப்பில் உயிரிழந்த ஸ்வாதி உடலுக்கு அமைச்சர்கள் அஞ்சலி

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பில் உயிரிழந்த ஸ்வாதியின் உடலுக்கு தமிழக அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை 7 மணியளவில் இரட்டை குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் ஸ்வாதி என்ற பெண் பலியானார். 14 பேர் காயமடைந்தனர். குண்டு வெடிப்பில் உயிரிழந்த ஸ்வாதி உடலுக்கு அமைச்சர்கள் அஞ்சலி உயிரிழந்த பெண்ணின் உடல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த அனைவரும் அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரயில் குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி கேள்விப்பட்ட உடன் முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் பா.வளர்மதி, அப்துல் ரகீம் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று காயம் அடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறினார்கள்.

அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி கேட்டறிந்தனர். தீவிர சிகிச்சைக்கும் உத்தர விட்டனர். பின்னர் குண்டு வெடிப்பில் உயிரிழந்த ஸ்வாதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை Re: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...!

Post by சிவா Fri May 02, 2014 3:35 am

சென்னை குண்டுவெடிப்பில் காயமடைந்த 14 பேர் யார் யார்..?

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பில் பலியான பெண் மற்றும் காயமடைந்தோர் குறித்த விவரம் தெரிய வந்துள்ளது.

இந்தக் குண்டுவெடிப்பில் இறந்த பெண் சுவாதி, ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேரந்தவர்.

இவர் தவிர 14 பேர் காயமடைந்தனர். அவர்கள் குறித்த விவரம்...

சுமல் (37)
சன்புல்லா (27)
ஆஞ்சநேயா (29)
ஷெரின்வர்மன் (28)
முரளி (27)
பிஜின் குமார் (24)
விமல் குமார் (35)
ஷாஜன் குமார் (23)
ஹரி (21)
உமா (30)
ஷோடன் (35)
அல்பாக்கான் (17)
விஷன்ரா (15)
ஷாடன் தேவ்நாத் (44)

தமிழகத்தைச் சேர்ந்த யாரும் காயமடையவில்லை குண்டுவெடிப்பில் தமிழகத்தைச் சேர்ந்த யாரும் காயமடையவில்லை. அனைவரும் ஆந்திரா, அசாம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். அனைவரும் முன்பதிவு செய்து பயணித்தவர்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை Re: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...!

Post by சிவா Fri May 02, 2014 4:04 am

குண்டு வெடிப்புக்கு ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி கண்டனம்

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், தமிழக கவர்னர் ரோசய்யாவுக்கு அனுப்பியுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

கோழைகள் நடத்திய வன்முறை தாக்குதல் சம்பவம் கடும் கண்டனத்துக்கு உரியதாகும். இந்த தாக்குதலால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பாதிப்புகள் மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண நடவடிக்கைகளை மாநில அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் செய்து கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி தெரிவித்துள்ளார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை Re: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 8.8 கிலோ தங்கம் பறிமுதல்
» மெக்சிகோ டி.வி. நிலையத்தில் குண்டு வெடித்தது
»  சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புதிய சுரங்கப்பாதை திறப்பு: 4 போக்குவரத்து மையங்களை இணைக்கிறது
» சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் உணவு திருவிழா!
» சென்னை ரயில் நிலையத்தில் இளைஞர் படுகொலை-காதலியை கற்பழிக்க முயற்சித்த பயங்கரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum