Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிலத்தடி நீர்வளம்
2 posters
Page 1 of 1
நிலத்தடி நீர்வளம்
எந்த ஒரு நாடு என்றாலும், அங்கு நீர்வளம் இருந்தால்தான், பூமி செழிக்கும். மக்களின் வாழ்வும் வளம் பெறும். பொதுவாக மொத்த நிலப்பரப்பில் 33 சதவீதம் வன வளம் அதாவது, அடர்ந்த காடுகள் இருந்தால்தான் அங்கு மழை வளம் பெருகும். அந்த வகையில், தமிழ்நாட்டில் மிகுந்த முயற்சிக்கு பிறகு இப்போதுதான் 21 சதவீத வனப்பரப்பு இருக்கிறது. தாமிரபரணி தவிர, வேறு எந்த ஆறும் தமிழ்நாட்டில் உருவெடுக்கவில்லை. அடுத்த மாநிலங்களில் இருந்துதான் ஓடிவருகிறது. அதனால்தான் அடுத்த மாநிலங்களை தண்ணீர் திறந்துவிடுங்கள் என்று கெஞ்சவேண்டிய நிலையில் இருக்கிறோம். ஆக, நமது மாநிலத்தில் உள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், வாய்க்கல்களை நன்கு பராமரித்து, தண்ணீரை சேமித்து வைத்தால்தான், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த முடியும்.
சமீபகாலங்களாக நிலத்தடி நீர்மட்டம் தமிழ்நாட்டில் வெகுவாக குறைந்துவருவது மிகவும் கவலை அளிக்கிறது. ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் சேமித்துவைக்க வேண்டிய நிர்ப்பந்தம் இப்போது ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள நீர் நிலைகளில் எல்லாம் தண்ணீரே தெரியாத அளவுக்கு ஆகாயத்தாமரை படர்ந்து இருக்கிறது. இந்த ஆகாயத்தாமரையால் எந்த வித பலனுமில்லை. பெருமளவு தண்ணீரை உறிஞ்சிவிடுகிறது. இந்த ஆகாயத்தாமரையை ஒழிப்பது என்பது எளிதில் முடியாது. மேலும், ஆகாயத்தாமரை நீர்நிலைகளையும் மேடாக்கிவிடும்.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா இந்த ஆகாயத்தாமரையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். இனி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள்தான் அதை சிரமேற்கொண்டு செய்ய வேண்டும். அடுத்து அழிக்கப்படவேண்டியது சீமைக்கருவேல மரம். இது தமிழ்நாட்டில் பாரம்பரியமாக உள்ள மரம் அல்ல. பல ஆண்டுகளுக்கு முன்பு விறகுக்காக வெளிநாட்டில் இருந்து இந்த மரங்களின் விதைகளைக்கொண்டுவந்து போட்டார்கள். இன்று அனைத்து நீர்நிலைகளின் கரைகள் மட்டுமல்லாமல், நீர்நிலைகளுக்குள்ளும், பெரும்பாலான நிலப்பகுதிகளிலும் அடர்ந்த காடுபோல வளர்ந்து சுற்றுச்சூழலை கெடுத்துக்கொண்டு இருக்கிறது. புவி வெப்பமயமாதலின் அபாயத்தைப்பற்றி உலகமே பேசுகிறது. ஆனால், புவி வெப்பமயமாதலுக்கு உதவும் கரமாக திகழ்வது இந்த சீமை கருவேலமரம்தான். மற்ற மரங்கள் கார்பன்–டை ஆக்சைடை தனக்குள் உறிஞ்சி, ஆக்சிஜனை பெருமளவில் வெளியிடும். ஆனால் இந்த சீமை கருவேலமரம் இதற்கு எதிர்பணிகளைச் செய்கிறது. நிலத்தடி நீரை அப்படியே டியூப் போட்டு உறிஞ்சுவதுபோல உறிஞ்சிவிடுகிறது. நிலத்தடி நீரை மட்டுமல்லாமல் காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சிவிடுகிறது. இதன் இலை, காய், விதை போன்றவை எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. இந்த சீமை கருவேல மரத்தை அழிப்பதற்கும் அரசு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடுத்து மீனவர்கள். கடலில் மீன்வளமும் குறைந்து, இலங்கை கடற்படையால் பிடித்து செல்லப்படும் அபாயத்தில் உள்ள மீனவர்களுக்கு உள்நாட்டு மீன்பிடி தொழில் வாழ்வழிக்கலாம் என்றால், இப்போது நீர்நிலைகளில் பலுகி பெருகி உள்ள ஜிலேபி கெண்டை மீனால் அதற்கும் ஆபத்து வந்துள்ளது. அயிரை, உளுவை, விரால், விலாங்கு போன்ற பல மீன்களுக்கு இடையே ஆப்பிரிக்காவில் இருந்து 1952–ல் இறக்குமதி செய்யப்பட்ட ஜிலேபி கெண்டை மீன்களால் பாரம்பரிய மீன்கள் அழிந்துபோய்விடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ஜிலேபி கெண்டையை பொதுவாக யாரும் சாப்பிடுவதில்லை. உரத்துக்குத்தான் போடுகிறார்கள். மற்ற மீன்கள் நீர்நிலைகளில் உள்ள பூச்சிகள், அழுக்குகள், தாவரங்களைச் சாப்பிட்டு வளரும். ஆனால், இந்த ஜிலேபி கெண்டை மீன்கள் மற்ற மீன்களின் முட்டைகளைத்தான் உணவாக சாப்பிடுவதால், விரைவில் மக்கள் சாப்பிடும் மற்ற மீன்வகைகள் இல்லாமலேயே போய்விடும் அபாயம் உள்ளது. எனவே, இந்த ஜிலேபி கெண்டை மீனையும் உடனடியாக அழிக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப புதிய நீர்நிலைகளை உருவாக்க வேண்டிய அவசர அவசிய நிலையில் இருக்கும்போது, இப்போது இருக்கும் ஏரிகள், குளங்கள், கால்வாய்களிலேயே பெருமளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. உடனடியாக அனைத்து நீர்நிலைகளின் பரப்பளவு என்ன? என்பதை கணக்கிட்டு, அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றவேண்டும். மொத்தத்தில், ஆகாயத்தாமரை, சீமை கருவேலமரம், ஜிலேபி கெண்டை மீன், நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு ஆகிய நான்கையும் அழித்தால்தான், நீர்வளம் குறிப்பாக நிலத்தடி நீர்மட்டம் பெருகும். விவசாயமும், மீன்வளமும் உயரும்.
[thanks] தினத்தந்தி [/thanks]
Re: நிலத்தடி நீர்வளம்
தினத் தந்திக்கும் சிவாவுக்கும் நன்றி !
அவசரமாகக் கவலைப்படவேண்டிய செய்தி இது !
வழக்கமான அரசாங்க நடைமுறைக்ளுக்குள் இதனைச் செருகாமல் உரியவர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் !
அவசரமாகக் கவலைப்படவேண்டிய செய்தி இது !
வழக்கமான அரசாங்க நடைமுறைக்ளுக்குள் இதனைச் செருகாமல் உரியவர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,!
» நிலத்தடி நீரும் விற்பனைக்கு
» நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
» ஆஸ்திரேலியாவின் நிலத்தடி வீடுகள்!
» தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது
» நிலத்தடி நீரும் விற்பனைக்கு
» நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
» ஆஸ்திரேலியாவின் நிலத்தடி வீடுகள்!
» தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|