Latest topics
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அசத்திய அரசு மருத்துவர்கள்!
+2
jenisiva
சிவா
6 posters
Page 1 of 1
அசத்திய அரசு மருத்துவர்கள்!
அரசு மருத்துவமனை என்றவுடன், அசுத்தம், அக்கறையின்மை, ஆள்பற்றாக்குறை, இடநெருக்கடி, போதிய மருத்துவ வசதியின்மை என்பதே நம் மனதில் முதலில் நினைவுக்கு வரும்.
எதையும் இலவசமாய் தந்தால், அதன் தரம் குறைவாகத்தான் இருக்கும் என்ற எண்ணம் ஆழமாகப் பதிந்திருக்கிறது. இது தவறான எண்ணம் என்கிறார்கள் அரசு மருத்துவமனை ஊழியர்கள்.
“ஆட்சி செய்வது எந்த கட்சியாக இருந்தாலும், எத்தனை சலுகைகள் தந்தாலும், எங்கள் கடமையில் நாங்கள் எந்த மாற்றமுமின்றி நிறைவாகத்தான் செய்துவருகிறோம்.
அதிலும், உயிரைக் காக்கும் மருத்துவத் துறையை சேர்ந்தவர்களாகிய நாங்கள், எடுக்கும் முடிவில் தெளிவும், நோயாளிகள் மீது அக்கறையும் இருக்க வேண்டும் என்பதில் கவனமாய் இருக்கிறோம்” என்கிறார்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள்.
ஹரி நாரக் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதும், சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டதும் இதனை நிரூபிக்கும் வகையில் நடந்துள்ள சம்பவம்.
கடந்த மார்ச் 2-ம் தேதி மாமல்லபுரத்தில் அடிபட்ட நிலையில் இருந்த ஒருவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், அங்கிருந்து மார்ச் 3-ம் தேதி காலை 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார்.
அவரின் இரத்த அழுத்தம் குறைவாகவும், மூளையின் செயல் திறன் மிகவும் கவலைக்கிடமாகவும் இருந்தது. அப்போது பணியில் இருந்த மருத்துவர் சி.டி. ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்துள்ளார். ஸ்கேன் முடிவில் மூளையில் இரு இடங்களில் பெரும் ரத்த கசிவு இருந்தது தெரிய வந்தது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்தால் தான் உயிர் பிழைப்பார் என்ற சூழ்நிலையில், தலைமை மருத்துவர் மகேஷ்வர் ஆலோசனையின்படி அவசர மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
உலகத்தின் சிறந்த வசதிகள் பெற்ற பெரிய மருத்துவமனைகளில் கூட இது போன்ற நோயாளிகள் பிழைப்பது கடினம். கோடீஸ்வரரான கார் பந்தய வீரர் மைக்கேல் ஷூமேக்கர் இது போலவே தலையில் அடிபட்டதால் இன்னும் கோமாவில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹரி நாரக்குக்கு சிகிச்சைக்குப் பிறகும் முழுமையாக சுயநினைவு திரும்பவில்லை. அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது அச்சமயம் மருத்துவர்களுக்கு தெரியவில்லை. எனவே அவருக்கு தேவையான இரத்தம், உடுத்த உடை ஆகியவற்றை கல்லூரி மாணவர்கள் கொடுத்து உதவினர்.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. வென்ட்டிலேட்டர் நீக்கப்பட்டது. தன் பெயர் ஹரி என்றும், ஒடிஷா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் மட்டும் சொல்லி இருக்கிறார். அதன் பிறகு, சமூக வலைதளங்கள் மூலம், அவரைப் பற்றிய செய்திகள் பகிரப்பட்டன.
ஒடிசாவை சேர்ந்த அரசு மருத்துவர்கள் இதனை அறிந்து, காவல் துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். காவல் துறை அதிகாரிகள் இத்தகவலை நோட்டீஸாகவும், வானொலியிலும் அறிவிப்புகளாக வெளியிட்டனர். இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் காவல் துறையை அணுகினர். இதன் மூலம் நோயாளியின் முழுப் பெயர் ஹரி நாயக் என்பதும், ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த காலஹண்டியில் உள்ள துவமுலா கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவரது பெற்றோர் பிஸ்வாம்பர் நாயக் மற்றும் லட்சுமி நாயக் என்பதும் தெரியவந்தது.
இந்த செய்தியை பேஸ்புக்கில் பகிர்ந்த, மகேஸ்வரன் தலைமையிலான குழுவைச் சேர்ந்த மருத்துவர் ராஜா விக்னேஷ், “தனியார் மருத்துவமனையில் இந்த சிகிச்சைகளுக்கு 40 லட்சம் வரை செலவாகியிருக்கும். இங்கு இவருக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒடிசாவிலிருந்து அவர்களது உறவினர்கள் வந்த பிறகு, இவரை பார்த்த பிறகு தான் இவரது அடையாளத்தை உறுதி செய்ய முடியும்” என்று கூறுகிறார்.
அரசு மருத்துவமனைகளில் ஹரி நாயக்கைப் போன்று தினமும் குறைந்தபட்சம் 6 பேர் அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கும் சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளிலும் நன்கு படித்த மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்களாலும் சவாலான அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாய் செய்து முடிக்க முடியும் என்பதை இச்சம்பவம் உறுதி செய்துள்ளது.
அரசு மருத்துவமனை என்றாலே, நன்றாக இல்லை.. நன்றாக இருக்காது.. என்று குறை சொல்லிக் கொண்டு இருப்பவர்கள், இந்த செய்தியையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வார்களா?
சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மற்றும் உடன் வருவோரிடம் கனிவாகப் பேசுதல், மருத்துவமனையை இன்னும் சுத்தமாகவும் சுகாதாரம் நிறைந்ததாகவும் வைத்தல் போன்ற சில அம்சங்களில் கவனம் செலுத்தினால், இன்னும் பல உயரங்களை எட்டுவோம் என்பதே பொதுமக்களின் கருத்து.
தட்டிக் கேட்க உரிமை இருக்கும் நமக்கு, தட்டிக் கொடுக்கும் கடமையும் இருக்கிறதல்லவா?
[thanks] தி இந்து [/thanks]
Re: அசத்திய அரசு மருத்துவர்கள்!
என் அம்மாவிடம் நீ இன்னும் ஆறு மாசம் தான் உயிருடன் இருப்பாய் என ஒரு தனியார் மருத்துவமனை கூறியது.
உங்கள் அம்மா பிழைக்க மாட்டார்கள் என்று கூறியது இன்னொரு தனியார் மருத்துவமனை.
இன்று என் அம்மாவை அரசு மருத்துவமனை உயிருடன் திரும்ப தந்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகின்றது . நன்றாக இருக்கிறார்.
********
என் மகன் கால் எலும்பு உடைந்த பொது அறுபதாயிரம் கேட்டது தனியார் மருத்துவமனை . ஆனாலும் ஆபரேஷன் பிறகும் அவன் நன்றாக நடப்பான் என்று உறுதி அளிக்கவில்லை.
ஆபரேஷன் தேவை இல்லை என்றும் ஒரு வாரத்தில் சிகிச்சை அளித்து அவன் கால் நன்றாக ஆகிவிடும் என்றும் தைரியம் அளித்தது அரசு மருத்துவமனை. இதுவும் நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன . இன்று என் மகன் நன்றாக இருக்கிறான். அவன் பள்ளியில் ஓட்ட பந்தயத்தில் முதலில் வந்த போது என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவனை சரி செய்த மருத்துவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.
******
இந்த இரண்டு நிகழ்ச்சிக்கும் நான் சென்னை ஸ்டான்லி மருத்துவர்களுக்கு தான் நன்றி கூற வேண்டும்.
உங்கள் அம்மா பிழைக்க மாட்டார்கள் என்று கூறியது இன்னொரு தனியார் மருத்துவமனை.
இன்று என் அம்மாவை அரசு மருத்துவமனை உயிருடன் திரும்ப தந்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகின்றது . நன்றாக இருக்கிறார்.
********
என் மகன் கால் எலும்பு உடைந்த பொது அறுபதாயிரம் கேட்டது தனியார் மருத்துவமனை . ஆனாலும் ஆபரேஷன் பிறகும் அவன் நன்றாக நடப்பான் என்று உறுதி அளிக்கவில்லை.
ஆபரேஷன் தேவை இல்லை என்றும் ஒரு வாரத்தில் சிகிச்சை அளித்து அவன் கால் நன்றாக ஆகிவிடும் என்றும் தைரியம் அளித்தது அரசு மருத்துவமனை. இதுவும் நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன . இன்று என் மகன் நன்றாக இருக்கிறான். அவன் பள்ளியில் ஓட்ட பந்தயத்தில் முதலில் வந்த போது என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவனை சரி செய்த மருத்துவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.
******
இந்த இரண்டு நிகழ்ச்சிக்கும் நான் சென்னை ஸ்டான்லி மருத்துவர்களுக்கு தான் நன்றி கூற வேண்டும்.
jenisiva- இளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
கிருஷ்ணா- இளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
Re: அசத்திய அரசு மருத்துவர்கள்!
கிருஷ்ணா wrote:[link="/t109791-topic#1060504"] அரசு மருத்துவமனை பழிக்கும் நமக்கு பாராட்டவும் கடமை உள்ளது.
நிஜம் .............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அசத்திய அரசு மருத்துவர்கள்!
வாழ்க மருத்துவ குலமே !
முன்னுதாரண பிரம்மாக்களே
நின் குலம் வாழ
வெண் சாமரம் வீசுவேன்
போதும் என்று கூறும்வரை.
ரமணியன்
முன்னுதாரண பிரம்மாக்களே
நின் குலம் வாழ
வெண் சாமரம் வீசுவேன்
போதும் என்று கூறும்வரை.
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Similar topics
» அமெரிக்காவில் அசத்திய இந்திய நடன அணி.
» தோனியுடன் அசத்திய அசின்..!!
» 11-11-11: மிமிக்ரியில் அசத்திய வாலிபர்
» ஆஸ்காரில் (2011) அசத்திய ஐஸ்வர்யாராய்
» அமெரிக்காவில் அசத்திய இந்திய மாணவன்
» தோனியுடன் அசத்திய அசின்..!!
» 11-11-11: மிமிக்ரியில் அசத்திய வாலிபர்
» ஆஸ்காரில் (2011) அசத்திய ஐஸ்வர்யாராய்
» அமெரிக்காவில் அசத்திய இந்திய மாணவன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum