ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்!

+3
subasu
மாணிக்கம் நடேசன்
சிவா
7 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்! - Page 4 Empty கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்!

Post by சிவா Mon Apr 28, 2014 1:34 am

First topic message reminder :

இளநீர் நுங்கு தேங்காய்ப் பால் சர்பத்

என்னென்ன தேவை?

வழுக்கையாக உள்ள இளநீர் - 1,
இளம் நுங்கு - 1/2 கப்,
தேங்காய்ப் பால் - அரை கப்,
பொடித்த வெல்லம் - அரை கப்,
ஐஸ்கட்டிகள் - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

இளநீரை உடைத்து, அதன் வழுக்கை, நுங்கு, வெல்லம், தேங்காய்ப் பால் எல்லாம் சேர்த்து அடிக்கவும். சுவையான இளநீர் சர்பத் ரெடி!

* இதை அருந்துவதால் பருக்கள் வராது. இளமைத் தோற்றத்தோடு முகம் பொலிவு பெறும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்! - Page 4 Empty Re: கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்!

Post by சிவா Sat May 10, 2014 9:29 am

ப்ரூட்டி வெஜ் சாலட்

தேவையானவை பழக்கலவை - 2 கப், நறுக்கிய கேரட், வெள்ளரிக்காய், குடமிளகாய், கோஸ் - 2 கப், ஒன்றிரண்டாக உடைத்த பாதாம், அக்ரூட் - 2 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை (அ) தேன் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை மேலே உள்ள அனைத்தையும் நன்றாகக் கலக்கவும். அதைக் குளிர வைத்து பரிமாறவும்.


கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்! - Page 4 Empty Re: கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்!

Post by சிவா Sat May 10, 2014 9:29 am

சாக்லெட் ஐஸ்கிரீம்

தேவையானவை பால் - ஒரு லிட்டர், ஃப்ரெஷ் கிரீம் - ஒரு கப், சர்க்கரை - அரை கப், ஜி.எம்.எஸ் (கிளிசரின் மோனோ ஸ்டீரியேட்) - ஒரு டீஸ்பூன், ஐஸ்கிரீம் ஸ்டெபிலைசர் - அரை டீஸ்பூன், கோகோ பவுடர் - 3 டீஸ்பூன், ஜெலட்டின் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை பாலை நன்றாகக் காய்ச்சவும். அதில் அரை கப் பாலை தனியாக எடுத்து ஆற வைக்கவும். மீதியுள்ள பாலில் சர்க்கரை சேர்த்து மீண்டும் காய்ச்சி ஆற வைக்கவும்.

தனியாக ஆறவைத்த பாலில் பாதியை (அதாவது கால் கப்) எடுத்து, அதில் ஜி.எம்-எஸ்ஸை கலக்கவும். இன்னொரு கால் கப் பாலில் கோகோ பவுடரை கலக்கவும்.

ஒரு டீஸ்பூன் சர்க்கரையில் ஐஸ்கிரீம் ஸ்டெபிலைசரை கலக்கவும். ஜெலட்டினை கால் கப் தண்ணீரில் கொதிக்கவிட்டு கரைய விடவும். இப்போது, சர்க்கரை சேர்த்து காய்ச்சி ஆறவைத்துள்ள பாலை எடுத்து, அதில் இந்த இரண்டையும் சேர்க்கவும். கடைசியில் இதனுடன் ஃப்ரெஷ் கிரீமை சேர்க்கவும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் ஐஸ்கட்டிகளைப் போட்டு அதில் எல்லா பால் கலவைகளையும் ஒன்றாக சேர்த்து ஹேண்ட் மிக்ஸரால் நன்றாக அடிக்கவும். இதை சிறிய கப்களில் நிரப்பி ஃப்ரீசரில் வைத்தால் சாக்லெட் ஐஸ்கிரீம் தயார்!


கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்! - Page 4 Empty Re: கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்!

Post by சிவா Sat May 10, 2014 9:29 am

டொமேட்டோ ஆரஞ்சு கூலர்

தேவையானவை நன்றாக பழுத்த தக்காளி - 2, கமலா ஆரஞ்சு - 2, குளுக்கோஸ் - ஒரு டீஸ்பூன், உப்பு - சிட்டிகை.

செய்முறை தக்காளியை மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். ஆரஞ்சுச் சாறை பிழிந்து தக்காளி சாறுடன் சேர்த்து கலக்கவும். அதில் குளுக்கோஸ், உப்பு கலந்து குளிர வைத்து பரிமாறவும்.

குளுக்கோஸ் விரும்பாதவர்கள் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.


கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்! - Page 4 Empty Re: கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்!

Post by சிவா Sat May 10, 2014 9:30 am

மேங்கோ ஐஸ்கிரீம்

தேவையானவை பால் - ஒரு லிட்டர், ஃப்ரெஷ் கிரீம் - ஒரு கப், சர்க்கரை - அரை கப், ஜி.எம்.எஸ் - ஒரு டீஸ்பூன், ஐஸ்கிரீம் ஸ்டெபிலைசர் - அரை டீஸ்பூன், ஜெல-ட்டின் - ஒரு டீஸ்பூன், மாம்பழ விழுது - அரை கப், பொடியாக நறுக்கிய மாம்பழ துண்டுகள் - அரை கப், (விருப்பப்பட்டால்) மாம்பழ எசென்ஸ் - 2 டீஸ்பூன்.

செய்முறை பாலை நன்றாகக் காய்ச்சவும். அதில் அரை கப் பாலை மட்டும் தனியாக எடுத்து ஆற வைத்து, அதில் ஜி.எம்.எஸ்-ஐக் கலந்து கொள்ளவும். மீதியுள்ள பாலில் சர்க்கரை சேர்த்து மீண்டும் காய்ச்சி ஆற வைக்கவும்.

ஒரு டீஸ்பூன் சர்க்கரையில் ஐஸ்கிரீம் ஸ்டெபிலைசரை கலக்கவும். ஜெலட்டினை கால் கப் தண்ணீரில் கரைத்து கொதிக்க விடவும். சர்க்கரை சேர்த்து காய்ச்சி ஆறவைத்த பாலுடன் இவை இரண்டையும் கலந்து, கடைசியில் ஃப்ரெஷ் கிரீம், எசென்ஸ் சேர்த்து கலக்கவும்.

ஒரு பாத்திரத்தில் ஐஸ் கட்டிகளைப் போட்டு அதில் பால் கலவை, மாம்பழ விழுதைச் சேர்த்து, ஹேண்ட் மிக்ஸரால் கெட்டியாக அடிக்கவும். அதை சிறிய கப்களில் நிரப்பும்போது மாம்பழ துண்டுகளை சேர்த்து ஃப்ரீசரில் வைத்தால் சுவை நிறைந்த மேங்கோ ஐஸ்கிரீம் தயார்!


கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்! - Page 4 Empty Re: கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்!

Post by சிவா Sat May 10, 2014 9:30 am

குளு குளு பப்பாளி

தேவையானவை நன்கு பழுத்த பப்பாளி பழ துண்டுகள் - ஒரு கப், ஆரஞ்சு - 1, எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, சர்க்கரை - தேவை-யான அளவு, புதினா (அ) துளசி - சிறிதளவு, மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை ஆரஞ்சு பழத்தைப் பிழிந்து ஜூஸ் எடுக்கவும். அதில் எலுமிச்-சைச் சாறு, உப்பு, சர்க்கரை, பப்பாளி பழ துண்டுகள் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். மிளகுத்தூள், புதினா தூவி, குளிர வைத்து பரிமாறவும்.


கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்! - Page 4 Empty Re: கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்!

Post by சிவா Sat May 10, 2014 9:30 am

வெஜ் நட்டி சாலட்

தேவையானவை கேரட், வெள்ளரிக்காய், லெட்யூஸ் - தலா 1, முட்டைகோஸ் - 100 கிராம், தக்காளி - 2, வெங்-காயம் - 1, வறுத்த வேர்க்-கடலை - அரை கப், வறுத்த எள்ளு, வினிகர், தேன் - தலா ஒரு டேபிள்ஸ்-பூன், உப்பு - தேவையான அளவு, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்.

செய்முறை காய்கறிகளை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். வேர்க்-கடலை, எள்ளு தவிர மற்ற எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும். பரிமாறும்போது வேர்க்-கடலை மற்றும் எள்ளை சேர்க்கவும்.


கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்! - Page 4 Empty Re: கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்!

Post by சிவா Sat May 10, 2014 9:34 am

தர்பூசணி கேரட் ஜூஸ்

500 கிராம் தர்பூசணி, 150 கிராம் கேரட் துருவியது, தோல் நீக்கித் துருவிய இஞ்சி 10 கிராம் இவற்றுடன் தேன், சர்க்கரை கலந்து குளிர்ந்த நீர் விட்டு, மிக்சியில் அரைத்து வடிகட்டவும். புதினா இலை வைத்து அலங்கரிக்கவும்.

பலன்கள்: தர்பூசணியுடன் கேரட், தேன் சேர்ப்பதால் சுவை அருமையாக இருக்கும். தர்பூசணியில் நார்ச்சத்து குறைவு. கேரட்டில் நார்ச்சத்து, பீட்டா கரோட்டீன் இருக்கிறது. கார்போஹைட்ரேட், நீர்ச்சத்து அதிக அளவு இருக்கிறது. வைட்டமின் சி, எனர்ஜி சிறிதளவு இருக்கின்றன.

பொதுவாகச் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடவேண்டாம். காலை நேரத்தில் சர்க்கரை அளவு குறைந்தால் மட்டும் 100 மில்லி எடுத்துக் கொள்ளலாம். சிறுநீரக நோய் கட்டுக்குள் இருந்தால் 50 மி.லி. குடிக்கலாம். மற்றபடி எல்லோருக்கும் நல்லது.


கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்! - Page 4 Empty Re: கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்!

Post by சிவா Sat May 10, 2014 9:35 am

கிரேப் ஜூஸ்

200 கிராம் கறுப்பு திராட்சை, தேவையான அளவு சர்க்கரை அல்லது வெல்லம் இவை இரண்டையும் மிக்சியில் அரைத்துத் துணியில் வடிகட்டிக் குளிர்ந்த நீர் விட்டு மீண்டும் அரைத்துப் பருகவும்.

பலன்கள்: குளுகோஸ் அளவு இதில் அதிகம். வைட்டமின் சி, பொட்டாசியம், துத்தநாகம், தாமிரம், மேங்கனீஸ் போன்ற தாது உப்புகள் சிறிதளவு இருக்கின்றன. கார்போஹைட்ரேட் இருப்பதால் நல்ல சக்தி கொடுக்கும். திராட்சை விதையில் மருத்துவக் குணம் அதிகம் இருப்பதால் ஜூஸ் தயாரித்து வடிகட்டாமல் அருந்துவது நல்லது. இதனால் நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் கிடைக்கும். திராட்சையில் பூச்சி மருந்து தெளித்து வருவதால் நன்றாகக் கழுவிவிட்டு உப்புத் தண்ணீரில் போட்டு எடுத்துப் பயன்படுத்துவது நல்லது.

சிறுநீரக, சர்க்கரை நோயாளிகள் அருந்த வேண்டாம். இதய நோயாளிகளுக்கு நல்லது. ஏதாவது உடல்ரீதியான பிரச்னைகளுக்கு மருந்து மாத்திரை சாப்பிடுபவர்கள், இந்த ஜூஸ் பருகியதும், உடனடியாக மருந்துகளை எடுத்துக் கொள்ளக்கூடாது.


கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்! - Page 4 Empty Re: கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்!

Post by சிவா Sat May 10, 2014 9:35 am

மாம்பழ மில்க்ஷேக்

தோல் நீக்கிய 300 கிராம் மாம்பழத்தை மிக்சியில் அரைத்துக் காய்ச்சிய பால் சேர்த்து வடிகட்டவும். தேவைப்பட்டால் சர்க்கரை, ஐஸ் கட்டிகள் சேர்த்துப் பருகலாம்.

பலன்கள்: இதில் மிக அதிக அளவு பீட்டா கரோட்டீன் இருப்பதால் கண்ணுக்கு மிகவும் நல்லது. மாம்பழத்துடன் பால் சேர்ப்பதால் ஆன்டிஆக்சிடன்ட், வைட்டமின் சி, சர்க்கரை, நார்ச்சத்து, ஓரளவு பொட்டாசியம், சோடியம், தாமிரம் போன்ற தாது உப்புகளும் இருக்கின்றன. இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. உடல் சோர்ந்து வலுவிழந்து போனவர்கள் அருந்தலாம்.

சிறுநீரக, சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ள வேண்டாம். பொதுவாக அனைவருமே, நாள் ஒன்றுக்கு ஒரு பழம் ஒரு டம்ளர் ஜூஸ் குடிக்கலாம். அதிகமாக எடுத்துக்கொண்டால், உடலில் ஹைப்பர் வைட்டமின் சத்து ஏற்பட்டு சருமம் தடித்துவிடும்.


கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்! - Page 4 Empty Re: கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்!

Post by சிவா Sat May 10, 2014 9:35 am

அன்னாசிப் பழ ஜூஸ்

அன்னாசிப் பழம் ஆறு முதல் எட்டு துண்டுகள் வரை மிக்சியில் அரைத்துத் தேவையான அளவு சர்க்கரை, குளிர்ந்த நீர் சேர்த்து மீண்டும் அரைத்து வடிகட்டிப் பருகவும்.

பலன்கள்: பழத்தின் நடுவில் உள்ள தண்டுப் பகுதி மிகவும் நல்லது. ஜூஸை வடிகட்டாமல் அப்படியே அருந்துவதன் மூலம் நார்ச்சத்து கிடைக்கும். குளுகோஸ், மற்றும் நீர்ச்சத்து அதிகம் இருக்கிறது. ஓரளவு இரும்புச் சத்தும், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் குறைந்த அளவிலும் இருக்கின்றன. இந்த ஜூஸ் குடித்தால் சீக்கிரத்தில் பசி எடுக்காது.

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், கர்ப்பிணிகள், வளரும் குழந்தைகள் அருந்தலாம். சிறுநீரகப் பிரச்னைகள் உள்ளவர்கள் ஓரளவு சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ளவேண்டாம்.


கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்! - Page 4 Empty Re: கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum