ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 6:33 pm

» வா.ஃக்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Today at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்!

+3
subasu
மாணிக்கம் நடேசன்
சிவா
7 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்! Empty கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்!

Post by சிவா Mon Apr 28, 2014 1:34 am

இளநீர் நுங்கு தேங்காய்ப் பால் சர்பத்

என்னென்ன தேவை?

வழுக்கையாக உள்ள இளநீர் - 1,
இளம் நுங்கு - 1/2 கப்,
தேங்காய்ப் பால் - அரை கப்,
பொடித்த வெல்லம் - அரை கப்,
ஐஸ்கட்டிகள் - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

இளநீரை உடைத்து, அதன் வழுக்கை, நுங்கு, வெல்லம், தேங்காய்ப் பால் எல்லாம் சேர்த்து அடிக்கவும். சுவையான இளநீர் சர்பத் ரெடி!

* இதை அருந்துவதால் பருக்கள் வராது. இளமைத் தோற்றத்தோடு முகம் பொலிவு பெறும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்! Empty Re: கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்!

Post by சிவா Mon Apr 28, 2014 1:36 am

மிக்ஸட் ஃப்ரூட் பன்ச்

தேவையானவை

வாழைப்பழம் - 1/2 கப்,
மாம்பழம் - 1/2 கப்,
பப்பாளிப் பழம் - 1,
மாதுளை முத்துகள் - 1/4 கப்,
ஆப்பிள் - 1/2 கப்,
இளநீர் - 250 மி.லி.,
புதினா - 4 இலை,
சர்க்கரை - 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை

மிக்ஸியில் எல்லாப் பழவகைகளையும் புதினா, இளநீருடன் சேர்த்து அரைக்கவும். பிறகு சர்க்கரை சேர்த்து கலக்கிப் பரிமாறவும்.

வைட்டமின் ஏ சத்தும் இளநீரில் உள்ள மினரல்ஸும் ஆரோக்கியத்துக்கு நல்லது
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்! Empty Re: கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்!

Post by சிவா Mon Apr 28, 2014 1:39 am

மாதுளை தேன் மிக்ஸ்

தேவையானவை

சிவந்த மாதுளை முத்துகள் - ஒரு கப்,
தேன் - 2 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு - 1 துளி,
ஐஸ்கட்டிகள் - தேவைக்கேற்ப.

செய்முறை

மாதுளையை தண்ணீர் விடாமல் மிக்ஸி யில் அடித்து வடிகட்டி, அதில் ஐஸ் கட்டி, தேன், எலுமிச்சைச்சாறு சேர்த்து ஃபிரெஷ்ஷாக குடிக்கவும்.

* தினமும் குடித்தால் பற்கள் பளபளப்பாகப் பிரகாசிக்கும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்! Empty Re: கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்!

Post by சிவா Mon Apr 28, 2014 1:41 am

கரிசலாங்கண்ணி சாண்ட்விட்ச்

தேவையானவை

கரிசலாங்கண்ணிக் கீரை - 1 கப்,
பயத்தம் பருப்பு - 25 கிராம்,
வெங்காயம் - 1,
பச்சை மிளகாய் - 2,
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்,
மஞ்சள்தூள், உப்பு - தேவைக்கேற்ப,
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்,
பிரெட் ஸ்லைஸ் - தேவைக்கு.

செய்முறை

பருப்பை குழையாமல் வேக வைக்கவும். கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், சீரகத் தூள், உப்பு போட்டு வதக்கவும். வதங்கியவுடன் கீரை சேர்த்து வதக்கி, முடிவில் வேகவைத்த பருப்பைப் போட்டு நன்றாகக் கிளறவும். இந்தக் கீரைக் கலவையை பிரெட் ஸ்லைஸுக்குள் வைத்து. சாண்ட்விட்ச் மேக்கரில் வைத்து சாண்ட்விட்ச் தயாரிக்கவும். தொட்டுக் கொள்ள கொத்தமல்லி சட்னி மற்றும் சாஸ் மிகவும் சுவையானது, சத்தானது!

* கரிசலாங்கண்ணி தலை உஷ்ணத்தை குறைத்து குளிர்ச்சி அடையச் செய்கிறது. எல்லோரும் சாப்பிடக் கூடியது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்! Empty Re: கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்!

Post by சிவா Mon Apr 28, 2014 1:42 am

கற்றாழை நீர் மோர்

தேவையானவை

கெட்டியான மோர் - 250 மி.லி.,
கற்றாழை - 1/4 கப், புதினா,
மல்லி, கறிவேப்பிலை - தலா 8 இலை,
உப்பு - தேவைக்கேற்ப,
பச்சை மிளகாய் - சிறிய துண்டு.

செய்முறை

கற்றாழை இலையை உரித்து உள்ளே உள்ள வெள்ளைச் சதையை 1/4 கப் எடுக்க வேண்டும். அத்துடன் புதினா, மல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், உப்பு, மோர் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். டம்ளரில் ஊற்றிப் பரிமாறவும். ,முடி நன்றாக வளரும். நோய் எதிர்ப்புச் சக்தி கூடும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்! Empty Re: கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்!

Post by சிவா Mon Apr 28, 2014 1:44 am

கற்றாழை - மோர் மிக்ஸ்


தேவையானவை

கற்றாழை - இரண்டு,
பட்டை - சிறிய துண்டு,
ஐஸ்கட்டிகள் - தேவைக்கேற்ப,
மோர் - 2 கப்,
உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை

கற்றாழையின் சதைப் பகுதியை எடுத்து, அதனுடன் மோர், உப்பு, ஐஸ் சேர்த்து மிக்ஸியில் அடிக்கவும். சுவையான கற்றாழை மோர் மிக்ஸ் ரெடி.

* கற்றாழைக்கு ‘குமரி’ என்ற பெயர் உண்டு. தொடர்ந்து அருந்தி வந்தால், பெயருக்கு ஏற்ப என்றும் குமரியாக, இளமைத் தோற்றத்துடன் முகம் பொலிவோடு இருக்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்! Empty Re: கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்!

Post by சிவா Mon Apr 28, 2014 1:45 am



கொய்யா ஸ்பிரிட்ஸர்


தேவையானவை

கொய்யா - 2,
இஞ்சி - அரை அங்குலத் துண்டு,
எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன்,
சர்க்கரை - தேவைக்கேற்ப,
சோடா - தேவைக்கேற்ப.

செய்முறை

கொய்யாவைக் கழுவி வெட்டவும். இஞ்சியைத் தோல் நீக்கிப் பொடியாக நறுக்கவும். கொய்யாப் பழத்துடன், இஞ்சி சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும். அதை வடிகட்டி, விதை களை நீக்கவும். அதில் சர்க்கரையும் எலுமிச்சைச்சாறும் சேர்த்துக் கலக்கவும். ஒரு கண்ணாடி பாட்டிலை நன்கு கழுவி, வெயிலில் காய வைத்து அதில் இந்த கொய்யா சிரப்பை நிரப்பி வைக்கவும். ஒரு டம்ளரில் பாதி அளவு கொய்யா சிரப் எடுத்து, மீதியை குளிர்ந்த சோடாவால் நிரப்பவும். நன்கு கலந்து, உடனடியாகப் பரிமாறவும். இந்த கொய்யா சிரப்பை ஃப்ரிட்ஜில் 1 வாரம் வரை வைத்து உபயோகிக்கலாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்! Empty Re: கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்!

Post by மாணிக்கம் நடேசன் Mon Apr 28, 2014 7:29 am

வழுக்கையாக உள்ள இளநீர் - 1,
இளம் நுங்கு - 1/2 கப்,
தேங்காய்ப் பால் - அரை கப்,
பொடித்த வெல்லம் - அரை கப்,
ஐஸ்கட்டிகள் - தேவைக்கேற்ப.


இப்படித்தான் முதல் வார்த்தையா போடுரதா மாமா அங்கள்? என்னதான் என் மேல கோபம் இருந்தாலும் அதுக்கு எனக்கு நாலு அரை விட்டுருங்க, இப்படி எல்லாம் என்ன தலையைப் பத்தி எழுதப் படாது.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்! Empty Re: கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்!

Post by சிவா Mon Apr 28, 2014 5:45 pm

மாணிக்கம் நடேசன் wrote:[link="/t109781-topic#1060408"]வழுக்கையாக உள்ள இளநீர் - 1,
இளம் நுங்கு - 1/2 கப்,
தேங்காய்ப் பால் - அரை கப்,
பொடித்த வெல்லம் - அரை கப்,
ஐஸ்கட்டிகள் - தேவைக்கேற்ப.


இப்படித்தான் முதல் வார்த்தையா போடுரதா மாமா அங்கள்? என்னதான் என் மேல கோபம் இருந்தாலும் அதுக்கு எனக்கு நாலு அரை விட்டுருங்க, இப்படி எல்லாம் என்ன தலையைப் பத்தி எழுதப் படாது.

சிப்பு வருதுசிரிப்புசிப்பு வருதுசிரிப்பு

முடியல!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்! Empty Re: கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்!

Post by subasu Mon Apr 28, 2014 8:45 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா
subasu
subasu
பண்பாளர்


பதிவுகள் : 57
இணைந்தது : 25/10/2013

Back to top Go down

கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்! Empty Re: கோடை காலத்திற்கேற்ற சமையற் குறிப்புகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum