ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மகன் வீரமரணம் அடைந்தது பெருமையே... மேஜர் முகுந்தின் தந்தை கண்ணீர் பேட்டி

+3
SajeevJino
M.M.SENTHIL
சிவா
7 posters

Go down

என் மகன் வீரமரணம் அடைந்தது பெருமையே... மேஜர் முகுந்தின் தந்தை கண்ணீர் பேட்டி  Empty என் மகன் வீரமரணம் அடைந்தது பெருமையே... மேஜர் முகுந்தின் தந்தை கண்ணீர் பேட்டி

Post by சிவா Sun Apr 27, 2014 9:34 pm



சென்னை: காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் தன் மகன் வீரமரணம் அடைந்தது பெருமையே என மேஜர் முகுந்த் வரதராஜனின் தந்தை கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தில் சோபியான் மாவட்டத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு ராணுவ வீரர்களும், மூன்று தீவிரவாதிகளும் பலியாகினர்.

பலியான ராணுவ அதிகாரிகளில் ஒருவர் சென்னையைச் சேர்ந்தவர். 31 வயதான அவரது பெயர் மேஜர் முகுந்த் வரதராஜன். அவரது தந்தை பெயர் வரதராஜன். சென்னை தாம்பரத்தில் மனைவியுடன் வசித்து வருகிறார்.

மகனின் வீரமரணம் குறித்துக் கேள்விப்பட்ட வரதராஜன் மற்றும் அவரது மனைவி கீதாவுக்கு உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தார் ஆறுதல் கூறினர். இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு தன் மகனின் வீரமரணம் குறித்து பேட்டியளித்துள்ளார் வரதராஜன்.

அதில் அவர் கூறியிருப்பதாவது :-

முகுந்த் பி.காம். முடித்தவுடன் எம்.பி.ஏ. படிக்க வைக்க முடிவு செய்தபோது ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு பணியாற்றப்போவதாக தெரிவித்தான். என் சகோதரிகளின் கணவன்மார்கள் ராணுவத்தில் உள்ளனர். அவர்களை பார்த்து, 3-வது படிக்கும்போதே ராணுவத்தில் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தான்.

ஒரே மகனை ராணுவத்துக்கு அனுப்புவதில் என் மனைவிக்கு வருத்தம் இருந்தபோதும், முகுந்த் ராணுவத்தில் பணியாற்றுவதில் லட்சியமாக இருந்ததால் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. என்னை நன்றாக கவனித்துக்கொள்வான். எனக்கு தைரியம் அளிப்பவனாக இருந்தான். என் மீது மிகவும் அன்பாக இருப்பான். சபரிமலை கோவிலுக்கு செல்லும்போது நானும், அவனும் தான் செல்வோம். என் பின்னால், நான் விழுந்து விடாதவாறு பிடித்துக்கொண்டே வருவான்.

கடந்த 12-ந் தேதி முகுந்துக்கு பிறந்த நாள். பிறந்தநாள் வாழ்த்து சொல்ல அன்று காலை அவனை செல்போனில் தொடர்புகொண்டேன். பேசவில்லை. மாலையில் அவனே பேசினான். தேர்தல் பாதுகாப்பு பணியில் இருந்ததால் போனை எடுக்க முடியவில்லை என கூறினான்.

அவனுக்கு நானும், எனது மனைவியும் பிறந்தநாள் வாழ்த்து கூறினோம். இது தான் நாங்கள் என் மகனிடம் கடைசியாக பேசியது. நேற்று முன்தினம் நள்ளிரவில் எனது சம்பந்தி டாக்டர் ஜார்ஜ் வர்க்கீஸ் போனில் என்னுடன் பேசி முகுந்த் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதாக ‘பேஸ்புக்'கில் தகவல் இருப்பதாக கூறினார். நான் பெங்களூரில் இருக்கும் மருமகள் இந்துவிற்கு போன் செய்தபோது எடுக்கவில்லை. நேற்று காலை என் மகன் செல்போனுக்கு தொடர்புகொண்டேன். அப்போது யாரும் எடுக்கவில்லை. அதன் பின்னர் என்னை தொடர்பு கொண்ட ராணுவ அதிகாரிகள் முகுந்ந் இறந்த தகவலை தெரிவித்தனர். வேறு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. எனக்கு மகனாக மட்டும் இல்லாமல் தந்தையாக, நண்பனாக இருந்தவன் என் மேல் அன்பு கொண்டவன் நாட்டிற்காக உயிரை தியாகம் செய்துள்ளான். அவன் புண்ணியம் செய்தவன்' என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என் மகன் வீரமரணம் அடைந்தது பெருமையே... மேஜர் முகுந்தின் தந்தை கண்ணீர் பேட்டி  Empty Re: என் மகன் வீரமரணம் அடைந்தது பெருமையே... மேஜர் முகுந்தின் தந்தை கண்ணீர் பேட்டி

Post by M.M.SENTHIL Sun Apr 27, 2014 9:44 pm

நாட்டிற்கு தன் உயிரை தியாகம் செய்த மகனை பெற்ற தங்களுக்கு, அவரது பிரிவை தாங்கும் வல்லமை கொடுத்து, தங்கள் வாழ்வின் எல்லை வரை இறைவன் துணை புரிய வேண்டுகிறோம்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் மகன் வீரமரணம் அடைந்தது பெருமையே... மேஜர் முகுந்தின் தந்தை கண்ணீர் பேட்டி  Empty Re: என் மகன் வீரமரணம் அடைந்தது பெருமையே... மேஜர் முகுந்தின் தந்தை கண்ணீர் பேட்டி

Post by சிவா Mon Apr 28, 2014 1:29 am

வீரமரணம் அடைந்த மேஜர் உடல் பெசன்ட் நகரில் இன்று தகனம்

சென்னை: காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் உடல் இன்று பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது. சென்னை கிழக்கு தாம்பரம் புரபஸர் காலனி பார்க் வியு அபார்ட்மென்டில் வசிப்பவர் ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் வரதராஜன். இவருடைய மகன் முகுந்த் வரதராஜன் (32). இவரது மனைவி இந்து. இவர்களின் மூன்று வயது மகள் அஷ்யா. முகுந்த் ராணுவத்தில் மேஜராக பணியாற்றி னார். பெங்களூரில் உள்ள ராணுவ குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 25ம் தேதி மாலை காஷ்மீரில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுடன் ராணுவத்தினர் கடுமையாக சண்டையிட்டனர். நீண்டநேரம் நடந்த துப்பாக்கி சண்டையில், மேஜர் முகுந்த் வரதராஜன் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. அப்படியிருந்தும், குண்டடிப்பட்ட தீவிரவாதி ஒருவன், சக ராணுவ வீரர்களை சுடுவதை கண்ட, முகுந்த் உயிரையும் பொருட்படுத்தாமல், அந்த தீவிரவாதியை சுட்டு கொன்றார்.

இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், வீரமரணம் அடைந்தார். இதையடுத்து, குரோம்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு மனைவி இந்து மற்றும் குழந்தை, உறவினர்கள் அனைவரும் வந்தனர். நண்பர்கள் வந்து, அவர்களுக்கு ஆறுதல் கூறினர். இதற்கிடையில், நேற்று இரவு ராணுவ வீரரின் சடலம் சென்னை வந்தது. ராணுவ மருத்துவமனையில் சடலம் வைக்கப்பட்டது. இன்று காலை 9 மணிக்கு உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்படும். உறவினர்கள், நண்பர்கள் அஞ்சலி செலுத்த, பார்வைக்கு வைக்கப்படும். குரோம்பேட்டை மயானத்தில் சடலம் தகனம் செய்யப்படுவதாக இருந் தது. ஆனால், அங்கு போதிய வசதியும், இடமும் இல்லாததால், பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்ய ராணுவ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதனால், பகல் 11 மணியளவில் சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் ராணுவ மரியாதையுடன், துப் பாக்கி குண்டுகள் முழங்க தகனம் செய்யப்படும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என் மகன் வீரமரணம் அடைந்தது பெருமையே... மேஜர் முகுந்தின் தந்தை கண்ணீர் பேட்டி  Empty Re: என் மகன் வீரமரணம் அடைந்தது பெருமையே... மேஜர் முகுந்தின் தந்தை கண்ணீர் பேட்டி

Post by சிவா Mon Apr 28, 2014 3:53 am

தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த முகுந்த் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி

தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

ஜம்மு காஷ்மீர் மாநிலம், சோபியான் பகுதியில் 25.4.2014 அன்று தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில், 44-வது ராஷ்டிரிய துப்பாக்கிகள் படைப் பிரிவில் பணியாற்றி வந்த சென்னை, தாம்பரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மேஜர் முகுந்த் வரதராஜனை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என் மகன் வீரமரணம் அடைந்தது பெருமையே... மேஜர் முகுந்தின் தந்தை கண்ணீர் பேட்டி  Empty Re: என் மகன் வீரமரணம் அடைந்தது பெருமையே... மேஜர் முகுந்தின் தந்தை கண்ணீர் பேட்டி

Post by SajeevJino Mon Apr 28, 2014 7:08 am

.


என் மகன் வீரமரணம் அடைந்தது பெருமையே... மேஜர் முகுந்தின் தந்தை கண்ணீர் பேட்டி  1621884_10152188031403071_1626423281618769111_n

என் மகன் வீரமரணம் அடைந்தது பெருமையே... மேஜர் முகுந்தின் தந்தை கண்ணீர் பேட்டி  1622005_616864661734623_6412865016068672246_n


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

என் மகன் வீரமரணம் அடைந்தது பெருமையே... மேஜர் முகுந்தின் தந்தை கண்ணீர் பேட்டி  Empty Re: என் மகன் வீரமரணம் அடைந்தது பெருமையே... மேஜர் முகுந்தின் தந்தை கண்ணீர் பேட்டி

Post by கிருஷ்ணா Mon Apr 28, 2014 9:03 am

வீரமரணம். அவரின் மரணம் பெருமையானதுதான் என்றாலும் மனைவி, குழந்தை மற்றும் பெற்றோரின் நிலை மிகவும் வருத்தத்திற்குரியது. அவர்களுக்கு இந்த இழப்பைத் தாங்கக்கூடிய சக்தியை அளிக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.


கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

என் மகன் வீரமரணம் அடைந்தது பெருமையே... மேஜர் முகுந்தின் தந்தை கண்ணீர் பேட்டி  Empty Re: என் மகன் வீரமரணம் அடைந்தது பெருமையே... மேஜர் முகுந்தின் தந்தை கண்ணீர் பேட்டி

Post by மாணிக்கம் நடேசன் Mon Apr 28, 2014 9:12 am

மிகவும் வருத்தமான செய்திதான், இந்த குடும்பினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை சமர்ப்பிக்கிறேன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

என் மகன் வீரமரணம் அடைந்தது பெருமையே... மேஜர் முகுந்தின் தந்தை கண்ணீர் பேட்டி  Empty Re: என் மகன் வீரமரணம் அடைந்தது பெருமையே... மேஜர் முகுந்தின் தந்தை கண்ணீர் பேட்டி

Post by T.N.Balasubramanian Mon Apr 28, 2014 1:41 pm

ஆழ்ந்த அனுதாபங்கள் ,அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு.

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என் மகன் வீரமரணம் அடைந்தது பெருமையே... மேஜர் முகுந்தின் தந்தை கண்ணீர் பேட்டி  Empty Re: என் மகன் வீரமரணம் அடைந்தது பெருமையே... மேஜர் முகுந்தின் தந்தை கண்ணீர் பேட்டி

Post by ஜாஹீதாபானு Mon Apr 28, 2014 3:06 pm

வருத்தத்திற்குரிய விசயம். அவரின் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கல்கள்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் மகன் வீரமரணம் அடைந்தது பெருமையே... மேஜர் முகுந்தின் தந்தை கண்ணீர் பேட்டி  Empty Re: என் மகன் வீரமரணம் அடைந்தது பெருமையே... மேஜர் முகுந்தின் தந்தை கண்ணீர் பேட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நானும், நித்தியானந்தாவும் தந்தை, மகன் போல இணைந்து நடத்துவோம்-மதுரை ஆதீனம்
» சாலை விபத்தில் மகன் பலி: தகவலைக் கேட்ட தந்தை அதிர்ச்சியில் மரணம்
» மகன் மத்திய அமைச்சர்----விவசாயம் செய்யும் தந்தை..
» தந்தை சைக்கிள் ரிக்ஷா ஓட்டுநர்... மகன் ஐஏஎஸ் அதிகாரி!
» பிரதமராக தந்தை: முதல்வராக மகன்: ராவ் புதிய கட்சி துவக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum