ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

30 வகை பிரியாணி

4 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

30 வகை பிரியாணி - Page 3 Empty 30 வகை பிரியாணி

Post by சிவா Sat Apr 26, 2014 4:34 pm

First topic message reminder :

1. பைனாப்பிள் பிரியாணி

[noguest]  தேவையானவை: பச்சரிசி - 2 கப், வில்லைகளாக நறுக்கிய பைனாப்பிள் துண்டுகள் - 6, லெமன் ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை, சர்க்கரை - ஒரு கப், மில்க்மெய்ட் - அரை கப், நெய் - 3 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.
30 வகை பிரியாணி - Page 3 1
செய்முறை: பைனாப்பிளை மிக்ஸியில் நைஸாக அரைத்து நீர் சேர்த்து சக்கையை வடிகட்டி, 2 கப் அளவு சாறு தயாரித்துக்கொள்ளவும். வெறும் வாணலியில் பச்சரிசியை லேசாக வறுத்து, ஒரு கப் தண்ணீர், அரை கப் மில்க்மெய்ட், பைனாப்பிள் சாறு சேர்த்து குக்கரில் வேகவைக்கவும். சர்க்கரையுடன் ஒரு டேபிள்ஸ்பூன் நீர் சேர்த்து கொதிக்கவிட்டு பாகு வைக்கவும். அத்துடன் ஏலக்காய்த்தூள், லெமன் ஃபுட்கலர், நெய் சேர்த்து, சாதத்தையும் சேர்த்து எல்லாமாக ஒன்றுசேர்ந்து வந்ததும் இறக்கவும்.[/noguest]

குறிப்பு: சர்க்கரைப் பாகுக்கு ஒரு டேபிள்ஸ்பூன் நீர் மட்டும் போதுமானது. அப்போதுதான் பாகு கெட்டிப்பதம் வரும்.


Last edited by சிவா on Sat Apr 26, 2014 7:15 pm; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


30 வகை பிரியாணி - Page 3 Empty Re: 30 வகை பிரியாணி

Post by சிவா Sat Apr 26, 2014 7:26 pm

19. உலர் மொச்சை பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உலர்ந்த மொச்சைக்கொட்டை - அரை கப் (ஊறவைக்கவும்), சிறிய சதுரவடிவில் நறுக்கிய பிரெட் துண்டுகள் - 10, நெய் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.[noguest]

அரைத்துக்கொள்ள: தக்காளி - 2, மிளகாய்த்தூள் - 3 டேபிள்ஸ்பூன், சின்ன வெங்காயம் - 10, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, கொத்தமல்லித் தழை - கால் கப்.
 30 வகை பிரியாணி - Page 3 20
செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊறவிடவும். குக்கரில் எண்ணெய் விட்டு அரைத்த விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கவும். இதில் மூன்றரை கப் நீர் விட்டு... உப்பு, மஞ்சள்தூள், அரிசி, ஊறவைத்த மொச்சைக்கொட்டை சேர்த்து ஒரு விசில் வந்ததும் இறக்கி விடவும். ஆவி வெளியேறியதும், வாணலியில் நெய் விட்டு பிரெட் துண்டுகளை வறுத்துச் சேர்க்கவும்.   [/noguest]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

30 வகை பிரியாணி - Page 3 Empty Re: 30 வகை பிரியாணி

Post by சிவா Sat Apr 26, 2014 7:27 pm

20. கேரட் - சென்னா பிரியாணி
தேவையானவை: பச்சரிசி - 2 கப், கறுப்பு கொண்டைக்கடலை - அரை கப் (ஊறவைக்கவும்), [noguest]கேரட் - 2, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று, மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), பச்சை மிளகாய் - 2, மீல்மேக்கர் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 8, தேங்காய்ப் பால் (முதல், இரண்டாம், மூன்றாம் பால் எல்லாம் சேர்த்து) - ஒரு கப், , மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
30 வகை பிரியாணி - Page 3 21
செய்முறை: கேரட், வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கவும். மீல் மேக்கரை 20 நிமிடம் ஊறவைக்கவும். பிறகு, நீரைப் பிழிந்து வடியவிடவும். பச்சரிசியை வெறும் வாணலியில் வறுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், கேரட், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, மீல் மேக்கர், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, அரிசி சேர்த்து, இரண்டரை கப் தண்ணீர், ஒரு கப் தேங்காய்ப்பால் விட்டு குக்கரை மூடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி... கொத்தமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும்.[/noguest]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

30 வகை பிரியாணி - Page 3 Empty Re: 30 வகை பிரியாணி

Post by சிவா Sat Apr 26, 2014 7:27 pm

21. பச்சை வேர்க்கடலை பிரியாணி
தேவையானவை: பச்சரிசி - 2 கப், பச்சை வேர்க்கடலை - ஒரு கப் (ஊறவைக்கவும்),[noguest]  தக்காளி, பெரிய வெங்காயம் - தலா ஒன்று, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்,  சீரகம் - ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித் தழை - சிறிதளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, குடமிளகாய் - பாதியளவு, எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
30 வகை பிரியாணி - Page 3 22
செய்முறை:  வெங்காயம், தக்காளி, குடமிளகாயை நீளவாக்கில் நறுக்கவும். பச்சரிசியை வெறும் வாணலியில் வறுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து... நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், குடமிளகாய் சேர்த்து, தேங்காய்த் துருவல்,  நறுக்கிய தக்காளி போட்டு வதக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது,
மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறி... மூன்றரை கப் நீர், உப்பு, அரிசி, ஊறவைத்த வேர்க்கடலை சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து குக்கரை மூடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும். ஆவி வெளி யேறியதும் கொத்தமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும். [/noguest]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

30 வகை பிரியாணி - Page 3 Empty Re: 30 வகை பிரியாணி

Post by சிவா Sat Apr 26, 2014 7:28 pm

22. முருங்கைக்காய் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், நறுக்கிய முருங்கைக்காய் துண்டுகள் - 12,  தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 2, மிகச்சிறிய சதுரங்களாக வெட்டிய பனீர் - கால் கப், நெய் - 3 டீஸ்பூன், எண்ணெய் - 6 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

அரைக்க: பாதாம் பருப்பு, [noguest]முந்திரிப் பருப்பு - தலா 10 (ஊறவைக்கவும்), பூண்டு - 5 பல், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன் (அல்லது தேவைக்கேற்ப), தனியாத்தூள், சர்க்கரை - தலா ஒரு டீஸ்பூன். தக்காளி - ஒன்று.
30 வகை பிரியாணி - Page 3 23
செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊறவைக்கவும். குக்கரில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு... நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, உப்பு சேர்த்து, அரைத்த விழுதைப் போட்டு வதக்கி... மூன்றரை கப் நீர் விட்டு, அரிசி, தயிர் சேர்த்து குக்கரை மூடிவிடவும். ஆவி வந்ததும், குக்கரைத் திறந்து முருங்கைக்காயைச் சேர்த்து வெயிட் போடவும் (முருங்கைக்காயை முதலிலேயே சேர்த்தால் கரைந்துவிடும்). ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும் வாணலியில் 3 டீஸ்பூன் நெய், 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் இரண்டையும் சேர்த்து நறுக்கிய பனீரைப் பொரித்து எடுக்கவும். குக்கரைத் திறந்து, பொரித்த பனீர் துண்டுகளைச் சேர்த்துக் கிளறிவிடவும். [/noguest]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

30 வகை பிரியாணி - Page 3 Empty Re: 30 வகை பிரியாணி

Post by சிவா Sat Apr 26, 2014 7:29 pm

23. ஸ்வீட் கார்ன் - பச்சைப் பட்டாணி பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், ஸ்வீட் கார்ன் முத்துக்கள்- ஒரு கப், பச்சைப் பட் டாணி - அரை கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பெரிய வெங்காயம் - ஒன்று, நறுக்கிய பூண்டுப் பற்கள் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக் கேற்ப.

அரைக்க: காய்ந்த மிளகாய் - 6, [noguest] துருவிய மாங்காய், துருவிய தேங் காய் - தலா 8 டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித் தழை - 6 டேபிள்ஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு.
30 வகை பிரியாணி - Page 3 24
செய்முறை:  அரைக்கக் கொடுத் துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊற வைத்து, மூன்றரை கப் நீர் விட்டு, உப்பு சேர்த்து உதிர் உதிராக வேகவைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி...  நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, அரை கப் நீர் விட்டு, உப்பு, மஞ்சள்தூள் போட்டு, பச்சைப் பட்டாணி, ஸ்வீட்கார்ன் சேர்த்து வேகவிடவும். முக்கால் பதம் வெந்ததும் அரைத்த விழுதினைச் சேர்த்து, நீர் வற்றும் வரை கிளறவும் (பட்டாணி, கார்ன் குழைத்துவிடக் கூடாது). பிறகு, உதிர் உதிராக வடித்த சாதத்தைக் போட்டுக் கிளறிவிடவும். [/noguest]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

30 வகை பிரியாணி - Page 3 Empty Re: 30 வகை பிரியாணி

Post by சிவா Sat Apr 26, 2014 7:31 pm

24. பட்டாணி - பீன்ஸ் - உருளை பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், [noguest]  பெரிய வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்),  நறுக்கிய பீன்ஸ், உருளைக்கிழங்கு, ஊறவைத்த பச்சைப் பட்டாணி (சேர்த்து) - ஒரு கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,  எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
அரைக்க: சின்ன வெங்காயம் - 10, பூண்டுப் பற்கள் - 5, தக்காளி - ஒன்று, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, தேங்காய்த் துருவல் - கால் கப், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, முந்திரித் துண்டுகள் - 4.
30 வகை பிரியாணி - Page 3 25
செய்முறை: பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊறவைக்கவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைக்கவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், பீன்ஸ், உருளைக்கிழங்கு இவற்றை வதக்கி மஞ்சள்தூள், உப்பு, அரிசி சேர்த்து மூன்றரை கப் தண்ணீர் விட்டு, அரைத்த விழுதைச் சேர்த்து குக்கரை மூடிவிடவும். ஆவி வந்ததும், பட்டாணியைச் சேர்த்துக் கிளறி 'வெயிட்’ போடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும். ஆவி வெளியேறியதும் கூக்கரைத் திறந்து நன்கு கிளறிவிடவும்.  [/noguest]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

30 வகை பிரியாணி - Page 3 Empty Re: 30 வகை பிரியாணி

Post by சிவா Sat Apr 26, 2014 7:32 pm

25. காஷ்மீரி வெஜிடபிள் புலாவ்
தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், [noguest] பெரிய வெங் காயம் - 2, நறுக்கிய பீன்ஸ், காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு மற்றும் பச்சைப் பட்டாணி (எல்லாம் சேர்த்து) - ஒரு கப், இஞ்சி - பூண்டு விழுது, தனியாத்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள் - தலா ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், பால் - 2 டேபிள்ஸ்பூன், குங்குமப்பூ - சிறிதளவு, முந்திரி, திராட்சை - தலா ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சை - அரை மூடி, பிரியாணி இலை, ஏலக்காய் - தலா ஒன்று, கிராம்பு - 2, பட்டை - சிறிய துண்டு, ஆப்பிள் துண்டுகள், பைனாப்பிள் துண்டுகள், கொட்டை நீக்கிய ஆரஞ்சு சுளைகள் (சேர்த்து) - அரை கப், எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன்,  உப்பு - தேவைக்கேற்ப.
30 வகை பிரியாணி - Page 3 26
செய்முறை: பாசுமதி அரிசியைக் கழுவி 10 நிமிடம் ஊறவிடவும். நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்துக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய் நெய் விட்டு, சூடானதும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து... நறுக்கிய வெங்காயம் மற்றும் காய்கறிகளைப் சேர்த்து வதக்கி... இறுதியில் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கிளறவும். அத்துடன் ஊறவைத்த அரிசி, உப்பு சேர்த்து மூன்றரை கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடிவிடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கவும். ஆவி வெளியேறியதும் பாலில் குங்குமப்பூவைக் கரைத்து ஊற்றவும். நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். எல்லாமாகச் ஒன்று சேரும்படி நன்றாக கிளறிவிடவும். இறுதியில், பழங்களை சேர்த்துக் கலந்து பரிமாறவும். [/noguest]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

30 வகை பிரியாணி - Page 3 Empty Re: 30 வகை பிரியாணி

Post by சிவா Sat Apr 26, 2014 7:33 pm

26. கீரை பிரியாணி
தேவையானவை:  பச்சரிசி - 2 கப், ஆய்ந்து, சுத்தம் செய்து, நறுக்கிய முளைக்கீரை - 2 கப், துருவிய தேங்காய், கொத்தமல்லித் தழை - தலா கால் கப், எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.[noguest] 
தாளிக்க: கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், உடைத்த முந்திரிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், கடைகளில் கிடைக்கும் மசாலா வேர்க்கடலை - 3 டேபிள்ஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,  
30 வகை பிரியாணி - Page 3 27
செய்முறை: பச்சரியை வெறும் வாணலியில் வறுத்து, சிறிதளவு உப்பு சேர்த்து, மூன்றரை கப் நீர் விட்டு உதிர் உதிராக வேகவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு முளைக்கீரை, கொத்தமல்லித் தழையை வதக்கி, தேங்காய்த் துருவலை சேர்த்து வதக்கவும். இதை நீர் விடாமல் மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை வறுத்து... முந்திரிப்பருப்பு, மசாலா வேர்க் கடலை சேர்த்துக் கிளறி... அரைத்த கீரை, உப்பு சேர்த்து இரண்டு முறை புரட்டி அடுப்பை அணைத்துவிடவும். உதிர் உதிராக வடித்த சாதத்தை இதனுடன் சேர்த்துக் கிளறிவிடவும். [/noguest]

குறிப்பு:  முளைக்கீரைக்குப் பதில் அரைக்கீரை, சிறுகீரை சேர்க்கலாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

30 வகை பிரியாணி - Page 3 Empty Re: 30 வகை பிரியாணி

Post by சிவா Sat Apr 26, 2014 7:34 pm

27. கோதுமை ரவை புலாவ்
தேவையானவை: கோதுமை ரவை - ஒரு கப், பெரிய வெங்காயம், கேரட், குடமிளகாய்  - தலா ஒன்று, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், ஊறவைத்த பச்சைப் பட்டாணி - 3 டேபிள்ஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.[noguest] 
அரைக்க: சோம்பு, கசகசா (இரண்டும் சேர்ந்து) - ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், தக்காளி - ஒன்று.
30 வகை பிரியாணி - Page 3 28
செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், கேரட் சேர்த்து வதக்கி... கோதுமை ரவையையும் அதனுடன் சேர்த்து வதக்கி, இறுதியில் இஞ்சி - பூண்டு விழுது போட்டு வதக்கவும். இதில் ஒன்றரை கப் நீர் விட்டு, உப்பு, அரைத்து வைத்த விழுது சேர்த்து, நன்றாகக் கலக்கி குக்கரை மூடிவிடவும். ஆவி வந்ததும் குக்கரைத் திறந்து பச்சைப் பட்டாணி சேர்த்து மூடி, 'வெயிட்’ போட்டு ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும். மல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.[/noguest]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

30 வகை பிரியாணி - Page 3 Empty Re: 30 வகை பிரியாணி

Post by சிவா Sat Apr 26, 2014 7:35 pm

28. கலர்ஃபுல் குடமிளகாய் பிரியாணி
தேவையானவை:  பாசுமதி அரிசி - 2 கப், பச்சை, சிவப்பு, மஞ்சள் குடமிளாய் (நறுக்கியது) - தலா அரை கப், எண்ணெய் - 6 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
[noguest]
வறுத்துப் பொடிக்க: துவரம்பருப்பு - கால் கப், உளுத்தம்பருப்பு - கால் கப்புக்கு கொஞ்சம் குறைவாக, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய்த் துருவல் - 6 டேபிள்ஸ்பூன்.
30 வகை பிரியாணி - Page 3 29
செய்முறை:  பாசுமதி அரிசியை 20 நிமிடம் ஊறவைத்து மூன்றரை கப் தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து உதிர் உதிராக வேகவைக்கவும். வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண் ணெய் விட்டு துவரம்பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து, இறுதியில் தேங்காய்த்துரு வலை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். இதை மிக்ஸியில் பொட்டு உப்பு சேர்த்து, சற்றுக் கொரகொரப்பாக பொடிக்கவும். [/noguest]

மூன்று வண்ண குடமிளகாய்களை தனித்தனியாக, மீதமுள்ள எண்ணெயில் வதக்கவும். ஒவ்வொன்றுடனும் 2 டேபிள்ஸ்பூன் பொடித்து வைத்த பொடியை சேர்க்கவும். ஒவ்வொரு குடமிகாய் கலவையுடனும் உதிர் உதிரான சாதத்தைச் சேர்ந்துக் கலக்க வும். பச்சை, மஞ்சள், சிவப்பு வண்ணத் தில் குடமிளகாய் சாதங்களை மூன்று அடுக்காக அடுக்கி பரிமாறவும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

30 வகை பிரியாணி - Page 3 Empty Re: 30 வகை பிரியாணி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum