ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

30 வகை கொழுக்கட்டை

3 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

30 வகை கொழுக்கட்டை - Page 2 Empty 30 வகை கொழுக்கட்டை

Post by சிவா Mon Apr 21, 2014 1:38 am

First topic message reminder :

புரோட்டீன் கொழுக்கட்டை
தேவையானவை: பச்சரிசி மாவு  -  ஒரு கப், சோயா பீன்ஸ் - அரை கப், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 4, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் -  ஒரு சிட்டிகை, தண்ணீர் - ஒன்றரை கப்,  எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சோயா பீன்ஸை ஊற வைத்து, ரவை போல கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இஞ்சி, பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு மூன்றையும் சேர்த்து அரைத்து இதனுடன் கலக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு வறுத்து, பெருங்காயத்தூள் சேர்க்கவும். அத்துடன் அரைத்த சோயா பீன்ஸ் விழுது சேர்த்து, கறிவேப்பிலையை கிள்ளி போட்டு, சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறவும். வெந்து உதிரியாகும் வரை கிளறி எடுக்கவும். இதுதான் பூரணம்.
30 வகை கொழுக்கட்டை - Page 2 1
கடாயில் தண்ணீர் விட்டு, சிறிதளவு உப்பு, ஒரு டீஸ்       பூன் எண்ணெய் விட்டு கொதிக்கவிடவும். இதில் பச்சரிசி மாவு தூவி கட்டி இல்லாது கிளறி எடுக்கவும். ஆறியதும் கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, அரிசி மாவில் எலுமிச்சம் பழ அளவு எடுத்து உருட்டி, கிண்ணம் போல் செய்து அதில் சோயா பூரணம் ஒரு டீஸ்பூன் அளவு வைத்து மூடி, கொழுக்கட்டை வடிவம் கொடுக்கவும். தயாரித்தவற்றை ஆவியில் வேக வைத்து எடுத்தால்... புரோட்டீன் கொழுக்கட்டை தயார்.

குறிப்பு: சத்தான, புதுமையான இந்தக் கொழுகட்டை, எல்லோருக்கும் ஏற்றது. எளிதில் ஜீரணம் ஆகக் கூடியது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


30 வகை கொழுக்கட்டை - Page 2 Empty Re: 30 வகை கொழுக்கட்டை

Post by சிவா Mon Apr 21, 2014 1:41 am

ராகி கொழுக்கட்டை
தேவையானவை: ராகி (கேழ்வரகு) மாவு - 2 கப், அரிசி மாவு - ஒரு கப், பச்சை மிளகாய் - 4, வெங்காயம் - ஒன்று (நறுக்கிக் கொள்ளவும்), கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
30 வகை கொழுக்கட்டை - Page 2 11
செய்முறை: ராகி மாவு, அரிசி மாவை சேர்த்து வெறும் கடாயில் சூடுபட வறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் தாளிக்கவும். வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு புரட்டவும். உப்பு சேர்த்துக் கிளறவும். தேவையான அளவு தண்ணீர் விட்டு, கொதி வந்தவுடன் மாவு தூவி கிளறவும். கெட்டியானதும் இறக்கி ஆறவிடவும். ஈரக் கையினால் கலவையில் சிறிதளவு எடுத்து உருட்டி லேசாக தட்டி வைக்கவும். தயாரித்தவற்றை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

குறிப்பு: இது எல்லோருக்கும் ஏற்றது. சுகர் பிராப்ளம் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

30 வகை கொழுக்கட்டை - Page 2 Empty Re: 30 வகை கொழுக்கட்டை

Post by சிவா Mon Apr 21, 2014 1:41 am

மின்ட் கொழுக்கட்டை
தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், தேங்காய் துருவல், பொட்டுக்கடலை, புதினா - தலா அரை கப், பச்சை மிளகாய் - 4, எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
30 வகை கொழுக்கட்டை - Page 2 12
செய்முறை: பொட்டுக்கடலை, புதினா, தேங்காய் துருவல், பச்சை மிளகாய் ஆகியவற்றுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து, உப்பு போட்டு அரைத்துக் கொள்ளவும். கடாயில் 2 கப் தண்ணீர் விட்டு... உப்பு, எண்ணெய் சேர்த்துக் கலந்து கொதிக்கவிடவும். கொதி வந்ததும் அரைத்து வைத்த விழுதை போட்டு கலக்கவும். உடன் அரிசி மாவை தூவி கெட்டியாக கிளறி எடுக்கவும். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, மாவை சிறுசிறு உருண்டைகளாக செய்யவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

30 வகை கொழுக்கட்டை - Page 2 Empty Re: 30 வகை கொழுக்கட்டை

Post by சிவா Mon Apr 21, 2014 1:42 am

சோயா சங்ஸ் ஸ்வீட் கொழுக்கட்டை
தேவையானவை: சோயா சங்ஸ் (பெரிய மளிகைக் கடைகளில் கிடைக்கும்) - 20 அல்லது 25, பொடித்த வெல்லம் - முக்கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், பச்சரிசி மாவு - ஒரு கப், உப்பு - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 4 டீஸ்பூன்.

செய்முறை: சோயா சங்ஸை சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைத்து, தண்ணீர் வடித்து உதிர்த்து துளாக்கவும். கடாயில் வெல்லம், தண்ணீர் சேர்த்து சூடாக்கி, வெல் லத்தை கரையவிட்டு வடிகட்டி, பச்சை வாசனை போக கொதிக்கவிடவும். தூளாக்கிய சோயா சங்ஸை இதில் போட்டு, ஏலக்காய்த்தூள் கலந்து, சிறிதளவு எண்ணெய் சேர்த்து, அடிபிடிக்காமல் கிளறி எடுக்கவும். இதுதான் பூரணம்.
30 வகை கொழுக்கட்டை - Page 2 13
கடாயில் தண்ணீர் விட்டு, உப்பு, கொஞ்சம் எண்ணெய் விட்டு கொதிக்கவிடவும். இதில் பச்சரிசி மாவைத் தூவி கெட்டியாக கிளறி எடுக்கவும். ஆறியதும் கட்டி இல்லாது பிசைந்து கொள்ளவும். மாவில் சிறிது எடுத்து உருட்டி கிண்ணம் போல் செய்து, தேவையான அளவு சோயா சங்ஸ் பூரணம் வைத்து மூடவும். தயாரித்தவற்றை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

30 வகை கொழுக்கட்டை - Page 2 Empty Re: 30 வகை கொழுக்கட்டை

Post by சிவா Mon Apr 21, 2014 1:42 am

கம்பு இனிப்பு கொழுக்கட்டை
தேவையானவை: அரிசி மாவு - 2 டீஸ்பூன், கம்பு  மாவு - ஒரு கப்,  தேங்காய் துருவல் - அரை கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், பொடித்த வெல்லம் - முக்கால் கப்.
30 வகை கொழுக்கட்டை - Page 2 14
செய்முறை: அரிசி மாவு, கம்பு மாவை வெறும் கடாயில் சேர்த்து சூடுபட வறுத்து, கலந்து எடுத்து வைக்கவும். வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து கரையவிட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும். மாவுக் கலவையில் ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்துக் கலக்கவும். இதில் வெல்லக் கரைசலை விட்டுக் கலந்து, சப்பாத்தி மாவு போல பிசையவும். கலவையில் சிறிது எடுத்து நீளவாட்டில் உருட்டவும். தயாரித்தவற்றை ஆவியில் வேக வைத்து எடுக் கவும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

30 வகை கொழுக்கட்டை - Page 2 Empty Re: 30 வகை கொழுக்கட்டை

Post by சிவா Mon Apr 21, 2014 1:42 am

கேபேஜ் கொழுக்கட்டை
தேவையானவை: முட்டைகோஸ் துருவல் - 2 கப், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு  - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4,  பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 2 கப், புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
30 வகை கொழுக்கட்டை - Page 2 15
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் போட்டு வறுத்து எடுக்கவும். அதே கடாயில் முட்டைகோஸ் துருவலை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். ஆறியதும் எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு, புளி, உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும். தண்ணீரை கொதிக்க வைத்து... உப்பு சேர்த்து, எண்ணெய் விட்டு, இதில் அரிசி மாவை தூவி கெட்டியாக கிளறி எடுக்கவும். ஆறியதும் கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, மாவில் சிறிது எடுத்து உருட்டி தட்டையாக செய்து, அதில் 2 டீஸ்பூன் அளவு முட்டைகோஸ் பூரணம் வைத்து மூடவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

30 வகை கொழுக்கட்டை - Page 2 Empty Re: 30 வகை கொழுக்கட்டை

Post by சிவா Mon Apr 21, 2014 1:43 am

உசிலி கொழுக்கட்டை
தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், உளுத்தம்பருப்பு - கால் கப், கடுகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
30 வகை கொழுக்கட்டை - Page 2 16
செய்முறை: அரிசி மாவை வெறும் கடாயில் வறுக்கவும். உப்பு, ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கலக்கவும். சுடுநீர் விட்டு சப்பாத்தி மாவு போல் பிசைந்து சிறு உருண்டைகளாக செய்யவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும். உளுத்தம் பருப்பை ஊற வைத்து, தண்ணீர் வடித்து, காய்ந்த மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும். கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு கடுகு, சிறிதளவு உளுத்தம்பருப்பு, பெருங்காயத் தூள் தாளிக்கவும். இஞ்சித் துண்டுகள், பச்சை மிளகாய் துண்டுகள், கறிவேப்பிலை போட்டு கிளறவும். அதனுடன் அரைத்த உளுத்தம்பருப்பு விழுதை சேர்த்துக் கிளறவும். வெந்து உதிரியாக வந்ததும், வேக வைத்த கொழுக்கடைகளை சேர்க்கவும். லேசாக கலந்து இறக்கவும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

30 வகை கொழுக்கட்டை - Page 2 Empty Re: 30 வகை கொழுக்கட்டை

Post by சிவா Mon Apr 21, 2014 1:43 am

ஸ்பிரவுட் கொழுக்கட்டை
தேவையானவை: முளைகட்டிய பயறு - ஒரு கப், பச்சை மிளகாய்  - 3 (நறுக்கவும்), தேங்காய் துருவல் - கால் கப், அரிசி மாவு - ஒரு கப், கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
30 வகை கொழுக்கட்டை - Page 2 17
செய்முறை: கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து... முளைகட்டிய பயறு, உப்பு, பச்சை மிளகாய் துண்டுகள் சேர்த்து தண்ணீர் தெளித்து வேகவிடவும். பயறு வெந்ததும் தேங்காய் துருவலை கலந்து எடுக்கவும்.  கடாயில் தண்ணீர் விட்டு சூடாக்கி... உப்பு, எண்ணெய் சேர்த்து, கொதித்து வரும்போது அரிசி மாவை சேர்த்து கெட்டியாக கிளறி எடுக்கவும். ஆறியதும் நன்கு பிசைந்து கொள்ளவும். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு மாவில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி, சின்ன கிண்ணம் போல் செய்து, பயறு கலவையை உள்ளே வைத்து மூடவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுத்தால்... ஸ்பிரவுட் கொழுக்கட்டை தயார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

30 வகை கொழுக்கட்டை - Page 2 Empty Re: 30 வகை கொழுக்கட்டை

Post by சிவா Mon Apr 21, 2014 1:43 am

 மணி பேக் கொழுக்கட்டை
தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், பட்டாணி, வெல்லம் - தலா அரை கப், தேங்காய் துருவல் - கால் கப், ஏலக்காய்த் தூள் - அரை டீஸ்பூன், எண் ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு,
30 வகை கொழுக்கட்டை - Page 2 18
செய்முறை: பட்டாணியை முதல் நாளே ஊற வைத்து, அடுத்த நாள் வேக வைத்து மசித்துக் கொள்ளவும். கடாயில் ஒன்றரை கப் தண்ணீர் விட்டு... உப்பு, சிறிதளவு எண்ணெய் சேர்த்து கொதிக்கவிடவும். அதில் அரிசி மாவு தூவி, கட்டி இல்லாமல் கெட்டியாக கிளறி எடுக்கவும். கடாயில் வெல்லம், தண்ணீர் சேர்த்து சூடாக்கி, வெல்லத்தை கரையவிட்டு வடிகட்டி எடுக்கவும். அதில் பட்டாணி விழுது, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து, ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு அடிபிடிக்காமல் கிளறி எடுக்கவும். இதுதான் பூரணம். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, அரிசி மாவு கலவையில் இருந்து சிறிது எடுத்து உருட்டி கிண்ணம் போல் செய்து, அதனுள் பூரணத்தை கொஞ்சம் வைத்து, பை போல் சுருக்கி ஒட்டிவிடவும். அப்படியே ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

சுருக்குப் பை வடிவத்தில், பார்க்க அழகாக இருக்கும் இது, சுவையிலும் சூப்பர்தான்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

30 வகை கொழுக்கட்டை - Page 2 Empty Re: 30 வகை கொழுக்கட்டை

Post by சிவா Mon Apr 21, 2014 1:43 am

முத்து கொழுக்கட்டை
தேவையானவை: ஜவ்வரிசி - ஒரு கப், மைதா - 2 டீஸ்பூன், இஞ்சி - பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்,  எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
30 வகை கொழுக்கட்டை - Page 2 19
செய்முறை: ஜவ்வரிசியை தேவையான அளவு சுடுநீர் விட்டு 2 மணி நேரம் ஊறவிடவும். நன்கு ஊறியதும் அழுத்தி பிசையவும். அத்துடன் மைதா, உப்பு, இஞ்சி - பச்சை மிளகாய் விழுது சேர்த்து... கறிவேப்பிலை, கொத்தமல்லி  கிள்ளி போட்டு, மிளகாய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து, எண்ணெய் விட்டுக் கலந்து பிசைந்து, சிறு உருண்டைகளாக தயார் செய்யவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுத்தால்.... முத்து கொழுக்கட்டை தயார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

30 வகை கொழுக்கட்டை - Page 2 Empty Re: 30 வகை கொழுக்கட்டை

Post by சிவா Mon Apr 21, 2014 1:44 am

பூந்தி கொழுக்கட்டை
தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், இனிப்பு பூந்தி - ஒரு கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
30 வகை கொழுக்கட்டை - Page 2 20
செய்முறை: கடாயில் ஒன்றரை கப் தண்ணீர், ஒரு டீஸ்பூன் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து அடுப்பில் வைக்கவும். கொதி வந்ததும் அரிசி மாவைக் கொட்டி, கட்டியில்லாமல் கெட்டியாக கிளறி எடுக்கவும். ஆறியதும், கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, பெரிய நெல்லிக்காய் அளவு மாவு எடுத்து உருட்டி கிண்ணம் போல செய்து, அதனுள் 2 டீஸ்பூன் அளவு பூந்தி வைத்து மூடி, கொழுக்கட்டை வடிவம் கொடுக்கவும். தயாரித்த வற்றை ஆவியில் வேக வைத்து  எடுக்கவும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

30 வகை கொழுக்கட்டை - Page 2 Empty Re: 30 வகை கொழுக்கட்டை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum