புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
30 வகை கொழுக்கட்டை Poll_c1030 வகை கொழுக்கட்டை Poll_m1030 வகை கொழுக்கட்டை Poll_c10 
85 Posts - 77%
heezulia
30 வகை கொழுக்கட்டை Poll_c1030 வகை கொழுக்கட்டை Poll_m1030 வகை கொழுக்கட்டை Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
30 வகை கொழுக்கட்டை Poll_c1030 வகை கொழுக்கட்டை Poll_m1030 வகை கொழுக்கட்டை Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
30 வகை கொழுக்கட்டை Poll_c1030 வகை கொழுக்கட்டை Poll_m1030 வகை கொழுக்கட்டை Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
30 வகை கொழுக்கட்டை Poll_c1030 வகை கொழுக்கட்டை Poll_m1030 வகை கொழுக்கட்டை Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
30 வகை கொழுக்கட்டை Poll_c1030 வகை கொழுக்கட்டை Poll_m1030 வகை கொழுக்கட்டை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
30 வகை கொழுக்கட்டை Poll_c1030 வகை கொழுக்கட்டை Poll_m1030 வகை கொழுக்கட்டை Poll_c10 
250 Posts - 77%
heezulia
30 வகை கொழுக்கட்டை Poll_c1030 வகை கொழுக்கட்டை Poll_m1030 வகை கொழுக்கட்டை Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
30 வகை கொழுக்கட்டை Poll_c1030 வகை கொழுக்கட்டை Poll_m1030 வகை கொழுக்கட்டை Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
30 வகை கொழுக்கட்டை Poll_c1030 வகை கொழுக்கட்டை Poll_m1030 வகை கொழுக்கட்டை Poll_c10 
8 Posts - 2%
prajai
30 வகை கொழுக்கட்டை Poll_c1030 வகை கொழுக்கட்டை Poll_m1030 வகை கொழுக்கட்டை Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
30 வகை கொழுக்கட்டை Poll_c1030 வகை கொழுக்கட்டை Poll_m1030 வகை கொழுக்கட்டை Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
30 வகை கொழுக்கட்டை Poll_c1030 வகை கொழுக்கட்டை Poll_m1030 வகை கொழுக்கட்டை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
30 வகை கொழுக்கட்டை Poll_c1030 வகை கொழுக்கட்டை Poll_m1030 வகை கொழுக்கட்டை Poll_c10 
3 Posts - 1%
Barushree
30 வகை கொழுக்கட்டை Poll_c1030 வகை கொழுக்கட்டை Poll_m1030 வகை கொழுக்கட்டை Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
30 வகை கொழுக்கட்டை Poll_c1030 வகை கொழுக்கட்டை Poll_m1030 வகை கொழுக்கட்டை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

30 வகை கொழுக்கட்டை


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 21, 2014 1:38 am

புரோட்டீன் கொழுக்கட்டை
தேவையானவை: பச்சரிசி மாவு  -  ஒரு கப், சோயா பீன்ஸ் - அரை கப், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 4, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் -  ஒரு சிட்டிகை, தண்ணீர் - ஒன்றரை கப்,  எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சோயா பீன்ஸை ஊற வைத்து, ரவை போல கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இஞ்சி, பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு மூன்றையும் சேர்த்து அரைத்து இதனுடன் கலக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு வறுத்து, பெருங்காயத்தூள் சேர்க்கவும். அத்துடன் அரைத்த சோயா பீன்ஸ் விழுது சேர்த்து, கறிவேப்பிலையை கிள்ளி போட்டு, சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறவும். வெந்து உதிரியாகும் வரை கிளறி எடுக்கவும். இதுதான் பூரணம்.
30 வகை கொழுக்கட்டை 1
கடாயில் தண்ணீர் விட்டு, சிறிதளவு உப்பு, ஒரு டீஸ்       பூன் எண்ணெய் விட்டு கொதிக்கவிடவும். இதில் பச்சரிசி மாவு தூவி கட்டி இல்லாது கிளறி எடுக்கவும். ஆறியதும் கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, அரிசி மாவில் எலுமிச்சம் பழ அளவு எடுத்து உருட்டி, கிண்ணம் போல் செய்து அதில் சோயா பூரணம் ஒரு டீஸ்பூன் அளவு வைத்து மூடி, கொழுக்கட்டை வடிவம் கொடுக்கவும். தயாரித்தவற்றை ஆவியில் வேக வைத்து எடுத்தால்... புரோட்டீன் கொழுக்கட்டை தயார்.

குறிப்பு: சத்தான, புதுமையான இந்தக் கொழுகட்டை, எல்லோருக்கும் ஏற்றது. எளிதில் ஜீரணம் ஆகக் கூடியது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 21, 2014 1:39 am

 பீட்ரூட் கொழுக்கட்டை
தேவையானவை: பீட்ரூட் துருவல், அரிசி மாவு - தலா ஒரு கப், தேங்காய் துருவல் - கால் கப், பொடித்த வெல்லம் - முக்கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய் - 4 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு - 10.
30 வகை கொழுக்கட்டை 2
செய்முறை: அரிசி மாவை வெறும் கடாயில் வறுக்கவும். கடாயில் வெல்லம், தண்ணீர் சேர்த்து சூடாக்கி, வெல்லத்தை கரையவிட்டு வடிகட்டவும். அரிசி மாவுடன் பீட்ரூட் துருவல், தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், முந்திரிப்பருப்பு, நெய் விட்டு கலந்து... வடிகட்டிய வெல்லக் கரைசலை அதில் விட்டு, கெட்டியாக பிசைந்து கொள்ளவும். கலவையில் சிறிது சிறிதாக எடுத்து உருட்டி, லேசாக தட்டி, ஆவியில் வேக வைத்து எடுக் கவும். மேலே முந்திரிப்பருப்பை வைத்து அலங்கரிக்கவும்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 21, 2014 1:39 am

 ஹெர்பல் கொழுக்கட்டை
தேவையானவை: பச்சரிசி மாவு - ஒரு கப், கொத்தமல்லி இலை - ஒரு கப், புதினா - கால் கப், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 4, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், தண்ணீர் - ஒன்றரை கப், எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
30 வகை கொழுக்கட்டை 3
செய்முறை: கொத்தமல்லி, புதினா, இஞ்சி, பச்சை மிளகாயை சுத்தம் செய்து ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதில் எலுமிச்சைச் சாறு விட்டு கலக்கவும். கடாயில் தண்ணீர் விட்டு உப்பு, சிறிதளவு எண்ணெய், அரைத்த விழுது ஆகியவற்றை சேர்த்து கொதிக்கவிடவும் (ஒரு கொதி போதுமானது). இதில் பச்சரிசி மாவு தூவி கட்டி இல்லாது கெட்டியாக கிளறி எடுத்து ஆறவிடவும். கையில் எண்ணெயை தடவிக் கொண்டு கலவையில் சிறிது எடுத்து, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைத்து ஆவியில் வேக வைத்து எடுத்தால்... ஹெர்பல் கொழுக்கட்டை தயார்.

குறிப்பு: இது, நல்ல வாசனை யாகவும் ருசியாகவும் இருக்கும். பித்தத்தை தணிக்கும். பசியைத் தூண்டக்கூடியது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 21, 2014 1:39 am

பஞ்சரத்ன கொழுக்கட்டை
தேவையானவை: இட்லி அரிசி, துவரம்பருப்பு, பயத்தம்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை கப், காய்ந்த மிளகாய் - 6, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 2, கொத்தமல்லி - கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு, கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயம் -  ஒரு சிட்டிகை, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.  
30 வகை கொழுக்கட்டை 4
செய்முறை: அரிசி, பருப்புகளை சுத்தம் செய்து ஒன்றாக சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு, தண்ணீர் வடித்து காய்ந்த மிளகாய், உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும். கொத்தமல்லி, கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு கலக்கவும். இட்லித் தட்டில் எண்ணெய் தடவி விட்டு, அரைத்து எடுத்த கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி வைக்கவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, பெருங்காயம் தாளித்து, வேக வைத்த உருண்டைகளைப் போட்டு கலந்து எடுக்கவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 21, 2014 1:40 am

 காரடையான் நோன்பு கொழுக்கட்டை
தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், காராமணி - கால் கப், பொடித்த வெல்லம் - முக்கால் கப், தேங்காய் துண்டுகள் - 3 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், நெய் - அரை டீஸ்பூன், தண்ணீர் - 2 கப், உப்பு - ஒரு சிட்டிகை.
30 வகை கொழுக்கட்டை 5
செய்முறை: காராமணியை வெறும் கடாயில் வறுத்து வேகவிட்டு எடுக்கவும். அரிசி மாவை வெறும் கடாயில் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து கரையவிட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்து, மீண்டும் கொதிக்கவிடவும். இத்துடன் வேக வைத்த காராமணி, தேங்காய் துண்டுகள், உப்பு, ஏலக்காய்த் தூள், நெய் கலந்து... கொதிக்கும்போது அரிசி மாவை தூவி கெட்டியாக கிளறி எடுக்கவும். ஆறியதும் ஈர கையினால் கலவையை நன்கு பிசைந்து கலக்கவும். சிறிதளவு கலவை எடுத்து உருட்டி உள்ளங்கையில் வைத்து லேசாக தட்டி நடுவில் ஓட்டை போட்டு தயார் செய்யவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

குறிப்பு: இதற்கு தொட்டுக் கொள்ள ஃப்ரெஷ் வெண்ணெய் ஒரு டீஸ்பூன் வைத்து பரிமாறவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 21, 2014 1:40 am

ஏகாதசி கொழுக்கட்டை
தேவையானவை: அரிசி ரவை, தேங்காய் துருவல் - தலா ஒரு கப், வெல்லத்தூள் - கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், தண்ணீர் - 2 கப், உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: கடாயில் தண்ணீர், உப்பு, ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொதிக்கவிடவும். உடனே அரிசி ரவையைப் போட்டு கெட்டியாக கிளறி எடுத்து ஆறவிடவும். தேங்காய் துருவல், வெல்லத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளவும். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, அரிசி ரவை கலவையில் இருந்து சிறிய கமலா ஆரஞ்சு அளவு எடுத்து உருட்டி, நடுவில் குழி செய்து 2 டீஸ்பூன் அளவு தேங்காய் கலவை வைத்து மூடி, வட்டமாக உருட்டவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
30 வகை கொழுக்கட்டை 6
குறிப்பு:  நம் முன்னோர்கள் ஏகாதசிக்கு இதை மட்டுமே ஒரு வேளை உணவாக எடுத்துக் கொண்டு விரதம் இருந்தனர். அதனால்தான் இந்தப் பெயர்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 21, 2014 1:40 am

சேமியா கொழுக்கட்டை
தேவையானவை: சேமியா - 200 கிராம், தேங்காய் - ஒன்று (துருவிக் கொள்ளவும்), காய்ச்சிய பால் - 2 கப், அரிசி மாவு - 3 டேபிள்ஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், பச்சை மிளகாய் - 5 (நறுக்கியது), கடுகு, சீரகம், எள் - தலா அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
30 வகை கொழுக்கட்டை 7
செய்முறை: சேமியாவை வறுத்து, பாலில் 30 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம், நறுக்கிய பச்சை மிள காய் ஆகியவற்றை வதக்கவும். தேங்காய் துருவல் சேர்த்து, தீயை நிறுத்திவிட்டு கலக்கவும். பாலில் ஊறிய சேமியா, உப்பு, அரிசி மாவு, எள்ளு, சீரகம் ஆகிய வற்றையும் அதில் கலக்கவும். கையினால் நன்கு  மசித்து கலந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 21, 2014 1:40 am

பாஸ்தா மசாலா கொழுக்கட்டை
தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், தக்காளி - 2, வெங்காயம், குடமிளகாய், கேரட் - தலா ஒன்று, பாஸ்தா (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - ஒரு கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் விழுது - அரை டீஸ்பூன், கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, தக்காளி சாஸ் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
30 வகை கொழுக்கட்டை 8
செய்முறை: பாஸ்தாவில் கொதிநீர் விட்டு 10 நிமிடம் ஊற வைத்து எடுக்கவும். அரிசி மாவை வெறும் கடாயில் வறுத்து... உப்பு, சிறிதளவு எண்ணெய் சேர்த்துக் கலந்து, தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். அரிசி மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேக வைத்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடமிளகாய், கேரட் துண்டுகள், உப்பு, இஞ்சி -  பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும். பிறகு, தண்ணீர் தெளித்து வேக வைக்கவும். வெந்து சேர்ந்தாற்போல் வந்ததும், பாஸ்தாவை அதில் சேர்த்து கலந்துவிடவும். ஆவியில் வேக வைத்த அரிசி மாவு உருண்டைகளை சேர்த்து, லேசாக கலக்கவும். நிறைவாக, தக்காளி சாஸ், புதினா, கொத்தமல்லி தூவி கலக்கினால்... பாஸ்தா மசாலா கொழுக்கட்டை தயார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 21, 2014 1:41 am

சேவரி கொழுக்கட்டை
தேவையானவை: மிச்சமாகிப் போன சேவரி (ஓமப்பொடி, தேன்குழல், காராசேவு, காராபூந்தி போன்றவை) - ஒரு கப், அரிசி மாவு - ஒரு கப், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், தண்ணீர் - ஒன்றரை கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
30 வகை கொழுக்கட்டை 9
செய்முறை: மிச்சமாகிப் போன ஓமப்பொடி, தேன்குழல், காராசேவு, காராபூந்தி எதுவாகிலும் ஒன்றாகக் கலந்து, மிக்ஸியில் கொரகொரப்பாக தூள் செய்யவும். இதனுடன் மிளகுத் தூள் சேர்த்துக் கலந்தால்... பூரணம் தயார். கடாயில் தண் ணீர், உப்பு, எண்ணெய் விட்டு கொதிக்கவிடவும். கொதி வந்ததும் அரிசி மாவு தூவி, கட்டி இல்லாது கிளறி எடுத்து ஆறவிடவும். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, அரிசி மாவு கலவையில் சிறிது எடுத்து உருட்டி குழி செய்து,  பூரணம் ஒரு டீஸ்பூன் அளவு வைத்து மூடவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும். இதை நினைத்த நேரத்தில் செய்து அசத்தலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 21, 2014 1:41 am

 டிரை ஃப்ரூட்ஸ் கொழுக்கட்டை
தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், பேரீச்சம்பழம் (விதை நீக்கியது) - 10, முந்திரி, பாதாம், பிஸ்தா - தலா 10, திராட்சை, வெல்லம் - தலா 50 கிராம், பொட்டுக்கடலை - 4 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
30 வகை கொழுக்கட்டை 10
செய்முறை: கடாயில் தண்ணீர்,  உப்பு, சிறிதளவு எண்ணெய் சேர்த்து கொதிக்கவிட்டு... அதில் அரிசி மாவு தூவி கெட்டியாக கிளறி எடுக்கவும். இதுதான் மேல் மாவு. முந்திரி, பாதாம், பிஸ்தா, பொட்டுக்கடலையை மிக்ஸி யில் கொரகொரப்பாக தூள் செய்து எடுக்கவும். பேரீச்சம்பழம், திராட்சை, வெல்லம் சேர்த்து அரைத்து, பருப்பு தூள்களை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்தால்... பூரணம் தயார். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு மேல் மாவில் சிறிது எடுத்து உருட்டி, கிண்ணம் போல் செய்து, ஒரு டீஸ்பூன் பூரணத்தை அதில்  வைத்து மூடி, வேண்டிய வடிவம் கொடுக்கவும், அப்படியே ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

குறிப்பு: திராட்சை, பேரீச்சம்பழத்தை வெந்நீரில் ஊற வைத்தும் அரைத்து எடுக்கலாம்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக