ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாடு முழுவதும் பயணம் செய்யும் 2.1 லட்சம் பாதுகாப்பு படையினர்

Go down

நாடு முழுவதும் பயணம் செய்யும் 2.1 லட்சம் பாதுகாப்பு படையினர் Empty நாடு முழுவதும் பயணம் செய்யும் 2.1 லட்சம் பாதுகாப்பு படையினர்

Post by சிவா Sun Apr 20, 2014 5:29 am


மக்களவை தேர்தலை வெற்றிகரமாக நடத்த நாடு முழுவதும் பல்வேறு பகுதியிலிருந்து 2.1 லட்சம் பாதுகாப்பு வீரர்கள் மாநிலம் மாநிலமாக சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். போர் சமயத்துக்கு ஈடாக, உள்நாட்டிலேயே பாதுகாப்பு பணியாற்றி வருகின்றனர். அப்படிப்பட்ட பாதுகாப்பு படை வீரர்களின் செயல்பாடுகளை இங்கே பார்ப்போம்...

தேர்தல் ஆணையம், உள்துறை அமைச்சகம், துணை ராணுவப் படை இணைந்து பாதுகாப்பு பணியை ஒருங்கிணைத்து வருகிறது. மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, இந்திய-திபெத் எல்லை பாதுகாப்பு படை உள்ளிட்ட படைகளை சேர்ந்த 2.1 லட்சம் பாதுகாப்பு படை வீரர்கள் களத்தில் குதித்துள்ளனர்.

முந்தைய காலங்களில், மாநிலம் மாநிலமாக பாதுகாப்பு படை வீரர்கள் அனுப்பப்பட்டதால் நேர விரயமும், வீரர்கள் சோர்வடையும் நிலையும் இருந்தது. இதனால், இம்முறை தனி தனி குழுவாக பிரிக்கப்பட்டுள்ளனர். காஷ்மீர், தென் இந்தியா, உ.பி.,-பீகார்-மேற்கு வங்கம், வடகிழக்கு, நக்சல் பகுதி என 5 பிரிவாக பிரிக்கப்பட்டு வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். காஷ்மீரில் 5 கட்டமாக தேர்தல் நடக்கிறது. அங்கு பணியமர்த்தப்பட்டுள்ள பாதுகாப்பு படையினர் காஷ்மீரில் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென் இந்திய பிரிவு பாதுகாப்பு படை வீரர்கள், கேரளா மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா, ஒடிசா, சீமாந்திரா பகுதிகளில் பயணம் செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இம்முறை வீரர்கள் அதிகபட்சம் 500-600 கிமீ தூரம் மட்டுமே பயணம் செய்து வருகின்றனர். இதனால் வீரர்கள் சோர்வடையும் நிலை ஏற்படாது. மேலும், 300 கி.மீக்கு உட்பட பகுதிகளுக்கு பஸ், லாரி மூலமாகவும், 300க்கும் அதிகமான கி.மீ. தொலைவுக்கு ரயில் மூலமாகவும் சென்று வருகின்றனர். மலைப்பிரதேசம் போன்ற பகுதிகளில் வீரர்களை அனுப்புவதற்காக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதற்காக தேர்தல் ஆணையம், 100 ரயில்களையும், 21 ஹெலிகாப்டர்களையும், 10,500 வாகனங்களையும் வாடகைக்கு எடுத்துள்ளது. ஒவ்வொரு மாநில போலீசாரும் சேர்த்த மொத்தம் 55 லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். இது குறித்து பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் கூறுகையில், ‘மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் பாதுகாப்பு படை வீரர்கள் பல்வேறு சவால்களை சந்தித்து வருகின்றனர். வாகனங்கள் செல்ல முடியாத மலைப் பிரதேசங்களில் கழுதைகளிலும், பாலைவன பகுதிகளில் ஓட்டகங்களிலும் சென்று வருகின்றனர்.

இரவு பகலாக தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பின்னர் ஓய்வின்றி பயணமும் செய்து வருகிறார்கள். நக்சல் பாதிப்பு அதிகம் பகுதிகளில் வீரர்கள் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்’ என்கின்றனர். அந்தமான் போன்ற தீவுகளில் படகுகளிலும் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர். இத்தகைய பாதுகாப்பு பணிகள் சரியான முறையில் கடைபிடிக்கப்பட்டு வருவதால், எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் பொது தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

செலவு எவ்வளவு?

பாதுகாப்பு படை வீரர்களின் பயணத்துக்கு ரூ.100 கோடி.
ரயில் பயணத்துக்கு மட்டுமே செலவு ரூ.25 கோடி.
வாகனங்கள், ஹெலிகாப்டரின் வாடகையாக செலவு தினசரி ரூ.1.5 கோடி.

[thanks] தினகரன் [/thanks]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» நாளை அயோத்தி தீர்ப்பு: நாடு முழுவதும் அதிதீவிர பாதுகாப்பு
» நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு! பயங்கரவாதிகளை சமாளிக்க தயார் நிலை
» நாடு முழுவதும் காவல்துறையில் 5 லட்சம் பணியிடம் காலி
» பாதுகாப்பு வலயம் மீது படையினர் தாக்கினர்: விக்கிலீக்ஸ் தகவல்
» தீபாவளி பண்டிகை கோலாகல கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum