ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெனாலிராமன் சினிமா விமர்சனம்

+2
சிவா
சாமி
6 posters

Go down

தெனாலிராமன் சினிமா விமர்சனம் Empty தெனாலிராமன் சினிமா விமர்சனம்

Post by சாமி Sat Apr 19, 2014 3:24 pm

தெனாலிராமன் சினிமா விமர்சனம் ABz3QrWzRHCK41tz8XHT+images
மூன்று ஆண்டு வனவாசத்திற்குப் பிறகு, வைகைப்புயல் வடிவேலு நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் தெனாலிராமன். ஏற்கனவே ட்ரெய்லரும், பாடல்களும் நம் மனதைக் கவர்ந்துவிட்டன. படமும் நம் எதிர்பார்ப்பை ஈடு செய்ததா என்று பார்ப்போமா!!

மன்னராக ஒரு வடிவேலு. அவரது நவரத்தின அமைச்சர்களான ஒன்பது பேரும் வில்லன் ராதாரவியுடன் இணைந்துகொண்டு, நாட்டையே குட்டிச்சுவராக்குகிறார்கள். இது ஏதும் அறியாத மன்னன் அந்தப்புரத்தில் மனைவிகளோட லயித்து இருக்கும்போது, தெனாலிராமனான இன்னொரு வடிவேலு மந்திரியாக வருகிறார். பிறகு அவர் எப்படி மன்னனைத் திருத்தி மந்திரிகளிடம் இருந்து காத்து, இளவரசியை லபக்குகிறார் என்பதே கதை.

ஒன்பது மந்திரிகளும் சீன அரசிடம் நமது நாட்டை வியாபாரத்துக்கு திறந்துவிட ஒப்புக்கொள்வதுடன் படம் ஆரம்பிக்கிறது. மன்னர் ஒரு மக்கு என்பதையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அப்பாவியான மன்னர் நாடு நலமாக இருப்பதாக மந்திரிகள் சொல்வதை நம்பிக்கொண்டு அந்தப்புரத்தில் 36 மனைவிகளுடன் ஜாலியாக இருக்கிறார். சீனப்பயணத்தில் ஒரு நல்ல மந்திரி சீன வில்லனால் கொல்லப்பட, அந்த பதவிக்கு யாரைப் போடுவது என போட்டி நடக்கிறது. தெனாலிராமன் ஜெயித்து மந்திரியாக உள்ளே நுழைகிறார். அவரை ஜெயிக்க விடாமல் தடுக்க, மந்திரிகள் போராடுவதும் வடிவேலு அதையும் மீறி ஜெயிப்பதும் கலகலப்பான காட்சிகள்.

தொடர்ந்து தெனாலிராமனின் புத்திசாலித்தனத்தில் மன்னரும் இளவரசியும் மயங்குகிறார்கள். மன்னர் ஏதாவது டெஸ்ட் வைப்பதும் தெனாலிராமன் ஜெயிப்பதுமாக கலகலப்பூட்டும் காட்சிகளுக்கு இடையே, மன்னரைத் திருத்தும் வேலைகளும் நடக்கின்றன. ஆனாலும் மந்திரிகள் தெனாலிராமன் மேல் பழி சுமத்தி, அரண்மனையை விட்டே விரட்டுகிறார்கள். மீண்டும் மன்னரும் தெனாலிராமனும் இணைந்தார்களா, மன்னர் திருந்தினாரா என்பதை சுவையாக ஆனால் ஸ்லோவாகச் சொல்லி இருக்கிறார்கள்.

தெனாலிராமன் கதைகளை ஏற்கனவே படித்தவர்களுக்கு வடிவேலு எப்படி சமாளிப்பார் என்பதை எளிதாக யூகிக்க முடியும் என்பது தான் படத்தின் பலவீனம். ஆனாலும் வடிவேலு தனது மேனரிசத்தாலும் டயலாக் டெலிவரியாலும் சமாளிக்கிறார். புலிகேசி பாணியில் மக்களைக் கவனிக்காத மன்னர் + போராளி கான்செப்ட்டையே தெனாலிராமன் எனும் தேன் தடவி சொல்லியிருக்கிறார்கள். புலிகேசி அளவிற்கு சிரிக்க வைக்கும் காட்சிகள் அதிகம் இல்லை.(இருக்கின்றன, ஆனாலும் அந்த அளவிற்கு சிரிப்பு வரவில்லை). இந்திரலோகத்தில் அழகப்பன் அளவிற்கு மோசம் இல்லை, புலிகேசி அளவிற்கு டாப்பும் இல்லை.

கதை கொஞ்சம் சீரியஸ் ஆனாலே ஃப்ளாஷ்பேக் போட்டு, மன்னர்-தெனாலி விளையாட்டுக்குப் போய் நம்மை ரிலாக்ஸ் பண்ணிவிடுகிறார்கள். நல்ல உத்தி.

வடிவேலு: பொதுவாகவே நடிகர்கள் கொஞ்சம் கேப் விட்டு நடிக்க வந்தால், பழைய ஈர்ப்பு போய்விடும். ஆனால் இதில் வடிவேலு அப்படியே திரும்பி வந்திருக்கிறார். மன்னராகவும் தெனாலிராமனாகவும் நடிப்பு+நகைச்சுவையில் நன்றாகவே வித்தியாசம் காட்டி கலக்குகிறார். ஹீரோயினுக்கு அப்பாவாகவும் ஜோடியாகவும் நடிக்க அதிக துணிச்சல் வேண்டும்! தோற்றத்தில் பெரிய வித்தியாசம் இல்லாவிட்டாலும், மேனரிசங்களால் சமாளித்துவிடுகிறார். இரு கேரக்டர்களில், குழந்தைகளுடன் ஒளிந்து விளையாடுகின்ற, ஒவ்வொரு முறையும் வெவ்வேறு மனைவியுடன் வரும் மன்னரே நம்மை அதிகம் கவர்கிறார்.

மீனாட்சி தீட்சித்: வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்க ஒத்துக்கொண்டதே பெரிய விஷயம். இதில் அவரை குறை சொல்வது பாவம்…..எப்போதும் கலகலப்பாக இருக்கும், மந்திரி மேல் மையல் கொள்ளும் இளவரசி வேடத்திற்கு கச்சிதமாகப் பொருந்துகிறார். இது குழந்தைகள் படம் என்ற தோற்றம் வந்துவிடக்கூடாது என்பதால் படம் முழுக்க தொப்புளுடன் கிளிவேஜ் தரிசனம். அத்தான் என்று கட்டிப்பிடித்தாலும் அப்பா என்று கட்டிப்பிடித்தாலும் கிளி தரிசனம் தவறாமல் கிட்டுகிறது!

சொந்தபந்தங்கள்: மந்திரிகளில் மனோபாலா தான் டாப். வழக்கம்போல் அதிராமல் பேசி சிரிக்க வைக்கிறார். காமெடி வில்லன்களாகவே ஒன்பது பேரும் வருகிறார்கள். குறுநில மன்னராக வரும் ராதாரவி பொருத்தமான தேர்வு. இவரை விட்டால் நாசர் தான். தேவதர்ஷிணி நல்ல நகைச்சுவை நடிகையாக் ஃபார்ம் ஆகிவிட்டார். டயலாக் டெலிவரி அட்டகாசம். ஹீரோயினின் அம்மாவாக ஒரு காட்சியில் வரும் அந்த ஆண்ட்டி, செம எக்ஸ்பிரசன்.

டெக்னிக்கல் டீம்: வடிவேலு புறாவை பறக்கவிட்டு நடந்துவரும் ஒரு ஷாட் இருக்கிறது பாருங்கள்..பின்னிவிட்டார்கள். ஒரு மாஸ் ஹீரோவுக்கு ஓப்பனிங் சீனாக வைக்கலாம். அவ்வளவு அழகு அந்த ஷாட். (படத்தில் இடையில் வருகிறது.) ராம்நாத் ஷெட்டியின் ஒளிப்பதிவு அருமையிலும் அருமை. தியேட்டரில் வசனங்கள் அற்ற அந்த ஒரு நிமிட ஷாட்டுக்கு கைதட்டல் கிடைத்தது. படத்தில் கலர்ஃபுல்லான ஆர்ட் டைரக்சன். புலிகேசி போல் இல்லாமல் இதில் அரண்மனையை வண்ணமயமாக உருவாக்கியிருக்கிறார்கள். பார்க்க நன்றாக இருக்கிறது.

நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- ஸ்லோவான முதல்பாதி
- பழகிய தெனாலிராமன் ஜோக்ஸ், வேறு நகைச்சுவை பெரிதாக இல்லாதது
- ஆரம்பம் முதல் இறுதிவரை யூகிக்க வைக்கும் திரைக்கதை. பெரிய ட்விஸ்ட் எதுவும் இல்லாமல் இருப்பது ஒரு குறை.

பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- வடிவேலு…வடிவேலு..வடிவேலு
- ஆரூர்தாஸின் அற்புதமான வசனங்கள்
- மன்னருக்கும் தெனாலிராமனுக்கும் உருவாகும் நட்பை அழகாக திரையில் கொண்டு வந்தது
- மன்னரின் குழந்தைத்தனத்தை ரசிக்கும்படி சொன்னது
- எதிர்பாராமல் வந்து விழும் ‘நார்மல்’ தமிழ் நகைச்சுவை வசனங்கள்.
- ஃபைட் சீன் இல்லாமல் படத்தை எடுத்தது
- இமானின் பாடல்கள். ‘ஆணழகு’ பாடலும் நெஞ்சே பாடலும் கேட்கவும் பார்க்கவும் நன்றாக இருக்கின்றன.


பார்க்கலாமா? : குடும்பத்துடன் ஒருமுறை பார்க்கலாம். அதிகம் எதிர்பார்க்காமல் சென்றால், மூன்று வருடங்கள் கழித்து வந்திருக்கும் வடிவேலுவை ரசிக்கலாம். (நன்றி: நிலவைத்தேடி இணையம்)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தெனாலிராமன் சினிமா விமர்சனம் Empty Re: தெனாலிராமன் சினிமா விமர்சனம்

Post by சிவா Sat Apr 19, 2014 3:33 pm

விமர்சனம் மிகத்துல்லியமாக உள்ளது. நன்றி திரு சாமி.

இன்னும் படம் பார்க்கவில்லை. இதைப் படித்ததும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தெனாலிராமன் சினிமா விமர்சனம் Empty Re: தெனாலிராமன் சினிமா விமர்சனம்

Post by ஜாஹீதாபானு Sat Apr 19, 2014 3:35 pm

சிவா wrote:[link="/t109551-topic#1058971"]விமர்சனம் மிகத்துல்லியமாக உள்ளது. நன்றி திரு சாமி.

இன்னும் படம் பார்க்கவில்லை. இதைப் படித்ததும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது.

உங்க பெயர் ஏன் கிலிட்டரில் இல்லை
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தெனாலிராமன் சினிமா விமர்சனம் Empty Re: தெனாலிராமன் சினிமா விமர்சனம்

Post by Muthumohamed Sat Apr 19, 2014 3:50 pm

நல்ல விமர்சனம் நன்றி நன்றி நன்றி



தெனாலிராமன் சினிமா விமர்சனம் Mதெனாலிராமன் சினிமா விமர்சனம் Uதெனாலிராமன் சினிமா விமர்சனம் Tதெனாலிராமன் சினிமா விமர்சனம் Hதெனாலிராமன் சினிமா விமர்சனம் Uதெனாலிராமன் சினிமா விமர்சனம் Mதெனாலிராமன் சினிமா விமர்சனம் Oதெனாலிராமன் சினிமா விமர்சனம் Hதெனாலிராமன் சினிமா விமர்சனம் Aதெனாலிராமன் சினிமா விமர்சனம் Mதெனாலிராமன் சினிமா விமர்சனம் Eதெனாலிராமன் சினிமா விமர்சனம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தெனாலிராமன் சினிமா விமர்சனம் Empty Re: தெனாலிராமன் சினிமா விமர்சனம்

Post by சிவா Sat Apr 19, 2014 4:59 pm

ஜாஹீதாபானு wrote:[link="/t109551-topic#1058972"]
சிவா wrote:[link="/t109551-topic#1058971"]விமர்சனம் மிகத்துல்லியமாக உள்ளது. நன்றி திரு சாமி.

இன்னும் படம் பார்க்கவில்லை. இதைப் படித்ததும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது.

உங்க பெயர் ஏன் கிலிட்டரில் இல்லை
ஆம் அக்கா, இப்பொழுதுதான் நானும் கவனித்தேன்! எங்கோ எதையோ மாற்றம் செய்து என்பெயர் இப்படி ஆகிவிட்டது! சரி செய்ய வேண்டும்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தெனாலிராமன் சினிமா விமர்சனம் Empty Re: தெனாலிராமன் சினிமா விமர்சனம்

Post by சிவா Sun Apr 20, 2014 1:57 am


தினமலர் விமர்சனம்

இடையில் இரண்டு வருடங்கள் தன் அதிரடி அரசியல் முடிவுகளால், திரையில் காமெடி நடிகராகக் கூட காலம் தள்ள முடியாமல் காணாமல் போயிருந்த வைகைப்புயல் வடிவேலு, இம்சை அரசன் 23ம் புலிகேசி, இந்திரலோகத்தில் நா.அழகப்பன் ஆகிய படங்களுக்கு அப்புறம் கதாநாயகராக நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் தெனாலிராமன்.

36 மனைவிகள், 52 குழந்தைகள் என பிரமாண்ட குடும்பத்துடன், ஒன்பது அமைச்சர்களின் கட்டுப்பாட்டில், விகடநகரத்தை விட்டுவிட்டு அரண்மனையிலும், அந்தப்புரத்திலும் குதூகல வாழ்க்கை வாழ்ந்து வரும் மன்னர் ஒரு வடிவேலு! மன்னர் வடிவேலுவுக்கு தெரியாமல் விகடநகரம் நாட்டையே கபளீகரம் செய்ய நினைக்கும் சீன வணிகர்களுக்கு, துணை போகும் குறுநில மன்னர் பரஸ்பரம் ராதாரவியுடன், நகருக்குள் சீன வணிகர்களை அனுமதித்து, கொள்ள லாபம் பார்க்கின்றனர் மீதி எட்டு அமைச்சர்களும்!

மன்னர் வடிவேலுக்கு அமைச்சர்கள் விஷயத்தில் நவரத்தினங்கள் எனும் 9ம் எண் தான் ராசி என்பதால், ஒருநாள் அந்த அமைச்சர் பதவிக்கு, இந்த ஊழல் எட்டு அமைச்சர்கள் புடைசூழ, மன்னர் வடிவேலு தலைமையில் நேர்முகத்தேர்வு நடைபெறுகிறது. எட்டு அமைச்சர்களின் சதியையும் மீறி அதில் கலந்து கொண்டு தன் புத்திசாலிதனத்தால் வெற்றி பெறுகிறார் தெனாலிராமன் எனும் மற்றொரு வடிவேலு!

ஒழுங்காக ராஜ்ஜியம் செய்யாமல், சீன வணிகர்களுக்கு இடம் கொடுத்து, மக்களை பசி பட்டினியில் வாடவிடும் மன்னர் வடிவேலுவை கொல்லும் நோக்குடன் அந்த ராஜ்ஜியத்துக்குள் அமைச்சராக அடியெடுத்து வைக்கும் புரட்சிபடை வீரராக தெனாலிராமன் வடிவேலு., ஒரு சில நாட்களிலேயே மன்னர் வடிவேலு வெகுளி..., அவரை ஆட்டி வைப்பது அந்த எட்டு அமைச்சர்களும் தான்... என்பதை தன் புத்திசாலிதன்தால் கண்டுபிடித்து, சீன வணிகர்களிடமிருந்தும், சுயலாபம் ஒன்றையே நோக்கமாகக் கொண்ட துஷ்ட, அஷ்ட அமைச்சர்களிடமிருந்தும், ராஜ்ஜியத்தையும், ராஜாவையும் காபந்து செய்வதும், புதிதாக தானும், மன்னரும் உள்ளிட்ட ஒன்பது அமைச்சர்களை உழைக்கும் உண்மைவர்க்கத்தில் இருந்து பொறுக்கி எடுத்து, விகடநகரத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதும் தான் தெனாலிராமன் படத்தின் கதை, களம் எல்லாம்! இதனூடே தெனாலிராமன் வடிவேலுவுக்கும், மன்னர் வடிவேலுவின் மூத்த மகள் மாதுளை எனும் மீனாட்சி தீக்ஷித்துக்கும் இடையேயான காதலையும், கசிந்துருகலையும் கலந்து கட்டி, காமெடியாக, கலர்புல்லாக கதை சொல்லி இருக்கிறார் இயக்குநர் யுவராஜ் தயாளன்.

தெனாலிராமன், வெகுளி மன்னன், என இருவேறு பாத்திரங்களில் வடிவேலு வழக்கம்போலவே கம்பீரமாக கலகலப்பு ஊட்டியிருக்கிறார். அதிலும் தெனாலிராமனாக வடிவேலு செய்யும் புத்திசாலித்தன (பானைக்குள் வந்த யாதை உள்ளிட்ட தெனாலிராமன் கதைகள் ஏற்கனவே நமக்கு தெரியும் என்பதால்..) சேட்டைகளை விட, வெகுளி மன்னராக, முட்டாள் தனமாக, 36 மனைவிகளுடனும், 52 குழந்தைகளுடனும் மன்னர் வடிவேலு பண்ணும் லூட்டிகள் செம காமெடி! காமெடி நடிகர் என்றாலும் சில இடங்களில் இரண்டு வடிவேலுகளும் கதாநாயகர்களையே மிஞ்சும் விதத்தில் செய்திருக்கும் செயற்கரிய காரியங்களுக்காகவும், கொடுக்கும் லுக்குகளுக்காகவும் தெனாலிராமன் படத்தை ஒன்றுக்கு இரண்டு முறை பார்க்கலாம்! ஒருசில இடங்களில் மன்னர் வேடங்களில் ஜொலித்த எம்.ஜி.ஆரை மாதிரி தெரிகிறார் வடிவேலு என்பது இப்படத்திற்கு பெரிய ப்ளஸ!

மாதுளையாக வரும் கதாநாயகி மீனாட்சி தீக்ஷித்தும், அவரது கவர்ச்சியும் ஆகட்டும், மற்ற 36 மனைவிகளாகட்டும், பரஸ்பரம் ராதாரவி, ஜி.எம்.குமார், சண்முகராஜ், பாலாசிங், கிருஷ்ணமூர்த்தி, நமோ நாராயணன், ஜோ மல்லூரி, சக்திவேல், செல்லதுரை, சந்தானபாரதி உள்ளிட்ட அமைச்சர்கள் ஆகட்டும், ராஜேஷ், புரட்சிபடை போஸ் வெங்கட், திருட்டு கும்பல் தலைவன் பெசண்ட் ரவி, மனிதகறி மன்சூர் அலிகான், கிங்காங், தேவதர்ஷினி உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருப்பது தெனாலிராமன் படத்திற்கு மேலும் அழகு சேர்த்திருக்கிறது.

புரட்சிப்படை தலைவர்கள் காலம் கணிந்து வரும் வரை ஒழிந்து கொண்டு இருப்பது கூட தவறில்லை... எனும் தமிழ் உணர்வுள்ள ஆரூர் தாஸின் வசனவரிகள், டி.இமானின் எழுச்சியூட்டும் இசை, ராம்நாத் ஷெட்டியின் உயிரோட்டமுள்ள ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன், யுவராஜ் தயாளனின் எழுத்து-இயக்கத்தில், ஒருசில குறைகள் இருப்பினும் தெனாலிராமன் வெறும் சிரிப்பு படம் மட்டுமல்ல, இன்றைய காலக்கட்டத்திற்கும் ஏற்ற சிந்தனையை தூண்டும் படமும் கூட.

ஆகமொத்தத்தில், தெனாலிராமன் - சிறுவர்களுக்கும், ஏன்? பெரியவர்களுக்கும் கூட திகட்டாத கருத்துள்ள காமெடி மாமன்(னன்)!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தெனாலிராமன் சினிமா விமர்சனம் Empty Re: தெனாலிராமன் சினிமா விமர்சனம்

Post by krishnaamma Sun Apr 20, 2014 1:13 pm

நல்ல விமர்சனம்தெனாலிராமன் சினிமா விமர்சனம் 1571444738 அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தெனாலிராமன் சினிமா விமர்சனம் Empty Re: தெனாலிராமன் சினிமா விமர்சனம்

Post by பாலாஜி Sun Apr 20, 2014 2:19 pm

சிறப்பான விமர்சனம் .... தெனாலிராமன் சினிமா விமர்சனம் 103459460 தெனாலிராமன் சினிமா விமர்சனம் 1571444738 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தெனாலிராமன் சினிமா விமர்சனம் Empty Re: தெனாலிராமன் சினிமா விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum