ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரிகாசன் கவிதைகள் 1/10 ( புதியன 1)

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கிரிகாசன் கவிதைகள்  1/10 ( புதியன  1) Empty கிரிகாசன் கவிதைகள் 1/10 ( புதியன 1)

Post by kirikasan Fri Apr 18, 2014 12:45 am


1. மாற வேண்டுமா?
(அன்றும்)
நீசிரிக்கப் பொன்னிலங்கும் நிர்மலவானம் - இன்று
யார்சிரித்துப் பூத்ததிந்த வெண்ணிலவோரம்
வாய்விரித்துப் பூக்குமந்தப் பூக்களின் பாரம் - உந்தன்
வாழ்க்கை யின்று காணுதடா வானவில்லாகும்
காய் பழுத்துத் தூங்குமரம் கண்டிடும் நாளும் - பல
காக்கையுடன் குருவிகளும் கலகலப்பாகும்
நோய்பிடித்த ஏழையெனும் நீர்பொழி விழிகள் - துயர்
நெஞ்சுணர்வில் வேகிவிடும் நேரெதிராயின்

தாய் உரைத்து பாடம் சொன்னார் தமிழினி தென்றாய் - பின்
தாகத்துக்காய் ஏடுகற்றே தமிழ்ப்பலம் கொண்டாய்
மாயவளோ தூரம்நின்றோர் மண்ணிடை வரைந்தாள் - இன்று
மாறுதலை ஈந்தவளோ மந்திரமானாள்
தீ குளிரக் கண்டதுண்டோ தென்றலும் பாடும் - அந்த
தேவதையின் வாழ்த்தினிலே தேனதும் ஊறும்
ஏய் நிறுத்து என்பதின்றி இளமையின் இன்பம்- இனி
ஏட்டினிலே எழுதும் வகை இன்சுவையாகும்

(இன்றும்)
ஆற்றினிலே வெள்ளமென அன்பது பாய- நாம்
அத்தனை தான் சத்தியத்தா யணைப்பினில் தூங்கி
சேற்றினிலே நின்றிடினும் சீர்புகழோங்க - நிற்கச்
சிரித்தென்ன விதி பகையின் சேர்பலமோங்கி
மாற்றமென மண்ணிலெமை மாபெரும் தேசம் - பல
மனமெடுத்தே குரல்நெரித்தும் மழலை யென்றாட்டி
காற்றினிலே நேர்மைதனை கரைத்தும் மெய்யோ - இது
கற்பனைக்கு ஏற்றதன்றிக் கண்டிடலாமோ

தீவெடித்துப் போட்டதெல்லாம் எங்களின் வானம் - முற்றும்
தீய்ந்ததென்ன பொன்னுயிர்கள் பொய்களும் மாயம்
சேய்துடித்துச் சாய்ந்திடவே செய்தவள் கண்டும் - வாய்
தேம்பியழ விதி மறித்து தீயதைச்செய்யும்
பேயிரங்கும் பிறவி யென்றார் பேதைகள் கெஞ்ச - வன்மை
பேரிடியாய் பிணமெரிக்கும் பூமியென்றாக
ஏய் துடித்து எழவதுந்தன் விதியெனில் இன்பம் - இனி
ஏழைகளின் கனவு கொள்வாய் இதயத்தில் வஞ்சம்

**************
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

கிரிகாசன் கவிதைகள்  1/10 ( புதியன  1) Empty Re: கிரிகாசன் கவிதைகள் 1/10 ( புதியன 1)

Post by kirikasan Fri Apr 18, 2014 12:54 am

2. எனக்குபிடித்த இயற்கை

மலைமுகட்டில் நிலவு நின்று மன்னவனாம் புவியை
மறைமுகிலின் திரைவிலக்கி மெல்ல எட்டிப்பார்க்கும்
கலைவடியும் ஒளிபரந்து காண மரத் திலைகள்
கண்டபடி கதையுரைத்து கலகலத்துச் சிரிக்கும்
அலையெழுந்ததே ஆர்ப்பரிக்கும் அடக்கமற்ற பெண்ணாய்
அதிவிரைந்து கரையடைந்தும் அல்லலுற்று மீளும்
குலை யிழந்த கனியெனவே கொள்ளொருவர் இன்றி
கொடுமை சின்னஞ்சிறு வயதர் குழம்பி மனம்சோரும்

தனமிழந்த ஒருவன்போலத் தாழ்ந்து வீசுங்காற்று
தனிமையிலே இனிதிலையென் றுடல் தடவி ஓடும்
மணமெழுந்த நிலையிலாடி மயங்க எம்மை தொட்டும்
மதுவின் போதை இல்லையென்று புழுதியள்ளி வீசும்
கனமிழந்த நெஞ்சினோடு கனிவுவரும் என்று
கருதிவான வெளியிலோடிக்கலையும் மேகம் சொல்லும்
பனியெழுந்து குளிர்இரவில் பச்சைப்புல்லைச் சேரும்
பகல் பிறக்கப் பனியுலர்வில் புல்நுனி நீர் சிந்தும்

குளிர்ச் சுனையும் கொடிமலரும் குங்குமத்து வண்ணம்
கொண்ட மலர்த் தாமரையும் குள அலையின் சத்தம்
வெளியலையும் வீசுமிளம் விண்பரந்த காற்றும்
விடுதலையென் றுலகமெங்கும் வலம்வருவெண் முகிலும்
தளிர் அழகும் தவளைகளும் தங்கும் எழிற்சோலை
தனிமையிலும் தருங்கனவும் தாவும்மனங் காணும்
ஒளிர்கனவும் உரைதமிழும் உன்னதமாம் கண்டேன்
உலகமதில் இயற்கைதனை உரைக்கும் `கவி மேன்மேல்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

கிரிகாசன் கவிதைகள்  1/10 ( புதியன  1) Empty Re: கிரிகாசன் கவிதைகள் 1/10 ( புதியன 1)

Post by சிவா Fri Apr 18, 2014 7:09 am

அன்றும் - இன்றும் கவிதை தென்றலுக்குப் பிறகு புயல் என்பார்களே, அதுபோல் மனதை வாட்டுகிறது!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கிரிகாசன் கவிதைகள்  1/10 ( புதியன  1) Empty Re: கிரிகாசன் கவிதைகள் 1/10 ( புதியன 1)

Post by T.N.Balasubramanian Fri Apr 18, 2014 9:01 pm

நீண்ட இடைவெளி மறைய
மீண்ட சொர்க்கமென மனதை
தீண்டிய ஈர்த்திடும் இயற்கை
வேண்டிய அளவு மாறாதிருக்க
வேண்டிடுவோம் உம் கவிகளை .

நலமா kirikaasan !

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கிரிகாசன் கவிதைகள்  1/10 ( புதியன  1) Empty Re: கிரிகாசன் கவிதைகள் 1/10 ( புதியன 1)

Post by kirikasan Sat Apr 19, 2014 12:28 pm

ஐயா தங்கள் அன்புக்கு நன்றிகள்

கண்களில் திரையிடும் நீர் சுரந்தே உங்கள்
கருத்தினைக் காண்கையிலே
எண்ணங்கு தூகலித் திதயமெலாம் ஒரு
இடியில்லை மின்னெழுதே
வண்ணமுடன் பல பறவைகளும் அந்த
வானெழும் பரவசமும்
மண்ணிலிவன் இன்று காண்பதென்ன ஒரு
மலர் வனம் பூக்கிறதே

அண்ணளவாய் பல காலங்களை நான்
அகமெடு புகழேங்கி
எண்ணமதில் புகை அனல் பிடித்தே மன
மேங்கிட தவித்தவனாய்
தண்ணிலவும் உடல்தழுவி வரும் இளந்
தென்றலும் திரிவதுவாய்
கண்ணிழந்தே புவி உலவிவந்தேன் அதில்
கண்டது பலவுமுண்டு

இன்று மனம் அதி சோர்வுறவே இவன்
இழந்தது ஈகரையென்
றன்புடனே வளர் தாய் எனவும் இவ்
வறிவெழு திருவிடத்தை
கன்றுதனும் தாய் தனை நினைந்தும் தன்
குரலெழ ம்மா என்றே
தென்புறவே வழி திரும்புதலாய் வரும்
தினமிது ஆனந்தமே

அன்புடன் கிரிகாசன்


Last edited by kirikasan on Sat Apr 19, 2014 12:51 pm; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

கிரிகாசன் கவிதைகள்  1/10 ( புதியன  1) Empty Re: கிரிகாசன் கவிதைகள் 1/10 ( புதியன 1)

Post by kirikasan Sat Apr 19, 2014 12:44 pm

3/ காலம் என்பதோ?

வட்ட வட்டமாய் அலைகள்
வாவிமீது ஓடியென்னை
வாவென் றோரக் கண்ணைக் காட்டி.
வேகங் கொள்ளுதோ
தட்டத் தட்டப் பூஉதிர்த்துத்
. தென்றல்தொட்டதால் மரங்கள்
தேடி என்னில் பூ எறிந்து
சேவைசெய்ததோ

கட்டக் கட்டக் கற்பனைகள்
. காணும் வானிலேறிச்சென்று
காட்சியின்றி உள்ளம்கொள்ளை
. கொள்ளும் காற்றிதோ
எட்ட எட்ட நீர் வளைந்து
. என்னை நோக்கி ஒடிவந்து
இன்பமென்று காலைத் தொட்டு
. அஞ்சிவீழுதோ

முட்டமுட்ட நீர்வழிந்து
. மோகங்கொண்ட பார்வை கெட்டு
மங்கை வானம் ஊற்றுங் கண்ணீர்
. மாரியானதோ
விட்டவிட்ட அன்புபாடம்
. வித்தையென்று அங்கம்தொட்டு
வீசுந் தென்ற லும் தழுவ
. நாணம் கெட்டதோ

பொட்டுப் பொட்டு வைத்த பூவை
. பூமுடிந்த கூந்தல்நீவி
புன்னகைத்த தாக மின்னற்
. பூவெழுந்ததோ
நட்ட நட்ட மாயிழந்து
. நன்மைவிட்டும் இன்னற்பட்டு
நான்விழுந்தபோதும் அன்னை
. தொட்டெடுத்தளோ


திட்டதிட்ட நேர்நடந்து
. தேரிலேறி வான்கடந்து
தேகமீது ஆசைகொண்டு
. காலம் நிற்குதோ
சட்டமில்லை நீதிநேர்மை
. சற்றுமில்லை இராச்சியங்கள்
சுற்றுமில் சுதந்திரத்தை
. ஏன் வெறுத்ததோ

நிட்டைமௌனம் நீள்படுக்கை
. நெஞ்சில்மோகம் கொண்டு நீயும்
நீசர் எம்முடல் பறிக்க
. நீளுறக்கமோ
இட்ட இட்ட சாபெமென்றும்
. எண்ணி யுள்ளம் தானடங்கி
இல்லை யென்றும் வாழ்வதென்
. றிரங்கி நிற்பதோ

மொட்டு மொட்டுப் பூஅலர்ந்து
. முன்னிருக்க ஓடிவந்து
முட்டமூச்சு வாங்கி வண்டும்
. தேனெடுக்கவோ
கட்டைகட்டையாக வெட்டிக்
. கன்னம்பிய்த்துக் கண்பிடுங்க
காதற்பெண்டிர் மேனிகொல்லக்
கண்ணுறக்கமோ

சுட்டுச்சுட்டுப் பல்விதத்தில்
. தூரவென்று மெய்யெறிந்து
தொட்டதில்லை நாங்களென்னத்
. தோள் சிறுக்கவோ
கட்டிக் கட்டிஆண்ட தேசம்
. கையிழந்து போனபோது]
கட்டில்மீது காண்சுகங்கள்
. காலம் என்பதோ?
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

கிரிகாசன் கவிதைகள்  1/10 ( புதியன  1) Empty Re: கிரிகாசன் கவிதைகள் 1/10 ( புதியன 1)

Post by kirikasan Mon Apr 28, 2014 6:06 pm

4 .    எழுவாய் இருந்திடில் பயனிலை


பணிந்திடல் வேண்டாம் தமிழா இதுவே
பயனிலை விடு நீ எழுவாய்
தணிந்திடில்  நாளை தலமுறை வீரத்
தகைமை யிழந்தார் எழுவாய்
அணிந்திடு வீரம் அறிவொடு திறமை
அலையென,எழுவாய் எழுவாய்
வணங்கிடில் உந்தன் வாழ்வது இழியும்
வரும்பகை எதிர் கொண்டெழுவாய்


துணிந்திடல் வேண்டும் துயரமும் கொண்டு
தூங்குதல் விட்டே எழுவாய்
மணிமகுடம் உன்முடியென கொள் வரை
மூச்சினை கொண்டே எழுவாய்
அணிபடை கொண்டோர் அரசது வேண்டும்
அதனையும் காண்பாய் எழுவாய்
பணிந்திட வாழுன்  பலமது போகும்
பயமிலை எழுவாய் எழுவாய்

ஒரு துளியேனும் உறக்கமும் இல்லை
உயரிய நோக்கம் எழுவாய்
தரும் சுகபோதை தருமங்களல்ல
தாழ்வது விட்டே எழுவாய்
சிரமது தாழும் நிலையை விடுத்து
சீறியே புயலாய் எழுவாய்
இரங்குதல் கொண்டே இருந்தது போதும்
எடுகை உயர்ந்திட முயல்வாய்  


குனிந்திடக் குட்டும் குவலயமீதே
கூடிய மொழிகள் யாவும்
தனிநிலம் கொண்டே திமிருடன் வாழும்
தகமையைக் காண்பாய் எழுவய்ய்
நுனியினில் தன்மை உயர்திணை கொண்டே
நான் எனதென்றிடும் மொழிகள்
இனி மறந்தேனும் எழில் தமிழ் குறைவென்
றெண்ணுதல் விட்டே எழுவாய்

எடு நடைபோடு ஏறென ஓடு
எதிரியை நட்பென் றேற்காத்
தொடு கணை போலும் தோல்வியைப் பகையின்
துணைநலம் ஆக்காய், துயரம்
விடு எமதல்ல வீரத்தின்மைந்தர்
வீறுகொண்டே தமிழ்பேசு
தடு எவர்தானும் தமிழ்குறை வென்றால்
தவிர் தமிழ் போற்றச் செய்வாய்

**************
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

கிரிகாசன் கவிதைகள்  1/10 ( புதியன  1) Empty Re: கிரிகாசன் கவிதைகள் 1/10 ( புதியன 1)

Post by முகம்மது ஃபரீத் Mon Apr 28, 2014 6:15 pm

அருமை... இதுபோல கவிதைகளை என்னால் மூன்று நான்கு முறை படித்தால் தான் புரிந்துகொள்ள முடிகின்றது  கிரிகாசன் கவிதைகள்  1/10 ( புதியன  1) 745155


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

கிரிகாசன் கவிதைகள்  1/10 ( புதியன  1) Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

கிரிகாசன் கவிதைகள்  1/10 ( புதியன  1) Empty Re: கிரிகாசன் கவிதைகள் 1/10 ( புதியன 1)

Post by kirikasan Wed Apr 30, 2014 12:52 am

முகம்மது ஃபரீத் wrote:[link="/t109473-1-10-1#1060471"]அருமை... இதுபோல கவிதைகளை என்னால் மூன்று நான்கு முறை படித்தால் தான் புரிந்துகொள்ள முடிகின்றது  கிரிகாசன் கவிதைகள்  1/10 ( புதியன  1) 745155

நன்றிகள் முகம்மது ஃபரீத்

தமிழ் இனியது தொடர்ந்து படியுங்கள்1 நன்றிகள்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

கிரிகாசன் கவிதைகள்  1/10 ( புதியன  1) Empty Re: கிரிகாசன் கவிதைகள் 1/10 ( புதியன 1)

Post by kirikasan Wed Apr 30, 2014 1:17 am

சோர்ந்து போகிறேன்

சின்னச் சின்ன வாசப்பூக்கள் தொட்டுப் பார்க்கிறேன் - அதில்
சேர்ந்தமென் னிதழ்கள் கண்டும் சோர்ந்து போகிறேன்
என்ன வாழ்வில் இன்பமென்றே ஏங்கி நிற்கிறேன் - பூவில்
ஏது மிச்ச முண்டு நாளை எண்ணிப் பார்க்கிறேன்
தின்னவென்று தேகம்கொண்டு என்ன செய்கிறேன் - நாளும்
தீமைநாடித் துய்த்து மேனி தீய்ந்துபோகிறேன்
நன்மையேது வாழ்வில் என்றும் துன்பமே வதம் - இங்கு
நானும்வாழ வந்ததென்ன சோர்ந்துபோகிறேன்

வட்டமான பொட்டுப் போலும் வான வெண்ணிலா - அது
வந்துபோகும் என்ன உண்டு வாடிப் போகிறேன்
சுட்டகாலை தோன்றும் அண்ட சூரியன்களும் - ஒன்றைச்
சுற்றும் பூமி கொண்டதிங்கு ஏனென் றெண்ணினேன்
வெட்டி வேலையற்றுத் தெய்வம் வீம்பில் செய்ததோ -இல்லை
விற்பனைக்கும் உட்படாத வீசும் குப்பையோ
கட்டிக் காக்க யாருமற்ற கேடுபெற்றதோ - இங்கு
காணும் மாந்தர் கட்டவிழ்த்த காட்டு மாக்களோ

மெட்டிகாலில் கொண்டமாதர் மின்னும் நேர்விழி - கொண்ட
மேனி என்ன நாய்களுண்ண போட்ட மச்சமோ
அட்டகாசமிட்டுக் கொல்ல ஆன வர்க்கமோ - தேசம்
யானை சென்ற பூவின் தோட்டம் ஆனதென்னவோ
விட்டதென்ன பூமியென்ப வேதனைகளின் - வான
வீதியோடும் சூனியத்தின் விம்பமானதோ
சொட்டி வீழ்வதென்ன நீதிக் கண்ணில் இரத்தமோ - இதை
சற்றும் கண்கள் காணவில்லை தெய்வ சக்தியோ

மொட்டலர்ந்த பூக்கள் தன்னை வெட்டிவீசிடும் - இந்த
மாயன் காலன் செய்வழக்கை உள்ளம் காண்பதோ
தொட்டிலிட்டுக் காத்தபிள்ளை தோள் வளர்ந்ததும் - இந்தத்
தூயமண்ணில் வேரறுத்து வீழச்செய்யவோ
மட்டி மா பெருத்தமூடன் மற்றவர்களும் - இந்த
மேதினிக்கு காவலிட்டு மேன்மை கொண்டிட
அட்டமாதிக் கெங்குமேகி ஆதியாம் தமிழ் என்றும்
அல்லலுற்றும் இன்னற்பட்டும் ஏழையாவதோ

சுட்டபொன்னும் சட்டியும் துலங்கும் தோற்றத்தில் - இங்கு
சுட்டதும் கலங்கி வீழும் தேகம் அல்லவோ
தட்டியும் அடித்தகத்தி கூர்மையாகிடும் - எம்மைத்
திட்டியு மழிக்கும் கூட்டம் தெய்வ சித்தமோ
முட்டியும் விழுத்தும் மாட்டில் அன்புகொள்ளவோ - கெட்ட
மூர்க்கரும் தமிழ்குலத்தை இல்லென்றாக்கவோ
கட்டியும் வதைக்கக் கைகள் கட்டிநிற்பதோ - இந்த
காதகர் தமிழ் இனத்தைக் கட்டியாள்வாரோ

குட்டியும் குழந்தைமேனி கொல்ல யாரிவர் - இந்தக்
கோலமும் எடுத்த வாழ்வில் குற்றம்யாரதோ
எட்டியும் இனம் அழிக்க ஏது மௌனமோ - இந்த
இன்னலை இங்கீந்தவர்க்கு இன்ப வாழ்வதோ
ஒட்டியும் ஒன்றாகி நட்பு கொண்ட பாவிகள் - இங்கு
ஏகமும் இடர்விதைக்க தெய்வம் காத்திடா
விட்டதேன் வியந்தும் பின்னர் சோர்ந்து போகிறேன் - மீண்டும்
வீரமும் விளைந்த வாழ்வை என்றுகாணுவேன்
******************
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

கிரிகாசன் கவிதைகள்  1/10 ( புதியன  1) Empty Re: கிரிகாசன் கவிதைகள் 1/10 ( புதியன 1)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum