ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by சிவா Today at 9:10 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நாளும் ஒவ்வொரு நாளும் ! நூல் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Go down

ஒரு நாளும் ஒவ்வொரு நாளும் !  நூல் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty ஒரு நாளும் ஒவ்வொரு நாளும் ! நூல் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Wed Apr 16, 2014 9:52 pm

ஒரு நாளும் ஒவ்வொரு நாளும் !

நூல் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன் !
kavithaiuravu@gmail.com

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

சுதா பதிப்பகம் ,420இ . மலர்க் குடியிருப்பு ,அண்ணா நகர் மேற்கு, சென்னை .6000040. விலை ரூபாய் 70.
.
திருநெல்வேலி அருகே உள்ள ஏர்வாடி என்ற பிறந்த ஊருக்கு பெருமைகள் சேர்த்து வருபவர் நூல் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன் அவர்கள் .பெயரோடு பிறந்த மண்ணை இணைத்துக் கொண்டவர் .

இவரை இராதா கிருஷ்ணன் என்றால் சிலர் மட்டுமே அறிவர் .ஆனால் ஏர்வாடியார் என்றால் இலக்கிய உலகில் அனைவரும் அறிவர். கவிஞர், எழுத்தாளர் ,கட்டுரையாளர் ,கவிதை உறவு ஆசிரியர், பேச்சாளர் இவை எல்லாம் விட எல்லோருடனும் அன்பாகப் பழகிடும் பண்பாளர் .பன்முக ஆற்றல் மிக்கவர் .என்னைப் போன்ற தன்னை விட இளையவர்களையும் நீங்கள் என்று மரியாதையாக அழைக்கும் உயர்ந்த குணம் உடையவர் .மகாகவி பாரதி போல எழுத்துக்கும் செயலுக்கும் வேறுபாடு இல்லாதவர் . நூலின் தன்னுரையில் எழுதி உள்ளதைப் பார்க்கும் போது கவிஞன் என்பதையே விரும்புகிறார் .

" நான் எழுத்தின் எல்லா வடிவங்களையும் முயற்சிக்கிறவன்.சிறுகதை ,நாடகம் ,கட்டுரை ,வானொலி உரைச்சித்திரம் ,நவீனம் என்றெல்லாம் எழுதி அவையெல்லாம் அறிந்தேற்கப் பட்டிருந்தாலும் ,நான் அதிகமாய் அறியப்பட்டிருப்பது கவிஞனாகத்தான் ."

நூலின் அட்டைப்பட வடிவமைப்பு உள்அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன . இந்த நூலை அவரது நண்பர் கவிஞர் தியாரூ அவர்களுக்கு காணிக்கை ஆக்கி நட்புக்கும் கவிதைக்கும் மேன்மை செய்து உள்ளார் .அறிஞர் அண்ணா கல்லூரி முன்னாள் முதல்வர் முனைவர் கா .ஆபத்துக்காத்த பிள்ளை அவர்களின் அணிந்துரை மிக நன்று .நூலின் பின் அட்டையில் பிரசுரமாகி உள்ள திரைப்படப் பாடல் ஆசிரியர் கவிஞர் பழனி பாரதி வாழ்த்துரை நன்று இந்த நூலில் 38 தலைப்புகளில் உள்ளன ..மரபுக்கவிதைகளும் உள்ளன. புதுக்கவிதைகளும் உள்ளன .நூலின் முதல் கவிதையிலேயே கவிதை எப்படி எழுத வரும் என்று வளரும் கவிஞர்களுக்கு பயிற்று விக்கும் விதமாக கவிதை உள்ளது .

எங்கிருந்து கவிதை ?

அழகினிலே மயங்கிடுங்கள் கவிதை ஊறும்
ஆத்திரமா .. கொதித்திடுங்கள் கவிதை பொங்கும்

பழகிடுங்கள் பலருடனே கவிதை தோன்றும்
பண்புகளால் ஈர்த்திடுங்கள் கவிதை பூக்கும்

அழத்தோன்றும் போதழுங்கள் கவிதை சிந்தும்
அன்பாலும் கவிதைவரும் அவ்வா றின்றி

எழுகின்ற கவிதை நீங்கள் படைப்ப தில்லை
இதயத்துள் இருந்துமையாள் செய்வ தாகும் !

கவிஞர் அனைவருக்கும் தமிழ்ப்பற்று உண்டு .தமிழ்ப்பற்று இருந்தால்தான் கவிஞர் .நூல் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி
எஸ் .இராதா கிருஷ்ணன் அவர்களுக்கும் தமிழ்ப்பற்று உண்டு. அதனால்தான் கவிதைகளை குற்றால அருவி போல கொட்டி வருகிறார் .அவரது தமிழ்ப் பற்றைப் பறை சாற்றும் கவிதை நன்று .

தமிழைப் போல இனிமையில்லை !

உலகத்தின் மிகப்பெரிய மொழிகளுக்குள்
உயர்தமிழே மிகச்சிறந்த மொழியென் பார்கள்

உலகத்தின் இன்பங்கள் யாவி னுக்கும்
உயர்த்தமிழே எப்போதும் உச்சமாகும் !

கலைமாமணி ஏர்வாடியாரின் வெற்றியின் ரகசியம் என்னவென்று யோசித்துப் பார்த்தால் எல்லோருடனும் அன்போடு பழகுவது .மிகப் பெரிய முக்கிய பிரமுகராக இருந்தாலும் , என் போன்ற வளரும் கவிஞராக இருந்தாலும் சமமாகவே அன்பு செலுத்துவார் .அவர் மதுரை வரும்போதெல்லாம் தமிழ்த் தேனீ இரா .மோகன் அய்யாவோடு சென்று வரவேற்று சந்தித்து உரையாடி மகிழ்வேன். உரையாடும் நிமிடங்களில் அன்பு மழை பொழிவார்கள் .பல அரிய செய்திகளும் பகிர்வார்கள் .மதுரை புகைப்படக் கலைஞர்
திரு .முருகன் அவர்களை சகோதரர் போல நடத்துவார். எழுத்தாளர் கவிஞர் இதழ் ஆசிரியர் என்ற கர்வம் துளியும் இல்லாத இனிமை மனிதர்

வாழ்க்கையில் கடைபிடித்து வரும் அன்பு பற்றிய கவிதை நன்று .

அன்பின் வடிவம் !

அன்பான சொல் இனிக்கும்
அது சுவைக்கும்

அன்பே நம் செவிகளுக்கு
விருந்து மாகும்

அன்பான வாய்மணக்கும்
எனவே அன்பாய்

என்றைக்கும் இருப்பதுதான்
இனிமை என்றேன் !

ஆம் அன்பால் உலகை ஆளலாம் .அதனால்தான் வள்ளுவர் அன்பை மிக உயர்வாக உணர்த்தினார் திருக்குறளில் .

விதி என்று நொந்து சாகாதே. வீணாய் காலம் கழிக்காதே .முயற்சி திருவினையாக்கும் என்ற கருத்தை இறைவனால் அல்ல என்ற கவிதையில் உணர்த்தி உள்ளார் .இறைவா நீ வர வேண்டாம் என்ற கவிதையை எள்ளல் சுவையுடன் எழுதி உள்ளார் .

இறைவா நீ வர வேண்டாம் !

இல்லையில்லை பக்தர்களைப் பார்க்க வேண்டும்
என்றுனக்கு போதாத ஆசை வந்தால்

சொல்லுகிறேன் ஒரு நாளில் இறங்கி வந்து
தேர்தலில் தனியாக நின்று பார் நீ

சில்லறையும் செல்வாக்கும் செல்லும் வண்ணம்
செயும் வித்தை வெல்லும் நீ தோற்பாய் அன்று

எல்லோருக்கும் அருள் சுரக்கும் இறைவா பக்தி
எட்டத்தில் இருந்தால்தான் என்று ணர்வாய் !

அரசியல் அவலங்களை இறைவனுக்கு சொல்வது போல வாசகருக்கு சொல்லி உள்ளார் .

இந்தக் கவிதைகள் கவிதை உறவு மாத இதழில் ஏர்வாடியாரின் ஏழாம் பக்கத்தில் படித்தவை .மொத்தமாக நூலாகப் படிக்கும் போது திரும்பத் திரும்ப வாசித்து மகிழ்ந்தேன் .

இறைவா நீ வர வேண்டாம் ! என்று எச்சரிக்கை செய்தவர் மறு மாதம் கவிதை உறவில் இறைவா நீ வர வேண்டும் ! என்றும் எழுதினார். கவிஞரின் உள்ளத்தில் உருவாகும் கருப்பொருளுக்கு ஏற்றபடி கவிதை வரும் என்பதற்கு எடுத்துகாட்டு இவை .

இறைவா நீ வர வேண்டும் !

நகரம்தான் நரக வாழ்க்கை எனினும் கொஞ்ச
நாள்களேனும் எங்களோடு தங்க வேண்டும் !

வரப்போகும் நாள் தெரிந்தால் விழா யெடுக்க
வசதியாக இருக்கும் ;ஒரு சேதி சொல் நீ !

அடுத்து கடவுளே பேசுவது போல ஒரு கவிதை இப்படிக்கு இறைவன் என்று ஒரு கவிதை .கடவுள் என்றைக்கு பேசினார் என்று பராசக்தி வசனத்தை கேட்டு விடாதீர்கள்.கடவுள் பேசுவது போல ஏர்வாடியார் பேசி உள்ளார் .

இப்படிக்கு இறைவன் !

சின்ன இதழ் மலர்கின்ற சிரிப்பி லெல்லாம்
சத்தியமாய் நானிருப்பே ன் இன்னும் மேலாய் !

அன்னையை நீ தெய்வமாக ஏற்றுக் கொண்டால்
ஆலயமாய் அவள்பாத கமலம் காண்பாய் !

ஏழையின் சிரிப்பில் இறைவன் உள்ளான் .பெற்ற தாயே தெய்வம் என்றும் வலியுறுத்தும் விதமாக கவிதை எழுதி உள்ளார் ஏர்வாடியாருக்கு கடவுள் நம்பிக்கை உண்டு . மதுரை வரும்போதெல்லாம் மீனாட்சியம்மன் கோவில் சென்று வருவார் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை .இருந்தபோதும் கடவுள் பெயரிலான கவிதைகளை ரசித்துப் படித்தேன் .கவிதைகள் படி தேன். நூல் விமர்சனத்தில் அனைத்து கவிதைகளையும் எழுத முடியாது .எழுதக் கூடாது என்பதால் பதச் சோறாக சில மட்டும் எழுதி உள்ளேன் .நூல் ப்வாங்கி படித்துப் பாருங்கள்
.
இந்த நூல் சொற்களின் சுரங்கமாக உள்ளது .வளரும் கவிஞர்கள் அனைவரும் வாங்கி வாசிக்க வேண்டிய நூல் .படிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் புரியும் விதமாக அனைத்து கவிதைகளும் உள்ளன. புரியாத புதிர்க்கவிதை ஒன்றும் இல்லை . கவிதைகள் எளிமையாகவும் , இனிமையாகவும் , புதுமையாகவும் ,அன்பை விதைக்கும் விதமாகவும் ,பண்பை வளர்க்கும் விதமாகவும், தன்னம்பிக்கை ஊட்டும் விதமாகவும் உள்ளன .நூல் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .உங்கள் இலக்கிய மகுடத்தில் பதித்த வைரக் கல்லாக மிளிர்கின்றது .


.
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

Back to top

- Similar topics
» புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை : ஆசிரியர் : கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதா கிருஷ்ணன் !
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» யாரும் யாராகவும் ! நூல் ஆசிரியர் ஏர்வாடி எஸ் . ராதாகிருஷ்ணன் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum