Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லீஸ்... வாடகை... எது நல்லது
+4
ayyasamy ram
krishnaamma
சிவா
சாமி
8 posters
Page 1 of 1
லீஸ்... வாடகை... எது நல்லது
சொந்த வீட்டில் குடியிருப்பவர் களுக்கு இருக்கும் பிரச்சினைகளை விட, வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்குப் பிரச்சினைகள் அதிகம் என்பதில் இருவேறு கருத்து இல்லை. சம்பளம் உயருகிறதோ இல்லையோ, ஆண்டுதோறும் வீட்டின் வாடகை மட்டும் கண்டிப்பாக உயர்ந்துவிடும். இதற்கு வீட்டின் உரிமையாளரைக் குறை சொல்வதில் பலன் இல்லை. ஏனென்றால், வீடு அமைந்திருக்கும் பகுதி, வீட்டில் இருக்கும் வசதிகள், போக்குவரத்து சாதகங்கள் ஆகியவைதான் வீட்டின் வாடகையை நிர்ணயிக்கும் காரணிகளாக அமைகின்றன. சென்னை போன்ற பெரு நகரங்களில், அலுவலகத்திற்கு அருகில் வீடு கிடைப்பது பெரும்பாலும், சிலருக்கு மட்டுமே சாத்தியமான விஷயமாக இருக்கிறது. ஆனால், இதற்காக அவர்கள் கொடுக்கும் வாடகை மிக அதிகமாக இருக்கும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, சொந்தமாக வீடு வாங்க முடியாதவர்களுக்கு, வாடகை வீட்டில் இருந்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால், ஆண்டுதோறும் கணிசமான தொகையை அவர்கள் வாடகைக்காகச் செலவிடுகின்றனர். இந்த விஷயத்தை வேறு கோணத்தில் சிந்தித்துப் பார்த்தால், இதில் உள்ள சாதகமான விஷயம் நமக்குப் புலப்படும். அதுதான் லீஸ். வீட்டை போக்கியம் அல்லது ஒத்திக்கு எடுப்பது.
புறநகர்ப் பகுதிகளில் வாடகைக்கு இருந்து கொண்டு நகர்ப் பகுதிகளுக்கு அலுவலகம் செல்பவர்களுக்கு லீஸ் வீடு கிடைப்பதற்கு அதிகம் வாய்ப்பிருக்கிறது. நகர்ப் பகுதிகளைவிடப் புறநகர் பகுதிகளில் ஏராளமான வீடுகள் லீசுக்குக் கிடைக்கின்றன. ஒருமுறை, குறிப்பிட்ட தொகையை வீட்டின் உரிமையாளரிடம் கொடுத்து விட்டு, அதற்கான ஒப்பந்தத்தைப் போட்டவுடன், அந்த வீடு நமக்குச் சொந்த வீடு போன்றே மாறிவிடுகிறது என்பது சாதகமான விஷயம். மாதாமாதம் ஒரு கணிசமான தொகையை வாடகையாகக் கொடுப்பதில் இருந்து விடுதலையும் கிடைத்துவிடும்.
இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களும் இருக்கின்றன. வீட்டின் வசதி வாய்ப்புகளைப் பற்றி அறிந்து கொள்வதுடன், அந்த வீட்டில் நாம் எவ்வளவு காலம் இருக்க முடியும் என்பதையும் ஆராய்ந்த பின்னரே, அந்த வீட்டை லீசுக்கு எடுக்க வேண்டும். பொதுவாக, 11 மாதங்கள் என்ற அளவில் தான் லீஸ் ஒப்பந்தம் போடப்படும். எனவே, 11 மாதங்கள் முடிவடைந்த பின்னர், இரு தரப்பினரும் விரும்பினால், ஒப்பந்தத்தை மேலும் 11 மாதத்திற்கு நீட்டித்துக்கொள்ளலாம். சில வீட்டின் உரிமையாளர்கள் லீஸ் தொகையை அதிகரித்துக் கொடுக்கும்படி கேட்பார்கள். அப்போது லீஸ் எடுப்பவர் விரும்பினால், அதே வீட்டில் இருக்கலாம். இல்லாவிட்டால், லீஸ் தொகையை முழுதாகத் திரும்பப் பெற்றுக்கொண்டு வேறு வீட்டை லீசுக்கு எடுத்துக்கொள்ளலாம்.
இதில் சாதகமான விஷயம் என்னவென்றால், வாடகை செலுத்த வேண்டியதில்லை என்பதால், லீஸ் எடுத்தவருக்கு, 11 மாதத்திற்கான வாடகைத் தொகை மிச்சமாகும். உதாரணமாக ஆறாயிரம் ரூபாய் வாடகை செலுத்தும் நபர், அந்த வீட்டை லீசுக்கு எடுக்கும் பட்சத்தில், அவருக்கு 11 மாதங்களில் சுமார் 66 ஆயிரம் ரூபாய் மிச்சமாகிறது. அந்த வீட்டிற்கு 3 லட்சம் ரூபாய் லீஸ் தொகையாகக் கொடுத்திருந்தால், வாடகை செலுத்தாத காரணத்தால் மீதமான 66 ஆயிரம் ரூபாயை, அவரது முதலீட்டுக்குக் கிடைத்த வட்டியாகக் கருதலாம். இது வங்கி மற்றும் அஞ்சலகங்களில் கிடைக்கும் வட்டித் தொகையை விட மிகவும் அதிகம் என்பதில் சந்தேகமில்லை.
இதேபோல் ஒவ்வொரு மாதமும் அவருக்கு ஆறாயிரம் ரூபாய் மிச்சமாகும் பட்சத்தில், அதைச் சேமித்து, ஓரிரு ஆண்டுகளில் 4 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் செலுத்தி, வேறொரு வீட்டை லீசுக்கு எடுத்து மாறிக்கொள்ளலாம். எனவே, வாடகைத் தொகையைச் சேமித்து லீஸ் தொகையை அதிகரிப்பதன் மூலம், மூலதனம் அதிகரிப்பதுடன், பின்னாளில் அதனைக் கொண்டே புதிய வீட்டை வாங்குவதற்கான முன்பணமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒரு வீட்டை லீசுக்கு எடுப்பதால் பல்வேறு சாதகங்கள் இருந்தாலும், சில பாதகங்களும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், லீஸ் எடுக்கும்போது போடப்படும் ஒப்பந்தத்தைச் சரியாக வடிவமைத்துக்கொண்டால், பல பிரச்சினைகளை லீஸ் எடுப்பவர்கள் தவிர்த்துக் கொள்ளலாம். உதாரணமாக, லீஸ் ஒப்பந்தம் போடும்போதே, வீட்டுக்கு வெள்ளையடிப்பது, வீட்டின் பராமரிப்பு செலவு ஆகியவற்றிற்கு வீட்டின் உரிமையாளரே பொறுப்பு எனத் தெளிவாகக் குறிப்பிட்டுவிட வேண்டும்.
மேலும், வீட்டைக் காலி செய்ய விரும்பினால், இரு தரப்பினரும், எத்தனை மாதங்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்பதையும் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, வீட்டின் உரிமையாளருக்கு வீடு தேவைப்படும் பட்சத்தில், லீசுக்கு இருப்பவருக்குச் சுமார் 3 மாதங்கள் வரை கால அவகாசம் கொடுத்து விட்டுக் காலி செய்யச் சொல்லலாம். அதேபோல், வீட்டை லீஸ் எடுத்தவருக்குப் பணம் தேவைப்படும் பட்சத்தில், பணத்தைத் திருப்பித் தர, வீட்டின் உரிமையாளருக்கு 3 மாதங்கள் அவகாசம் தர வேண்டும். இதுதான் பரஸ்பர லீஸ் ஒப்பந்தமாகப் பெரும்பாலும் இருந்து வருகிறது.
ஒரு வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கும் போது, ஏதாவது சிக்கல் ஏற்படும் பட்சத்தில், உடனடியாக வீட்டைக் காலி செய்து விட்டு வேறு வீட்டுக்குக் குடிபெயர்ந்து விட முடியும். ஆனால், லீசுக்கு வீடு எடுக்கும் பட்சத்தில், அதுபோல் எளிதாக மாறுவதில் சிக்கல்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. எனவே, ஒரு வீட்டை லீசுக்கு எடுப்பதற்கு முன்பாக ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து விட்டே முடிவு செய்ய வேண்டும்.
வாடகைக்குக் குடியிருக்கும் போது, ஏதாவது சிக்கல் ஏற்படும் பட்சத்தில், உடனடியாக வீட்டைக் காலி செய்து விட்டு வேறு வீட்டுக்குக் குடிபெயர்ந்து விட முடியும்.(thehindu)

Re: லீஸ்... வாடகை... எது நல்லது
கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி சாமி!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: லீஸ்... வாடகை... எது நல்லது
வாடகை என்றால் ஓராண்டு முடிந்ததும்
பத்து சத வீத வாடகை உயர்த்துவார்கள்
-
லீசில் வாடகை உயர்வு என்பது இருக்காது
என்பதும் கூடுதல் நன்மை...!
-
பத்து சத வீத வாடகை உயர்த்துவார்கள்
-
லீசில் வாடகை உயர்வு என்பது இருக்காது
என்பதும் கூடுதல் நன்மை...!
-
Re: லீஸ்... வாடகை... எது நல்லது
ayyasamy ram wrote:[link="/t109397-topic#1058344"]வாடகை என்றால் ஓராண்டு முடிந்ததும் பத்து சத வீத வாடகை உயர்த்துவார்கள். லீசில் வாடகை உயர்வு என்பது இருக்காது என்பதும் கூடுதல் நன்மை...!
சென்னையில் 10% வாடகை உயர்வெல்லாம் கிடையாதுங்க. எவ்வளவு டிமாண்ட் இருக்கோ அதைப்பொறுத்துதான் 'உயர்வுத்தொகை' முடிவு செய்கிறார்கள்.
அதேமாதிரி 11 மாதத்துக்கு அப்புறம் உயர்வெல்லாம் கிடையாது. எப்பல்லாம் முடியுதோ அப்பல்லாம் உயர்வுதான்.
இன்னும் சொல்லப்போனால் இருக்குறவன காலி பண்ணச்சொல்லிட்டு புதுசா ஒருத்தன கொண்டுவர்றாங்க. அப்பதானே வாடகையை இஷ்டத்துக்கு உயர்த்தமுடியும்.
Re: லீஸ்... வாடகை... எது நல்லது
நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: லீஸ்... வாடகை... எது நல்லது
ஒரு முக்கியமான விஷயத்தை மறந்து விட்டீர்கள். சமீபத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவம். நண்பர் ஒருவர் வங்கிக் கடனில் ஒரு பிளாட் வாங்கினார். அதை ஒத்திக்கும் விட்டு விட்டார். வங்கிக் கடனை கட்டாமல் தலைமறைவாகி விட்டார். வங்கி அதிகாரிகள் பொருட்களைத் தூக்கி வெளியே எறிந்துவிட்டு ஏலத்தில் கொண்டு வந்து விட்டனர். பணம் முழுவதும் அரோகரா. பிளாட் வாங்கும்போது தான் இது அவ்வப்போது நடக்கிறது. எச்சரிக்கை. தெரியாத நபர்களிடம் புரோக்கர்கள் மூலமாக வாங்கும் போது இது அடிக்கடி நடக்கிறது.
Waajid M A- பண்பாளர்
- பதிவுகள் : 67
இணைந்தது : 22/09/2010
Re: லீஸ்... வாடகை... எது நல்லது
சாமி wrote:[link="/t109397-topic#1058352"]ayyasamy ram wrote:[link="/t109397-topic#1058344"]வாடகை என்றால் ஓராண்டு முடிந்ததும் பத்து சத வீத வாடகை உயர்த்துவார்கள். லீசில் வாடகை உயர்வு என்பது இருக்காது என்பதும் கூடுதல் நன்மை...!
சென்னையில் 10% வாடகை உயர்வெல்லாம் கிடையாதுங்க. எவ்வளவு டிமாண்ட் இருக்கோ அதைப்பொறுத்துதான் 'உயர்வுத்தொகை' முடிவு செய்கிறார்கள்.
அதேமாதிரி 11 மாதத்துக்கு அப்புறம் உயர்வெல்லாம் கிடையாது. எப்பல்லாம் முடியுதோ அப்பல்லாம் உயர்வுதான்.
இன்னும் சொல்லப்போனால் இருக்குறவன காலி பண்ணச்சொல்லிட்டு புதுசா ஒருத்தன கொண்டுவர்றாங்க. அப்பதானே வாடகையை இஷ்டத்துக்கு உயர்த்தமுடியும்.
நிஜம் தான் அண்ணா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: லீஸ்... வாடகை... எது நல்லது
Waajid M A wrote:[link="/t109397-topic#1058431"]ஒரு முக்கியமான விஷயத்தை மறந்து விட்டீர்கள். சமீபத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவம். நண்பர் ஒருவர் வங்கிக் கடனில் ஒரு பிளாட் வாங்கினார். அதை ஒத்திக்கும் விட்டு விட்டார். வங்கிக் கடனை கட்டாமல் தலைமறைவாகி விட்டார். வங்கி அதிகாரிகள் பொருட்களைத் தூக்கி வெளியே எறிந்துவிட்டு ஏலத்தில் கொண்டு வந்து விட்டனர். பணம் முழுவதும் அரோகரா. பிளாட் வாங்கும்போது தான் இது அவ்வப்போது நடக்கிறது. எச்சரிக்கை. தெரியாத நபர்களிடம் புரோக்கர்கள் மூலமாக வாங்கும் போது இது அடிக்கடி நடக்கிறது.
அதற்கு, நாம் முன்னரே வில்லங்கம் ஏதாவது இருக்கிறதா என்று வீட்டின் உரிமையாளரிடம் சார்பதிவாளர் அலுவலத்தில் வில்லங்க சான்று வாங்கி வர சொல்ல வேண்டும்.
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: லீஸ்... வாடகை... எது நல்லது
M.M.SENTHIL wrote:[link="/t109397-topic#1058529"]Waajid M A wrote:[link="/t109397-topic#1058431"]ஒரு முக்கியமான விஷயத்தை மறந்து விட்டீர்கள். சமீபத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவம். நண்பர் ஒருவர் வங்கிக் கடனில் ஒரு பிளாட் வாங்கினார். அதை ஒத்திக்கும் விட்டு விட்டார். வங்கிக் கடனை கட்டாமல் தலைமறைவாகி விட்டார். வங்கி அதிகாரிகள் பொருட்களைத் தூக்கி வெளியே எறிந்துவிட்டு ஏலத்தில் கொண்டு வந்து விட்டனர். பணம் முழுவதும் அரோகரா. பிளாட் வாங்கும்போது தான் இது அவ்வப்போது நடக்கிறது. எச்சரிக்கை. தெரியாத நபர்களிடம் புரோக்கர்கள் மூலமாக வாங்கும் போது இது அடிக்கடி நடக்கிறது.
அதற்கு, நாம் முன்னரே வில்லங்கம் ஏதாவது இருக்கிறதா என்று வீட்டின் உரிமையாளரிடம் சார்பதிவாளர் அலுவலத்தில் வில்லங்க சான்று வாங்கி வர சொல்ல வேண்டும்.
நல்லது தல . . அனைத்திற்கும் வழி உள்ளது
Similar topics
» வாடகை வீடு... வாடகை ஆட்டோ... கபடி சாம்பியன்!
» நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!!
» புரிந்தால் நல்லது, புரியா விட்டால் அதை விட நல்லது..!
» இன்று உலக இட்லி தினம்.. இட்லி சாப்பிட்டா உடம்புக்கு நல்லது.. ஓட்டு போட்டா நாட்டுக்கு நல்லது
» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum