புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்ணனும் கண்ணனும் Poll_c10கர்ணனும் கண்ணனும் Poll_m10கர்ணனும் கண்ணனும் Poll_c10 
366 Posts - 49%
heezulia
கர்ணனும் கண்ணனும் Poll_c10கர்ணனும் கண்ணனும் Poll_m10கர்ணனும் கண்ணனும் Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
கர்ணனும் கண்ணனும் Poll_c10கர்ணனும் கண்ணனும் Poll_m10கர்ணனும் கண்ணனும் Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
கர்ணனும் கண்ணனும் Poll_c10கர்ணனும் கண்ணனும் Poll_m10கர்ணனும் கண்ணனும் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
கர்ணனும் கண்ணனும் Poll_c10கர்ணனும் கண்ணனும் Poll_m10கர்ணனும் கண்ணனும் Poll_c10 
25 Posts - 3%
prajai
கர்ணனும் கண்ணனும் Poll_c10கர்ணனும் கண்ணனும் Poll_m10கர்ணனும் கண்ணனும் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
கர்ணனும் கண்ணனும் Poll_c10கர்ணனும் கண்ணனும் Poll_m10கர்ணனும் கண்ணனும் Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
கர்ணனும் கண்ணனும் Poll_c10கர்ணனும் கண்ணனும் Poll_m10கர்ணனும் கண்ணனும் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கர்ணனும் கண்ணனும் Poll_c10கர்ணனும் கண்ணனும் Poll_m10கர்ணனும் கண்ணனும் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
கர்ணனும் கண்ணனும் Poll_c10கர்ணனும் கண்ணனும் Poll_m10கர்ணனும் கண்ணனும் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்ணனும் கண்ணனும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 3:05 am


கர்ணனுக்கு மறு பெயர் கன்னன்?

கிருஷ்ணனுக்கு மறுபெயர் கண்ணன்?

முன்னவன் "தோரோட்டியின் மகன்' என்று ஏசப்பட்டவன்.

பின்னவன் பார்த்தனுக்குச் (அர்ச்சுனனுக்கு) சாரதியாகக் குதிரை ஓட்டி, எல்லாராலும் பூஜிக்கப்பட்டவன்.

"கர்ணன்' என்றாலே நம் கண்முன் நிற்பவர் நடிகர் திலகம் சிவாஜி.

"கண்ணன்' என்றாலே மறக்க முடியாத நடிகர் என்.டி.ஆர்.

"உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா' என்ற கவியரசர் கண்ணதாசனின் பாடல்வரிகள் அவரைப் போலவே காலத்தால் அழியாத வைரவரிகள்.

"கர்ணன்' திரைப்படத்தில் நடித்த சிவாஜிகணேசன் - கர்ணனாகவே ஒன்றிப் போனவர்.

இன்றைய இளைய தலைமுறையினர், "கர்ணன்' என்றால் இந்த உருவத்தில் இப்படித்தான் இருந்திருப்பான - வாழ்ந்திருப்பான் என்ற பிரமிப்பை உருவாக்கும் பாத்திரம் அது!

"கர்ணன் இனிக் "கனனன்' என்றே எழுதுவோமா?'

கன்னன் ஒரு பாவப்பட்ட மனிதன்! அவனைப் பற்றி மூதறிஞர் ராஜாஜி எழுதிய, "வியாசர் விருந்து' நூலில் வெகு அழகாக வர்ணிப்பார். கர்ணனின் வீரம், விவேகமானதுதான்! ஆனால் அது அவன் நற்பெயருக்குக் களங்கம் நிளைவித்ததற்கு இரண்டு மூன்று நிகழ்ச்சிகளைக் குறிப்பிடலாம்! எனினும் குணம் நாடிக் குற்றமும் நாடி என்று தொடங்கும் குறள் வழியே நாம் அவற்றுள் மிகை நாடிக் கொண்டதையே குறிப்பிடலாம் அதுவே சரி!

அவன் வாழ்வில் கண்ட ஏற்றங்கள் - சில நேரங்களில் ஏமாற்றங்களையே தந்தது! குறிப்பாகப் பதினேழாம் நாள்தான் பாரதப்போரில் அவன் மறைந்தான். பீஷ்மர் படைத்தளபதியாக இருந்தவரைக் கர்ணன் எனும் கன்னன் பெயர் மறைக்கப்பட்டே இருந்தது! அவன் பாரதப்போரின் 18ஆம் நாளில் உயிருடன் இல்லை! அவன் உயிருடன் இருந்திருந்தால் துரியோதனனுக்குப் பீமனால் ஏற்பட்ட அவமானத்தைச் சகித்துக் கொண்டிருக்க மாட்டான் என்பது உறுதி. இது காலதேவனின் இறுதி.

ஆனால் கர்ணன் கொல்லப்பட்ட விதம் இருக்கிறதே, அதைக் கண்டால் கொடூர நெஞ்சமும் கலங்கும்! நிராயுதபாணியான அவன் தேர்ச் சக்கரத்தில் இருக்கும்போது, அம்பை விட்டுக் கொல் என்று ஆணையிட்டு, அர்ச்சுனனைத் தீராப்பழிக்கு ஆளாக்கியவன் கண்ணன். தன் உடன் பிறந்த மூத்த அண்ணன் மீதே அம்புவிடச் செய்து கொலையாளி ஆக்கியது கண்ணன் எனும் ஆண்டவனே!

இதை வில்லிபுத்தூரார் தம் பாரதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
விசயனின் தஞ்சரீகக் கணையால் கன்னன் தளர்ச்சியடைந்து வீழ்தல்.
பகலவன் மதலையை நீ பகலோன் மேம்பால்
பவ்வத்தில் படுவதன்முன் படுத்தி என்ன
இகல் விசயன் உறுதி உற அஞ்சரீகம்
எனும் அம்பால் அவன் இதயம் இலக்கமாக
அகல் உலகில் வீரர் எலாம் மதித்து எய்தான்
அந்த ஆசுகம் உருவி அப்பால் ஓடித்
தகல் உடையார் மொழி போலத் தரணியூடு
தப்பாமல் குளித்தது அவன்தானும் வீழ்ந்தான்.
- 806.

கண்ணன், அர்ச்சுனனைப் பார்த்து, "நீ கதிரவன் மேற்குக் கடலில் மறைவதற்கு முன் அக்கதிரவனின் மகன் கன்னனைக் கொல்!' என்று கூறினான். வீரமுடைய அந்தணன் "அஞ்சரீகம்' என்ற பெயர் கொண்ட அம்பால் உலகத்தில் உள்ள வீரர்கள் எல்லாம் தன்னை மதிக்கும்படிச் செய்தான். அந்த அம்பு, தவ ஒழுக்கத்தால் தக்க துறவியரின் சொல்போல் சிறிதும் தவறாது மார்பைத் துளைத்தது அப்பால் விரைந்து ஓடி நிலத்தில் விழுந்து அழுந்தியது. அந்தக் கன்னனும் கீழே விழுந்தனன்.

"தகல் உடையார் மொழிபேசுதல்' என்ற உவமையைக் கண்டு பெருமை கொள்க! கன்னன் வீழுவதற்கு முன்பே, கண்ணன் வேதியர் வடிவில் சென்று கன்னனிடம் யாசகம் கேட்கிறான். அவன் உடலுக்கு உயிர் போன்றது புண்ணியச் செயல்கள். அந்த "புண்ணியச் செயல்கள்' யாவுமே கலங்கின! இவர் உடலை விட்டுவிட்டுச் செல்லப் போகிறோமே என்று அவை வருந்தின என்பது ஒரு புதுமையான விளக்கம்! மகாபாரதத்தில் ஒரு மகாபாதகம்!

கன்னன் தனது புண்ணியத்தைத் தானமாகத் தரல்
ஆவியோ நிலையின் கலங்கியது யாக்கை
அகத்ததோ புறத்ததோ அறியேன்
பாவியோன் வேண்டும் பொருள் எலாம் நயக்கும்
பக்குவம் தன்னில் வந்திலையால்
ஓவுஇலாது பயன் செய் புண்ணியம் அனைத்தும்
உதவினேன் கொள்க நீ உனக்குப்
பூவில் வாழ் அயனும் நிகர் அலன் என்றால்
புண்ணியம் இதனினும் பெரிதோ? - 798.

என் உயிரோ நிலை கலங்கியுள்ளது. அவ்உயிர் உடலின் உள்ளேயோ வெளியேயோ அறியேன். தீவினையுடைய நான் இரப்பவர் வேண்டும் பொருள் எல்லாம் விரும்பிக் கொடுக்கும் சமயத்தில் நீ வரவில்லை. நான் இதுவரை செய்துள்ள புண்ணியம் எல்லாம் ஒன்றும் மிச்சம் இல்லாதபடி உனக்குத் தந்தேன்.

நீ பெற்றுக் கொள்! உனக்கு நான்முகனும் ஒப்பாகான் என்றால் என் நல்வினை, உனக்குத் தானம் செய்யும் இத் தொழிலினும் பெரியதோ!

கன்னன், கண்ணன் முன்னே கைகூப்பி வழங்கினான் தன் புண்ணியங்களை? எப்படி? தன் மார்பில் வைத்த அம்பின் வழியே வரும் இரத்தத்தால் தாரை வார்த்துத் தந்தான்.

அந்தணன் கண்ணன் மகிழ்ந்து அழகிய மாலை சூடிய கன்னனைப் பார்த்து, "நீ விரும்பிய வரங்களைச் சொல்க! உனக்குக் கொடுப்போம்' என்று சொன்னான். கதிரவன் மகன் கன்னனும் விடை சொல்பவனாய் பிறவித் துன்பங்களுக்குக் காரணமான தீ வினையால் இன்னமும் பிறவி உண்டாயின், ஏழு வகைப்பிறவிகளுள்ளும், வறுமையால் இல்லை என இரப்பவர்கு வைத்துக் கொண்டே நீ கேட்கும் பொருள் என்னிடம் இல்லை என்று சொல்லாத உள்ளத்தை நீ எனக்குக் கொடு என்று கூறினான்.

உள்ளத்தில் நல்ல உள்ளம்
தாயன்பைக் காணான், தவித்துக் குலைந்தவன்
சிந்தை உறுதி குலைந்திடான்,
நோய் பொறுத்தே தனதாசான் துயிலுக்கோர்
நொடிப்பு வராமல் காத்தவன்,
சாவுப் படுக்கையில் அம்புகள் குத்தியே
தன்னுயிர் நீத்திடும் போதிலும்
ஈவிரக்கமின்றித் தானம் கேட்ட கண்ணனிடம்
நல்லறம் யாவையும் தாரை வார்த்தவன்!
மேவும் பிறவியும், இன்று போல் என்றும்
ஈயும் திறத்தின வேண்டினன்!
அறமில்லை தன் ணியில் என்று அறிந்தும்,
முழுதும் அழிந்தே போகும் எனப் புரிந்தும்,
உற்ற நண்பன் துரியன் மருங்(கு)
இறுதிவரை நின்றே செஞ்சோற்றுக் கடன்செய்
ஏந்தல் மறவனாம் கர்ணனே - என்றும்
மாவீரன் என்றே மாநிலம் போற்றும்.

கர்ணன் - துரியோதனனின் நண்பன்; ஆனால் விகர்ணன், துரியோதனனின் உடன் பிறந்த தம்பி. அண்ணனின், துகிலுரிப்புக் கொடுமையைச் சான்றோர் தூற்றுவது கவிதை நூலின் கண்டிக்கிறான். இவ்விருவருமே சிறந்தவர்கள் என்று பாஞ்சாலி சபதத்தில் பாரதி குறிப்பிடுகிறார்.

கன்னன் - கண்ணன் வேறுபாடு எழுத்தில் மட்டுமன்று, செல்பாடுகளிலும்!

- சோழவரம் அரிமா. மு. முரளீதரன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 12, 2014 5:18 pm

மஹா பாரதத்தில் மறக்க முடியா பாத்திரம்.கர்ணன்.
கஷ்டப்படுவதற்கே பிறந்தவன் அவன்.
ரமணியன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக