Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலம்புழா அணை!
Page 1 of 1
மலம்புழா அணை!
சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து தப்பி, 'குளு குளு' பிரதேசத்துக்கு செல்ல வேண்டுமா? பக்கத்து மாநிலமான கேரளாவில் உள்ள மலம்புழா அணைக்கு சென்று வாருங்கள்.
கோவையிலிருந்து ஒன்றை மணி நேர பயணத்தில், மலம்புழாவை அடைந்து விடலாம். காரிலோ, டூ-வீலரிலோ செல்வதாக இருந்தால், கஞ்சிக்கோடிலிருந்து, ஏழரை கி.மீ., தூரத்தில் மலம்புழா வந்து விடும். கோவையிலிருந்து மிக சமீபத்திலிருக்கும் மலம்புழா, முன் தமிழகத்தோடு இணைந்திருந்தது.
மலம்புழா அணைக்கு சிறிது தூரத்தில் உள்ளது ராக் கார்டன் எனப்படும், கற்களால் ஆன பொம்மை பூங்கா. சண்டிகரிலுள்ள ராக் கார்டனுக்கு அடுத்ததாக உள்ள, பெரிய ராக் கார்டன் இதுதான். இங்குள்ள விதவிதமான மார்பிள் பொம்மைகள், நம்மை வியப்பில் ஆழ்த்தும். இதை பார்த்தபின், அருகிலுள்ள பெரிய பூங்காவிற்குள் காலடி எடுத்து வைத்தோமென்றால், நாமும் குழந்தைகளாகி விடுவோம். குட்டி ரயில், பொம்மை வாயிலிருந்து விழும் தண்ணீர், அழகான வண்ணமயமான பூக்கள் இவற்றை பார்வையிட்டு நகர்ந்தால், தொங்கும் பாலம் வந்து விடும்.
கீழே அறுந்து விழுந்து விடுமோ என்கிற பயத்தில், இந்த பாலத்தில் நடந்து செல்வதே, பெரிய, 'த்ரில்' தான். பாலத்தில் நடக்கும் போதே, அணையின் பிரமாண்ட தோற்றம் தெரிவதால், அணையின் நடுப்பகுதியில் நடப்பது போன்று இருக்கும். தொங்கு பாலத்தை கடந்து சென்றால், படகு இல்லம் வந்து விடும். மோட்டார் படகு, துடுப்புப் படகு என, குழந்தைகளோடு, ஏதாவது ஒரு படகில் ஏறி அமர்ந்து, பூங்கா மற்றும் அணைக்கட்டு பகுதியை சுற்றி வரலாம்.
படகுப் பயணம் முடிந்ததும், அணைப் பகுதியின் மேலே ஏறினால், ரோப் கார் இருக்குமிடம் வரும். இருவர் அமர்ந்து செல்லும் கேபிள்களாக இருக்கும் ரோப் காரில் அமர்ந்து, மலம்புழாவின் மொத்த அழகையும், ஜாலியா ரசிக்கலாம். மேலும், ரோப் காரிலிருந்து கீழிறங்கி, அணைக்கட்டு பகுதியில், ஒரு ரவுண்ட் நடை போட்டு வரலாம்.
அணைக்கட்டிலிருந்து இறங்கி, பாம்பு பண்ணைக்கு சென்றால், அங்கே பிரமாண்ட சைஸ் பாம்புகளிலிருந்து, குட்டி பாம்புகள் வரை பாரக்கலாம். அங்கிருந்து வெளியே வந்தால், அசைவ பிரியர்களுக்காக, குறிப்பாக, மீன் வறுவலுக்கு அடிமையானவர்களுக்காக, அணையிலிருந்து பிரஷ்ஷாக மீன் பிடித்து, சுடக் சுட வறுத்து தருவர். அதன் பின், மீன் பண்ணைக்கு, ஒரு, 'ரவுண்ட்' போய் வரலாம். அப்படியே அருகிலுள்ள நீச்சல் குளத்தில், ஒரு குளியலும் போடலாம்.
— தேசாந்தரி
Re: மலம்புழா அணை!
கொல்லிமலை ஆகாச கங்கை அருவி!
பச்சை மாமலைபோல் மேனி என்று, கொல்லி மலையைப் பார்த்துத்தான், ஆழ்வார்கள் பாடி இருப்பார்களோ என்னவோ! அப்படி ஒரு பசுமை. எங்கு பார்த்தாலும், பச்சைப் படுதாவை போட்டு மூடியது போல் காணப்படும் கொல்லிமலைத் தொடர், நாமக்கல்லிலிருந்து, 40 கி.மீ., தூரத்தில் உள்ளது.
கடல் மட்டத்திலிருந்து, 1,190 மீ. உயரத்தில் உயர்ந்து நிற்கும், கொல்லிமலையின் பரப்பளவு ஏறத்தாழ, 400 சதுர மைல்கள். 28 கி.மீ., வடமேற்காக நீண்டும், 19 கி.மீ., கிழக்கு மேற்காக அகன்று கிடக்கும், இந்த மலைவெளியில், அரிய மூலிகைகள். அரப்பள்ளீஸ்வரர் கோவில், அரசு மூலிகைப் பண்ணை, தாவரத் தோட்டம் என, பார்ப்பதற்கு ரம்மியமான பல இடங்கள் உண்டு. அரப்பள்ளீஸ்வரர் கோவில் அருகில் விழும், ஆகாச கங்கை அருவி, மூலிகை மகத்துவம் வாய்ந்தது. தமிழ் இலக்கியங்களில் புகழ்ந்து பாடப்பட்ட, கடையெழு வள்ளல்களில் ஒருவரான ஓரிக்கு, ஒவ்வோர் ஆண்டும், மே மாதத்தில், திருவிழா நடத்தப்படுகிறது. பல்வேறு சித்தர்கள் வாழ்ந்த குகைகளும் இங்கு உள்ளன. நாமக்கல்லில் தங்கி, கார்,பஸ்களில் போய் வரலாம்.

மாத்தூர் தொங்குபாலம்!
ஓர் ஓவியக் கோட்டினைப்போலத் தோன்றும் இது, ஆசியாவின் மிக நீளமான குறுக்குப் பாலம்.
115 அடி உயரமும், 1 கி.மீ. நீளமும் உடையது. திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்தில், அருவிக்கரை வருவாய் கிராமத்தைச் சேர்ந்த மாத்தூர் என்ற இடத்தில் இருப்பதனால், இதற்கு மாத்தூர் தொங்கு பாலம் என்று பெயர்.
பரளியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட இப்பாலம் வழியே, பட்டணம்கல் மலையிலிருந்து, இன்னொரு பக்கத்திற்கு நீர் எடுத்துச் செல்லப்படுகிறது. விளவங்கோடு கல்குளம் பகுதிகளின் விவசாய வளர்ச்சிக்காக, முன்னாள் முதலமைச்சர் காமராசர் முயற்சியின் கீழ் கட்டப்பட்ட இந்தப் பாலம், சுற்றுலாத் தலமாக மாறியிருக்கிறது. இங்கு குழந்தைகள் பூங்காவும், நீராடும் துறையும் இருக்கின்றன. நாகர்கோவிலில் தங்கி, அவரவர் வசதிப்படி பஸ், கார்களில் சென்று வரலாம்.

காரைவெட்டி பறவைகள் சரணாலயம்!
பறவைகள் எங்கிருந்தால் என்ன? பார்க்கப் பார்க்க அழகுதான். தஞ்சாவூருக்கு வடக்கே, 35 கி.மீ. , தொலைவில் உள்ளது காரைவெட்டி பறவைகள் சரணாலயம்.
இதன் மொத்தப் பரப்பளவு, 454 ஹெக்டேர். ஒவ்வொரு நவம்பர் மாதமும், பெரும்பாலான நீர்ப்பறவைகள், சீதோஷ்ணம் மற்றும் குஞ்சு பொரிப்பதற்காக இங்கு வருகின்றன. பின், ஏப்ரல் மாதம், தன் குஞ்சுகளோடு கிளம்பிச் செல்லும் இப்பறவைகளை பார்ப்பதே கொள்ளை அழகு! தஞ்சாவூரில் தங்கி, இச்சரணாலயத்தை பார்த்து வரலாம்.

ஆனைமலை விலங்குகள் சரணாலயம்!
காட்டில் சுதந்திரமாக சுற்றித் திரியும் விலங்குகளைப் பார்ப்பது எத்தகைய ஆனந்தம் என்பதை, ஆனைமலைக்குச் சென்றால், உணர்வீர்...
யானை, காட்டெருது, தேவாங்கு, கரடி, பொன்னிறப் பறவைகள், எறும்புத் தின்னி போன்றவற்றை இங்கே காணலாம். மேற்குத் தொடர்ச்சி மலையில், 1,400 மீட்டர் உயரத்தில், 958 ச.கி.மீ., பரப்பளவில், பொள்ளாச்சி அருகே இச்சரணாலயம் அமைந்துள்ளது.
இங்குள்ள அமராவதி நீர்த் தேக்கத்தில், முதலைகள் ஏராளம். குன்றுகள், அருவிகள், தேக்கு மரக்காடுகள், தோப்புகள், பண்ணைகள், அணைக்கட்டுகள், நீர்த்தேக்கங்கள் என, இயற்கை எழில் கைகுலுக்கிக் கொள்ளும் அழகின் தாய்வீடு. டாப்ஸ்லிப் பகுதிக்கு, சுற்றுலாப் பயணிகள், வேன் அல்லது யானை மீது உல்லாச சவாரி சென்று வரலாம்.
பொள்ளாச்சியில் தங்கி, பார்த்து வரலாம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum