ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவிலியம் / பழைய ஏற்பாடு - புத்தகம் 1 - தொடக்கநூல்

2 posters

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Go down

 விவிலியம் / பழைய ஏற்பாடு - புத்தகம் 1 - தொடக்கநூல் - Page 6 Empty விவிலியம் / பழைய ஏற்பாடு - புத்தகம் 1 - தொடக்கநூல்

Post by சிவா Sat Apr 12, 2014 1:12 am

First topic message reminder :

அதிகாரம் 1.

1.    தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது,
2.    மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது.
3.    அப்பொழுது கடவுள், ஒளி தோன்றுக! என்றார்: ஒளி தோன்றிற்று. கடவுள் ஒளி நல்லது என்று கண்டார்.
4.    கடவுள் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார்.
5.    கடவுள் ஒளிக்குப் பகல் என்றும் இருளுக்கு இரவு என்றும் பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று முதல் நாள் முடிந்தது.
6.    அப்பொழுது கடவுள், நீர்த்திரளுக்கு இடையில், வானம் தோன்றுக! அது நீரினின்று நீரைப் பிரிக்கட்டும் என்றார்.
7.    கடவுள் வானத்தை உருவாக்கி வானத்திற்குக் கீழுள்ள நீரையும் வானத்திற்கு மேலுள்ள நீரையும் பிரித்தார். அது அவ்வாறே ஆயிற்று.
8.    கடவுள் வானத்திற்கு விண்ணுலகம் என்று பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று இரண்டாம் நாள் முடிந்தது.
9.    அப்பொழுது கடவுள், விண்ணுலகுக்குக் கீழுள்ள நீர் எல்லாம் ஓரிடத்தில் ஒன்றுசேர உலர்ந்த தரை தோன்றுக! என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
10.   கடவுள் உலர்ந்த தரைக்கு நிலம் என்றும் ஒன்றுதிரண்ட நீருக்குக் கடல் என்றும் பெயரிட்டார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.
11.   அப்பொழுது கடவுள், புற்பூண்டுகளையும் விதை தரும் செடிகளையும், கனி தரும் பழமரங்களையும் அந்த அந்த இனத்தின்படியே நிலம் விளைவிக்கட்டும் என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
12.   புற்பூண்டுகளையும் விதையைப் பிறப்பிக்கும் செடிகளையும் கனிதரும் மரங்களையும் அந்த அந்த இனத்தின்படி நிலம் விளைவித்தது. கடவுள் அது நல்லது என்று கண்டார்.
13.   மாலையும், காலையும் நிறைவுற்று மூன்றாம் நாள் முடிந்தது.
14.   அப்பொழுது கடவுள், பகலையும் இரவையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் காலங்கள், நாள்கள், ஆண்டுகள் ஆகியவற்றைக் குறிப்பதற்கும் விண்விரிவினில் ஒளிப்பிழம்புகள் தோன்றுக!
15.   அவை மண்ணுலகிற்கு ஒளிதர விண்விரிவினில் ஒளிப்பிழம்புகளாக இருக்கட்டும் என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
16.   கடவுள் இருபெரும் ஒளிப்பிழம்புகளை உருவாக்கினார். பகலை ஆள்வதற்குப் பெரிய ஒளிப்பிழம்பையும், இரவை ஆள்வதற்குச் சிறிய ஒளிப்பிழம்பையும் மற்றும் விண்மீன்களையும் அவர் உருவாக்கினார்.
17.   கடவுள் மண்ணுலகிற்கு ஒளிதர விண்ணுலக வானத்தில் அவற்றை அமைத்தார்:
18.   பகலையும் இரவையும் ஆள்வதற்கும் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் அவற்றை அமைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.
19.   மாலையும் காலையும் நிறைவுற்று நான்காம் நாள் முடிந்தது.
20.   அப்பொழுது கடவுள், திரளான உயிரினங்களைத் தண்ணீர் தோற்றுவிப்பதாக! விண்ணுலக வானத்தில் நிலத்திற்கு மேலே பறவைகள் பறப்பனவாக! என்றார்.
21.   இவ்வாறு, கடலின பெரும் பாம்புகளையும், திரள் திரளாக நீரில் நீந்திவாழும் உயிரினங்களையும், இறக்கையுள்ள எல்லாவிதப் பறவைகளையும் அவ்வவற்றின் இனத்தின்படி கடவுள் படைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.
22.   கடவுள் அவற்றிற்கு ஆசி வழங்கி பலுகிப் பெருகிக் கடல் நீரை நிரப்புங்கள். பறவைகளும் மண்ணுலகில் பெருகட்டும் என்றுரைத்தார்.
23.   மாலையும் காலையும் நிறைவுற்று, ஜந்தாம் நாள் முடிந்தது.
24.   அப்பொழுது கடவுள், கால்நடைகள், ஊர்வன, காட்டுவிலங்குகள் ஆகியவற்றை அவ்வவற்றின் இனத்தின்படி நிலம் தோற்றுவிப்பதாக என்றார்.
25.   கடவுள் காட்டு விலங்குகளையும் கால்நடைகளையும் நிலத்தில் ஊர்வன யாவற்றையும் அவ்வவற்றின் இனத்தின்படி உருவாக்கினார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.
26.   அப்பொழுது கடவுள், மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும் என்றார்.
27.   கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்: கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்: ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.
28.   கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்: அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்: கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள் என்றார்.
29.   அப்பொழுது கடவுள், மண்ணுலகெங்கும் உள்ள விதை தரும் செடிகள், பழமரங்கள், அனைத்தையும் உங்களுக்கு நான் கொடுத்துள்ளேன்: இவை உங்களுக்கு உணவாகட்டும்.
30.   எல்லாக் காட்டுவிலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் பசுமையான செடிகள் அனைத்தையும் நான் உணவாகத் தந்துள்ளேன் என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
31.   கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன. மாலையும் காலையும் நிறைவுற்று ஆறாம் நாள் முடிந்தது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


 விவிலியம் / பழைய ஏற்பாடு - புத்தகம் 1 - தொடக்கநூல் - Page 6 Empty Re: விவிலியம் / பழைய ஏற்பாடு - புத்தகம் 1 - தொடக்கநூல்

Post by சிவா Sat Apr 12, 2014 1:30 am

அதிகாரம் 46.

1. பின்பு இஸ்ரயேல் தமக்கிருந்த யாவற்றையும் சேர்த்துக்கொண்டு புறப்பட்டு, பெயேர்செபாவைச் சென்றடைந்தார். அவ்விடத்தில் தம் தந்தை ஈசாக்கின் கடவுளுக்குப் பலிகளை ஒப்புக்கொடுத்தார்.
2. அன்றிரவு கடவுள் இஸ்ரயேலுக்குக் காட்சி அளித்து, யாக்கோபு! யாக்கோபு! என்று அழைத்தார். அவர், இதோ அடியேன் என்றார்.
3. கடவுள், "உன் தந்தையின் கடவுளான இறைவன் நானே, எகிப்திற்குச் செல்ல நீ அஞ்ச வேண்டாம். அங்கே உன்னைப் பெரிய இனமாக வளரச் செய்வேன்.
4. நானும் உன்னோடு எகிப்திற்கு வருவேன். உன்னை நான் அங்கிருந்து மீண்டும் அழைத்து வருவேன். யோசேப்பு தன் கையாலே உன் கண்களை மூடுவான்" என்றார்.
5. யாக்கோபு பெயேர்செபாவை விட்டுப் புறப்பட்டார். இஸ்ரயேலின் புதல்வர்கள் தம் தந்தையாகிய யாக்கோபையும் தங்கள் பிள்ளைகளையும் மனைவியரையும் அவருக்குப் பார்வோன் அனுப்பியிருந்த வண்டிகளில் ஏற்றிக் கொண்டனர்.
6. கானான் நாட்டில் அவர்கள் சேர்த்திருந்த ஆடு மாடுகளையும் சொத்துகளையும் சேகரித்துக் கொண்டனர். இவ்வாறு யாக்கோபு தம் வழிமரபினர் அனைவரோடும் எகிப்திற்குப் போனார்.
7. தம் புதல்வரையும் அவர்கள் புதல்வரையும் தம் புதல்வியரையும் புதல்வரின் புதல்வியரையும் தம் வழிமரபினர் அனைவரையும் அவர் தம்மோடு எகிப்திற்கு அழைத்துக் கொண்டு சென்றார்.
8. எகிப்திற்கு வந்துசேர்ந்த யாக்கோபும் அவர் புதல்வர்களுமாகிய இஸ்ரயேலரின் பெயர்கள் பின்வருமாறு: யாக்கோபின் தலைமகன் ரூபன்.
9. ரூபனின் புதல்வர்கள்: அனோக்கு, பல்லூ, எட்சரோன், கர்மி.
10 சிமியோனின் புதல்வர்: எமுவேல், யாமின், ஒகாது, யாக்கின், சோவார், கானானியப் பெண்ணின் மகன் சாவூல்.
11 லேவியின் புதல்வர்: கெர்சோன், கோகாத்து, மெராரி.
12. யூதாவின் புதல்வர்: ஏர், ஓனான், சேலா, பெரேட்சு, செராகு. இவர்களுள் ஏரும் ஓனானும் கானான் நாட்டில் இறந்து போயினர். எட்சரோன், ஆமூல் என்பவர்கள் பெரேட்சுக்குப் பிறந்த புதல்வர்கள்.
13. இசக்காரின் புதல்வர்: தோலா, பூவா, யாசூபு, சிம்ரோன்.
14. செபுலோனின் புதல்வர்: செரேது, ஏலோன், யாகுலவேல்.
15. இவர்கள் லேயாவின் பிள்ளைகள். இவர் இவர்களையும் தீனா என்ற மகளையும் பதான் அராமில் யாக்கோபுக்குப் பெற்றெடுத்தார். லேயா வழிவந்த அவர் புதல்வர், புதல்வியர் மொத்தம் முப்பத்துமூன்றுபேர்.
16. காத்தின் புதல்வர். சிபியோன், அக்கி, சூனி, எட்சபோன், ஏ¡£, அரோதி, அரேலி.
17. ஆசேரின் புதல்வர்: இம்னா, இசுவா, இசுவி, பெரியா. இவர்களுடைய சகோதரி செராகு. பெரியாவின் புதல்வர்: எபேர், மல்கியேல்.
18. இவர்கள் லாபான் தன் மகள் லேயாவுக்குக் கொடுத்த சில்பாவின் பிள்ளைகள். இவள் வழியாக யாக்கோபுக்குப் பிறந்தவர்கள் இந்தப் பதினாறுபேர்.
19. யோசேப்பு, பென்யமின் என்பவர் யாக்கோபின் மனைவி ராகேலின் புதல்வர்.
20. யோசேப்பிற்கு எகிப்து நாட்டில் புதல்வர் பிறந்தனர். ஓன் நகர் அர்ச்சகர் போற்றி பெராவின் மகளான அசினத்து அவர்களை அவருக்குப் பெற்றெடுத்தாள். அவர்கள் மனாசே, எப்ராயீம் ஆவர்.
21. பென்யமினின் புதல்வர்: பேலா, பெக்கேர், அசுபேல், கேரா, நாகமான், ஏகி, ரோசு, முப்பிம், குப்பிம், அருது.
22. ராகேல் வழிவந்த யாக்கோபின் புதல்வர் மொத்தம் பதினான்கு பேர்.
23. தாணின் மகன், ஆசும்.
24. நப்தலியின் புதல்வர்: யாகுட்சேல், கூனி, ஏட்சேர், சில்லேம்.
25. இவர்கள் லாபான் தன் மகள் ராகேலுக்குக் கொடுத்த பில்காவின் பிள்ளைகள். இவள் வழியாக யாக்கோபுக்குப் பிறந்தவர்கள் மொத்தம் ஏழுபேர்.
26. யாக்கோபின் புதல்வர்களுடைய மனைவியரைத் தவிர அவரது வழிமரபாக எகிப்தில் குடிபுகுந்தோர் மொத்தம் அறுபத்தாறுபேர்.
27. எகிப்து நாட்டில் யோசேப்பிற்குப் பிறந்த புதல்வர்களோ இருவர். ஆகவே எகிப்தில் குடிபுகுந்த யாக்கோபின் குடும்பத்தார் எல்லோரும் எழுபதுபேர் ஆவர்.
28. கோசேன் பகுதியில் யோசேப்பு தம்மை வந்து சந்திக்குமாறு யாக்கோபு யூதாவைத் தமக்குமுன் அனுப்பியிருந்தார். அவர்கள் கோசேன் வந்து சேர்ந்தார்கள்.
29. யோசேப்பு தம் தேரைப் பூட்டிக்கொண்டு தம் தந்தை இஸ்ரயேலைச் சந்திக்கச் சென்றார். யோசேப்பு தம் தந்தையைக் கண்டவுடன் அவரை அரவணைத்து அவர் தோளில் சாய்ந்து கொண்டு வெகுநேரம் அழுதார்.
30. அப்பொழுது, இஸ்ரயேல் யோசேப்பிடம், "இப்பொழுது நான் சாகத் தயார். நீ உயிரோடு தான் இருக்கிறாய்! உன் முகத்தைக் கண்ணாரக் கண்டுவிட்டேன்!" என்றார்.
31. பின்னர் யோசேப்பு தம் சகோதரரையும் தம் தந்தையின் குடும்பத்தாரையும் நோக்கி, "நான் பார்வோனிடம் போய், கானான் நாட்டிலிருந்து என் சகோதரரும், என் தந்தையின் குடும்பத்தாரும் என்னிடம் வந்திருக்கிறார்கள்.
32. அவர்கள் மந்தை மேய்ப்பவர்கள். மந்தைகளை வைத்துப் பேணுவது அவர்கள் தொழில். அவர்கள் தங்கள் ஆடு மாடுகளையும் தங்களுக்குச் சொந்தமான யாவற்றையும் தங்களுடன் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று அவருக்குத் தெரிவிப்பேன்.
33. பார்வோன் உங்களை வரவழைத்து, உங்கள் தொழில் என்ன? என்று கேட்கும்பொழுது,
34. நீங்கள் மறுமொழியாக, எங்கள் சிறுவயது முதல் இந்நாள்வரை உம் பணியாளர்களாகிய நாங்கள் எங்கள் மூதாதையரைப்போல் மேய்ப்பவர்களாய் இருக்கிறோம் என்று சொல்லுங்கள். நீங்கள் கோசேன் பகுதியில் குடியிருக்கும்படி அனுமதிக்கப்படுவீர்கள். ஏனெனில், ஆடு மேய்ப்பவர்கள் அனைவரும் எகிப்தியருக்கு அருவருப்பானவர்கள்" என்றார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 விவிலியம் / பழைய ஏற்பாடு - புத்தகம் 1 - தொடக்கநூல் - Page 6 Empty Re: விவிலியம் / பழைய ஏற்பாடு - புத்தகம் 1 - தொடக்கநூல்

Post by சிவா Sat Apr 12, 2014 1:30 am

அதிகாரம் 47.

1. பின்பு, யோசேப்பு பார்வோனிடம் போய், "என் தந்தையும் என் சகோதரர்களும், தங்கள் ஆடு மாடுகளோடும் தங்களுக்குச் சொந்தமான எல்லாவற்றோடும் கானான் நாட்டிலிருந்து வந்திருக்கிறார்கள். தற்பொழுது அவர்கள் கோசேன் பகுதியில் தங்கியிருக்கிறார்கள்" என்று அறிவித்தார்.
2. மேலும் தம் சகோதரரில் ஜந்து பேரைப் பார்வோன் முன்பாகக் கொண்டுவந்து நிறுத்தினார்.
3. பார்வோன் அவர்களை நோக்கி, உங்கள் தொழில் என்ன? என்று கேட்க, அவர்கள் அவனிடம் "உம் பணியாளர்களாகிய நாங்கள் எங்கள் மூதாதையரைப்போல் ஆடு மேய்ப்பவர்கள்.
4. கானான் நாட்டில் பஞ்சம் மிகக் கடுமையாய் இருப்பதாலும், உம் பணியாளர்களாகிய எங்கள் மந்தைகளுக்கு மேய்ச்சல் இல்லாது போனதாலும், சிறிதுகாலம் இந்நாட்டில் தங்கி இருக்க வந்திருக்கிறோம். உம் பணியாளர்களாகிய நாங்கள் கோசேன் பகுதியில் தற்போதைக்குக் குடியிருக்க இசைவு தருமாறு வேண்டுகிறோம்" என்றனர்.
5. அப்பொழுது பார்வோன் யோசேப்பை நோக்கி, "உம் தந்தையும் உம் சகோதரர்களும் உம்மிடம் வந்திருக்கிறார்கள் அல்லவா?
6. எகிப்து நாடு உமக்கு முன்பாக இருக்கிறது. இந்த நாட்டின் சிறந்த பகுதியில் உம் தந்தையும் சகோதரரும் குடியேறும்படி செய்யும். கோசேன் பகுதியில் அவர்கள் வாழட்டும். அவர்களில் திறமையுள்ளவர்கள் உண்டென்று நீர் அறிவீரானால், எனக்குச் சொந்தமான மந்தைகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளாக அவர்களை ஏற்படுத்தலாம்" என்றான்.
7. பின்னர், யோசேப்பு தம் தந்தையை அழைத்துவந்து அரசன் முன் நிறுத்தினார். யாக்கோபு பார்வோனுக்கு வாழ்த்துமொழி கூறினார்.
8. பார்வோன் யாக்கோபை நோக்கி, உமது வயதென்ன? என்று வினவினான்.
9. அதற்கு யாக்கோபு பார்வோனை நோக்கி, "என் வாழ்க்கைப் பயண நாள்கள் நூற்றுமுப்பது ஆண்டுகள். அவை எண்ணிக்கையில் குறைந்தவை: துன்பத்தில் மிகுந்தவை. ஆனால் அவை என் மூதாதையரின் நாள்களுக்குக் குறைந்தவையே" என்றார்.
10 யாக்கோபு பார்வோனுக்கு வாழ்த்து மொழி கூறியபின் அவனிடம் விடைபெற்றுச் சென்றார்.
11 பார்வோன் கட்டளையிட்டிருந்தபடி, யோசேப்பு தம் தந்தைக்கும் சகோதரர்களுக்கும் எகிப்து நாட்டின் மிகவும் வளமான இராம்சேசு நிலப்பகுதியை உரிமையாகக் கொடுத்து, அங்கு அவர்களைக் குடியேற்றினார்.
12. மேலும், யோசேப்பு தம் தந்தை, தம் சகோதரர், தம் தந்தையின் குடும்பத்தார் அனைவருக்கும் அவரவர் பிள்ளைகளின் எண்ணிக்கைக்கேற்ப உணவளித்து அவர்களைப் பேணிக் காத்துவந்தார்.
13. பஞ்சம் மிகக் கடுமையாய் இருந்தது. உலகெங்கும் உணவு கிடைக்கவில்லை. குறிப்பாக எகிப்துநாடும் கானான்நாடும் பஞ்சத்தால் வாடின.
14. எகிப்தியருக்கும் கானானியருக்கும் தானியம் விற்றதால் கிடைத்த பணத்தையெல்லாம் ஒன்று சேர்த்து யோசேப்பு பார்வோனின் அரண்மனைக்குக் கொண்டுவந்தார்.
15. எகிப்து, கானான் நாடுகளில் பணம் தீர்ந்துபோனபோது, எகிப்தியர் எல்லாரும் யோசேப்பிடம் வந்து, "எங்களுக்கு உணவு தாரும்: பணம் இல்லையென்பதால், உம் முன் நாங்கள் ஏன் சாகவேண்டும்?" என்றனர்.
16. அதற்கு அவர், "உங்களிடம் பணம் இல்லையெனில், உங்கள் மந்தைகளைக் கொண்டு வாருங்கள்: அவற்றுக்குப் பதிலாக உங்களுக்குத் தானியம் தருவேன்" என்றார்.
17. எனவே அவர்கள் போய் மந்தைகளைக் கொண்டு வந்தபோது, யோசேப்பு குதிரைகளையும் ஆட்டுமந்தைகளையும், மாட்டுமந்தைகளையும் கழுதைகளையும் வாங்கிக் கொண்டு அவற்றுக்குப் பதிலாக அவர்களுக்கு உணவுப் பொருள்கள் கொடுத்தார். இப்படிக் கால்நடைகளையெல்லாம் ஈடாகப் பெற்று அவர்களை அந்த ஆண்டு காப்பாற்றினார்.
18. அந்த ஆண்டு முடிந்தபின் அடுத்த ஆண்டில் அவர்கள் மீண்டும் வந்து, அவரை நோக்கி, "எம் தலைவரிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. பணம் தீர்ந்து போயிற்று. கால்நடைகளும் எம் தலைவருக்கு சொந்தமாகிவிட்டன. எம் தலைவருக்கு அளிக்க எங்கள் உடலும் நிலமும் தவிர எங்களிடம் எஞ்சியிருப்பது எதுவுமில்லை.
19. உம் கண்முன் நாங்களும் எங்கள் நிலமும் ஏன் அழிய வேண்டும்? எங்களையும் எங்கள் நிலத்தையும் உணவுப் பொருளுக்கு ஈடாக எடுத்துக்கொள்ளும். நாங்களும் எங்கள் நிலங்களும் பார்வோனுக்கு உடைமைகளாய் இருப்போம். நாங்கள் சாகாமல் உயிரோடிருக்கவும் நிலம் பாழடையாமல் இருக்கவும் எங்களுக்குத் தானியம் தாரும்" என்றனர்.
20. அவ்வாறே யோசேப்பு எகிப்திய நிலம் முழுவதையும் பார்வோனுக்கென்று வாங்கிக்கொண்டார். ஏனென்றால், பசியின் கொடுமையால் எகிப்தியர் அனைவரும் தங்கள் வயல்கள் எல்லாவற்றையும் விற்றுவிட்டனர். அந்த நாடே பார்வோனுக்குச் சொந்தமாயிற்று.
21. எகிப்தின் ஓர் எல்லையிலிருந்து மறு எல்லைவரை இருந்த மக்கள் அனைவரையும் யோசேப்பு அடிமை வேலைக்கு உள்ளாக்கினார்.
22. அர்ச்சகர்களின் வயல்களை மட்டும் அவர் வாங்கவில்லை. ஏனென்றால், பார்வோன் அவற்றை அவர்களுக்கு மானியமாகக் கொடுத்திருந்தான். பார்வோன் அவர்களுக்குத் தந்திருந்த மானியத்திலிருந்து அவர்கள் உண்டு வந்ததால், அவர்கள் தங்கள் நிலபுலன்களை விற்கவில்லை.
23. அப்பொழுது யோசேப்பு மக்களை நோக்கி, "இன்று உங்களையும், உங்கள் நிலங்களையும் பார்வோனுக்கு உடைமையாக வாங்கிவிட்டேன். இப்போது, உங்களுக்கு விதைத்தானியம் தருகிறேன். அதை நிலத்தில் விதையுங்கள்.
24. விளைச்சலில் ஜந்திலொரு பாகம் பார்வோனுக்குச் செலுத்துங்கள். எஞ்சிய நான்கு பாகம் உங்கள் வயல்களுக்கு விதையாகவும், உங்களுக்கும் உங்கள் வீட்டாருக்கும் பிள்ளைகளுக்கும் உணவாகவும் இருக்கட்டும்" என்று சொன்னார்.
25. அதற்கு அவர்கள், "எங்கள் உயிரைக் காப்பாற்றிவிட்டீர். தலைவராகிய உம் பார்வையில் எங்களுக்குத் தயை கிடைப்பதாக! நாங்கள் பார்வோனுக்கு அடிமைகளாகவே இருப்போம்" என்றார்கள்.
26. யோசேப்பு எகிப்து நாட்டில் நிலச்சட்டம் ஒன்று கொண்டுவந்தார். அது இன்றுவரை வழக்கில் உள்ளது. ஜந்திலொரு பாகம் பாவோனுக்கு உரியது என்றாயிற்று. அர்ச்சகர்களின் நிலபுலன்கள் மட்டும் பார்வோனின் உடைமையாகவில்லை.
27. இஸ்ரயேலர் எகிப்து நாட்டில் கோசேன் பகுதியில் குடியேறி, அதனை உரிமையாக்கிக்கொண்டு, அங்கே மிகவும் பல்கிப் பெருகினர்.
28. யாக்கோபு பதினேழு ஆண்டுகள் எகிப்து நாட்டில் இருந்தார். அவரது வாழ்நாள் மொத்தம் நூற்றுநாற்பத்தேழு ஆண்டுகள்.
29. அவர் தாம் இறக்கும் நாள் நெருங்கி வருவதைக் கண்டு, தம் மகன் யோசேப்பை வரவழைத்து, அவரை நோக்கி, "உன் பார்வையில் எனக்குத் தயை கிடைக்குமானால், உன் கையை என் தொடையின் கீழ் வைத்து, எனக்குக் கனிவும் பற்றும் காட்டுவதாக வாக்களி. என்னை எகிப்து நாட்டில் அடக்கம் செய்யாதே.
30. நான் என் மூதாதையரோடு துஞ்சியபின், என்னை எகிப்தினின்று எடுத்துக் கொண்டு சென்று, என் மூதாதையரின் கல்லறையில் என்னையும் அடக்கம் செய்" என்றார். அதற்கு யோசேப்பு, நீர் சொன்னபடியே செய்வேன் என்றார்.
31. அவரோ, எனக்கு ஆணையிட்டுக் கொடு என்றார். யோசேப்பும் ஆணையிட்டுக் கொடுத்தார். அப்பொழுது இஸ்ரயேல் படுக்கையின் தலைப்பக்கம் திரும்பித் தொழுதார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 விவிலியம் / பழைய ஏற்பாடு - புத்தகம் 1 - தொடக்கநூல் - Page 6 Empty Re: விவிலியம் / பழைய ஏற்பாடு - புத்தகம் 1 - தொடக்கநூல்

Post by சிவா Sat Apr 12, 2014 1:31 am

அதிகாரம் 48.

1. இந்நிகழ்ச்சிகளுக்குப்பின், உம் தந்தை உடல் நலமின்றி இருக்கிறார் என்று யோசேப்புக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர், தம் இரு மைந்தர்களாகிய மனாசேயையும் எப்ராயிமையும் அழைத்துக் கொண்டு சென்றார்.
2. இதோ உம் மகன் யோசேப்பு உம்மைக் காண வந்திருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டவுடன், யாக்கோபு பெருமுயற்சி செய்து எழுந்து கட்டிலின் மேல் அமர்ந்தார்.
3. யாக்கோபு யோசேப்பை நோக்கி, "எல்லாம் வல்ல இறைவன் கானான் நாட்டிலுள்ள லூசு என்ற இடத்தில் எனக்குக் காட்சியளித்து ஆசி வழங்கி,
4. நான் உன்னைப் பல்கிப் பெருகச் செய்வேன். உன்னைத் திரளான மக்கள் கூட்டமாக ஆக்குவேன். இந்நாட்டை உனக்கும் உனக்குப் பின் உன் வழிமரபினர்க்கும் என்றுமுள உடைமையாகத் தருவேன் என்று வாக்களித்தார்.
5. ஆகையால், நான் எகிப்திற்கு வந்து உன்னிடம் சேர்வதற்கு முன்பே உனக்கு இந்நாட்டில் பிறந்த இரு மைந்தரும் என் புதல்வர்களாய் இருப்பார்கள். ரூபன், சிமியோன் போன்று எப்ராயிமும் மனாசேயும் என்னுடையவர்களே.
6. இவர்களுக்குப்பின் உனக்குப் பிறக்கும் ஏனைய புதல்வர்கள் உன்னுடையவர்களாகவே இருப்பார்கள். அவர்கள் தங்கள் மூத்த சகோதரர்களின் பெயர் வரிசையில் சேர்க்கப்பட்டு, அவர்களது உரிமையில் பங்கு பெறுவர்.
7. ஏனெனில், நான் பதானைவிட்டு வரும்பொழுது, வழியில் ராகேல் கானான் நாட்டில் இறந்து என்னைத் துயரத்தில் ஆழ்த்தினாள். அப்பொழுது நான் எப்ராத்துக்கு அருகில் இருந்தேன். எப்ராத்துக்கு அதாவது பெத்லகேமுக்குப் போகும் வழியில் அவளை அடக்கம் செய்தேன்" என்றார்.
8. பின் அவர் யோசேப்பின் புதல்வர்களைக் கொண்டு, இவர்கள் யார்? என்று கேட்டார்.
9. யோசேப்பு தம் தந்தையிடம், இந்நாட்டில் கடவுள் எனக்குத் தந்தருளின மைந்தர்கள் இவர்கள்தாம் என்று சொல்ல, அவர், அவர்களை என் அருகில் கொண்டு வா: நான் அவர்களுக்கு ஆசி வழங்குகிறேன் என்றார்.
10 ஏனெனில், வயது முதிர்ச்சியினால் இஸ்ரயேலின் பார்வை மங்கிப்போக, அவர் எதையும் காண முடியாதவராய் இருந்தார். யோசேப்பு அவர்களை அவர் அருகில் கொண்டுவந்தவுடன் அவர் அவர்களை முத்தமிட்டு அரவணைத்துக் கொண்டார்.
11 பின்னர், இஸ்ரயேல் யோசேப்பை நோக்கி, "உன் முகத்தை நான் காண மாட்டேன் என்றே நினைத்தேன்: ஆனால் உன் வழிமரபையும் கூட நான் காணும்படி கடவுள் அருள்செய்தார்" என்றார்.
12. பின்னர் யோசேப்பு அவர்மடியிலிருந்த தம் பிள்ளைகளை இறக்கிவிட்டு, தரையில் முகம் குப்புறவிழுந்து வணங்கினார்.
13. பின்பு யோசேப்பு எப்ராயிமைத் தம் வலக்கையால் இஸ்ரயேலுக்கு இடப்புறமும், மனாசேயைத் தம் இடக்கையால் இஸ்ரயேலுக்கு வலப்புறமும் இருக்கும்படி அழைத்து வந்து இருவரையும் அவர் அருகில் நிறுத்தினார்.
14. ஆனால் இஸ்ரயேல் தம் கைகளைக் குறக்காக நீட்டி வலக்கையை இளையவன் எப்ராயிமின் தலைமீதும் இடக்கையை தலைமகன் மனாசேயின் தலைமீதும் மாற்றி வைத்தார்.
15. அவர் யோசேப்புக்கு ஆசி வழங்கிக் கூறியது: "என் தந்தையரான ஆபிரகாமும் ஈசாக்கும் எந்தக் கடவுள் திருமுன் நடந்து வந்தனரோ அந்தக் கடவுளே இன்று வரை என் வாழ்நாள் முழுவதும் எனக்கு ஆயராக விளங்கிவருகிறார்.
16. அந்தக் கடவுள், என்னை எல்லாத் தீமையினின்றும் மீட்ட தூதர், இச்சிறுவர்களுக்கு ஆசி வழங்குவாராக! மேலும், என் பெயரும், என் தந்தையரான ஆபிரகாம், ஈசாக்கின் பெயர்களும் இவர்கள் மூலம் நிலைநிற்பனவாக! மண்ணுலகில் இவர்கள் பெருந்திரளாகப் பல்குவார்களாக!"
17. தம் தந்தை வலக்கையை எப்ராயிம் தலைமேல் வைத்திருந்தது யோசேப்புக்குப் பிடிக்கவில்லை. எனவே அவர் எப்ராயிம் தலைமேலிருந்த தம் தந்தையின் கையை மனாசேயின் தலைமேல் வைக்கும்படி எடுக்க முயன்றார்.
18. யோசேப்பு தம் தந்தையை நோக்கி, "தந்தையே! இது சரியன்று: இவன் தான் தலைமகன். இவன் தலையின் மேல் உமது வலக்கையை வையும்" என்றார்.
19. ஆனால் அவர் தந்தை மறுத்து, "தெரியும் மகனே, எனக்குத் தெரியும். இவனும் ஒரு மக்களினமாகப் பல்கிப் பெருகுவான். ஆனால் இவன் தம்பி இவனிலும் பெரியவன் ஆவான். அவன் வழிமரபினர் மக்களினங்களாகப் பெருகுவர்" என்று கூறினார்.
20. மேலும், அவர் அன்று அவர்களுக்கு ஆசி வழங்கிக் கூறியது: " எப்ராயிம், மனாசேயைப்போல் உன்னையும் கடவுள் வளரச் செய்வாராக என்று உங்கள் பெயரால் இஸ்ரயேல் ஆசி வழங்கும்." இவ்வாறு அவர் எப்ராயிமை மனாசேக்கு முன் வைத்தார்.
21. பின்பு இஸ்ரயேல் யோசேப்பை நோக்கி, "இதோ நான் சாகப் போகிறேன். கடவுள் உங்களோடு இருப்பார். உங்கள் மூதாதையரின் நாட்டிற்கு உங்களை அவர் திரும்பவும் நடத்திச் செல்வார்.
22. நான் என் வாளாலும் வில்லாலும் எமோரியரிடமிருந்து கைப்பற்றிய செக்கேம் பகுதியை, உன் சகோதரரை விட உயர்ந்தவன் என்ற முறையில், உனக்கே தருகிறேன்" என்றார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 விவிலியம் / பழைய ஏற்பாடு - புத்தகம் 1 - தொடக்கநூல் - Page 6 Empty Re: விவிலியம் / பழைய ஏற்பாடு - புத்தகம் 1 - தொடக்கநூல்

Post by சிவா Sat Apr 12, 2014 1:31 am

அதிகாரம் 49.

1. யாக்கோபு தம் புதல்வர்களை வரவழைத்துக் கூறியது: என்னைச் சுற்றி நில்லுங்கள். வரவிருக்கும் நாள்களில் உங்களுக்கு நிகழவிருப்பதை நான் அறிவிக்கப் போகிறேன்.
2. கூடிவந்து உற்றுக்கேளுங்கள்: யாக்கோபின் புதல்வர்களே! உங்கள் தந்தையாகிய இஸ்ரயேலுக்குச் செவிகொடுங்கள்.
3. ரூபன்! நீயே என் தலைமகன்: என் ஆற்றல் நீயே: என் ஆண்மையின் முதற்கனி நீயே: மாண்பிலும் வலிமையிலும் முதன்மை பெற வேண்டியவனும் நீயே!
4. ஆனால், நீரைப்போல் நிலையற்றவனாய், முதன்மையைப் பெறமாட்டாய். ஏனெனில் உன் தந்தையின் மஞ்சத்தில் ஏறினாய்: ஆம், என் படுக்கையைத் தீட்டுப்படுத்தினாய்.
5. சிமியோன், லேவி இருவரும் உண்மையில் உடன் பிறப்புகளே! அவர்களுடைய வாள்கள் வன்முறையின் கருவிகள்!
6. மனமே, அவர்களது மன்றத்தினுள் நுழையாதிரு! மாண்பே, அவர்களது அவையினுள் அமராதிரு! ஏனெனில் கோப வெறி கொண்டு அவர்கள் மனிதர்களைக் கொன்று குவித்தார்கள். வீம்புக்கென்று அவர்கள் எருதுகளை வெட்டி வதைத்தார்கள்.
7. அவர்களது கடுமையான சினம் சபிக்கப்படும். அவர்களது கொடுமையான கோபம் சபிக்கப்படும். அவர்களை யாக்கோபினின்று பிரிந்து போகச் செய்வேன். அவர்களை இஸ்ரயேலினின்று சிதறடிப்பேன்.
8. யூதா! உன் உடன்பிறந்தோர் உன்னைப் புகழ்வர். உன் கை உன் எதிரிகளின் கழுத்தில் இருக்கும். உன் தந்தையின் புதல்வர் உன்னை வணங்குவர்.
9. யூதா! நீ ஒரு சிங்கக்குட்டி, என் மகனே, இரை கவர்ந்து வந்துள்ளாய்! ஆண் சிங்கமென, பெண் சிங்கமென, அவன் கால் மடக்கிப் படுப்பான்: அவன் துயில் கலைக்கத் துணிந்தவன் எவன்?
10 அரசுரிமை உடையவர் வரும்வரையில் மக்களினங்கள் அவருக்குப் பணிந்திடும் வரையில், யூதாவைவிட்டுச் செங்கோல் நீங்காது: அவன் மரபை விட்டுக் கொற்றம் மறையாது.
11 அவன் திராட்சைக் செடியில் தன் கழுதையையும், செழுமையான திராட்சைக்கொடியில் தன் கழுதைக் குட்டியையும் கட்டுவான். திராட்சை இரசத்தில் தன் உடையையும் திராட்சைச் சாற்றில் தன் மேலாடையையும் தோய்த்திடுவான்.
12. அவன் கண்கள் திராட்சை இரசத்தினும் ஒளியுள்ளவை: அவன் பற்கள் பாலினும் வெண்மையானவை.
13. செபுலோன், கடற்கரையில் வாழ்ந்திடுவான்: அவன் கப்பல் துறையில் இருந்திடுவான்: அவனது எல்லை சீதோன் வரை பரவியிருக்கும்.
14. இசக்கார், இரு பொதியின் நடுவே படுத்திருக்கும் வலிமைமிகு கழுதை போன்றவன்.
15. அவன் இளைப்பாறும் இடம் நல்லதென்றும் நாடு மிக வசதியானதென்றும் காண்பான்: எனவே சுமை தூக்கத் தோள் சாய்ப்பான். அடிமை வேலைக்கு இணங்கிடுவான்.
16. தாண், இஸ்ரயேலின் குலங்களில் ஒன்றாக, தன் மக்களுக்கு நீதி வழங்குவான்.
17. தாண், வழியில் கிடக்கும் பாம்பு ஆவான்: அவன் பாதையில் தென்படும் நாகம் போல, குதிரைமேல் இருப்பவன் மல்லாந்து விழும்படி அதன் குதிங்காலைக் கடித்திடுவான்.
18. ஆண்டவரே! உமது மீட்பிற்காகக் காத்திருக்கிறேன்.
19. காத்து, கொள்ளைக் கூட்டத்தின் தாக்குதலுக்கு உள்ளாவான். அவனும் அவர்களைத் துரத்தித் தாக்கிடுவான்.
20. ஆசேரின் நிலம் ஊட்ட மிக்க உணவளிக்கும். மன்னனும் விரும்பும் உணவை அவன் அளித்திடுவான்.
21. நப்தலி, அழகிய மான்குட்டிகளை ஈனும் கட்டவிழந்த பெண்மான் ஆவான்.
22. யோசேப்பு, கனிதரும் கொடி ஆவான்: நீரூற்றருகில் மதில்மேல் படரும் கொடிபோல் கனி தருவான்.
23. அவனுக்கு வில்லில் வல்லார் தொல்லை கொடுத்தார்: அவன்மீது அம்பெய்தார்: அவனிடம் பகை வளர்த்தார்.
24. ஆனால், அவனது வில் உறுதியாய் நின்றது: அவனுடைய புயங்கள் துடிப்புடன் இயங்கின: ஏனெனில், யாக்கோபின் வலியவர் கைகொடுத்தார். இஸ்ரயேலின் பாறையே ஆயராய் இருந்தார்.
25. உன் தந்தையின் இறைவனே உனக்குத் துணையிருப்பார்: எல்லாம் வல்லவரே உனக்கு ஆசி வழங்குவார்: மேலே வானத்தினின்று வரும் ஆசியாலும் கீழே ஆழத்தினின்று வரும் ஆசியாலும் கொங்கைகளுக்கும் கருப்பைகளுக்கும் உரிய ஆசியாலும் அவர் உனக்கு ஆசி வழங்குவார்.
26. தந்தையின் ஆசிகள், பழம் பெரும் மலைகளின் ஆசியிலும், என்றுமுள குன்றுகளின் வள்ளன்மையிலும், வலியவை: இவை அனைத்தும் யோசேப்பின் மீது இறங்கிடுக! தன் சகோதரரின் இளவரசனாய்த் திகழ்வோனின் நெற்றியில் அவை துலங்கிடுக!
27. பென்யமின், பீறிக்கிழிக்கும் ஓநாய்க்கு ஒப்பானவன்: காலையில் வேட்டையாடிய இரையை அவன் விழுங்குவான்: மாலையில், கொள்ளைப் பொருளைப் பங்கிட்டுக் கொள்வான்".
28. இவர்கள் அனைவரும் இஸ்ரயேலின் பன்னிரு குலத்தார் ஆவர். இவற்றை மொழிந்து இவர்களின் தந்தை இவர்கள் ஒவ்வொருவருக்கும் உரிய ஆசியை அளித்து வாழ்த்துரை வழங்கினார்.
29. மேலும் அவர் அவர்களுக்குக் கட்டளையிட்டுக் கூறியது: "இதோ நான் என் இனத்தவரோடு சேர்க்கப்படவிருக்கிறேன். என்னை என் தந்தையருடன் இத்தியனான எப்ரோனின் நிலத்திலுள்ள குகையில் அடக்கம் செய்யுங்கள்.
30. அது கானான் நாட்டில் மம்ரே பகுதிக்கு அருகேயுள்ள மக்பேலாவின் நிலத்தில் அமைந்துள்ளது. ஆபிரகாம் இத்தியனான எப்ரோனிடமிருந்து அந்த நிலத்தைக் கல்லறை நிலத்திற்கென விலைக்கு வாங்கினார்.
31. அங்கே ஆபிரகாமையும் அவர் மனைவி சாராவையும் அடக்கம் செய்தனர்: அங்கு ஈசாக்கையும் அவர் மனைவி ரெபேக்காவையும் அடக்கம் செய்தனர்: அங்கே தான் நானும் லேயாவை அடக்கம் செய்துள்ளேன்.
32. அந்நிலமும் அக்கல்லறையும் இத்தியரிடமிருந்து விலைக்கு வாங்கப்பெற்றவை."
33. யாக்கோபு தம் புதல்வர்களுக்குக் கட்டளைகளை வழங்கி முடித்தபின், தம் கால்களைப் படுக்கையினுள் மடக்கிக்கொண்டு உயிர் நீத்து, தம் இனத்தாருடன் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 விவிலியம் / பழைய ஏற்பாடு - புத்தகம் 1 - தொடக்கநூல் - Page 6 Empty Re: விவிலியம் / பழைய ஏற்பாடு - புத்தகம் 1 - தொடக்கநூல்

Post by சிவா Sat Apr 12, 2014 1:31 am

அதிகாரம் 50.

1. அப்பொழுது யோசேப்பு, தம் தந்தையின் முகத்தின் மீது விழுந்து அழுது அவரை முத்தமிட்டார்.
2. பின்பு, தம் தந்தையின் உடலை மருத்துவ முறையில் பாதுகாப்புச் செய்யும்படி தம் பணியாளர்களான மருத்துவர்களுக்கு யோசேப்பு கட்டளையிட்டார். அவர்களும் அப்படியே செய்தனர்.
3. இதற்கு நாற்பது நாள்கள் தேவைப்பட்டன. ஏனெனில் ஒரு சடலத்திற்கு முறையான பாதுகாப்புச் செய்ய நாற்பது நாள்கள் தேவைப்படும். எகிப்தியர் அவருக்காக எழுபது நாள்கள் துக்கம் கொண்டாடினர்.
4. துக்க நாள்கள் முடிந்த பின், யோசேப்பு பார்வோன் வீட்டாரிடம், "உங்கள் பார்வையில் எனக்குத் தயை கிடைத்திருக்கிறது என்றால், பார்வோனின் செவிகளில் இவ்வாறு சொல்லுங்கள்:
5. தந்தை, நான் சாகும் வேளை வந்துவிட்டது. ஆகவே, நான் எனக்காகக் கானான் நாட்டில் வெட்டி வைத்துள்ள கல்லறையில் என்னை நீ அடக்கம் செய் என்று சொல்லி என்னிடம் உறுதிமொழி பெற்றுக்கொண்டார். ஆகவே, இப்பொழுது நான் அங்கே போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர எனக்கு விடை கொடுங்கள்" என்றார்.
6. பார்வோன், "நீர் உறுதிமொழி கொடுத்துள்ளபடியே உம் தந்தையை அடக்கம் செய்யப் போய்வாரும்" என்றான்.
7. ஆகவே, யோசேப்பு தம் தந்தையை அடக்கம் செய்யச் செல்கையில், பார்வோனின் அலுவலர், குடும்பப் பெரியோர், எகிப்து நாட்டுப் பெரியோர் அனைவரும் அவருடன் சென்றனர்.
8. யோசேப்பின் வீட்டார், அவர் சகோதரர், அவர் தந்தை வீட்டார் அனைவரும் அவருடன் சென்றனர். அவர்கள் தங்கள் குழந்தைகளையும் கால்நடைகளையும் மட்டும் கோசேன் பகுதியில் விட்டுச் சென்றனர்.
9. தேர்களும் குதிரை வீரர்களும் அவருடன் சென்றார்கள். இப்படியாக மிகப்பெரிய பரிவாரம் அவரைப் புடை சூழ்ந்து சென்றது.
10 அவர்கள் யோர்தான் நதிக்கு அப்பால் இருந்த கோரேன் அத்தத்து என்ற இடத்திற்கு வந்ததும் அங்கே ஓலமிட்டுக் கதறி ஒப்பாரி வைத்துப் பெரிதும் புலம்பினர். யோசேப்பு தம் தந்தைக்காக ஏழுநாள் புலம்பல் சடங்கு நடத்தினார்.
11 அங்கே, கானான் நாட்டில் வாழ்ந்த மக்கள் கோரேன் அத்தத்தில் நடந்த புலம்பல் சடங்கைக் கண்டு, "இது எகிப்தியரது பெருந்துயர்ப் புலம்பல் சடங்கு" என்றனர். ஆகவேதான் யோர்தானுக்கு அப்பால் இருந்த அந்த இடத்திற்கு ஆபேல் மிஸ்ராயிம் என்ற பெயர் வழங்கலாயிற்று.
12. இப்படியாக அவருடைய புதல்வர் அவர் கட்டளைப்படியே அவருக்குச் செய்ய வேண்டியது எல்லாம் செய்தனர்.
13. அவருடைய புதல்வர் அவரைக் கானான் நாட்டிற்கு எடுத்துச் சென்று மம்ரேக்கு எதிரில் மக்பேலா என்ற நிலத்தில் இருந்த குகையில் அடக்கம் செய்தனர். இந்த இடத்தை ஆபிரகாம் தமக்கென்று கல்லறை நிலம் இருக்க வேண்டும் என்பதற்காக எப்ரோன் என்ற இத்தியனிடமிருந்து விலைக்கு வாங்கியிருந்தார்.
14. யோசேப்பு தம் தந்தையை அடக்கம் செய்தபின், அவரும் அவர் சகோதரரும் அவருடன் அவர் தந்தையை அடக்கம் செய்யச் சென்றிருந்த அனைவரும் எகிப்திற்குத் திரும்பினர்.
15. அப்பொழுது, யோசேப்பின் சகோதரர் தங்கள் தந்தை இறந்துவிட்டதைக் கண்டு, "யோசேப்பு நாம் அவருக்குச் செய்த அனைத்துத் தீமைகளையும் கருதி, இப்பொழுது நம்மை வெறுத்து உறுதியாகப் பழி வாங்குவர்" என்று எண்ணினர்.
16. எனவே அவர்கள் யோசேப்புக்கு இவ்வாறு செய்தி அனுப்பினர்: "உம் தந்தை இறப்பதற்குமுன், உன் சகோதரர் உனக்குத் தீங்கிழைத்ததன் மூலம் உண்டான குற்றப்பழியையும், பாவத்தையும் மன்னித்துவிடு என்று யோசேப்புக்குச் சொல்லுங்கள் என்று எங்களுக்குக் கட்டளையிட்டார்.
17. ஆகவே, இப்பொழுது உம்தந்தையின் கடவுளுடைய அடியார்களாகிய எங்களின் குற்றப்பழியை மன்னித்தருளும்." அவர்கள் இதைத் தம்மிடம் அறிவித்தபோது யோசேப்பு அழுதார்.
18. அவர் சகோதரரும் அழுது அவர்முன் தாள்பணிந்து, நாங்கள் உம் அடிமைகள் என்றனர்.
19. யோசேப்பு அவர்களிடம், "அஞ்சாதீர்கள்: நான் கடவுளுக்கு இணையானவனா?
20. நீங்கள் எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள். ஆனால் கடவுள் அதை இன்று நடப்பது போல், திரளான மக்களை உயிரோடு காக்கும் பொருட்டு நன்மையாக மாற்றிவிட்டார்.
21. ஆகவே இப்பொழுது அஞ்சவேண்டாம். உங்களையும் உங்கள் குழந்தைகளையும் நான் பேணிக்காப்பேன்" என்றார். இப்படியாக அவர் அவர்களுக்கு ஆறுதல் அளித்தார்: அவர்களுடன் இதமாகப் பேசிவந்தார்.
22. யோசேப்பும் அவர் தந்தையின் வீட்டாரும் எகிப்தில் குடியிருந்தனர். யோசேப்பு நூற்றுப்பத்து ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார்.
23. எப்ராயிமின் மூன்றாம் தலைமுறையைப் பார்க்கும் வரையிலும் மனாசேயின் மகன் மாக்கிரின் குழந்தைகள் தம் மடியில் விளையாடும் வரையிலும் யோசேப்பு உயிர் வாழ்ந்தார்.
24. யோசேப்பு தம் சகோதரரிடம், "நான் சாகும் வேளை வந்துவிட்டது. ஆனால் கடவுள் உங்களைக் கனிவுடன் சந்திக்க உறுதியாக வருவார். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்குத் தாம் கொடுப்பதாக வாக்களித்த நாட்டிற்கு இந்த நாட்டிலிருந்து அவர் உங்களை அழைத்துச் செல்வார்" என்றார்.
25. மீண்டும் யோசேப்பு "கடவுள் உங்களைக் கனிவுடன் சந்திக்க உறுதியாக வருவார். அப்பொழுது, நீங்கள் என் எலும்புகளை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்" என்று சொல்லி, இஸ்ரயேல் புதல்வரிடமிருந்து உறுதிமொழி பெற்றுக்கொண்டார்.
26. யோசேப்பு தம் நூற்றுப்பத்தாம் வயதில் இறந்தார். அவரது உடலை மருத்துவ முறைப்படி பாதுகாப்புச் செய்து எகிப்தில் ஒரு பெட்டியில் வைத்தனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 விவிலியம் / பழைய ஏற்பாடு - புத்தகம் 1 - தொடக்கநூல் - Page 6 Empty Re: விவிலியம் / பழைய ஏற்பாடு - புத்தகம் 1 - தொடக்கநூல்

Post by Dr.S.Soundarapandian Sat Jun 21, 2014 2:45 pm

:வணக்கம்: 


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

 விவிலியம் / பழைய ஏற்பாடு - புத்தகம் 1 - தொடக்கநூல் - Page 6 Empty Re: விவிலியம் / பழைய ஏற்பாடு - புத்தகம் 1 - தொடக்கநூல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Back to top

- Similar topics
» கம்பராமாயணம் மற்றும் சிலப்பதிகாரம் புத்தகம் அதன் உரையுடன் கூடிய புத்தகம்
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் நூல் : புத்தகம் போற்றுதும் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை. எழுத்தாக்கம் கவிஞர் ச. கோபிநாத்
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் நூல் : புத்தகம் போற்றுதும் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை. எழுத்தாக்கம் கவிஞர் ச. கோபிநாத்
» ஒரு புதிய ஏற்பாடு
» இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum