ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவிலியம் / பழைய ஏற்பாடு - புத்தகம் 1 - தொடக்கநூல்

2 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

 விவிலியம் / பழைய ஏற்பாடு - புத்தகம் 1 - தொடக்கநூல் - Page 5 Empty விவிலியம் / பழைய ஏற்பாடு - புத்தகம் 1 - தொடக்கநூல்

Post by சிவா Sat Apr 12, 2014 1:12 am

First topic message reminder :

அதிகாரம் 1.

1.    தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது,
2.    மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது.
3.    அப்பொழுது கடவுள், ஒளி தோன்றுக! என்றார்: ஒளி தோன்றிற்று. கடவுள் ஒளி நல்லது என்று கண்டார்.
4.    கடவுள் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார்.
5.    கடவுள் ஒளிக்குப் பகல் என்றும் இருளுக்கு இரவு என்றும் பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று முதல் நாள் முடிந்தது.
6.    அப்பொழுது கடவுள், நீர்த்திரளுக்கு இடையில், வானம் தோன்றுக! அது நீரினின்று நீரைப் பிரிக்கட்டும் என்றார்.
7.    கடவுள் வானத்தை உருவாக்கி வானத்திற்குக் கீழுள்ள நீரையும் வானத்திற்கு மேலுள்ள நீரையும் பிரித்தார். அது அவ்வாறே ஆயிற்று.
8.    கடவுள் வானத்திற்கு விண்ணுலகம் என்று பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று இரண்டாம் நாள் முடிந்தது.
9.    அப்பொழுது கடவுள், விண்ணுலகுக்குக் கீழுள்ள நீர் எல்லாம் ஓரிடத்தில் ஒன்றுசேர உலர்ந்த தரை தோன்றுக! என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
10.   கடவுள் உலர்ந்த தரைக்கு நிலம் என்றும் ஒன்றுதிரண்ட நீருக்குக் கடல் என்றும் பெயரிட்டார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.
11.   அப்பொழுது கடவுள், புற்பூண்டுகளையும் விதை தரும் செடிகளையும், கனி தரும் பழமரங்களையும் அந்த அந்த இனத்தின்படியே நிலம் விளைவிக்கட்டும் என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
12.   புற்பூண்டுகளையும் விதையைப் பிறப்பிக்கும் செடிகளையும் கனிதரும் மரங்களையும் அந்த அந்த இனத்தின்படி நிலம் விளைவித்தது. கடவுள் அது நல்லது என்று கண்டார்.
13.   மாலையும், காலையும் நிறைவுற்று மூன்றாம் நாள் முடிந்தது.
14.   அப்பொழுது கடவுள், பகலையும் இரவையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் காலங்கள், நாள்கள், ஆண்டுகள் ஆகியவற்றைக் குறிப்பதற்கும் விண்விரிவினில் ஒளிப்பிழம்புகள் தோன்றுக!
15.   அவை மண்ணுலகிற்கு ஒளிதர விண்விரிவினில் ஒளிப்பிழம்புகளாக இருக்கட்டும் என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
16.   கடவுள் இருபெரும் ஒளிப்பிழம்புகளை உருவாக்கினார். பகலை ஆள்வதற்குப் பெரிய ஒளிப்பிழம்பையும், இரவை ஆள்வதற்குச் சிறிய ஒளிப்பிழம்பையும் மற்றும் விண்மீன்களையும் அவர் உருவாக்கினார்.
17.   கடவுள் மண்ணுலகிற்கு ஒளிதர விண்ணுலக வானத்தில் அவற்றை அமைத்தார்:
18.   பகலையும் இரவையும் ஆள்வதற்கும் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் அவற்றை அமைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.
19.   மாலையும் காலையும் நிறைவுற்று நான்காம் நாள் முடிந்தது.
20.   அப்பொழுது கடவுள், திரளான உயிரினங்களைத் தண்ணீர் தோற்றுவிப்பதாக! விண்ணுலக வானத்தில் நிலத்திற்கு மேலே பறவைகள் பறப்பனவாக! என்றார்.
21.   இவ்வாறு, கடலின பெரும் பாம்புகளையும், திரள் திரளாக நீரில் நீந்திவாழும் உயிரினங்களையும், இறக்கையுள்ள எல்லாவிதப் பறவைகளையும் அவ்வவற்றின் இனத்தின்படி கடவுள் படைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.
22.   கடவுள் அவற்றிற்கு ஆசி வழங்கி பலுகிப் பெருகிக் கடல் நீரை நிரப்புங்கள். பறவைகளும் மண்ணுலகில் பெருகட்டும் என்றுரைத்தார்.
23.   மாலையும் காலையும் நிறைவுற்று, ஜந்தாம் நாள் முடிந்தது.
24.   அப்பொழுது கடவுள், கால்நடைகள், ஊர்வன, காட்டுவிலங்குகள் ஆகியவற்றை அவ்வவற்றின் இனத்தின்படி நிலம் தோற்றுவிப்பதாக என்றார்.
25.   கடவுள் காட்டு விலங்குகளையும் கால்நடைகளையும் நிலத்தில் ஊர்வன யாவற்றையும் அவ்வவற்றின் இனத்தின்படி உருவாக்கினார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.
26.   அப்பொழுது கடவுள், மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும் என்றார்.
27.   கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்: கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்: ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.
28.   கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்: அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்: கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள் என்றார்.
29.   அப்பொழுது கடவுள், மண்ணுலகெங்கும் உள்ள விதை தரும் செடிகள், பழமரங்கள், அனைத்தையும் உங்களுக்கு நான் கொடுத்துள்ளேன்: இவை உங்களுக்கு உணவாகட்டும்.
30.   எல்லாக் காட்டுவிலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் பசுமையான செடிகள் அனைத்தையும் நான் உணவாகத் தந்துள்ளேன் என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
31.   கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன. மாலையும் காலையும் நிறைவுற்று ஆறாம் நாள் முடிந்தது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


 விவிலியம் / பழைய ஏற்பாடு - புத்தகம் 1 - தொடக்கநூல் - Page 5 Empty Re: விவிலியம் / பழைய ஏற்பாடு - புத்தகம் 1 - தொடக்கநூல்

Post by சிவா Sat Apr 12, 2014 1:27 am

அதிகாரம் 37.

1. கானான் நாட்டில் தம் தந்தை தங்கியிருந்த நிலப்பகுதிகளில் யாக்கோபும் வாழ்ந்து வந்தார்.
2. யாக்கோபின் குடும்ப வரலாறு இதுவே: யோசேப்பு பதினேழு வயது இளைஞனாய் இருந்தபோது, தம் தந்தையின் மறு மனைவியரான பிலகா, சில்பா என்பவர்களுடைய புதல்வர்களான தம் சகோதரரோடு மந்தை மேய்த்துக் கொண்டிருந்தார். அவர் தம் சகோதரர் செய்து வந்த தீச்செயலைப் பற்றித் தம் தந்தைக்குத் தகவல் கொடுத்தார்.
3. இஸ்ரயேல் முதிர்ந்த வயதில் தமக்கு யோசேப்பு பிறந்தமையால் அவரை மற்றெல்லாப் புதல்வரையும் விட அதிகமாக நேசித்து வந்தார். அவருக்கு அழகு வேலைப்பாடுகள் நிறைந்த ஓர் அங்கியைச் செய்து கொடுத்தார்.
4. அவருடைய சகோதரர்கள் தங்கள் தந்தை அவரை எல்லாரிலும் அதிகமாய் நேசிக்கிறாரென்று கண்டு அவரை வெறுத்தனர். அவர்களால் அவரோடு பாசத்துடன் பேச இயலவில்லை.
5. யோசேப்பு தாம் கண்ட ஒரு கனவைத் தம் சகோதரருக்குத் தெரிவித்தார். இதனால் அவர்கள் அவரை மேலும் அதிகமாய் வெறுத்தனர்.
6. அவர் அவர்களை நோக்கி, "நான் கண்ட இந்தக் கனவைக் கேளுங்கள்.
7. நாம் வயலில் அறுத்த அரிகளைக் கட்டும் பொழுது திடீரென எனது அரிக்கட்டு எழுந்து நிற்க, உங்கள் அரிக்கட்டுகள் என் அரிக்கட்டைச் சுற்றி வணங்கின" என்றார்.
8. அப்பொழுது அவர் சகோதரர் அவரை நோக்கி, "நீ எங்கள் மீது உண்மையிலேயே ஆட்சி செலுத்தப்போகிறாயோ? நீ எங்கள் மீது உண்மையிலேயே அதிகாரம் செலுத்தப் போகிறாயோ?" என்று கேட்டனர். இவ்விதக் கனவுகளின் காரணமாகவும் அவருடைய தகவல்களின் காரணமாகவும் அவரை அவர்கள் இன்னும் அதிகமாய் வெறுத்தனர்.
9. மேலும் அவர் தாம் கண்ட வேறொரு கனவையும் தம் சகோதரர்களுக்கு விவரித்தார். "நான் மீண்டும் ஒரு கனவு கண்டேன்: அதில் கதிரவனும் நிலவும் பதினொரு விண்மீன்களும் என்னை வணங்கக் கண்டேன்" என்றார்.
10 இதை அவர் தம் தந்தைக்கும் சகோதரர்களுக்கும் விவரித்தபோது, அவர் தந்தை அவரைக் கண்டித்து, "நீ கண்ட இந்தக் கனவின் பொருள் என்ன? நானும் உன் தாயும், உன் சகோதரர்களும் தரைமட்டும் தாழ்ந்து உன்னை வணங்க வேண்டுமா?" என்று கேட்டார்.
11 அதன் பொருட்டும் அவர் சகோதரர் அவர் மீது பொறாமை கொண்டனர். அவர் தந்தையோ இக்காரியத்தைத் தம் மனத்தில் கொண்டார்.
12. அப்படி இருக்கையில் அவர் சகோதரர் செக்கேமில் தம் தந்தையின் மந்தைகளை மேய்க்கச் சென்றனர்.
13. இஸ்ரயேல் யோசேப்பை நோக்கி: "உன் சகோதரர்கள் செக்கேமில் ஆடு மேய்க்கிறர்கள் அல்லவா? அவர்களிடம் உன்னை அனுப்பப் போகிறேன்," என்று கூற, அவர், "இதோ நான் தயார்" என்றார்.
14. அவர் அவரிடம், "நீ போய் உன் சகோதரர், மந்தைகள் நலமா என்று விசாரித்து வந்து எனக்குத் தெரிவி" என்று சொல்லி, எபிரோன் பள்ளத்தாக்கிலிருந்து அவரை அனுப்பினார். அவரும் செக்கேமிற்கு வந்தார்.
15. அவர் புல்வெளியில் வழி தவறி அலைவதை ஒரு மனிதன் கண்டு, "என்ன தேடுகிறாய்?" என்று அவரைக் கேட்டான்.
16. யோசேப்பு, "என் சகோதரர்களைக் தேடுகிறேன3 அவர்கள் எங்கே ஆடு மேய்க்கிறார்கள் என்று தெரியுமா? சொல்லும்" என்றார்.
17. அதற்கு அம்மனிதன், "அவர்கள் இவ்விடத்தை விட்டுக் கிளம்பி விட்டார்கள். தோத்தானுக்குப் போவோம் என்று அவர்கள் சொல்லிக் கொண்டதை நான் கேட்டேன்" என்று பதிலளித்தான். யோசேப்பு தம் சகோதரரைத் தேடிச் சென்று தோத்தானில் அவர்களைக் கண்டுபிடித்தார்.
18. தொலையில் அவர் வருதைக் கண்ட அவர்கள் தங்களுக்கு அருகில் அவர் வருமுன் அவரைக் கொல்லத் திட்டமிட்டனர்.
19. அவர் சகோதரர்கள் ஒருவர் ஒருவரை நோக்கி, "இதோ, வருகிறான் கனவின் மன்னன்!
20. நாம் அவனைக் கொன்று இந்த ஆழ்குழிகளுள் ஒன்றில் தள்ளிவிட்டு, ஒரு கொடிய விலங்கு அவனைத் தின்று விட்டதென்று சொல்வோம். அப்பொழுது அவனடைய கனவுகள் என்ன ஆகும் என்று பார்ப்போம்" என்றனர்.
21. ரூபன் இவற்றைக் கேட்டு, அவரை அவர்கள் கையிலிருந்து தப்புவிக்கும் எண்ணத்தில் அவர்களை நோக்கி, "நாம் அவனைச் சாகடிக்க வேண்டாம்" என்றார்.
22. ரூபன் அவர்கள் நோக்கி, "அவன் இரத்தத்தை சிந்தாதீர்கள். அவனைக் பாலை நிலத்திலுள்ள இந்த ஆழ்குழிக்குள் தள்ளவிடுங்கள். அவன் மீது கை வைக்காதீர்கள்" என்று சொன்னார். ஏனெனில் அவர் அவர்கள் கையிலிருந்து அவரைத் தப்புவித்துத் தம் தந்தையிடம் சேர்ப்பிக்கும் நோக்கம் கொண்டிருந்தார்.
23. யோசேப்பு தம் சகோதரரிடம் வந்து சேர்ந்தவுடன் அவர் அணிந்திருந்த அழகு வேலைப்பாடுகள் நிறைந்த அங்கியை உரிந்துவிட்டு,
24. அவரை ஆழ்குழியில் தூக்கிப் போட்டனர். அது தண்ணீரில்லாத வெறும் குழி.
25. பின்பு, அவர்கள் உணவு அருந்தும்படி அமர்ந்தனர். அப்பொழுது அவர்கள் கண்களை உயர்த்தி, கிலயாதிலிருந்து வந்துகொண்டிருந்த இஸ்மயேலரின் வணிகக் குழுவைப் பார்த்தனர். நறுமணப் பொருள்களையும், தைல வகைகளையும் வெள்ளைப் போளத்தையும், அவர்கள் ஒட்டகங்களின் மேல் ஏற்றி எகிப்திற்குச் சென்ற கொண்டிருந்தனர்.
26. அப்பொழுது யூதா தம் சகோதரர்களை நோக்கி, "நாம் நம் சகோதரனைக் கொன்று அவன் இரத்தத்தை மறைப்பதனால் நமக்கு என்ன பயன்?
27. வாருங்கள்:" இஸ்மயேலருக்கு அவனை விற்றுவிடுவோம். அவன் மேல் நாம் கைவைக்க வேண்டாம். ஏனெனில் அவன் நம் சகோதரனும் நம் சொந்தச் சதையுமாய் இருக்கிறான்" என்று சொல்ல, அவர்கள் சம்மதித்தனர்.
28. ஆகையால் மிதியான் நாட்டு வணிகர் அவர்களைக் கடந்து செல்கையில், குழியிலிருந்து யோசேப்பை வெளியே தூக்கி அந்த இஸ்மயேலரிடம் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றனர். அவர்களும் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டு சென்றனர்.
29. பின்னர் ரூபன் ஆழ்குழி அருகில் திரும்ப வந்தார். இதோ! யோசேப்பு அங்கே இல்லை. உடனே அவர், தம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு,
30. தம் சகோதரரிடம் திரும்பி வந்து, "பையனைக் காணோமே! நான் எங்குச்“ சென்று தேடுவேன்" என்றார்.
31. அவர்கள் யோசேப்பின் அங்கியை எடுத்துக் கொண்டனர். ஒரு வெள்ளாட்டுக் கிடாயை அடித்து அதன் இரத்தத்தில் அந்த அங்கியைத் தோய்த்தனர்.
32. அழகு வேலைப்பாடு நிறைந்த அந்த அங்கியைத் தம் தந்தையிடம் எடுத்துச் சென்று, "இதை வழியில் கண்டோம். இது உங்கள் மகனது அங்கியா என்று பாருங்கள்" என்றனர்.
33. தந்தை அதை அடையாளம் கண்டு, "இது என் மகனது அங்கியே! ஏதோ ஒரு கொடிய விலங்கு அவனைத் தின்று விட்டது! ஜயோ, யோசேப்பு ஒரு கொடிய விலங்கால் பீறிக்கிழிக்கப்பட்டுப் போனானே!" என்று நினைத்து,
34. தம் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, இடுப்பில் சாக்கு உடையைக் கட்டிக் கொண்டு பல நாளகளாய்த் தம் மகனுக்காகத் துக்கம் கொண்டாடினர்.
35. அவர் புதல்வர், புதல்வியர் அனைவரும் அவருக்கு ஆறுதல் சொல்ல வந்தனர். அவரோ எந்த ஆறதலான வார்த்தைக்கும் செவிகொடாமல், "நான் துயருற்றுப் பாதாளத்தில் இறங்கி என் மகனிடம் செல்வேன்" என்று அவருக்காக அழுது புலம்பினார்.
36. இதற்கிடையில் மிதியானியர் எகிப்தை அடைந்து பார்வோனின் அதிகாரிகளுள் ஒருவனும் மெய்க்காப்பாளர் தலைவனுமான போத்திபாரிடம் யோசேப்பை விற்றனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 விவிலியம் / பழைய ஏற்பாடு - புத்தகம் 1 - தொடக்கநூல் - Page 5 Empty Re: விவிலியம் / பழைய ஏற்பாடு - புத்தகம் 1 - தொடக்கநூல்

Post by சிவா Sat Apr 12, 2014 1:27 am

அதிகாரம் 38.

1. அக்காலத்தில் யூதா தம் சகோதரர்களை விட்டுப் பிரிந்து ஈரா என்ற பெயருடைய அதுல்லாமியனிடம் சென்றார்.
2. அங்கே சூவா என்ற கானானியன் ஒருவனின் மகளைக் கண்டு, அவளை மணமுடித்து, அவளோடு கூடி வாழ்ந்தார்.
3. அவள் கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுத்து, அவனுக்கு ஏர் என்று பெயரிட்டாள்.
4. அவள் மீண்டும் கருவுற்று, ஒரு மகனைப் பெற்றெடுத்து, அவனுக்கு ஓனான் என்று பெயரிட்டான்.
5. கருவளம் மிகுதியாயிருந்ததால் அவள் மேலும் ஒரு மகனைப் பெற்றெடுத்து அவனுக்குச் சேலா என்று பெயரிட்டாள். அவனைப் பெற்றெடுத்தபோது அவள் கெசீபில் இருந்தாள்.
6. யூதா தம் தலை மகன் ஏர் என்பவனுக்குத் தாமார் என்னும் ஒரு பெண்ணை மணமுடித்தார்.
7. யூதாவின் தலைமகன் ஏர் ஆண்டவர் முன்னிலையில் கொடியவனாய் இருந்ததால், ஆண்டவர் அவனை சாகடித்தார்.
8. அப்போது யூதா தம் மகன் ஓனானை நோக்கி, "நீ உன் சகோதரன் மனைவியோடு கூடி வாழ். சுகோதரனுக்குரிய கடமையைச் செய்து, உன் கசோதரனுக்கு வழிமரபு தோன்றச் செய்" என்றார்.
9. அந்த வழிமரபு தனக்குரியதாய் இராதென்று அறிந்து, ஓனான் அவளோடு உடலுறவு கொள்கையில், தன் சகோதரனுக்கு வழிமரபு தோன்றாதவாறு தன் விந்தைத் தரையில் சிந்திவந்தான்.
10 அவன் செய்தது தம் பார்வையில் தீயதாய் இருந்ததால், ஆண்டவர் அவனையும் சாகடித்தார்.
11 ஆதலால் யூதா தம் மருமகள் தாமாரை நோக்கி, "என் மகன் சேலா பெரியவனாகும் வரை உன் தந்தை வீட்டில் விதவையாய்த் தங்கியிரு" என்றார். ஏனெனில் அவனும் தன் சகோதரரைப் போல் சாவானோ என்று அஞ்சினர். தாமாரும் அவ்விதமே தம் தந்தை வீட்டிற்குச் சென்று அங்குத் தங்கியிருந்தார்.
12. பல நாள்களுக்குப்பின், சூவாவின் மகளான யூதாவின் மனைவி இறந்தாள். யூதா அவளுக்காகத் துக்கம் கழித்தபின், தம் மந்தைக்கு உரோமம் கத்தரிப்பவர்கள் இருந்த திம்னாவுக்குத் தம் அதுல்லாமிய நண்பன் ஈராவுடன் சென்றார்.
13. அப்போது "உன் மாமனார் தம் ஆடுகளுக்கு உரோமம் கத்தரிக்கத் திம்னாவுக்குப் போகிறார்" என்று தாமாருக்குச் செய்தி அறிவிக்கப்பட்டது.
14. சேலா பெரியவனாகியும் தம்மை அவனுக்கு மனைவியாகக் கொடுக்கவில்லை என்று அவர் கண்டு தமது கைம்மைக் கோலத்தைக் களைந்துவிட்டு, முக்காடிட்டுத் தம்மை மறைத்துக்கொண்டு திம்னாவுக்குச் செல்லும் பாதையில் இருந்த ஏனயிம் நகர்வாயிலில் அமர்ந்துகொண்டார்.
15. யூதா அவரைக் கண்டபோது, அவர் முகம் மூடியிருந்ததால் அவர் ஒரு விலைமாது என்று நினைத்தார்.
16. அவர் திரும்பிப் பாதையோரம் அவரிடம் சென்று, அவர் தம் மருமகளென்று அறியாமல் தம்முடன் உடலுறவு கொள்ளுமாறு அழைத்தார். அதற்கு அவர், "என்னோடு உடலுறவு கொள்வதற்கு என்ன தருவீர்?" என்று கேட்டார்.
17. அவர், "என் மந்தையிலிருந்து உனக்கு ஒரு வெள்ளாட்டுக் கிடாய் அனுப்புகிறேன்" என்றார். அதற்கு அவர், "நீர் அதை அனுப்புமட்டும் எனக்கு ஓர் அடைமானம் தருவீரா?"ஙு என்று கேட்டார்.
18. "அடைமானமாக உனக்கு நான் என்ன தர வேண்டும்?" என்று அவர் கேட்க, அவர் உம்முடைய முத்திரை மோதிரத்தையும் இடைவாரையும் கைக்கோலையும் தரவேண்டும் என்றார். அவருக்கு அவற்றைக் கொடுத்த பின் அவருடன் உடலுறவு கொண்டார். அவரும் கருவுற்றார்.
19. பின்பு, அவர் எழுந்துபோய், தம் முக்காட்டை எடுத்துவிட்டு விதவைக்குரிய ஆடைகளை அணிந்துகொண்டார்.
20. அவரிடம் தாம் கொடுத்திருந்த அடைமானத்தைத் திரும்பப் பெறுமாறு, யூதா தம் அதுல்லாமிய நண்பன் மூலம் ஒரு வெள்ளாட்டுக் கிடாயை அனுப்பினார். அவனோ அவரைக் காணவில்லை.
21. அங்கிருந்த ஆள்களை நோக்கி, ஏனயிம் அருகே வழியில் இருந்த விலைமாது எங்கே? என்று கேட்க, அவர்கள், இங்கே விலைமாது எவளுமில்லை என்றனர்.
22. அவன் யூதாவிடம் திரும்பி வந்து, "நான் அவளைக் காணவில்லை. மேலும் அங்கிருந்த ஆள்கள், இங்கு விலைமாது எவளுமில்லை என்றனர்" என்று சொன்னான்.
23. யூதா, அவளே வைத்துக்கொள்ளட்டும்: இல்லையேல் நம்மைப் பார்த்துப் பிறர் சிரிப்பர். நானும் இந்த ஆட்டுக்கிடாயை அவளுக்கு அனுப்பி வைத்தேன். உன்னாலும், அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றார்.
24. மூன்று மாதம் சென்றபின்னர், "உம் மருமகளாகிய தாமார் வேசித்தனம் பண்ணினாள். வேசித்தனத்தினால் கருவுற்றிருக்கிறாள்" என்று யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது அவர், அவளை இழுத்துக் கொண்டு வாருங்கள்: அவள் எரிக்கப்பட வேண்டும் என்றார்.
25. அவ்வாறே அவரை இழுத்துக்கொண்டு வருகையில், அவர் தம் மானமாருக்கு, "இந்தப் பொருள்கள் எவனுடையவையோ அவனாலேயே நான் கருவுற்றிருக்கிறேன். இந்த முத்திரை மோதிரமும் இடைவாரும் கைக்கோலும் யாருடையவை என்று பாரும்" என்று சொல்லியனுப்பினர்.
26. யூதா அவற்றைப் பார்த்தறிந்து, "அவள் என்னைக் காட்டிலும் நேர்மையானவள். அவளை நான் என் மகன் சேலாவுக்கு மணமுடிக்காமல் போனேனே!" என்றார். ஆயினும், அதற்குப்பின் அவர் அவரோடு உடலுறவு கொள்ளவில்லை.
27. தாமாருக்குப் பேறுகாலம் வந்தபோது, அவர் வயிற்றில் இரட்டைப் பிள்ளைகள் இருந்தன.
28. அவர் பிள்ளை பெறுகிற வேளையில் ஒரு பிள்ளை கையை வெளியே நீட்டியது. மருத்துவப்பெண் அதன் மணிக்கட்டில் கருஞ்சிவப்பு நூலைக் கட்டி இதுவே முதலில் வந்தது என்றாள்.
29. ஆனால், அது தன் கையைத் திரும்ப உள்ளே இழுத்துக்கொண்டபின், மற்ற பிள்ளை வெளிப்பட்டது. அப்பொழுது அவள் நீ கருப்பையைக் கிழித்துக் கொண்டு வந்தவன் அல்லவா! என்று சொன்னாள். எனவே அவனுக்குப் பெரேட்சு என்று பெயரிடப்பட்டது.
30. பின் கருஞ்சிவப்பு நூல் கையில் கட்டப்பெற்ற அவன் சகோதரன் வெளிப்பட அவனுக்கு செராகு என்று பெயரிடப்பட்டது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 விவிலியம் / பழைய ஏற்பாடு - புத்தகம் 1 - தொடக்கநூல் - Page 5 Empty Re: விவிலியம் / பழைய ஏற்பாடு - புத்தகம் 1 - தொடக்கநூல்

Post by சிவா Sat Apr 12, 2014 1:28 am

அதிகாரம் 39.

1. யோசேப்பு எகிப்து நாட்டிற்கு கொண்டு போகப்பட்டபோது, பார்வோனின் மெய்க்காப்பாளர் தலைவனும் படைத்தலைவனுமான போத்திபார் என்ற எகிப்தியன் அவரை, அவ்விடத்திற்குக் கொண்டுவந்த இஸ்மயேலரிடமிருந்து விலைக்கு வாங்கினான்.
2. ஆண்டவர் யோசேப்புடன் இருந்தார். எனவே, அவர் சிறப்புற்றவராகத் தம் எகிப்தியத் தலைவனின் இல்லத்தில் வாழ்ந்து வந்தார்.
3. ஆண்டவர் அவரோடு இருந்ததையும் அவர் தொட்ட காரியமனைத்தையும் ஆண்டவர் துலங்கச் செய்ததையும் அவர் தலைவன் கண்டான்.
4. எனவே அவனுடைய தயை யோசேப்புக்குக் கிடைத்தது. அவன் அவரைத் தன் சிறப்புப் பணியாளராகவும் வீட்டின் மேலாளராகவும் நியமித்து, தனக்கிருந்த அனைத்தையும் அவர் பொறுப்பில் ஒப்படைத்தான்.
5. இவ்வாறு தன் வீட்டையும் தனக்கிருந்த அனைத்தையும் அவர் பொறுப்பில் விட்டதிலிருந்து, எகிப்தியனின் வீட்டுக்கு யோசேப்பின் பொருட்டு ஆண்டவர் ஆசி வழங்கினார். வீட்டிலும் வயல்வெளியிலும் அவனுக்கிருந்த அனைத்தின்மீதும் ஆண்டவர் ஆசி பொழிந்தார்.
6. இவ்வாறு யோசேப்பின் பொறுப்பில் தனக்கிருந்த அனைத்தையும் ஒப்படைத்த பின், தான் உண்ணும் உணவைத் தவிர வேறெதைப் பற்றியும் அவன் விசாரிக்கவில்லை. யோசேப்பு நல்ல உடற்கட்டும் அழகிய தோற்றமும் கொண்டிருந்தார்.
7. சில நாள்கள் சென்றபின், யோசேப்பின் மீது கண்வைத்திருந்த அந்தத் தலைவனின் மனைவி அவரிடம், என்னோடு படு என்றாள்.
8. அவர் அதற்கு இணங்க மறுத்து, தம் தலைவரின் மனைவியை நோக்கி, "என் தலைவர் எல்லாவற்றையும் என் பொறுப்பில் ஒப்படைத்து விட்டார். வீட்டிலுள்ள எதைப்பற்றியும் அவர் விசாரிப்பதுகூட இல்லை.
9. இந்த வீட்டில் என்னைவிட அதிகாரம் பெற்றவர் ஒருவருமில்லை. நீங்கள் அவருடைய மனைவியாயிருப்பதால், உங்களைத் தவிர வேறெதையும் அவர் என்னிடம் ஒப்படைக்காமல் இருக்கவில்லை. இந்த மாபெரும் தீச்செயலைச் செய்து, கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்யலாமா?" என்றார்.
10 அவள் நாள்தோறும் வற்புறுத்தியபோதிலும், யோசேப்பு அவளோடு படுக்கவோ இருக்கவோ இணங்கவில்லை.
11 இவ்வாறிருக்க, ஒருநாள் யோசேப்பு தம் வேலையை முன்னிட்டு வீட்டுக்குள் சென்றார். உள்ளே வீட்டைச் சார்ந்தவர் வேறு எவரும் இல்லை.
12. அவள் அவரது மேலாடையைப் பற்றி இழுத்து, என்னோடு படு என்றாள். உடனே அவர் அவள் கையில் தம் மேலாடையை விட்டுவிட்டு வெளியே தப்பியோடினார்.
13. அவர் தம் மேலாடையை அவள் கையில் விட்டுவிட்டு வெளியே ஓடியதைக் கண்டு,
14. அவள் தன் வீட்டு ஆள்களைக் கூப்பிட்டு: "என் கணவர் நம்மை அவமானப்படுத்துவதற்காகவா இந்த எபிரேயனை வீட்டிற்குக் கொண்டுவந்தார்? இதோ இவன் என்னோடு படுப்பதற்காக என்னிடம் வந்தான். உடனே நான் பெரும் கூச்சலிட்டுக் கத்தினேன்.
15. ஆனால் நான் கூச்சலிட்டதைக் கண்டு அவன் தன் மேலாடையை என்னருகே போட்டுவிட்டு வெளியே ஓடிப்போய் விட்டான்" என்றாள்.
16. மேலும் அவள், அவருடைய மேலாடையைத் தன் கணவன் வீட்டுக்குத் திரும்பி வரும்வரை வைத்திருந்துஅவனிடம்,
17. "நீர் நம்மிடம் அழைத்து வந்துள்ள எபிரேய அடிமை என்னோடு சரசம் பண்ணும்படி என்னிடம் வந்தான்.
18. அப்போது நான் கூச்சலிட்டுக் கத்தியதும், அவன் தன் மேலாடையை என்னருகே போட்டுவிட்டு வெளியே ஓடிப்போய்விட்டான்" என்று கதை கட்டினாள்.
19. உம் அடிமை எனக்கு இப்படிச் செய்துவிட்டான் என்று தன் மனைவி சொல்லக் கேட்ட அவர் தலைவன், கடுஞ்சினம் கொண்டான்.
20. யோசேப்பின் தலைவன், அரசக் கைதிகள் காவலில் வைக்கப்பட்டிருந்த அதே சிறைச்சாலைக்கு அவரை இழுத்துச் சென்று அடைத்து வைத்தான்.
21. ஆண்டவர் யோசேப்புடன் இருந்து, அவர்மீது பேரன்பு காட்டி, சிறை மேலாளன் பார்வையில் அவருக்குத் தயை கிடைக்கும்படி செய்தார்.
22. எனவே சிறைமேலாளன் சிறையிலிருந்த கைதிகள் அனைவரையும், அங்குச் செய்யப்பட்ட வேலைகள் அனைத்தையும், யோசேப்பின் பொறுப்பில் ஒப்படைத்தான்.
23. அவர் பொறுப்பில் விடப்பட்ட எதைப்பற்றியும் சிறைமேலாளன் விசாரிக்கவில்லை. ஏனெனில், ஆண்டவர் யோசேப்புடன் இருந்தார். அவர் செய்த யாவற்றிலும் வெற்றி அளித்தார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 விவிலியம் / பழைய ஏற்பாடு - புத்தகம் 1 - தொடக்கநூல் - Page 5 Empty Re: விவிலியம் / பழைய ஏற்பாடு - புத்தகம் 1 - தொடக்கநூல்

Post by சிவா Sat Apr 12, 2014 1:28 am

அதிகாரம் 40.

1. இவை நிகழ்ந்தபின், எகிப்து மன்னனுக்கு மது பரிமாறுவோனும், அப்பம் தயாரிப்போனும் தங்கள் தலைவனாகிய எகிப்திய மன்னனுக்கு எதிராகக் குற்றம் செய்தனர்.
2. பார்வோன் தன் மது பரிமாறுவோரின் தலைவனும் அப்பம் தயாரிப்போரின் தலைவனும் ஆகிய இரு அதிகாரிகள் மீதும் கடும் கோபம் கொண்டு,
3. காவலர் தலைவன் வீட்டிலிருந்த சிறைச்சாலைகளில் அவர்களை அடைத்து வைத்தான். யோசேப்பு அடைபட்டிருந்த இடமும் அதுவே.
4. காவலர் தலைவனோ, அவர்களை யோசேப்புடன் சிறையிருக்குமாறு குறித்தான். யோசேப்பும் அவர்களைக் கண்காணித்து வந்தார். அவர்கள் பல நாள்கள் சிறையில் இருந்தனர்.
5. எகிப்திய மன்னனால் சிறைப்பட்டிருந்த மது பரிமாறுவோன், அப்பம் தயாரிப்போன் இருவரும் ஒரே இரவில் கனவு கண்டனர். ஒவ்வொரு கனவும் வெவ்வேறு பொருள் கொண்டிருந்தது.
6. காலையில் யோசேப்பு அவர்களிடம் வந்தபோது அவர்கள் கவலையாய் இருக்கக் கண்டார்.
7. தம்முடன் தம் தலைவன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த பார்வோனின் அதிகாரிகளை நோக்கி, அவர், இன்று உங்கள் முகம் இவ்வளவு வாடியிருப்பதேன்? என்று வினவினார்.
8. அவர்கள், "நாங்கள் இருவரும் கனவு கண்டோம்: அதை எங்களுக்கு விளக்கிச் சொல்வார் யாருமில்லை" என்று பதில் கூறினர். யோசேப்பு அவர்களை நோக்கி, கனவுக்குப் பொருள் சொல்வது கடவுளுக்கு உரியதல்லவா? என்னிடம் விவரமாகச் சொல்லுங்கள் என்றார்.
9. அப்போது மதுபரிமாறுவோர் தலைவன் தன் கனவைப் பற்றிச் சொல்லத் தொடங்கினான்: என் கனவில் ஒரு திராட்சைக் கொடி எனக்கு முன் தோன்றியது.
10 அந்தத் திராட்சைக் கொடியில் மூன்று கிளைகள் இருந்தன. அவை அரும்பிப் பூத்து, கொத்துக் கொத்தாய்ப் பழுக்கக் கண்டேன்.
11 கையில் பார்வோனின் கிண்ணம் இருந்தது. நான் பழங்களைப் பறித்து, பார்வோனின் கிண்ணத்தில் பிழிந்து, அந்தக் கிண்ணத்தைப் பார்வோனின் கையில் கொடுத்தேன் என்றான்.
12. யோசேப்பு அவனை நோக்கி, கனவின் பொருள் இதுவே: மூன்று கிளைகளும் மூன்று நாள்களைக் குறிக்கும்.
13. இன்னும் மூன்று நாள்களில் பார்வோன் உன்னைத் தலைநிமிரச் செய்து உன்னை மீண்டும் முன்னைய பதவியில் அமர்த்துவான். முன்பு நீ பார்வோனின் மதுபரிமாறுவோனாய் இருந்த காலத்தில் செய்ததுபோல அவன் கிண்ணத்தை அவன் கையில் கொடுப்பாய்.
14. உனக்கு வாழ்வு நலமாய் அமைந்தபின், என்னை மறவாமல் எனக்குத் தயைகாட்ட வேண்டுகிறேன். பார்வோனிடம் சொல்லி என்னை இச்சிறையிலிருந்து விடுவி.
15. ஏனெனில், நான் எபிரேயரின் நாட்டிலிருந்து கடத்திக்கொண்டு வரப்பட்டேன். என்னைக் காவற்கிடங்கில் தள்ளிவிடுமளவிற்கு நான் யாதொன்றும் செய்யவில்லை என்றார்.
16. யோசேப்பு இவ்வாறு தகுந்த விளக்கம் அளித்ததைக் கண்டு, அப்பம் தயாரிப்போரின் தலைவன் அவரிடம் நானும் ஒரு கனவு கண்டேன். இதோ மூன்று அப்பக் கூடைகள் என் தலையில் இருந்தன.
17. மேற்கூடையில் பார்வோனுக்காகச் சுட்ட பலவகை அப்பங்கள் இருந்தன. பறவைகள் வந்து என் தலை மேலிருந்த கூடையிலிருந்து அவற்றைத் தின்றுவிட்டன என்றான்.
18. அதற்கு யோசேப்பு, கனவின் பொருள் இதுவே: மூன்று கூடைகளும் மூன்று நாள்களைக் குறிக்கும்.
19. இன்னும் மூன்று நாள்களில் பார்வோன் உனது தலையை வெட்டி உன்னைக் கழுமரத்தில் ஏற்றுவான். பறவைகள் வந்து உன் சதையைத் தின்னும் என்றார்.
20. மூன்றாம் நாள், பார்வோனின் பிறந்த நாள் விழா. அன்று தன் அலுவலர் அனைவருக்கும் அவன் விருந்து அளித்தான். அந்த அலுவலர் முன்னிலையில் மது பரிமாறுவோரின் தலைவன், அப்பம் தயாரிப்போரின் தலைவன் ஆகிய இருவரின் தலைகளையும் நிமிர்த்தினான்.
21. மது பரிமாறுவோரின் தலைவனை முன்னைய பதவிக்கு உய+த்த, முன்புபோல் அவன் பார்வோனின் கையில் கிண்ணத்தைக் கொடுக்கலானான்.
22. ஆனால், அப்பம் தயாரிப்போரின் தலைவனைப் பார்வோன் கழுமரத்தில் ஏற்றினான். யோசேப்பு அவர்களுக்கு விளக்கிச் சொன்னபடியே இவ்வாறு நடந்தது.
23. ஆனால் மதுபரிமாறுவோரின் தலைவன் யோசேப்பைப் பற்றிய நினைவேயில்லாமல் அவரை மறந்து விட்டான்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 விவிலியம் / பழைய ஏற்பாடு - புத்தகம் 1 - தொடக்கநூல் - Page 5 Empty Re: விவிலியம் / பழைய ஏற்பாடு - புத்தகம் 1 - தொடக்கநூல்

Post by சிவா Sat Apr 12, 2014 1:28 am

அதிகாரம் 41.

1. இரண்டு முழு ஆண்டுகள் கழிந்தபின், பார்வோன் ஒரு கனவு கண்டான். அக்கனவில் அவன் நைல் நதிக் கரையில் நின்று கொண்டிருந்தான்.
2. அப்பொழுது அழகிய கொழுத்த ஏழு பசுக்கள் நதியிலிருந்து கரைக்கு வந்து கோரைப்புற்களிடையே மேய்ந்து கொண்டிருந்தன.
3. அவற்றைத் தொடர்ந்து, நலிந்து மெலிந்த வேறு ஏழு பசுக்கள் நைல் நதியிலிருந்து வெளி வந்து கரையில் இருந்த மற்ற பசுக்களோடு நின்று கொண்டன.
4. நலிந்து மெலிந்த பசுக்கள் அழகிய, கொழுத்த ஏழு பசுக்களை விழுங்கிவிட்டன. அதன்பின் பார்வோன் துயில் கலைந்தான்.
5. மீண்டும் அவன் கண்ணயர்ந்தபோது இரண்டாவது கனவு கண்டான். அக்கனவில் செழுமையான பொன் நிறமான ஏழு கதிர்கள் ஒரே தாளில் காய்த்திருந்தன.
6. அதன் பின் கீழைக் காற்றினால் தீய்ந்துபோன கதிர்கள் தோன்றின.
7. அந்தப் பதரான கதிர்கள் ஏழும் செழுமையான, முற்றிய கதிர்களை விழுங்கிவிட்டன. பார்வோன் கண்விழித்து, தான் கண்டது கனவு என்று உணர்ந்தான்.
8. காலையில் அவன் மனம் கலக்கமுற, எகிப்து நாட்டிலுள்ள எல்லா மந்திரவாதிகளையும் ஞானிகளையும் வரவழைத்துத் தன் கனவுகளை எடுத்துரைத்தான். ஆனால் அவற்றை அவனுக்கு விளக்கிக் கூறுவார் எவருமில்லை.
9. அப்போது மதுபரிமாறுவோரின் தலைவன் பார்வோனை நோக்கி, "என் பிழை இன்றுதான் என் நினைவிற்கு வருகிறது.
10 பார்வோனாகிய தாங்கள் முன்னொரு சமயம் உம் ஊழியர்மீது கடுஞ்சினமுற்று அடியேனையும் அப்பம் தயாரிப்போரின் தலைவனையும் காவலர் தலைவனின் வீட்டில் சிறைவைத்தீர்.
11 அச்சமயம் ஒரே இரவில் வெவ்வேறு பொருள் கொண்ட கனவுகளை நானும் அவனும் கண்டோம்.
12. அங்கே காவலர் தலைவரின் ஊழியனாகிய எபிரேய இளைஞன் ஒருவன் எங்களோடு இருந்தான். நாங்கள் அவனிடம் எங்கள் கனவுகளை விவரித்துச் சொன்னோம். அவன் எங்கள் கனவுகளுக்கு, அவனவன் கனவுக்கேற்ப விளக்கம் கூறினான்.
13. அவன் எங்களுக்கு விளக்கிக் கூறியபடியே யாவும் நடந்தன. முன்னைய பதவி எனக்கு மீண்டும் அளிக்கப்பட்டது: அவனோ கழுமரத்தில் ஏற்றப்பட்டான்" என்றான்.
14. பார்வோன் ஆளனுப்பி யோசேப்பை அழைத்துவரச் செய்தான். அவர்களும் அவரைக் காவற்கிடங்கிலிருந்து விரைவாக வெளிக் கொணர்ந்தனர். அவர் முடி திருத்திக் கொண்டு, புத்தாடை அணிந்து பார்வோன் முன்னிலைக்கு வந்தார்.
15. பார்வோன் யோசேப்பை நோக்கி, நான் கனவு கண்டேன். ஆனால் அதற்கு விளக்கம் சொல்வார் யாருமில்லை. கனவைக் கேட்டால் நீ தகுந்த விளக்கம் கூறுவாய் என்று உன்னைப்பற்றிச் சொல்லக் கேள்விப்பட்டேன் என்றான்.
16. யோசேப்பு பார்வோனுக்கு மறுமொழியாக, நானல்ல, கடவுளே பார்வோனுக்கு நலமிகு மறுமொழி வழங்குவார் என்றார்.
17. அப்பொழுது பார்வோன் யோசேப்பிடம் சொன்னதாவது: என் கனவில் நைல் நதிக்கரையில் நான் நின்று கொண்டிருந்தேன்.
18. அப்பொழுது கொழுத்த, ஏழு அழகிய பசுக்கள் நதியிலிருந்து வெளியேறி வந்து, கோரைப் புற்களிடையே மேய்ந்துகொண்டிருந்தன.
19. அவற்றிற்குப்பின், வற்றிய, மிகவும் நலிந்து மெலிந்த வேறு ஏழு பசுக்கள் கரையேறி வந்தன. அத்தகைய அருவருப்பான பசுக்களை எகிப்து நாட்டில் நான் எங்கும் எப்போதும் கண்டதில்லை.
20. நலிந்து மெலிந்த இந்தப் பசுக்கள் முதலில் வந்த கொழுத்த ஏழு பசுக்களை விழுங்கிவிட்டன.
21. ஆனால் இவை அவற்றை விழுங்கிய பின்னும் விழுங்கியனவாகவே தெரியவில்லை: முன்புபோலவே மெலிந்து தோன்றின. அதன்பின் நான் துயில் கலைந்தேன்.
22. மீண்டும் ஒரு கனவு கண்டேன். அதில் செழுமையான, முற்றிய ஏழு கதிர்கள் ஒரே தாளில் தோன்றக் கண்டேன்.
23. அவற்றிற்குப்பின் தீய்ந்த, பதராகிக் கீழைக் காற்றினால் கருகிப்போன வேறு ஏழு கதிர்கள் வெளிவந்தன.
24. இந்தப் பதரான ஏழு கதிர்கள் அழகிய ஏழு கதிர்களை விழுங்கிவிட்டன. இதைப்பற்றிய மந்திரவாதிகளிடம் சொன்னேன். ஆனால், எவராலும் எனக்குப் பொருள்கூற முடியவில்லை."
25. அதற்கு யோசேப்பு பார்வோனை நோக்கி, "பார்வோனாகிய தாங்கள் கண்ட கனவுகள் குறிப்பன ஒன்றே. கடவுள் தாம் செய்யவிருப்பதைப் பார்வோனுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.
26. ஏழு நல்ல பசுக்கள் ஏழு ஆண்டுகளைக் குறிக்கும். ஏழு நல்ல கதிர்கள் ஏழு ஆண்டுகளைக் குறிக்கும். ஆக, கனவுகள் குறிப்பன ஒன்றே.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 விவிலியம் / பழைய ஏற்பாடு - புத்தகம் 1 - தொடக்கநூல் - Page 5 Empty Re: விவிலியம் / பழைய ஏற்பாடு - புத்தகம் 1 - தொடக்கநூல்

Post by சிவா Sat Apr 12, 2014 1:29 am

27. அவற்றிற்குப்பின் வந்த மெலிந்த, அருவருப்பான ஏழு பசுக்கள் ஏழு ஆண்டுகளைக் குறிக்கும். பதராகி வெப்பக் காற்றினால் தீய்ந்துபோன ஏழு கதிர்கள் பஞ்சம் நிறைந்த ஏழு ஆண்டுகளைக் குறிக்கும்.
28. நான் பார்வோனாகிய தங்களுக்குச் சொன்னது போலவே, கடவுள் தாம் செய்ய இருப்பதைப் பார்வோனாகிய தங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.
29. எகிப்து நாடெங்கும் மிக வளமான ஏடு ஆண்டுகள் வரவிருக்கின்றன.
30. அதன்பின் ஏழாண்டுகள் பஞ்சம் நிலவும். அப்பொழுது எகிப்து நாட்டின் அனைத்து வளமும் மறந்து போகுமளவிற்கு அந்நாட்டைப் பஞ்சம் பாழாக்கும்.
31. நாட்டின் வளமை நினைவுக்கே வராது: வரவிருக்கும் பஞ்சம் அந்த அளவிற்குக் கடுமையாய் இருக்கும்.
32. இது கடவுளால் உறுதி செய்யப்பட்டுவிட்டது என்பதற்கும் அவரால் விரைவில் நிறைவேற்றப்படும் என்பதற்கும் அறிகுறியாகவே பார்வோனுக்குக் கனவு இருமுறை வந்தது.
33. எனவே, பார்வோன் உடனடியாக மதிநுட்பமும் ஞானமும் செறிந்த ஒருவனைக் கண்டுபிடித்து எகிப்து நாட்டின் அதிகாரியாக அமர்த்தவேண்டும்.
34. மேலும், ஏழு வளமான ஆண்டுகளில் எகிப்து நாட்டின் விளைச்சலில் ஜந்திலொரு பகுதியைக் கொள்முதல் செய்யுமாறு மேற்பார்வையாளர்களையும் பார்வோன் தொடர்ந்து நியமிக்கட்டும்.
35. வரவிருக்கும் வளமான இந்த ஆண்டுகளிலேயே, தானியம் முழுவதையும் பார்வோனின் அதிகாரத்தில் அவர்கள் கொள்முதல் செய்து, பின்னர் உண்ணக் கொடுப்பதற்கென நகர்களில் சேமித்து வைக்கட்டும்.
36. எகிப்து நாட்டில் பஞ்சம் வரவிருக்கும் ஏழாண்டுகளில் பயன்படுத்துமாறு தானியம் இவ்வாறு சேமித்து வைக்கப்படட்டும். நாடும் பஞ்சத்தினால் அழியாதிருக்கும்" என்றார்.
37. அவர் சொன்னது பார்வோனுக்கும் அவன் அலுவலர் அனைவருக்கும் நலமெனத் தோன்றியது.
38. பார்வோன்தன் அலுவலர்களை நோக்கி, இறையாவி பெற்றுள்ள இவரைப் போல் வேறெவரையும் நாம் காணமுடியுமோ? என்றான்.
39. பின்பு பார்வோன் யோசேப்பை நோக்கி, இவற்றையெல்லாம் கடவுள் உம் ஒருவருக்கே அறிவித்துள்ளார். உம்மைவிட மதி நுட்பமும் ஞானமும் செறிந்தவர் யாருமிலர்.
40. எனவே, நீரே என் அரண்மனையின் பொறுப்பை ஏற்பீர். உம் வார்த்தைக்கு என் மக்கள் எல்லோரும் அடிபணியட்டும். அரியணையில் மட்டும் நான் உமக்கு மேற்பட்டவனாய் இருப்பேன் என்றான்.
41. பின்பு பார்வோன் யோசேப்பை நோக்கி, இதோ! எகிப்து நாடு முழுவதற்கும் உம்மை அதிகாரியாக நியமிக்கிறேன் என்று சொன்னான்.
42. உடனே பார்வோன் தன்கையில் அணிந்திருந்த அரச கணையாழியைக் கழற்றி அதை யோசேப்பு கையில் அணிவித்து, அவருக்குப் பட்டாடை உடுத்தி, பொன் கழுத்தணியை அவருக்கு அணிவித்தான்.
43. மேலும் அவரைத் தன் இரண்டாம் தேரில் வலம்வரச் செய்து இவருக்கு முழந்தாளிடுங்கள் என்று ஏவலர் கட்டியம் கூறச் செய்தான்: இவ்வாறு எகிப்து நாடு முழுவதற்கும் அவரை அதிகாரியாக்கினான்.
44. மேலும் அவன் யோசேப்பை நோக்கி, பார்வோனாகிய நான் கூறுகிறேன். உமது ஒப்புதலின்றி எகிப்து நாடெங்கும் எவனும் கையையோ காலையோ உயர்த்தக்கூடாது என்றான்.
45. பின் பார்வோன் யோசேப்பிற்கு சாபனாத்துபனேகா என்று புதிய பெயர் சூட்டி, ஓன் நகர் அர்ச்சகர் போற்றிபெராவின் மகளான ஆசினத்தை அவருக்கு மணமுடித்து வைத்தான். எகிப்து நாடு முழுவதற்கும் யோசேப்பு ஆளுநர் ஆனார்.
46 எகிப்தின் மன்னனாகிய பார்வோனிடம் பணியேற்றபொழுது, யோசேப்பிற்கு வயது முப்பது. அவர் பார்வோனிடம் விடைபெற்று எகிப்து நாடுமுழுவதும் சுற்றுப் பயணம் செய்தார்.
47 வளமிக்க ஏழாண்டுகளில் நிலம் மிகுதியான விளைச்சல் தந்தது.
48 அந்த ஏழாண்டுகளில் எகிப்து நாட்டில் விளைந்த எல்லா உணவுப் பொருள்களையும் நகர்களில் அவர் சேகரித்து வைத்தார். ஒவ்வொரு நகரிலும் அதைச் சுற்றியுள்ள வயல்களில் விளைந்த உணவுப் பொருள்களைச் சேமித்து வைத்தார்.
49 கடற்கரை மணல் அளவுக்கு மிகுதியான தானியத்தை யோசேப்பு கொணர்ந்து குவித்தார். கணிக்க இயலாத அளவிற்கு உணவுப் பொருள்கள் சேர்ந்தமையால், கணிப்பதை நிறுத்தினார்.
50 பஞ்சத்தின் ஆண்டு வருமுன்னே யோசேப்பிற்கு, ஓன் நகர் அர்ச்சகர் போற்றிபெராவின் மகள் ஆசினத்து, மைந்தர் இருவரைப் பெற்றெடுத்தாள்.
51 யோசேப்பு எல்லாத் துன்பங்களையும் என் தந்தையின் வீட்டையும் கடவுள் மறக்கச் செய்தார் என்று சொல்லித் தலைமகனுக்கு மனாசே என்று பெயரிட்டார்.
52 பின் நான் துன்புற்ற இந்த நாட்டில் கடவுள் என்னைப் பலுகச் செய்தார் என்று சொல்லி, அடுத்தவனுக்கு எப்ராயிம் என்று பெயரிட்டார்.
53 எகிப்து நாட்டின் வளமான ஏழாண்டுகள் முடிவுற்றன.
54 யோசேப்பு முன்னறிவித்தபடி, ஏழாண்டுப் பஞ்சம் தொடங்கியது. எல்லா நாடுகளிலும் பஞ்சம் தலைவிரித்தாடியது. ஆனால் எகிப்து நாடு முழுவதற்கும் உணவு கிடைத்தது.
55 எகிப்து நாடு முழுவதும் பஞ்சம் வந்தபோது, மக்கள் பார்வோனிடம் வந்து உணவுக்காக ஓலமிட்டனர். பார்வோன் எகிப்தியர் அனைவரையும் நோக்கி, "யோசேப்பிடம் செல்லுங்கள்: அவர் சொல்வதைச் செய்யுங்கள்" என்று கூறினான்.
56 நாடுமுழுவதும் பஞ்சம் பரவிய பொழுது, யோசேப்பு களஞ்சியங்களைத் திறந்து, எகிப்தியர்களுக்குத் தானியங்களை விற்குமாறு செய்தார். ஏனெனில் எகிப்து நாட்டில் பஞ்சம் கடுமையாய் இருந்தது.
57 உலகமெங்கும் கொடும் பஞ்சம் நிலவியது. அனைத்து நாட்டு மக்களும் யோசேப்பிடம் தானியம் வாங்க எகிப்திற்கு வந்தார்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 விவிலியம் / பழைய ஏற்பாடு - புத்தகம் 1 - தொடக்கநூல் - Page 5 Empty Re: விவிலியம் / பழைய ஏற்பாடு - புத்தகம் 1 - தொடக்கநூல்

Post by சிவா Sat Apr 12, 2014 1:29 am

அதிகாரம் 42.

1. எகிப்தில் தானியம் கிடைப்பதைப் பற்றி யாக்கோபு கேள்விப்பட்டு, தம் புதல்வர்களை நோக்கி, "நீங்கள் ஒருவர் மற்றவரைப் பார்த்துக்கொண்டு இருப்பது ஏன்?
2. இதோ எகிப்தில் தானியம் கிடைக்கிறது என்று கேள்விப்படுகிறேன். நாம் பஞ்சத்தால் சாகாமல் உயிரோடிருக்குமாறு, நீங்கள் அங்குச் சென்று நமக்கெனத் தானியம் வாங்கிக்கொண்டு வாருங்கள்" என்றார்.
3. எனவே யோசேப்பின் சகோதரர் பதின்மரும் தானியம் வாங்கும் பொருட்டு எகிப்திற்குப் புறப்பட்டுப் போனார்கள்.
4. ஆனால் யோசேப்பின் சகோதரனான பென்யமினை அவனுடைய சகோதரர்களோடு யாக்கோபு அனுப்பவில்லை. ஏனெனில், அவனுக்கு ஏதாவது ஆபத்து நேரிடக்கூடும் என்று எண்ணினார்.
5. கானான் நாட்டிலும் பஞ்சம் நிலவியதால், அங்கிருந்து தானியம் வாங்கச்சென்ற மற்றவர்களோடு இஸ்ரயேலின் புதல்வர்களும் சேர்ந்து சென்றனர்.
6. அப்பொழுது, யோசேப்பு நாட்டுக்கு ஆளுநராய் இருந்து மக்கள் அனைவருக்கும் தானியம் விற்கும் அதிகாரம் பெற்றிருந்தார். எனவே அவருடைய சகோதரர்கள் வந்து, தரைமட்டும் தாழ்ந்து யோசேப்பை வணங்கினார்கள்.
7. யோசேப்பு தம் சகோதரர்களை அடையாளம் கண்டுகொண்டார். ஆயினும் அவர்களை அறியாதவர்போல் கடுமையாக அவர்களிடம் பேசி, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? என்று வினவினார். அவர்களோ, நாங்கள் கானான் நாட்டிலிருந்து உணவுப் பொருள்கள் வாங்க வந்திருக்கிறோம் என்று பதில் கூறினார்கள்.
8. யோசேப்பு தம் சகோதரர்களை அடையாளம் கண்டுகொண்ட போதிலும், அவர்கள் அவரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை.
9. அப்பொழுது தாம் அவர்களைப் பற்றிக் கண்ட கனவுகளை நினைவில் கொண்டு, அவர்களை நோக்கி, "நீங்கள் ஒற்றர்கள்: பாதுகாப்பாற்ற பகுதிகள் நாட்டில் எங்குள்ளன என்று ஆராய்ந்து பார்க்க வந்திருக்கிறீ¡கள்" என்றார்.
10 அதற்கு அவர்கள், "எம் தலைவரே! அப்படி அல்ல. உம் ஊழியர்களாகிய நாங்கள் உணவுப் பொருள்கள் வாங்கவே வந்துள்ளோம்.
11 நாங்களெல்லாரும் ஒரே தந்தையின் புதல்வர்கள். நாங்கள் நேர்மையானவர்கள்: ஒற்றர்கள் அல்ல" என்றனர்.
12. அவர்களிடம் அவர், "இல்லை, இல்லை. பாதுகாப்பற்ற பகுதிகள் நாட்டில் எங்குள்ளன என்று ஆராய்ந்து பார்க்க வந்தவர்களே நீங்கள்" என்று சொன்னார்.
13. அவர்கள் மறுமொழியாக "உம் அடியார்களாகிய நாங்கள் கானான் நாட்டில் வாழும் ஒரே தந்தையின் பன்னிரு புதல்வர்கள். இப்பொழுது எங்களுள் இளையவன் எங்கள் தந்தையோடு இருக்கின்றான். இன்னொருவன் இறந்துவிட்டான்" என்றனர்.
14. யோசேப்பு மீண்டும் அவர்களிடம், "நான் சொன்னது போலவே நீங்கள் ஒற்றர்கள்தாம்.
15. இதோ நான் உங்களை சோதித்தறியப் போகிறேன். பார்வோனின் உயிர்மேல் ஆணை! உங்கள் இளைய சகோதரன் இங்கே வந்தாலொழிய, நீங்கள் இங்கிருந்து புறப்படப்போவதில்லை.
16. எனவே, உங்கள் சகோதரனை அழைத்துவரும்படி உங்களில் ஒருவனை அனுப்புங்கள். மற்றவர்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள். உங்கள் சொற்களைச் சோதித்து உண்மை உங்களிடம் உள்ளதா என்று அறிய விரும்புகிறேன். இல்லையெனில் பார்வோனின் உயிர்மேல் ஆணை! நீங்கள் ஒற்றர்கள்தாம்" என்றார்.
17. பின்னர் அவர் அவர்களை மூன்று நாள் காவலில் வைத்தார்.
18. மூன்றாம் நாள் யோசேப்பு அவர்களை நோக்கி, "நான் சொல்கிறபடி செய்யுங்கள்: செய்தால், பிழைக்கலாம். ஏனெனில் நான் கடவுளுக்கு அஞ்சுபவன்.
19. நீங்கள் குற்றமற்றவர்களானால் சகோதரராகிய உங்களில் ஒருவன் சிறைச்சாலையில் அடைப்பட்டிருக்கட்டும். மற்றவர்கள் புறப்பட்டு, பஞ்சத்தால் வாடும் உங்கள் குடும்பங்களுக்குத் தானியம் கொண்டு போகலாம்.
20. உங்கள் இளைய சகோதரனை என்னிடம் அழைத்து வாருங்கள். அப்பொழுது நீங்கள் கூறியது உண்மையென்று விளங்கும். நீங்களும் சாவுக்குள்ளாகமாட்டீர்கள்" என்றார். அவர்களும் அப்படியே செய்தனர்.
21. அப்போது, அவர்கள் ஒருவர் மற்றவரிடம், "உண்மையாகவே நம் சகோதரனை முன்னிட்டே இப்பொழுது நாம் தண்டிக்கப்படுகிறோம். தன் உயிருக்காக எவ்வளவு துயரத்துடன் நம்மிடம் கெஞ்சி மன்றாடினான்! நாமோ அவனுக்குச் செவி சாய்க்கவில்லை! நமக்கு இத்துன்பம் ஏற்பட்டதற்கு அதுவே காரணம்" என்று சொல்லிக் கொண்டனர்.
22. அப்பொழுது ரூபன் மற்றவர்களிடம், "பையனுக்கு எத்தீங்கும் இழைக்காதீர்கள் என்று உங்களுக்கு நான் சொல்லவில்லையா? நீங்களோ செவிகொடுக்கவில்லை. இதோ, அவனது இரத்தம் நம்மிடம் ஈடு கேட்கிறது!" என்றார்.
23. யோசேப்பு மொழிபெயர்ப்பாளன் மூலம் அவர்களிடம் பேசியதால், தாங்கள் சொன்னது அவருக்குத் தெரியுமென்று அவர்கள் அறியவில்லை.
24. அப்போது அவர் அவர்களிடமிருந்து ஒதுங்கிச்சென்று அழுதார். பின்பு, திரும்பி வந்து அவர்களோடு பேசுகையில் சிமியோனைப் பிடித்து அவர்கள் கண்முன்பாக அவனுக்கு விலங்கிட்டார்.
25. பின்பு, அவர்களுடைய கோணிப்பைகளைத் தானியத்தால் நிரப்பி, அவனவன் பணத்தைத் திரும்ப அவனவன் பையிலிட்டுக் கட்டவும், வழிக்கு வேண்டிய உணவுப் பொருள்களைக் கொடுக்கவும் உத்தரவிட்டார். அப்படியே அவர்களுக்குச் செய்யப்பட்டது.
26. அவர்கள் தங்கள் கழுதைகளின் மேல் தானியத்தை ஏற்றிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்கள்.
27. பின்பு, அவர்களில் ஒருவன் சாவடியில் தன் கழுதைக்குத் தீனி போடுவதற்காகத் தன் கோணியைத் திறக்கவே, அதன் வாயில் தன் பணம் இருக்கக் கண்டான்.
28. அவன் தன் சகோதரரை நோக்கி, "என் பணம் திருப்பித் தரப்பட்டுள்ளது: இதோ என் கோணியில் இருக்கிறது" என்றான். அவர்களோ மனக்கலக்கமுற்று, நடுநடுங்கி, ஒருவரோடொருவர், "கடவுள் நமக்கு இப்படிச் செய்தது ஏன்?" என்றனர்.
29. பின்பு, அவர்கள் கானான் நாட்டில் தங்கள் தந்தை யாக்கோபிடம் வந்து சேர்ந்து, தங்களுக்கு நேர்ந்தவற்றையெல்லாம் தெரிவித்தனர்.
30. அவர்கள் கூறியது: "அந்நாட்டின் தலைவர் எங்களிடம் கடுமையாகப் பேசினார். நாட்டை வேவு பார்க்கவந்தவர்கள் போல் எங்களை நடத்தினார்."
31. நாங்களோ அவரைப் பார்த்து, "நாங்கள் நேர்மையானவர்கள்: ஒற்றர்கள் அல்ல.
32. நாங்கள் ஒரே தந்தைக்குப் பிறந்த பன்னிரு சகோதரர். ஒருவன் இறந்துவிட்டான். இளையவன் கானான் நாட்டில் இப்பொழுது எங்கள் தந்தையோடு இருக்கிறான்" என்று சொன்னோம்.
33. அப்பொழுது, நாட்டின் தலைவரான அந்த ஆள், "நீங்கள் நேர்மையானவர்கள்தாம் என்பதை நான் அறிந்துகொள்ள உங்கள் சகோதரர்களுள் ஒருவனை என்னிடம் விட்டுச்செல்லுங்கள். பஞ்சத்தால் வாடும் உங்கள் குடும்பங்களுக்கு வேண்டியவற்றை வாங்கிக் கொண்டு போங்கள்.
34. ஆனால், உங்கள் இளைய சகோதரனை என்னிடம் அழைத்து வாருங்கள். அதன் மூலம் நீங்கள் ஒற்றர்கள் அல்ல, நேர்மையானவர்கள்தாம் என்று நானும் அறிந்துகொள்வேன். அதன்பின் உங்கள் சகோதரனை உங்களிடம் ஒப்படைப்பேன்: பின்னர் நீங்கள் நாடெங்கும் வணிகம் செய்யலாம் என்றார்."
35. பின்பு, அவர்கள் கோணிப் பைகளைத் திறந்து கொட்டியபொழுது, ஒவ்வொருவன் கோணிப்பையிலும் அவனவன் பணமுடிப்பு காணப்பட்டது. பணமுடிப்புகளைக் கண்டு அவர்களும் அவர்கள் தந்தையும் திகிலுற்றனர்.
36. தந்தை யாக்கோபு அவர்களை நோக்கி, "என்னைப் பிள்ளையற்றவன் ஆக்கிவிட்டீர்கள். யோசேப்பு இல்லை, சிமியோனும் இல்லை: இப்பொழுது பென்யமினையும் கூட்டிக்கொண்டு போகவிருக்கிறீர்களே! எல்லாமே எனக்கு எதிராக உள்ளன!" என்றார்.
37. அதற்கு ரூபன் தம் தந்தையிடம், "நான் அவனை உம்மிடம் திரும்பவும் கொண்டுவராவிடில், என் இரு மைந்தரையும் கொன்றுவிடுங்கள். அவனை என் கையில் ஒப்புவியுங்கள். நான் அவனை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பேன்" என்றார்.
38. ஆனால் யாக்கோபு, "என் மகனை உங்களோடு போகவிடமாட்டேன். இவன் சகோதரன் இறந்து போனான். இவன் ஒருவனே எஞ்சி இருக்கிறான். நீங்கள் போகும் வழியில், இவனுக்கு ஏதாவது ஆபத்து நேரிட்டால், நரைத்த முடியுள்ள என்னைத் துயருக்குள்ளாக்கிப் பாதாளத்திற்குள் இறங்கச் செய்வீர்கள்" என்றார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 விவிலியம் / பழைய ஏற்பாடு - புத்தகம் 1 - தொடக்கநூல் - Page 5 Empty Re: விவிலியம் / பழைய ஏற்பாடு - புத்தகம் 1 - தொடக்கநூல்

Post by சிவா Sat Apr 12, 2014 1:29 am

அதிகாரம் 43.

1. நாட்டில் பஞ்சம் மிகக் கடுமையாய் இருந்தது.
2. எகிப்திலிருந்து வாங்கி வந்திருந்த உணவுப் பொருள்கள் தீர்ந்துவிட்டன. அவர்கள் தந்தை அவர்களை நோக்கி, "நீங்கள் திரும்பிப் போய் நமக்குக் கொஞ்சம் உணவுப் பொருள் வாங்கி வாருங்கள்" என்றார்.
3. அதற்கு யூதா, "அந்த ஆள் உங்கள் இளைய சகோதரனை உங்களுடன் அழைத்து வராவிடில் நீங்கள் என் முகத்தில் விழிக்க வேண்டாம் என்று எங்களைக் கடுமையாய் எச்சரித்துள்ளார்.
4. ஆதலால் நீங்கள் எம் சகோதரனை எங்களோடு அனுப்பினால் மட்டுமே நாங்கள் அங்குச் சென்று உணவுப் பொருள்களை உங்களுக்கு வாங்கிக்கொண்டு வருவோம்.
5. நீங்கள் அவனை அனுப்பாவிடில், நாங்கள் போகமாட்டோம். ஏனெனில் அந்த ஆள், உங்கள் சகோதரன் உங்களுடன் வராவிடில், நீங்கள் என் முகத்தில் விழிக்கவேண்டாம் என்று சொல்லிவிட்டார்" என்று சொன்னார்.
6. இஸ்ரயேல் அவர்களை நோக்கி, "உங்களுக்கு இன்னுமொரு சகோதரன் இருக்கிறான் என்று அம்மனிதருக்குத் தெரிவித்து, நீங்கள் ஏன் எனக்குத் துன்பம் வருவித்தீர்கள்" என்று முறையிட்டார்.
7. அவர்கள், "அந்த ஆள் நம்மைப்பற்றியும் நம் உறவினரைப்பற்றியும் துருவித் துருவிக் கேட்டார். உங்கள் தந்தை இன்னும் உயிரோடு இருக்கிறாரா? உங்களுக்கு வேறு சகோதரன் உண்டா? என்று வினவினார். அவர் கேட்ட கேள்விகளுக்கு இவ்வாறு பதிலளித்தோம். உங்கள் சகோதரனை இங்கே கொண்டு வாருங்கள் என்று அவர் சொல்வார் என்று நாங்கள் அறிந்திருக்கக் கூடுமோ?" என்று மறுமொழி கூறினர்.
8. மேலும் யூதா தம் தந்தை இஸ்ரயேலை நோக்கி, "எங்கள் குழந்தைகளும், நீங்களும் நாங்களும் சாகாமல் உயிரோடிருக்க வேண்டுமானால், இளைஞனை என்னோடு அனுப்பி வையுங்கள். நாங்களும் புறப்பட்டுச் செல்வோம்.
9. அவனுக்கு நானே பொறுப்பாளி. அவனைப்பற்றிய பொறுப்பை என்கையில் விட்டுவிடுங்கள். நான் அவனை உங்களிடம் கொண்டுவந்து ஒப்புவிக்காவிடில், உங்களுக்கு முன்பாக, அப்பழியை எந்நாளும் நான் சுமப்பேன்.
10 இவ்வளவு காலந்தாழ்த்தியிராவிட்டால், இதற்குள் இரண்டுமுறை போய்த் திரும்பி வந்திருக்கலாம்" என்றார்.
11 அதைக் கேட்டு, அவர்களின் தந்தை இஸ்ரயேல், அவர்களை நோக்கி, "அவ்வளவு அவசியமானால், நீங்கள் அப்படியே செய்யுங்கள். ஆனால், இந்த நாட்டின் விளைச்சலில் மிகச் சிறந்த சிலவற்றை உங்கள் பைகளிலே எடுத்துச் செல்லுங்கள். கொஞ்சம் தைல வகைகள், தேன், நறுமணப் பொருள்கள், வெள்ளைப் போளம், தேவதாருக் கொட்டைகள், வாதுமைப் பருப்பு ஆகியவற்றை அம்மனிதருக்குக் காணிக்கையாகக் கொண்டு செல்லுங்கள்.
12. மேலும் இருமடங்கு பணத்தைக் கையில் எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் கோணிப்பை வாயில் வைக்கப்பட்டிருந்த பணத்தை நீங்கள் திருப்பிக் கொடுத்துவிடவேண்டும். ஒரு வேளை அது தவறுதலாய் நேர்ந்திருக்கக்கூடும்.
13. உங்கள் சகோதரனை அழைத்துக்கொண்டு மீண்டும் அந்த மனிதரிடம் செல்லுங்கள்.
14. அந்த மனிதர் ஏற்கெனவே அங்குள்ள உங்கள் சகோதரனையும் இந்தப் பென்யமினையும் உங்களோடு அனுப்பிவைக்கும்படி எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்குக் கருணை காட்டுவாராக! நானோ பிள்ளைகளை இழக்கவேண்டியிருந்தால், பிள்ளைகளை இழந்தவனாகவே இருப்பேன்" என்றார்.
15. அவர்களும் மேற்குறிப்பிட்ட காணிக்கைகளையும் இருமடங்கு பணத்தையும் கையில் எடுத்துக் கொண்டு பென்யமினுடன் எகிப்திற்குச் சென்று யோசேப்பின் முன்னிலையில் வந்து நின்றனர்.
16. யோசேப்பு அவர்களையும் அவர்களுடன் பென்யமினையும் கண்டவுடன் தம் வீட்டு மேற்பார்வையாளனை நோக்கி, "நீ இம்மனிதர்களை என் வீட்டிற்கு அழைத்துச் செல். இவர்கள் பகலுணவை இன்று என்னோடு உண்பார்கள். கால்நடை ஒன்றை அடித்து உணவு தயார் செய்" என்றார்.
17. அவனும் யோசேப்பு சொன்னபடியே அம்மனிதர்களை அவர் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போனான்.
18. யோசேப்பின் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டதால் அவர்கள் அச்சமுற்றனர். ஏனெனில், முன்பு நம் கோணிப்பைகளில் வைக்கப்பட்ட பணத்தை முன்னிட்டே இங்குக் கொண்டுவரப்பட்டுள்ளோம். நம்மைத் தாக்கி மடக்கி அடிமைகளாக்கி நம் கழுதைகளைக் கைப்பற்றிக் கொள்ளுமாறு இவ்வாறு கொண்டுவந்திருக்கிறார்களோ? என்று நினைத்துக்கொண்டனர்.
19. எனவே, அவர்கள் யோசேப்பின் வீட்டு வாயிற்படியிலே மேற்பார்வையாளனை அணுகிக் கூறியது:
20. "ஜயா, முன்பு ஒருமுறை நாங்கள் தானியம் வாங்குவதற்கும் இங்கு வந்திருந்தது உண்மையே.
21. திரும்பவும் வழியில் சாவடியில் எங்கள் கோணிப்பைகளைத் திறந்தபோது, பைகளின் வாயிலே நாங்கள் கொடுத்த பணம் அப்படியே இருக்கக் கண்டோம். அதே அளவு திரும்பவும் கையோடு கொண்டு வந்திருக்கிறோம்.
22. மேலும், எங்களுக்கு வேண்டியவற்றை வாங்குவதற்கு வேறு பணமும் கையோடு கொண்டு வந்திருக்கிறோம். நாங்கள் முன் கொடுத்த பணத்தை எங்கள் கோணிப்பைகளில் வைத்தது யாரென்று அறியோம்" என்றனர்.
23. அதற்கு அவன், "உங்களுக்கு அமைதி உண்டாகுக! அஞ்சவேண்டாம்! உங்கள் கடவுளும் உங்கள் தந்தையின் கடவுளுமானவர் உங்கள் கோணிப்பைகளில் அந்தப் பணத்தை உங்களுக்குப் புதையலாகத் தந்திருப்பார்! உங்கள் பணம் தான் என்னிடம் வந்ததே!" என்று சொல்லியபின், சிமியோனை அவர்களிடம் அழைத்து வந்தான்.
24. மேலும், அந்த மனிதன் அவர்களை யோசேப்பின் வீட்டிற்குள் அழைத்துச் சென்று, அவர்களுக்குத் தண்ணீர் கொடுத்தான். அவர்கள் தங்கள் பாதங்களைக் கழுவிக் கொண்டனர். பின்பு, அவர்களுடைய கழுதைகளுக்கு அவன் தீனி போட்டான்.
25. நண்பகலில் யோசேப்பு வரும் நேரத்தில், அவருக்குத் தருவதற்காக அவர்கள் தங்கள் காணிக்கைகளைத் தயார் செய்தனர். ஏனென்றால், தாங்கள் அங்கேயே உணவு அருந்தப்போவதாகக் கேள்விப்பட்டிருந்தனர்.
26. யோசேப்பு தம் வீட்டுக்கு வந்தார். வீட்டுக்குள் அவர்கள் கையில் கொண்டுவந்திருந்த காணிக்கைகளை அவர்முன் வைத்து, தரை மட்டும் தாழ்ந்து வணங்கினர்.
27. அவரோ அவர்களிடம் நலம் விசாரித்தபின் "நீங்கள் என்னிடம் சொல்லியிருந்த முதிர்வயதான உங் கள் தந்தை நலமாய் இருக்கிறாரா? இன்னும் உயிரோடிருக்கிறாரா?" என்று விசாரித்தார்.
28. அவர்கள், "உங்கள் ஊழியராகிய எங்கள் தந்தை நலமுடன் இருக்கிறார். இன்னும் உயிரோடிருக்கிறார்" என்று பதில் கூறித் தரைமட்டும் தாழ்ந்து வணங்கினர்.
29. யோசேப்பு கண்களை உயர்த்தி, தம் சகோதரனும், தம் தாயின் மகனுமான பென்யமினைப் பார்த்து, "நீங்கள் என்னிடம் சொல்லியிருந்த உங்கள் இளைய சகோதரன் இவன்தானோ?" என்று கேட்டபின், "மகனே, கடவுள் உனக்கு அருள்புரிவாராக!" என்றார்.
30. யோசேப்பு தம் சகோதரனைக் கண்டதும் மனம் நெகிழ்ந்து அழுவதற்கு ஓரிடம் தேடினார். உடனே தம் உள்ளறைக்குள் விரைந்துசென்று கண்ணீர்விட்டார்.
31. பின்பு, முகத்தைக் கழுவியபின் வெளியே வந்தார். தம்மை அடக்கிக்கொண்டு, உணவு பரிமாறுங்கள் என்றார்.
32. யோசேப்பிற்குத் தனியாகவும் சகோதரர்களுக்குத் தனியாகவும் அவருடன் உண்ணவிருந்த எகிப்தியருக்குத் தனியாகவும் உணவு பரிமாறப்பட்டது. ஏனென்றால், எகிப்தியர் எகிரேயரோடு உண்பதில்லை. அப்படி உண்பதை எகிப்தியர் அருவருப்பாகக் கருதினர்.
33. மேலும் அவருக்கு முன் அவர்களில் மூத்தவன் தலைமகன் உரிமைப்படி முதலாவதாகவும், இளையவர்கள் அவரவர் வயதின்படியும் அமர்த்தப்பட்டதால் ஒருவர் மற்றவரை வியப்புடன் நோக்கினர்.
34. யோசேப்பின் முன் வைக்கப்பட்ட தட்டுகளினின்று அவர்களுக்குப் பரிமாறப்பட்டது. மற்றவர்களது பங்கைப்போல் ஜந்து மடங்கு மிகுதியாகப் பென்யமினுக்குப் பரிமாறப்பட்டது. அவருடன் அவர்கள் மதுவருந்தி விருந்துண்டனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 விவிலியம் / பழைய ஏற்பாடு - புத்தகம் 1 - தொடக்கநூல் - Page 5 Empty Re: விவிலியம் / பழைய ஏற்பாடு - புத்தகம் 1 - தொடக்கநூல்

Post by சிவா Sat Apr 12, 2014 1:29 am

அதிகாரம் 44.

1. பின்னர் யோசேப்பு, தம் வீட்டு மேற்பார்வையாளனை நோக்கி, "அவர்களுடைய கோணிப்பைகளில் அவர்கள் தூக்கிச் செல்லுமளவு தானியம் நிரப்பி, அவனவன் பணத்தைப் பையின் வாயில் வைத்துக் கட்டிவிடு.
2. இளையவனது கோணிப்பை வாயில் எனது வெள்ளிக்கோப்பையையும், தானியத்துக்கு அவன் கொடுத்த பணத்தையும் வைத்துக் கட்டிவிடு" என்று கட்டளையிட்டார். யோசேப்பு சொன்னவாறே அவனும் செய்தான்.
3. காலையில் கதிரவன் உதித்ததும் அவர்கள் தங்கள் கழுதைகளோடு அனுப்பிவைக்கப்பட்டனர்.
4. அவர்கள் நகரை விட்டுச் சிறிது தூரம் போயிருப்பர். அப்பொழுது யோசேப்பு தம் வீட்டு மேற்பார்வையாளனை நோக்கி, "நீ எழுந்து அம்மனிதர்களைத் துரத்திப் பிடித்து, நன்மைக்குக் கைமாறாக நீங்கள் தீமை செய்வது ஏன்?
5. இது என் தலைவர் பருகப் பயன்படுத்துவது அல்லவா? இது அவர் குறிபார்க்கப் பயன்படுத்துவது அல்லவா? நீங்கள் செய்தது மிகப்பெரும் மோசடி! என்று சொல்வாய்" என்றார்.
6. அவனும் அவர்களை விரட்டிப் பிடித்து, இந்த வார்த்தைகளை அவர்களுக்குச் சொன்னான்.
7. அதற்கு அவர்கள் அவனிடம், "ஜயா, தாங்கள் இப்படிப் பேசுவதேன்? உம் அடியார்களாகிய நாங்கள் இத்தகைய முறையற்ற செயலைச் செய்திருப்போமா?
8. நாங்கள் கோணிப்பைகளின் வாயில் கண்ட பணத்தைக் கூடக் கானான் நாட்டினின்று உம்மிடம் திரும்பக் கொண்டு வந்தோம் அல்லவா! அப்படியிருக்க, நாங்கள் உம் தலைவர் வீட்டில் தங்கமாவது வெள்ளியாவது திருடிக்கொண்டு போவோமா?
9. உம் அடியார்களாகிய எம்முள் எவனிடமாவது அது காணப்பட்டால் அவன் செத்தொழியட்டும்! நாங்களும் எங்கள் தலைவருக்கு அடிமைகள் ஆவோம்" என்று பதில் சொன்னார்கள்.
10 அதுகேட்டு அவன், "நன்று நன்று: உங்கள் சொற்களின்படி ஆகட்டும். அது எவனிடம் அகப்படுமோ அவன் எனக்கு அடிமையாக இருப்பான்: மற்றவர்கள் குற்றமற்றவர்களாய் இருப்பீர்கள்" என்று அவர்களுக்குச் சொன்னான்.
11 அப்பொழுது அவர்கள் விரைந்து கோணிப்பைகளைத் தரையில் இறக்கிவைத்தார்கள். ஒவ்வொருவனும் தன் கோணிப்பையைத் திறந்தான்.
12. மூத்தவன் முதல் இளையவன்வரை அவன் சோதித்தபோது, அந்தக் கோப்பை பென்யமின் பையில் காணப்பட்டது.
13. அப்பொழுது அவர்கள் தங்கள் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, கழுதைகளின் மேல் சுமையை ஏற்றி நகருக்குத் திரும்பி வந்தனர்.
14. அதுவரை யோசேப்பு அங்கேதான் இருந்தார். யூதா தம் சகோதரருடன் வந்து சேர்ந்தார். அவர்கள் அவருக்குமுன் தரையில் வீழ்ந்து வணங்கினர்.
15. யோசேப்பு அவர்களை நோக்கி, "நீங்கள் என்ன, இப்படிச் செய்துவிட்டீர்கள்? குறிபார்ப்பதில் என்னைப் போன்றவர் எவருமிலர் என்பது உங்களுக்குத் தெரியாதா?" என்று வினவினார்.
16. அதற்கு யூதா, "என் தலைவராகிய தங்களிடம் நாங்கள் என்ன சொல்வோம்? என்னதான் பேசுவோம்? எங்கள் மாசின்மையை எப்படி நாங்கள் எண்பிக்க முடியும்? கடவுளே உம் அடியார்களின் தீச்செயலைக் கண்டுபிடித்தார். இதோ நாங்களும், எவனிடம் கோப்பை கண்டுபிடிக்கப்பட்டதோ அவனும், தங்களுக்கு அடிமைகளாவோம்" என்று சொன்னார்.
17. அது கேட்டு யோசேப்பு, "அத்தகைய முறையற்ற செயலை நான் செய்ய மாட்டேன். கோப்பை எவனிடம் அகப்பட்டதோ அவன் மட்டும் எனக்கு அடிமையாக இருப்பான். மற்றவர்கள் உங்கள் தந்தையிடம் நலமாகச் செல்லுங்கள்" என்றார்.
18. யூதா அவர் அருகில் வந்து, "என் தலைவரே! அடியேன் ஒரு வார்த்தை கூற அனுமதி தாரும். என் தலைவரே! செவிசாய்த்தருளும். உம் அடியான் மீது சினம் கொள்ள வேண்டாம். நீர் பார்வோனுக்கு இணையானவர்.
19. என் தலைவராகிய தாங்கள் உம் பணியாளர்களாகிய எங்களிடம், உங்களுக்குத் தந்தையோ சகோதரனோ உண்டா? என்று கேட்டீர்கள்.
20. அதற்கு நாங்கள், எங்களுக்கு வயது முதிர்ந்த தந்தையும், முதிர்ந்த வயதில் அவருக்குப் பிறந்த ஓர் இளைய சகோதரனும் உள்ளனர். அவனுடைய சகோதரன் இறந்துவிட்டான். அவன் தாயின் பிள்ளைகளில் அவன் ஒருவனே இருப்பதால், தந்தை அவன் மேல் அதிக அன்பு கொண்டிருக்கிறார் என்று தலைவராகிய தங்களுக்குச் சொன்னோம்.
21. அப்பொழுது தாங்கள், அவனை என்னிடம் அழைத்து வாருங்கள். நான் அவனை நேரில் பார்க்க வேண்டும் என்று உம் அடியார்களுக்குச் சொன்னீர்கள்.
22. நாங்கள் அந்த இளைஞன் தன் தந்தையை விட்டுப் பிரிய இயலாது: பிரிந்தால் அவர் இறந்து போவார் என்று தலைவராகிய தங்களிடம் சொன்னோம்.
23. அதற்குத் தாங்கள் உங்கள் இளைய சகோதரன் உங்களோடு வராவிட்டால் என் முகத்தில் விழிக்க வேண்டாம் என்று உம் அடியார்களுக்குச் சொன்னீர்கள்.
24. உம் பணியாளராகிய எங்கள் தந்தையிடம் திரும்பியவுடன் என் தலைவராகிய தாங்கள் சொல்லியவற்றை அவரிடம் எடுத்துரைத்தோம்.
25. பிறகு எங்கள் தந்தை, நீங்கள் திரும்பிப்போய் நமக்குக் கொஞ்சம் உணவுப்பொருள் வாங்கி வாருங்கள் என்றார்.
26. நாங்கள் எங்களால், போக இயலாது, எங்கள் இளைய சகோதரன் எங்களோடு சேர்ந்து வந்தால் மட்டுமே புறப்படுவோம். வராவிட்டால், இவன் இல்லாமல் நாங்கள் அவர் முகத்தில் விழிக்க மாட்டோம் என்றோம்.
27. உம் பணியாளராகிய எங்கள் தந்தை எங்களிடம் என் மனைவி, எனக்கு இரு பிள்ளைகளையே பெற்றெடுத்தாளென்று உங்களுக்குத் தெரியும்.
28. ஒருவன் என்னைப் பிரிந்து வெளியே சென்றான். அவன் ஒரு கொடிய விலங்கால் பீறிக்கிழிக்கப்பட்டான் என்று நினைத்துக் கொண்டேன். ஏனெனில், இதுவரை அவனைக் காணவில்லை.
29. இப்பொழுது நீங்கள் இவனையும் என்னிடமிருந்து பிரிக்கிறீர்கள். இவனுக்கு ஏதாவது ஆபத்து நேரிட்டால், நரைத்த முடியுள்ள என்னைத் துயருக்குள்ளாகிப் பாதாளத்திற்குள் இறங்கச்செய்வீர்கள் என்றார்.
30. ஆகையால் உம் பணியாளராகிய என் தந்தையிடம் நான் செல்லும்போது அவர் உயிருக்கு உயிராக இருக்கும் இந்த இளைஞன் எங்களோடு இல்லையெனில்,
31. இளைஞன் இல்லையென்று கண்டு அவர் உடனே இறந்து போவார். உம் பணியாளர்களாகிய நாங்கள் நரைத்த முடியுள்ள உம் ஊழியரான எங்கள் தந்தையைத் துயருக்குள்ளாக்கிப் பாதாளத்திற்குள் இறங்கச் செய்தவர்கள் ஆவோம்.
32. எம் தந்தையிடம் இளைஞனின் பாதுகாப்புக்கு உம் அடியான் பொறுப்பேற்றிருக்கிறேன். ஏனெனில், என் தந்தையே, அவனை நான் திரும்பக் கூட்டி வராவிட்டால், உம் முன்னிலையில் அப்பழி எந்நாளும் என்னையே சாரும் என்றேன்.
33. ஆகையால் இப்பொழுது இளைஞனுக்குப் பதிலாய் அடியேனை உமக்கு அடிமையாக்கியருளும். இளைஞனையோ அவன் சகோதரர்களோடு சேர்ந்து போகவிடும்.
34. இளைஞன் என்னோடு இல்லாவிடில், எப்படி என் தந்தையிடம் நான் திரும்புவேன்? என் தந்தைக்கு நேரிடவிருக்கும் துன்பத்தை எப்படி நான் பார்த்துக் கொண்டிருப்பேன்?" என்றார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 விவிலியம் / பழைய ஏற்பாடு - புத்தகம் 1 - தொடக்கநூல் - Page 5 Empty Re: விவிலியம் / பழைய ஏற்பாடு - புத்தகம் 1 - தொடக்கநூல்

Post by சிவா Sat Apr 12, 2014 1:30 am

அதிகாரம் 45.

1. அப்பொழுது யோசேப்பு தம் பணியாளர் அனைவர் முன்னிலையிலும் இதற்குமேல் தம்மை அடக்கிக் கொள்ள முடியாமல், எல்லோரும் என்னைவிட்டு வெளியே போங்கள் என்று உரத்த குரலில் சொன்னார். யோசேப்பு தம் சகோதரருக்குத் தம்மைத் தெரியப்படுத்தும் பொழுது வேற்று மனிதர் எவரும் அவரோடு இல்லை.
2. உடனே அவர் கூக்குரலிட்டு அழுதார். எகிப்தியர் அதைக் கேட்டனர். பார்வோன் வீட்டாரும் அதைப்பற்றிக் கேள்விப்பட்டனர்.
3. பின்பு, அவர் தம் சகோதரர்களை நோக்கி, "நான் தான் யோசேப்பு! என் தந்தை இன்னும் உயிரோடிருக்கிறாரா?" என்று கேட்டார். ஆனால் அவரைப் பார்த்து அவர் சகோதரர்கள் திகிலடைந்ததால், அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.
4. ஆனால் யோசேப்பு தம் சகோதரர்களை நோக்கி, "என் அருகில் வாருங்கள்" என்றார். அவர்கள் அருகில் வந்தவுடன் அவர், "நீங்கள் எகிப்திற்குச் செல்லுமாறு விற்ற உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான்!
5. நான் இங்குச் செல்லுமாறு நீங்கள் என்னை விற்றுவிட்டது குறித்து மனம் கலங்க வேண்டாம். உங்கள்மீதே சினம் கொள்ள வேண்டாம். ஏனெனில், உயிர்களைக் காக்கும்பொருட்டே கடவுள் உங்களுக்கு முன்னே என்னை எகிப்திற்கு அனுப்பியருளினார்.
6. நாட்டில் பஞ்சம் தொடங்கி இரண்டு ஆண்டுகளே ஆகியுள்ளன. இன்னும் ஜந்தாண்டுகள் உழவோ அறுவடையோ இராது.
7. ஆதலால் உலகில் உங்களுள் எஞ்சி இருப்போரைப் பாதுகாக்கவும், பெரும் மீட்புச் செயலால் உங்கள் உயிர்களைக் காக்கவும், கடவுள் உங்களுக்குமுன் என்னை அனுப்பி வைத்தார்.
8. என்னை இங்கு அனுப்பியது நீங்கள் அல்ல, கடவுள்தாம். அவரே என்னைப் பார்வோனுக்குத் தந்தையாகவும், அவர் வீடு முழுவதற்கும் தலைவராகவும், எகிப்து முழுவதற்கும் ஆளுநராகவும் ஏற்படுத்தியுள்ளார்.
9. நீங்கள் என் தந்தையிடம் விரைந்து சென்று அவருக்குச் சொல்லுங்கள். "உங்கள் மகன் யோசேப்பு தெரிவிப்பது இதுவே: கடவுள் என்னை எகிப்து முழுவதற்கும் ஆளுநராக நியமித்துள்ளார். எனவே காலந்தாழ்த்தாமல் என்னிடம் வாருங்கள்.
10 நீங்களும் உங்கள் பிள்ளைகளும் உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளும் உங்கள் ஆடு மாடுகளோடும் உங்களுக்குச் சொந்தமான யாவற்றோடும் கோசேன் பகுதியில் எனக்கு அருகில் குடியேறி வாழலாம்.
11 அங்குள்ள உங்களை நான் பேணிக் காப்பேன். ஏனெனில் இன்னும் ஜந்தாண்டுகள் பஞ்சம் இருக்கும். இங்கு வராவிடில், நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் உங்களுக்குள்ள அனைத்தும் வறியோராய் வாடுவீர்கள்.
12. இதோ உங்களோடு பேசுவது என் வாய்தான் என்பதை நீங்களும் என் சகோதரன் பென்யமினும் கண்ணாரக் காண்கிறீர்கள்.
13. நான் எகிப்தில் அடைந்துள்ள சிறப்பு அனைத்தையும் நீங்கள் இங்குக் கண்ட யாவற்றையும் என் தந்தைக்குத் தெரிவியுங்கள். விரைந்துபோய், என் தந்தையை இங்கே அழைத்து வாருங்கள்" என்று கூறினார்.
14. பிறகு, தம் சகோதரன் பென்யமினை அரவணைத்து அவன் தோளில் தலைசாய்த்துக்கொண்டு அழுதார். பென்யமினும் அப்படியே அவர் தோளில் தலைசாய்த்துக்கொண்டு அழுதான்.
15. பின் யோசேப்பு தம் சகோதரர் யாவரையும் முத்தமிட்டு அழுதார். இதன்பின் அவர்கள் அவரோடு உரையாடினர்.
16. யோசேப்பின் சகோதரர்கள் வந்துள்ளனர் என்ற செய்தி பார்வோனின் அரண்மனையை எட்டவே, பார்வோனும் அவன் அலுவலர்களும் அகமகிழ்ந்தனர்.
17. அப்பொழுது பார்வோன் யோசேப்பை நோக்கிக் கூறியது: "நீர் உம் சகோதரர்களுக்கு இவ்வாறு சொல்வீர்: நீங்கள் செய்ய வேண்டியது யாதெனில், உங்கள் கால்நடைகளின் மேல் பொதியேற்றிக் கானான் நாட்டிற்குத் திரும்பிச் சென்று,
18. அங்கிருந்து உங்கள் தந்தையையும் குடும்பங்களையும் அழைத்துக் கொண்டு என்னிடம் வாருங்கள்: நான் உங்களுக்கு எகிப்து நாட்டின் சிறந்த பகுதியைத் தருவேன். நீங்களும் நிலத்தின் வளமையை அனுபவிக்கலாம்.
19. உம் சகோதரர்களுக்கு நீர் மீண்டும் சொல்ல வேண்டியது: நீங்கள் இவ்வாறு செய்யுங்கள். உங்கள் குழந்தைகளையும் மனைவியரையும் அழைத்து வருமாறு, எகிப்து நாட்டினின்று வண்டிகளைக் கொண்டு போங்கள். உங்கள் தந்தையையும் அழைத்துக்கொண்டு வந்து சேருங்கள்.
20. உங்கள் தட்டுமுட்டுகளைப் பற்றிக் கவலைப்படவேண்டாம்: ஏனெனில், எகிப்து நாட்டில் சிறந்தவையெல்லாம் உங்களுக்கே உரியவையாகும்."
21. இஸ்ரயேலின் புதல்வர்கள் அவ்வாறே செய்தனர். பார்வோன் கட் டளையின்படி யோசேப்பு அவர்களுக்கு வண்டிகளையும் வழிக்கு உணவுப் பண்டங்களையும் கொடுத்தார்.
22. மேலும், அவர்களில் ஒவ்வொருவனுக்கும் வேறு புத்தாடைகளும் கொடுத்தார். பென்யமினுக்கோ முந்நூறு வெள்ளிக் காசுகளும் ஜந்து ஆடைகளும் கொடுத்தார்.
23. அப்படியே தம் தந்தைக்குப் பத்து ஆண் கழுதைகளின் மேல் எகிப்தின் சிறந்த பொருள்களையும், அவரது பயணத்திற்குப் பத்துப் பெண் கழுதைகளின் மேல் தானியத்தையும், அப்பம் முதலிய உணவு வகைகளையும் ஏற்றி அவர்களோடு அனுப்பி வைத்தார்.
24. பின்பு, அவர் தம் சகோதரர்களை வழியனுப்பி வைத்தார். அவர்களை விட்டுப் பிரியும்போது, "நீங்கள் வழியில் சச்சரவு செய்யாதீர்கள்" என்று சொல்லி அனுப்பினார்.
25. அவர்கள் எகிப்திலிருந்து புறப்பட்டுக் கானான் நாட்டிலிருந்த தங்கள் தந்தை யாக்கோபிடம் வந்து சேர்ந்தனர்.
26. அவர்கள் அவரிடம், "யோசேப்பு இன்னும் உயிரோடிருக்கிறார்: அவரே எகிப்து நாடு முழுவதற்கும் ஆளுநர்" என்று அறிவித்தனர். அதைக் கேட்டு யாக்கோபு மன அதிர்ச்சியுற்று அவர்கள் சொன்னதை நம்பவில்லை.
27. ஆனால் யோசேப்பு அவர்களுக்குச் சொன்ன யாவற்றையும் அவருக்கு அவர்கள் சொன்னதைக் கேட்டும், யோசேப்பு அவரை அழைத்து வர அனுப்பியிருந்த வண்டிகளைக் கண்டும் அவர்கள் தந்தை யாக்கோபு புத்துயிர் பெற்றவர் ஆனார்.
28. இறுதியில் இஸ்ரயேல், "என் மகன் யோசேப்பு இன்னும் உயிரோடிருப்பது ஒன்றே போதும். நான் இறக்குமுன் சென்று அவனைக் காண்பேன்" என்றார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 விவிலியம் / பழைய ஏற்பாடு - புத்தகம் 1 - தொடக்கநூல் - Page 5 Empty Re: விவிலியம் / பழைய ஏற்பாடு - புத்தகம் 1 - தொடக்கநூல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics
» கம்பராமாயணம் மற்றும் சிலப்பதிகாரம் புத்தகம் அதன் உரையுடன் கூடிய புத்தகம்
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் நூல் : புத்தகம் போற்றுதும் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை. எழுத்தாக்கம் கவிஞர் ச. கோபிநாத்
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் நூல் : புத்தகம் போற்றுதும் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை. எழுத்தாக்கம் கவிஞர் ச. கோபிநாத்
» ஒரு புதிய ஏற்பாடு
» இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum