ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம்

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 4 Empty அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம்

Post by சிவா Wed Apr 09, 2014 10:29 pm

First topic message reminder :


1. தியானம்

உலகமே
இருளினுள் மூழ்கித் துயிலும்
ஒரு கரீய பெரீய முட்டையாய்.

உறங்காது
நானோ
உள்விழித்திருப்பேன்.

உள்திரளும் பரிதிக் குஞ்சின்
உதயம் தியானித்து.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 4 Empty Re: அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம்

Post by சிவா Wed Apr 09, 2014 10:45 pm

24. நிலவுக்கு எழுதல்

யாரிட்டார் சாபம் இந்த நிலவுக்கு?

கறையோடு உடன் பிறந்தும்
கண்ணை உறுத்தாது
காலமெலாம் பொழிந்த
நிலவுக்கு நேர்ந்த தென்ன?

காவிய காலக் கனவே சிதைந்ததென
இன்று வெறுங் குறுமதியாய்...
யாரிட்ட சாபமோ?

காலங் காலமாய் கன்னியர்க்கு உதாரணித்தும்
"நிலவின் துகிலைக் கலை" யென்று
உடுத்தியும் உரிந்தும்
வேசையாடித் தீர்த்த கவிஞரின்
வெறித்தனம் ஓய
'காவிய நிலா'வின் காலம் தேய்ந்தது.

கால வளர்ச்சியில்
காத்திருந்து.
இதோ பாரென்று
கற்றை விரித்தது விஞ்ஞான நிலா
மனிதக் காலடிச் சுவடுகள் ஏந்தி.

'சுவடு பற்றி எழுக!" என்றார்த்தார்;
எழுந்தவர் என்ன கண்டோம்?

விண்ணிலும் வேலி போடத்
தொடங்கினர் விஞ்ஞானத்தார்.

நிலவின் குண்டு குழிகள் எங்கள்
நெஞ்சிலும் கொண்டேகி
நிலவுலாவிய நிகழ்வு என் செயும்?

அன்று ஆதி சிவன் சூடினான்
இன்று நாம் சூடுவோம் என்று
வல்லரசுகள் எழுந்து வல்லூறாய்ப் பறக்க
வாழுகின்ற பூமியிலே-

விஞ்ஞான யுத்த காண்டம்
விளைவித்த மனுச் சாம்பல்
புழுதி கண் மறைக்க
நிலவெங்கே தோற்றும்?

நிலவின் கிரகணமே
நித்திய தரிசனமாச்சு.

நிலவுக்கு எழுதலே இவரின்
நீசத்தனங்களை
மறைக்க எழுப்பும்
மாயையாச்சு.

மாயை முகில் திரைகிழித்து
கறையிலா நிலவினிக் காரிக்குமோ?
நாமெல்லாம்
தூவெண் மதி சூடும் நாளென்ன
வெகு தொலைவோ?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 4 Empty Re: அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம்

Post by சிவா Wed Apr 09, 2014 10:46 pm

25. பொழிவு

புலன்கள் அதிர
மின்னி முழங்கிப் பொழிந்தாற்றான்
பொழிவா?

பொழிந்த பெருமழைக்குப் பின்னால்
காத்திருந்து மெல்ல எழுமே
ஒர் பேர் மௌனப் பெருக்கு.

அடை மழைக்குப் பின் முளைக்கும்
கதிர் விரி காலையில்
வழியுமே
ஓர் எல்லையற்ற பேரமைதி.

கழுவித் துடைத்த வானின்
ந‡த்ர விழிகள்
சொரியுமே
ஓர் ஸ்ருதி சுத்தம்.

புலன்கள் உறைந்து போக
இவற்றின்
பொழிவில் நனைந்திலையா?

இலையுதிர்ந்த நெடுமரமாய்
ஏகப் பெரு வெளியின்
சங்கீதம் குளித்திலையா?
......
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 4 Empty Re: அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம்

Post by சிவா Wed Apr 09, 2014 10:46 pm

26. எதிர்ப்பு

எதையும் எதிர்கொள்
முகந் திருப்பாதே;
மனஞ் சலிக்காதே.

தடைகள்;
புறத் தடைகள்
மடைத்தனம்,
வாமன ரூபம்
மூவுலகளந்ததே!

ஆகாயம் மேவிய
பாய்ச்சலில்,
தடைகள் வெறுந் தோற்றம்.

"மெல்லெனப் பாயும் தண்ணீர்
கல்லையும் உருவிப் பாயும்," - வெறும்
பாறைப் பழம் மொழி
தாமதத் தத்துவம்.

ஓடிவரும் கிளை நதிகள்
உட் தேக்கி
வேகமாய்ப் பாய்
வீச்சோடு.

மனஞ் சலிக்காதே,
முகந் திருப் பாதே,
எதிர் கொள் எதையும்;
எதிர்ப்பில் முளைகொள்....
.....
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 4 Empty Re: அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம்

Post by சிவா Wed Apr 09, 2014 10:47 pm

27. இடிபாடுகளின்மேல் ஒரு படைவீடு

கோபுரங்கள் எழும்பிய கோயில்களை விடவும்
இடிபாடுற்றவைகளில்
எனக்கு அதிகம் ஈடுபாடு.

இடிபாடு களிடையேயும்
'இதோ நான் எழுந்தருளி' என்று
சிதிலங்களின் மேலாய்க் கூவும்குரலை
நான் கேட்பதிங்கேதான் ஆதலினால்,

இடிபாடுகளிடையேயும் இறை காணார்
எழுப்புவார் கோபுரம்.

எல்லாமே இடிந்த வெளியில்
திரு நடம் காண வேண்டும்.
பரந்தில்லை வெளியில் அந்த
நடம் காணாப் பேர்வழிகள்
இடிபாடுகள் நீக்க எழுகிறார் தூண்களாக.
தூக்கி நிறுத்தும் ஒவ்வொரு தூணிலும்
நாமம் பொறிக்கும் காமிகள் எழுகிறார்.

இடிந்து விழப் போகும் இந்த
நடமாடுந் தூண்கள்
எழுப்பிய தூண்கள் நிற்கவா போகுது?
கோபுரத்தை பொம்மைகளா தாங்கி நிற்குது?
இளிச்சவாய்ப் பொம்மைகள்.

எல்லாமே ஒருநாள் இடிவிழுந்த குண்டாகாதோ?
எழும்பிய கோயில் வேறு இடிவிழுந்தகுண்டு வேறா?
இடிவிழுந்த குண்டினுள்ளும்
நீரூற்று முகங்காட்டும்.

அழிவிலும் ஆக்கமுண்டு
தன்னின் அழிவு தரிசனம் காட்டும்
தன்னை எழுப்பினால் சூரனின் தலைமாற்றம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 4 Empty Re: அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம்

Post by சிவா Wed Apr 09, 2014 10:47 pm

2

சூரன் போர் நடந்தது
கோயில் ஒன்றில்.
கோபுரம் எழும்பிய கோயில்.

சூரன் வந்தான் வீதியெல்லாம்
சுற்றித்திரிந்து தலைகாட்டினான்.
தலைசுழற்றி தலைமாற்றி
'கலை' யாடித் திரிந்தான்.
"உருவேறிய சூரனின் உடல் அற
சேவலும் மயிலும் வரும்" என்றார் ஒருவர்.

(சேவலுக்கும் மயிலுக்குமா சூரன்
உடல் கிழித்தான் முருகன்?)

'சூரன் யார்? யார் சூரன்?'
'சூரனைச் செய்தவன் சூரனா?'
'சூரனைக் காவியவன் சூரனா?'

சூரவிமர்சனங்களில் சுற்றி நின்றோர் ஈடுபட
சூரனைக் காவினோரும் முருகனைக் காவினோரும்
சுறுசுறுப்பாய் முன்பின்னாய்ச் சுழன்று வர
திடீரென்று
மோதுண்டு வீழ்ந்தார்
கோயில் முதலாளி, குருக்கள், நாரத வேடர்
பலரும் வீசுண்டு வீழ்ந்து முழங்காலில்
நோவுண்டு எழுந்து மெல்ல நொண்டிநடக்க.....

வானிலே என்ன அது?
சூறைக் காற்றுச் சுழன்றடிக்க
சூரனாய்ப் பருத்த மேகங்கள் கர்ஜிக்க
பீறிவரும் வேலாயுதங்களென மின்னல் பெருக்குதிர
பொழியும் மழைக்குருதி.

சூரன் போர் இப்போது வானில் இடமாற்றம்
சுற்றிநின்றோர் அஞ்சி கோயிலின் உட்பதுங்க
கோபுரமே தகர்ந்து கொட்டுவதாய்
இடிமுழக்கம்.

'கோபுரத்தில் இடிவிழக் கூடுமோ?' என்று
அஞ்சுந் தொனிகள்: ஏக்கம் கௌவிய
முகங்கள் கற்சிலைகளாய் விறைத்துநிற்க--

இடிவிழுந்தால் தான் என்ன?
இடியும் இடி விழுந்த பள்ளமும்....
கடலும் கரைகடந்த வெள்ளமும்....
தீயும் தீக்கடைந்த ஊழியும்....
ஊழிக்காற்றின் 'ஹோ'வென்ற இரைச்சலும்....?

'உலகழிந்து போகுமே!'

உலகழிந்து போனால் தான் என்ன?
சூரனாய்ப் பருத்துக் கிடக்கும் உலகு.
சூரனின் அழிவில் சுகம் இல்லையா?

சூரனின் கோட்டை சுக்கு நூறாய்ச் சிதற
இடிபாடுகளையே படைவீடாக்கி
இறை கொலுவிருக்காதா?

முப்புரங்கள் எரிந்த சாம்பரிடை
மூன்றாவது கண் ஜுவாலித்ததே.

சருகுகள் 'குபீரெ'ன்று பற்றி எரிகையிலும்
ஓர் இசை எழல் உண்டன்றே.

எல்லாமே இடிந்த வெளியில் திருநடம்
இந்த இசையின் பின்னணி லயத்திலே அன்றோ!

இதனால்தான்
கோபுரங்கள் எழும்பிய கோயில்களைவிடவும்
இடிபாடுகளில் எனக்குப் பிரியம் அதிகம்.

இடிபாடுகளிடையே எழும்
புழுதியிடைத் தோயாச் சுவடுகளின்
தூரத்துச் சிலம்பொலி
காதில் விழுவது இங்கேதான்.

காது கொடுங்கள் அக்கழலொலிக்கு.
எல்லாமே இடிந்த பரவெளியில்
திருநடம் காண வாரும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 4 Empty Re: அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம்

Post by சிவா Wed Apr 09, 2014 10:48 pm

28. தூரக் கடல் தாண்டி.....

ஓடத்தில் ஏறிச் செல்வோமே
தொடுவானம் குறியாக
நீல நெடுங் கனவாய் விரிகடலில்
ஓலமிடும் அலைகள் நடுவே.

பிரிந்து செல்லும் துறைமுகத்தில்-துயர்
சொரிந்தெரியும் விளக்குகளில்
எங்கள் நெஞ்சங்கள் ஏங்குவதோ?
எங்குமே துன்பங்கள்தான் சொந்தமோ?

விடிவை நோக்கிய பயணமிது
விடிவதெப்போ? பயணம் முடிவதெப்போ?
ஒளியின் கீற்றுகள் வெளிப்படுமோ?
இருளின் பாறைதான் தொடர் இருப்போ?

விடியும் விடியும் என்றெவரோ சொன்னார்
இருளின் பாழில் எழுந்த குரல்களோ?
மயங்கும் மனங்களின் மாயங்கள் தாண்டி
துயிலும் நம்பிக்கைச் சுடர் தூண்டிப் போவோம்.

ஒளியும் இருளும் உலகின் விதி என்ற
இருளின் வலையில் விழுந்து படாமல்
துயிலும் நம்பிக்கைச் சுடர் தூண்டிப் போவோம்
தோணி எடுத்தோம் துடுப்பை வலிப்போம்.

ஒளிக்கும் ஒளியாக உற்ற துயருக்கு விடிவாக
வெளிக்கும் வெளியாக வெளிச்சமே வாழ்வாக
உன்னதம் ஒன்றின் இருப்புளது
துன்பக் கடல் தாண்டிப் போவோமே
துன்பக் கடல் தாண்டிப் போவோமே.
........
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 4 Empty Re: அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம்

Post by சிவா Wed Apr 09, 2014 10:48 pm

29. சுழலின் மையம் தேடி....

அம்மா ஒவ்வொரு நாளும்
முற்றம் பெருக்குவாள்
குப்பைகள் சேரும் கொளுத்தி எரிப்பாள்.

கொளுத்தக் கொளுத்தக் குப்பைகள் சேரும்
குப்பைகள் சேரச்சேர கொளுத்தலும் தொடரும்
கொளுத்திய பின் எஞ்சிய சாம்பலை
காற்றெடுத்துத் தூவ
விழுந்த தூசிகள் விழிகளை உறுத்தும்.

பக்கத்து வீட்டில் குப்பைகள் சேர்ந்தால்
வெட்டித் தாழ்ப்பார் பசளையாய் மாறும்
பசளையின் மேலே பச்சை கொடி விழும்
கொடிவிட்டுத் தளிர்த்தவை
நாட்செல நாட்செல சருகுகள் உதிர்க்கும்.
தளிர்ப்பதும் உதிர்ப்பதும் உதிர்ப்பதும் தளிர்ப்பதும்
ஒரே சுழல் வட்டம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 4 Empty Re: அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம்

Post by சிவா Wed Apr 09, 2014 10:49 pm

2

எப்போதிருந்து இவ்வுலகம்
குப்பை கொட்ட ஆரம்பித்திருக்கும்?
உலகங்கள் தானென்ன ஒன்றா இரண்டா?
அவையும்
கொட்டிக் கிடக்குதே குப்பைக் கணக்கில்

வான மண்டலத்தில் தூசிகள் திரண்டு
திணிந்து பெருத்து ஊதி
வெடித்த ஒரு கணந் தொட்டு
பருத்திக் கொட்டைப் பஞ்சுகளாய்
இருட்டில் விழிக்கும் உலகங்கள்தான்

எத்தனை! எத்தனை!

பால் வழிப் பயணிகள்,
உடுக் கொத்து ஊர்வல
மத்தாப்பூச் சிதறல்கள்.
எண்ணுதற்கு எட்டாப் பெருவெளியில்
பின்னிப் பின்னிக் கண்ணைச் சிமிட்டும்
அரைவிழிப்பு, கால்விழிப்பு தூக்கக் கலக்கங்கள்,
ஒளிவருடத் திரைமறைப்புகள்
குறாவிக் கிடக்கும் ரஹஸ்யங்கள்
இன்னும்
எம்மையே ஆளும் இயல்பினராய
உன்னத நாகரீகத்து ஒளி விளக்குகள்.

இப்படி இப்படி
எத்தனை உலகம் சித்துகள் போல.

எல்லையறு விண்வெளியின் ஏகாந்தத் தாலாட்டில்
கண்ணயர்வன போல் காணும் அண்டமெல்லாம்
அள்ளுண்ட வானப் பேராறாய்
எங்கோ எங்கோ எங்கோவாய்
முடிவிலி என்னும் பரவையுட் பாய்ந்தபடி.....
ஒரே பிரபஞ்ச ஓட்டம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 4 Empty Re: அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம்

Post by சிவா Wed Apr 09, 2014 10:49 pm

3

இங்கேயும்
எமதகத்துள் எத்தனை நகர்வுகள்.

மனவெளியில் குரவையிடும்
எண்ணத் துணுக்குகள்
சிறுச் சிறு கணங்களின்
சேர்க்கை வலங்கள்-
லய மெல்லொழுக்குகளாய்
உடைப் பெடுத் தோடல்களாய்....

மனதின் ஓரவிழி நோக்கில்
ஆழப் புதைகுழி நீத்துக் கிளர்வுறும்
உணர்வுகளின் முளை மீறல்கள்,
கிளைத்துப் படர்ந்து
பூச்சொரியும் இன் கனவுகள்,
துயர் சுமந்து கசியும் மென்பனித் தூறல்கள்,
சடைத்த இருட் தோப்புள்
ஆழ்துயிலும் மர்மங்கள்,
இருட்தோப்பை ஊடுருவி நின்ற நிசப்தத்தின் பேரிரைச்சல்
மூச்சின் நரம்பதிரும் மின்வெட்டுகள்.

இருளிடை மின்மினி வலங்களாய், இப்படி
ஒன்றையன்று விழுங்கியும் உமிழ்ந்தும்
துரத்திக் கொண்டோடும் எண்ணத் துணுக்குகளின்
ஓட்டம் இடையறா ஓட்டம்.

ஜீவன் அறுந்தபின்னும் காற்று வெளியில்
தூவிய கருத்தின் துகள்களாய்
மனோசூக்குமத்தின் மாயப் பந்தயம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 4 Empty Re: அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம்

Post by சிவா Wed Apr 09, 2014 10:49 pm

4

அகவெளி முற்றந் தொட்டு
அண்டவெளி முற்றம் வரையும்
எத்தனை நிகழ்வுகள்! எத்தனை நகர்வுகள்!
அத்தனை நிகழ்வுப் புயல்களும் வாரிக்
குப்பை கொட்ட
தொங்கும் தொட்டிகளா இவ்வுலகங்கள்?
பிரபஞ்சமே குப்பைமயம் தூசிமயமா?
எனின் இந்தத்
தூசிகள் அகல்வதெப்போ?
குப்பைகள் ஒழிவதெப்போ?

அத்தனை உலகும் தீப்பட்டழிந்த
ஊழியின் முடிவில் ஒழியுமா
நெஞ்சின் விழியுறு தூசி?
பிரச்சனையின் முடிவு
பிரபஞ்சத்தின் பிடிசாம்பரில் கிடைக்குமா?

பிடிசாம்பரிடையும் பிரபஞ்ச அணுவிலிருந்து
அடைகாத்து முடுகி முறுகி பெருத்தூதி
மீண்டும் கோளங்கள் பொரித்தால்....?
குப்பைகள் மீண்டும் சேர்ந்தால்....?

உதிர்தலும் தளிர்தலும்
உள்ளிழுத்தலும் உமிழ்தலும்
ஒரே சுழல் வட்டத் தொடர் நிகழ்லீலையாம்.
தொடர்நிகழ் லீலையில்
எனது இருப்பு எங்கே?

சுழல்வட்ட நகர்வில் எனதும்
ஓர் சிறுத்துளி நகர்வே.
எனின்
நகர்விலா எனது இருப்பு?
அன்றி
துளி நகர்வெனும் துண் அணுப்புரைய
விரியும் பேர் வெளியிலா?
ஓயாது உழலும் பிரபஞ்சத்தின்
உள் மௌனத் தொனியிலா?
.....
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 4 Empty Re: அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum