புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம்
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
என் செய்தோம்?
வெறும் வாய்ச் சொல்லில் வீரராய்
வன்துயர்களையும் வலிமை இல்லோமாய்
என்புதோல் போர்த்திருந்து
என் செய்தோம்?
கையில் வெறுமனே
எழுதுகோல் தரித்தோம்.
நண்ப,
நினக்காக நெகிழும் என் நெஞ்சு;
நின்னினிய துணைக்காகவுந்தான்.
அந்தநள்ளிரவில்,
நட்சத்திரங்களும் நடுங்கித் துயருறும் அந்த
நள்ளிரவில்
இருளின் புலையர்கள் வந்து
கதவைத் தட்டினார்.
கதவைத் திறந்த கணத்தினில்
நீட்டிய துவக்குகளின் கத்திமுனை உமது
நெஞ்சில் அழுத்தவும்,
அவர்கள் நையப் புடைக்கையில்
எலும்புகள் நறுக்கென்ற போதிலும்
நடுக்குற்றிருப்பாயோ நண்ப
அந்த நள்ளிரவின் திரட்சியில்
நீயும் நின் துணையும்?
நானறிவேன் நீவிர்
யார்க்கும் அஞ்சா நெஞ்சுரம் உடைவீர்;
எதையும் எதிர்கொள்ளும் ஆளுமை பெற்றீர்.
எனினும்
நடுங்கா நாட்டத்து நண்ப,
இது கேள்
நினக்கும் துயர் வதையுறும்
விடுதலை நேசர் எவர்க்கும் இது பொருந்தும்.
குளிரால் நடுங்குதலும் தீயால் சூடுறுதலும் இலாதது
ஆத்மா!
இருமைகள் அதற்கில்லை
என்பது வேதம்.
ஆதலின்
நடுங்குதல் தவிர்க்க ஆத்ம நண்பனே.
வேதம் அபினி என்று நீ வியாக்கியானிப்பாய்
எனினும் இங்கு
ஓதும் உண்மை உயிர்த் துணையாமே.
நடுங்குதல் வேண்டா.
நினது
சுயேச்சா வலுவின் கெட்டியால்
உடல்-மனத் தள வலி கடந்தவன் ஆகுக.
விலங்குகள் உமது கரங்களைப் பிணிக்கலாம்
விடுதலை மூச்சை விலங்குகள் என் செயும்?
வீறு கொள்!
வார்கடல் தாண்டிய ராமதூதனின்
ஓர்மமும் மூச்சும் உமக்குளும் எழுக!
விடுதலைப் பறவையின் தொலை நோக்கும்
வீச்சும் உள்வாங்குக விறலோய்.
.....
20. சிறகடிப்புகள் என்றும் சிறைப்படா
இருள் அதிர்ந்தது
வெலிக் கடைச் சிறையினுள்
கைவிலங்குகளும் கதறிவிழ
இருளதிர்ந்தது சிறையினுள்.
இங்கோ எங்கள்
ஹிருதயம் அதிர்ந்தன.
கை வேறு கால் வேறாக
சிறகரிந்து கிடந்தவோ பறவைகள்
துடித்திருப்பீரே தோழரே.
நீங்கள் எழுப்பிய
தீனக்குரலொலி,
கேளாச் செவிடரின் மத்தியில்
மெல்ல மெல்லத் தேய்ந்து போக
மரணித்துக் கிடந்த மயான அமைதியில்
மூலையிருட்டில் முக்காடிட்டு
நீதி தேவதை தூக்கிலே தொங்கினாள்.
இருள் அதிர்ந்தது
வெலிக் கடைச் சிறையினுள்
கைவிலங்குகளும் கதறிவிழ
இருளதிர்ந்தது சிறையினுள்.
இங்கோ எங்கள்
ஹிருதயம் அதிர்ந்தன.
கை வேறு கால் வேறாக
சிறகரிந்து கிடந்தவோ பறவைகள்
துடித்திருப்பீரே தோழரே.
நீங்கள் எழுப்பிய
தீனக்குரலொலி,
கேளாச் செவிடரின் மத்தியில்
மெல்ல மெல்லத் தேய்ந்து போக
மரணித்துக் கிடந்த மயான அமைதியில்
மூலையிருட்டில் முக்காடிட்டு
நீதி தேவதை தூக்கிலே தொங்கினாள்.
2
சொன்னார்கள்
வெலிக்கடைச் சிறையினுள்ளிருந்து
"ஐயா அம்மா" என்று தமிழில்
அலறும் குரல்கள் செவியைக் கிழித்ததாய்
ஊசி இழைகளாய் உயிர் நரம்பையே
ஊடுருவிய அக்குரல்கள்
கேட்டது சில நிமிடங்களேதான்.
அதற்குள்
சிறைக் கூடத்தின் மேலாய்ப் பறந்த
'ஹெலிகொப்டரின்' இரைச்சலில்
அவலக் குரல்கள் அமுக்கப்பட்டன.
காலந் தோறும் இப்படியேதான்
எங்கள் குரல்கள் நசுக்கப்பட்டன
இன்றோ எமது குரல்வளைகளும்.
அரக்கன் விரித்த ஆயிரம் கரங்கள்
திக்குகள் தோறும் முளைக்கத் தொடங்கின
எங்கும் ஒடுக்கும் கரங்களின் இயக்கம்
எங்கள் முதுகின் மேலாய்
அதன் நிழல் இறக்கம்.
எங்கே திடீரென்று அவன் கரம் முளைக்கும்,
எப்போது எங்கள் குரல்வளை நெரியும்
என்பதை அறியோம்.
சந்தியில் சாலையில்
ஒழுங்கையில், முன்றலில்
எங்கும் முளைக்கலாம்
எங்கள் வீட்டினுள்ளும் முளைக்கலாம்.
துவக்கின் விசைகள் அழுத்தப் படுகையில்
வீடுகள் தோறும் பிணங்கள் விழலாம்
வீதிகள் சுடுகாடாய் மாறலாம்.
எங்கள் நாடே எமக்கு
சிறைக் கூடமாயிற்று
நாங்கள் கைதிகள்
விடுதலை கெட்டோம்.
கைகளில் மட்டும் விலங்குகள் இல்லை
ஆயினும்
எம்மைச் சுற்றிலும் விலங்குகள், விலங்குகள்.
விலங்குகள் என்பதும் தவறே;
"விலங்குகளும் கண் புதைக்கும்"
நிகழ்வுகள் எமக்கிங்கு நேர்ந்த பின்னாலும்
ஆட்சிபீடங்களை அலங்கரித்திருக்கும்
அலகைகள் ஆட்சியில்
இனியும் அடிமைச் சிறைப்படு வாழ்வா?
இனியும் நரகில் இடர்ப்படல் நன்றா?
இல்லை இல்லை இல்லை என்றெழுவோம்
இனிமேல் அடிமைகள் இல்லை என்றெழுவோம்
வீழ்ந்து கெட்டாலும் விடுதலை மண்ணின்
புழுதியில் அனைவரும் ஒன்றாய் வீழ்வோம்
இ·து உறுதி என்றெழுவோம்.
விடுதலைவானம் காணாது மடிந்த
சிறைப் பறவைகளே
உறுதிக் குன்றேறி நின்றிவை உரைத்தோம்
எம் குரல் கேளீரே.
விடுதலை நோக்கி உந்தி எழுந்த உம்
சிறகடிப்புகள் எமது உணர்வுகளின்
இன்னும் இன்னும் துடிப்பை ஏற்றும்,
விடுதலை வீச்சை உடுக்கொலித்தே நடக்கும்.
(1983 ஜுலைக் கலவரத்தின்போது சிறையுள் கொலையுண்ட போராளிகளின் நினைவாக.)
21. புத்தரின் மௌனம் எடுத்த பேச்சுக்குரல்
இதோ
எனது வெளிநடப்புக்கான பிரகடனம்
நெடுஞ் சாலைகள்தோறும் நிறுவிய எனது
சிலைகளின் முன்னே
மனிதரின் நிணமும் குருதியும் எலும்பும்
படையல் செய்தோரே
இதோ ஏற்றுக்கொள்ளுங்கள்
எனது வெளிநடப்புக்கான பிரகடனம்.
பௌத்தத்தின் பேரால் தோரணம் கட்டிய
வீதிகள் தோறும் நீங்கள் நிகழ்த்திய
இனசங்காரப் பெரஹராக்களின் பின்னரும்
இங்கே எனக்கு அலங்கார இருக்கையோ?
சூழவும் நெருப்பின் வெக்கை தாக்கவும்
போதிமரத்து நிழலும் எனை ஆற்றுமோ?
வெக்கை தாழவில்லை; வெளிநடக்கிறேன்.
புழுதி பறந்த வீதிகள் எங்கும்
குருதி தோய்ந்து புலைமையின் சுவடுகள்.
விலகிச் செல்கையில்
கால்விரல்களில் ஏதோ தட்டுப்படுகிறது.
பேரினவாதப் பசிக்கு மனிதக் குருதியை ஏந்திப்
பருகி எறிந்த பி‡¡ பாத்திரம்.
ஒருகணம்
அமுத சுரபி என் நெஞ்சில்
மிதந்து பின் அமிழ்கிறது.
எங்கும் வீதிகளில் இனசங்காரத்தின்
மங்காத அடையாளங்கள்
ஓ! என்மனதை நெருடுகிறது.
இன்னும் காற்றிலேறிய அந்தப்
படபடப்பும் பதகளிப்பும் அடங்கவேயில்லை.
எழும்பிய அவலக்குரல்களின் எதிரொலி
காற்றிலேறிக் கலந்தெங்கும்
ஏன்? ஏன்? இக்கொடுமை என்றறைகிறதே!
இவை கேட்டதில்லையா உமக்கெலாம்?
எனக்குள் கேட்டதே!
இதயம் முழுதையும் சாறாய்ப் பிழிந்ததே!
ஓ.....
இதயமே இல்லா உங்களை இந்த
எதிரொலி எங்கே உரசிச் செல்லும்?
சந்திகள் தோறும் என்னைக்
கல்லில் வடித்து வைத்துக்
கல்லாய் இருக்கக் கற்றவர்மீது
கருணையின் காற்று எப்படி உயிர்க்கும்?
மனச்சாட்சி உயிரோடிருந்தால் வீதியெலாம்
மனித இறைச்சிக் கடைகள் விரித்து
மானுடத்தை விலை கூறியிருப்பீரோ?
குருதியால் என்னை அபிஷேகித் திருப்பீரோ?
வெலிக்கடை அழுக்குகள் உங்கள் வீரத்தின் பெயரா?
ஓ! எத்தனை குரூரம்.
இத்தனை குரூரங்களும் கொடுமைகளும்
எனதுபேரில்தான் அர்ச்சிக்கப்பட்டன; அரங்கேறி ஆடின.
எனது பெயரால்தான் ஆக்கிரமிப்பு, அடக்குமுறை.
எனது பெயரால்தான் இனப் படுகொலை
குருதி அபிஷேகம் இவை எல்லாமும்.
உங்கள் ஆக்கிரமிப்பின் சின்னமாக
நான் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இழிநிலை.
நான் போதித்த அன்பு, கருணை எல்லாம்
கல்லறைக்குள் போக்கிய
புதைகுழி மேட்டில் நின்று என்சிலைகளைப்
பூசிக்கிறீர்
உங்கள் நெஞ்சில் உயிர்க்காத என்னை
கல்லில் உயிர்த்திருப்பதாய்க் காணும் உங்கள்
கற்பனையை என்னென்பேன்?
நானோ
கல்லல்ல; கல்லில் வடித்த சிலையுமல்ல.
கண்டதுண்டமாய் அவர்களை நீங்கள்
வெட்டியெறிந்த போதெல்லாம்
உதிரமாய் நானே பெருகிவழிந்தேன்
நீங்கள் அதனைக் காணவேயில்லை.
கைவேறு கால்வேறாய்க் காட்டிலே கிடந்து
'தாகமாயிருக்கிறேன்' என்று கதறியதும் நானே
அக் கதறல் உம் செவிகளில் விழவேயில்லை.
கல்லாய் இருந்தீர் அப்போதெல்லாம்.
ஆணவந் தடித்த உங்கள் பேரினவாதக் கூட்டுமனம்
எனக்குள் மறைந்து கொண்ட எத்தனிப்பே
என்னை வெறுங் கல்லில்மட்டும்
கண்டதன் விளைவன்றோ?
நானோ கல்லல்ல; கல்லில்வடித்த சிலையுமல்ல
மாறுதல் இயற்கை நியதி என்ற
உயிர்நிலை ஒட்டத்தின் உந்து சக்திநான்.
கல்லல்ல; கல்லே அல்ல.
எனது ராஜாங்கத்தையே உதறிநடந்த என்னைக்
கல்லாக்கிவிட்டு உங்கள்
சிங்கள பௌத்த ராஜாங்கத்துள்
சிம்மாசனம் தந்து சிறைவைக்கப் பார்க்கிறீர்.
யாருக்கு வேண்டும் உங்கள்
ஆக்கிரமிப்புக் குடைவிரிப்பின்கீழ் சிம்மாசனம்?
நான் விடுதலைக்குரியவன்.
நிர்வாணம் என் பிறப்புடன் கலந்தது.
சிங்கள பௌத்தத்துள் சிறையுண்ட உமக்கெலாம்
எனது நிர்வாண விடுதலை ராஜாங்கத்தின்
விஸ்தீரணம்
புரியாது அன்பரே
பிரபஞ்சம் மேவி இருந்த என்ராஜ்யம்
பேரன்பின் கொலுவிருப்பு என்பதறியீர்;
வழிவிடுங்கள் வெளிநடக்க.
இதோ
எனது வெளிநடப்புக்கான பிரகடனம்
நெடுஞ் சாலைகள்தோறும் நிறுவிய எனது
சிலைகளின் முன்னே
மனிதரின் நிணமும் குருதியும் எலும்பும்
படையல் செய்தோரே
இதோ ஏற்றுக்கொள்ளுங்கள்
எனது வெளிநடப்புக்கான பிரகடனம்.
பௌத்தத்தின் பேரால் தோரணம் கட்டிய
வீதிகள் தோறும் நீங்கள் நிகழ்த்திய
இனசங்காரப் பெரஹராக்களின் பின்னரும்
இங்கே எனக்கு அலங்கார இருக்கையோ?
சூழவும் நெருப்பின் வெக்கை தாக்கவும்
போதிமரத்து நிழலும் எனை ஆற்றுமோ?
வெக்கை தாழவில்லை; வெளிநடக்கிறேன்.
புழுதி பறந்த வீதிகள் எங்கும்
குருதி தோய்ந்து புலைமையின் சுவடுகள்.
விலகிச் செல்கையில்
கால்விரல்களில் ஏதோ தட்டுப்படுகிறது.
பேரினவாதப் பசிக்கு மனிதக் குருதியை ஏந்திப்
பருகி எறிந்த பி‡¡ பாத்திரம்.
ஒருகணம்
அமுத சுரபி என் நெஞ்சில்
மிதந்து பின் அமிழ்கிறது.
எங்கும் வீதிகளில் இனசங்காரத்தின்
மங்காத அடையாளங்கள்
ஓ! என்மனதை நெருடுகிறது.
இன்னும் காற்றிலேறிய அந்தப்
படபடப்பும் பதகளிப்பும் அடங்கவேயில்லை.
எழும்பிய அவலக்குரல்களின் எதிரொலி
காற்றிலேறிக் கலந்தெங்கும்
ஏன்? ஏன்? இக்கொடுமை என்றறைகிறதே!
இவை கேட்டதில்லையா உமக்கெலாம்?
எனக்குள் கேட்டதே!
இதயம் முழுதையும் சாறாய்ப் பிழிந்ததே!
ஓ.....
இதயமே இல்லா உங்களை இந்த
எதிரொலி எங்கே உரசிச் செல்லும்?
சந்திகள் தோறும் என்னைக்
கல்லில் வடித்து வைத்துக்
கல்லாய் இருக்கக் கற்றவர்மீது
கருணையின் காற்று எப்படி உயிர்க்கும்?
மனச்சாட்சி உயிரோடிருந்தால் வீதியெலாம்
மனித இறைச்சிக் கடைகள் விரித்து
மானுடத்தை விலை கூறியிருப்பீரோ?
குருதியால் என்னை அபிஷேகித் திருப்பீரோ?
வெலிக்கடை அழுக்குகள் உங்கள் வீரத்தின் பெயரா?
ஓ! எத்தனை குரூரம்.
இத்தனை குரூரங்களும் கொடுமைகளும்
எனதுபேரில்தான் அர்ச்சிக்கப்பட்டன; அரங்கேறி ஆடின.
எனது பெயரால்தான் ஆக்கிரமிப்பு, அடக்குமுறை.
எனது பெயரால்தான் இனப் படுகொலை
குருதி அபிஷேகம் இவை எல்லாமும்.
உங்கள் ஆக்கிரமிப்பின் சின்னமாக
நான் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இழிநிலை.
நான் போதித்த அன்பு, கருணை எல்லாம்
கல்லறைக்குள் போக்கிய
புதைகுழி மேட்டில் நின்று என்சிலைகளைப்
பூசிக்கிறீர்
உங்கள் நெஞ்சில் உயிர்க்காத என்னை
கல்லில் உயிர்த்திருப்பதாய்க் காணும் உங்கள்
கற்பனையை என்னென்பேன்?
நானோ
கல்லல்ல; கல்லில் வடித்த சிலையுமல்ல.
கண்டதுண்டமாய் அவர்களை நீங்கள்
வெட்டியெறிந்த போதெல்லாம்
உதிரமாய் நானே பெருகிவழிந்தேன்
நீங்கள் அதனைக் காணவேயில்லை.
கைவேறு கால்வேறாய்க் காட்டிலே கிடந்து
'தாகமாயிருக்கிறேன்' என்று கதறியதும் நானே
அக் கதறல் உம் செவிகளில் விழவேயில்லை.
கல்லாய் இருந்தீர் அப்போதெல்லாம்.
ஆணவந் தடித்த உங்கள் பேரினவாதக் கூட்டுமனம்
எனக்குள் மறைந்து கொண்ட எத்தனிப்பே
என்னை வெறுங் கல்லில்மட்டும்
கண்டதன் விளைவன்றோ?
நானோ கல்லல்ல; கல்லில்வடித்த சிலையுமல்ல
மாறுதல் இயற்கை நியதி என்ற
உயிர்நிலை ஒட்டத்தின் உந்து சக்திநான்.
கல்லல்ல; கல்லே அல்ல.
எனது ராஜாங்கத்தையே உதறிநடந்த என்னைக்
கல்லாக்கிவிட்டு உங்கள்
சிங்கள பௌத்த ராஜாங்கத்துள்
சிம்மாசனம் தந்து சிறைவைக்கப் பார்க்கிறீர்.
யாருக்கு வேண்டும் உங்கள்
ஆக்கிரமிப்புக் குடைவிரிப்பின்கீழ் சிம்மாசனம்?
நான் விடுதலைக்குரியவன்.
நிர்வாணம் என் பிறப்புடன் கலந்தது.
சிங்கள பௌத்தத்துள் சிறையுண்ட உமக்கெலாம்
எனது நிர்வாண விடுதலை ராஜாங்கத்தின்
விஸ்தீரணம்
புரியாது அன்பரே
பிரபஞ்சம் மேவி இருந்த என்ராஜ்யம்
பேரன்பின் கொலுவிருப்பு என்பதறியீர்;
வழிவிடுங்கள் வெளிநடக்க.
4
நெஞ்சில் கருணைபூக்காத நீங்கள்
தூவிய பூக்களிலும் குருதிக்கறை;
சூழவும் காற்றிலே ஒரே குருதிநெடில்.
ஓ! என்னை விடுங்கள்
நான் வெளிநடக்கிறேன்--
என்னைப் பின்தொடராதீர் இரத்தம்தோய்ந்த சுவடுகளோடு.
நான் போகிறேன்,
காலொடிந்த ஆட்டுக்குட்டியும் நானுமாய்
கையடிந்த மக்களின் தாழ்வாரம் நோக்கி,
அதுதான் இனி என்இருப்பிடம்.
வருந்தி அழைத்த பெரும் பிரபுக்களை விடுத்து
ஒர் ஏழைத்தாசியின் குடிலின் தாழ்வாரத்தில்
விருந்துண்டவன் நான்.
அத் தாழ்வாரத்தில் உள்ளவர்களிடந்தான்
எனக்கினி வேலையுண்டு.
நீங்கள் அறிவீர்
வரலாற்றில் என்மௌனம் பிரசித்திபெற்றது.
ஆனால், நான் மௌனித்திருந்த சந்தர்ப்பங்களோ வேறு.
இப்போதோ
என்மௌனத்துட் புயலின் கனம்.
ஒருநாட் தெரியும்
அடக்கப் பட்டவர் கிளர்ந்தே எழுவர்
அப்போதென் மௌனம் உடைந்து சிதறும்;
அவர்களின் எழுச்சியில்
வெடித்தெழும் என்பேச்சு!
22. புது யுகச் சங்கொலி
ஊதடா சங்கு!
ஊதடா சங்கு!
கலைஞான யுகமின்று விடிகின்ற காலம்
கலிஎன்பான் அரசாட்சி மடிகின்ற காலம்
கலிசெய்த பேதங்கள் கலிசெய்த பாவம்
இனியில்லை எமக் கென்று ஊதடா சங்கு
ஊதடா சங்கு
ஊதடா சங்கு
எழுத்தோடு நடைமுறை வேறு வேறாக
தொழுகையும் வாழ்கையும் வேறு வேறாக
நடிக்கிறார் அவர்போடும் வேஷங்களெல்லாம்
பொடிப் பொடியாகுதென் றூதடா சங்கு
ஊதடா சங்கு
ஊதடா சங்கு
வேதங்களைக் கூட சாட்சிக் கிழுத்து
சாதி இனமத பேதம் விளைக்கும்
சண்டாளரைத் தர்மம் சும்மா விடாதெனக்
சத்தியமூச்செடுத் தூதடா சங்கு
ஊதடா சங்கு
ஊதடா சங்கு
தர்ம அதர்மப் போர் வந்து மூள்கையில்
தர்மமே வெல்லும் எனப்பறை சாற்றியே
வலம்புரி தூக்கினான் குரு§‡த்திரத்திலே
வந்தனன் மீண்டு மென் றூதடா சங்கு
வந்ததே புதுயுகம் ஊதடா சங்கு.
ஊதடா சங்கு
ஊதடா சங்கு
........
ஊதடா சங்கு!
ஊதடா சங்கு!
கலைஞான யுகமின்று விடிகின்ற காலம்
கலிஎன்பான் அரசாட்சி மடிகின்ற காலம்
கலிசெய்த பேதங்கள் கலிசெய்த பாவம்
இனியில்லை எமக் கென்று ஊதடா சங்கு
ஊதடா சங்கு
ஊதடா சங்கு
எழுத்தோடு நடைமுறை வேறு வேறாக
தொழுகையும் வாழ்கையும் வேறு வேறாக
நடிக்கிறார் அவர்போடும் வேஷங்களெல்லாம்
பொடிப் பொடியாகுதென் றூதடா சங்கு
ஊதடா சங்கு
ஊதடா சங்கு
வேதங்களைக் கூட சாட்சிக் கிழுத்து
சாதி இனமத பேதம் விளைக்கும்
சண்டாளரைத் தர்மம் சும்மா விடாதெனக்
சத்தியமூச்செடுத் தூதடா சங்கு
ஊதடா சங்கு
ஊதடா சங்கு
தர்ம அதர்மப் போர் வந்து மூள்கையில்
தர்மமே வெல்லும் எனப்பறை சாற்றியே
வலம்புரி தூக்கினான் குரு§‡த்திரத்திலே
வந்தனன் மீண்டு மென் றூதடா சங்கு
வந்ததே புதுயுகம் ஊதடா சங்கு.
ஊதடா சங்கு
ஊதடா சங்கு
........
23. நிலவும் நெகிழ்வும்
1
நிலாக் காலத்து வழிப்பயணங்கள்
எனக்கு மிகவும் இனிமையுடையன.
மணல் போர்த்த வீதிகள் தோறும்
நிழல் வீழ்த்தும் நெடு மரங்களூடே
வழியும் நிலவில் நனைந்தவாறு
நண்பர்களுடன் நடத்தல்
எனக்குப் பிடிக்கும்.
பஞ்சுபோல ஒற்றி ஒற்றித்
துன்பம் துடைக்கும் நிலவின் தூய்மை
நெஞ்சு கழுவ நெகிழ்ந்தே நடந்த
தனிவழிப் பயணங்கள்
இன்-துயர் இசையாய்
இன்னும் நெஞ்சில் எதையோ கிளர்த்தும்.
நிலவே
இன்பம் தருகிறாய்
துயரும் சொரிகிறாய்
இதனால்தான் நீ இனிமையுடையாயோ?
என்றோ ஒருநாள் சித்திக்கும்
நீள்வழிப் பயணங்களில்
நினது கூட்டு
ஓ! எவ்வளவு இனிது.
பாலத்தினூடே பேருந்தில் செல்லுகையில்
கடலில் இருமருங்கும் வழிந்தூரும்
வெள்ளி வாப்பில்தான் மனசு
என்னமாய் உருகிப் போகிறது.
நெகிழ்ந்து நெகிழ்ந்து
நெக்கு நெக்குருக
துயரில் மொக்கு விடுமே
இன்பத் துளிர் நிலா.
1
நிலாக் காலத்து வழிப்பயணங்கள்
எனக்கு மிகவும் இனிமையுடையன.
மணல் போர்த்த வீதிகள் தோறும்
நிழல் வீழ்த்தும் நெடு மரங்களூடே
வழியும் நிலவில் நனைந்தவாறு
நண்பர்களுடன் நடத்தல்
எனக்குப் பிடிக்கும்.
பஞ்சுபோல ஒற்றி ஒற்றித்
துன்பம் துடைக்கும் நிலவின் தூய்மை
நெஞ்சு கழுவ நெகிழ்ந்தே நடந்த
தனிவழிப் பயணங்கள்
இன்-துயர் இசையாய்
இன்னும் நெஞ்சில் எதையோ கிளர்த்தும்.
நிலவே
இன்பம் தருகிறாய்
துயரும் சொரிகிறாய்
இதனால்தான் நீ இனிமையுடையாயோ?
என்றோ ஒருநாள் சித்திக்கும்
நீள்வழிப் பயணங்களில்
நினது கூட்டு
ஓ! எவ்வளவு இனிது.
பாலத்தினூடே பேருந்தில் செல்லுகையில்
கடலில் இருமருங்கும் வழிந்தூரும்
வெள்ளி வாப்பில்தான் மனசு
என்னமாய் உருகிப் போகிறது.
நெகிழ்ந்து நெகிழ்ந்து
நெக்கு நெக்குருக
துயரில் மொக்கு விடுமே
இன்பத் துளிர் நிலா.
2
அந்நாளில்
கிராமியம் உயிர்த்துக் கிடந்த அந்நாளில்
இந்த நிலவுக்கும் எமக்குள்ளும் தான்
எவ்வளவு சொந்தம் கொண்டாடல்;
நிலாவொழுகும் முன்றல்களில்தான்
எத்தனை நிகழ்வுகள்.
நிலாச்சோறு உண்ணல்
நிலா ஊஞ்சல் ஆடல்
பாயிழைத்தல், கிடுகு பின்னல்
தோட்டத்துக் கிணற்றில்
துலாமிதித்து நிலா இறைப்பு
எல்லாமே நிலவின் குடை விரிப்பின்கீழ் நிகழ்ந்தவை
உழைப்பிலும் என்னவோர் உல்லாசம் இருந்தது.
அறுவடை முடிந்த நெல்வயல்களில்
நெற்போரடித்தல்
நிலவொளியின் கீழ்த்தான்
எவ்வளவு ரம்மியமானது.
வைக்கோற் போரின் மேலேறி நின்று பார்த்தால்
வயல்வெளி எங்கும்
பால்வார்த்துக் கிடக்கும் நிலவு
தாய்முலையின் நினைவு தரும்.
எல்லாம் முடிந்து
நெற்பொதிகளுடன் வைக்கோற் போருஞ்
சுமந்தபடி மெல்ல
அசைடை போடும் மாட்டு வண்டிகள்;
வண்டிகளின் பின்னே நாங்கள்.
வயற்காற்று வந்து முதுகை வருடும்
பிரிவாற்றாக் காதலியின் தொடுமென் கரமாய்.
திரும்பிப் பார்த்தால்
பின்னிலவில்,
வளமெல்லாம் அள்ளித் தந்துவிட்ட
வயல்வெளி
வறிதே கிடக்கின்ற சோகம்
நெஞ்சைப் பிழியும்
துயர்-இன் இசையாய்
எதையோ கிளர்த்தும்.
அந்நாளில்
கிராமியம் உயிர்த்துக் கிடந்த அந்நாளில்
இந்த நிலவுக்கும் எமக்குள்ளும் தான்
எவ்வளவு சொந்தம் கொண்டாடல்;
நிலாவொழுகும் முன்றல்களில்தான்
எத்தனை நிகழ்வுகள்.
நிலாச்சோறு உண்ணல்
நிலா ஊஞ்சல் ஆடல்
பாயிழைத்தல், கிடுகு பின்னல்
தோட்டத்துக் கிணற்றில்
துலாமிதித்து நிலா இறைப்பு
எல்லாமே நிலவின் குடை விரிப்பின்கீழ் நிகழ்ந்தவை
உழைப்பிலும் என்னவோர் உல்லாசம் இருந்தது.
அறுவடை முடிந்த நெல்வயல்களில்
நெற்போரடித்தல்
நிலவொளியின் கீழ்த்தான்
எவ்வளவு ரம்மியமானது.
வைக்கோற் போரின் மேலேறி நின்று பார்த்தால்
வயல்வெளி எங்கும்
பால்வார்த்துக் கிடக்கும் நிலவு
தாய்முலையின் நினைவு தரும்.
எல்லாம் முடிந்து
நெற்பொதிகளுடன் வைக்கோற் போருஞ்
சுமந்தபடி மெல்ல
அசைடை போடும் மாட்டு வண்டிகள்;
வண்டிகளின் பின்னே நாங்கள்.
வயற்காற்று வந்து முதுகை வருடும்
பிரிவாற்றாக் காதலியின் தொடுமென் கரமாய்.
திரும்பிப் பார்த்தால்
பின்னிலவில்,
வளமெல்லாம் அள்ளித் தந்துவிட்ட
வயல்வெளி
வறிதே கிடக்கின்ற சோகம்
நெஞ்சைப் பிழியும்
துயர்-இன் இசையாய்
எதையோ கிளர்த்தும்.
3
நிலவுக்கும் இசைக்கும்
ஏதும் அத்யந்த உறவு உண்டா என்ன?
நிலவிலே பாடலாம்:
நிலவும் பாடுமே!
எம்முள்ளே அது எதனையோ மீட்ட
அதன் வெளிப்பாடு இசையாய்க் கிளருமே;
உள்ளார்ந்த கீதத்தின் உருவெளிப்பாடு.
நிறைநிலா ஓர்
இசைப் பந்தாய்த் தெரிவதில்லையா?
எனக்கு அப்படித்தான் தோற்றும்
ஓர் இசைத்தேறல்
நிலவொழுக்கும் இசையழுக்கே.
வேண்டுமென்றால் கேட்டுப் பாருங்களேன்
நிலவொழுக்குண்ணும் சாதகப் பறவையை,
நிறையச் சொல்லும்.
நிலவொழுக்குண்டு
இசைபயின்ற கதையை
நானும் சொல்கிறேன் கேளுங்கள்.
ஒருநாள் இரவு
நண்பர் மு.பொ.வும் நானும் ஒன்றாக
ரயிலில் பயணித்தோம்.
நதியோரமாக ரயில் சென்று கொண்டிருந்தது.
நதியோரம் காய்ந்த மென்மணற் பரப்பென
நெளிதரு மேகத் திரைநீக்கி
நிலாக்கீற்று எட்டிப் பார்த்தது.
யன்னல் ஊடாக,
துயர்தோய்ந்த ஒரு தோற்றம்.
மு.பொ.*வுக்கு இது
நீலாவணனின் கவிதைக்** கீற்றொன்றை
நினைவு படுத்திற்று.
"பிணியில் தேயும் நிலவின் நிழல்நம்
பின்னால் தொடரும் முன்னே
ஓஓ வண்டிக் காரா
ஒட்டு வண்டியை ஒட்டு."
நான்கேட்டேன்:
"இதற்கு இசை உருக்கொடுத்துப் பாடினால்...?"
"பாடலாம்."
பாடினோம்.
இசைபிறந்து எமைமறந்து பாடினோம்.
நிலவும் இசையும் ரயிலின் கதியும்
ஒன்றை யன்று
துயரில் தாலாட்ட
ரயிலும் 'கோட்டை' சேர்ந்தபின்னாலும்
இசையின் நிழல்எம் பின்னால் தொடர்ந்தது.
நிலவின் கீற்றுக் கிளர்த்திய அந்த இசை
நிலாக் காலங்களில் எல்லாம்
என்னுள் எழுவதும் நெகிழ்வதும்
இயல்பாயிற்று.
நிலவுக்கும் இசைக்கும்
ஏதும் அத்யந்த உறவு உண்டா என்ன?
நிலவிலே பாடலாம்:
நிலவும் பாடுமே!
எம்முள்ளே அது எதனையோ மீட்ட
அதன் வெளிப்பாடு இசையாய்க் கிளருமே;
உள்ளார்ந்த கீதத்தின் உருவெளிப்பாடு.
நிறைநிலா ஓர்
இசைப் பந்தாய்த் தெரிவதில்லையா?
எனக்கு அப்படித்தான் தோற்றும்
ஓர் இசைத்தேறல்
நிலவொழுக்கும் இசையழுக்கே.
வேண்டுமென்றால் கேட்டுப் பாருங்களேன்
நிலவொழுக்குண்ணும் சாதகப் பறவையை,
நிறையச் சொல்லும்.
நிலவொழுக்குண்டு
இசைபயின்ற கதையை
நானும் சொல்கிறேன் கேளுங்கள்.
ஒருநாள் இரவு
நண்பர் மு.பொ.வும் நானும் ஒன்றாக
ரயிலில் பயணித்தோம்.
நதியோரமாக ரயில் சென்று கொண்டிருந்தது.
நதியோரம் காய்ந்த மென்மணற் பரப்பென
நெளிதரு மேகத் திரைநீக்கி
நிலாக்கீற்று எட்டிப் பார்த்தது.
யன்னல் ஊடாக,
துயர்தோய்ந்த ஒரு தோற்றம்.
மு.பொ.*வுக்கு இது
நீலாவணனின் கவிதைக்** கீற்றொன்றை
நினைவு படுத்திற்று.
"பிணியில் தேயும் நிலவின் நிழல்நம்
பின்னால் தொடரும் முன்னே
ஓஓ வண்டிக் காரா
ஒட்டு வண்டியை ஒட்டு."
நான்கேட்டேன்:
"இதற்கு இசை உருக்கொடுத்துப் பாடினால்...?"
"பாடலாம்."
பாடினோம்.
இசைபிறந்து எமைமறந்து பாடினோம்.
நிலவும் இசையும் ரயிலின் கதியும்
ஒன்றை யன்று
துயரில் தாலாட்ட
ரயிலும் 'கோட்டை' சேர்ந்தபின்னாலும்
இசையின் நிழல்எம் பின்னால் தொடர்ந்தது.
நிலவின் கீற்றுக் கிளர்த்திய அந்த இசை
நிலாக் காலங்களில் எல்லாம்
என்னுள் எழுவதும் நெகிழ்வதும்
இயல்பாயிற்று.
4
இப்போ தெல்லாம்
நிலவுக்கும் எமக்குள்ளும் இருந்த
உறவில் விரிசல்; ஓர் நெகிழ்வு.
இசைக்குலைந்த வாழ்வு எமது.
நிலவு பொழிந்து கொண்டுதான் உள்ளது
கூடவே துப்பாக்கி வேட்டுகளும்
பீரங்கிக் குண்டுகளும் பொழிகின்றனவே.
முன்றலில் நின்றபடி நாங்கள்
நிலவில் குளித்தே பலநாட்கள்.
நிலாக் கால பயணங்களும் நின்று போயிற்று,
வீதிகளில் எல்லாம்-ஒழுங்கைகளில் கூட
இருளின் புலையர்கள்.
திடீரென்று
குண்டுகள் துப்பாக்கி வேட்டுகள்
கொட்டும் ஓசைகளில்
இரவின் சுருதி கலைகிறது.
இருந்தாற் போலெழும் தீயின் சுவாலைகள்
விண்ணெழுந்து
நிலவைச் சுடுகிறது.
எங்கள் நெஞ்சையும்தான்.
ஒளிபோயிற்று; இருள்சூழ்ந்து
வாழ்வு குடிபோயிற்று.
வீதிக்கு வரவும் விடுதலை கெட்டபின்
நிலவெங்கே பொழிந்தென்ன?
விடுதலைப் பூமியில் நின்றவாறே
மீண்டும்
நிலாவொழுக் குண்ணும்
நாளே எங்கள் திருநாளாகும்.
அதுவரையில் போய்த் துயிலாமல்
அந்தநாள் நோக்கி
நாம் நகர்வோம்,
ஒளிநிறை பூமி ஒன்றே குறியாக.
* கவிஞர் மு.பொன்னம்பலம்
** ஈழத்து முன்னணிக் கவிஞர்களம் ஒருவர்.
.....
இப்போ தெல்லாம்
நிலவுக்கும் எமக்குள்ளும் இருந்த
உறவில் விரிசல்; ஓர் நெகிழ்வு.
இசைக்குலைந்த வாழ்வு எமது.
நிலவு பொழிந்து கொண்டுதான் உள்ளது
கூடவே துப்பாக்கி வேட்டுகளும்
பீரங்கிக் குண்டுகளும் பொழிகின்றனவே.
முன்றலில் நின்றபடி நாங்கள்
நிலவில் குளித்தே பலநாட்கள்.
நிலாக் கால பயணங்களும் நின்று போயிற்று,
வீதிகளில் எல்லாம்-ஒழுங்கைகளில் கூட
இருளின் புலையர்கள்.
திடீரென்று
குண்டுகள் துப்பாக்கி வேட்டுகள்
கொட்டும் ஓசைகளில்
இரவின் சுருதி கலைகிறது.
இருந்தாற் போலெழும் தீயின் சுவாலைகள்
விண்ணெழுந்து
நிலவைச் சுடுகிறது.
எங்கள் நெஞ்சையும்தான்.
ஒளிபோயிற்று; இருள்சூழ்ந்து
வாழ்வு குடிபோயிற்று.
வீதிக்கு வரவும் விடுதலை கெட்டபின்
நிலவெங்கே பொழிந்தென்ன?
விடுதலைப் பூமியில் நின்றவாறே
மீண்டும்
நிலாவொழுக் குண்ணும்
நாளே எங்கள் திருநாளாகும்.
அதுவரையில் போய்த் துயிலாமல்
அந்தநாள் நோக்கி
நாம் நகர்வோம்,
ஒளிநிறை பூமி ஒன்றே குறியாக.
* கவிஞர் மு.பொன்னம்பலம்
** ஈழத்து முன்னணிக் கவிஞர்களம் ஒருவர்.
.....
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5