ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூக வலைத் தளங்களின் தேர்தல் வருமானம் ரூ. 500 கோடி

Go down

சமூக வலைத் தளங்களின் தேர்தல் வருமானம் ரூ. 500 கோடி Empty சமூக வலைத் தளங்களின் தேர்தல் வருமானம் ரூ. 500 கோடி

Post by சிவா Wed Apr 09, 2014 1:03 pm

நடைபெற இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கு அரசியல் கட்சிகள் எந்த வாய்ப்பினையும் விட்டு வைக்கவில்லை. முதல் முறையாக, டிஜிட் டல் ஊடகங்களைச் சிறந்த முறையில் அதிகபட்சம் பயன்படுத்தும் முயற்சிகள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனால், இந்த வகையில் ரூ.500 கோடி அளவில் வருமானம் கிடைக்கும் என மொத்தமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனை, சமூக மற்றும் பயனுறை வலைத் தளங்களாக இயங்கும் கூகுள், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஆகியவை பங்கிட்டுக் கொள்ள இருக்கின்றன.

ஏறத்தாழ 81.4 கோடி வாக்காளர்கள் தேர்தலில் தங்கள் வாக்கினைப் பயன்படுத்த இருக்கின்றனர். இவர்களில் 20 கோடிக்கும் மேலானவர்கள் இணையத்தைத் தங்கள் வாழ்க்கை நடைமுறையில் ஒன்றாகக் கொண்டுள்ளனர். இதில் 10 கோடி பேர் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைத் தளங்களில் தங்களை இணைத்துக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக, இந்த தேர்தலில் முதல் முறை வாக்களிக்கும் வயதை எட்டிய இளைஞர்கள் 10 கோடி பேர் உள்ளனர். இவர்கள், இளைஞர்களாக இருப்பதால், இணையப் பயன்பாட்டில், குறிப்பாக சமூக வலைத்தளங்களில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்களை இலக்காக வைத்தே, அரசியல் கட்சிகள் முயற்சிகள் எடுத்து வருகின்றன.

தேர்தலுக்கான மொத்த விளம்பரச் செலவு ரூ.4,000 கோடி முதல் ரூ.5,000 கோடி வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ரூ. 400 கோடி முதல் ரூ.500 கோடி வரை டிஜிட்டல் ஊடகங்களில் செலவிடப்படும்.

சமூக வலைத் தளங்கள் தேர்தலில் என்ன பாதிப்பினை ஏற்படுத்தும், அதனை ஒரு கட்சி எப்படித் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதனை ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சியினர் சென்ற டில்லி மாநிலத் தேர்தலில் காட்டினர். அதனைப் பார்த்த பின்னரே, மற்ற கட்சியினரும் இதில் மிகவும் ஆர்வத்துடன் இறங்கியுள்ளனர்.

அண்மையில் எடுத்த கணிப்பின்படி, 543 மக்களவைத் தொகுதிகளில், 160 தொகுதிகளின் வெற்றி வாய்ப்பினை, இத்தகைய இணைய தளங்களில் மேற்கொள்ளப்படும் பரப்புரை உறுதி செய்திடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தான், எப்படியும் வெற்றி வாய்ப்பினைப் பெற வேண்டும் என்று முயற்சிக்கும் பெரிய கட்சிகள், இணைய தளங்களில் தங்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். மாநில அளவில் இயங்கும் சிறிய கட்சிகள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. வாக்காளர்கள் மனதில், தொடர்ந்து இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்றால், அதற்கு சமூக இணைய தளங்கள் நிச்சயம் பெரிய அளவில் உதவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு கட்சியும், வேட்பாளரும் தங்கள் எண்ணப்படியும், தங்களுக்குக் கிடைக்கும் ஆலோசனைப் படியும், தங்கள் டிஜிட்டல் தடங்களைப் பதித்து வருகின்றனர். மொத்த செலவில், 5% முதல் 10% வரை இதற்கென செலவழிக்க ஒதுக்கி உள்ளனர்.

யு ட்யூப் தளம் இந்த வகையில் பெரும் பங்கு வகிக்கிறது. இது ஆடியோ மற்றும் வீடியோ கலந்து இருப்பதால், தங்கள் சாதனகளைக் காட்டுவதற்கும், தங்கள் கொள்கைகளைத் தெரிவிப்பதற்கும், எதிர்காலத் திட்டங்கள் குறித்த வாக்குறுதிகளை அறிவிப்பதற்கும், யு ட்யூப் வீடியோக்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதில் சிலர், ஆன்லைன் வழியே, தங்களுக்கு நன்கொடைகளையும் பெறுகின்றனர். கட்சியில் சேருபவர்களிடம் உறுப்பினர் கட்டணத்தையும் ஆன்லைன் வழியே வசூல் செய்கின்றனர். குறிப்பாக வெளிநாட்டில் வாழும் நம் நாட்டினரிடம் நன்கொடை பெறுவதில் இந்த வழிகள் மிகவும் பயனுள்ளவையாக உள்ளன. பல கட்சிகள், இதற்கெனவே டிஜிட்டல் பிரச்சார மேனேஜர்களை நியமனம் செய்துள்ளன.

 கம்ப்யூட்டர் மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum