புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 2:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 1:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 1:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 1:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 1:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 1:46 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 11:53 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 5:29 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 5:25 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:21 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 3:10 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 1:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 1:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 1:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 1:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 1:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 1:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:54 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:33 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:50 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 9:05 am

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 am

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 8:53 am

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 8:10 am

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 8:01 am

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 8:00 am

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 7:58 am

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 7:58 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 7:57 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 7:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:48 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:09 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:59 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 5:15 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 3:01 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:40 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:38 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:37 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:36 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:35 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:32 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:31 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 6:03 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 2:38 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 2:36 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 2:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2007 ஒரு கண்ணோட்டம் Poll_c102007 ஒரு கண்ணோட்டம் Poll_m102007 ஒரு கண்ணோட்டம் Poll_c10 
56 Posts - 74%
heezulia
2007 ஒரு கண்ணோட்டம் Poll_c102007 ஒரு கண்ணோட்டம் Poll_m102007 ஒரு கண்ணோட்டம் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
2007 ஒரு கண்ணோட்டம் Poll_c102007 ஒரு கண்ணோட்டம் Poll_m102007 ஒரு கண்ணோட்டம் Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
2007 ஒரு கண்ணோட்டம் Poll_c102007 ஒரு கண்ணோட்டம் Poll_m102007 ஒரு கண்ணோட்டம் Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2007 ஒரு கண்ணோட்டம் Poll_c102007 ஒரு கண்ணோட்டம் Poll_m102007 ஒரு கண்ணோட்டம் Poll_c10 
221 Posts - 75%
heezulia
2007 ஒரு கண்ணோட்டம் Poll_c102007 ஒரு கண்ணோட்டம் Poll_m102007 ஒரு கண்ணோட்டம் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
2007 ஒரு கண்ணோட்டம் Poll_c102007 ஒரு கண்ணோட்டம் Poll_m102007 ஒரு கண்ணோட்டம் Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
2007 ஒரு கண்ணோட்டம் Poll_c102007 ஒரு கண்ணோட்டம் Poll_m102007 ஒரு கண்ணோட்டம் Poll_c10 
8 Posts - 3%
prajai
2007 ஒரு கண்ணோட்டம் Poll_c102007 ஒரு கண்ணோட்டம் Poll_m102007 ஒரு கண்ணோட்டம் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
2007 ஒரு கண்ணோட்டம் Poll_c102007 ஒரு கண்ணோட்டம் Poll_m102007 ஒரு கண்ணோட்டம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
2007 ஒரு கண்ணோட்டம் Poll_c102007 ஒரு கண்ணோட்டம் Poll_m102007 ஒரு கண்ணோட்டம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
2007 ஒரு கண்ணோட்டம் Poll_c102007 ஒரு கண்ணோட்டம் Poll_m102007 ஒரு கண்ணோட்டம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
2007 ஒரு கண்ணோட்டம் Poll_c102007 ஒரு கண்ணோட்டம் Poll_m102007 ஒரு கண்ணோட்டம் Poll_c10 
2 Posts - 1%
nahoor
2007 ஒரு கண்ணோட்டம் Poll_c102007 ஒரு கண்ணோட்டம் Poll_m102007 ஒரு கண்ணோட்டம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2007 ஒரு கண்ணோட்டம்


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 06, 2008 12:58 am

தமிழகம்



ஜன.1: பெரியாறு அணையின் கைப்பிடி சுவர் 6 அடி நீளத்துக்குக் கடப்பாரையால் உடைக்கப்பட்டது.



ஜன.2: ஈ.வெ.ரா., சிலை உடைப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலர் அர்ஜுன் சம்பத் சிறையில் அடைப்பு.


ஜன.5: திருப்பூர் சாயப்பட்டறைகளுக்கு ரூ.40 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து 5 நாட்கள் நடந்த ஸ்டிரைக் வாபஸ்.


*இமாம் அலி தப்பிய வழக்கில் 7 பேருக்கு 7 ஆண்டு தண்டனையும் 30 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து மதுரை கோர்ட் தீர்ப்பு.


ஜன.12: சென்னை மாநகராட்சி தேர்தல் வழக்கில் மறு தேர்தல் நடத்த ஒரு நீதிபதியும், வழக்கை தள்ளுபடி செய்து மற்றொரு நீதிபதியும் முரண்பட்ட தீர்ப்பு.


ஜன.13: சுனாமியால் பாதிக்கப்பட்ட வட சென்னை மீனவர்கள் வறுமைக்காக கிட்னியை விற்ற தகவல் வெளியானது.



ஜன.14: முன்னாள் அமைச்சர் செம்மலையின் மனைவி, மகன் மீது அவரது மருமகள் வரதட்சணை புகார்.
*இலவச எரிவாயு இணைப்பு மற்றும் அடுப்பு கொடுக்கும் திட்டத்தை சென்னை தி.நகரில் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.



ஜன.18: சென்னை மாநகராட்சியில் தேர்தலில் நடந்த முறைகேடு காரணமாக மேயர் உட்பட 98 கவுன்சிலர்கள் ராஜினாமா.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 06, 2008 12:58 am

ஜன.23: விஜயகாந்த், ஜேப்பியார் வீடுகளில் வருமான வரி ரெய்டு.
* ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் மேயராக இருக்கும் சட்ட திருத்த மசோதா சட்டசபையில் நிறைவேற்றம்.


ஜன.24: சென்னையில் ஊடுருவிய விடுதலைப் புலிகள் 8 பேர் கைது.


ஜன.27: ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி தி.மு.க., தலைவரின் கணவர் அண்ணாதுரை வெட்டிக் கொலை.


ஜன.29: முன்னாள் எம்.எல்.ஏ., தேனி பன்னீர்செல்வம் அதிகமான சொத்து சேர்த்த வழக்கில், சிறை தண்டனை விதித்தது சென்னை சிறப்பு நீதிமன்றம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 06, 2008 12:59 am

இந்தியா


ஜன.2: அமெரிக்கா உடனான அணுசக்தி உடன்பாடு குறித்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் பேச்சுவார்த்தை.


ஜன.4: உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் ஜனாதிபதி அப்துல் கலாம்.
* காஷ்மீர் பிரேம் நகர் பகுதியில் சென்ற அரசு பஸ் செனாப் நதியில் விழுந்ததில் 9 பேர் பலி.


ஜன.5: பெங்களூரு விமான நிலையத்தை தகர்க்க திட்டமிட்டிருந்த இம்ரான் என்ற பயங்கரவாதி பெங்களூருரில் கைது.


ஜன.6: அசாமில் பிற மாநிலத்தவரைக் குறிவைத்து உல்பா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 பேர் பலி.
* ஐ.நா., பொதுச் செயலர் பான்-கீ-மூனின் ஆலோசகராக இந்தியாவைச் சேர்ந்த விஜய் நம்பியார் நியமனம்.


ஜன.7: மேற்கு வங்கம் நந்திகிராம் கிராமத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து நடந்த பேரணியில் 6 பேர் பலி.


ஜன.10: பார்லி.,யில் கேள்வி கேட்க லஞ்சம் பெற்ற 11 எம்.பி.,க்களின் பதவி நீக்கம் செல்லும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.
* நொய்டாவைப் போல் பஞ்சாபிலும் கொன்று புதைக் கப்பட்ட 4 குழந்தைகளின் உடல் கண்டெடுக்கப் பட்டது.


ஜன.11: அரசியல் சட்டத்தின் 9வது அட்டவணையில் சேர்க் கப்படும் சட்ட திருத்தங்களும் ஆய்வுக்கு உட்பட்டவை என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.


ஜன.12: அப்சல் தூக்குத் தண்டனை மீதான தீர்ப்பாய்வு மனு சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி.
* தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக் காலத்தில் விதிமுறை மீறி வழங்கப்பட்ட பெட்ரோல் பங்க் உரிமங்களை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு.


ஜன.18: உ.பி.,யில் முலாயம் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றது காங்கிரஸ்.


ஜன.19: பெங்களூருவில் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடந்த கண்டனக் கூட்டம் கலவரம்.


ஜன.29: விமானப் படை புதிய தளபதியாக பாலி.எச்.மேஜர் தேர்வு.


ஜன.31: தென்னாப்ரிக்க ஆர்ச் பிஷப் டெஸ்மாண்ட் டுட்டுவுக்கு காந்தி அமைதி விருதை ஜனாதிபதி வழங்கினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 06, 2008 1:00 am

உலகம்


ஜன.2: இந்தோனோசியாவில் ஜாவாவிலிந்து மனாடோவுக்குச் சென்ற போயிங் ரக விமானம் நடுவழியில் விபத்துக்குள்ளானதில் 90 பேர் பலி.

ஜன.11: ஈராக்கிற்குக் கூடுதலாக 20 ஆயிரம் வீரர்களை அனுப்ப புஷ் உத்தரவு.


ஜன.12: கிரீசின் தலைநகர்


ஏதென்சிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் குண்டு வெடித்தது.


ஜன.13: தெற்காசிய நாடுகளின் ஆசியான் மாநாடு பிலிப்பைன்சில் தொடங்கியது.


ஜன.15: சதாம் சகோதரர் பர்சான் இப்ராகிம், முன்னாள் நீதிபதி அவாத் ஹமீது ஆகியோர் துஜெயில் வழக்கில் தூக்கிலிடப்பட்டனர்.


ஜன.17: நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் முதல்முறையாக பார்லிமென்ட்டில் பிரதிநிதிகளாகப் பொறுப்பேற்றனர்.


ஜன.19: விடுதலைப் புலிகள் வசமிருந்த வாகரைப் பகுதியைக் கைப்பற்றியதாக இலங்கை அரசு அறிவிப்பு.


ஜன.22: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும்வர்த்தகப் பகுதியில் இரண்டு குண்டுகள் வெடித்ததில் 78 பேர் பலி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 06, 2008 1:00 am

சிறப்பு தகவல்கள்

1. நீதிக்கு பெருமை

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக கே.ஜி. பால கிருஷ்ணன் ஜன., 14ம் தேதி பொறுப் பேற்றுக் கொண்டார். ஆதிதிராவிட இனத்தை சேர்ந்தவர் ஒருவர் இந்த பொறுப்புக்கு வருவது இது முதல்முறை.



2. தொடரும் சாதனை

பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டில் ஜன. 10ல் நான்கு செயற்கைகோள்களில் ஒன்றாக அனுப்பப்பட்ட "எஸ்.ஆர்.இ.,-1' விண்கலம், திட்டமிட்ட படி விண்வெளி ஆராய்ச்சியை முடித்துக்கொண்டு, வங்கக்கடலில் பத்திரமாக இறங்கியது. அதனை கடற்படை அதிகாரிகள் மீட்டு ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொண்டு சென்றனர்.



3. ம.தி.மு.க.,விலிருந்து நீக்கம்

ம.தி.மு.க.,வில் போர்க்கொடி தூக்கிய எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் தாங்கள் தான் உண்மையான ம.தி.மு.க., என அறிவித்துக்கொண்டனர். இதையடுத்து கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கட்சியை விட்டு ஜன., 10ல் நீக்கப்பட்டனர். இப்போது இவர்கள் போட்டி ம.தி.மு.க., வாக செயல்பட்டு வருகின்றனர்.



4. தணியாத கோபம்

உ.பி., மாநிலம் நிதாரியில் குழந்தைகளை கொன்று குவித்த குற்றவாளிகள் மொனிந்தர் சிங், சுரேந்திர கோலியை ஜன., 25 காஜியாபாத் சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் கூட்டி வந்தனர். தயாராக காத்திருந்த பொதுமக்கள் இருவருக்கும் தர்ம அடி கொடுத்தனர். போலீசார் மிகுந்த போராட்டத்துக்கு பிறகு அவர்களை மீட்டனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 06, 2008 1:01 am

தமிழகம்

பிப். 1: மதுரையில் இரண்டு கிராம் நகைக்காக, 4 வயது குழந்தையை ராஜா (12), ஜலால் (13) ஆகிய சிறுவர்கள் சேர்ந்து கொன்றனர்.
* விஜயகாந்த் மீது தி.மு.க., அவதூறு வழக்கு.


பிப். 2: திருவள்ளூரிலுள்ள சாரதா ராமகிருஷ்ணா அனாதை ஆசிரமத்தில் பெண்கள் மர்மமான முறையில் இறப்பதாகப் புகார்.


பிப். 4: நீதிபதிகள் ஆகாயத்திலிருந்து குதித்தவர்கள் போல் நடந்து கொள்வதாக தமிழக அமைச்சர் ஆற்காடு வீராசாமி விமர்சனம்.


பிப். 5: மயிலாடுதுறையிலிருந்து மதுரை சிறைக்கு அழைத்து வந்த போது, தப்ப முயன்ற ரவுடி மணல் மேடு சங்கர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை.


பிப். 9: அ.தி.மு.க., ஆட்சியில் கல்லூரி பேராசிரியர்கள் நடத்திய 25 நாள் வேலை நிறுத்த போராட்டத்தைப் பணிக் காலமாக அறிவித்து முதல்வர் உத்தரவு.


பிப். 13: தனுஷ்கோடி கடல் பகுதியில் புலிகளுக்குப் கடத்திச் சென்ற வெடி மருந்துகளைக் போலீசார் பறிமுதல்.
* தமிழக அமைச்சர்கள் இலாகாக்கள் மாற்றம்.
* காவிரி, பெரியாறு அணைப் பிரச்னைகளில் கருணாநிதி முரண்பட்டுப் பேசி வருகிறார் என்று பா.ம.க., ராமதாஸ் குற்றச்சாட்டு.
* நுழைவுத் தேர்வு ரத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மனு.
* கலப்புத் திருமணத்துக்கு உதவித் தொகை வழங்க ரூ.ஆயிரம் லஞ்சம் பெற்ற சமூக நலத்துறை பெண் அலுவலர் கைது.


பிப். 14: சேலம் அருகே சாலை விபத்தில் மேட்டூர் அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தராம்பாள் பலி.


பிப். 16: சென்னை மாநகராட்சி தேர்தல் வழக்கில் 98 வார்டுகளுக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என மூன்றாவது நீதிபதி பி.கே.மிஸ்ரா தீர்ப்பு.


பிப். 17: காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் தமிழகத்துக்குக் குறைந்த அளவு தண்ணீர் வழங்கியிருப்பதைக் கண்டித்து வைகோ சென்னையில் உண்ணாவிரதம்.


பிப். 18: சென்னை மாநகராட்சியில் 67 வார்டுகளுக்கு மறுதேர்தல் நடந்தது.


பிப். 22: நெல்லையில் மனோன் மணியம் சுந்தரனார் பல்கலை.,யில் தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் நன்கொடையால் கட்டப்பட்ட ஊடகக் கூடம் திறப்பு.


பிப். 25: திருவொற்றியூர் நகராட்சி கவுன்சிலரின் மகன், தேர்தல் முன்விரோதத்தால் பாண்டியமணி என்பவரை கொலை செய்தார்.
* கொடைக்கானலில் 4 வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தூக்கு தண்டனை விதித்து திண்டுக்கல் கோர்ட் தீர்ப்பு.
* இளையான்குடி முன்னாள் எம்.எல்.ஏ., மலைக்கண்ணன் மரணம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 06, 2008 1:02 am

இந்தியா


பிப். 1: விளையாட்டுப் போட் டிகளை ஒளிபரப்பும் தனியார் "டிவி'க்கள் பிரசார் பாரதியுடன் பகிர்ந்து கொள்ள சட்டம் பார்லியில் நிறைவேறியது.


பிப். 2: மகாராஷ்டிராவில் 10 மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் பா.ஜ.,- சிவசேனா கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றியது.


பிப். 6: போபர்ஸ் ஊழலில் தொடர்புடைய இத்தாலியைச் சேர்ந்த குட்ரோச்சி அர்ஜென்டினா இன்டர்போல் போலீசாரால் கைது.


பிப். 7: மேற்கு வங்கம் நந்திகிராமில் போலீசார் நுழைவதை எதிர்த்து நடந்த வன்முறையில் எஸ்.ஐ., கொல்லப் பட்டார்.


பிப். 14: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாட காவை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் அம்பரீஷ் ராஜினாமா.
* முலாயம் அரசுக்கு ஆதரவு அளித்த 13 பகுஜன் எம்.எல்.ஏ.,க்களைத் தகுதி நீக்கம் செய்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.


பிப். 17: உ.பி., அரசை கலைக்க அம்மாநில கவர்னர் மத்திய அரசுக்குப் பரிந்துரை.
* நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளி முகமது இக்பால் மேமன் சென்னையில் கைது.


பிப். 21: ஆந்திரா மார்கதரிசி நிதி நிறுவனத்தில் மாநில சி.ஐ.டி., போலீசார் சோதனை.


பிப். 24: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.
* உ.பி.,யில் பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 78 எம்.எல்.ஏ., பேர் ராஜினாமா.
* மணிப்பூர் தமெல்லாங் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மீது நடந்த தாக்குதலில் 15 வீரர்கள் பலி.


பிப். 26: குட்ரோச்சிக்கு அர்ஜென்டினா கோர்ட் ஜாமீன் வழங்கியது.
* உ.பி., சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றார் முதல்வர் முலாயம் சிங்.
* நீதிமன்றத்தை விமர்சித்துப் பேசிய கேரள அமைச்சர் பொலாலி முகமது குட்டி கோர்ட்டில் மன்னிப்புக் கேட்டார்.


பிப். 27: பஞ்சாப், உத்தரகண்ட்டில் பா.ஜ., கூட்டணியும், மணிப்பூரில் காங்கிரசும் தேர்தல் முடிவில் வெற்றி பெற்றன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 06, 2008 1:03 am

உலகம்


பிப்.3 : புலிகளிடமிருந்து கைப்பற்றிய வாகரைப் பகுதிக்கு இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே சென்றார்.


பிப். 5: ஈராக்கின் பாக்தாத்தில் தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் 130 பேர் பலி.


பிப். 9: "பிளேபாய்' பத்திரிகையின் பிரபல மாடல் அழகி அன்னா நிகாலே ஸ்மித் மரணம்.


பிப். 13: அரசு- புலிகளுக்கான போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என இலங்கை புத்த பிட்சுகள் கோரிக்கை.


பிப். 17: பாகிஸ்தான் பலுசிஸ்தானில் கோர்ட்டில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் நீதிபதி உட்பட 15 பேர் பலி.


பிப். 25: பாக்தாத்தில் கல்லூரி வளாகத்தில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 40 பேர் பலி.


பிப். 27: ஆப்கனில் அமெரிக்க துணை அதிபர் டிக்செனியைக் குறி வைத்து நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 20 பேர் பலி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 06, 2008 1:04 am

சிறப்பு தகவல்கள்


1. சாதனை பட்ஜெட்

தொடர்ந்து நான்காவது முறையாக பயணிகள் நலன் காக்கும் பட் ஜெட்டை பார்லி மென்ட்டில் தாக்கல் செய்து விமர்சகர் களின் வாயடைக்கச் செய்தார் லாலு. கட்டண உயர்வு இல்லாமல் ரயில் வேயை லாபகரமாக இயக்க முடியும் என்பதை பிப். 26ல் நிரூபித்தார்.


2. நட்புக்கு சோதனை

டில்லி முதல் பாகிஸ்தானின் லாகூர் வரை செல்லும் சம்ஜவுதா எக்ஸ்பிரசில் பிப். 19ல் குண்டுவெடித்தது. இதில் 68 பேர் பலியானார்கள். பெரும் பாலானோர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். இந்திய மண்ணில் பாகிஸ்தான் மக்களை பயங்கரவாதம் பலி கொண்ட முதல் சம்பவம் இது.

3. விபரீத முடிவு

அவதூறு பேச்சு ஒரு குடும்பத்தை அழிவுக்கே கொண்டு சென்றது. சென்னையில் வேலாயுதம் என்பவர் தனது மனைவி மற்றும் மூன்று மகள்களுடன் பிப். 8ல் தற்கொலை செய்து கொண்டார். விசா ரணையில் மகளை சிலர் அவதூறாக பேசியதே இந்த சோகமான சம்பவத்துக்கு காரணம் என தெரிய வந்தது.

4. ஹாலிவுட் கொண்டாட்டம்

பரபரப்பான ஆஸ்கார் விருது வழங்கும் விழா பிப். 25ல் கலிபோர்னியாவில் நடந்தது. இடி அமீனின் வாழ்க்கையை சித்தரிக்கும் "தி லாஸ்ட் கிங் ஆப் ஸ்காட்லாந்து' எனும் படத்தில் நடித்த பாரஸ்ட் விட்டாக்கர் சிறந்த நடிகருக்கான விருதை தட்டிச்சென்றார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 06, 2008 1:04 am

தமிழகம்

மார்ச் 1: சென்னை மாநகராட்சி மேயராக சுப்பிரமணியன் தேர்வு.


மார்ச் 5: நுழைவுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்திற்கு ஜனாதிபதி அப்துல் கலாம் ஒப்புதல்.


மார்ச் 9: நிலநடுக்கம் பெரியாறு அணை எந்த விதத்திலும் பாதிக்காது என மத்திய அரசு பார்லிமென்டில் அறிவிப்பு.


மார்ச் 11: வாய்த்தகராறில் சக போலீஸ் காரர்கள் 5 பேரை சுட்டுக் கொன்றார் சிக்கிம் போலீஸ்காரர்.


* ஐகோர்ட்டில் தமிழை வழக்காடும் மொழியாக்க மத்திய அரசு ஒப்புதல் தர மறுப்பு.


மார்ச் 13: தி.மு.க., கூட்டணி கட்சி களுக்குள் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்த வேண்டும் என்ற பா.ம.க., ராமதாஸ் கோரிக்கையை நிராகரித்தார் கருணாநிதி.


மார்ச் 16: காங்., கட்சிக்கு ம.தி.மு.க., அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்று கோவை மண்டல மாநாட்டில் தீர்மானம்.


மார்ச் 25: அறையில் சாமி கும்பிடுபவர் கருணாநிதி என்று விஜயகாந்த் விமர்சனம்.


மார்ச் 29: கணித நோபல் பரிசு எனப்படும் நார்வே நாட்டின் அபெல் பரிசு தமிழகத்தைச் சேர்ந்த சீனிவாச வரதனுக்கு அறிவிப்பு.


மார்ச் 31: இட ஒதுக்கீடு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து தமிழகத்தில் 12 மணி நேர "பந்த்'.

Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக