ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறிய மாற்றம் பெரிய வெற்றி ! நூல்ஆசிரியர் : திரு. சி. அருண் பரத் ஐ.ஆர்.எஸ்நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Go down

சிறிய மாற்றம் பெரிய வெற்றி !  நூல்ஆசிரியர் : திரு. சி. அருண் பரத் ஐ.ஆர்.எஸ்நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Empty சிறிய மாற்றம் பெரிய வெற்றி ! நூல்ஆசிரியர் : திரு. சி. அருண் பரத் ஐ.ஆர்.எஸ்நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Post by eraeravi Sun Apr 06, 2014 1:35 pm

சிறிய மாற்றம் பெரிய வெற்றி ! 
நூல்ஆசிரியர் : திரு. சி. அருண் பரத் ஐ.ஆர்.எஸ் carunbharat@gmail.com
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
கண்ணதாசன் பதிப்பகம், கண்ணதாசன் சாலை, தியாகராய நகர்,சென்னை - 600 017. kannadhasanpathippagam@gmail.com
விலை: ரூ.140/-
நூல் ஆசிரியர் : திரு. சி. அருண் பரத் ஐ.ஆர்.எஸ் அவர்கள் வருமான வரித்துறையில ஆணையராகப் பணிபுரிந்து கொண்டே இலக்கியப் பணியும் செய்து வருகிறார்கள். இந்த நூலின் தலைப்பே "சிறிய மாற்றம் பெரிய வெற்றி" மாற்றத்தை உணர்த்துவதாக உள்ளது. இந்த உலகில் மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பதற்கு ஏற்ப மாற்றங்களை எதிர்கொள்ள ஆயத்தப்படுத்தும் நூல். 
இனிய நண்பர் பொறியாளர் சுரேஷ் அவர்களின் அழைப்பின் பேரில் இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு சென்று இந்த நூல் வாங்கி வந்தேன். குயின் மீரா பள்ளியில் மாநாடு போல் நடந்தது. கலைமாமணி கு. ஞானசம்பந்தன், தியாகராசர் கல்வி குழுமத்தின் தலைவர் கருமுத்து கண்ணன் உள்ளிட்ட பலரும் வந்து பாராட்டினர்.
வெற்றியின் ரகசியம் என்ற தலைப்பில், தினமலர் நாளிதழில் பிரசுரமான கட்டுரைகளின் தொகுப்பு. வாராவாரம் கட்டுரைகளாக படித்த போதும் ஒட்டுமொத்த நூலாக படித்த போது பரவசம். பழரசம். இந்த நூலை நூலாசிரியரின் தந்தை புலவர் அ. சின்னன் அய்யாவுக்கும், தாயார் தெய்வத்திருமதி அமிர்தம் அம்மாளுக்கும், அவரது அருமை மனைவி அகிலா பரத் அவர்களுக்கும், புதல்வன் அர்ஜுன் பரத்துக்கும் காணிக்கையாக்கி உள்ளார். 30 கட்டுரைகள் முத்தாய்ப்பாக உள்ளது. நூலாசிரியர் தன்னுரையே தன்னம்பிக்கை உரையாக உள்ளது.
நம்மால் முடியாது" என்று நம் உயரத்தை நாமே குறைத்துக் கொள்ளாமல் நமக்குள் இருக்கும் மாபெரும் சக்தியை நம்புவோம். நமது வளர்ச்சி பெரிய ஆலமரமாக விஸ்வரூபம் எடுப்பதற்குத் தேவையானதெல்லாம் நம் மனதில் மாற்றம் ஏற்படுத்தக்கூடிய எண்ணம் என்கிற சிறிய விதையே. 
இந்த புத்தகத்தைப் படிக்கும் போது அந்த விதை உங்கள் மனதில் விழுந்து வேர் ஊன்ற ஆரம்பித்து விடும்". இந்த நோக்கத்தின் விளைவே நன்மையை பறைசாற்றும் விதமாக என்னுரையில் குறிப்பிட்டுள்ளார்கள்.
கட்டுரைகளின் தலைப்புகளே படிக்கும் வாசகர்களின் உள்ளத்தில் வெற்றி விதை விதைப்பதாக உள்ளது. திறமை தான் மூலதனம். புத்திசாலித்தனம், நம்மை விரைவில் உயர்த்தும், உற்சாகம் நமது வளர்ச்சியை தீர்மானிக்கும், திட்டமிட்ட வாழ்க்கை, ஒளிமயமான எதிர்காலம், நேர நிர்வாகம் ஒரு கலை, ஆரோக்கியம் பேணுவோம். பேசும் கலை பயில்வோம், கெட்ட குணங்களை அகற்றுவோம், எதிர்மறை குணங்களை அகற்றுவோம், நிகழ்காலத்தில் இருப்போம், மிக நுட்பமாக தலைப்புகளை எழுதியமைக்கு பாராட்டுக்கள்.
அக்னி சிறகுகள் நூலின் மூலம் விற்பனையில் சாதனை நிகழ்த்திய கண்ணதாசன் பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது. கவியரசு கண்ணதாசனின் புதல்வர் பதிப்பாளர் திரு. காந்தி கண்ணதாசன் அவர்களும் மதுரையில் நடந்த இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு வந்து இருந்தார்கள். உரையாடி மகிழ்ந்தேன். நூலின் அச்சு உள்ளே உள்ள பொருத்தமான படங்கள் என நேர்த்தியாக உள்ளன. பாராட்டுக்கள்.
மாமனிதர் அப்துல் கலாம் அவர்கள் கனவு காணுங்கள் என்றார். அந்தக் கருத்தை வழி மொழியும் விதமான கருத்து மிக நன்று. "ஒவ்வொரு நிகழ்வும் இந்த உலகத்தில் இருமுறை நிகழ்வதாகக் கூறுகிறார்கள். ஒன்று மனத்திரையில் இன்னொன்று நிஜத்தில்". நாம் எந்த நிலையை அடைய வேண்டுமென்று மனதில் ஆழமாகப் பதிவு செய்கிறோமோ, அந்த நிலையை விரைவில் அடைவது உறுதி.
கட்டுரைகளில் முக்கியமான கருத்துக்கள் உள்ள பகுதியில் எழுத்து வேறுபடுத்திக் காட்டி இருப்பதால் நூல் படிக்கும் போது அவற்றைத் திரும்பவும் படித்தால் நம் மனதில் ஆழமாக பதிந்து விடுகின்றன. இந்த நூல் படிப்பதற்கு முன் வாசகர் மனநிலையும், இந்த நூல் படித்ததற்கு பின் வாசகர் மனநிலையும் உள்ள மாற்றம் முன்னேற்றமே நூலாசிரியர் திரு. சி. அருண் பரத் ஐ.ஆர்.எஸ். அவர்களின் வெற்றி.
இதயேந்திரன் மூலமாக உடல் தானம் பற்றிய விழிப்புணர்வு நன்கு விதைக்கப்பட்டது. தன் முன்னேற்ற நூலாக இருந்த போதும் சமுதாயத்திற்கு பயனுள்ள பல கருத்துக்கள் நூலில் உள்ளன. இறந்த பின்னும் சமுதாயத்திற்கு நாம் பயன்பட வேண்டும் என்ற பொறுப்புணர்வு உள்ளவர்கள் தங்களது உடல் உறுப்புகளைத் தானம் செய்கிறார்கள்.
ஆம். இறந்த பின் தீக்கும் மண்ணுக்கும் இரையாகும் விழிகளை பார்வையற்ற இருவருக்குக் வழங்கி இறந்த பின்னும் இயற்கையை ரசிக்க உதவும் நல்ல கருத்துக்கு நன்றி. காதலித்து கரம் பிடித்தவர்களே விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தை நாடும் அவலம் நாட்டில் நடந்து கொண்டு இருக்கின்றன. உறவுகள் பேனா வேண்டிய புத்திகளையும் நூலில் விளக்கி உள்ளார்.
உறவுகளில் விரிசல் உருவாவதற்கு முக்கியமான காரணம் எதிர்ப்பார்ப்புகள் பூர்த்தியடையாமை. ஆரோக்கியமான உறவு, சம்பந்தப்பட்ட இரு சாராரையும் உயர்த்தி விடும்" மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட நூலாசிரியரின் இயற்பெயர் சி. தமிழ் திருமொழியன். இயற்பெயருக்கு ஏற்றபடி செந்தமிழில் மொழிந்து நல்ல கருத்துக்களை எழுதி உள்ளார். கணிப்பொறியாளர், சட்டம் பயின்றவர், தடகள விளையாட்டுவீரர், தேசியமாணவர்படைஅனுபவம், அமெரிக்கா சென்ற அனுபவம் இப்படி பன்முக ஆற்றலின் வெளிப்பாடே இந்த அரிய நூல். பாராட்டுக்கள்.
. நூல்ஆசிரியர் : திரு. சி. அருண் பரத் ஐ.ஆர்.எஸ் அவர்கள் பரபரப்பான வருமானவரித்துறையில் ஆணையராகப் பணி புரிந்து கொண்டே இலக்கியத்திற்கும் நேரம் ஒதுக்கி நூல்கள் எழுதி வருவதற்கு பாராட்டுக்கள் .தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் .உங்கள் எழுத்து இளைய தலைமுறைக்கு தன்னம்பிக்கை விதைக்கும் எழுத்து .
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

Back to top

- Similar topics
» இவனும் அவனும் ! (சிறுகதைகள்) நூல்ஆசிரியர் : திரு. ஹேமலதா பாலசுப்ரமணியம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» புதுக்குறள்! நூல்ஆசிரியர் : கவிஞர் பெரணமல்லூர் சேகரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மழை எனும் பெண்! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» எல்லோர்க்கும் பிடிக்கும் ! நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» வானம் என் வாசலில் ! கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் பா. கிருஷ்ணன்.நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum