ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங்

Go down

என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங் Empty என் ஆஸ்தியெல்லாம் என் பேனா மட்டும்தான்! - குஷ்வந்த்சிங்

Post by சிவா Sun Apr 06, 2014 3:43 am

தமிழில் எனக்கு தெரிந்தது இரண்டே சொற்கள் தான். "வணக்கம்' "நமஸ்காரம்'. எனக்கு ஏராளமான தமிழ் நண்பர்கள் உண்டு. ஜெயலலிதா, எனது ராக்கி சகோதரியான பிரேமா சுப்ரமணியம் உள்பட.

ஆனால் அவர்கள் எனக்குத் தமிழ் கற்றுக் கொடுக்க கொஞ்சமும் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. அவர்களும் என்னிடம் பஞ்சாபி கற்றுக் கொள்ளவில்லை.

இப்போது என்னைப் பற்றி சில வார்த்தைகள்.

உங்களுக்கே அனேகமாய்த் தெரிந்திருக்கும் - நான் ஒரு சர்தார்ஜி. என்னை "பஞ்சாப் சோ ராமசாமி' என்று அடிக்கடி குறிப்பிடுகிறார்கள். அவருக்கும் எனக்கு உருவ ஒற்றுமை எதுவும் கிடையாது. என்னைவிட வயதில் ரொம்பச் சிறியவர் அவர். அவருக்கு முட்டையோடு மாதிரி வழவழவென்று வழுக்கை. புருவம் கிடையாது. தாடி கிடையாது. எனக்கு வயது எழுபத்தைந்தாகிறது. நீண்ட வெள்ளை முடி உண்டு. தலைப்பாகை கட்டாதபோது தோள்வரை தொங்கும் அத்துடன் மீசையும் தாடியும் எனக்க உண்டு.

உலகத்திலேயே ரொம்ப மோசமாய் உடையணியும் சர்தார்ஜி நான்தான். சோவுக்கும் எனக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. நாங்கள் இரண்டு பேருமே ஜோக் அடிப்பவர்கள். அவரது ஜோக் சீரியஸாய் இருக்கும். நான் கோமாளி - விதூஷகன் ரகம்.

1915-ம் ஆண்டு, ஆகஸ்ட் 15ம் தேதி நான் பிறந்தேனென்று சொல்கிறார்கள். அதற்கு ரெக்கார்டு எதுவும் இல்லை. ஏனென்றால் நான் பிறந்த சின்னஞ்சிறு ஹடாலி கிராமத்தில் பதிவு கிதிவு எல்லாம் கேள்விப்பட்டிராத விஷயம். அந்தக் கிராமம் இப்போது பாகிஸ்தானில், தார் பாலைவனத்தில் இருக்கிறது. நான் 1915-ம் ஆண்டு, பிப்ரவரி 2ம் தேதி பிறந்ததாக அதிகாரபூர்வமாகப் பதிவாகியுள்ளது.

நான் லியோ ராசிக்காரன் என்பது எனக்கு தெரியும். வேகம் உள்ளவன், சகஜமாகப் பழகுபவன், கூச்சப்படாதவன்.

மிகச் சிறு பிராயத்திலேயே ஐந்தாறு வயதில் நான் குறும்புக்காரனாக வாழ்க்கையைத் தொடங்கி விட்டேன்.

எனக்கு நாலு அறை விழுந்தது: ஒரு உறவினர் எங்களுடன் தங்கியிருக்க வந்திருந்தார். விடி காலையிலேயே எழுந்து விடுவார். எங்கள் கிராமத்தைச் சுற்றியிருந்த மணல் மேடுகளுக்குச் சென்று காலை கடன்களை முடித்துக் கொண்டு திரும்புவார். முந்தின இரவே, தன் பக்கத்தில் ஒரு செம்பில் தண்ணீர் எடுத்து வைத்துக் கொள்வார் - மறுநாள் காலைக் கழுவிக் கொள்வதற்காக. எதனாலோ எனக்கு இது எரிச்சலாக இருந்தது. ஒருநாள் ராத்திரி அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது ஒரு புட்டிக் கோந்தை அவர் செம்பில் கொட்டி வைத்தேன்.

மறுநாள் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு திரும்பியவர் இடி விழுந்தாற் போலீருந்தார். தனக்குப் பிசுபிசுவென்று பேதியாகிதென்று, தன் வேஷ்டி பிட்டத்தோடு ஒட்டிக் கொள்கிறதென்றும் எல்லாரிடமும் புலம்பிக் கொண்டிருந்தார், அத்துடன், ஒரு ஹக்கீமிடம் போய் மருந்து வாங்கிக் கொண்டார். அவர் தந்த பேதி மருந்தையும் கவனமாக உட்கொண்டார்.

அதற்கு மேல் ரகசியத்தை சொல்லாமலிருக்க என்னால் முடியவில்லை. நான் செய்த காரியத்தை எல்லாரிடமும் சொன்னேன். என்னை நாலு அறை அறைந்து, காதைத் திருகி, அந்த உறவினரிடம் மன்னிப்புக் கேட்கும்படி செய்தார்கள். ஆனால் கிராமம் மொத்தமும் விழுந்து விழுந்து சிரிந்தது. எல்லாரும் என்னைப் பார்த்துப் புன்னகை செய்தார்கள். நான் ஒரு ஹீரோ மாதிரி ஆகிவிட்டேன்.



நல்ல பாம்பை பிடித்து....: குறும்புத்தனம் செய்வது என் ரத்தத்தில் கலந்திருந்தது.

என் சயன்ஸ் ஆசிரியர் எப்போதும் பார்த்தாலும் என் கன்னத்தில் அறைந்து கொண்டிருந்தார். அவருக்கு ஒரு பாடம் கற்பித்தேன். ஒரு நாளும் மறக்கமுடியாதபடி.

அவருடைய லேபரட்டரியில், ஸ்பிரிட் ஊற்றிய ஜாடிகளில் பலவகையான செத்த பாம்புகள் வைத்திருந்தார் அவர். ஒரு நல்ல பாம்பு வேண்டும். கிடைக்கமாட்டேன் என்கிறது என்று அவர் அடிக்கடி சொல்வார்.

மாரிக் காலத்தில் ஒரு நாள் எங்கள் வீட்டுத் தோட்டத்தில் ஒரு நல்ல பாம்பைக் கண்டோம். அது நழுவியோடப் பார்த்தது. ஆனால் நானும் என் சகோதரனும் ஒரு கழியை எடுத்து அடித்து, அதைக் குற்றுயிராக்கி விட்டோம். ஒர பெரிய பிஸ்கெட் டின்னில் அதைப் போட்டு மூடி, கயிறு போட்டுக் கட்டி விட்டோம்.

மறுநாள் அதைப் பெருமையுடன் சயின்ஸ் ஆசிரியரிடம் தந்தோம். எங்களுக்கு ஏதோ வேலை கொடுத்து அனுப்பிவிட்டு, ஒரு காலி ஜாடியுடன் டின்னிடம் போய் உட்கார்ந்து, கயிற்றை அவிழ்க்கலானார். மூடியைச் சிறிது திறந்தாரோ இல்லையோ...

மூடி எகிறிப்போய் விழ, அடைபட்டுக் கிடந்த அந்தப் பாம்பு கோபத்துடன் புஸ்ஸென்று சீறிக் கொண்டு வெளியே வந்தது. வகுப்பறையை ஆத்திரத்துடன் நோட்டம் விட்டுவிட்டு ஆசிரியரை நோக்கி ஒரு சீறு சீறியது! அவ்வளவுதான், அவர் பயந்தடித்துக் கொண்டு விழுந்தார். பாம்பு, குற்றுயிரும் குலையுயிருமாய் இருந்தபோதிலும், எப்படியோ ஊர்ந்து ஓடி வெளியேறிவிட்டது. பிற்பாடு, நான் இந்தச் சம்பவத்தை விஷ்ணுவின் அடையாளம் என்ற தலைப்பில் ஒரு சிறுகதையாக எழுதினேன்.

அவன் ஒரு கிறுக்கு!: என் முதல் சிறுகதைத் தொகுப்பு லண்டனில் வெளிவந்தது. மிக நல்ல விமர்சனங்கள் கிடைத்தன. ஆனால் பணம் எதுவும் கிடைக்கவில்லை.

சிறிது தலைக்குனிவுடன் டெல்லிக்குத் திரும்பினேன். நண்பர்களும் உறவினர்களும் என் முதுகுக்கு பின்னால் சிரித்தார்கள். "பரீட்சைகளைப் பாஸ் பண்ண முடியவில்லை. புஸ்தகம் எழுதப் புறப்பட்டு விட்டான்' என்றார்கள். "அவன் ஒரு கிறுக்கன்' என்று என் தந்தை சொன்ன போதிலும் எனக்கு உறுதியுடன் பக்கபலமாக இருந்தார். போபாலில் அவருக்கு சொந்தமான வீட்டில் மூன்று மாத காலம் தனியே தந்கி, ட்ரெயின் டு பாகிஸ்தான் என்ற என் முதல் நாவலை எழுதி முடித்தேன். சிறந்த நவீனமென்று அது க்ரோவ் பரிசைப் பெற்றுத் தந்தது எனக்கு. நான் மெர்ஸிடிஸ் பென்ஸ் கார் வங்கிக் கொள்ள முடிந்தது.

வெற்றி! வெற்றி! வெற்றி!: சீக்கியர்களின் வரலாறும் மதமும் என்ற புத்தகத்துக்காக வெளிநாடுகளுக்குச் சென்று தகவல்கள் திரட்டினேன். இரண்ட வால்யூம்கள் கொண்ட இப்புத்தகத்தை பிரின்ஸ்டன் அண்ட் ஆக்ஸ்போர்டு யூனிவர்சிடி பிரஸ் வெளியிட்டது. பிரின்ஸ்டன், ஸ்வார்ட்மோர், ஹவாய் பல்கலைக்கழகங்கள் எனக்கு விஸிட்டிங் புரொபசர்ஷிப் பதவிகள் வழங்கின.

இச்சமயம் நான் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் தவறாமல் எழுதத் தொடங்கியிருந்தேன். 1969ம் ஆண்டு பம்பாய் இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஆஃப் இந்தியா பத்திரிகைக்கு ஆசிரியராக வரும்படி அழைத்தார்கள். அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு, ஒன்பது வருட காலம் அதன் ஆசிரியராக இருந்தேன். 80000 பிரதிகளாக இருந்த அதன் சர்க்குலேஷனை 410000க்கு உயர்த்தினேன்.

என் பத்திரிகை, இந்தியாவிலேயே மிக அதிகமாகப் படிக்கப்படுவதாக ஆயிற்று, வெற்றி என் தலைக்கேறிற்று.

1979ல் பத்திரிகையின் சொந்தக்காரர்களான ஜெயின்கள், சிறிதும் தயவுதாட்சண்யம் பாராமல், என்னைப் பதவியிலிருந்து நீக்கினார்கள். மீண்டும் டெல்லிக்கே திரும்பினேன் - எழுதுவதைத் தவிர வேறு எதுவும் அறியாதவனாக.

தெய்வங்களிடம் எனக்கு நம்பிக்கை இல்லாதபோதும், தெய்வங்கள் எனக்கு நல்லதே செய்து வந்துள்ளன. வீக்லிக்குப் பிறகு நேஷனல் ஹெரால்டு ஆசிரியராக ஆனேன். (ஊதியம் இல்லாமல்) பிறகு நியூடெல்லி மேகஸின். பிறகு சஞ்சய் காந்தியின் தயவில் - அவருடைய துன்பம் மிகுந்த காலத்தில் நான் சினேகிதனாக இருந்த காரணத்தால் - ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆசிரியராக ஆனேன். ராஜ்ய சபா உறுப்பினராகவும் ஆனேன். சஞ்சய்காந்தி இறந்து போனார். அவருடன் என் அரசியல் அபிலாஷைகள் மொத்தமும் இறந்து போயின. இந்திரா காந்தி என்னை ஹிந்துஸ்தான் டைம்ஸிலிருந்து வெளியேற்றினார்.

ராஜ்ய சபா உறுப்பினர் பதவி மீண்டும் ஒருமுறை எனக்குக் கொடுத்திருக்கலாம். ராஜீவ் காந்தி கொடுக்கவில்லை.

என் ஆஸ்தியெல்லாம் என்னுடைய கடுமையான பேனாதான். பதவிப் பித்தர்களையும் கூஜாக்களையும் ஈவிரக்கமின்றி என் பேனாவினால் சாடினேன். கவர்னர்கள், நீதிபதிகள், மந்திரிகள், பதவியில் இருக்கும் எவரையும் கிண்டல் செய்தேன்.

நீதிமன்றத்திலும் பிரஸ் கவுன்ஸிலிலும் என் மீது புகார் தொடுத்தார்கள். அதனால் எனக்கு எதுவும் நேரவில்லை - வாழ்க்கையில் முன்னெப்போதையும் விட அதிகப் பணம் சம்பாதித்தேன் என்பதைத் தவிர.

உலகத்தைப் பலமுறை சுற்றினேன் - பயணத்துக்கோ தங்குவதற்கோ என் கையை விட்டு எதுவும் செலவழிக்காமலே. எனக்க முன்னிருந்த எந்தப் பத்திரிகையாளரைக் காட்டிலும் அதிகம் பேர் நான் எழுதியதைப் படித்தார்கள்.

[thanks] 18.10.1990ல் குஷ்வந்த்சிங் தயாரித்து, எழுதிய குமுதம் இதழிலிருந்து[/thanks]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum