ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்க்கரையில் அக்கறை சமாளிக்க ஈசி டிப்ஸ்

3 posters

Go down

சர்க்கரையில் அக்கறை சமாளிக்க ஈசி டிப்ஸ் Empty சர்க்கரையில் அக்கறை சமாளிக்க ஈசி டிப்ஸ்

Post by தமிழ்நேசன்1981 Fri Apr 04, 2014 10:03 am

சர்க்கரையில் அக்கறை சமாளிக்க ஈசி டிப்ஸ் P12b
'ஒரு சர்க்கரையில்லாத காபி கொடுங்க’, 'ஸ்வீட்... சின்ன பீஸ் போதும்’ - பெரும்பாலும் வயதானவர்கள் மட்டுமே உச்சரித்து வந்த வார்த்தைகள் இவை. ஆனால், இன்றைய இளைஞர்களும் ஹோட்டல், பார்ட்டி, பங்ஷன்களில் தித்திப்பு உணவுகளை அதிகம் தவிர்க்க... இப்போது தனியாக சர்க்கரை இல்லாத டீ கேன்களை விருந்துகளில் வைப்பது சகஜமாகிவிட்டது. காரணம், 'கசப்பான’ சர்க்கரை நோய்தான்.

மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் சர்க்கரை நோய் பற்றிய பயத்திலேயே பலரும் வாழ்கின்றனர். சர்க்கரையைக் கட்டுப்படுத்த வழி தேடி, கடைசியில் 'அறுகம்புல் ஜூஸ்’ விற்பவர் முன் போய் நிற்கிறார்கள். அரிசியைக் கண்டால் அலறுகிறார்கள். நடையோ நடை என்று நடக்கிறார்கள். 'சர்க்கரையைக் கட்டுப்படுத்துவது ஒன்றும் பெரிய கஷ்டமான விஷயம் இல்லை. வாழ்க்கை முறையில் சின்னஞ்சிறு மாற்றங்களை செய்து கொண்டால், அது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடும்' என்கிறார் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் பரணிதரன்.

'சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதற்காக உணவு விஷயத்தில் எல்லாவற்றையும் இழக்க வேண்டிய அவசியம் இல்லை. சுவையான லட்டு, அல்வா சாப்பிடக்கூடாது என்ற எந்தக் கட்டுப்பாடும் இல்லை. எதை, எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் செலுத்தினால் போதும்'' என்கிறார்.

உடல் எடை

உயரத்துக்கு ஏற்ற உடல் எடையைப் பராமரிக்கவேண்டும். உடல் எடை சற்று அதிகமாக இருந்தால், ஐந்து அல்லது 10 சதவிகிதம் எடையைக் குறைப்பது கூட பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். சர்க்கரை நோய் வருவதற்கு மிக முக்கிய காரணம் உடல் பருமன். உடலில் உள்ள எல்லா கொழுப்பும் சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை அதிகரிப்பதில்லை. கொழுப்பு எங்கே அதிகம் படிகிறது என்பதுதான் முக்கியம். அதிலும், வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பு ஆபத்தானது. இப்படி வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்ந்திருப்பவர்களை 'ஆப்பிள்’ டைப் என்போம். இடுப்புச் சுற்றளவு ஆண்களுக்கு 90 செ.மீ.க்குக் கீழும், பெண்களுக்கு 80 செ.மீ.க்குக் கீழும் இருக்க வேண்டும்.

ஆரோக்கியமான உணவு

சாப்பிடும் உணவைத் திட்டமிடுவது அவசியம். தட்டில் ஊட்டச்சத்து நிறைவாகவும், கொழுப்பு மிகமிகக் குறைவாகவும், கலோரி தோராயமான அளவிலும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். இலையின் ஒரு பகுதியில் சாதத்தை அதிகமாகவும், மற்றொரு பகுதியில் காய்கறியை வைத்தும் சாப்பிடுவோம். இலையைத் திருப்பி காய்கறிகள் அதிகமாகவும், சாதம் குறைவாகவும் இருந்தால் ஆரோக்கியம் அதிகரிக்கும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கரிப்பதில் கார்போஹைட்ரேட்டுக்குதான் முக்கிய பங்கு இருக்கிறது. எது எல்லாம் வெள்ளை நிறத்தில் உள்ளதோ அது எல்லாம் கார்போஹைட்ரேட் நிறைந்தது. உணவில் வெள்ளை நிறத்தைத் தவிர்த்து, வண்ணங்களைச் சேர்க்கலாம்.

வயிறு நிறைய பயிறு

முடிந்தவரை சமைக்காத இயற்கை உணவுகளை எடுத்துக்கொள்வது, எந்த நோயில் இருந்தும் நம்மைப் பாதுகாக்கும். பச்சைக் காய்கறிகள், பழங்கள், பாதாம் போன்ற கொட்டை வகைகள் போன்றவற்றை சாப்பிடலாம். வயிறு நிறைய முளைவிட்ட தானியங்கள் எடுத்துக்கொள்ளலாம். இதில் உள்ள என்சைம்கள் நம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி உடலைப் பாதுகாக்கும். மேலும், நார்ச்சத்து அதிக அளவில் கிடைக்கும். இதனால், நம் உடல், சர்க்கரையைக் கிரகிக்கும் வேகம் குறையும். ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். ஆப்பிள், கேரட், சிட்ரஸ் பழங்கள் போன்றவற்றில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இவை சர்க்கரையை மட்டுமல்ல, ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவையும் குறைக்கும்.

வீட்டு உணவு

வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். வெளியில் செய்யப்படும் உணவுகளில் சுவையூட்டிகள், நிறமேற்றிகள் உள்ளிட்ட பல ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. மேலும், உணவு நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் இருக்க அதிக அளவில் உப்பு சேர்க்கப்படுகிறது. ஜங்க் ஃபுட் சுவைமிக்கதாக இருந்தாலும், அதில் நன்மை தரக்கூடிய விஷயங்கள் மிகமிகக் குறைவாகவே உள்ளன. அவற்றில், கார்போஹைட்ரேட்தான் அதிக அளவில் உள்ளது. வீட்டில் என்ன சமைக்கிறோம்; அதில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்று பார்த்துப் பார்த்துச் சமைக்கிறோம். இதனால், சர்க்கரை நோய்க்கான வாய்ப்பு தவிர்க்கப்படும். உணவை பொறுமையாக மென்று சாப்பிடவேண்டும். போதும் என்ற உணர்வு ஏற்பட்ட பிறகு சாப்பிட வேண்டாம். கண்டிப்பாக காலை உணவைத் தவிர்க்கக்கூடாது.
சர்க்கரையில் அக்கறை சமாளிக்க ஈசி டிப்ஸ் P12e
உடற்பயிற்சி

அன்றாட உடற்பயிற்சி நோயின் தீவிரத்தைக் குறைத்து, எதிர்காலத்தில், சர்க்கரை நோய் ஏற்படுத்தக்கூடிய பக்கவிளைவுகளைக் குறைக்கிறது. உடற்பயிற்சி செய்வதன் மூலம் செலவிடப்படும் கலோரி காரணமாக உடல் எடை குறைகிறது. இதனால், உடல் பருமனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தவிர்க்கப்படுகின்றன. உடற்பயிற்சியானது இன்சுலின் ஏற்புத் தன்மையை (சென்சிடிவிட்டி) அதிகரிக்கிறது. தொடர் உடற்பயிற்சியால் கொழுப்பும், உயர் ரத்த அழுத்தமும் குறைகிறது. எனவே, தினமும் உடற்பயிற்சிக்கு என்று நேரத்தை செலவிடுவது அளவில்லா ஆரோக்கியத்தைத் தரும்.
சர்க்கரையில் அக்கறை சமாளிக்க ஈசி டிப்ஸ் P12f
சர்க்கரை நோயைத் தவிர்க்க ஐந்து வழிகள்...

1. கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

2. நடக்காமல் / ஓடாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்.

3. உயரத்துக்கு ஏற்ற எடையைப் பராமரிக்க வேண்டும்.

4. விருந்தும் விரதமும் வேண்டவே வேண்டாம்.

5. மன அழுத்தத்துக்கு இடம் கொடுக்காத நிலை வேண்டும்.

நன்றி- டாக்டர்விகடன்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

சர்க்கரையில் அக்கறை சமாளிக்க ஈசி டிப்ஸ் Empty Re: சர்க்கரையில் அக்கறை சமாளிக்க ஈசி டிப்ஸ்

Post by ஜாஹீதாபானு Fri Apr 04, 2014 1:59 pm

பயனுள்ள பகிர்வு நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சர்க்கரையில் அக்கறை சமாளிக்க ஈசி டிப்ஸ் Empty Re: சர்க்கரையில் அக்கறை சமாளிக்க ஈசி டிப்ஸ்

Post by krishnaamma Fri Apr 04, 2014 2:07 pm



நம் தமிழ் பாட்டி ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் என்றாள் நீங்க இப்போ ஓடாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம். என்று சொல்லரிங்க, ஜாலிஜாலிஜாலி சரி இதுவும் நல்லதுக்குத்தான் புன்னகை

நல்ல பதிவு , நன்றி நேசன் புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சர்க்கரையில் அக்கறை சமாளிக்க ஈசி டிப்ஸ் Empty Re: சர்க்கரையில் அக்கறை சமாளிக்க ஈசி டிப்ஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கோடையை காலத்தைச் சமாளிக்க சில டிப்ஸ்
» கறைகளை சமாளிக்க...---அக்கறையுடன் சில டிப்ஸ்
» திடீர் ஐஸ்கிரீம் - கோடையை சமாளிக்க டிப்ஸ்
» புதினா வாடாமல் தடுக்க... மிருதுவான சப்பாத்தி செய்ய... டிப்ஸ்.. டிப்ஸ்..! #VikatanPhotoCards
» நிமிடங்களில் தக்காளி தொக்கு செய்ய... வாழை இலை எளிதில் வாடுவதைத் தவிர்க்க... டிப்ஸ்.. டிப்ஸ்..! #VikatanPhotoCards

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum