புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தேர்தல் ஆணைய விதிமுறைக்கு எதிராக வழக்கு தொடரப்படும்: ஜெயலலிதா காட்டம் I_vote_lcap தேர்தல் ஆணைய விதிமுறைக்கு எதிராக வழக்கு தொடரப்படும்: ஜெயலலிதா காட்டம் I_voting_bar தேர்தல் ஆணைய விதிமுறைக்கு எதிராக வழக்கு தொடரப்படும்: ஜெயலலிதா காட்டம் I_vote_rcap 
14 Posts - 70%
heezulia

3 Posts - 15%
mohamed nizamudeen

2 Posts - 10%
வேல்முருகன் காசி

1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 தேர்தல் ஆணைய விதிமுறைக்கு எதிராக வழக்கு தொடரப்படும்: ஜெயலலிதா காட்டம் I_vote_lcap தேர்தல் ஆணைய விதிமுறைக்கு எதிராக வழக்கு தொடரப்படும்: ஜெயலலிதா காட்டம் I_voting_bar தேர்தல் ஆணைய விதிமுறைக்கு எதிராக வழக்கு தொடரப்படும்: ஜெயலலிதா காட்டம் I_vote_rcap 
139 Posts - 41%

129 Posts - 39%
Dr.S.Soundarapandian
 தேர்தல் ஆணைய விதிமுறைக்கு எதிராக வழக்கு தொடரப்படும்: ஜெயலலிதா காட்டம் I_vote_lcap தேர்தல் ஆணைய விதிமுறைக்கு எதிராக வழக்கு தொடரப்படும்: ஜெயலலிதா காட்டம் I_voting_bar தேர்தல் ஆணைய விதிமுறைக்கு எதிராக வழக்கு தொடரப்படும்: ஜெயலலிதா காட்டம் I_vote_rcap 
21 Posts - 6%

17 Posts - 5%
Rathinavelu

8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 தேர்தல் ஆணைய விதிமுறைக்கு எதிராக வழக்கு தொடரப்படும்: ஜெயலலிதா காட்டம் I_vote_lcap தேர்தல் ஆணைய விதிமுறைக்கு எதிராக வழக்கு தொடரப்படும்: ஜெயலலிதா காட்டம் I_voting_bar தேர்தல் ஆணைய விதிமுறைக்கு எதிராக வழக்கு தொடரப்படும்: ஜெயலலிதா காட்டம் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்தல் ஆணைய விதிமுறைக்கு எதிராக வழக்கு தொடரப்படும்: ஜெயலலிதா காட்டம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 04, 2014 5:48 am

புதிய கட்டுப்பாடு விதித்துள்ள #தேர்தல் ஆணையத்துக்கு எதிராக அதிமுக சார்பில் வழக்கு தொடரப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா தெரிவித்தார்.

நாமக்கல் தொகுதியில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் பேசியது:

தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் துரோகம் இழைத்த கட்சி காங்கிரஸ் கட்சி. இந்தத் துரோகத்திற்கு உறுதுணையாக இருந்து, தமிழர் நலனில் அக்கறை செலுத்தாமல் இருந்த கட்சி #தி.மு.க. #காங்கிரஸ், தி.மு.க-வின் செயல்பாடுகளால் மக்கள் கொதிப்படைந்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தி.மு.க-வினர் தேர்ந்தெடுக்கப்பட்டால் தமிழ்நாட்டிற்கு இன்னின்ன நன்மைகளை செய்வோம் என்று சொல்லி தி.மு.க. வாக்கு கேட்கவில்லை. தி.மு.க-வுக்கு வாக்கு அளிக்க தி.மு.க-வினர் சொல்லும் காரணம், கருணாநிதி சுட்டிக் காட்டுபவர் பாரதப் பிரதமராக வர வேண்டும் என்பது தான். கருணாநிதி சுட்டிக் காட்டிய காங்கிரஸ் கட்சி தானே கடந்த பத்து ஆண்டுகள் மத்தியில் ஆட்சி புரிந்தது? தமிழகத்திற்கு என்ன நன்மை செய்தது? இந்திய நாட்டிற்கு என்ன நன்மை செய்தது? இந்திய நாடு சீரழிந்து கொண்டிருப்பதற்கும், தமிழ்நாட்டின் உரிமைகள் பறிபோய் கொண்டிருப்பதற்கும் காரணம்; அதற்கான காரணமே தி.மு.க. தலைவர் கருணாநிதி சுட்டிக் காட்டிய #காங்கிரஸ் கட்சி தானே?

மீண்டும் #கருணாநிதி சுட்டிக் காட்டும் பாரதப் பிரதமர் எதற்கு? தமிழினத்தை அழித்தது போதாதா? 2ஜி ஊழலில் 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அடித்த கொள்ளை போதாதா? இன்னமும் சுரண்ட வேண்டும் என்று நினைக்கிறார்களா? சுய நலத்திற்காக இந்திய நாட்டின் வளத்தை சுரண்டிய தி.மு.க-வை இந்தத் தேர்தலில் நீங்கள் வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?

உண்மையா? இல்லையா?

தமிழக மக்களுக்கு என்னென்ன நன்மைகளை செய்யப் போகிறோம், அகில இந்திய அளவில் என்னென்ன கொள்கை மாற்றங்களை கொண்டு வரப் போகிறோம் என்பதைச் சுட்டிக் காட்டி, பிரச்சாரம் செய்கின்ற ஒரே இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு அளிக்கும் வாக்கு, தமிழர் நலனுக்காக அளிக்கப்படும் வாக்கு, தமிழ்நாட்டை வளப்படுத்தும் வாக்கு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உரிமைகளை போராடி பெற்றுத் தரக் கூடிய அரசு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு, மக்களுக்காக திட்டங்களை செயல்படுத்துகின்ற அரசு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு, ஏழை மக்களின் நலனில் அக்கறை செலுத்துகின்ற அரசு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு. எனவே தான் மக்கள் மத்தியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள், குறிப்பாக தி.மு.க., அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், அறிவிப்புகள் அனைத்தும் காகித வடிவில் தான் இருக்கின்றன என்றும், விஷமப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

2011-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு தேர்தல் நடைபெற்ற போது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் 177 வாக்குறுதிகள் தரப்பட்டு இருந்தன. இவற்றில் 150 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒரு சிலவற்றை நான் இங்கே உங்களுக்கு எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.

அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 20 கிலோ விலையில்லா அரிசி வழங்கப்படும் என்று நான் அறிவித்து இருந்தேன். இந்த வாக்குறுதியின்படி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 20 கிலோ விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இது உண்மையா? இல்லையா?

மாணவ மாணவியரின் புத்தகச் சுமை குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து இருந்தேன். அதற்கேற்ப முப்பருவ முறை அறிமுகப்படுத்தப்பட்டு, புத்தகச் சுமை குறைக்கப்பட்டுள்ளது. இது உண்மையா? இல்லையா?

தாய்மார்களுக்கு விலை ஏதுமின்றி மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்து இருந்தேன். இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இதுவரை 89 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இவை வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளில் இவை வழங்கப்பட்டுவிடும். இது உண்மையா? இல்லையா? (தொடர்ந்து இதேபோல் பல்வேறு திட்டங்களை அடுக்கி, உண்மையா? இல்லையா? என்று கேட்டார்)

இந்தத் தேர்தலிலே ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது. மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு விடுவோமோ, நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டு விடுவோமோ, டெபாசிட் தொகை கூட கிடைக்காதோ என்ற அச்சத்தில், மனம் போன போக்கில் பொய் பிரச்சாரங்களை, விஷமப் பிரச்சாரங்களை தி.மு.க-வினர் மேற்கொண்டு வருகின்றனர்.

எனக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் பெருகி வரும் மக்கள் ஆதரவை கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள், விரக்தி அடைந்த எதிர்க்கட்சியினர், குறிப்பாக தி.மு.க. தோல்வி பயத்தில் ஆட்கள் அழைத்து வரப்படுகின்றனர் எனப் பொய்யான தகவல்களை கூறி வருகிறார்கள். எனது கூட்டத்திற்கு திரளும் மக்கள் வெள்ளத்தைப் பார்த்து, எதிர்க்கட்சியினர் மிரட்சி அடைவதும், விரக்தி அடைவதும் இயல்பானது தான்.

ஆனால், தேர்தல் ஆணையமும் இதற்கு கட்டுப்பாடு விதிக்க முயல்வது விந்தையாக உள்ளது. அதாவது, கட்சியின் தலைவர் அல்லது நட்சத்திரப் பேச்சாளர் பேசும் கூட்டத்தின் மேடையில் வேட்பாளர் இருந்தாலும் அல்லது அவரது பெயரோ புகைப்படமோ இருந்தாலும், அவரது பெயரை உச்சரித்தாலும், கூட்டத்திற்கு ஏற்பட்டதாக கருதப்படும் செலவு அனைத்தும் வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும் என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவு நியாயமற்றது.

பொதுமக்கள் தாங்களாகவே தங்களது சொந்த செலவில் வாகனங்களில் வந்தாலும், அந்தச் செலவு வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும் என்பது எப்படி நியாயமாகும்? ஒரு மக்களவைத் தொகுதி என்பது கிட்டத்தட்ட ஒரு மாவட்டத்திற்கு இணையானது.

நான் ஒரு மக்களவைத் தொகுதியில் பிரச்சாரம் செய்கிறேன் என்றால் அந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மக்கள் என்னைப் பார்க்க வேண்டும், என்னுடைய உரையினை கேட்க வேண்டும் என்று நான் பேசும் இடத்திற்கு தங்களுடைய சொந்தச் செலவில் பொதுமக்கள் வாகனங்களில் வருவது என்பது இயற்கையானதுதான். இதே போன்று, அரசியல் தலைவர்களின் பதாகைகளை வைப்பதும், கட்அவுட்களை வைப்பதும், வழக்கமான அரசியல் கலாச்சாரம் தான். இது தான் காலம் காலமாக நடந்து வருவது.

1952-ஆம் ஆண்டிலிருந்து அண்ணா காலத்திலும் சரி, எம்.ஜி.ஆர். காலத்திலும் சரி, இதே நடைமுறை தான் கடைபிடிக்கப்பட்டது. கடந்த 32 ஆண்டுகளாக நான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட காலத்திலும் சரி இது போன்ற நடைமுறை தான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், 2014-ல் நடைபெறுகின்ற இந்தத் தேர்தலில் திடீரென்று தேர்தல் ஆணையம் இது போன்ற கட்டுப்பாட்டினை விதிப்பதால் இந்தத் தொகுதியில் போட்டியிடும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரே இங்கு வர முடியாத சூழ்நிலை நிலவுகிறது.

தேர்தல் என்று வந்துவிட்டாலே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாட்டை முற்றிலும் ஸ்தம்பிக்க வைக்கும் வகையில் பல்வேறு ஆணைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது. எந்த ஒரு சிறிய உத்தரவு வெளியிட வேண்டுமென்றாலும், தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். இது ஜனநாயகத்திற்கு முற்றிலும் புறம்பானது ஆகும்.

'ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனையும் கடிப்பது' என்று சொல்வார்களே, அதைப் போல, இப்போது வேட்பாளரே தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நிற்க முடியாத சூழ்நிலையை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமல்லாமல் வேட்பாளர் பெயரைக் கூட உச்சரிக்கக் கூடாதென்றும், இத்தொகுதி வேட்பாளர் என்று கூட சொல்லக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இது ஜனநாயகத்தையே கேலிக்கூத்து ஆக்குவதாகும்.

எனவே, இது குறித்து நீதிமன்றத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வழக்கு தொடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவின் காரணமாக இந்தத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளரை நான் அறிமுகம் செய்ய முடியவில்லை" என்றார் ஜெயலலிதா.

Keywords: #நாமக்கல் #தொகுதி, #ஜெயலலிதா #பிரச்சாரம், #மக்களவை #தேர்தல்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக