புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 10:11

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 10:10

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 5:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:47

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:29

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 18:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:20

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:04

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:14

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:35

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:11

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:01

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:42

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:25

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 13:08

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 12:41

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:27

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 12:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 0:38

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 0:34

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri 28 Jun 2024 - 23:22

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 28 Jun 2024 - 21:19

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 28 Jun 2024 - 21:05

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:03

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 21:47

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_c10பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_m10பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_c10 
85 Posts - 45%
ayyasamy ram
பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_c10பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_m10பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_c10 
76 Posts - 40%
T.N.Balasubramanian
பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_c10பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_m10பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_c10பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_m10பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_c10பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_m10பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_c10 
5 Posts - 3%
prajai
பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_c10பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_m10பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_c10பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_m10பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_c10பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_m10பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_c10பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_m10பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_c10 
2 Posts - 1%
சிவா
பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_c10பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_m10பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_c10பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_m10பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_c10 
435 Posts - 47%
heezulia
பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_c10பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_m10பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_c10பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_m10பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_c10பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_m10பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_c10பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_m10பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_c10 
30 Posts - 3%
prajai
பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_c10பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_m10பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_c10பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_m10பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_c10பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_m10பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_c10பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_m10பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_c10பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_m10பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 3 Apr 2014 - 19:52

நம் நாட்டைக் காப்பாற்றப்போவது யார் என்ற ஜனநாயகப் போராட்டம் அடுத்த சில நாட்களில் - நம்முடைய பெரும்பாலான ஆண் அரசியல்வாதிகளுக்கிடையே - தீவிரமடைந்துவிடும். நம்முடைய மக்களில் ‘பாதிப் பேர்’ (அதாவது பெண்கள்) - எதிரிகளாலோ பயங்கரவாதிகளாலோ அல்லாமல் நம்முடைய மக்களாலேயே - ஆபத்துக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், நம் நாடு எப்படிப் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று அவர்களில் ஒருவர்கூடக் கேள்வி எழுப்பப்போவதில்லை. இந்தியாவின் பாதுகாப்பு என்பது அதன் மக்கள்தொகையில் 48% ஆக இருக்கும் பெண்களின் பாதுகாப்பையும் உள்ளடக்கியதுதான்.

பெண் குழந்தைகளை அவர்கள் கருவாக வயிற்றில் உருவான நேரத்திலேயே அழிப்பதிலிருந்து அவர்களுக்கு எதிரான வன்செயல்கள் தொடங்குகின்றன. ‘பெண்’ என்ற ஒரே காரணத்துக்காகவே இந்தியாவில் ஆண்டுதோறும் 2.5 லட்சம் கருக்கள் கடந்த 20 ஆண்டுகளாக அழிக்கப் படுகின்றன என்று ‘பாலின சமத்துவம், வளர்ச்சி’ என்ற தலைப்பிலான அறிக்கையில் உலக வங்கி தெரிவிக்கிறது.

‘தேசியக் குடும்பநல மக்கள்தொகைக் கணக்கெடுப்பு’ தரும் தகவல்கள் அச்சமூட்டுகின்றன. பிரசவத்துக்குப் பிறகு இறக்கும் குழந்தைகளில் 1,000-க்கு 21 பெண் களாக இருக்கும்போது 15 மட்டுமே ஆண்களாக இருக்கிறது. ஒன்று முதல் நான்கு வயது வரையிலான குழந்தைகளின் இறப்பு விகிதம்: ஆண் குழந்தைகள் 1,000-க்கு 14, பெண் குழந்தைகள் 23.

பெண்ணின் மதிப்பு இவ்வளவுதானா?

பெண் குழந்தைகளின் விகிதாச்சாரம் 27 மாநிலங் களிலும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் கணிசமாகக் குறைந்துள்ளது. போனால் போகட்டும் என்று விட்டு வைக்கப்படும் பெண் குழந்தைகளில் கோடிக் கணக்கான வர்கள் அவர்களுடைய அண்ணன், தம்பிகளைவிடக் குறைவாகவே உணவையும் கல்வியையும் பெறுகின்றனர். ஆண் பிள்ளை நல்ல பள்ளிக்கூடத்தில் படிக்க வேண்டும் என்பதற்காக, பெண் பிள்ளையைச் சுமாரான பள்ளிக்கூடத்தில் சேர்க்கின்றனர் அல்லது படிப்பைவிட்டு நிறுத்துகின்றனர்.

ஆண் பிள்ளைகளுக்குத்தான் முதலிலும் உயர் வாகவும் எல்லாம் கொடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை வீடுகளில் வளர்த்து, ஆண் குழந்தைகளிடம் ஆதிக்க மனப்பான்மையை வளர்த்துவிடுகிறோம். பெண் என்பவள் அடங்கி நடக்க வேண்டும், தியாகம் செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பழக்கு கிறோம். வீடுகளில் பெண் குழந்தைகளை தாய், தந்தையரும் இதர உறவினரும் எத்தனை முறை அடிக்கிறார்கள், எதற்கெல்லாம் கட்டுப்படுத்துகிறார்கள் என்று நாம் எந்த கணக்கெடுப்பும் நடத்துவதில்லை.

அப்படி நடத்தினால், பெண் குழந்தை அடிபடாத நாளோ சந்தர்ப்பமோ இல்லை என்ற புள்ளிவிவரமே கிடைக்கும். பெண்ணை போகப் பொருளாக மட்டு மல்ல, அடிமையாகவும் வேலை செய்வதற்கான இயந்திரமாகவும் கேலிப்பொருளாகவும்கூடப் பார்க்கும் குடும்பத்தினர், இதில் தவறு இருப்பதாக என்றுமே நினைப்பதில்லை.

பாலியல் அத்துமீறல்

‘மகளிர் நலன், குழந்தைகள் வளர்ச்சிக்கான அமைச் சகம்’, குழந்தைகள் மோசமாக நடத்தப்படுவதுகுறித்து தேசிய அளவில் தகவல்களையும் புள்ளிவிவரங்களையும் திரட்டி அறிக்கையாக 2007-ல் அளித்தது. அமைச்சகம் பேட்டி கண்ட பெண் குழந்தைகளில் 53%, ஒரு முறையோ ஒன்றுக்கும் மேற்பட்ட முறையோ பாலியல்ரீதியாகப் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதில் பெரும்பாலான அத்துமீறல்களைச் செய்வது குழந்தை களுக்கு மிகவும் நெருக்கமான உறவினர்கள் அல்லது அக்கம்பக்கத்து வீட்டார், குடும்ப நண்பர்கள் போன்றவர்களே.

சின்னஞ்சிறுமிகளிடம் நடத்தப்படும் இந்த சில்மிஷங்கள் அவர்கள் பெரியவர்களான பிறகும் தொடர்வதையே ‘தேசியக் குற்றங்கள் பதிவேட்டு அறிக்கை’ உறுதி செய்கிறது. 2012-ல் நாடு முழுக்க 24,923 பாலியல் வல்லுறவுப் புகார்கள் பதிவாயின. இவற்றில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளில் 98% பேரைப் பாதிக்கப்பட்ட பெண்களால் எளிதில் கூற முடிகிறது. பெண்ணைப் பற்றி சிறு வயதில் பையன்கள் மனதில் உருவேற்றப்படும் பிம்பமே பிற்காலத்தில் இந்தக் கொடுமைகளுக்குக் காரணமாகிறது.

16 வயது

இன்னமும் பெரும்பாலான இளம் பெண்களின் திருமண வயது 16 ஆகவே இருக்கிறது. பிறந்த வீட்டிலும் உரிமைகள், சலுகைகள் மறுக்கப்பட்டு, வாழ்க்கை அனுபவமே பெற்றிராத நிலையில், கணவன் வீட்டுக்கு அனுப்பப்பட்டு அங்கும் அடிமை யாக்கப்படுவது தொடர்கிறது. அத்துடன் மிக இளம் வயதிலேயே கருவுற்று ஊட்டச்சத்துக் குறைவுடன் பிரசவத்தையும் எதிர்நோக்க வேண்டியுள்ளது.

பெண்கள், அதிலும் ஏழைப் பெண்கள் மகப்பேறு காலத்தில் பாதுகாப்பற்ற நிலைமைக்கு ஆளாக்கப் படுகிறார்கள். கர்ப்பிணியாக இருக்கும்போது, போதிய ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்காததுடன் வீட்டிலும் வெளியிலும் கடுமையாக வேலைவாங்கப்படுகிறார். பிரசவத்துக்கு ஓரிரு வாரங்கள் முன்னால் வரையிலும்கூட உழைக்க வேண்டிய நிலையில்தான் பெரும்பாலான பெண்கள் இருக்கிறார்கள்.

2001-ம் ஆண்டில் பிரசவத்தின்போது இறக்கும் பெண்களின் விகிதம் லட்சத்துக்கு 301 ஆக இருந்தது. இந்த ஆண்டு இந்த விகிதம் லட்சத்துக்கு 200 என்று குறைந்திருக்கிறது. இந்தியாவில் சராசரியாக ஆண்டுக்கு இரண்டு கோடியே 70 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. பிரசவத்தின்போது சுமார் 54,000 பெண்கள் இறந்துவிடுகிறார்கள்.

திறந்தவெளியே கழிப்பிடம்

உலகிலேயே திறந்தவெளியைக் கழிப்பிடமாக அதிகம் பயன்படுத்தும் நாடு இந்தியாதான். கழிப்பிடத்துக்குச் செல்லும் வழியில் இளம் பெண்கள் கடத்தப்படுவதும் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்படுவதும் இங்கு வழக்கமாக இருக்கிறது. பெருநகரங்களில் குடிசைவாழ் பெண்களுக்கு இது மாபெரும் பிரச்சினை. பள்ளிக்கூடங்களில் கழிப்பறை இல்லாததாலேயே, வயதுவந்த பெண்கள் தங்களுடைய படிப்பைத் தொடராமல் கைவிடுகின்றனர்.

சமுதாயத்தின் எண்ணம்

ஆண்கள் சொல்கிறபடி கேட்டு நடக்க வேண்டும், அவர்கள் மனம் கோணாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், ஆண்களை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தக் கூடாது என்றெல்லாம் பெண்களுக்கு இளம் வயதிலேயே போதிக்கப்படுகிறது. திருமணமான பெண்களில் 40% பேர் கணவனால் அடிக்கப்படுகின்றனர்.

கணவனிடம் சொல்லாமல் வெளியில் போனாலோ, அவருடன் வாக்குவாதம் செய்தாலோ, தாம்பத்திய உறவுக்கு அழைக்கும்போது செல்ல மறுத்தாலோ, சமையல் சரியாக இல்லாவிட்டாலோ, வேற்று ஆடவரோடு பேசினாலோ, மாமனார் - மாமியாரை மரியாதையாக நடத்தாவிட்டாலோ கணவன்மார்கள் அடிப்பதாகவும், அது சரிதான் என்றும் அடிபடும் பெண்களில் 54% ஒப்புக்கொள்கின்றனர். இதுதான் சமுதாயத்தின் எண்ணமாகவும் இருக்கிறது.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள்

பாலியல் தொழிலுக்காக இளம் பெண்கள் கடத்தப் படுவது, வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களைக் கட்டாயப்படுத்தி இந்தத் தொழிலில் ஈடுபடுத்துவது, சிறுமிகளைப் பிச்சை எடுக்கவும் பாலியல் தொழிலுக்கும் பழக்கப்படுத்துவது, கடனுக்கு ஈடாக வீட்டு வேலை செய்ய அனுப்புவது, வேற்று மாநிலம் அல்லது நாட்டவருக்கு விற்பது என்ற அவலங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

இளம் வயதுப் பெண்களைக் கட்டாயப்படுத்தித் திருமணம் செய்துகொடுப்பது, விரும்பிய பையனுடன் பழகுவதற்காகக் அடித்து நொறுக்குவது அல்லது குடும்ப கௌரவத்துக்காகக் கொலை செய்வது, வரதட்சிணை கொண்டுவரவில்லை என்பதற்காகக் கொடுமைப்படுத்துவது, பெண் குழந்தையைத் திட்டுவது, கருத்தடை சிகிச்சைகளைப் பெண்களுக்கு மட்டுமே திணிப்பது என்று கொடுமைகளுக்குப் பட்டியல் போட்டால் நீண்டுகொண்டே போகிறது.

நலிவுற்ற பிரிவினரும் ஏழைகளும்தான் அதிகக் கொடுமைகளுக்கு உள்ளாகிறார்கள். படித்தவர்கள், பணக்காரர்கள்கூடத் தங்களுடைய குடும்பத்துப் பெண்களுக்கு நேரும் கொடுமைகளை, பெண் என்பதால் அவர்கள் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும் என்ற மனோநிலையில்தான் அணுகுகின்றனர். பெண்களுடைய நிலை மாற வேண்டும் என்றால், அவர்களுக்குக் கல்வி புகட்டப்பட வேண்டும், வேலை கிடைக்க வேண்டும், சட்ட மன்றங்களிலும் நாடாளுமன்றங்களிலும் அவர்களுடைய பிரதிநிதித்துவம் அதிகமாக வேண்டும், அதிகாரம் உள்ள பதவிகளுக்குப் பெண்கள் வர வேண்டும். பெண்களுக்கு அதிகாரம் அளித்தால் மட்டுமே அவர்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும்.

© ‘தி இந்து’ (ஆங்கிலம்), தமிழில்: சாரி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri 4 Apr 2014 - 14:54

பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? 103459460 பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? 1571444738 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 4 Apr 2014 - 15:15

//திறந்தவெளியே கழிப்பிடம்

உலகிலேயே திறந்தவெளியைக் கழிப்பிடமாக அதிகம் பயன்படுத்தும் நாடு இந்தியாதான். கழிப்பிடத்துக்குச் செல்லும் வழியில் இளம் பெண்கள் கடத்தப்படுவதும் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்படுவதும் இங்கு வழக்கமாக இருக்கிறது. பெருநகரங்களில் குடிசைவாழ் பெண்களுக்கு இது மாபெரும் பிரச்சினை. பள்ளிக்கூடங்களில் கழிப்பறை இல்லாததாலேயே, வயதுவந்த பெண்கள் தங்களுடைய படிப்பைத் தொடராமல் கைவிடுகின்றனர்.//

romba sari Sivaa புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri 4 Apr 2014 - 17:31

பாதிதான் படித்துள்ளேன். கண்டிப்பாக நிதானமாகப் படிக்க வேண்டும். நன்றி சிவா.

பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Aபெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Aபெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Tபெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Hபெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Iபெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Rபெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Aபெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Empty
thavamani
thavamani
கல்வியாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 09/05/2012

Postthavamani Fri 4 Apr 2014 - 22:13

இது மாதிரியான கட்டுரைகளை படிக்கும் போது வேதனையும் கோபமும் ஏற்படுகிறது .ஹூ..ம் ஒரு பெருமூச்சோடு முடிந்து விடுகிறது .இந்நிலை படித்த ,படிக்காத பெண்கள் என்ற வேறுபாடு இல்லை ! படிக்காத பெண்கள் ஒரு வகையில் துன்பப்படுகிறார்கள் என்றால் படித்த பெண்கள் வேறு வகையில் துன்பப்படுகிறார்கள்.இன்றைய பெண்கள் கருவிலிருந்து கல்லறை வரை போராட வேண்டியுள்ளது. பெண்களுக்கு பிரதிநிதித்துவமா? மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் நடைபெறப் போகும் தேர்தலில் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கையை பார்த்தால் புரியும். நாம் எங்கே இருஇருக்கிறோம் என்று! 33% இட ஒதுக்கீடு வெறும் கானல் நீர் தான்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri 4 Apr 2014 - 22:53

//படித்தவர்கள், பணக்காரர்கள்கூடத் தங்களுடைய குடும்பத்துப் பெண்களுக்கு நேரும் கொடுமைகளை, பெண் என்பதால் அவர்கள் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும் என்ற மனோநிலையில்தான் அணுகுகின்றனர். //

நூற்றுக்கு நூறு விழுக்காடு உண்மை

பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Aபெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Aபெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Tபெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Hபெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Iபெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Rபெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Aபெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களா? Empty
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 29/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sat 5 Apr 2014 - 0:32

காலம் மாறும் ! இது சம்மந்தமான சில வெளிப்பாடுகள் எனக்கு உண்டு ஒரு குறிப்பிட்ட வகையில் பிரார்த்தனை செய்யும் படியாக உந்துதல் அதை செய்து வருகிறேன் அது சரிதான் என்று உறுதியானதும் எழுதுவேன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 5 Apr 2014 - 7:54

Aathira wrote:[link="/t109114-topic#1056300"]பாதிதான் படித்துள்ளேன். கண்டிப்பாக நிதானமாகப் படிக்க வேண்டும். நன்றி சிவா.

ஆம் அக்கா, வயதாகிவிட்டாலே இப்படித்தான், பாவம், முழுமையாகக் கட்டுரையைப் படிக்கக் கூட இயலவில்லை!! அய்யோ, நான் இல்லை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 5 Apr 2014 - 18:42

சிவா wrote:[link="/t109114-topic#1056332"]
Aathira wrote:[link="/t109114-topic#1056300"]பாதிதான் படித்துள்ளேன். கண்டிப்பாக நிதானமாகப் படிக்க வேண்டும். நன்றி சிவா.

ஆம் அக்கா, வயதாகிவிட்டாலே இப்படித்தான், பாவம், முழுமையாகக் கட்டுரையைப் படிக்கக் கூட இயலவில்லை!! அய்யோ, நான் இல்லை

இது மாதிரி (உரிமையுடன்) கிண்டல் அடிப்பதால்தான் , இது மாதிரி தலைப்பு வருகிறது.

நானும் உள்ளடக்கத்தை இன்னும் படிக்கவில்லை.

ரமணியன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக