புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்தன்னவாசலில் இதுவரை அறியப்படாத ஏழடிப்பட்டம் குகை ஓவியங்கள் Poll_c10சித்தன்னவாசலில் இதுவரை அறியப்படாத ஏழடிப்பட்டம் குகை ஓவியங்கள் Poll_m10சித்தன்னவாசலில் இதுவரை அறியப்படாத ஏழடிப்பட்டம் குகை ஓவியங்கள் Poll_c10 
53 Posts - 42%
heezulia

32 Posts - 25%
Dr.S.Soundarapandian

28 Posts - 22%
T.N.Balasubramanian

6 Posts - 5%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்தன்னவாசலில் இதுவரை அறியப்படாத ஏழடிப்பட்டம் குகை ஓவியங்கள் Poll_c10சித்தன்னவாசலில் இதுவரை அறியப்படாத ஏழடிப்பட்டம் குகை ஓவியங்கள் Poll_m10சித்தன்னவாசலில் இதுவரை அறியப்படாத ஏழடிப்பட்டம் குகை ஓவியங்கள் Poll_c10 
304 Posts - 50%

179 Posts - 30%

58 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
JGNANASEHAR
சித்தன்னவாசலில் இதுவரை அறியப்படாத ஏழடிப்பட்டம் குகை ஓவியங்கள் Poll_c10சித்தன்னவாசலில் இதுவரை அறியப்படாத ஏழடிப்பட்டம் குகை ஓவியங்கள் Poll_m10சித்தன்னவாசலில் இதுவரை அறியப்படாத ஏழடிப்பட்டம் குகை ஓவியங்கள் Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்தன்னவாசலில் இதுவரை அறியப்படாத ஏழடிப்பட்டம் குகை ஓவியங்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 06, 2014 4:57 am

சித்தன்னவாசலில் இதுவரை அறியப்படாத ஏழடிப்பட்டம் குகையில் ஓவியங்கள் உள்ளதாக மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் ஆய்வு செய்து இதுவரை யாரும் அறிந்திடாத பல ஓவியங்களை கண்டறிந்து அவற்றை புகைப்படத்துடன் வெளியிட்டார். மேலும் அந்த ஓவியங்கள் குறித்து அவர்தெரிவித்துள்ளதாவது:

நான் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பாறை ஓவியங்களைப் பார்த்த பின்பு வரலாறுகள் புதைந்து கிடக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏதேனும் பாறையைப் பார்க்கும்போதெல்லாம் கண்கள் அதே போன்ற ஓவியங்களைத் தேடத் தொடங்கின. அதேபோல சித்தன்ன வாசலிலும் இதுவரை அறியப்படாத ஓவியங்கள் இருப்பதைக் கண்டபோது என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.

சித்தன்ன வாசல் புதுக்கோட்டையிலிருந்து ஏறத்தாழ 15 கி.மீ. தொலைவில் உள்ளது. சித்தன்ன வாசல் நுழைவாயிலின் இருபுறமும் பெருங்கற்கால (கி.மு.1500 - கி.பி. 500) கல்திட்டைகள், கல் பதுக்கைகள், கல்கிடை, கல்குவை, புதைகுழிகள் எனத் தொல்லியல் சின்னங்கள் காணப்படுகின்றன. தற்போது சித்தன்ன வாசல் நுழைவாயில் வரவேற்பு வளைவு தமிழக அரசால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. படகுக் குழாம், சிறுவர் பூங்கா, இயற்பியல் தத்துவப் பூங்கா, சிற்பக்கூடம், இசை நீரூற்று, தமிழன்னை சிலை ஆகியன சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பார்வைக்கும் பயன்பாட்டிற்கும் கொண்டுவரப்பட்டுள்ளன.

அறிவர் கோயில் ஓவியங்கள்

சித்தன்ன வாசல் பூங்காவைத் தாண்டிச் சென்றால் வடக்குப் பாறையின் மேற்குப் பக்கத்தில் அறிவர் கோயில் உள்ளது. இது குடைவரையாக அமைந்துள்ளது. அறிவர் கோயில் ஓவியங்களே உலகப் புகழ் பெற்ற சித்தன்ன வாசல் ஓவியங்களாக இதுவரை அறியப்பட்டு வந்துள்ளன.

அறிவர் கோயிலில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் முறையில் அமைந்தவை என்பர். கருங்கல் பரப்பைக் கொத்திப் பொலிவு செய்து சமப்படுத்தப்பட்டுள்ளது. பின்பு சுண்ணாம்புக் காரையால் மெழுகி வழுவழுப்பாகத் தேய்த்து வெள்ளைச் சுண்ணச் சாந்து பூசி அதன் மீது கண்கவர் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியங்களுக்கான வண்ணங்கள் இயற்கைப் பொருள்களில் இருந்து பெறப்பட்டவை என்பர்.

இளங்கௌதமன் என்னும் சமண முனிவரால் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லப பாண்டியன் காலத்தில் இவை புதுப்பிக்கப்பட்டதாகக் கல்வெட்டு உள்ளது. இதன் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு என்பர். எனவே புதுப்பிக்கப்பட்டதற்கு முன்பு இருந்த மூல ஓவியத்தின் காலம் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் முந்தியது எனக் கூற வேண்டும்.

ஏழடிப்பட்டம் குகை

சித்தன்ன வாசல் மலையின் கிழக்குப் பக்கம் உள்ளது ஏழடிப்பட்டம் குகை. (படம் 3) இந்த குகைக்குப் பாறையின் குறுக்கே மேற்கிலிருந்து கிழக்காக ஏறி இறங்கி வடக்கு நோக்கிச் செல்ல வேண்டும். (படம் 1,2) ஏழடிப்பட்டம் குகையின் கீழ்ப்பகுதியில் 17 இருக்கைகள் வழுவழுப்பாக அமைக்கப்பட்டுள்ளன. இருக்கைகளின் ஒருமுனையில் சற்று மேடாக உயர்த்தப்பட்டுள்ளது. இங்குள்ள பிராமி எழுத்துகள் கி.மு. 2 - 3 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியைச் சேர்ந்தவை என்பர். கி.பி. 10ஆம் நூற்றாண்டு வரை சமண முனிவர்கள் இங்குத் தங்கி இருந்ததாகக் கூறுவர். இருக்கையைப் படுக்கை எனவும் சொல்வது உண்டு.

இதுவரை அறியப்படாத குகை ஓவியங்கள்

இதுவரை இந்த இருக்கைகள் மற்றும் கல்வெட்டுகள் மட்டுமே பலராலும் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த இருக்கைகளின் மேல் விதானத்தில் ஓவியங்கள் இருப்பது யார் பார்வைக்கும் தென்படவில்லை. ஓவியங்கள் மங்கிய நிலையில் இருப்பதே அதற்குக் காரணம்.

ஏழடிப்பட்டம் சமணத் துறவிகளின் இருக்கையாக மட்டுமல்ல; ஓவியங்களின் இருப்பிடமாகவும் இருந்துள்ளது. நான்கு வகையான ஓவியங்கள் இங்கு வரையப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிகிறது. பிரிப்புப் பட்டை ஓவியம், புள்ளி ஓவியம், கோண ஓவியம், சக்கர ஓவியம் என்பன அவை.

பிரிப்புப் பட்டை ஓவியம்

ஒவ்வொரு இருக்கைக்கும் இடையில் தரைத்தளத்தில் பிரிப்பு இடைவெளிகள் உள்ளன. அதுபோலவே இருக்கைகளின் நேர்மேல் விதானத்திலும் பிரிப்புப் பட்டை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இருக்கைகளின் எல்லைகளை வரையறுப்பது போல இங்கு பலவண்ணப் பட்டை ஓவியங்கள் உள்ளன.(படம் 4) இவை பட்டுக் கம்பளம் அல்லது ஜமுக்காள முனைகளின் வண்ணக் கரைகளை நினைவுபடுத்துவனவாக உள்ளன.(படம் 5) இரவில் வெளிச்சம் தருவதற்காகவோ அதிகக் குளிர் மற்றும் வெப்பத்தைத் தடுப்பதற்காகவோ விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவோ உடல்நலம் பேணுவதற் காகவோ இவ்வாறு மேல்விதானத்தில் வண்ணப் பட்டைகள் வரையப்பட்டிருக்கலாம். வானவில்லின் வடிவத்தை நினைவுபடுத்தும் இந்தப் பிரிப்புப் பட்டைகளுக்கு இடையிலும் ஓவியங்கள் வரையப்பட்ட சுவடுகள் உள்ளன.(படம் 6) கம்பித் தடுப்பு இருப்பதால் உள்ளே அருகில் சென்று பார்க்க இயலவில்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 06, 2014 4:58 am

புள்ளி ஓவியம் அல்லது ஓவியக் கம்பளம்

இங்குள்ள இருக்கைக்கு மேல்விதானத்தில் புள்ளிகளால் ஆன ஓவியம் தென்படுகிறது. இது சமணரின் ஸ்வஸ்திகம் என்னும் பிறவிச் சக்கரத்தோடு தொடர்புடையதாக இருக்கலாம். அல்லது அறிவர் கோவில் அர்த்த மண்டபத்தின் மேற்கூரையில் உள்ள புள்ளிகள் இடையே பூக்கள் வரையப்பட்ட ஓவியக் கம்பளம் போன்றதாக இருந்திருக்க வேண்டும். இதன்மீது எழுதப்பட்டுள்ளதால் தெளிவற்றுக் காணப்படுகிறது.
 
கோண ஓவியம்
 
குகையின் இடைப்பகுதியில் பார்ப்பதற்கு மனித உருவம் போலவும் கோணங்கள் இணைந்தது போலவும் ஓர் ஓவியம் உள்ளது. இதன்மீதும் ஓவியத்தை மறைக்குமாறு யாரோ கிறுக்கி வைத்திருக்கிறார்கள். இது சமண சமயத்தின் ஏதோவொரு கொள்கையைச் சுட்டுவதாக இருக்கக் கூடும்.
 
தாமரை வடிவிலான சக்கர ஓவியம் அல்லது ஓவியச் சக்கரம்
 
கடைசி இருக்கைப் பகுதியில் வட்டமாக அமைந்த சக்கர ஓவியங்கள் பல உள்ளன. ஒன்று மட்டும் மிகத் தெளிவாக அடர்த்தியான செந்நிறத்தில் அமைந்துள்ளது.(படம் 7) அறிவர் கோவில் கர்ப்பக்கிரக விதானத்தில் உள்ள தர்மச் சக்கரம் போல உள்ளது இது. கூர்ந்து நோக்கினால் இதில் பல தாமரை அடுக்குகள் தெரியவருகின்றன.
 
பிற குகைகள்

ஏழடிப்பட்டம் குகைக்குக் கீழிறங்கும் வழிக்குத் தென்புறம் செல்லும் ஒற்றையடிப் பாதையில் சென்றால் முதலையின் வாயைப் பிளந்து வைத்தது போல ஒரு குகையும் இதிலிருந்து சற்று மேல்நோக்கிச் சென்றால் ஒரு சாய்தளக் குகையும் வருகின்றன.(படம் 15,16) இரண்டு குகைகளிலும் ஓவியங்கள் வரையப்பட்டதற்கான அடையாளங்கள் உள்ளன.(படம் 17) ஏழடிப்பட்டம், முதலைவாய்க் குகை, சாய்தளக் குகை ஆகியவை மட்டுமல்லாது வேறு பல குகைகளும் சித்தன்ன வாசலில் இருந்திருப்பதாக, இருப்பதாகத் தெரிகிறது. இவற்றிலும் ஓவியங்கள் இருக்கக் கூடும்.

ஓவியம் தீட்டும் முறை

ஏழடிப்பட்டம் குகை, முதலை வாய்க் குகை, சாய்தளக் குகை ஆகியவற்றில் என்னால் கண்டறியப்பட்டுள்ள ஓவியச் சுவடுகள் அறிவர் கோயிலில் உள்ள ஓவியங்களின் சாயல் கொண்டவையே. ஓவியப் பாணியும் அதே முறையில் அமைந்ததுதான். காரைச் சுதையைப் பூசி அதன்மேல் வண்ணங்களைக் கொண்டு ஓவியம் தீட்டும் முறை இங்கும் பின்பற்றப்பட்டுள்ளது.(படம் 8) முதலாவது அடுக்கான காரை பெயர்ந்து விழுந்தபின் வெண்சுதை மீது பாறையால் ஈர்த்துக் கொள்ளப்பட்ட வண்ணச் சாந்தின் நிறம்  மட்டும் ஒட்டிக்கொண்டுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 06, 2014 4:59 am

வண்ணங்கள்

ஏழடிப்பட்டம் குகையில் உள்ளவை ஒரு வண்ண ஓவியங்களாக இல்லாமல் பல வண்ண ஓவியங்களாக உள்ளன. சிவப்பு, மஞ்சள் வண்ணங்கள் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. காவிக் கற்கள், தாவரங்களின் சாறு முதலானவற்றில் இருந்து வண்ணங்கள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

தாமரைகளே மிகுதியாக வரையப்பட்டுள்ளன. விலங்கு உருவங்களோ மனித உருவங்களோ வரையப்பட்டதற்கான அடையாளங்கள் இல்லை. அறிவர் கோயில் ஓவியங்கள் அளவிற்கு நுணுக்கமான வேலைப்பாடுகளைக் காண்பதற்கில்லை. எனவே, இவை அறிவர் கோயில் ஓவியங்களுக்குச் சற்று முந்தையது ஆகலாம். முதலாம் அடுக்கான காரை பெயர்ந்து விழுந்த நிலையில் மஞ்சள் வண்ணம் பாறையால் ஓரளவு ஈர்க்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது.(படம் 9) சிவப்பு வண்ணம் மட்டும் நன்கு ஈர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது.(படம் 10) பிற வண்ணங்களில் இளஞ்சிவப்பு(ரோஜா நிறம்) ஓரளவு தெரிகிறது.(படம் 11) மற்ற நிறங்கள் எதுவும் அறியும்படியாகத் தெளிவாக இல்லை. 
 
உதிர்ந்த ஓவியப்பூக்கள்

ஏழடிப்பட்டம் குகையில் தீட்டப்பட்ட ஓவியங்கள் அனைத்தும் சிதைந்துள்ளன. முதலாவது அடுக்கு வரை காரைபேர்ந்து அழிந்துள்ளது.(படம் 12) ஓவியங்கள் மூலிகைத் தாவரங்களின் வண்ணங்களால் தீட்டப்பட்டதால் அவற்றின் சாறு அல்லது சாந்து மட்டும் பாறையில் சிதைவுகளுடன் ஒட்டிக் கொண்டுள்ளது.(படம் 13,14)   இவ்வாறு இந்த ஓவியங்கள் சிதைந்துபோனதற்குப் பின்வரும் காரணங்களை யூகிக்கலாம்.

வண்ணங்களை நேரடியாகப் பாறையில் தீட்டாமல் காரையைப் பூசி அதன்மீது ஓவியங்கள் வரைந்ததால் காலப்போக்கில் பாறைக் கனிமங்களின் வளர்சிதை மாற்ற அசைவுகளால் காரை பெயர்ந்து விழுந்திருக்க வேண்டும். தண்ணீரைத் தெளித்து ஓவியங்களைக் காண முயன்றபோது ஈரத்தில் தொட்டாலே ஓவியச் சுதைகள் கையில் ஒட்டிக்கொண்டன. இதிலிருந்து பெருமழை பெய்தபோது தண்ணீர் விதானத்தில் வழிந்து ஓவியங்கள் ஊறி அழிந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. மழையில் ஊறியபின் வெயில் அடித்தால் காய்ந்து விடும். இவ்வாறு மழையில் ஊறும்போது புடைத்தும் வெயிலில் காயும்போது சுருங்கியும் தட்பவெப்பநிலை மாற்றத்தால் சுருங்கி விரிந்து ஓவியங்கள் உதிர்ந்து போயிருக்கலாம்.

சமண சமயத்தின் கோட்பாடுகளை - நெறிமுறைகளை விளக்குவனவாக இந்த ஓவியங்கள் இருந்ததால் வேற்று மதத்தவரின் சமயக் காழ்ப்புணர்ச்சியால் இவை அழிக்கப்பட்டிருக்கக் கூடும். பிற சமயத்தை ஆதரித்த அரசர்கள் சமண சமய ஓவியங்களான இவற்றின் அடையாளங்களை அழித்தொழிக்கும் வேலையைச் செய்திருக்கலாம்.

அறிவர் கோயில் ஓவியங்கள் பாண்டியர் காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. ஏழடிப்பட்டம் குகையில் இருந்த ஓவியங்கள் புதுப்பிக்கப்படாமலேயே விடப்பட்டுவிட்டன. அறிவர் கோயில் ஓவியங்களில் சமண சமயத்தின் நேரடித் தன்மை குறைவாக உள்ளது. யானை, மீன், அன்னப் பறவை, தாமரைத் தடாகம், மான், நடன மாது, அரசன், அரசி எனப் பொதுத் தன்மை மிகுந்த ஓவியங்களாக அவை உள்ளன. அல்லது அவ்வாறு ஆக்கப்பட்டுவிட்டன. எனவே அவை புதுப்பிக்கப்பட்டன. ஏழடிப்பட்டம் குகையில் சமண சமயமே ஆட்சி பெற்றிருந்தது. சமண சமயத்தின் தத்துவ விளக்கங்களே ஓவியங்களாக இருந்ததால் இவற்றைப் புதுப்பிக்க யாரும் முன்வரவில்லை எனவும் கருதலாம்.
 
காலம்

அறிவர் கோயில் குடைவரையாக அமைக்கப்பட்டது. இதன் ஓவியங்கள் இளங்கௌதமனால் புதுப்பிக்கப்பட்ட காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு. எனவே அவற்றுக்குரிய மூல ஓவியங்களின் காலம் அதற்கும் முந்தையது ஆகிறது. ஏழடிப்பட்டம் குகை இயற்கையாய் அமைந்தது. இங்குள்ள கல்வெட்டுகளின் காலம் கி.பி. 1, 3, 5, 7, 10 ஆகிய நூற்றாண்டுகளில் அமைகிறது.

இயற்கை என்பது செயற்கைக்கு முன்னர் தானே. இதன்படி  ஏழடிப்பட்டம் ஓவியங்கள் அறிவர் கோயில் ஓவியத்திற்கு முந்தியவை ஆகின்றன. ஆக இவை ஒன்பதாம் நூற்றாண்டிற்கும் முந்தியவை. இக்கருத்துடன் கல்வெட்டுகளின் காலத்தை ஒப்புநோக்க ஏழடிப்பட்டம் ஓவியங்களின் காலம் கி.பி. 5 - 7 ஆம் நூற்றாண்டு என அறுதியிடலாம். ஏழடிப்பட்டம் ஓவியங்கள் வரையப்பட்ட பின்பு அவற்றின் இருப்பும் அழிப்பும் அறிவர் கோயிலைக் குடைந்து ஓரளவு பாதுகாப்பான இடத்தில் ஓவியம் வரையத் தூண்டியிருக்க வேண்டும்.

ஏழடிப்பட்டம் குகையின் உருக்குலைந்த ஓவியப் பிரதிகள் தம் இருப்பை இன்னும் முற்றிலும் இழந்துவிடவில்லை. இந்தக் குகைக்குக் கம்பித் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளதால் இவை இன்னும் முழுவதுமாக அழிந்துவிடாமல் உள்ளன எனலாம். இதற்குப் பாதுகாப்பு ஏற்பாடு செய்த தொல்லியல் துறைக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.

எப்படி இருப்பினும் சித்தன்ன வாசல் ஓவியம் என்றால் அறிவர் கோயில் ஓவியம் மட்டுமல்ல; ஏழடிப்பட்டம் குகை ஓவியங்களையும் இனி கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏழடிப்பட்டம் சமணர் இருக்கைக்கு மட்டுமல்ல; ஓவியங்களுக்கும் புகழ்பெற்றது ஆகும். தொல்லியல் துறையானது தொழில்நுட்ப நிபுணர்கள், சமணம் சார்ந்த ஆய்வாளர்கள்  மற்றும் தேர்ந்த ஓவியக் கலைஞர்களைக் கொண்டு மேலும் ஆய்வு செய்து இவற்றின் மூல ஓவியங்களை மீட்டுருவாக்கம் செய்ய முன்வர வேண்டும் என்பதே எனது ஆசை. இவ்வாறு புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் புதுக்கோட்டை அருகே லேணா விளக்கில் உள்ள மௌண்ட்சீயோன் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரியில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொறியியல் கல்லூரி இணைந்து  7 மாவட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு 3 நாட்கள் நடத்தும் ஆளுமைவளர்த்தல் குறித்த பயிற்சி முகாமின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் சித்தன்னவாசலில் முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் புதியதாக கண்டுபிடித்த ஓவியங்கள் கண்காட்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஞானாலயா திரு பி. கிருட்டிணமூர்த்தி கலந்துகொண்டு புதிய ஓவியக் கண்டுபிடிப்பின் கண்காட்சியை திறந்து வைத்தார்.

[thanks] தொகுப்பு - இரா.பகத்சிங் @ நக்கீரன்[/thanks]

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 06, 2014 11:58 am

சித்தன்னவாசலில் இதுவரை அறியப்படாத ஏழடிப்பட்டம் குகை ஓவியங்கள் NZSjBj8MQKSySZHK7BQU+sithananavasaldrawing

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக