ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

Top posting users this week
heezulia
மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_m10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10 
ayyasamy ram
மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_m10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10 
mohamed nizamudeen
மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_m10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10 
mini
மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_m10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாத்தி யோசி... மாத்தி பேசு...! இப்படி நடந்தா எப்படியிருக்கும்?

2 posters

Go down

மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Empty மாத்தி யோசி... மாத்தி பேசு...! இப்படி நடந்தா எப்படியிருக்கும்?

Post by soplangi Thu Apr 03, 2014 11:41 am

ஏங்க, எத்தனை நாட்களுக்கு தான் கருணாநிதியை, ஜெயலலிதா விமர்சித்து பேசுவதையும்; ஜெயலலிதாவை கருணாநிதி விமர்சித்து பேசுவதையும் கேட்பது, படிப்பது?

கொஞ்சம் மாறுதலுக்காக, 'ஜெயலலிதாவுக்கு கருணாநிதியும், கருணாநிதிக்கு ஜெயலலிதாவும் ஓட்டுக் கேட்டால் எப்படி இருக்கும்' என்ற விபரீத கற்பனையால் விளைந்தது இது.

கருணாநிதி:

உடன்பிறப்பே... இனிமேல் உன்னை, 'ரத்தத்தின் ரத்தமே' என, அழைக்கப் போகிறேன். அதிர்ச்சி அடையாதே. பெரியாரின் பாசறையில் நான் பயின்ற காலத்தில், அண்ணா எனக்கு கற்றுக்கொடுத்த பாடம் இது. எதிரி என்று எவருமே இல்லை. நண்பன் என, யாரும் இல்லை. கல்லக்குடி போராட்டத்தில், தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தபோது, வராத ரயிலை ஓட்டாத டிரைவரையே நண்பனாக ஏற்றுக்கொண்டவன் நான்.

அப்படிப்பட்ட நான், செல்வி ஜெயலலிதா அம்மையாரை, அன்பு சகோதரியாக ஏற்றுக் கொள்ள மாட்டேனா? இனிமேல் எனக்கு அவர் தான், 'உடன் பிறவா சகோதரி'.

'ஏன் இந்த மாற்றம்? என்ன நடந்தது இவருக்கு' என, நீ குழம்பி இருப்பாய்.

குழம்ப வேண்டாம். என்னைப் பற்றி தான் உனக்கு தெரியுமே? எந்தக் கொள்கையையும் நான் நிரந்தரமாக நீட்டிப்பதில்லை. சட்டையைப் போல, 'சகட்டுமேனிக்கு' மாற்றிக் கொள்வேன். இந்தி எதிர்ப்புக் கொள்கை எப்போதோ பிந்தி விட்டது. மாநில சுயாட்சி கோஷம், பல ஆண்டுகளுக்கு முன்பே மறந்து போயிற்று. சமூக சீர்திருத்தம் சலிப்பை தருகிறது. 'ஏழைப் பங்காளன்' என்ற வார்த்தையே ஏளனமாக இருக்கிறது. சமூக நீதி சறுக்கி விட்டது. கால ஓட்டத்தில், இப்படி எத்தனையோ கொள்கை மாற்றங்கள் வந்து இருக்கும்போது, சகோதரி ஜெயலலிதாவை ஆதரித்து நான் பிரசாரம் செய்வதில் என்ன தவறு இருக்கிறது?

எனவே, வருகிற பொதுத்தேர்தலில், இரட்டை இலை சின்னத்தில், அழுத்தமாக வாக்களித்து, அ.தி.மு.க.,வை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்.

ஜெயலலிதா:

எம்ஜிஆரின், 'உடன் பிறப்புகளே'! நமக்கு 'ரத்தத்தின் ரத்தங்கள்' இனிமேல் தேவையில்லை. உடன்பிறப்புகள் மட்டுமே, உடன் இருக்க வேண்டும்.

உங்கள் முன் நான் நிற்பது எதற்கு தெரியுமா? உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவர், தன்மான சிங்கம், ஆர்ப்பரிக்கும் அடலேறு, தமிழ்க் குடிதாங்கி, இனமான போராளி, நெஞ்சுக்கு நீதி தந்த கோமான், தொல்காப்பிய பூங்காவை தோற்றுவித்த வாழும் இலக்கணம், டாக்டர் கலைஞர், அன்பு அண்ணன் கருணாநிதிக்காக வாக்கு கேட்டு வந்துள்ளேன். என்னை, 'உடன் பிறவா சகோதரி'யாக ஏற்றுக்கொண்ட, அண்ணன் கலைஞருக்கு முதலில் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

திடீரென கொள்கையை ஏன் மாற்றிக்கொண்டேன் என, பலருக்கும் புரியாத புதிராக இருக்கிறது. நான் ஏன் மாறக் கூடாது? மாறுவது எனக்கு புதிதா என்ன? கடைசி வரை கூடவே வைத்திருப்பார் என, நம்பிக் கொண்டு இருந்த 'காம்ரேட்'களை கழற்றி விட்டு, அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லையா?

சென்ற சட்டசபை தேர்தலில் கூட்டணி வைத்து, வாக்குகளையும் பெற்று, ஆட்சியை யும் பிடித்த பிறகு, கறிவேப்பிலையை, 'கடாசுவது' போல், தே.மு.தி.,க.,வை தொலைக்கவில்லையா? இலங்கைப் பிரச்னையில், 'தடால்' என, தடம் புரளவில்லையா? கார்டனைவிட்டு கழற்றிவிட்ட, 'உடன் பிறவா சகோதரி'யை, மீண்டும் மீண்டும் சேர்த்து, சொந்தம் கொண்டாடவில்லையா? கட்சியை நிறுவி, ஆட்சியையும் பிடித்து, மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்த, எம்.ஜி.ஆர்., பெயரையே இருட்டடிப்பு செய்யவில்லையா? இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். எனவே, வருகிற பொதுத்தேர்தலில் உங்கள் பொன்னான வாக்குகளை, 'உதயசூரியன்' சின்னத்தில் வாக்களித்து, தி.மு.க., வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். செய்வீர்களா...?

(உடனே கூட்டத்தினரும், 'செய்வோம், செய்வோம்' என, பதில் முழக்கமிட்டதும், ஹெலிகாப்டரில் ஏறி கோபாலபுரம் நோக்கி ஜெயலலிதா புறப்பட்டார்)

-- எம்.எஸ்.தண்டபாணி , மதுரை.


Last edited by soplangi on Thu Apr 03, 2014 11:51 am; edited 1 time in total
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Empty Re: மாத்தி யோசி... மாத்தி பேசு...! இப்படி நடந்தா எப்படியிருக்கும்?

Post by M.M.SENTHIL Thu Apr 03, 2014 11:49 am

ஏம்பா இப்படி அநியாயத்துக்கு மாற்றி யோசிக்கிறீங்க.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum