ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

Top posting users this week
ayyasamy ram
 ஆண்மைக் குறைவை போக்கும் அருகம்புல்! Poll_c10 ஆண்மைக் குறைவை போக்கும் அருகம்புல்! Poll_m10 ஆண்மைக் குறைவை போக்கும் அருகம்புல்! Poll_c10 
mohamed nizamudeen
 ஆண்மைக் குறைவை போக்கும் அருகம்புல்! Poll_c10 ஆண்மைக் குறைவை போக்கும் அருகம்புல்! Poll_m10 ஆண்மைக் குறைவை போக்கும் அருகம்புல்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்மைக் குறைவை போக்கும் அருகம்புல்!

3 posters

Go down

 ஆண்மைக் குறைவை போக்கும் அருகம்புல்! Empty ஆண்மைக் குறைவை போக்கும் அருகம்புல்!

Post by சிவா Thu Apr 03, 2014 3:50 am

 ஆண்மைக் குறைவை போக்கும் அருகம்புல்! 5t2W4xu4Q6ywIEvxggkH+sl1975

பலகாலமாக இயற்கையாக கிடைக்கும் மூலிகைகளை மருந்தாக பயன்படுத்தி நோய்களை குணப்படுத்தும் முறைகளை சித்தர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். புல்வகையை சேர்ந்த சிறிய மூலிகையான அருகம்புல் சர்வரோக நிவாரணியாக உள்ளது.

இதன் தாவரவியல் பெயர் cynodon dactylon என்பதாகும். நீர்க்கசிவு உள்ள இடங்கள், வயல் வரப்புகள் போன்ற இடங்களில் தானாக வளரும். அருகு, பதம், தூர்வை, மோகாரி ஆகிய தமிழ் பெயர்களும் அருகம்புல்லுக்கு உண்டு. இந்த தாவரம் ஏராளமான நோய்களை போக்கும் அருமருந்தாக உள்ளது .

அருகம்புல் வேர், இலை உள்பட அனைத்து பாகமும் மருத்துவ குணம் உடையவை. இதில் இருந்து பெறப்படும் ஒருவித ஆல்கலாய்ட்ஸ், வாக்ஸீனியா வைரஸ் என்ற நுண்ணுயிரியை அழிக்க வல்லது.

சிறுநீர்ப்பை கல், நீர்க்கோவை என்ற உடல் வீக்கம், மூக்கில் ரத்தக்கசிவு, குழந்தைகளுக்கான நாட்பட்ட சளித்தொல்லை, ஜலதோஷம், வயிற்று போக்கு, கண்பார்வை கோளாறுகள் மூளையில் ஏற்படும் ரத்த கசிவு போன்ற நோய்களுக்கு இது சால சிறந்தது.

உடல் எடை குறைய, கொலஸ்டிரால் குறைய, நரம்பு தளர்ச்சி நீங்க, ரத்த புற்றுநோய் குணமடைய, இருமல், வயிற்று வலி, ரத்த சோகை, மூட்டுவலி, இருதய கோளாறு, தோல் வியாதிகள் போன்ற எல்லா நோய்களுக்கும் சிறந்த மருந்து.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கவும், ரத்தத்தில் உள்ள விஷத்தன்மை வெளியேற்றுவதிலும் திறமையானது. ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு அருகம்புல் ஒரு உலக புகழ்வாய்ந்த டானிக்.

சுத்தம் செய்த அருகம் புல்லை இடித்து பிழிந்து சாற்றை ஒரு டம்ளர் தினமும் காலையில் குடித்து வர சிறுநீர் நன்றாக கழியும். உடல் வீக்கம் குறையும். வயிற்றில் தங்கியுள்ள நஞ்சுகள் நீங்குகிறது. ரத்தம் சுத்தமடைகிறது.

அருகம் புல் சாறு தேங்காய் எண்ணெய் இவைகளை சம அளவு சேர்த்து தைலமாக காய்ச்சி ஆறாத ரணங்கள், படை ரிங்கு, வறட்டுத்தோல் போன்ற தோல் நோய்களுக்கு தொட்டு போட அவை விரைவில் குணமாகும்.

வேரை நசுக்கி தண்ணீரில் கரைத்து வடிகட்டி குடித்து வர பெண்களுக்கு ஏற்படும் சூதக கசிவு நீங்குகிறது. மனச்சோர்வு, தூக்கமின்மை, வலிப்பு ஆகியவற்றுக்கும் அருகம்புல் சாறு சிறந்த மருந்தாகிறது.

தேவையான அளவு அருகம்புல் சேகரித்து சிறிதளவு மஞ்சள் சேர்த்து பசையாக அரைத்து உடலில் தேய்க்க வேண்டும். ஒரு மணி நேரம் ஊறிய பின்னர் குளிக்க வேண்டும். உடல் அரிப்பு குணமாக இதனை தொடர்ந்து செய்து வரலாம்.

அருகம்புல் ஒரு கைப்பிடி அளவு அரைத்து 200 மில்லி லிட்டர் காய்ச்சாத ஆட்டுப்பாலில் கலந்து காலை வேளையில் மட்டும் குடித்து வரவேண்டும். இரண்டு மூன்று வாரங்கள் இவ்வாறு செய்தால் ரத்த மூலம் கட்டுப்படும்.

தொடர்ந்து ஓரிரு மாதங்கள் குடித்தால் நரம்பு தளர்ச்சி குணமாவதுடன், ஆண்மை உணர்வும் எழுச்சி பெறும். ஆண்மை குறைவிற்கு நிரந்தர தீர்வாக அருகம்புல் உள்ளது. ஹோமியோபதிக்கு இதில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து அமீபியாஸிஸ் மற்றும் சீத பேதிக்கு தலைசிறந்த மருந்தாக பயன்படுகிறது.

இதன் சாறை கண்ணில் ஊற்றினால் கண்நோய் மற்றும் கண் புகைச்சல் மாறும். இப்புல்லை வெட்டி தலையில் வைத்து கட்டிக்கொண்டால் கபாலச்சூடு தணியும்.

அருகம்புல், கடுக்காய் தோல், இந்துப்பூ, கிராந்தி தகரம், கஞ்சாங்கோரை போன்றவற்றை சம அளவில் எடுத்து இவற்றோடு மோர் விட்டு அரைத்து பாதித்த இடங்களில் பூசி வர படர்தாமரை மறையும். உடலின் சூட்டை குறைத்து குளிர்ச்சி உண்டாக்கும்.

அருகம்புல், கணுபோக்கி இரண்டையும் பத்து கிராம் அளவு எடுத்து அதோடு வெண்மிளகு இரண்டு கிராம் சேர்த்து நீர் விட்டு காய்ச்சி வடிக்க வேண்டும். அந்த நீரோடு 2 கிராம் வெண்ணெய் சேர்த்து உட்கொண்டு வர மருந்துகளின் காரணமாக உண்டாகும் விஷம் முறிந்து விடும்.

நீரடைப்பு, வெட்டை, நீர்த்தாரை எரிச்சல் இருந்தால் அவை நீங்கும். இரவில் ஒரு துளசி இலையுடன் அருகம்புல்லையும் கொதிநீரில் போட்டுவிட வேண்டும். பின்னர் மூடி வைத்து அந்த நீரை குழந்தைகளுக்கு தொடர்ந்து கொடுத்து வர சளித்தொல்லை மெதுவாக குறையும். மேலும் சீதள தொல்லையும் நீங்கும்.


Last edited by சிவா on Thu Apr 03, 2014 1:43 pm; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 ஆண்மைக் குறைவை போக்கும் அருகம்புல்! Empty Re: ஆண்மைக் குறைவை போக்கும் அருகம்புல்!

Post by ayyasamy ram Thu Apr 03, 2014 5:39 am

காய்க்காத ஆட்டுப்பாலில்...காய்ச்சாத
என திருத்தலாம்...
-
காந்தியடிகள் ஆட்டின் பாலை விரும்பி உண்டு,
நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார் ...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ஆண்மைக் குறைவை போக்கும் அருகம்புல்! Empty Re: ஆண்மைக் குறைவை போக்கும் அருகம்புல்!

Post by தமிழ்நேசன்1981 Thu Apr 03, 2014 7:13 am

 ஆண்மைக் குறைவை போக்கும் அருகம்புல்! 103459460 
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

 ஆண்மைக் குறைவை போக்கும் அருகம்புல்! Empty ஆண்மைக் குறைவை போக்கும் அருகம்புல்!

Post by சிவா Thu Apr 03, 2014 1:43 pm

ayyasamy ram wrote:[link="/t109095-topic#1056116"]காய்க்காத ஆட்டுப்பாலில்...காய்ச்சாத
என திருத்தலாம்...
-
காந்தியடிகள் ஆட்டின் பாலை விரும்பி உண்டு,
நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார் ...
-

நன்றி, திருத்திவிட்டேன்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 ஆண்மைக் குறைவை போக்கும் அருகம்புல்! Empty Re: ஆண்மைக் குறைவை போக்கும் அருகம்புல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum