புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_c10 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_m10 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_c10 
68 Posts - 41%
heezulia
 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_c10 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_m10 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_c10 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_m10 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_c10 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_m10 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_c10 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_m10 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_c10 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_m10 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_c10 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_m10 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_c10 
2 Posts - 1%
Guna.D
 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_c10 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_m10 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_c10 
1 Post - 1%
manikavi
 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_c10 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_m10 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_c10 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_m10 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_c10 
319 Posts - 50%
heezulia
 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_c10 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_m10 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_c10 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_m10 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_c10 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_m10 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_c10 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_m10 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_c10 
21 Posts - 3%
prajai
 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_c10 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_m10 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_c10 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_m10 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_c10 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_m10 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_c10 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_m10 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_c10 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_m10 தேர்தல்..... கட்சிகளின் 'வலை' Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்தல்..... கட்சிகளின் 'வலை'


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 06, 2014 4:46 pm


சுதந்திர இந்தியா தனது 16–வது பாராளுமன்ற தேர்தலை சந்திக்க முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதுவரை நாடு கண்ட 15 பொதுத்தேர்தல்களை விட இந்தத் தேர்தல் கொஞ்சம் வித்தியாசமானது.

முன்பெல்லாம் தேர்தல் என்றால் வேட்பாளர்கள், அவர்களது ஆதரவாளர்கள், அரசியல் கட்சியினர் வீடு, வீடாக துண்டு பிரசுரங்களை வினியோகித்து ஓட்டு சேகரிப்பார்கள். எங்கு பார்த்தாலும் தேர்தல் சுவரொட்டிகள் காணப்படும். வாக்குகளை வாரி வழங்க கேட்டு மக்கள் கூடும் இடங்களில், முக்கிய சந்திப்புகளில் பேனர்களும், கட்–அவுட்களும் வைக்கப்படும்.

இன்னொரு புறம் வாகனங்களில் ஒலிபெருக்கிகளை கட்டிக்கொண்டு ‘வருகிற பாராளுமன்ற தேர்தலில் உங்கள் பொன்னான வாக்குகளை நமது வேட்பாளர் அருமை அண்ணன்... உங்கள் வீட்டு பிள்ளை .....க்கு .... சின்னத்தில் முத்திரையிட்டு அமோக வெற்றி பெறச்செய்யுங்கள்’ என பிரசாரம் பட்டையை கிளப்பும். நாளேடுகளில், பிற பத்திரிகைகளில் தேர்தல் விளம்பரங்கள் நிறைந்திருக்கும். இப்படி–

புற ஊடகங்கள்...

அச்சு ஊடகங்கள்...

மின்னணு ஊடகங்கள்....


–இந்த வரிசையில் புதிதாக சேர்ந்திருக்கிறது

சமூக ஊடகங்கள்!

இந்த தேர்தலில் வேட்பாளர்கள், தலைவர்கள், அரசியல் கட்சி முன்னணியினர் அனைவருமே பேஸ் புக், டுவிட்டர், யு டியூப், பிளாக்குகள் உள்ளிட்ட இந்த நான்காவது ஊடகங்களுக்கு முன்னுரிமை அளிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

சமூக ஊடகங்கள் என்னும் இணைய தளங்களும், வலைத்தளங்களும் ஓசைப்படாமல், வாக்காளர்கள் குறிப்பாக இளைய தலைமுறை வாக்காளர்கள் இடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்கின்றன.

இதற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா? எந்தவொரு தகவலும், செய்தியும், கருத்தும், படமும், சிந்தனையும் கண நேரத்தில் சமூக ஊடகங்கள் வாயிலாக போய்ச்சேர்ந்து, தாக்கத்தை ஏற்படுத்துகிறது. விவாதங்களை உருவாக்குகிறது. சமயங்களில் தீர்வையும் காண செய்கிறது.

இந்தியாவை பொறுத்தமட்டில் இணையதளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூன் நிலவரப்படி இந்தியாவில் இணையதளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 19 கோடியே 30 லட்சம் பேர். இந்த ஆண்டு ஜூன் மாதம் இது 24 கோடியே 30 லட்சத்தை எட்டிப்பிடிக்கும் என்பது எதிர்பார்ப்பு.

இந்த ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி நாட்டில் 10 கோடி பேர் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதுதான், அரசியல்வாதிகளை அவற்றின் பக்கம் திரும்ப வைத்திருக்கிறது என்று சொல்லலாம். அதாவது ஏறத்தாழ 80 கோடி வாக்காளர்களில் சுமார் 10 கோடி பேர் சமூக ஊடகங்களை பயன்படுத்துகிறார்கள் என்றால் அது 10 சதவீத பங்களிப்பை தாண்டும்.

இந்தியாவில் 9 கோடியே 30 லட்சம் பேர் பேஸ் புக் சமூக ஊடகத்தில் பதிவு செய்து கொண்டு பின்பற்றி வருகிறார்கள். இதேபோன்று டுவிட்டரில் 3 கோடியே 30 லட்சம் பேர் இருக்கின்றனர். சமூக ஊடகங்களில் இவ்விரண்டும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இவற்றை தொடர்ந்து பிளாக்குகள், வாட்ஸ் அப், யு டியுப் போன்ற சமூக வலைத்தளங்கள் வருகின்றன.

பல்வேறு பெரிய நிறுவனங்கள், முன்னணி அரசியல் கட்சிகள் ஆகியவற்றுக்கு இணையவழி மார்க்கெட்டிங் நிறுவனமாகத் திகழ்கிற பின்ஸ்டார்ம் டெக்னாலஜிஸ் நிறுவனர் மகேஷ் மூர்த்தி, ‘‘சமூக ஊடகங்களை பின்பற்றுகிறவர்கள் அதன் தாக்கத்தை குடும்பங்களில் ஏற்படுத்துகிற ஆற்றல் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள்’’ என்கிறார். இதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால் அவரிடமிருந்து பளிச்சென்று பதில் வருகிறது.

‘‘டெல்லியில் அதுதான் நடந்தது. அப்படித்தான் டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்தது. நிறைய குழந்தைகள் அவர்களது பெற்றோரிடம், ‘நீங்கள் காங்கிரசுக்கு ஓட்டு போட வேண்டாம், ஆம் ஆத்மிக்கு ஓட்டு போடுங்கள்’ என்றெல்லாம் கூறிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன’’ என்கிறார். சமூக ஊடகங்கள், டி.வி. ஆகிய இரண்டின் வழியே, ஒருவர் மூன்றுபேரையாவது தாக்கத்துக்கு உட்படுத்த முடியும் என்பது இவரது திடமான கருத்து.

டெல்லியில் ஆம்ஆத்மி பெற்ற வெற்றிக்கு, இன்றளவும் அந்த கட்சிக்கு குவிந்துவருகிற தேர்தல் நிதிக்கு பேஸ் புக், டுவிட்டர் ஆகிய இரு சமூக வலைத்தளங்கள் ஆற்றிய பங்கை அனைத்து அரசியல் கட்சிகளும் உணர்ந்து கொண்டுள்ளன.

அதன் பிரதிபலிப்பு தான் இந்த பொதுத்தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் சமூக வலைத்தளங்களின் பின்னால் சென்று கொண்டிருக்கின்றன.

ஆனால் இதில் உலகளாவிய முன்னோடி யார் என்றால்–அவர் அமெரிக்க அதிபர் ஒபாமாதான். இரண்டு முறை அவர் பெற்ற தேர்தல் வெற்றியில் மட்டுமல்லாது தேர்தல் நிதி திரட்டுவதிலும் சமூக ஊடகங்களின் பங்களிப்பு பிரமாண்டமானது.

எனவே ‘‘சமூக ஊடகங்களை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது, எத்தனை பேர் இந்த ஊடகங்களை பயன்படுத்தி வருகிறார்கள் என்று கேட்காதீர்கள். எத்தனை பேரிடம் அவர்கள் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று பாருங்கள்’’ என்று இந்த மகேஷ் மூர்த்தி கூறுவது கவனிக்கத்தக்கதாக அமைந்துள்ளது.

இந்த தேர்தலில் முதல் முறையாக ஓட்டுப்பதிவு செய்து தங்களது ஜனநாயக கடமையினை ஆற்றப்போகிற 2 கோடியே 31 லட்சத்து 61 ஆயிரம் வாக்காளர்களிடம் மட்டுமல்லாது 18–24 வயதுக் குட்பட்ட 16 கோடி வாக்காளர்களிடையே நிச்சயம் இந்த சமூக ஊடகங்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் என அனைத்து தரப்பினரும் நம்புகின்றனர்.

அரசியல் வாடையே இல்லாதவர்களைக்கூட சமூக ஊடகங்கள் அவற்றை அறிமுகம் செய்து விடுகின்றன.

உதாரணத்துக்கு, சென்னையை சேர்ந்த அணு மூலக்கூறு உயிரியல் வல்லுனர் ஸ்ரீவித்யா வெங்கடேஷ், கடந்த 2004, 2009 தேர்தல்களில் ஓட்டு போடவில்லை. ஆனால், ‘‘பேஸ் புக், யு டியூப் என் சமையலறைக்குள் அரசியலை கொண்டு வந்துவிட்டன. அதுமட்டுமல்ல, என்னை அரசியலோடு தொடர்புபடுத்திவிட்ட உணர்வை அவை தந்துள்ளன’’ என்கிறார்.

மத்தியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடிக்க பகீரதப்பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிற பாரதீய ஜனதா கட்சி, இப்படிப்பட்ட இளைய தலைமுறையினரின் நாடியை அறிந்து கடந்த சில ஆண்டுகளாகவே இந்த சமூக ஊடகங்களில் கால் பதித்து நடைபோட்டு வந்திருக்கிறது.

டெல்லியில் அசோகா ரோட்டில் அமைந்துள்ள பாரதீய ஜனதா கட்சி தலைமையகத்தில் கட்சியின் டிஜிட்டல் குழுவுக்கு தலைமை ஏற்றிருப்பவர், கார்ப்பரேட் உலகில் முன்னணி இடத்தில் இருந்த வசந்த் குப்தா. இந்த 44 வயது ‘இளைஞர்’ ஐ.ஐ.டி. தயாரிப்பு. அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.

இந்தக்குழு, பல்வேறு கிளைக்குழுக்களாக பிரிந்து சமூக ஊடகங்கள், படைப்பு கருவாக்கம், நன்கொடை வசூல் உள்ளிட்ட பல்வேறு வேலைகளை ஆளுக்கொன்றாக செய்து கொண்டிருக்கிறார்கள். கட்சியின் இணையதளம், பேஸ் புக், டுவிட்டர் ஆகியவற்றை இந்த டிஜிட்டல் குழுவினர்தான் கையாண்டு வருகின்றனர். இந்த கட்சியில் தலைவர்கள் தங்கள் சார்பில் இந்த சமூக ஊடகங்களை கையாள்வதெற்கென்று உதவியாளர்களை பணி அமர்த்தி செயல்படுகின்றனர். கட்சியின் கொள்கைகள், பிரசாரங்கள், தலைவர்களின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் பாரதீய ஜனதாவும் சரி, அதன் தலைவர்களும் சரி கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள்.

மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியும் டிஜிட்டல் டீம் ஒன்றை வைத்திருக்கிறது. மத்திய அரசுக்கு பல்வேறு ஊழல்களும் கெட்ட பெயரை வாங்கித்தந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா, ‘தி சேஞ்ச்’ என்று கூறியதுபோல, இந்த டீம் மாற்றத்துக்கான பிரதிநிதியாக ராகுல் காந்தியை மக்களிடம் நிலை நிறுத்துவதில் கூடுதல் அக்கறை காட்டுகிறது. காங்கிரசின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்துக்கு ஏறத்தாழ ஒன்றரை லட்சம் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 06, 2014 4:46 pm


ராகுல் காந்தி மேடைப்பேச்சு, பேட்டிகளின் முக்கிய அம்சங்கள் பற்றி சமூக ஊடகங்களில் பிரதிபலிக்கிற மக்களின் கருத்து என்ன, ஆதரவு எப்படி, எதிர்ப்பு எப்படி என்பதை கண்காணிக்க மட்டுமே ஆயிரத்துக்கு மேற்பட்ட தன்னார்வ தொண்டர்கள் கழுகுப்பார்வை பார்த்து வருகிறார்கள்.

காங்கிரஸ் பேஸ் புக் பக்கத்தில் செய்தி கிளிப்பிங்குகள், முக்கிய அறிவிப்புகள், ராகுல் காந்தியின் படங்கள், கருத்துக்கள் இடம் பெற தவறுவதில்லை.

சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இணையதளம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை காலாவதியானது போல காட்சி அளித்தது. இப்போதோ தேர்தலையொட்டி புத்தம்புது மெருகுடன் மக்களை நோக்கி சரத்பவாரின் பேச்சு, கருத்துக்கள், படங்களை கொண்டு செல்வதில் முக்கிய பங்கு ஆற்றுகிறது. பேஸ் புக், டுவிட்டரிலும் இந்த கட்சி முக்கிய இடம் பிடித்திருக்கிறது. தனது ஆன்லைன் செயல்பாடுகளை ‘அவுட்சோர்ஸ்’ என்றழைக்கப்படுகிற வெளியுலக சேவை நிறுவனம் மூலம் இந்த கட்சி பெறுகிறது. இணையதள ஆர்வலர்களை சென்றடைவதே எங்கள் இலக்கு என்கிறார் இந்தக் கட்சியின் எம்.எல்.ஏ. நவாப் மாலிக்.

பேஸ் புக்கில் இணைந்த 90 நாளில் இந்த கட்சிக்கு ஒரு லட்சம் ஆதரவாளர்கள் கிடைத்துள்ளனர்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல்–மந்திரியுமான மம்தா பானர்ஜி, பேஸ் புக் ஆர்வலர். அவருக்கு இதில் ஏறத்தாழ 7 லட்சம் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். பேஸ் புக் செயல்பாடுகளில் இவர் தீவிர ஆர்வம் கொண்டவர். மக்களிடம் சென்றடைவதற்கு இந்த ஊடகத்தை மம்தா சரியாக பயன்படுத்தி வருகிறார் என்றே சொல்ல வேண்டும்.

மம்தாதான் எங்கள் கட்சியின் முகம் என்கிறார், கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பிரையன். இந்த கட்சியின் இளைய தலைவர்களான அபிஷேக் பானர்ஜி, சுப்பெந்து அதிகாரி ஆகிய இருவரும் சமூக ஊடகத்தளங்களில் மிகுந்த ஊக்கமும், ஆர்வமும் கொண்டவர்கள். பிரையன் டுவிட்டர் வலைத்தளத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார்.

கட்சிக்கென்றும் பேஸ் புக், டுவிட்டர் பக்கங்கள் உண்டு. பிரையன் தலைமையில் 10 உறுப்பினர்கள் குழு இதை கவனித்துக்கொள்கிறது.

ஆந்திராவில் தெலுங்குதேசம், மராட்டியத்தில் சிவசேனா, டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிகள் சமூக ஊடகங்கள் வாயிலாக மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

அரசியல் தலைவர்கள் என்று எடுத்துக்கொண்டால் டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் பெருகிவருகிறார்கள். பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடிக்கு சுமார் 36 லட்சம் ஆதரவாளர்கள் டுவிட்டரில் உள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூருக்கு 21 லட்சம் ஆதரவாளர்களும், தேசிய மாநாடு கட்சி தலைவரும், காஷ்மீர் முதல்–மந்திரியுமான உமர் அப்துல்லாவுக்கு சுமார் 5 லட்சம் ஆதரவாளர்களும், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 15 லட்சம் ஆதரவாளர்களும் இருக்கிறார்கள்.

பா. ஜனதா மூத்த தலைவர் அருண் ஜெட்லிக்கு டுவிட்டரில் ஒன்றரை லட்சம் ஆதரவாளர்கள் இருக்கின்றனர். லாலு பிரசாத்தும் இன்றைய இளைய தலைமுறையினருடன் போட்டி போடுகிறார். டுவிட்டரில் அவருக்கு 17 ஆயிரம் ஆதரவாளர்கள் உள்ளனர்.

சமூக ஊடகங்களை கட்சிகள் எப்படி பயன்படுத்துகின்றன என்று கேட்டால், பின்ஸ்டார்ம் டெக்னாலஜிஸ் நிறுவனர் மகேஷ் மூர்த்தி சொல்கிறார்.

‘‘நவீன சாப்ட்வேர் மூலம் நாங்கள் இதைக் கணக்கிட்டுப் பார்த்தோம். அதில் தினந்தோறும் சுமார் 30 ஆயிரம் விமர்சனங்கள் வருவதை கண்டோம். இவை பாரதீய ஜனதா கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் மக்கள் சொல்வதை காது கொடுத்து கேட்கின்றன என்பது தெரிந்தது. பேசுவதில் காங்கிரஸ் அதிக நேரம் செலவு செய்கிறது. டிஜிட்டல் வகையில் பார்த்தால் காங்கிரஸ் கட்சிதான் குறைவான ஈடுபாட்டை கொண்டுள்ளது’’ என்கிறார் இவர்.

பிளாக்வொர்க்ஸ் டாட் இன் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ராஜேஷ் லால்வானி மாறுபட்ட கருத்தை கொண்டிருக்கிறார்.

அவர் சொல்கிறார். ‘‘சமூக ஊடகங்களை பொறுத்தமட்டில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் மாறுபட்ட வியூகங்களை கொண்டுள்ளன. காங்கிரஸ் கட்சியிடம் ஒருவிதமான தயக்கத்தை காண முடிகிறது. எங்கள் கணிப்புப்படி இப்போதுதான் அந்த கட்சி சமூக ஊடகத்தின் பக்கம் வந்திருக்கிறது. பாரதீய ஜனதா கட்சி அமைப்பு ரீதியில், தொண்டர்கள் படையுடன் செயல்படுகிறது. ஆம் ஆத்மி கட்சியும் அமைப்பு ரீதியில் தொண்டர்களின் பின்னணியுடன் செயல்படுகிறது. தலைவர்களை பொறுத்தவரை மற்ற அனைத்து அரசியல் தலைவர்களையும் நரேந்திரமோடி பின்னுக்கு தள்ளிவிட்டு சமூக ஊடகங்களில் அதிகமாக குறிப்பிடப்படுகிறார். இந்த தேர்தலில்தான் மக்கள் தங்கள் ஆதரவு யாருக்கு என்பதை வெளிப்படையாக தெரிவிக்கிறார்கள். ஒருவாரம் ஒருவரைப்பின்தொடர்ந்தால் போதும், அவர்கள் யாருக்கு ஓட்டுப்போட போகிறார்கள் என்பதை என்னால் கணித்து கூறி விட முடியும்’’ என்கிறார் ராஜேஷ் லால்வானி.

இப்படி சமூக ஊடகங்கள் ஏற்படுத்துகிற தாக்கங்கள், அரசியல் கட்சிகளின் ஈடுபாடுகள், தலைவர்களின் இணையவழி தொடர்புகள் குறித்து கூறிக்கொண்டே போகலாம்.

எல்லாம் சரி, இவை இந்த தேர்தலில் அப்படி என்ன தாக்கத்தை ஏற்படுத்தி விட முடியும், சமூக ஊடகங்களின் வழியாக பெறுகிற ஆதரவை ஓட்டுகளாக மாற்ற முடியும் என்கிறீர்களா? என கேட்கத்தோன்றுகிறது அல்லவா?

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஊடக கல்வி மையத்தின் தலைவர் பேராசிரியர் தீபக்குமார் கூறுகிறார் இப்படி. ‘‘வலியுறுத்தி சொல்லி மக்களை நம்ப வைக்கிற சாதனமாக சமூக ஊடகம் திகழ்கிறது. ஒருவரைப்பற்றிய இணக்கமான எண்ணத்தை உருவாக்க இந்த ஊடகம் பயன்படுகிறது. இது வீட்டுக்கு வீடு சென்று ஏற்படுத்துகிற தாக்கத்தை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இணைய வழி பிரசாரத்தின் மூலமாக நகர்ப்புறங்களை சார்ந்த நடுத்தர வர்க்க வாக்காளர்களைக் கவர முடியும். அதே நேரத்தில் கிராமப்புற மக்களிடம் இது சென்றடையாது’’.

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஊடக கல்வி மையம் நடத்திய ஒரு ஆய்வில், இளம் வாக்காளர்கள் இடையே இந்த சமூக ஊடகங்கள் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரியவந்திருக்கிறது. இந்த அமைப்பின் இயக்குனர் வசந்தி இது பற்றி கூறுகையில், ‘‘வேட்பாளர்களை பற்றிய தகவல்களை அறிவதற்காக இளைய தலைமுறையினர் இந்த புதிய ஊடகத்தை நோக்கிச் செல்கிறார்கள். ஆனால் இதை மட்டுமே அவர்கள் ஆதாரமாகக் கொள்வதில்லை. சமூக ஊடக சந்தையாளர்கள், இந்த ஊடகத்தின் வாயிலாக வெளிப்படுத்துகிற லைக்குகளும், பகிர்வுகளும் ஓட்டுகளாக மாறுமா என்று கணிக்கப்போராடுகின்றனர்’’ என்கிறார்.

மேலும், ‘‘சமூக ஊடகங்கள் தவிர்க்க இயலாத சாதனங்களாகி விட்டன. அவற்றை ஊக்குவிக்கத்தான் வேண்டும். ஆனால் அரசியல் கட்சிகளால் இவை நம்பத்தகுந்த சாதனங்களாக இன்னும் பயன்படுத்தப்படவில்லை. ஒருவர் மீது மற்றொருவர் குற்றச்சாட்டுக்களை வைப்பதற்கும், கவனிப்பதற்கும், சர்ச்சைகளை ஏற்படுத்துவதற்கும் உரிய களமாகவே பார்க்கப்படுகிறது. லைக், அன்லைக், ஷேர், டுவிட், அப்லோட், டவுன் லோட் என அரசியல் கட்சிகள் தீவிரமாகி வருவதாகத் தான் தெரிகிறது’’ என்கிறார்.

இருந்தபோதிலும், பாராளுமன்றத் தேர்தலில் சமூக ஊடகங்களில் ரூ.500 கோடி அளவுக்கு பிரசாரம் நடைபெறும் என்று எதிர்பார்ப்பு உள்ளது. இந்த சமூக ஊடகங்கள், தேர்தல் களத்தில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் குறித்து ஆய்வுத்தகவல்கள் கை வசம் இருக்கின்றன.

அவற்றின்படி, நாட்டில் மொத்தம் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் 160 தொகுதிகள் சமூக ஊடகங்களின் தாக்கத்துக்கு மிகவும் ஆட்படுபவையாக இருக்கின்றன. 67 தொகுதிகளில் சமூக ஊடகங்களின் தாக்கம் மிதமாக இருக்கும்.

இந்த தொகுதிகளில் எல்லாம் சமூக ஊடகங்களின் பக்கம் அரசியல் கட்சிகள் கவனத்தை திருப்பி, அவற்றின் பங்களிப்புடன் வெற்றிக்கனியை பறித்து ருசிக்க காத்திருக்கின்றன. நடக்கப்போவது என்ன, பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 06, 2014 4:47 pm


வியாபாரமும் களை கட்டுது

ஓட்டுகளை கவர்வதற்கு அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், அவர்களின் ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களை நோக்கி படையெடுக்கிறார்கள் என்றால், வியாபாரிகள் லாபம் சம்பாதிப்பதற்கு இவற்றை உபயோகப்படுத்துகிறார்கள்.

புளு கேப், ஸ்னேப் டீல், பிளிப்கார்ட், பிரிண்ட்வென்யூ என பல நிறுவனங்கள் இணைய வழியாக தங்கள் பொருட்களை சந்தையிட்டு அதிக லாபம் ஈட்டுகின்றன.

குறிப்பாக ஆம் ஆத்மி, பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் சார்ந்த பொருட்கள், மக்களால் விரும்பி வாங்கப்படுகின்றன. ராகுல் காந்தி, நரேந்திர மோடி போன்ற தலைவர்களின் உருவப்படங்கள் அச்சிட்ட டி.சர்ட்டுகள், நரேந்திரமோடி உருவப்படம் பொறித்த சுவர்க்கடிகாரங்கள், தண்ணீர் எடுக்க பயன்படுத்துகிற ‘மக்’குகள் மக்களின் கவனத்தை கவர்கின்றன. ஆம் ஆத்மியின் தேர்தல் சின்னமான துடைப்பத்துக்கும் மக்கள் மத்தியில் நல்ல கிராக்கி உள்ளதாம்.

தேர்தல் கமிஷன் கடிவாளம்

பாராளுமன்ற தேர்தலில் சமூக ஊடகங்கள் தாக்கத்தை ஏற்படுத்தப்போவதை தேர்தல் கமிஷனும் உணர்ந்துள்ளது. அதனால் வேட்பாளர்களுக்கு அது கடிவாளம் போட்டிருக்கிறது. வேட்பாளர்கள் தேர்தல் செலவில் சமூக ஊடகங்களுக்கான பட்ஜெட், செலவினம் பற்றிய கணக்கை பராமரித்து வர வேண்டும், அந்த கணக்கை தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டிருக்கிறது. சமூக ஊடகங்களில் இடம் பெறக்கூடிய விளம்பரங்களுக்கு முன் அனுமதி பெறவேண்டும் என்றும் தேர்தல் கமிஷன் ஆணையிட்டுள்ளது.

டுவிட்டரில் ராகுல் இல்லை

டுவிட்டர் சமூக ஊடக செயல்பாடுகளில் நரேந்திரமோடியுடன் ஒப்பிடுகையில் அரவிந்த் கெஜ்ரிவால் 33 சதவீதம் கூடுதல் ஈடுபாட்டினை கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் கெஜ்ரிவாலுடன் ஒப்பிடுகையில் மோடிக்குத்தான் டுவிட்டரில் ஆதரவாளர்கள் 50 சதவீதத்துக்கும் கூடுதலாக இருக்கிறார்கள். அப்படிப்பார்த்தால் டுவிட்டரில் மோடி அதிக ஆதரவாளர்களுடன் பலம் பொருந்தியவராக காணப்படுகிறார்.

அதிர்ச்சி தகவல் என்னவென்றால், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வமற்ற பிரதமர் வேட்பாளராக களத்தில் உள்ள ராகுல் காந்தி, டுவிட்டரை கையாளவில்லை என்பதுதான்.

[thanks] தினத்தந்தி[/thanks]

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக