புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' Poll_c10 
29 Posts - 62%
heezulia
இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' Poll_c10 
194 Posts - 73%
heezulia
இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' Poll_c10 
8 Posts - 3%
prajai
இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' Poll_c10 
3 Posts - 1%
Barushree
இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை'


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 01, 2014 7:01 am


இது அறிவுரை அல்ல. உங்களைப் போல் நானும் கற்றுக் கொண்டு வரும் புத்திக் கொள்முதல். இரவு உறங்கும் முன் நாளைய பொழுது இன்றை விட நன்றாக இருக்க வேண்டுமென்று நினைப்பேன். காலையில் ஒரு தொலைபேசி அலாரமானது அலறியது. எதிர்முனைக் கேள்விகள், அதிர்ச்சிகள், உடனே பதில் முடிவு எடுக்க முடியாத வில்லங்க விஷயங்கள், பயம், நடுக்கம்.ஆனால், அந்தத் தொலைபேசி அலாரம்தான் என்னை எழுப்பி விட்டதுமல்லாமல் உசுப்பியும் விட்டது. சூரியனுக்கு முன் சுறுசுறுப்புடன் உழைக்கத் தொடங்கினேன்.

நான் ஏதாவது திரைப்படம் பார்க்கும்போது ஒரு முடிவுடன் செல்வேன். இது நான் பார்க்க வேண்டிய படம். நான் இயக்க வேண்டிய, நடிக்க வேண்டிய படம் வேறு. என் கனவுகள் வேறு, இப்போதைய பிழைப்பு வேறு.

முன்பெல்லாம் யாரைச் சந்தித்தாலும் அவரிடமுள்ள நல்ல விஷயங்கள், திறமைகள் ஆகியவற்றைக் கவனிப்பதோடு எனக்கு உடன்படாத குணாதிசயங்கள் இருந்தால் அதைக் கூர்ந்து கவனித்து அதைப் பற்றியே சிந்தித்து, அவரை விட நான் நல்லவன் என்ற தம் பட்டம் அடித்துப் பல நேரங்களை வீணடித்துள்ளேன். தற்போதைய புத்திக் கொள்முதலால் இப்போதைக்கு என் நம்பிக்கை நூறு சதவீதம் நல்லவனாக யாருமில்லை, நானுமில்லை, எவரும் இருக்க முடியாது.

எதிர்பார்ப்புகள் தான் நம் தினசரி எதிரி. எதிர்பார்ப்பு இல்லையென்றால் நம் சந்தோஷப்பட்டியல் நீண்டு கொண்டே போகும். பிரச்சினையின் அளவை வைத்துதான் வெற்றி! வெற்றி பெரிதாக வரவேண்டுமென்று ஆசைப்படும் நாம்...பிரச்சினை சிறியதாக இருந்தாலே சங்கடப் படுவது எந்தவிதத்தில் நியாயம்© பிரச்சினை இல்லாத மனிதன் இறந்தவன் ஆகிறான். நாம் அதற்காகவா ஆசைப்படுகிறோம் ! பிரச்சினைகளைப் பட்டியல் போடுங்கள். தீரும் பிரச்சினை தீராதப் பிரச்சினை என்று பிரித்துப் பாருங்கள். உங்களுக்கே சிரிப்பு வரும். அதே போல் உங்களுக்கு வந்திருக்கும் பிரச்சினை இது வரை உலகிலேயே யாருக்கும் வந்ததில்லையா© என்று யோசித்துப் பாருங்கள். பிரச்சினையோடு போரிடத் தொடங்கி விடுவீர்கள்.

வழக்காடு மன்றத்தில் வாதம் நடப்பதுபோல். நம் மனதுக்குள்ளும் வாதம்- மன நீதிமன்றத்திற்கு மரியாதை கொடுத்தால் நிச்சயம் வாழ்க்கையில் வழுக்கலே இருக்காது. முகம் காட்டும் கண்ணாடி முன் நம் அழகை சரி செய்வது போல் அகம் காட்டும் கண்ணாடி இருப்பதாக நினைத்து நம் மன அழுக்கை அகற்றுவோம்.

இன்று நேற்று அல்ல- உங்களை விட நூறு மடங்கு நல்ல இதயம் இல்லாதவன், உங்களை விட நூறு மடங்கு அறிவு இல்லாதவன், உங்களை விட நூறு மடங்கு மனிதநேயம் இல்லாதவன், இந்த சமுதாயத்தில் உங்களை விட நூறு மடங்குக்கு மேல் மதிக்கப்படுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதற்காக வருந்தியிருப்பீர்கள். இது இன்று நேற்று அல்ல, வரலாறு தோன்றிய காலத்திலிருந்தே இப்படி ஓர் அநியாயம் இந்த உலகில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

இதை நினைத்து நம் நேர்மையையும், திறமையையும் ஒப்பிட்டு வேதனைப் படக்கூடாது. ஏனென்றால் இதையெல்லாம் பிரித்து. விபத்துக்களை உதாரணமாக எடுத்துக் கொண்டால் அது ஆபத்தில்தான் முடியும். அனுபவங்கள் அதிகம் இருந்தால் தான் நல்ல முடிவுகளை எடுக்க முடியும். அதே நேரத்தில் நல்ல முடிவுகளை எடுக்க வேண்டுமென்றால், சில கெட்ட அனுபவங்களைச் சந்தித்திருக்க வேண்டும்.

எந்த மனிதனைச் சந்தித்தாலும் அவரைப் பற்றி இரண்டு வார்த்தை பாராட்டிப் பேசுங்கள். பிறகு நீங்கள் எதைப் பேசினாலும் அவர் தலையாட்டுவார். ஒருவர் முன்பைவிட ஒல்லியாக இருந்தால், "எப்படி உடம்பை சிலிம்மா வெச்சிருக்கீங்க," என்றும் கேட்கலாம். அதே நேரத்தில், "என்ன உடம்பு இப்படி வீக்கா இருக்கு," என்றும் காயப்படுத்தலாம். மனிதனை மனிதன் காயப் படுத்தாமல் இருப்பது தான் மிகப்பெரிய புண்ணியம் என்று வாழத்துவங்கினால் "புகழ்" நம்மை நோக்கிப் "புயல்" வேகத்தில் வரும்.

கஷ்டப்பட்டவர்கள் எல்லாம் வெற்றி பெற்றதில்லை. ஆனால் வெற்றி பெற்ற அனைவரும் கஷ்டப்பட்டவர்கள் என்று "பென்ஜமின் டிசிலெரி" என்பவரின் கருத்து. வெற்றியின் விதையே தேடுதல்தான். எல்லோரிடமும் தனித்தன்மை இருக்கும். அதைத் தேட வேண்டும்.இப்படி இருந்தால் வெற்றி கிட்டும் என்றும் விதிமுறையில்லை. ஆனால் மனதுக்குள் ஒரு விதிமுறை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒழுக்கம் சொல்லி வரக் கூடாது. அது தானே வழக்கத்தில் இருக்க வேண்டும். மற்றவர்களின் அறிவை நீ அறிந்தாலே உன் அறிவு கூர்மையாகும். சிலநேரம் அக்கிரமங்களைக் கண்டு கொள்ளாமல் போவது கூட ஒரு பாவம் தான். உன் நம்பிக்கையை மற்றவர்களுக்குச் சொல், திணிக்காதே.

மற்றர்களின் நம்பிக்கையைக் கவனி, புறக்கணிக்காதே. பிரச்சினைகளின் வடிவம் தான் மாறுமே தவிர, பிரச்சினை தீராது. எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து விட்டால் மரண பயம் என்று ஒன்று வரும். அதற்குப் பதிலே கிடையாது. ஆனால் நாம் வேறு பிரச்சினைகளுக்கு சிந்தனையையும் செயலையும் உபயோகிப்பதால் மரண பயம் பற்றி யோசிக்காமல் இருக்கிறோம். மரணத்திற்கு மருந்து கிடையாது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 01, 2014 7:01 am

ஆனால் நாம் இப்போது சந்திக்கும் பிரச்சினைகளைத் தீர்க்கப் பல வழிகள் இருக்கின்றன. வழி தெரிந்தால் போதும். பிழைத்துக் கொள்ளலாம். நாளை எப்படியோ என்ற எண்ணம் நமக்கு மட்டும் தான் இருக்கிறது என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எல்லோரும் அப்படித்தான் எந்நாளும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதையும் மீறி "நாளை நமதே" என்று நினைப்பவர்கள் தான் வெற்றி கண்டிருக்கிறார்கள். இப்போது உங்கள் உள் மனது நாளை நமதே என்று குசுகுசுவெனக் கூறுகூது என் காதில் விழுகிறது.

"நாம் ரொம்ப உஷார். என்னை ஏமாற்ற முடியாது" என்று ஒருவர் கூறினால் அவர் ஏதோ பெரிதாக ஏமாந்து கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.

உஷாராக இருப்பது என்றால் நாம் நம்மை அறியாமல் எந்த நேரமும் நம்மையே கவனித்துக் கொண்டிருக்கும் ஒரு அனிச்சைச் செயலாக இருக்க வேண்டும்.

வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி கொண்டாலே போதும், கையெழுத்துப்போட்டவர்களின் தலையெழுத்து நம் கையில் என்று நினைப்பார்கள் சில உஷார் பேர்வழிகள். எனக்குத் தெரிந்த ஒரே விஷயம் நல்லவர்களிடம் எழுதி வாங்க வேண்டியதில்லை. கெட்டவர்களிடம் எழுதி வாங்கினாலும் பயன் இல்லை.

மற்றவர்களைக் குறை கூறிப் பேசுவதையே பலர் தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு மனிதனிடமும் குறை இருக்கின்றது. குறைகள் இல்லாத மனிதன் உயிருடன் இல்லை.

தவறு செய்வது மனித குணம். தவறு செய்யாத மனிதன் எதையும் செய்யாமல் இருக்கிறான் என்று பொருள். எந்தத் தோட்டத்திலும் களைகள் உண்டு,முள்ளில்லாத ரோஜா இல்லை!

கையில் முள் குத்தாமல் ரோஜாவைக் கிள்ளிக் காதலியின் தலையில் வைப்பதுதான் மனித மூளையின் வேலை.

காலை எழுந்த சற்று நேரத்திலேயே "பசி" நம்மைத் தொல்லை செய்கிறது. அதற்கான சாப்பாட்டை அளவோடு சாப்பிட்டு மீண்டும் வெற்றி கொள்கிறோம்.

இரவின் தூக்கத்திலும் "பசி" என்ற "தோல்வி", "உணவு" என்ற வெற்றி...! பிறகு தான் மரணத்தின் ஒத்திகையான தூக்கத்தைக் காணச் செல்கிறோம்!

"பசி" என்ற தோல்விக்கு மருந்து, வெற்றி என்ற உணவு. அளவுக்கு அதிகமான உணவு...உடலுக்கு ஆபத்து. அதைப்போன்று தேவைக்கு அதிககமான வெற்றியும் நமக்கு ஆபத்து என்று புரிந்து கொள்வோம்.

ஒரு சாண் வயிற்றுக்கே ஒரு நாளைக்கு மூன்று முறை வெற்றி, தோல்வி போராட்டம்! நம் முழு வாழ்க்கைக்கு©

இதிலிருந்து நமக்கு ஒன்று தெரிகிறது.இரவுதான் நிரந்தரம்.சூரியன் என்று ஒன்று வருவதால்- பகல் என்ற வெற்றி பளிச்சிடுகிறது.

உழைப்பது நமக்காக, நம் வயிற்றுக்காக என்று மட்டும் சிந்திக்காமல் நம் சாப்பாட்டிற்காக வெயிலில் உழுது கொண்டு இருக்கிறானே ஒரு விவசாயச் சகோதரன், அவன் வேர்வைக் கூலிக்காக உழைக்க வேண்டும். நம் கால் வலிக்காமல் பயணம் செய்ய வாகனத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கிறானே ஒரு தொழிலாளி , அவன் வயிற்றுக்காக உழைக்க வேண்டும்.

நம் மானத்தைக் காக்க பருத்தியைப் பஞ்சாக்கிக் கொண்டிருக்கிறானே ஒரு பாட்டாளி, அவனுக்காக நாம் உழைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

உடம்பில் வலி வரும்போது மருந்தால் வருடிக் கொடுக்கும் மருத்துவருக்காக நாம் உழைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

தள்ளாத வயதிலும், நம் தாய், தந்தையர் உட்கார்ந்து சாப்பிட நாம் ஓடோடி உழைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 01, 2014 7:02 am

நம்மை முழு மனிதனாக்கிப் பத்து மாதம் நம் வாரிசை வயிற்றில் சுமக்கும் நம் மனைவிக்காக உழைத்துக் கொண்டிருக்க வேண்டும். நாம் பட்ட கஷ்டம், நம் சந்ததிக்கு வரக்கூடாது என்பதற்காக வேர்வை சிந்திக் கொண்டிருக்கிறோம்.

இதைப் புரிந்து கொண்டால், போர்வைக்குள் உறங்காமல் வேர்வை சிந்தப் புறப்பட்டவிடுவீர்கள்.

கண்ணீரும் வேர்வைக்கும் ஓர் ஒற்றுமை உண்டு ! இரண்டும் உப்புகரிக்கும்...

வேர்வையை அதிகரித்தால் கண்ணீர் குறையும்...உழையுங்கள்...உழையுங்கள்....!

எந்தக் காரியத்திலும் உடனே வெற்றி கிட்ட வேண்டும் என்று நம் உள்ளம் துடிக்கிறது. அது காலதாமதமானால் ©விரக்தி© வந்து வாழ்க்கையின் வழக்கமான வேலைகளில் நம் கவனம் குறைகிறது. புலம்பல்கள் புயல் வேகத்தில் புறப்பட்டு விடுகின்றது. கிரிக்கெட்டில் ஒரு விஷயத்தை உன்னிப்பாகக் கவனியுங்கள். விளையாடப் போகும் குழந்தைகள் தாங்கள் மட்டையைப் பிடித்தவுடன் எல்லாப் பந்தையும் சிக்ஸர் அடிக்க வேண்டும் அல்லது குறைந்த பட்சம் நான்காவது அடிக்க வேண்டுமென்ற ஆசை வேகத்துடன் செல்வது வழக்கம் . ஆனால் அதிகக் கவனத்துடன் உஷாராக ஒரு பந்தையும் வீணாக்காமல் ஒரே ஒரு ரன்னாக எடுத்து விடலாம் என்று ஆடத் தொடங்கினால் அந்தக் குழந்தைக்கு அதிக ரன்னும் கிடைக்கும், அதிஷ்டமிருந்தால் சிக்ஸரும் கிடைக்கும்.

சந்தோஷப்பட வேண்டிய விஷயங்கள் நம்மைச் சுற்றியே இருந்தாலும், இல்லாத ஒன்றைத் தேடி சோகத்தைக் கட்டிப் பிடித்து ஒப்பாரி வைக்கிறோம். உதாரணத்திற்கு, தலைமுடி கொட்டியவர்கள் சிலர் தலைமுடி நிறைய உள்ளவர்களை ஆச்சரியத்துடன் பார்ப்பதுடன், நீங்கள் எந்தத் தண்ணீரில் குளிக்கிறீர்கள்© என்ன ஷாம்பூ உபயோகிக்கிறீர்கள்© எந்த எண்ணை தேய்க்கிறீர்கள்© என்று நச்சரிப்பார்கள். ஆனால் இவர் தனக்குத் தலைமுடி நிறைய இருந்த போது ஒரு நாளாவது கண்ணாடியைப்ப பார்த்து சந்தோஷப்பட்டிருப்பாரா என்றால் இருக்காது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பபட்ட ஒருவர் அரை கிளாஸ் கஞ்சி குடிப்பதாகப் கேள்விப்பட்ட அவர் உறவினர்கள், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததற்காக சாமியெல்லாம் கும்பிட்டு சந்தோஷப்படுவார்கள். ஆனால் அதே நபர் நோய் வருவதற்கு முன்பு 20 இட்லியும், 10 பரோட்டாவும் சாப்பிட்டிருப்பார். அப்போத இதே உறவினர்கள் "எவ்வளவு சாப்பிடுகிறான் , தரித்திரம் பிடித்தவன்" என்று அர்ச்சரித்திருப்பார்கள்.

"நன்றி கெட்டவர்கள்" இது நாம் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை. நம்மிடம் நண்பர்களாகவும், உறவினர்களாகவும் நெருங்கிப் பழகியவர்கள் நம்மை விட வளர்ச்சி அடைந்த பின்பு நம்மை மதிக்காமல் போனால், அவர்களையே நினைத்து நன்றியில்லாதவர்கள் என்று ஆதங்கப்பட்டுப் புலம்பிக் கொண்டேயிருக்கிறோம். ஒரு விஷயத்தை யோசித்துப் பார்க்க வேண்டும். நம்மிடம் பழகும் போது என்றாவது நான் உயர்ந்த பிறகு உங்களிடம் நன்றியுடன் இருப்பேன் என்று கூறியிருக்கிறாரா© நன்றியோடு இருப்பது அவரவர் தனித்தன்மை. நாம் அந்தத் தனித்தன்மை படைத்தவரா என்று தினமும் பரிசோதித்துக் கொள்வோம்.

பலர் வேலை பார்க்கும் இடங்களில் தங்கள் தகுதிக்கேற்ற வேலை இதுவல்ல என்று புலம்பிக் கொண்டே முழு ஈடுபாட்டுடன் வேலை பார்க்க மாட்டார்கள். மேலும் பெரிய கம்பெனியில் அப்ளிகேஷன் போட்டிருப்பதாகவும், அந்த வேலைக்குப் போன பிறகு தனது முழுத்திறமையும் எல்லோருக்கும் தெரியும் என்பார்கள். அதனால் செய்யும் வேலையில் ஈடுபாடு இல்லாமல் இருக்கும். திடீரென்று தற்போதுள்ள வேலையும் போய்விடும் அல்லது நீக்கப்படுவார்கள். இதற்குக் காரணத்தை ஆராய்ந்தால் இந்த வேலையில் இவர் முழு ஈடுபாட்டுடன் இல்லாததே ஆகும். ஆகாய விமானத்தில் பறக்கப் போகும் பிராயணி வீட்டிலிருந்து ஆட்டோவிலோ அல்லது காரிலோ தான் விமான நிலையம் செல்ல வேண்டும். விமானம் வீட்டுக்கு வந்து ஏற்றிச் செல்லாது என்பதை உணர்ந்தால் மேலே சொன்னவை விளங்கும்.

நீங்கள் சினிமாவுக்கு வராமலிருந்தால் என்ன வேலைக்குப் போய் இருப்பீர்கள்© என்று பலர் என்னைக் கேட்டதுண்டு சினிமா வாய்ப்பு தேடும் வேலையில் இருப்பேன் என்று பதில் அளித்திருப்பேன்.

தியாகிகளைப் பாராட்டுகிறோம், வணங்குகிறோம். ஆனால், நாம் தியாகியாக இருப்பதில்லை. குறைந்த பட்சம் குடும்பத்தில் தியாகத் தன்மையுடன் நடந்து கொண்டால் போதும். பிரிவு, மனமுறிவு என்ற அரக்கனை விரட்டலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 01, 2014 7:02 am

உணர்ச்சி வேகத்தில் பிரியும் பலர் எதிர்கால வாழ்க்கையில் என்ன என்ன சந்திக்க வேண்டிவரும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். பாயசம் தான் பசியைப் போக்கும் என்பதில்லை. பச்சைத் தண்ணீர் கூட பசியை அடக்கும். நான் அறிவுரை கூறவில்லை , எனக்கு நன்றாகத் தெரியும் - என் அறிவுரை வேறு ஒருவருக்குப் பொருந்தாது. வேறு ஒருவரின் அறிவுரை எனக்குப் பொருந்தாது. இன்னும் சொல்லப் போனால் என் அறிவுரை எனக்கே பொருந்தாது. கடைபிடிப்பது கடினமாயிருந்தும் இப்படி யோசிப்பதை எழுதுவதால் என்னை அறியாமல் நானும் கொஞ்சம் அறிவுரைகளை ஆராய்கிறேன்.

குழந்தைகள் முதல் பெரியர்வர்கள் வரை விடுமறையென்றாலே கொண்டாட்டம் தான். ஒரு நாள் ஓய்வு கிடைத்தால் எவ்வளவு நிம்மதியாக இருக்கும் என்று பலர் சொல்லுவார்கள். அவர்களுக்குத் திடீரென்று விடுமுறையென்றால் அந்நாளைப் போக்கப் படாதபாடு படுவார்கள். ஆக வேலையில் தான் சுகமே தவிர, ஓய்வில் இல்லை. இனி ஓய்வுக்கு ஓய்வு கொடுத்து பாருங்கள். மகிழ்ச்சி வீடு தேடி வரும்.

தொடர்ந்து சூட்டிங்கில் இருக்கும்போது எனக்கு ஒரு நாள் ஓய்வு கிடைத்தால் டென்ஷன் ஆகிவிடுவேன். மற்றவர்களையும் டென்ஷன் ஆக்கி விடுவேன். ஒரு நாள் ஓய்விற்குப் பிறகு சூட்டிங் போனால் நமக்கு டைரக்‌ஷன் வருமா நடிப்பு வருமா என்ற சந்தேகமெல்லாம் உண்டாகி விடும். நான் வசனங்களை எழுதாமல் டேப் ரிக்கார்டரில் பதிவு செய்து சொல்லிக் கொடுப்பேன். இதனால் நான் எம்.ஏ.படித்துப் பரீட்சை எழுதும் போது வேகமாக எழுதி எழுதிக் கை வலியால் அவதிப்பட்டேன். எழுதாமல் கைக்கு ஓய்வு கொடுத்ததால் வந்த வேதனை.

அதே போல் கதை விவாதத்தில் ஏதாவது பேசிக் கொண்டே இருந்தால் தான் சீன் வரும். யாருடனும் பேசாமலிருந்தால் கதை வளராது. ஒருமறை சொன்ன கதையை வேறு ஒருவருக்கு மறுபடியும் சொல்லும் போது கதை டெவலப் ஆகி இருக்கும். நேற்றைக்குப் பேசிய நகைச்சுவைக் காட்சியை இன்று பேசும் போதும் எல்லோரும் சிரிக்க வேண்டும். சிர்க்கவில்லை என்றால் இந்தக் காட்சி படத்தில் இல்லை என்று உடனே முடிவு எடுத்து விடுவேன். சிலர் வீம்புக்கு எதுக்காகவும் சிரிக்க மாட்டார்கள். அவர்களை நான் கணக்கில் வைத்துக் கொள்ள மாட்டேன். சிரிப்புக்கு ஓய்வு கொடுத்துவிட்டாலே கேரக்டர் மாறி விடும். தொடர்ந்து ஒரு வாரம் நான் எந்த இசையைம் ரசித்துக் கேட்காமலிருந்தால் எனக்கு எதையோ பறிகொடுத்த மாதிரி ஆகிவிடும். இசைக்கு ஓய்வு கொடுத்தால் நோயாளி ஆகிவிடுவோம்.இதயம் ஓய்வெடுத்தால் நம் கதி என்ன எனவே ஓய்வுக்கு இனி ஓய்வு கொடுப்போம்.

நம்மில் பலர் ஒட்டலில் ரூம் போட்டால், வெளியே செல்லும் போது விளக்கு மின்விசிறி போன்றவற்றை நிறுத்துவதில்லை ; நாம் தான் ரூமூக்குப் பில் கொடுக்கிறோமே, அதில் கரண்ட் பில்லும் அடக்கம்தானே என்று நினைக்கிறோம். மாறாக ரூமைப் பூட்டுவதற்கு முன் விளக்கு, மின் விசிறியை நிறுத்தியிருந்தால் உங்களை அறியாமல் நாட்டிற்கு மின்சாரத்தை சேகரிக்கிறீர்கள்.உங்களைப் போல் எல்லோரும் பொறுப்புடன் நடந்து கொண்டால், ஓட்டல் காரரும் மின்கட்டணம் குறைந்தால் ரூம் கட்டணத்தைக் குறைக்கலாம். யாருக்கும் பயன் படாமல் எந்த ஒரு பொருளையும் வீணடிக்கக் கூடாது. குறிப்பாக இதே விஷயத்தை வீட்டில் கடைப்பிடித்துப் பாருங்கள். மாத பட்ஜெட்டில் உங்கள் முகம் பிரகாசமாக இருக்கும். இதே போல ஷேவிங் செய்யும்போது வாஷ் பேசனில் குழாயைத் திறந்து விட்டு விட்டு முகத்தைக் கண்ணாடியில் அப்படி இப்படித் திருப்பிப் பார்த்து ஷேவ் செய்து கொண்டிருந்தால், தண்ணீர் வீணாகிக் கொண்டே இருக்கும். ஷேவ் செய்யும் போது தேவையை உணர்ந்து அவ்வப்போது தண்ணீரைப் பயன்படுத்தினால் நீங்கள் நாட்டின் நீர்ப்பற்றாக்குறையை சரி செய்யும் ஓர் அணில் போல் ஆவீர்கள். பலர் வெளியூர்களுக்குப் போகும்போது எடுத்துச் செல்லும் பொருட்களைப் பார்த்தால் ஏதோ வீட்டைக்காலி செய்து விட்டுப்போவது போன்று இருக்கும். அளவறிந்து பொருட்களை எடுத்து சென்றால் அதிக லக்கேஜ் இல்லாத ஆளாக மாறி பயணம் பளு குறைவானதாக இருக்கும்.

நம்மில் பலருக்கு யாரிடம் எந்த நேரத்தில் எதைக் கேட்கலாம், எதைக் கேட்கக் கூடாது என்ற அடிப்படை நாகரிகம் இருப்பதில்லை. உங்களுக்கு என்ன வயது, குழந்தை இல்லையா சம்பளம் எவ்வளவு செல்போன் நம்பர் என்ன என்ன ஜாதி சொந்த வீடா இப்படிப்பட்ட கேள்விகளால் மனது கஷ்டப்படும் என்று தெரியாமல் கேட்பவர்கள் கால்வாசிதான். தெரிந்தே கேட்வர்கள் தான் முக்கால் வாசிப்பேர். நாம் இப்படிப்பட்ட கேள்விகளை மற்றவர்களிடம் கேட்காமல் நாகரிகமாக நடந்து கொள்ளப் பழகிவிட்டால் போதும், மற்றவர்கள் இந்த மாதிரி கேள்விகளைக் கேட்கும் போது நம் மனசு அவ்வளவாகப் பாதிக்காமல் பக்குவப்பட்டு விடும்.

சிலர் திடீரென்று நம் முன் வந்து என்னை ஞாபகம் இருக்கிறதா எங்கே எப்போ பார்த்தீங்க சொல்லுங்க பார்ப்போம் என்று கேட்பார்கள். நமக்கு சிலநேரம் கோபம் கூட வரும். இந்தக் கேள்வி கேட்பவர் நாம் ஞாபகத்தில வைத்துக் கொள்ளக் கூடியவராக இருந்தால் அவரைப் பார்த்த உடனே நமக்கு யார் என்று தெரிந்து விடுமே !

என்னுடைய ஞாபகசக்திக்கு ஓர் உதாரணம் - என் மகன்கள் எந்தெந்த வகுப்பு படிக்கிறார்கள் என்று கேட்டாலே குழப்பிச் சொல்லுவேன். என் கார் நம்பரையும் நான் மிகவும் யோசித்தே சொல்வேன். ஆனால், நான் டைரக்ட் செய்கிற படத்தில் காட்சி எத்தனை டேக் என்று கேட்டால் தூக்கத்திலும் சரியாகச் சொல்வேன்.

பல பிரபலமானவர்களிடமிருந்து நான் தெரிந்து கொண்டே ஒரு விஷயம் - முதலில் அவர்கள் தங்கள் பெயரையும், தொழிலையும் சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்வார்கள். நீங்கள் பிரபலமானவர் ஆக இன்று முதல் முயலுங்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 01, 2014 7:02 am

விஞ்ஞான வளர்ச்சியுடன் ஒன்றிப் போனால்தான் முன்னேற்றம். ஆனால் நம்மில் பலர் விஞ்ஞானத்தில் அக்கறை காட்டுவது சோம்பேறியாக வாழ்ந்தான் வழிகாட்டுகிறது. உதாரணத்திற்கு, ஒரே ஒரு மாடி ஆனாலும் லிப்ட் இருக்கிறதா© என்று கேட்பார்கள். படி ஏறுவது சிறந்த உடற்பயிற்சி. நம் உடம்பை நாமே வெயிட் போட்டு தூக்கி நடப்பது மிகவும் நல்லது. வயதானவர்கள் லிப்டில் ஏற வேண்டாம் என்று கூறவில்லை. வலுவானவர்கள் லிப்டில் ஏறி வயதைக் குறைத்துக் கொள்ளாமல் இருக்கலாமே !

வீட்டில் டைனிங்க டேபிளில் உட்கார்ந்து சாப்பிடுவது வழக்கம். ஒரு வேளையாவது தரையில் உட்கார்ந்து சாப்பிட்டு பாருங்கள். உங்களையறியாமல் நீங்கள் உடற்பயிற்சி செய்கிறீர்கள். வெஸ்டர்ன் டாய்லெட் வேண்டும் தான். இருந்தாலும் வெட்டவெளி கிராம காலைக்கடனில் ஒரு சுகம் இருக்கிறது.அதனால் சுறுசுறுப்புடன் நாளைத் துவங்கலாம். இப்போது எல்லாவற்றிற்கும் மேல் ரிமோட் கண்ட்ரோல்- டி.வி., ஏ.சி., ரேடியோ, டேப் ரிக்கார்டர் - எல்லாம் ரிமோட் வந்து விட்டதால் எந்திரங்களை மனிதன் இயக்குகிறானா© அல்லது எந்திரங்கள் மனிதர்களை இயக்குகின்றதா© என்ற குழப்பம் உண்டாகி விட்டது.

துக்கம் எல்லோர் வாழ்விலும் வரும். அந்தத் துக்கத்தின் அளவு தெரியாமல் சிலர் எப்போதும் ஒப்பாரியுடன் ஒன்றிப் போய் இருப்பார்கள். என் தந்தை மறையும் முன் அவர் இல்லாமல் இந்த உலகில் ஒருநாள் கூட என்னால் வாழ முடியாது என்றிருந்தேன். ஆனால், அவரில்லாமல் பல ஆண்டு காலம் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறேன். இதனால் என் தந்தை மீது எனக்கு அன்பில்லை என்று அர்த்தமில்லை. சிலகாலம் என் தந்தையின் மறைவு துக்கத்தில் மூழ்கடித்தது. பிறகு அவரது அறிவுரை, அன்பு, ஆசி என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. ஒரு விஷயம் - துக்கம் நம் ஒருவர் வாழ்வில் மட்டும் வந்ததாக நினைக்க கூடாது. துக்கம் ஒரு சம்பவம். முதலில் துயரத்தின் உயரம் அறிந்து கொள்ளுங்கள்.

சிலர் எதற்கெடுத்தாலும ரூல் பேசுவார்கள். பக்கத்து வீட்டில் ஒரு விசேஷம் என்றால், இவர்கள் வீட்டின் வாசலில் இரண்டு கார்கள் நின்றாலே போதும் காச்சு மூச்சு என்று கத்துவார்கள். அப்போது தான் தனக்கு ஆங்கிலம் தெரியும் என்று அலட்டிக் கொள்வார்கள். இவர்கள் வீட்டில் விசேஷம் நடந்தால் பக்கத்து வீட்டின் வாசலில் கார்கள் நிற்க வேண்டியிருக்குமே என்பதை நினைத்துப் பார்க்க மாட்டார்கள். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் திட்டினால் அவர்கள் மனம் எவ்வளவு புண்படும் என்பதை நினைப்பதேயில்லை. இதில் எனக்கு ஆச்சரியமான விஷயம் சிறியவர்களைவிட வயதானவர்கள் தான் இந்த ரூல்பேசி வம்புக்கு வருகிறார்கள். ஒன்றை யோசியுங்கள், உங்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் பக்கத்து வீட்டுக்காரரே ஆம்புலன்ஸ் கொண்டு வர வேண்டும் என்பதைப் போல நடந்து கொள்ளுங்கள். உங்களுக்கு மாரடைப்பே வராது.

நாம் கடைக்குச் சென்று ஏதாவது ஒரு பொருளை வாங்குவோம். அதே பொருளை வேறு ஒருவர் விலை கேட்பார். அவருக்குப் பிடித்து விடும் . கடைக்காரருக்கு ஒரே பொருளை இருவருக்கு எப்படித் தருவது என்று குழப்பும். உடனே நீங்கள் அப்பொருளை அவருக்கே கொடுத்து விடுங்கள் என்று கூறிப் பாருங்கள். அந்தப் பொருளை வாங்கியதை விட இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்படும். நீங்கள் ஆசைப்படும் ஒன்றை வாங்க சந்தோஷப்படுவதைவிட விட்டுக் கொடுப்பதால் உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம் காதல் உட்பட (ஒரு தலைக் காதலாக இருந்தால்).

©பேரம் பேசி வாங்குவது தனக்குத் தெரிந்த ஒரு கலை© என்று சிலர் பெருமைகயாகக் கூறிக்கொள்வதுண்டு. என்னைப் பொருத்தவரை பேரம் பேசக் கூடாது என்று நினைப்பவன் நான் காரணம் நாம் பேரம் பேசி குறைத்து வாங்குவதால் வரும் லாபத்தில் பெரிய தொகை வந்துவிடப் போவதில்லை. மேலும் நமது வருமானம் எவ்வளவு© வியாபாரியின் லாபம் எவ்வளவு என்று யோசிக்க வேண்டும். மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கும் ஒரு நபர் இரண்டு ரூபாய் சொல்லும் பொருளை ஒரு ரூபாய்க்குக் கூச்சமில்லாமல் கேட்பார். உதாரணத்திற்கு, பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்ததில் கிடைக்காத மகிழ்ச்சி நூறு ரூபாய் சீட்டாட்டத்தில் கிடைக்கும் என்று சொல்வார்கள். அது போலத்தான் பேரமும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 01, 2014 7:03 am

சிலர் பேரம் பேசி அடிமாட்டு விலைக்குக் கேட்டு திட்டு வாங்குவார்கள். சிலர் விலையைக் குறைத்துக் கேட்டு விட்டு மெதுவாக வேறு கடைக்கு நடப்பார்கள்; கடைக் காரர் எப்படியும் கூப்பிடுவார் என்பதால் தான் இந்த ஸ்லோமோஷன் நடையெல்லாம் . கூப்பிடவில்லையென்றால் கூட வேறு கடைக்குச் சென்று, அதைவிட அதிக விலை கொடுத்து அதே பொருளை வாங்குபவர்களும் உண்டு.

அதற்காக அநியாய விலை கொடுத்து வாங்கச் சொல்கிறீர்களா© என்று கேட்கலாம். வியாபாரியின் பொருள், அவரது லாபம், நமது நிலை இவற்றை யெல்லாம் யோசித்துப் பார்க்க வேண்டும். ஒரு வியாபாரியின் மொத்த மூலதனமே உங்கள் ஒரு நாள் கைச்செலவாக இருந்து நீங்கள் பேரம் பேசினால் அதில் மனித நேயம் இல்லை என்பதே என் கருத்து. நீங்கள் வசதி படைத்தவராக இருந்தால், ஒரு சிறு வியாபாரியின் பொருளை எண்பது ரூபாய் விலைக்கு வாங்கி மீதி இருபது ரூபாய் சீல்லரை இல்லாமல் தவிக்கும் போது அந்த இருபது ரூபாயை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறிப்பாருங்கள். ©வள்ளல்© என்ற பட்டம் உங்கள் பெயருடன் வந்து ஒட்டிக் கொள்ளும்.

டெலிபோனில் பேசும்போது எதிர் முனையில் உள்ளவர் மனநிலை,சூழ்நிலை அறிந்து பேச வேண்டும் என்பதை பலர் உணர்வதில்லை. மேலும் நாம் சொல்ல வரும் விஷயத்தின் முக்கியத்துவம் எந்த அளவு என்பதை முதலில் உணர்த்த வேண்டும்.

பிரச்சினையின் உச்சியில் போராடிக் கொண்டிருக்கும் ஒருவர், அது சம்பந்தப்பட்ட தொலைபேசிக்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது, சிலர் வெட்டிக்கு போனி பேசி, என்ன டிபன்© எத்தனை மணிக்கு குளிச்சீங்க© என்று கேட்டு அறுப்பார்கள்.இன்னும் சிலர் அவர்களாக போன் செய்து விட்டு, ம்...சொல்லுங்க...என்று நம்மிடம் கேட்பார்கள். மறுமுனையில் யார், எப்படி இருப்பார்கள் என்பதை காட்டும் மாயக் கண்ணாடி இல்லை என்பதை உணர்ந்து பேச வேண்டும். தொலைபேசியில் ஹலோ சொல்லி ©நான் யார் என்று சொல்லுங்கள்© என்று கேட்கிற அறிவு குறைந்தவர்களைத் திட்டத்தான் தோன்றும். தொலைபேசி அணுகு முறையில் எனக்குப் போலீஸ் துறையை மிகவும் பிடிக்கும். அவர்கள் தான் தொலைபேசியை எடுத்தவுடன் தங்களது பெயர், பதவியைக் கூறிவிட்டு மற்ற விஷயத்துக்கு வருவார்கள். மனித குலத்திற்கு விஞ்ஞானம் அளித்த மிக அற்புதமான பரிசு ©தொலைபேசி© இதைத் தொல்லைபேசி ஆக்கி விடாதீர்கள்.

நான் என் குருநாதர் திரு. பாக்யராஜ் சார் அவர்களிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்துக் கொண்டிருந்த போது ஓர் இளைஞர் வாய்ப்புக் கேட்டு வந்தார். அவரிடம் ஏதாவது நாடகத்தில் நடித்த முன் அனுபவம் உண்டா© என்றேன். இல்லை ஆனால் நான் பாக்யராஜ் சார்போல் வந்து விடுவேன் என்றார். சினிமாவுக்குள் நுழைய என்ன பயிற்சி மேற்கொண்டிருக்கிறீர்கள்© என்றேன். ©நான் பாக்யராஜ் சார் போல முடிவளர்த்து வைத்து உள்ளேன்© என்றார். எனக்கு அதிர்ச்சியுடன் கோபமும் வந்தது. அதைக்காட்டிக் கொள்ளாமல் பாக்யராஜ் சார் போல் முடி வளர்த்தால் முன்னேற முடியாது. மூளையை வளருங்கள் என்றேன். இதே போல் இளையராஜா சார் போல் ஜிப்பா போட்ட ஒருவர் நான் பெரியாளாகி விடுவேன் என்றார். நான் உடனே ஜிப்பா போட்டால் பெரியாளாக முடியாது, நல்லா டியூன் போட்டால் தான் அப்படி ஆக முடியும் என்றேன். ஒரு மாதுளம் பழத்திலிருந்து ஒரு முத்தை வெளியே எடுத்து விட்டுப் பிறகு மீண்டும் அம்முத்தைப் பொருத்தப் பல மணி நேரமாகும்.முழு மாதுளம் பழத்திலுள்ள எல்லா முத்துக்களையும் உதிர்த்து விட்டு மீண்டும் ஒன்று சேர்க்க முடியாது. அதே போல் தான் ஒருவர் போல் ஒருவர் ஆகிவிட முடியாது. உங்களுக்கென்று தனித் தன்மையை உழைப்பால் வளர்த்துக் கொண்டால் நீங்களும் முத்தாகலாம்.

இப்பொழுதெல்லாம் பலர் டிபன் சாப்பிடுவதே மாத்திரை சாப்பிட்டாக வேண்டுமே என்பதால் தான். ஆம். பலருக்கு மாத்திரை இல்லாமல் நித்திரையே இல்லை. இப்படி அவசியமான மாத்திரை விசயத்தில் சிலர் அனாவசியமாக நடந்து கொள்வது விளையாட்டு வினையாகி விடும் என்பதை உணராமலிருப்பதால்தான் !

எம்.பி.பி.எஸ். படித்தாலே டாக்டர் தான். இருந்தாலும், நாம் மூளைக்கு யார் சிறந்த டாக்டர், இதயத்துக்கு யார் ஸ்பெஷலிஸ்ட் என்று தேர்ந்தெடுத்துப் பார்க்கிறோம். ஆனால் மாத்திரை விஷயத்தில் பலர் எப்போதோ டாக்டர் சொன்ன மாத்திரையை மனதில் வைத்துக் கொண்டு, தான் சாப்பிடுவதோடு இல்லாமல் மற்றவர்களையும் வாங்கி சாப்பிடும்படிக் கூறி எல்லாம் தனக்குத் தெரிந்ததாக நடந்து கொள்கிறார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 01, 2014 7:03 am

ஒரு விஷயம், நீங்கள் எந்த டாக்டரைச் சந்திக்கப் போனாலும் அங்கு ஒரு மருந்துக் கம்பெனி ரெப்பரஸன்டேடிவ் இருப்பதைப் பார்க்கலாம். இதிலிருந்து என்ன தெரிகிறது. நாளுக்கு நாள் புதுப்புது மருந்துகள் வருகின்றன. ஆனால், நம் நோயை விரைவில் தீர்க்க விஞ்ஞானம் வளர்ந்து கொண்டிருக்கும்போது, நமக்கு அரைகுறையாகத் தெரிந்தவற்றை செயல்படுத்தி நோயைப் பெரிதுபடுத்தவேண்டாம்.

நம்மில் சிலர் தன்னிடம் இல்லாத குறை தன் நண்பனுக்கு இருந்தால், அதை அடிக்கடி நகைச்சுவை என்ற பெயரில் ஊசி போல் பலர் முன்னால் குத்திக் கொண்டே இருப்பார்கள். உண்மையில் நண்பன் மீது அக்கறை இருந்தால், அவரைத் தனியாக அழைத்து அவரிடம் உள்ள குறையினால் ஏற்படும் தீமை, குறையிலிருந்து மீண்டால் ஏற்படும் மகிழ்ச்சி பற்றி விளக்கலாம்.

சிலர் பேச ஆரம்பித்தால் எப்போது முடிக்கப் போகிறார்கள் என்று நமக்கு தெரியாது- அவர்களுக்கும் தெரியாது. மேலும் அதில் சுவாரசியமும் இருக்காது. அதற்கு மேலாகத் தனக்கு என்னவெல்லாம் தெரியும் என்பதை மேதாவித்தனத்துடன் பொரிந்து தள்ளுவார்கள்.

நாம் பேசும் போது இந்த வாக்கியத்தின் கமா எது© முற்றுப் புள்ளி எது© என்பது கேட்பவருக்குப் புரியும்படி பேச வேண்டும். அப்போது தான் அவர்கள் உங்கள் பேச்சை
உணர்ந்து பதில் சொல்வார்கள் அல்லது சந்தேகம் கேட்பார்கள்.

எந்த விவாதத்திலும் அடித்துப்பேசி கன்வின்ஸ் பண்ணக் கூடாது.சரியான, நியாயமான விளக்கம் அளிக்க வேண்டும். ஒரு விஷயம் ஒரு புத்தகத்தில் பார்த்தேன்- (How to Listen) மற்றவர் பேசுவதை எப்படிக் கவனிப்பது© என்பது பொருள். மற்றவர் பேசுவதைக் கவனிப்பதற்கே டிக்‌ஷனரி போன்ற கனமான புத்தகம் என்றால், பேசுவதற்கு எவ்வளவு கனமான புத்தகம் படிக்க வேண்டும். பழமொழி ஒன்று உண்டு. ©பேசிய வார்த்தை உனக்கு எஜமான்-பேசாத வார்த்தைக்கு நீ எஜமான்.

என் சின்ன வயசு ஞாபகங்களில் ஒன்று சைதாப்பேட்டையிலிருந்து புறப்படும் பஸ்ஸின் டிரைவர் ஒருவரின் பக்தி. அவர் வண்டியில் ஏறியவுடன் ©டீசல் போட்டாச்சா© என்பதை விட ©ஊதுபத்தி ஏத்தியாச்சா© என்பதில் கவனமாக இருப்பார். வண்டியை ஸ்டார்ட் செய்து விட்டுப் பிரார்த்தனை என்ற பெயரில் கண்களை மூடிக்கொள்வார். கண்களைத் திறக்காமல் சுமார் நூறு மீட்டருக்கு வண்டியை ஒட்டுவார். பிறகுதான் கண்களைத் திறப்பார்.

அந்த வண்டியில் ஏறிவிட்டு அதிகாலை நேரத்திலேயே எனக்கு வேர்த்து விறுவிறுத்து - ஓட்டுநரின் ரிஸ்க்கான பக்தியைப் பார்த்துப் பயந்து இறங்கி விட்டேன். பக்தி இருக்க வேண்டியது தான். அதற்காகக் கண்களை மூடிக் கொண்டு வண்டி ஓட்டுவது போன்ற மேஜிக் பக்தி யெல்லாம் பயமுறுத்தும் பக்தி.

அதேபோல் படிக்கும்போது கோவிலைச் சுற்றி வருவேன். பரீட்சைக்குப் போகுமுன் அக்கோவிலுக்குச் சென்று கற்பூரம் கொளுத்திவிட்டுச் சுற்றுவேன். ஒரு ஞானப்பழ நண்பன் என்னிடம் கூறினான். ©கற்பூரம் கொளுத்தி விட்டுப் பத்துச் சுற்று சுற்றும் வரை கற்பூரம் அணையவில்லை என்றால் நீ பாஸ், அணைந்து விட்டால் நீ பெயில்© என்றான். ஒரே முறை கற்பூரம் கொளுத்தி விட்ட நான் சுற்றினேன். கற்பூரம் அணையவில்லை. ஆனால் அதே படபடப்பில் நான் பரீட்சை எழுதியதால் ; அன்று எழுதிய சப்ஜெக்டில் பெயில் ஆகி விட்டேன். அன்று முதல் இந்த மாதிரி ரேஸ் பந்தயமெல்லாம் கடவுள் விசயத்தில் வைப்பதில்லை என்று முடிவு செய்து விட்டேன்.

எனக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் வீடு கட்டி, கிரகப் பிரவேசத்திற்குப் பத்திரிகை அனுப்பியிருந்தார். பெரிய ஆளாயிற்றே, கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும் என்ற எண்ணத்துடன் சென்றேன். அங்கே ஆச்சர்யம், விரல் விட்டு எண்ணக் கூடிய அளவே ஆட்கள் இருந்தார்கள். பிறகு விசாரித்ததில் நூறு அழைப்பிதழ்தான் பிரிண்ட் செய்து, அதில் இருபத்து ஐந்து மட்டுமே கொடுத்திருந்தார்கள்.

பிறகு அவர் சொன்ன பிராக்டிகல் தத்துவம்; ©நம்முடைய வளர்ச்சியை எல்லோரும் ஏற்றுக் கொள்ள மாட்டாகள்; மாறாக ஏக்கப் பெருமூச்சு விட்டால் அது யாக வெப்பத்தை விட வெப்பம் அதிகமாகி ஏ.சி. வீடு கூட சூடாகிவிடும் © என்பது தான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 01, 2014 7:03 am

வீடு விற்றால் வரும் போலி வருத்த ஆறுதல்கள் தான் அதிகம். வீடு கட்டினால் வரும் வாழ்த்துக்கள் குறைவு என்பதை அந்த நண்பர் நன்கு உணர்ந்திருக்கிறார். அதனால் தான் அவ்வளவு அழகான கலைத்திறன் மிக்க வீட்டைக் கலைத்துறையில் இருந்து கொண்டே அவரால் கட்ட முடிந்திருக்கிறது.

அந்த வீட்டைப் பார்த்த பிறகு என் இளைய மகன் அதன் கலைத்திறனைப் பாராட்டிக் கொண்டே இருந்தான். உடனே என் மூத்த மகன் அவனிடம்,©நம்ம வீட்டை அப்பா எவ்வளவு நாட்களுக்கு முன்னால் இவ்வளவு அழகாகக் கட்டியிருக்கிறார்கள். இப்போது எவ்வளவு விஞ்ஞான வளர்ச்சி அடைந்திருக்கிறது. அவ்வளவு பணம் இருந்தால், இப்போது அப்பா வீடு கட்டினால் அந்த வீட்டை விட அழகாகக் கட்டுவார்© என்று எனக்கே ஒரு புது உபதேசத்தை உணர்த்தினான்.

எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும், எப்போதும் நல்லவனாக நடந்து கொள்ளவேண்டும். ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது தர்மம் செய்ய வேண்டும். நல்ல சிந்தனை வேண்டும். நல்லவன் என்ற பெயர் எடுக்க வேண்டும். இப்படிப் பல நல்ல நல்ல என்ற தத்துவத்துக்கு சமீபத்தில் ஒரு வாசகம் கேட்டேன். பேங்கில் பணம் போட்டால்தானே நாமே நமக்குத் தேவைப்படும்போது பணம் எடுக்க முடியும். அதே போல் தான் நல்லது செய்தால் தான் நமக்கு நல்லது நடக்கும்.

டி.வி. இன்று நம் வீட்டின் ரேஷன் கார்டில் இடம் பெறாத குடும்ப உறுப்பினர் ஆகிவிட்டது. ரிமோட்கன்ட்ரோலுக்கு நடை பெறும் சண்டைதான் வீடுகளில் அதிகம். நான் ரூமுக்குள் நுழையும்போது எனது மகன்கள் ©டப்© என்று ரிமோட்கன்ட்ரோலில் சேனல் மாற்றுகிறார்கள். பார்த்தால் ©டிஸ்கவரி© சேனல் ஓடுகிறது. இதற்கு முன்னால் என்ன சேனல் பார்த்தான் என்று கேட்டால் ©என்ன சொல்வானோ©©- என்ற பயம். இன்னொரு பக்கம் நான் டி.வி. பார்க்கும்போது பசங்க வந்தா இதே மாதிரி சேனல் மாற்றுவேன். அது என்ன என்று பசங்க கேட்டு விடுவார்களோ என்ற அச்சம். மொத்தத்தில் யாரையும் யாரும் கேட்காமல் இருப்பதே இன்றைய நாகரிகம்.

எனது கம்ப்யூட்டரில் இன்டர்நெட் கனெக்‌ஷன் இணைத்தவுடன் கம்ப்யூட்டர் மெக்கானிக் என்னிடம் அதன் பாஸ்வேர்டை ரகசியமாகச் சொல்லிவிட்டுப் போய் விட்டார். பிறகு என் மகனைக் கூப்பிட்டு இன்டெர்நெட் இணைக்கச் சொன்னேன். அவன் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டு, ©பாஸ்வேர்ட் அடிங்கப்பா© என்றான். நான்,©இது தான் பாஸ்வேர்ட், நீயே அடி© என்றேன். பிறகு கம்ப்யூட்டரை மூடும்போது, ©இன்டர்நெட்டில் நல்லதும் இருக்கிறது, கெட்டதும் இருக்கிறது. நீ நல்லதைக் கற்றுக் கொள்ள வேண்டும். என்று நான் ஆசைப்படுகிறேன்© என்று கூறிவிட்டேன்.

இந்த காலத்துப் பசங்களுக்கு பாஸ்வேர்ட் கண்டு பிடிப்பது பால்பாயாசம் போல் என்பதை உணர வேண்டும். மேலும் என் மனைவியிடம் பசங்க கம்ப்யூட்டர் ரூமில் உட்காரும் போது கதவு திறந்தே இருக்க வேண்டும் என்று உஷார்படுத்தி விட்டேன். அதைவிட இன்டர்நெட் உள்ள கம்ப்யூட்டர் ஹாலில் வைத்து விட்டால் பிள்ளைகள் பற்றிய பிரச்சினையே கிடையாது.(நமக்குத் தான் பிரச்சனை)

பசியும், தூக்கமும் அதிஷ்டசாலிகள் சொத்து. சொத்து அதிகம் சேர்த்தால் இரண்டும் வராது. சிலர் சாப்பிடுவதையும் தூங்குவதையும் தெழிலாகவே வைத்திருக்கிறார்கள். அவர்களை நாம் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. சாலை ஓரங்களில் வண்டிகளின் ஹாரன் சத்தங்களுக்கிடையில் சிலர் ஆழ்ந்த தூக்கத்தில் படுத்திருப்பதைப் பார்க்கலாம். அதுதான் உண்மையான உழைப்பின் அசதியில் கிடைக்கும் சூழ்நிலை உறக்கம்.

கிராமங்களில் அதிகாலையிலிருந்து உச்சி வெயில் வரை ஏர் உழுதுவிட்டு மதியம் மரத்தடியில் கேப்பக்களியைக் கருவாட்டுக் குழம்புடன் எத்தனை உருண்டை என்று எண்ணாமல் சாப்பிடுவார்களே, அதுதான் வயிற்றுக்கு உழைப்பு தரும் பாராட்டு. இப்போது எனக்கு ஞாபகத்துக்கு வருகிற பழமொழி, ©நித்திரை வந்தால் பாய் வேண்டாம்© பசிக்கு ருசி தேவையில்லை©.

சிலர் தங்கள் மேல் எல்லோரது பார்வையும் விழ வேண்டும என்பதற்காகப் பல மணி நேரங்களையும், பணத்தையும் செலவிடுவார்கள். இது ஒரு வியாதி என்றே நினைக்கிறேன். ஏனென்றால் பல விஷயங்களில் வெற்றியாளராக இருக்கும் இவர்களுக்குப் பொருந்தாத புகழ் தேடும் விஷயத்தில் சிரத்தை எடுப்பது ஆச்சரியமான விஷயம். அது மட்டும் அல்ல. பின்னால் இவர்களைப் பற்றி மற்றவர்கள் தப்பாகப் பேசுவதைக் கேட்டு நான் வருத்தப்பட்டிருக்கிறேன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 01, 2014 7:03 am

புகழுக்காகத்தான் உலகில் எல்லா மனிதனும் போராடுகிறான் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. மேலும் நமக்குக் கிடைத்த புகழைப் பரப்ப முன் வருவார்கள், என்ற மூடநம்பிக்கையும் எனக்கு இல்லை. எனது ஒரே கருத்து, பொருந்தாத புகழுக்குப் போராட வேண்டாம். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு படத்தில் சொல்லுவார்- ©தானா கிடைத்தால் பட்டம், கேட்டு வாங்கினால் தம்பட்டம்.©

போட்டோ எடுப்பது என்பது வாழ்க்கையின் ஒரு பதிவு. சிலர் எதற்கு இவ்வளவு போட்டோ எடுத்து மாட்டி வைத்திருகிறீர்கள்© என்று கிண்டல் செய்வார்கள். அது தவறு. நமது திருமணப் போட்டோவைக் குழந்தைகளுடன் பார்க்கும் போது ஏற்படும் குதூகலத்தை எதனுடன் ஒப்பிட முடியும்© அந்தக் காலத்து நிகழ்வுகளை சிலை வடிவமாகப் பதிவு செய்தார்கள். இந்தக் காலத்தில் போட்டோ இன்றி டிஜிட்டல் யுகம். கலர் போட்டோ என்றால் ©வெளி நாட்டுக்கு அனுப்பி பிரிண்ட்கள் போட்ட காலம் மாறி, இன்று செல்போனில் போட்டோ எடுக்கிறார்கள்.கம்ப்யூட்டர் பிரிண்ட் ரெடி.

போட்டோ மரபு என்று ஒன்று உள்ளது. நாம் யாரோடு நின்று போட்டோ எடுத்துக் கொள்கிறோம்© யார் நம்மோடு நின்று போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள்© என்பதாகும். நண்பர்களாக இருந்தால் பாசத்தோடு தோளில் கை போட்டுக் கொள்ளலாம். நம்மை விட பிரபலமானவர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்ளும் போது அவர் முகம் சுளிக்காமல் மகிழ்ச்சியுடன் அனுமதி அளித்தால் அந்தப் படம் உங்கள் வீட்டில் ஒரு வரலாற்றுப் பதிவு.

அறிவைக் கூராக்காத சிலர், பிரபலமானவர்கள் தனியாக இவர்களிடம் மாட்டிக் கொண்டால் கூலிங்கிளாஸ் எடுத்து மாட்டிக் கொள்வதுடன், நாகரிகம் இல்லாமல் மாட்டிக் கொண்ட வி.ஐ.பி தோளில் கை போட்டு போஸ் கொடுப்பார்கள். அந்த போட்டோவை வீட்டில் மாட்டி வைத்தால் பலர் இது கேமரா டிரிக் என்பார்கள். சிலர் ஆல்பம் என்பார்கள். உங்கள் பணிவான நடத்தையைப் போட்டோவில் பதிவு செய்தால் வருங்காலத்தில் நீங்களும் ஒரு வி.ஐ.பி. என்பது நிச்சயம்.

பலர் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போதே தம் ஊர் பெயரையும் சொல்லுவார்கள். அது அவர் தம் ஊர் மேல் உள்ள பற்று. பெருமைப்பட வேண்டிய விஷயம். பிறகு அவரது நடவடிக்கை நமக்கு எரிச்சல் ஊட்டுவதாக அமைந்துவிட்டால் அவர் சொன்ன ஊர் மீதும் நமக்கு உறுத்தல் உண்டாகும். மேலும் அவருக்குப் பிடிக்காதவர்களின் பட்டியலுடன் அவர்களது ஊர் பேரையும் சொல்லும் போது இவர் நமக்குப் பிடிக்காதவர் பட்டியலில் சேர்ந்து விடுகிறார்.

ஒரு விஷயம், நாம் எங்கு சென்றாலும் நம்முடைய சொல்லையும், நடத்தையையும் கண்ட மற்றவர்கள் நீங்கள் எந்த ஊர் என்று கேட்டால் உங்கள் சொந்த ஊர் உங்களுக்கே சொந்தமானது போல ஓர் உணர்வு ஏற்படும்.

வீட்டில் எந்தப் பொருள் ரிப்பேர் ஆனாலும் அதை உடனே சரி செய்ய வேண்டும். என்ற எண்ணம் நமக்கு வருதில்லை. நாளை நாளை என்று தள்ளிப் போட்டு, அது தூசு படிந்து எடைக்குக் கூட போட முடியாத நிலையை உருவாக்கி விடுகிறோம். மேலும் அதற்குப் புதுமாடல் வந்தால் அந்தப் பொருள் மீது கவனம் போய்விடுகிறது.

ஒரு ரூமில் மின் விசிறி, லைட் ரிப்பேர் ஆகிவிட்டால் அந்த ரூமைப் பயன்படுத்துவது குறைந்து, பராமரிப்பும் இல்லாமல் குடோன் ஆகிவிடுவதை நடைமுறையில் நான் பார்த்திருக்கிறேன். லைட், மின் விசிறி ரிப்பேர் செய்ய எவ்வளவு ஆகிவிடும்©

இதில் நமக்கு இருக்கும் அக்கறையில்லாத சோம்பேறித்தனமே காரணம். இதே லிஸ்டில் டேப்ரிக்கார்டர்,சைக்கிள், இஸ்திரிப்பெட்டி, பிரிட்ஜ்,ஏ.சி.என்று பார்த்தால் ரிப்பேர் என்ற பெயரில் கோமா ஸ்டேஜில் பொருட்கள் நம் வீட்டில் குடியிருந்து கொண்டிருக்கும். இதற்கு முதல் சிகிச்சை- தேதி போட்டு சர்வீஸ் செய்ய வேண்டும்.(சொந்த அனுபவம்)

நமக்குச் செலவுக்கு எண்ணூற்றி ஐம்பது ரூபாய் தேவைப்படுகிறது என்றால், பேங்கிற்கு செக் போடும்போது அதை ரவுண்டாக ரூபாய் ஆயிரமாகப் போட்டு எடுப்பதே அநேகரது குணம். அதே போல் கடன் வாங்கும் போதும் எட்டாயிரம் தேவைப்படும் போது ரவுண்டாகப் பத்தாயிரம் வாங்கி விடுவோம். இந்த ரவுண்டு செய்து பழகிவிட்டால் பிறகு பிரச்சினைகள் நம்மை ரவுண்டு கட்டிவிடும் என்று நினைத்துப் பார்க்க வேண்டும். எவ்வளவு தேவை என்பதைவிட இவ்வளவு தேவை இல்லை என்பதை உணர்ந்தால் வாழ்க்கைப் பளு குறையும்.

அவசியம் என்றால் கடல்போல் செலவழியுங்கள்- அனாவசியமாகப் பத்து காசு கூட செலவழிக்காதீர்கள். இது பல வெற்றியாளர்கள் கடை பிடிக்கும் பழக்கம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 01, 2014 7:04 am

நாம் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் ஒருவரை இன்னொரு நண்பர் மாற்றுக் கருத்து கொண்டு தாறுமாறாகத் திட்டினால் நமது மனது கொதிக்கும். உடனே கோபப்பட்டு பதிலடி கொடுப்பது சராசரி மனசு. நமது மரியாதைக்குரியவருக்கும் இவருக்கும் என்ன மனக்கசப்போ அல்லது அவரை நம்மைப்போல் புரிந்து கொண்ட பக்குவம் இவருக்கு இன்னும் வரவில்லையா© என்று மனசை ஆறப்போட வேண்டும்.

எல்லோருக்கும் எப்பொழுதும் பிடித்தவராக வாழ இந்த உலகம் வழிவிடாது என்பதே உண்மை. கடவுள், கட்சி,ஜாதி என்று வக்காலத்து வாங்குவது பெரும்பாலும் சண்டைகளிலேயே முடிகிறது. நாம் மதிக்கிறவர்களின் உயர்வை சந்தர்ப்பம் கிடைக்கும் போது மட்டும் சொல்லுவது நன்றிக்கு நன்று.

டெலிபோன் அலறியவுடன் பதட்டப் படாத நாம் மறுமுனையில் உள்ளவர் சொல்லும் முக்கிய குறிப்பைக் குறித்துக் கொள்ள பேனா, பென்சில் தேட பதட்டப் படுவதே அதிகம்.

டெலிபோன் அருகில் ஒரு பேப்பர், பேனா வைக்க வேண்டும். என்று எல்லோருக்கும் தோன்றுமே தவிர, செயல்பட்டவர்கள் பட்டியலில் நாம் இருக்க மாட்டோம். பல வீடுகளில் ஐயிரோ பென்சிலில் தான் பல முக்கிய குறிப்புகள் எழுதப்படுகின்றன. பேனா கிடைக்காமல் தேடும் நேரத்தில் தான் எஸ்.டி.டி., ஐ.எஸ்.டி., எவ்வளவு என்று டென்ஷன் அதிகமாகி மற்றவர்களையும் டென்ஷன் செய்வோம். டெலிபோன் பக்கத்தில் நீங்கள் இல்லாமல் இருந்தாலும், உங்களுக்கு வரும் தகவலைக் குறித்து வைக்கப் பேப்பர், பேனா வைத்துப் பாருங்கள். உங்கள் அலுவல்கள் அலுங்காமல் நடக்கும்.

நம் நண்பர்கள், உறவினர்களுக்கு ஏற்படும் துக்கம், பிரச்சினைகளை அறிந்தால் உடனே காலதாமதப் படுத்தாமல் ஆறுதல் கூற நேரம் ஒதுக்குங்கள். வேலைப்பளுவால் அது தடைப்பட்டால், பிரச்சினைகளில் பாதிக்கப் பட்டவரை திடீரென்று நீங்கள் நேரில் சந்திக்கும்போது, தர்மசங்கடங்கள் உண்டாகிப் பல பொய்களைச் சொல்ல நேரிடும்.

©இந்தத் துக்கம், பிரச்சினை உங்கள் வாழ்வில் ஒரு பாகம் என்று நினைத்து அடுத்த முயற்சியைத் தொடங்குங்கள். இதற்கு மேல் உங்களுக்குக் கஷ்டம் வராது© என்று ஆறுதல் வார்த்தை கூறிப் பாருங்கள். நமக்கு இருக்கும் கஷ்டம் கூட சற்றுக் குறைந்துவிட்ட உணர்வு ஏற்படும்.

சிலர், நமக்கு வேண்டியவரின் துக்க சம்பவங்களுக்குப் போகாமல், என்னால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று பதுங்குவார்கள். அது உண்மையாக இருந்தாலும், நடைமுறையில் எதையும் நேர்கொள்வதால் நீங்கள் இன்னும் ©தைரியவான் © ஆகிறீர்கள். அதைவிட முக்கியம் துக்க சம்பவங்கள் கலந்து கொள்ளாமல் தவிர்த்தால் நட்பில் இடைவெளி வரலாம்.

துக்கத்தில் உள்ளவர்களுக்கு முதல் சிகிச்சையே ஆறுதல் தான்.மிக மிக சோகத்தில் உள்ள நண்பரை உடனே சந்தித்து பத்து நிமிடம் எதுவும் பேசாமல் மவுனமாக இருந்து அவரது துக்கத்துக்கான ஆறுதலை வெளிப்படுத்திப்பாருங்கள், அதுவே உங்கள் மீது உள்ள அபிமானத்தை அதிகரிக்கும்.

நாம் தொலைபேசியில் நம்பரை சுற்றும் முன் நாம் சொல்ல வேண்டிய விஷயம் ஞாபகத்தில் இருக்கும். பிறகு பேசும்போது வேறு விஷயத்தைப் பேசி விட்டுத் தொலைபேசியை வைக்கு முன், நாம் சொல்ல வந்த முக்கிய விஷயம் ஞாபகத்திற்கு வராமல் ©என்னவோ நினைத்தேன்,மறந்துட்டேன், ஞாபகத்திற்கு வரலை, கொஞ்ச நேரம் கழித்துப்பேசுகிறேன்© என்று மண்டையைக் குழப்பிக் கொண்டே போனை வைத்து விடுவோம். சிறிது நேரத்திலேயே சொல்ல வந்த விஷயம் ஞாபகத்திற்கு வந்தவுடன், மறுபடியும் போன் செய்வது, பலரது வழக்கம்.

சொல்லப் போகிற விஷயத்தை ஒரு குறிப்பு எடுத்து வைத்துக் கொண்டு தொலைபேசியைத் தொட்டால் இந்த இரண்டாவது போன் பில் குறையும். மேலும் குறிப்பெடுக்கும் பழக்கம் ஒரு சாதனையாளரின் துவக்கம்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக