ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்வைக் குறைபாடும், கண்ணாடியும்!

Go down

பார்வைக் குறைபாடும், கண்ணாடியும்! Empty பார்வைக் குறைபாடும், கண்ணாடியும்!

Post by சிவா Sun Mar 30, 2014 1:30 am



கண்ணில் பார்வைக் குறைபாடு இருந்தால் கண்ணாடி அணிவது ஒரு காலம். ஆனால், இன்று ஸ்டைலாக இருக்க வேண்டும், பெர்சனாலிட்டியைக் கூடுதலாகக் காட்டவேண்டும் என்பதற்காகவே கண்ணாடி அணிகின்றனர் இளைஞர்கள்.

''எப்போதும் கண்களைச் சுருக்கியபடி பார்க்கும் ராதா, 'ராஜா சார், அட்டெண்டர் ராஜேந்திரன் எத்தனை தடவை கூப்பிட்டாலும், காதுல வாங்காமப் போறான்... அவனைக் கூப்பிடுங்க' என்பாள். 'அவரு ராஜேந்திரன் இல்லைம்மா.... ரமேஷ்' என்பார் அவர்.

ராதாவுக்கு, தூரத்தில் போகும் ஒல்லியான உருவத்துடன் இருப்பவர்கள் எல்லோரும், ஒரே மாதிரியாகத் தெரியும். 'ஓஹோ... நாமதான் சரியா கவனிக்கலையோ...' என்று அப்படியே விட்டுவிட்டாள். தூரத்தில் குண்டானவர் போனாலும், நிழல்போல், அவளுக்கு ஒல்லியாகத் தெரிய... கண்ணில் கோளாறு இருப்பது உணர்ந்து, என்னிடம் வந்தார். சிலரோ, 'எனக்கு இவ்வளவுதான் பார்வை. எல்லோருக்கும் இப்படித்தான் இருக்கும்போல...!’ என்று எண்ணி, கண்களைப் பரிசோதித்துக் கொள்ளமாட்டார்கள்.

எப்படியோ சமாளித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம், தானாகவே சரியாகிவிடும் என்ற கருத்து, போட ஆரம்பித்தால் கழற்றவே முடியாமல் போய்விடும் என்ற நினைப்பு... இப்படிப் பல காரணங்களால் கண்னாடியைத் தவிர்க்கின்றனர். எல்லோருமே கண் பார்வை குறைபாட்டைப் பரிசோதித்து, கண்ணாடியின் அவசியத்தை உணரவேண்டும்'' என்கிற கண் மருத்துவர் என்.எஸ்.சுந்தரம், கண்களில் ஏற்படும் கோளாறுகள் மற்றும் கண்ணாடி போடவேண்டியதன் அவசியம் பற்றி கண்டிப்புடன் சொல்கிறார்.

'நாம் பார்க்கும் மனிதர்கள், பொருட்களின் பிம்பமானது ஒளிக்கதிராக, நம்முடைய கண்ணின் லென்ஸ் வழியே சென்று ஒளித்திரையின்மீது குறிப்பிட்ட இடத்தில் குவிந்து விழுகின்றன. ஆனால், சில பார்வை குறைபாட்டில் அதிகம் ஒளிக்கதிர்கள், ஒளித்திரையில் விழாமல், அதற்கு முன்போ அல்லது பின்னாலோ விழநேரிடும். இதனால்தான் கிட்டப் பார்வை, தூரப் பார்வை ஏற்படுகிறது. இந்த ஒளிக்கதிர்களை தகுந்த இடத்தில் விழச் செய்வதுதான் கண்ணாடியின் வேலை.

10 அடி தூரத்தில் இருக்கும் ஒரு எறும்பு போவது தெரிந்தால், பார்வை கூர்மையாக இருக்கிறது என்று அர்த்தம். அதே 10 அடி தூரத்தில் இருந்தால்தான், யானையாக இருந்தாலும் தெரியும் என்றால் அது நல்ல பார்வையல்ல. பார்வைக்கும் அளவுகோல் இருக்கிறது.

தூரப்பார்வை (Hypermetropia)

கண்ணின் அமைப்பே சிறிதாக இருப்பவர்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்படும். குவிந்து வரும் ஒளிக்கதிர்கள் ஒளித் திரைக்குப் பின்னால் விழும். இதைத் தகுந்த இரு குவிலென்ஸினால் சரிசெய்யலாம். கண் புரை ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கும், 10+ டி லென்ஸ் அவசியம். படிப்பதற்கு இதற்கு மேலும் +3டி ஆக அல்லது 14டி+ லென்ஸ் தேவைப்படும். கண் புரை அறுவை சிகிச்சை செய்து ஐ.ஓ.எல் (IOL) வைத்துக் கொள்பவர்களுக்கு தூரப்பார்வை நன்றாக இருந்தாலும் படிப்பதற்குக் கூடுதலாக +3டி கண்ணாடி அவசியம் தேவை.

கிட்டப் பார்வை (Myopia)

கண்களின் அமைப்பு இதில் பெரிதாக இருக்கும். குவிந்து வரும் ஒளிக்கதிர்கள் ஒளித்திரைக்கு முன்னாலேயே விழும். இந்தக் கிட்டப்பார்வையில் இரண்டு வகை உண்டு.

1. சிம்பிள் மையோபியா (Simple Myopia):

இந்த அமைப்பில் பார்வை, 1 அல்லது 2 வருடங்களில் சிறிது அதிகரிக்கலாம்.

2. ப்ரொக்ரசிவ் மயோபியா (Progressive Myopia):

இந்த அமைப்பில் வருடாவருடம் பவர் அதிகரித்துக் கொண்டே வரும். சுமார் 25 வயதுவரை இம்மாற்றம் ஏற்படலாம். இது பரம்பரை வாகு என்பதால் இதைத் தடுக்க முடியாது. பரிசோதனை செய்து தகுந்த Concave - lens கான்கேவ் லென்ஸ் மூலமாக, ஒளித்திரையின் முன்னால் விழக்கூடிய கதிர்களை விரிவடையச் செய்யலாம். இந்த மாதிரி பிறக்கும் குழந்தைகளுக்கு 3 வயதிலேயே கண் மருத்துவரிடம் காட்டி, பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.

ஒரு கோணப்பார்வை (Astigmatism)

ஒரு கோணத்தில் 90 டிகிரி வரக்கூடிய ஒளிக்கதிர்கள் ஒளித்திரையின் மீதும், இதற்கு எதிராக 180 டிகிரி கோணத்தில் வரக்கூடிய ஒளிக்கதிர்கள் ஒளித்திரைக்கு முன்போ அல்லது பின்போ விழலாம்.



வெள்ளெழுத்து (Presbyopia)

40 வயதில் தொடங்கும் இது வியாதியல்ல. இயற்கையின் விதி. சிறிய வயதிலேயே பிளஸ் பவர் கண்ணாடி அணிபவர்களுக்கு 37, 38 வயதிலேயே வந்துவிடும். சிறு வயதில் உள்ள பார்வைத்திறன் படிப்படியாகக் குறைந்து கொண்டே வரும். குறிப்பிட்ட தூரத்தில் 25-30 செ.மீ. குறிப்பிட்ட அளவில் உள்ள எழுத்துக்களைப் பார்க்க முடியாது. (-) கண்ணாடி உள்ளவர்களுக்கு இதை எடுத்துவிட்டுப் பார்த்தால் தெரிய வரும். இதை சிலர் 'நான் கண்ணாடி இல்லாமலேயே படிக்கிறேன்’ என்று பெருமையாக சொல்வதுண்டு. இது தவறு. ஐம்பது வயதில் தூரப் பார்வையானது மைனஸ் 2-ஆக இருந்தால் படிப்பதற்கு பிளஸ் 2டி சேர்த்தாலே போதும். பார்வை தெளிவாகத் தெரியும்.

50-60 வயதில் வெள்ளெழுத்து கண்ணாடி அணிந்தவர்கள், கண்ணாடி இல்லாமல் படிக்கத் தெரிகிறது என்று சந்தோஷப்பட்டு சொன்னால் அவர்களுக்கு கண்புரை ஆரம்பமாகிவிட்டது என்று அர்த்தம். தூரப்பார்வை குறைந்துவிடும். இந்த சந்தோஷம்கூட சில ஆண்டுகள்தான் நீடிக்கும். பிறகு பார்வையை எந்தக் கண்ணாடியின் மூலமாகவும், திரும்பப் பெற முடியாத நிலை ஏற்படும். இதற்காக பயப்பட வேண்டியதில்லை. கண்புரை அறுவை சிகிச்சை செய்து IOL லென்ஸ் பொருத்திக் கொண்டால் மீண்டும் பார்வை பெறலாம்.

தூரப்பார்வைக்கும், படிப்பதற்கும் நல்ல பார்வை வேண்டும் என்றால் கண்ணாடி மிகவும் அவசியம். 40 வயதுக்கு முன்பு பார்வைக்காக கண்ணாடி அணியாமல் இருக்கலாம். ஆனால், 40 முதல் 70 வயது வரைக்கும் குறிப்பிட்ட அளவுகோலின்படி நல்ல பார்வையுடன் கண்ணாடி இல்லாமல் இருக்கமுடியாது. தூரப்பார்வைக்கும், படிப்பதற்கும் என இரண்டையும் ஒரே சமயத்தில் தெரிந்து கொள்ள பைஃபோகல் லென்ஸ் தேவை. ''கண் பரிசோதனை செய்து கண்ணாடி அணிந்து கொண்டால் எல்லாம் சரியாகிவிடும். அத்துடன் கண்களை அடிக்கடி சிமிட்டுவதும்கூட பெரும்பாலான கண் பாதிப்பில் இருந்து மீள உதவும்'' என்கிறார்.

கண்ணாடி அணியாமல் போனால்...

பார்வை மங்கலாகும்.
கண்ணில் வலி, கண் எரிச்சல், தலைவலி ஏற்படும்.
படிக்க மிகவும் பிரயத்தனப் படவேண்டியிருக்கும்.
சிறிது படித்தாலும் களைப்பு ஏற்படும்.
கண் பாரமாக இருக்கும்.
ஒழுங்காக, வேகமாகப் படிக்க முடியாத தன்மை, சீக்கிரத்தில் முடிக்க முடியாத நிலை ஏற்படும்.
புத்தகங்களை அதிக தூரத்தில் வைத்துப் படிக்க வேண்டியிருக்கும்.
கண்ணில் நிரந்தரப் பார்வை இழப்பு, மாறுகண் போன்றவை ஏற்படலாம்....
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum