ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோடி பிரதமாரவது இருக்கட்டும், அவர் தன் தொகுதியான வாரணாசியில் வெற்றி பெறுவாரா?

Go down

மோடி பிரதமாரவது இருக்கட்டும், அவர் தன் தொகுதியான வாரணாசியில் வெற்றி பெறுவாரா? Empty மோடி பிரதமாரவது இருக்கட்டும், அவர் தன் தொகுதியான வாரணாசியில் வெற்றி பெறுவாரா?

Post by சிவா Sat Mar 29, 2014 10:55 pm

மோடி பிரதமாரவது இருக்கட்டும், அவர் தன் தொகுதியான வாரணாசியில் வெற்றி பெறுவாரா? 1013782_648156185257482_1370981593_n

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், வாரணாசி லோக்சபா தொகுதியில், "நான் ஜெயிப்பது முக்கியம் அல்ல, மோடி தோற்கடிக்கப்படவே ண்டும்' என்ற கோஷத்தோடு, மோடிக்கு எதிராக களம் இறங்கியதில் இருந்தே, மோடியின் வெற்றி வாய்ப்புகள் குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டு உள்ளன.

கெஜ்ரிவால், தன் வழக்கமான நாடக பாணியில், ""போட்டியிடுவது குறித்து வாரணாசி மக்களிடம் அனுமதி கேட்கப்போகிறேன்,'' என கூறி, கடந்த 25ம் தேதி, சிவகங்கா எக்ஸ்பிரஸ் ரயிலில் வாரணாசிக்கு வந்து இறங்கும் முன்பே பரபரப்பை கிளப்ப துவங்கினார். ரயிலில் பயணித்தபடியே, ""பா.ஜ., என் கூட்டங்களை சீர்குலைக்க சதி வேலைகளில் ஈடுபடப் போகிறது'' என, "ட்வீட்' செய்தார்.அதற்கு ஏற்ப, கெஜ்ரிவாலின் "அனுமதி கேட்கும் கூட்டங்களில்' அவர் மீது முட்டையும், மையும் வீசப்பட்டன. பேனியாபாக் பகுதியில் நடந்த அவரது பொது கூட்டத்தில் கைகலப்பு ஏற்பட, போலீசார், தடியடி நடத்தினர்.இவற்றின் மூலம், தன் வருகையை, வெற்றிகரமாக, ஒரு ஊடக சம்பவமாக கெஜ்ரிவால் மாற்றிக் கொண்டார்.

இதற்கு இடையே, பொது கூட்டத்தில் கூடி இருந்த 40 ஆயிரம் பேரிடம் அனுமதி கேட்க, "வாக்கெடுப்பு' ஒன்றை நடத்தினார்.மாலை 6:31க்கு துவங்கிய இந்த வாக்கெடுப்பு, தமிழக சட்டசபை வாக்கெடுப்புகளை விட வேகமாக, 6:39க்கே முடிந்து விட்டது அதில் தனக்கு "அனுமதி' கிடைத்து விட்டதாக கெஜ்ரிவால் அறிவித்தார்.கெஜ்ரிவால் மீது முட்டை வீசிய நபர்கள், பா.ஜ.,வினர் தான் என, போலீசார் தெரிவிக்க, "பா.ஜ.,வினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது, அதனால் தான் அவர்கள் இப்படி செய்கின்றனர்' என, ஆம் ஆத்மி மற்றும் பிற கட்சியினர் ஊடகங்களில் செய்திகளை பரப்ப துவங்கினர்.அதோடு, தற்போது, வாரணாசி தொகுதியில் உள்ள, 3.5 லட்சம் முஸ்லிம் ஓட்டுகள், மோடிக்கு எதிரானவையாக இருக்கும் என்பதும்; அனைத்து முஸ்லிம்களும் மோடிக்கு எதிராக கெஜ்ரிவாலுக்கு ஓட்டுப் போடுவார்கள் என்பதும், வடமாநில ஆங்கில ஊடகங்களின் கருத்தாக உள்ளது. இதன் அடிப்படை என்ன?

வாரணாசி தொகுதியில், 3.5 லட்சம் முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 16 லட்சம் வாக்காளர்கள் உள்ள அந்த தொகுதியில், வழக்கமாக ஓட்டு பதிவு, 42 சதவீதமாக இருக்கும். அதாவது 6.7 லட்சம் ஓட்டுகள் வரை பதிவாகும். அதில் பாதிக்கும் மேல் முஸ்லிம் வாக்காளர்கள் என்பதாலேயே ஊடகங்களும், ஆய்வாளர்களும் மோடியின் வெற்றி வாய்ப்பு குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.மோடிக்காக, குஜராத் முஸ்லிம்கள் வாரணாசியில் பிரசாரம் செய்தாலும், அதை முறியடிக்கவும்; சிறுபான்மையினர் ஓட்டுகளை ஒரே வேட்பாளர் அள்ளும் வகையிலும், பா.ஜ.,வுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் திட்டம் போட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நோக்கத்தில் தான், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் முக்தர் அன்சாரி நிறுத்தப்பட்டு உள்ளார் என்றும், அவர் தான் சிறுபான்மையினரின் ஓட்டை அள்ள உள்ள நபர் என்றும், வாரணாசி தொகுதி குறித்து நன்கு அறிந்த அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வழக்கமாக முஸ்லிம் ஓட்டுகளை கவர முனையும் சமாஜ்வாதி கட்சி, இந்த முறை கைலாஷ் சவுராசியா என்ற, "டம்மி' வேட்பாளரை நிறுத்தி உள்ளது. காங்கிரஸ் இதுவரை எந்த வேட்பாளரையும் அறிவிக்கவில்லை, ஆனால், அந்த கட்சியின் சார்பில் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா நிறுத்தப்படலாம் என, கூறப்படுகிறது. அதாவது, வேறு எந்த பெரிய கட்சியும் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தி சிறுபான்மையினரின் ஓட்டை பிரிக்க விரும்பவில்லை. அதற்கு விசை கொடுக்கும் வகையில், ஊழலுக்கு எதிராக பேசிவந்த கெஜ்ரிவாலும், தற்போது, மதவாதம் பற்றியே அதிகம் பேசுகிறார்.

ஒவ்வொரு முறையும், பா.ஜ.,வுக்கு சாதகமான அலை எழும்போது, உ.பி.,யில் சிறுபான்மை வாக்காளர்கள் அனைவரும் ஓட்டுப் போட தவறுவதில்லை என, கூறப்படுகிறது. 1998 முதல், 2.7 லட்சம் ஓட்டுகளுக்கு மேல், வாரணாசி தொகுதியில் யாரும் பெற்றதில்லை. இந்த நிலையில், அனைத்து சிறுபான்மை வாக்காளர்களும் மோடிக்கு எதிராக ஓட்டுப்போட முடிவெடுத்தால், அது மோடிக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தும். மேலும், இந்த முறை, பா.ஜ.,வில் பிராமண சமுதாயத்தினர் ஓரங்கட்டப்பட்டு உள்ளதால், அந்த சமுதாயத்தின் ஓட்டுகள் முன்பு கிடைத்த அளவிற்கு கணிசமாக கிடைக்காது என, ஒரு தரப்பினர் கூறுகின்றனர். அந்த குட்டையை மேலும் குழப்பும் வகையில் தான் காங்கிரஸ், பிராமண சமுதாயத்தை சேர்ந்த ஆனந்த் சர்மாவை களத்தில் இறக்க உள்ளது. பா.ஜ.,வும் இதை அறிந்து தான் இருக்கிறது. அதனால், தான், அப்னா தல் என்ற, சிறிய ஜாதி கட்சி ஒன்றோடு கூட்டணி வைத்து உள்ளது.

அந்த கட்சி, வாரணாசி தொகுதிக்கு உட்பட்ட ஐந்து சட்டசபை தொகுதிகளில், இரண்டில் செல்வாக்கு பெற்றது. கடந்த லோக்சபா தேர்தலில், அந்த தொகுதியில், அந்த கட்சி 66 ஆயிரம் ஓட்டுகளை பெற்றது. அவற்றில் பெரும்பான்மை மோடிக்கு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பா.ஜ.,விற்கு கணக்கு இடிக்கும். ஏனெனில், கடந்த முறை இங்கு வென்ற பா.ஜ., மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கு, 2.03 லட்சம் ஓட்டுகள் தான் கிடைத்தன. இதை அப்னா தல் ஓட்டுகளோடு கூட்டினால், 2.69 லட்சம் ஓட்டுக்கள் தான் கிடைக்கின்றன. ஆனால், எதிரணியினர் கையில் சிறுபான்மையின ஓட்டுகளோடு சேர்த்து, பகுஜன் சமாஜ் கட்சிக்கு தவறாமல் ஓட்டளிக்கும் தலித் சமூகத்தின் ஓட்டுகளும் உள்ளன. அதனால், 3.5 லட்சம் ஓட்டுகளுக்கும் மேலாக பெற்றால் தான், மோடிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. இதற்கு பா.ஜ., நம்பி இருப்பது, "மோடி அலை'யை மட்டும் தான். ஒவ்வொரு முறையும் பா.ஜ.,விற்கு சாதகமான சூழல் உருவாகும் போதும், வாரணாசி தொகுதியில் வாக்கு பதிவு விகிதம் அதிகரிக்கும். இப்படி தான், 1998லும், 1999லும் தொடர்ச்சியாக வந்த தேர்தல்களில், "வாஜ்பாய் அலை' காரணமாக முறையே, 47 மற்றும் 45 சதவீத ஓட்டுகள் பதிவாகின. அதாவது, 42ல் இருந்து 47 ஆக ஓட்டு பதிவு விகிதம் அதிகரிக்குமானால், கூடுதலாக, 800 ஆயிரம் ஓட்டுகள் வரை பதிவாகும். அப்போது, மோடி 3.5 லட்சம் ஓட்டுகள் என்ற, இலக்கை தொட முடியும். ஆனால், இதிலும் ஒரு பிரச்னை உள்ளது. சிறுபான்மை ஓட்டுகளை கவர கெஜ்ரிவால் முயற்சிப்பார் என, அனைவரும் எண்ணிக் கொண்டு இருந்த வேளையில், கங்கையில் குளியல், கோவில்களில் வலம் வருவது என, இந்து ஓட்டுகளை படு சாதுர்யமாக குறிவைத்து உள்ளார்.

இதனால், அதிகரிக்கும் வாக்கு பதிவு விகிதத்தில் இருந்து கிடைக்கும் ஓட்டுகளில் ஒரு பங்கு அவருக்கும் செல்ல வாய்ப்பு உள்ளது என, அரசியல் பார்வையாளர்கள் எச்சரிக்கின்றனர். தொகுதியில் புது முகமாச்சே! அவருக்கு ஓட்டு கிடைக்குமா' என, எண்ணும் போது, 1977ல், ஜனதா கட்சி, துவங்கப்பட்ட மூன்றே மாதங்களில், கட்சி அலுவலகம் கூட இல்லாத இடங்களில் ஓட்டுகளை அள்ளியதை நினைவில் கொள்ள வேண்டி உள்ளது. அதனால், வெள்ளப்பெருக்கு எடுக்கும் கங்கை போல, வாக்கு பதிவு விகிதம் அதிகரித்தால் தான், மோடியால் வெற்றி பெற முடியம். வரும் மே, 12ம் தேதி, வாரணாசியில் ஓட்டு பதிவு நடக்க உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.

தினமலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெஜெயலலிதா வெற்றி தில்லியிலும் எதிரொலிக்கும்: மோடி
» மோடி மேஜிக் ! வெற்றி வியூகமா...வெற்று கோஷமா ?
»  ஒலிம்பிக்கில் வெற்றி, தோல்வியை கண்டு துவளாதீர்கள் வீரர்களுக்கு மோடி அறிவுரை
» ராஜா அண்ணாவின் காதல் வலி.. அவர் வலியை கவிதயாய் தருபவர் அவர் தங்கை மீனு ..
» பா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி : மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum