ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைவிமர்சனம்: நெடுஞ்சாலை

3 posters

Go down

திரைவிமர்சனம்: நெடுஞ்சாலை Empty திரைவிமர்சனம்: நெடுஞ்சாலை

Post by சிவா Fri Mar 28, 2014 8:10 pm

திரைவிமர்சனம்: நெடுஞ்சாலை Nedunjalai-1

நள்ளிரவில் நெடுஞ்சாலையில் பொருட்களை ஏற்றிக் கொண்டு செல்லும் லாரிகள் எல்லாம் அந்த ஊரில் தார்பாய் முருகன் என்பவனின் அட்டகாசம் தாங்காமல் வேறு பாதையில் செல்கின்றன.

காரணம் லாரி போய் கொண்டு இருக்கும் போதே, சத்தமின்றி அதன் பின்னால் ஏறி அதிலிருந்து சரக்குகளையெல்லாம் திருடிவிடும் ஆற்றல் கொண்டவன்.

ஒரு சிறிய வாகனத்தில் தன் சகாக்களுடன் சேர்ந்து லாரிகளில் கொள்ளையடித்து, அதை தனது முதலாளியிடம் கொடுத்து விடுவதைத் தவிர தார்பாய் முருகனுக்கு, காசு பணம் மீது அந்தளவிற்கு ஈடுபாடு இல்லை.

இப்படியாக கரடு முரடாகப் போய் கொண்டு இருந்த முருகனின் வாழ்க்கையில் ஒரு மோசமான காவல்துறை அதிகாரியும், ஒரு பெண்ணும் நுழைகிறார்கள்.

இவர்கள் மூன்று பேருக்குள் என்ன மாதிரியான பிரச்சனைகள் உருவாகின்றன. இறுதியில் தார்பாய் முருகனுக்கு என்ன நேர்ந்தது என்பதை எதார்த்தமான திரைக்கதையுடன் சொல்கிறது இன்று புதிதாக வெளிவந்திருக்கும் “நெடுஞ்சாலை” திரைப்படம்.

சூர்யா, ஜோதிகா நடிப்பில் “சில்லுனு ஒரு காதல்” படத்தை இயக்கிய கிருஷ்ணா தான் “நெடுஞ்சாலை” படத்தின் இயக்குநர். உதயநிதி ஸ்டாலின் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

தார்பாய் முருகனாக ஆரியும், கதாநாயகியாக ஷிவதாவும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் தம்பி ராமையா, மலையாள நடிகர் சலீம் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்திற்கு சத்யா என்பவர் இசையமைத்துள்ளார். பின்னணி இசையும், பாடல்களும் ரசிக்க வைக்கின்றன. 1980 களில் நடந்த கதை என்பதால் அந்த காட்சிகளைக் கொண்டு வர ஒளிப்பதிவாளர் ராஜீவன் மிகவும் மெனக்கெட்டிருக்கிறார். குறிப்பாக அதிகாலை, நள்ளிரவு காட்சிகள் நெடுஞ்சாலையின் குளிரை நம்முள் கொண்டு வந்து வீசுகின்றன. கிஷோரின் படத்தொகுப்பு கதையின் வேகத்தை அதிகரித்திருக்கிறது.

திரைக்கதை

“நெடுஞ்சாலை” என்ற பெயருக்கேற்றார் போல் இப்படத்தின் கதையும் ஒரு பயணத்தில் தொடங்குகின்றது. தார்பாய் முருகன் கூட்டாளிகளில் ஒருவர் கதையை சொல்லத் தொடங்குகின்றார்.

நிகழ்காலத்தில் தொடங்கும் கதை, பிளாஷ்பேக்கில் 1980 களுக்கு செல்கின்றது. அந்த காலத்து கிராமம், அதன் வழியே செல்லும் நெடுஞ்சாலை, வட்டார மொழி, வானொலி திரைப்பாடல்கள் என ஒவ்வொன்றும் மிக கவனமாக கையாளப்பட்டிருக்கின்றன.

பிளாஷ்பேக் காட்சிகள் பார்வையாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தாத வகையில் சொல்லப்பட்டிருப்பது இயக்குநரின் திறமையை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கின்றது.

படத்தின் இறுதியில் நல்லா வாழ்பவருக்கு ஒரு உதாரணமும், தீய வழிகளில் சென்று அழிந்து போனவருக்கு ஒரு உதாரணமும் சொல்லிய விதம் அருமை.

கதாப்பாத்திரங்கள்

ரெட்டை சுழி படத்தில் நடித்த ஆரி என்ற நடிகரா இவர் என்று கேட்கும் அளவிற்கு, உடற்கட்டு முதல் தலைமுடி, தாடி வரை கரடு முரடான தோற்றத்துடன் தார்பாய் முருகனாக வாழ்ந்திருக்கிறார்.

லாரியை துரத்திக்கொண்டு ஓடுவது, தன்னைத் தேடி வரும் கதாநாயகியை கோபம் கொண்டு விரட்டுவது. காதல் வந்த பின்னர் காதலியிடம் அன்பாகப் பேசுவது என ஒரு அச்சு அசல் முரட்டுத்தனம் நிறைந்த கிராமத்துவாசியாக நடித்திருக்கிறார். அவர் பேசும் வசன உச்சரிப்புகள் அற்புதம்.

கதாநாயகி ஷிவதா, நெடுஞ்சாலையில் சாப்பாட்டுக் கடை வைத்திருக்கும் மலையாள பெண்ணாக சிறப்பாக நடித்திருக்கிறார். மலையாளப் பெண்களிடம் இருக்கும் அதே அப்பாவித் தனம், குறும்பு ஆகிய உணர்வுகளை மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் கோபப்படும் இடங்களில் மட்டும் நடிப்பில் ஏனோ லேசான செயற்கைத்தனம் எட்டிப்பார்க்கிறது. பாவாடை சட்டையில் மிக அழகாகத் தெரிகிறார்.

வில்லனாக வரும் காவல்துறை அதிகாரி பிரசாந்த் நாராயணன், மிரட்டியிருக்கிறார். அவர் பேசும் கொச்சைத் தமிழும், அவரது வித்தியாசமான நடிப்பும் தமிழகத்தின் கேரளா, கர்நாடகா எல்லையோர கிராமங்களை நினைவு படுத்துகின்றது. நாயகி ஷிவதாவை அவர் வச்ச கண் வாங்காமல் உற்றுப் பார்க்கும் காட்சிகளில் நமக்குள் ஏனோ ஒருவித பதைபதைப்பு ஏற்படுத்துவதைத் தடுக்க முடியவில்லை.

சாப்பாட்டுக் கடை மாஸ்டராக தம்பி இராமையா, அவருக்கு உதவியாக வரும் சிறுவன், நாட்டுசேகர் வேடத்தில் வரும் மலையாள நடிகர் சலீம் அவருக்கு உதவியாக வரும் நடிகர் (கும்கி படத்தில் தம்பி இராமையாவிற்கு உதவியாளராக வருபவர்) ஆகியோர் கூட்டணியில் படத்தில் கலகலப்பிற்கு பஞ்சமில்லை.

சருக்கல்கள்

சில இடங்களில் கதாப்பாத்திரங்களின் வசன உச்சரிப்பு சரியாக விளங்கவில்லை. பார்வையாளர்களை மிரட்ட வேண்டும் என்பதற்காகவே அடித் தொண்டையில் பேச வைத்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

ஆரியும், காவல்துறை அதிகாரியும் அடிக்கடி மோதிக்கொள்ளும் இடங்கள் அலுப்பை ஏற்படுத்துகின்றன. காட்சிகளில் அவ்வளவு அழுத்தம் இல்லை.

மற்றபடி, விறுவிறுவென நகரும் திரைக்கதை, ஆங்காங்கே திருப்பங்கள், இதுவரை சொல்லப்படாத கதைக்களம் என “நெடுஞ்சாலை” – ஒரு எதாரத்தமான பயணமாக அமைகின்றது.

- செல்லியல் விமர்சனக் குழு
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திரைவிமர்சனம்: நெடுஞ்சாலை Empty Re: திரைவிமர்சனம்: நெடுஞ்சாலை

Post by சிவா Fri Mar 28, 2014 10:54 pm

நெடுஞ்சாலை - மாலைமலர் விமர்சனம்

நடிகர் : ஆரி
நடிகை : ஷிவதா
இயக்குனர் : கிருஷ்ணா
இசை : சத்யா
ஓளிப்பதிவு : ராஜவேல்

நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களில் கூட்டாளிகளுடன் திருடி வருகிறார் நாயகன் ஆரி. திருடும் பொருட்களை சலீம்குமாரிடம் கொடுத்து அதில் வரும் பணத்தை வைத்து பிழைப்பு நடத்துகிறார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு போலீஸ் அதிகாரியான பிரசாந்த் நாராயண் புதிதாக பொறுப்பேற்கிறார். பொறுபேற்றவுடன் நெடுஞ்சாலை திருடர்களை பிடிக்க முயற்சி செய்கிறார்.

இதற்கிடையில் நெடுஞ்சாலையில் டெல்லி தாபா என்னும் ஓட்டல் நடத்தி வருகிறார் நாயகி ஷிவதா. ஒருநாள் ஷிவதாவின் ஓட்டலுக்கு உணவு சாப்பிட செல்கிறார் ஆரி. அங்கு நன்றாக சாப்பிட்டு விட்டு பணம் தராமல் செல்ல முயற்சி செய்கிறார். இதனால் கோபம் அடையும் ஷிவதா, ஆரியிடம் லாவகமாக பேசி அவரை வீட்டில் அடைத்து விட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்து விடுகிறார்.

போலீஸ் வந்து ஆரியை பார்க்கும் போது நீண்ட நாட்களாக தேடி வந்த நெடுஞ்சாலை திருடன் இவன் தான் என்று தெரிந்தவுடன் இவனை கைது செய்து போலீஸ் நிலைத்திற்கு அழைத்துச் செல்கிறனர். அங்கு போலீஸ் அதிகாரி பிரசாந்த் நாராயண் ஆரியை சரமாரியாக அடித்து துவைக்கிறார். அங்கு வரும் சலீம் குமார் பிரசாந்த்திடம் இனி நாங்கள் திருடுவதில் உங்களுக்கு பங்கு தருகிறோம் என்று கூறி ஆரியை வெளியே கொண்டு வருகிறார். இருந்தாலும் ஆரிக்கும் போலீசுக்கும் பகை இருந்து கொண்டே இருக்கிறது.

போலீஸ் நிலையத்திற்கு வந்த ஷிவதாவை கண்டவுடன் பிரசாந்த் நாராயண் அவளை அடைய விரும்புகிறார். இதற்கு ஷிவதா மீது ஆரிக்கு உள்ள கோபத்தை சாதகமாக பயன்படுத்தி, அவனை தூண்டி விட்டு ஷிவதாவின் தாபா கடையை அழிக்க சூழ்ச்சி செய்கிறார். இதை தடுப்பது போல் தாபா கடையையே சுற்றி சுற்றி வருகிறார் பிரசாந்த் நாராயண்.

ஒரு நாள் ஷிவதாவிடம் தப்பாக நடக்க முயற்சி செய்யும் பிரசாந்த் நாராயணை ஷிவதா தாக்கிவிடுகிறார். இதனால் கோபம் அடைந்து ஷிவதா மீது விபச்சார வழக்கு பதிவு செய்து கோர்ட்டுக்கு அழைத்துச் செல்கிறார். கோர்ட்டில் ஆரியை சாட்சி சொல்ல வைக்கிறார் பிரசாந்த். ஆரியோ ஷிவதாவை நான் பார்த்ததே இல்லை என்று சொல்கிறார். ஷிவதா தன் மானத்தை காப்பாற்றிய ஆரியை காதலிக்க ஆரம்பிக்கிறார். முதலில் வெறுக்கும் ஆரி பிறகு ஷிவதாவின் காதலை ஏற்றுக் கொள்கிறார். காதலித்த பின் ஆரி திருந்தி வாழ முயற்சி செய்கிறார்.

இதையறிந்த பிரசாந்த் ஆரியை தீர்த்து கட்டிவிட்டு ஷிவதாவை அடைய முடிவு செய்கிறார். இறுதியில் பிரசாந்திடம் இருந்து ஆரி தப்பித்தாரா? ஆரியும் ஷிவதாவும் சேர்ந்து வாழ முடிந்ததா? என்பதே மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஆரி, தன் கதாபாத்திரத்தை உணர்ந்து தன் உருவத்திலும், உடையிலும் அழுத்தமாக பொருந்தியிருக்கிறார். குறிப்பாக ஓடும் லாரிகளை விரட்டி சென்று திருடும் காட்சிகளில் திறமையான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். மேலும் காதல் காட்சிகள், போலீசுடன் மோதும் காட்சிகளில் நடிப்பில் முதிர்ச்சி.

நாயகியாக நடித்திருக்கும் ஷிவதா, கனமான கதாபாத்திரத்தை ஏற்று அதை திறம்பட செய்திருக்கிறார். நெடுஞ்சாலையில் பூத்த மலர் போல் இருக்கிறார். மேலும் படத்தில் சலீம் குமார், தம்பி ராமையா, பிரசாந்த் நாராயண், கண்ணன் பொன்னையா ஆகியோர் கதாபாத்திரத்தை உணர்ந்து திறமையாக நடித்துள்ளனர்.

படத்திற்கு கூடுதல் பலம் சத்யாவின் இசை. பாடல்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் கேட்கும் ரகம். அதை ஒளிப்பதிவு செய்த ராஜவேலை மிகவும் பாராட்டலாம். 1980ம் ஆண்டுகளில் நெடுஞ்சாலையில் நடந்த உண்மை நிகழ்வை திரைக்கு ஏற்றார் போல் காதலை கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் கிருஷ்ணா.

மொத்தத்தில் ‘நெடுஞ்சாலை’ சுமாரான சாலை.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திரைவிமர்சனம்: நெடுஞ்சாலை Empty நெடுஞ்சாலை-விகடன் விமர்சனம்

Post by தமிழ்நேசன்1981 Fri Apr 04, 2014 1:00 pm

நெடுஞ்சாலை - விகடன் விமர்சனம்
திரைவிமர்சனம்: நெடுஞ்சாலை P12
கொள்ளை, குரோதம், காதல்... இவற்றை ஜன்னல்வழிக் காட்சிகளாகக் கடத்துகிறது 'நெடுஞ்சாலை’!

சரக்கு லாரிகளில் திருடும் ஆரி-க்கும், தாபா 'ஓனர்’ ஷிவதாவுக்கும் காதல். இதனால் ஷிவதா மேல் மோகம்கொண்டு அலையும் இன்ஸ்பெக்டர் பிரசாந்த் நாராயணனுக்கும் ஆரி-க்கும் மோதல். சூழ்ச்சி, சூதுகளுக்கு மத்தியில் காதலும் காதலர்களும் என்ன ஆனார்கள் என்பதே 'நெடுஞ்சாலை’ப் பயணம்!

80-களில் தேசிய நெடுஞ்சாலைகளைப் பரபரக்க வைத்த தார்ப்பாய்த் திருட்டைப் பின்னணியாக வைத்து கதை பின்னியிருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணா. தார்ப்பாய்த் திருட்டுக் காட்சிகள் படத்தின் பவர்ப்ளே ஏரியா. ஆனால், அதை 'தொட்டுக்கா’ ஆக்கிவிட்டு, பழக்கமான திருடன்-போலீஸ் விறைப்பு முறைப்பு காட்சிகளால் திரைக்கதையைத் தொகுத்திருக்கிறார்கள்!

கண்களில் கள்ளத்தனம், உடையில் அழுக்கு, உடல் மொழியில் அலட்சியம்... என 'தார்ப்பாய் முருகன்’ கேரக்டருக்கு ஆரி செம ஃபிட். தபதபவென ஓடிவந்து லாரி மேல் லாகவமாக ஏறுவதும், 'எவன்டா இங்கே கஞ்சா குடிக்கிறது?’ என்று எகிறி, அது யார் எனத் தெரிந்ததும் அடங்குவதுமாக எதற்கும் தயாராக நிற்கிறார். நடை, உடை, கடைக்கண் பார்வை... என ஷிவதா நாயரிடம் (அறிமுகம்) கிராமத்து யட்சி வசீகரம். தாபா வாடிக்கையாளர்களை தாஜா பண்ணும்போது குறும்புக் குற்றாலமாகத் துள்ளுவதும், இன்ஸ்பெக்டர் சீண்டும்போது ஒரு நொடி கலங்கி, அடுத்த நொடியே வெளுத்தெடுப்பதும், ஆரியுடன் காதலில் நெக்குருகுவதுமாக... பொண்ணுக்கு நடிப்பும் பிரைட்!

'கஞ்சா போலீஸ்’ பிரசாந்த் நாராயணன், பல காட்சிகளில் கஞ்சாவை இழுத்தபடி பார்வையால் மிரட்டும் இடங்களில்... செம! புரோக்கர் கேரக்டர் நச் ஸ்கெட்ச். போலீஸைத் திட்டிக்கொண்டே அவர்களுக்கு சலாம் போடுவது, 'நான் எங்கே அவனை வெச்சிருக்கேன்? என் சம்சாரம்தான்..!’ என்று புலம்பவது என சகுனி புரோக்கர் கேரக்டரில் புகுந்து விளையாடியிருக்கிறார் சலீம்குமார்.

பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சரக்கு ஆட்டோ, தாபா கடை ஆகியவற்றில் மிளிர்கிறது சந்தானத்தின் கலை இயக்கம். இருளில், விளக்கில், நெருப்பில் பயணிக்கும் கேமரா மூலம், ஒவ்வொரு காட்சிக்கும் ஓவிய நேர்த்தி கொடுத்திருக்கிறது ராஜவேல் ஒளிவீரனின் ஒளிப்பதிவு. 'தாமிரபரணி’ மெலடியில் மனம் வருடும் சத்யாவின் இசை, 'வாராண்டி வாராண்டி...’ பின்னணி இசையில் திடுக் அதிர்ச்சி கொடுக்கிறது.

இன்ஸ்பெக்டர்- ஆரி இடையிலான 'ஆடு-புலி’ ஆட்டத்தில் எந்த விறுவிறுப்பும் இல்லை. சிக்கல் நீங்கி ஆரி-ஷிவதா இணைந்தபோதே படம் முடிந்துவிடுகிறது. ஆனால், அதற்குப் பிறகு வம்படியாக ஓர் அதிர்ச்சி க்ளைமாக்ஸ்... அதன் பிறகும் ஒரு நெகிழ்ச்சி க்ளைமாக்ஸ்..!

புரோக்கர் சலீம் உண்டாக்கும் திகீர் ட்விஸ்ட், கரன்சி லாரியைக் கண்டுபிடிக்கும் உத்தி... என மிகச் சில நிமிடங்களுக்கே தீப்பிடிக்கிறது திரைக்கதை.

அந்த 'டாப் கியர் டெம்போ’விலேயே முழுப் படமும் பயணித்திருந்தால், செம ரேஸ் சேஸாக இருந்திருக்கும் இந்த 'நெடுஞ்சாலை’!
திரைவிமர்சனம்: நெடுஞ்சாலை P12a
- விகடன் விமர்சனக் குழு
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

திரைவிமர்சனம்: நெடுஞ்சாலை Empty Re: திரைவிமர்சனம்: நெடுஞ்சாலை

Post by சிவா Sat Apr 05, 2014 7:19 am

சில்லுன்னு ஒரு காதலை முதல் படமாக தந்த கிருஷ்ணாவின் இயக்கத்தில், அடுத்து விலாவாரியாக வெளிவந்திருக்கிறது நம்மூர் இருட்டு நெடுஞ்சாலைகளும், அதன் திருட்டு மறுபக்கங்களும்...! அதிலும், திருடனுக்கும், போலீஸ்க்கும் உள்ள கூட்டு களவாணித்தனம், அதேநேரம் ஒரு அழகான பெண்ணால் அவர்களுக்குள் எழும் ஈகோ மோதல், காதல், காமம், காமெடி என சகலத்திலும் புகுந்து விளையாடி இருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணா. அவருடன் சேர்ந்து அதகளம் செய்திருக்கின்றனர், செய்திருக்கின்றன.., ஹீரோ ஆரி, ஹீரோயின் ஷிவதா, போலீஸ் வில்லன், காமெடி முதலாளி உள்ளிட்டோரும், அவர்களின் நடிப்பும், ஆர்ட் டைரக்டர் சந்தானத்தின் கலர்புல் ஆர்ட்ஸ், செட்ஸ், பன்ச் வசனங்கள் இல்லை என்றாலும் சிரித்து, சிரித்து நம் வயிற்றை பஞ்சர் செய்யும் வசனங்களுடன் நம்மை கதையோடு ஒன்றவிடும் ஆர்.எஸ்.ராமகிருஷ்ணன், இருட்டை மணிரத்னம் படங்களைக்காட்டிலும் அழகாக படம்பிடித்திருக்கும் ராஜவேல் ஒளிவீரனின் ஒளிப்பதிவு, எங்கேயும் எப்போதும் சத்யாவின் இதயத்தை வருடும் இதமான இசை உள்ளிட்ட ப்ளஸ், ப்ளஸ், கூடுதல் ப்ளஸ் சமாச்சாரங்கள்!

கதையென்னவோ., நெடுஞ்சாலையில் ஓடும் சரக்கு லாரிகளில், ஓட்டப்பந்தய வீரனாட்டம் ஓடி, தாவி, ஏறி தார்ப்பாயை பிரித்து, தட்டுப்படும் பொருட்களை எல்லாம் விட்டு வைக்காமல், அந்த லாரியின் பின்னாலேயே வரும் தங்கள் சகாக்களின் வண்டியில் ஏற்றி, தன்னை நம்பியிருக்கும் ஜீவன்களை வாழ வைக்கும் திருட்டு ஹீரோவின் காவல்துறையினருடனான கொடுக்கல், வாங்கல், முட்டல், மோதல் மற்றும் தாபா கடை கதாநாயகி உடனான காதல், புரிதல், கொடுக்கல், வாங்கல், இத்யாதி, இத்யாதி... சமாச்சாரங்கள் தான் என்றாலும், அதை இதயத்தை உருக்கும் விதமாகவும், உறைய வைக்கும்விதமாகவும், சொல்லியிருக்கும் பதத்தில் தான் நெடுஞ்சாலை ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொள்கிறது.

ஆகமொத்தத்தில், நெடுஞ்சாலைக்கொள்ளை., ரசிகர்களின் நெஞ்சை கொள்ளை கொள்வதோடு, தயாரிப்பாளர்களுக்கும், இப்படத்தை வாங்கி வெளியிட்டுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கும் கொள்ளை லாபத்தையும் தர இருக்கிறது என்றால் மிகையல்ல!

தினமலர் விமர்சனம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திரைவிமர்சனம்: நெடுஞ்சாலை Empty Re: திரைவிமர்சனம்: நெடுஞ்சாலை

Post by ayyasamy ram Sat Apr 05, 2014 10:16 pm

திரைவிமர்சனம்: நெடுஞ்சாலை 3838410834 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரைவிமர்சனம்: நெடுஞ்சாலை Empty Re: திரைவிமர்சனம்: நெடுஞ்சாலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum