புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மம்மா பிரச்சாரம் Poll_c10அம்மம்மா பிரச்சாரம் Poll_m10அம்மம்மா பிரச்சாரம் Poll_c10 
79 Posts - 67%
heezulia
அம்மம்மா பிரச்சாரம் Poll_c10அம்மம்மா பிரச்சாரம் Poll_m10அம்மம்மா பிரச்சாரம் Poll_c10 
21 Posts - 18%
mohamed nizamudeen
அம்மம்மா பிரச்சாரம் Poll_c10அம்மம்மா பிரச்சாரம் Poll_m10அம்மம்மா பிரச்சாரம் Poll_c10 
5 Posts - 4%
prajai
அம்மம்மா பிரச்சாரம் Poll_c10அம்மம்மா பிரச்சாரம் Poll_m10அம்மம்மா பிரச்சாரம் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
அம்மம்மா பிரச்சாரம் Poll_c10அம்மம்மா பிரச்சாரம் Poll_m10அம்மம்மா பிரச்சாரம் Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
அம்மம்மா பிரச்சாரம் Poll_c10அம்மம்மா பிரச்சாரம் Poll_m10அம்மம்மா பிரச்சாரம் Poll_c10 
2 Posts - 2%
Barushree
அம்மம்மா பிரச்சாரம் Poll_c10அம்மம்மா பிரச்சாரம் Poll_m10அம்மம்மா பிரச்சாரம் Poll_c10 
2 Posts - 2%
Tamilmozhi09
அம்மம்மா பிரச்சாரம் Poll_c10அம்மம்மா பிரச்சாரம் Poll_m10அம்மம்மா பிரச்சாரம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அம்மம்மா பிரச்சாரம் Poll_c10அம்மம்மா பிரச்சாரம் Poll_m10அம்மம்மா பிரச்சாரம் Poll_c10 
1 Post - 1%
nahoor
அம்மம்மா பிரச்சாரம் Poll_c10அம்மம்மா பிரச்சாரம் Poll_m10அம்மம்மா பிரச்சாரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மம்மா பிரச்சாரம் Poll_c10அம்மம்மா பிரச்சாரம் Poll_m10அம்மம்மா பிரச்சாரம் Poll_c10 
133 Posts - 74%
heezulia
அம்மம்மா பிரச்சாரம் Poll_c10அம்மம்மா பிரச்சாரம் Poll_m10அம்மம்மா பிரச்சாரம் Poll_c10 
21 Posts - 12%
mohamed nizamudeen
அம்மம்மா பிரச்சாரம் Poll_c10அம்மம்மா பிரச்சாரம் Poll_m10அம்மம்மா பிரச்சாரம் Poll_c10 
8 Posts - 4%
prajai
அம்மம்மா பிரச்சாரம் Poll_c10அம்மம்மா பிரச்சாரம் Poll_m10அம்மம்மா பிரச்சாரம் Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
அம்மம்மா பிரச்சாரம் Poll_c10அம்மம்மா பிரச்சாரம் Poll_m10அம்மம்மா பிரச்சாரம் Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
அம்மம்மா பிரச்சாரம் Poll_c10அம்மம்மா பிரச்சாரம் Poll_m10அம்மம்மா பிரச்சாரம் Poll_c10 
3 Posts - 2%
Barushree
அம்மம்மா பிரச்சாரம் Poll_c10அம்மம்மா பிரச்சாரம் Poll_m10அம்மம்மா பிரச்சாரம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
அம்மம்மா பிரச்சாரம் Poll_c10அம்மம்மா பிரச்சாரம் Poll_m10அம்மம்மா பிரச்சாரம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அம்மம்மா பிரச்சாரம் Poll_c10அம்மம்மா பிரச்சாரம் Poll_m10அம்மம்மா பிரச்சாரம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அம்மம்மா பிரச்சாரம் Poll_c10அம்மம்மா பிரச்சாரம் Poll_m10அம்மம்மா பிரச்சாரம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மம்மா பிரச்சாரம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 24, 2014 5:49 pm

அம்மம்மா பிரச்சாரம் P20

மற்ற கட்சியாக இருந்தால் தலைவரின் பேச்சைக் கேட்கத்தான் கூட்டம் வரும். ஆனால், அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆராக இருந்தாலும் ஜெயலலிதாவாக இருந்தாலும் ஆளைப் பார்ப்பதே ரத்தத்தின் ரத்தங்களுக்கு முழு திருப்தியைக் கொடுத்துவிடும். இந்தத் தேர்தலில் அதுவும் மாற்றம். ஜெயலலிதா வந்த ஹெலிகாப்டரைப் பார்ப்பதே பெரும்பேறு ஆகிப்போனது.

தேர்தல் பிரசாரத்துக்கு ஹெலிகாப்டரில்தான் சுற்றுப்பயணம் என்று ஜெயலலிதா முடிவெடுத்துவிட்டதால், இப்போதெல்லாம் மாலை, இரவு நேரக் கூட்டங்கள் கிடையாது. மதிய வேளையில் கொளுத்தும் வெயிலில்தான் பிரசாரக் கூட்டம். பிற்பகல் 3 மணிக்குப் பொதுக்கூட்டம் என்றால், 12 மணிக்கே கூட்டம் நடக்கும் மைதானத்தில் மக்கள் கூடிவிடுகிறார்கள். 12 மணியில் இருந்து 5 மணி வரைக்கும் வெயிலில் காத்திருப்பதே பெரிய அவஸ்தைதான். ஆனால், ஜெயலலிதாவைப் பார்க்கும் பரவசத்தில் அத்தனை கஷ்டங்களையும் மறந்துவிடுகிறார்கள்!

சிதம்பரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தைப் பார்க்க நான் போனபோது, பொதுக்கூட்ட மேடைக்கு எதிரில் கூடிய கூட்டத்துக்கு இணையாக அந்தப் பந்தலுக்குப் பின்னால் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடிலும் கூட்டம். அடித்தட்டு மக்கள் அதிகம் வாழும் கிராமங்கள் சூழ்ந்த தொகுதி என்பதால், அந்த மக்களுக்கு ஹெலிபேடும் ஹெலிகாப்டருமே அதிசயமாக இருந்தது.

'வாத்தியாரு ஒரு படத்துல ஹெலிகாப்டர்ல வந்து சண்டை போடுவாருல்ல... அதுல ஹெலிகாப்டரைப் பார்த்தது. அதுக்குப் பிறகு பார்த்ததே இல்லை!’ என்றபடி ஓடி வருகிறார் ஒரு தொண்டர்.

'உனக்குப் படம் பேரே தெரியலை... அது 'ஊருக்கு உழைப்பவன்’. தலைவரோட சண்டையைப் பார்க்கிறதுக்காகவே ரெண்டு மூணு தடவை போனோம்!’ என்கிறார் அவருடைய சகா.

இவர்கள் வருவதற்கு முன்பே பெருங்கூட்டம் அந்த இடத்தில் கூடி இருந்தது. அந்த நேரத்தில் வானத்தில் வெள்ளைப் புள்ளி. அதைப் பார்த்தே, 'அதோ அம்மா வந்தாச்சு... அம்மா வந்தாச்சு...’ என்று கத்த ஆரம்பித்தார்கள். ஆனால், சிதம்பரத்தை பைபாஸில் தாண்டிப்போய்விட்டது அந்த விமானம். அடுத்த சில நிமிடங்களில் 'ப்ஃப்’ என ஹெலிகாப்டர் சத்தம். முதலில் யார் அதனை உணர்ந்தது என்றே தெரியவில்லை. மொத்தக் கூட்டமும் வானத்தைப் பார்த்தது.

'இந்தப் பக்கமா இருந்து வர்றாங்க... மெட்ராஸ் அந்தப் பக்கம்ல இருக்கு?’ என்று ஒருவர் வானத்திலேயே சென்னையின் திசையை காம்பஸ் இல்லாமல் கணித்துக்கொண்டு இருந்தார். அந்த நேரம் பார்த்து ஒருவர் ஓடிவந்து, சின்ன பாக்கெட் டைரி ஒன்றைக் கொடுத்து, 'சார் இதுல மணியோட நம்பர் பார்த்துச் சொல்லுங்க சார்’ என்றார். 10, 15 பெயரில் மணி என்பதைக்கூட அவர் வாசிக்க முடியாதவராக இருந்தார். ஆனால், செல்போன் வைத்திருந்தார். மணியின் எண்ணை எடுத்துச் சொன்னதும், அதை அழுத்தி 'மணி’யைப் பிடித்து, 'மணீ... ஹெலிகாப்டர் வந்திருச்சி... அம்மா வந்தாச்சு... சத்தம் கேட்குதா?’ என்று குஷியில் குதித்தார். பிரசாரப் புழுதியைக் கிளப்பியபடி தரை இறங்கியது ஹெலி!

முன்பெல்லாம் சேலம், திருச்சியில் போய் தங்கிவிட்டு அங்கிருந்து காரிலோ, ஹெலிகாப்டரிலோ பிரசாரப் பயணம் போய் வந்தார் ஜெயலலிதா. இந்த முறை சென்னையில் இருந்து காஞ்சி. அங்கே முடித்துவிட்டு சென்னை. அங்கிருந்து மீண்டும் சிதம்பரம். சென்னைக்கு வந்துவிட்டு மீண்டும் ஈரோடு... என இரண்டு நாட்களுக்கு ஒரு முறை றெக்கை கட்டிப் பறக்கிறார். மிக அதிக நேரம் காரில் அவரால் உட்கார முடியவில்லை என்பதால்தான் இந்தப் பயணத் திட்டமாம். மார்ச் 3-ம் தேதி காஞ்சிபுரத்தில் தொடங்கிய ஜெயலலிதாவின் பயணம், அடுத்த மாதம் 21-ம் தேதி ஆலந்தூரில் முடிவது போல திட்டமிடப்பட்டுள்ளது.

கோயில் நகரமான காஞ்சியில் தொடங்கியதைக் கவனியுங்கள். முதல் நாள் காஞ்சிபுரம் கிளம்பும்போது நிறைகுடத் தண்ணீருடன் ஒரு பெண், கார்டனின் போர்ட்டிகோவில் நிற்கிறார். பூஜை அறையில் வணங்கிவிட்டு, துளசித் தீர்த்தத்தை வெள்ளிக் கரண்டியில் சிறு துளி எடுத்து வாயில் விட்டபடி அங்கிருந்து நகர்ந்த ஜெயலலிதா, முன் அறையில் இருந்த தனது தாய் சந்தியா, எம்.ஜி.ஆர். படங்களை வணங்கிவிட்டு வெளியில் வருகிறார். தண்ணீர்க் குடம் தாங்கிய பெண்ணைப் பார்த்தபடி காரை நோக்கி வருகிறார். திருஷ்டிப் பூசணிக்காய் சுற்றுகிறார்கள். அதனையும் ஏற்றுக்கொண்டு கார் ஏறி உட்காருகிறார். ஒவ்வொரு நாள் பிரசாரம் கிளம்பும்போதும், இந்தச் சம்பிரதாயம் அப்படியே கடைப்பிடிக்கப்படுகிறது.

காரில் ஏறி உட்கார்ந்ததும் விஷ்ணு சகரஸ்நாமம் அல்லது லலிதா சகரஸ்நாமம் ஒலிக்கிறது. சில நிமிடங்கள் கழித்ததும் அம்மன் பாடல் ஒலிக்கிறது. ஐந்து நிமிடங்களில் அதனை நிறுத்தச் சொல்கிறார். அன்று கலந்துகொள்ளப்போகும் பேச்சுகள் முன்பே தயார் ஆனவை என்பதால், அதனை அசைபோட்டபடி விமான நிலையம் வருகிறார்.

ஹெலிகாப்டரில் ஏறுகிறார். உட்கார்ந்ததும் சூப் அருந்துகிறார். அவரது பேச்சின் நகல் அங்கு வைக்கப்பட்டு இருக்கிறது. அதனை வாசித்துப் பார்க்கிறார். கூட்ட மேடைக்கு மேலே சுற்றும்போதே மக்கள் கூட்டம் எவ்வளவு இருக்கும் என்பதை பார்வையாலேயே அளந்துவிடுகிறார். கீழே இறங்கி பூரண மரியாதையை ஏற்றுக்கொண்டு மேடைக்கு வந்து மைக் முன் அவர் நின்று பேச ஆரம்பிப்பது வரை யாரும் அவரைத் தொந்தரவு செய்யக் கூடாது. மேடையில் அவர் உட்காருவது இல்லை. அவருக்கு முன்னால் யாரும் பேசுவதும் இல்லை. வந்ததும் அவரே பேச்சைத் தொடங்குகிறார். கர்ஜனைக் குரலையும், முகத்தில் கடுமையையும் மைக் முன் நின்றதும் பொருத்திக்கொள்கிறார்!

'எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பதுதான் காங்கிரஸ் ஆட்சியின் தாரக மந்திரம். 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் விளையாட்டை நடத்தியதில் ஊழல், விமானத்துக்கான இன்ஜின் வாங்கியதில் ஊழல்... என ஊழல் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இதில் 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலை முன்னின்று நடத்தியது தி.மு.க. என்பதை மறந்துவிடாதீர்கள். இப்படிப்பட்ட மக்கள் விரோத ஊழல் காங்கிரஸ் அரசை ஆட்சியில் இருந்து தூக்கி எறிவது நம் எல்லோருடைய கடமை’ என்று சொல்லிவிட்டு, 'செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?’ என்று கேள்வியைக் கேட்டு மக்களை உசுப்பேற்றுகிறார்.

'எங்கெல்லாம் 'இரட்டை இலை’ இருக்கிறதோ அதனை எல்லாம் மறைக்க வேண்டும் என்று ஸ்டாலின் வழக்குப் போடுகிறார். அப்படி என்றால் காங்கிரஸ் கட்சியின் சின்னம் கை. அனைவரின் கைகளையும் வெட்டிவிட வேண்டும் என்று மனு கொடுப்பாரா ஸ்டாலின்? சில கட்சிகளுக்கு சைக்கிள் சின்னம் இருக்கிறது. நாட்டில் யாரும் சைக்கிள் ஓட்டக் கூடாது என்று மனு கொடுப்பாரா ஸ்டாலின்? ஒரு கட்சிக்கு மாம்பழச் சின்னம் இருக்கிறது. மாம்பழம் விற்பனையைத் தடைசெய்ய வேண்டும் என்று மனு கொடுப்பாரா ஸ்டாலின்? 'காமாலைக்காரனுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள்’ என்பதைப்போல அ.தி.மு.க-வைப் பார்த்துப் பயப்படும் தி.மு.க-வினருக்கு, எதைப் பார்த்தாலும் இரட்டை இலையாகவே தெரிகிறது. இப்படிப்பட்ட தி.மு.க-வுக்கும் காங்கிரஸுக்கும் பாடம் புகட்டுங்கள். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?’ என்று கேட்கிறார்.

'பல்வேறு சுமைகளில் இருந்து விடுபட தேவை, மாறுதல். அதற்கு வழிவகுக்க இருப்பது வருகிற மக்களவைத் தேர்தல்’ என்று தொடங்கி, 'அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா, ஆறிலும் சாவும் நூறிலும் சாவு, தாயகம் காப்பது நம் கடமையடா...’ என்று முடிக்கிறார். இதில் 'தாயகம்’ என்ற வார்த்தையை அழுத்திச் சொல்கிறார். அதாவது நாட்டைக் காப்பாற்றுவதற்கு எங்களுக்கு வாக்களியுங்கள் என்று சொல்கிறார்.

எப்போதும் தன்னுடைய எதிரிகளை விமர்சிக்கும் ஜெயலலிதாவுக்கு, முதன்முறையாக அடிமனதில் பா.ஜ.க-வைப் பற்றிய ஒரு பயம் வந்திருப்பது அவரது பேச்சுகளில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது. 'மத்தியில் மாற்றம் வேண்டும் என்று நினைக்கும் மக்களின் ஆதரவு, மோடிக்கும் பா.ஜ.க-க்கும் உள்ளது’ என்று உளவுத் துறை அறிக்கை சொல்லி இருக்கிறது. அதனால், 'மற்றவர்களுக்கு வாக்களித்துவிடாதீர்கள்’ என்பதைப் பதற்றமாகச் சொல்கிறார்.

'உங்கள் வாக்கை வீணடித்துவிடாதீர்கள். வேறு கட்சிகளுக்கு வாக்களித்தால், அது எதற்கும் உதவாது. அவர்களும் வெற்றி பெற மாட்டார்கள். உங்கள் வாக்கும் வீணாகிவிடும்’ என்று அவர் சொல்வது இதுவரையிலான தேர்தல்களில் அவர் உச்சரிக்காதது காங்கிரஸையும் கருணாநிதியையும் காய்ச்சி எடுக்கும் ஜெயலலிதா, மறந்தும் பா.ஜ.க-வையோ மோடியையோ விமர்சிப்பது இல்லை. இடதுசாரிகள் அமைத்துள்ள மூன்றாவது அணியையும் விமர்சிப்பது இல்லை.

'அம்மாதான் அடுத்த பிரதமர்’ என்று தொண்டர்கள் முழங்குகிறார்கள். அவர் பேச வரும் மேடைக்கு முன்னால் அதைத்தான் வளைவுகளாக வைத்துள்ளார்கள். ஆனால், அது பற்றி ஜெயலலிதா பேசுவது இல்லை. 'அ.தி.மு.க-வால் மட்டும்தான் பல நன்மைகளைச் செய்ய முடியும். அ.தி.மு.க. அங்கம் வகிக்கும் மத்திய அரசு, நாட்டுக்கு பல நன்மைகள் செய்யும்’ என்று எச்சரிக்கையுடன் பேசுகிறார். பேச்சை முடித்துவிட்டு ஹெலிகாப்டரில் கிளம்புகிறார்.

விமான நிலையத்தில் இறங்கியதும் பைலட், துணை பைலட் இருவருக்கும் மறக்காமல் நன்றி சொல்லிவிட்டு வீட்டுக்கு வருகிறார். அவர் வருகைக்காக பூசணி காத்திருக்கிறது. மறுபடியும் திருஷ்டி சுத்துகிறார்கள்.

அவரைப் பொறுத்தவரை இந்தத் தேர்தலில் தமிழகத்தில் சிங்கிள் லார்ஜஸ்ட் சிங்கம் ஆகவேண்டும் என்பதே லட்சியம். அதனால்தான் சிங்கிளாகவே பறந்து பறந்து சிலிர்க்கச் சிலிர்க்கப் பிரசாரம் செய்கிறார்!

மேடையில் பேசவேண்டியதைப் பார்த்து வாசிப்பதற்காக, பெரிய எழுத்தில் டைப் செய்யப்பட்டு வைக்கப்படுகிறது. மேடையில் யாரும் அவருக்கு மாலையோ, சால்வையோ அணிவிக்கக் கூடாது. பொதுவாக, கோயில் பிரசாதங்களைப் பெற்றுக்கொள்வார். ஆனால், அதற்கும் இந்த முறை தடா.

 ஜெயலலிதாவின் காருக்குப் பின்னால் அவர் பயன்படுத்தும் பொருள்களை மட்டும் எடுத்துச் செல்லும் ஒரு கார் செல்கிறது. இதில் டிரைவர் தவிர வேறு யாரும் இருக்க மாட்டார்கள்.

 எவ்வளவு கூட்டம் இருந்தாலும் அவர் கைகாட்டினால் மட்டும்தான் காரை நிறுத்த வேண்டும். போகச் சொன்னால்தான் போகவேண்டும் என்பது டிரைவருக்கான உத்தரவு!

 ஹெலிகாப்டரில்  ஏறியதும் அவருக்கு கீரை சூப் தரப்படுகிறது. காலிஃப்ளவர் சூப், தக்காளி சூப் போன்றவை அவருக்குப் பிடித்தவை. பேசி முடித்துவிட்டு வந்ததும் பனங்கற்கண்டு, மிளகு போட்ட பால் கொஞ்சம் அருந்துகிறார். ஹெலிபேட் அருகிலேயே மினி ரூம் ஒன்று இருக்கிறது. அங்கு சில நிமிட ஓய்வுக்குப் பிறகே ஹெலிகாப்டருக்குச் செல்கிறார். 

  ஜெயலலிதாவின் உணவுப் பழக்கவழக்கங்கள் சமீபகாலமாக மாறியுள்ளன. காரைக்குடி சமையல்காரர்கள் இப்போது கார்டனுக்குள் வந்துள்ளார்கள். சமையலில் செட்டிநாடு வாடை அதிகமாக இருக்கிறது. கந்தரப்பம், வெள்ளைப் பணியாரம் ஆகியவை அவரது விருப்பமான உணவு. இவை இரண்டிலும் எண்ணெய் இருக்கக் கூடாது. டிஸ்யூ தாளை வைத்து எண்ணெயை முழுமையாக எடுத்துவிட்டு, ஹாட் பேக்கில் வைத்துவிடுகிறார்கள். வெள்ளைப் பணியாரத்துக்கு விருப்பமானது கொத்தமல்லி சட்னி. கூட்டம் பேசி முடித்ததும் இதனைச் சாப்பிடுகிறார். பால் பணியாரம் அவருக்கு மிகவும் பிடித்தது. தேங்காய், தேங்காய் எண்ணெய் கூடாது. காலை உணவு சப்பாத்தி, இட்லி. சப்பாத்தி ரவுண்டாக இருக்கக் கூடாது. முக்கோண சைஸ்!

 சர்க்கரைச் சத்து அவருக்கு இருந்தாலும் இனிப்பு சாப்பிடுவதை விடவில்லை. அல்வா, லட்டு போன்றவை பிடிக்கும். ஐஸ்க்ரீம், சாக்லேட் போன்றவை எப்போதும் அவருக்காகக் காத்திருக்கும். பிறந்த நாள், கல்யாண நாள் என்று ஆசீர்வாதம் வாங்க வருபவர்கள் அழைத்து வரும் குழந்தைகளுக்கு நிறைய சாக்லேட் கொடுப்பார். சிறு குழந்தைகளை கையில் வாங்கிக் கொஞ்சுகிறார். சுட்டித்தனமாகப் பேசும் குழந்தைகளாக இருந்தால் அவர்களுக்குக் கொடுக்க கார்டனில் பொம்மைகள் வாங்கிவைத்துள்ளார். இப்படி அவருக்குப் பிடித்த குழந்தைகளை ஒன்றிரண்டு நாள்கள் கூடவே வைத்திருந்து சாப்பாடு ஊட்டிவிடுவாராம். 

 இரவு தூங்குவதற்கு முன் ஒரு மணி நேரம் புத்தகங்கள் படிக்கிறார். ஒரு மணி நேரம் பழைய பாடல்கள் கேட்கிறார்; பார்க்கிறார். மதியத் தூக்கம் எப்போதும் இல்லை!

 ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிற சேலை அணிந்து வருகிறார். புதிய சேலைகளைக்கூட துவைத்த பிறகுதான் உடுத்துகிறார். சென்ட் போட மாட்டார். சென்ட் அணிந்து அருகில் யார் வந்தாலும் அலர்ஜி!

விகடன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 24, 2014 5:52 pm

சிங்கிள் லார்ஜஸ்ட் சிங்கம் ...

வெற்றி பெற வாழ்த்துகள்..

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Mar 24, 2014 10:27 pm

ஊர்ல எவ்ளோவோ விமான விபத்தெல்லாம் நடக்குது. ஹும் இங்க ம்ஹும் .

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 24, 2014 11:51 pm

DERAR BABU wrote:ஊர்ல எவ்ளோவோ விமான விபத்தெல்லாம் நடக்குது. ஹும் இங்க ம்ஹும் .

ஆமாமா... நடிகை சௌந்தர்யா கூட இப்படித்தான் இறந்தாங்க!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 28, 2014 10:01 pm


ஹெலிகாப்டரில் பிரசாரம் செய்வது ஏன் ? மதுரை பிரசாரத்தில் ஜெ., விளக்கம்

மதுரை: மதுரையில் அ.தி.மு.க., வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை ஆதரித்து தமிழக முதல்வர் கட்சியின் பொதுசெயலர் ஜெ., இன்று ( வெள்ளிக்கிழமை ) பிரசாரம் செய்தார். காலநேரம், காவலர் பணிச்சுமை தவிர்க்கவும் வான் வெளியாக ஹெலிகாப்டரில் பிரசாரம் செய்கிறேன் என்று ஜெ., விளக்கமளித்தார்.

பாண்டி கோயில் திடலில் அவர் பேசியதாவது: 2011 ல் நடந்த தேர்தலில் குடும்ப ஆட்சியை அகற்றி மக்களாட்சி மலர செய்யுங்கள் என்று கேட்டேன். இது போல் என்னை தமிழகத்தின் முதல்வராக்கினீர்கள். அது போல் மத்தியில் உள்ள ஊழல் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என கேட்பதற்காக நான் இங்கு வந்துள்ளேன். 1947ல் வெள்ளையர்களை , கொள்ளையர்களை விரட்ட வேண்டும் என நினைத்தனர். அதே போன்ற எண்ணம் தற்போது 66 ஆண்டுகள் கழித்து அந்த எண்ணம் வந்துள்ளது. மக்களாட்சியை நிலைநாட்டும் தேர்தல். குடும்ப ஆட்சி மலர வைக்க வேண்டும். நாட்டை கொள்ளையடித்த காங்., அரசை தூக்கி எறிய வேண்டும். இதனை உங்களால்தான் சாதிக்க முடியும். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா ?

மத்தியில் அ.தி.மு.க, அங்கம் வகிக்கும் ஆட்சி அமைய வேண்டும். மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் தந்த அரசு எனது அ.தி.மு.க., அரசு, கடந்த 32 மாதங்களில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன். விலையில்லா அரிசி, முதல்வரின் பசுமை வீடுகள் திட்டம், இந்துக்கள் புனித பயணம் மேற்கொள்ளும் திட்டத்திற்கு நிதி, கோயில்களில் அன்னதான திட்டம், நெசவாளர்களுக்கு பசுமையான 10 ஆயிரம் வீடுகள், விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி 81 லட்சம் குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 34 ஆயிரத்து 687 பயனாளிகளுக்கு கறவை பசுக்கள் வழங்கப்பட்டுள்ளன. 3 லட்சத்து 98 ஆயிரத்து 298 பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன. தானே புயல் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

மின்சாரம் கவலைப்பட வேண்டாம்:

தீராத மின்வெட்டு வந்தது போல் அரசியல் கட்சிகள் பேசி வருகின்றன. நான் இதில் மிக கவனமாக கவனித்து வருகிறேன். அனைத்து மின் நிலையங்களும் ஒழுங்காக செயல்பட்டு வருகின்றன. எனவே மின்சாரம் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். தமிழகத்தை மின்வெட்டு இல்லாத மின் மிகை மாநிலமாக்கப்படும். அம்மா உணவகங்கள், அனைத்து மாநகராட்சிகளிலும் துவங்கப்பட்டுள்ளன. மதுரையில் பல்வேறு வசதிகளை 33 மாதங்களில் நிறைவேற்றி கொடுத்துள்ளோம். மாநகராட்சி சிறப்பு நிதியாக ரூ. 250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ. 8 கோடியே 16 லட்சம் செலவில் 2 பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. மதுரை அரசு ஆஸ்பத்திரியில் , 2 கோடியே 50 லட்சம் ஒதுக்கப்பட்டு ஆப்ரேசன் தியேட்டர்கள் நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. உள் விளையாட்டு அரங்கம், செயற்கை இழை மையம், மதுரை தெற்கு திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு என புதிய வட்டம் உருவாக்கப்பட்டுள்ளன.

கருணாநிதியும், சிதம்பரமும் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டு வருகின்றனர். வருமான வரி குறித்து தவறுதலாக தேர்தல் இடம் பெற்று விட்டது என்று கூறலாம். ஆனால் தான் செய்த ஏமாற்று வேலையை கேள்வி பதில் மூலம் அரசு ஊழியர்களை காரணமாக காட்டி, அவிழ்த்து விட்டு வருகிறார் கருணாநிதி.

தற்போது உள்ள வருமான வரிசட்டத்தின்படி, பணிக்கொடை , வைப்பு நிதி, விடுமுறை பயன்படுத்தாமல் இருந்தால் இவைகளுக்கு வருமான வரியில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேர்தல் அறிக்கையில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகிறார். இவ்வாறு பொய் பேசிவரம் கருணாநிதிக்கு தக்கப்பாடம் புகட்ட வேண்டும். வரிவிலக்கு அளிக்க வேண்டும் என கூறியுள்ளார். மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று சொல்லியிருக்கிறது. இதில் இருந்து மக்கள் நலம் என்றால் பரிந்துரை மட்டும் செய்வார் என்றே தெரிகிறது.

தி.மு.க,வினர் வெற்றி பெற்று என்ன செய்ய போகிறார்கள், மத்திய அரசுக்கு உத்தரவு போடும் உரிமை தி.மு.க,வு.,க்கு கிடையாது என்று சிதம்பரம் சொல்கிறார். மக்கள் நல பணிகளுக்கு கருணாநிதி வாய் மூடி மவுனியாக இருந்து விடுவார். அப்போது தான் அமைச்சரவையில் நீடிக்க முடியும். அப்போதுதான் எதிரிகளை பழிவாங்க முடியும்.

சிதம்பரம் தான் காரணம்:

இந்திய பொருளாதாரம் நிலைகுலைந்து போனதற்கு சிதம்பரம் தான் காரணம், திட்ட மதிப்பீட்டில் ஒதுக்குவதுபோல் ஒதுக்கி விட்டு திருத்தம் செய்து விடுகிறார் என்று நான் தெரிவித்திருந்தேன். ஆனால் நான் உண்மைக்கு புறம்பாக பேசுவதாக கூறுகிறார். திரு.சிதம்பரம், சிவகங்கை தொகுதிக்கோ, தமிழகத்திற்கோ, உண்மையிலேயே ஏதாவது செய்திருந்தால் அதனை பட்டியலிட வேண்டும். இந்திய பொருளாதாரம் நிலைகுலைந்து போனதற்கு சிதம்பரம் பொறுப்பா இல்லையா ? 13 வது நிதிக்குழு பரிந்துரைப்படி 931 கோடி தமிழகத்திற்கு தரப்படவில்லை என்பது உண்மையா இல்லையா? இதனை சிதம்பரம் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் .

நான் ஹெலிகாப்டரில் பயணம் செய்வதால் மக்களை பற்றி தெரிந்து கொள்ள முடியாது என்று சிதம்பரம் கூறுகிறார். நான் 1982 முதல் தமிழகம் முழுவதும் தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்திருக்கிறேன். 32 ஆண்டுகளாக பட்டி தொட்டியெல்லாம் எனது காலடி பட்டிருக்கிறது. சிதம்பரத்திற்கும் ஆதரவு அளிக்க வேண்டும் என நான் பிரசாரம் செய்தேன். அப்போது சிதம்பரம் எனது பின்னால் வந்தார். காவலர் பணிச்சுமை, காரணமாக நான் ஹெலிகாப்டரில் சென்று பிரசாரம் செய்து வருகிறேன். எனக்கு அச்சுறுத்தல் இருப்பது குறித்து, சிதம்பரம் எனக்கு அனுப்பிய கடிதத்தையும், அவருக்கு நான் அனுப்பிய பதிலையும் அவர் படித்து பார்க்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன். வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசுவதை சிதம்பரம் நிறுத்தி கொள்ள வேண்டும்.

தமிழக மக்களுக்கும், தமிழக அரசுக்கும் துரோகம் செய்து கொண்டிருக்கும் காங்கிரஸ் அரசு . தமிழகத்தின் எதிர் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். செய்வீர்களா ? நீங்கள் செய்வீர்களா? காங்., எழுந்து நடக்க முடியாத அளவிற்கு மரண அடி கொடுக்க வேண்டும். இவ்வாறு ஜெ., பேசினார்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Mar 29, 2014 11:32 am

DERAR BABU wrote:ஊர்ல எவ்ளோவோ விமான விபத்தெல்லாம் நடக்குது. ஹும் இங்க ம்ஹும் .

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் .......



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 29, 2014 3:42 pm

பாலாஜி wrote:
DERAR BABU wrote:ஊர்ல எவ்ளோவோ விமான விபத்தெல்லாம் நடக்குது. ஹும் இங்க ம்ஹும் .

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் .......

தங்கள் விருப்பம் என்னவோ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக