ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Today at 10:59 am

» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 10:58 am

» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Today at 9:36 am

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 7:07 am

» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:02 am

» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Today at 6:27 am

» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Today at 6:19 am

» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:08 am

» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:05 am

» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:02 am

» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 5:57 am

» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Today at 5:55 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Yesterday at 5:45 pm

» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm

» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm

» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm

» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm

» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am

» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am

» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am

» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am

» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am

» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am

» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am

» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am

» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am

» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am

» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am

» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am

» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm

» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm

» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm

» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm

» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm

» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm

» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am

» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am

» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:06 am

» எல்லாமே கடவுள்தான்!
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:05 am

» பெரிய மனுஷி...!
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:52 am

» ஆன்மீகம் - அமுத மொழிகள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:48 am

Top posting users this week
ayyasamy ram
கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி  கணினியில் படிக்கலாம்! - Page 2 Vote_lcapகல்வெட்டு எழுத்தெல்லாம் இனி  கணினியில் படிக்கலாம்! - Page 2 Voting_barகல்வெட்டு எழுத்தெல்லாம் இனி  கணினியில் படிக்கலாம்! - Page 2 Vote_rcap 

நிகழ்நிலை நிர்வாகிகள்


கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி கணினியில் படிக்கலாம்!

+4
ayyasamy ram
ராஜா
ஈகரைச்செல்வி
சாமி
8 posters

கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி  கணினியில் படிக்கலாம்! - Page 2 Empty கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி கணினியில் படிக்கலாம்!

Post by சாமி Thu Mar 27, 2014 10:14 pm

First topic message reminder :

தமிழ் கல்வெட்டு எழுத்துக்களைப் படிக்க உதவுகிற எழுத்துருவை வடிவமைத்துள்ளார் மதுரை இளைஞர்

உலக அளவில் அதிக கல்வெட்டுக்கள் காணப்படும் ஒரே மொழி தமிழ். இன்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புராதன தமிழ் கல்வெட்டுக்கள் தொடர்ந்து கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் தமிழ் கல்வெட்டுக்களில் உள்ள எழுத்துக்களை தொல்லியல் நிபுணர்களால் மட்டுமே படிக்க முடியும் என்ற சூழல்தான் இப்போதும் உள்ளது. இதனால் கல்வெட்டுக்களை காட்சிப்பொருட்களாக மட்டுமே காண்கின்ற நிலை. இந்த நிலையை மாற்றும் வகையில் சாதாரண மனிதர்களும் கல்வெட்டு எழுத்துக்களைப் படிக்க உதவும் எழுத்துரு (FONT) ஒன்றை வடிவமைத்துள்ளார் மதுரையைச் சேர்ந்த இளைஞர் சிவக்குமார்.

கல்வெட்டில் காணப்படும் எழுத்து வடிவங்களை சங்ககாலத்தமிழி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த எழுத்துருவில் உள்ளீடு செய்தால் அவற்றை தற்போதைய தமிழ் எழுத்துக்களாக மாற்றித் தருகிறது. இதன் மூலம் கல்வெட்டு எழுத்துக்கள் குறித்து அறிந்திடாத யாரும் கல்வெட்டுக்களைப் படிக்க முடியும். தகவல் தொழில் நுட்பவியலில் முதுகலை பட்டப்படிப்பை முடித்துள்ள சிவக்குமார், தற்போது மதுரை மாநகராட்சியில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மொழி வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு நாவல் ஒன்றை எழுதத் தொடங்கினேன். அதற்காக தமிழ் மொழி குறித்த தகவல்கள் திரட்ட புராதன சின்னங்கள் அமைந்துள்ள இடங்களுக்குச் செல்ல ஆரம்பித்தேன். அப்போது அந்த இடங்களில் காணப்பட்ட கல்வெட்டுக்கள் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. ஆனாலும் எளிதாக கல்வெட்டுக்களைப் படித்துப் புரிந்துகொள்ள முடியவில்லை.

நான் தகவல் தொழில்நுட்பத்துறை மாணவன் என்பதால் அனைவருக்கும் உதவும் வகையில் கணினியில் கல்வெட்டு எழுத்துக்களைக் கொண்டு வரலாமே என்ற எண்ணம் தோன்றியது. எனவே கல்வெட்டுக்கென மென்பொருள் ஒன்றை உருவாக்க வேண்டும் என முடிவெடுத்தேன். மென்பொருள் உருவாக்கத் தொடங்கும் முன் கல்வெட்டு எழுத்துக்களுக்கென ஓர் எழுத்துருவை உருவாக்கினால் மென்பொருளை வடிவமைப்பது எளிதாக இருக்கும் என்பதால் முதலில் எழுத்துரு உருவாக்கும் முயற்சியில் இறங்கினேன்.

ஆனால் அதை சாத்தியமாக்குவது எளிதான காரியமாக இல்லை. ஏனெனில் தமிழ் மொழியானது தமிழ் பிராமி, வட்டெழுத்துக்கள் எனப் பல பரிணாம வளர்ச்சிகளைப் பெற்று தற்போதைய எழுத்து வடிவத்தை அடைந்துள்ளது.ஒவ்வொரு காலகட்டத்திற்கேற்ப தமிழ் எழுத்துக்கள் மாற்றம் அடைந்து வந்திருக்கின்றன. எனவே எல்லா காலத்திற்குமான துல்லியமான எழுத்துருவை உருவாக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே தமிழ் எழுத்துக்கள் மாற்றம் அடைந்த காலகட்டங்களைப் பிரித்து அட்டவணைப்படுத்தி, ஒவ்வொரு காலகட்டத்திற்கான எழுத்துருவை உருவாக்க முடிவு செய்தேன். தற்போது கி.மு. 3-ஆம் நூற்றாண்டிற்கான எழுத்துருவை உருவாக்கியுள்ளேன்" என்கிறார் சிவக்குமார்.

தமிழில் தட்டச்சு செய்ய நாம் பயன்படுத்தும் வானவில், செந்தமிழ் போன்ற எழுத்துருக்களைப் போல கல்வெட்டு எழுத்துக்களைத் தரும் ஓர் எழுத்துருதான் இந்த சங்ககாலத்தமிழி. தமிழைத் தொடர்ந்து தட்டச்சு செய்து பழகும்போது எப்படி தமிழ் தட்டச்சு நமக்கு சுலபமாகிவிடுகிறதோ அது போல சங்ககாலத்தமிழியை தொடர்ந்து தட்டச்சு செய்து பழகும்போது கல்வெட்டு எழுத்துக்களும் நமக்கு அத்துப்படியாகும். தட்டச்சு மட்டுமின்றி கல்வெட்டு எழுத்துக்களை தமிழில் மாற்றித் தரும் converter ஆகவும் இந்த எழுத்துரு செயல்படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

சங்ககாலத் தமிழி எழுத்துருவை கணினியில் தேர்ந்தெடுத்த பின்பு கல்வெட்டுக்களில் காணப்படும் எழுத்துக்களுக்கான பொத்தான்களை கணினியில் அழுத்தினால் அதற்கான தற்போதைய தமிழ் வடிவம் திரையில் தெரிகிறது. மேலும் தற்போதைய தமிழை தட்டச்சு செய்தால் அதற்கேற்ற மூன்றாம் நூற்றாண்டு கல்வெட்டு எழுத்துக்கள் கிடைக்கின்றன.

கல்வெட்டு எழுத்துக்கள் குறித்து எனக்கு வழிகாட்ட யாரும் இல்லாததால் இந்த எழுத்துருவை உருவாக்க எனக்கு இரண்டு வருடங்கள் ஆயின. இதை உருவாக்க எனக்கு ஊக்கமளித்து வரும் மதுரை காமராசர் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். இந்த எழுத்துருவை உருவாக்கியதன் முக்கிய நோக்கமே கணினி தெரிந்த யாரும் கல்வெட்டுக்களைப் படிக்க முடியும் என்ற சூழல் உருவாக வேண்டும் என்பதுதான்.இந்த எழுத்துரு பிரபலமடைந்தால் தற்போதைய தலைமுறையினர் தமிழ் மொழியின் தொன்மை குறித்தும் கல்வெட்டுக்களின் முக்கியத்துவம் குறித்தும் அறிந்துகொள்ள வாய்ப்புகள் கிடைக்கும்.
கல்வெட்டுக்கள் குறித்த ஆராய்ச்சிகளும் வளரும். மேலும் தமிழகத்தில் பல பகுதிகளிலும் கிடைத்து வரும் கல்வெட்டுக்களை எளிதாக ஆவணப்படுத்த முடியும்.

தற்போதைக்கு சங்ககாலத் தமிழி எழுத்துரு, 3-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு எழுத்துக்களை மட்டுமே மாற்றும்.விரைவில் ஒவ்வொரு நூற்றாண்டிற்கான எழுத்துருக்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.எழுத்துருக்கள் உருவாக்கி முடித்ததும், அவை எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து தமிழ் கல்வெட்டு எழுத்துகளுக்கான முழுமையான மென்பொருளை உருவாக்க உள்ளேன்.கல்வெட்டுக்களை நிழற்படம் எடுத்து கணினியில் உள்ளீடு செய்தால், கல்வெட்டில் கூறப்பட்டுள்ள செய்தி மற்றும் கல்வெட்டு உருவாக்கப்பட்ட காலகட்டம் ஆகியவற்றைக் கூறும் வகையில் இந்த மென்பொருள் அமையும்.
சங்ககாலத் தமிழி என்னுடைய முதல் முயற்சி. இதில் ஏதேனும் தவறுகள் இருந்தால், அதை சுட்டிக்காட்டி தொல்லியல் அறிஞர்கள் என்னை வழிநடத்த வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள்"என்கிறார் சிவக்குமார்.

தொடர்புக்கு: 95668 68500

வல்லுநர் கருத்து : கணினியில் ஆவணப்படுத்த உதவியாக இருக்கும்! : நாராயணமூர்த்தி, தொல்லியல் அறிஞர்

5-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு கல்வெட்டு பத்தாம் நூற்றாண்டின்போது சிதைந்து போனால், அந்தக் கல்வெட்டில் உள்ள செய்தியைப் படித்து பத்தாம் நூற்றாண்டில் வழக்கத்திலிருந்த தமிழ் எழுத்துக்களைக் கொண்டு அதே செய்தியை மீண்டும் கல்வெட்டாக உருவாக்கும் வழக்கம் தமிழர்களிடையே இருந்துள்ளது. யார் காலத்தில் எழுதப்பட்டிருந்தாலும், எந்த நோக்கத்திற்காக எழுதப்பட்டிருந்தாலும் கல்வெட்டில் உள்ள செய்திகள் எக்காரணம் கொண்டும் அழிந்துவிடக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட வழக்கம் இது. இப்படி உருவாக்கப்படும் கல்வெட்டுக்கள் அதன் தொடக்கத்தில் இது ஒரு பழங்கல்படி என்ற சொல்லோடு தொடங்கும். இந்த வார்த்தையிலிருந்தே அது பிரதி எடுக்கப்பட்ட கல்வெட்டு எனப் புரிந்து கொள்ளலாம்.இந்தப் பழங்கல்படி முறை போன்ற ஒரு நல்ல முயற்சிதான் சங்ககாலத் தமிழி எழுத்துரு.

தமிழ் மொழியில் இது போன்று ஒரு முயற்சி இதற்கு முன்னர் நடந்ததில்லை எனக் கூறலாம். தற்காலத்தில் அனைத்துத் துறைகளும் கணினிமயமாக்கப்பட்டு விட்டன. ஆனாலும் தற்போது வரை தமிழ்க் கல்வெட்டுக்கள் நிழற்படம் எடுக்கப்பட்டுதான் ஆவணப்படுத்தப்படுகின்றன. இனி வரும் காலங்களில் தமிழ்க் கல்வெட்டுக்களை கணினியில் ஆவணப்படுத்த இந்த எழுத்துரு மிகவும் உதவியாக இருக்கும். இந்த எழுத்துரு மூலம் தமிழ் பிராமி குறித்த அறிமுகம் இல்லாதவர்களும், கல்வெட்டு வாசிக்க முடியாதவர்களும் பயன்பெற முடியும். சிவக்குமாரின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது". (எம். செந்தில்குமார்-
புதியதலைமுறை)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2404
இணைந்தது : 08/08/2011
மதிப்பீடுகள் : 1250

http://arundhtamil.blogspot.in

Back to top Go down


கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி  கணினியில் படிக்கலாம்! - Page 2 Empty Re: கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி கணினியில் படிக்கலாம்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Sep 18, 2016 7:13 pm

கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி  கணினியில் படிக்கலாம்! - Page 2 103459460 கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி  கணினியில் படிக்கலாம்! - Page 2 1571444738 :வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1866

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை