புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! Poll_c10மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! Poll_m10மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! Poll_c10 
6 Posts - 46%
heezulia
மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! Poll_c10மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! Poll_m10மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! Poll_c10மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! Poll_m10மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! Poll_c10மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! Poll_m10மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! Poll_c10மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! Poll_m10மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! Poll_c10மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! Poll_m10மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! Poll_c10 
372 Posts - 49%
heezulia
மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! Poll_c10மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! Poll_m10மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! Poll_c10மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! Poll_m10மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! Poll_c10மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! Poll_m10மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! Poll_c10மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! Poll_m10மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! Poll_c10 
25 Posts - 3%
prajai
மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! Poll_c10மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! Poll_m10மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! Poll_c10மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! Poll_m10மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! Poll_c10மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! Poll_m10மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! Poll_c10மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! Poll_m10மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! Poll_c10மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! Poll_m10மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்களுக்காக மக்களே கட்டிய மருத்துவமனை!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Mar 27, 2014 10:00 pm

ஊரே கூடி கோயில் கட்டினால் பக்தி மணக்கும்; பள்ளிக்கூடம் கட்டினால் கல்வி சிறக்கும். இந்த வரிசையில், மக்களின் நோய் தீர்க்க ஒரு ஊரே கைகோர்த்து மருத்துவமனை கட்டியிருப்பது ஆச்சரியப்பட வைக்கிறது

திருப்பூரிலிருந்து 16 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஊத்துக்குளி. கிராமத்தில், ஊர் மக்களே சேர்ந்து மருத்துவமனை கட்டி, அதற்கு மக்கள் மருத்துவமனை என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். அரசின் உதவியையோ, தொண்டு நிறுவனங்களின் உதவியையோ நாடாமல், தங்களது உழைப்பில் கிடைத்த வருமானத்தைச் சேர்த்து அந்த மருத்துவமனையை நிர்மாணித்திருக்கிறார்கள்.

நுழைவாயிலில் பசுமையான மரங்கள். வளாகம் முழுக்க சுத்தமும் நேர்த்தியும் என ஒரு தனியார் மருத்துவமனை போல் ஹைடெக்காக காட்சியளிக்கிறது மக்கள் மருத்துவமனை. இதற்கான முதல் முயற்சியை எடுத்து, முனைப்போடு செயலாற்றியவர் ராணுவ வீரர் முருகசாமி.

நான் இந்திய ராணுவத்துல கடந்த 15 வருஷமா பணியாற்றிக்கிட்டு வர்றேன்.ஒவ்வொரு வருஷமும் விடுமுறையில ஊருக்கு வந்துட்டுப் போவேன். எங்க ஊத்துக்குளி கிராமத்துல 3,000 குடும்பங்களும், சுற்றியுள்ள கிராமங்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களும் குடியிருக்கோம். எங்க உடம்புக்கு ஏதாவது நோய்நொடின்னா ஊத்துக்குளியில இருக்கிற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குத்தான் போவோம். அரசு ஆஸ்பத்திரியில போதிய டாக்டர்களும், ஸ்பெஷல் வார்டுகளும் இல்லாததால மக்கள் எல்லோரும் அவசர ஆபத்துன்னா எந்நேரமா இருந்தாலும் திருப்பூர், ஈரோடு, கோவையிலுள்ள அரசு மருத்துவனைகளுக்குப் போகவேண்டிய நிலைமை ஏற்பட்டுச்சி. நோயாளிகளை ஏத்திக்கிட்டு இப்படி நீண்டதூர மருத்துவமனைகளுக்குப் போறதால பல உயிரிழப்புகள் நடந்திருக்கு.

ஊருக்கு வரும்போதெல்லாம் இதைப் பார்த்து பலமுறை வேதனைப்பட்டிருக்கேன். கடந்த 2010-ஆம் ஆண்டு ஜனவரி மாசம் ஊருக்கு வந்தப்போ அரசின் உதவியை நாடாமல், மக்களே சேர்ந்து மக்களுக்காக ஒரு மருத்துவமனை கட்டுனா என்னன்னு மனசுல யோசனை வந்துச்சி. தாமதிக்காம என்னோட எண்ணத்துக்கு செயல்வடிவம் கொடுத்தேன். மருத்துவமனையின் அவசியத்தை உணர்த்தும் விதமாக அதை நாமே கட்டலாம் என்று நோட்டீஸ் அடித்து, ஜனவரி 26 குடியரசு தினத்தன்னைக்கி எல்லோருக்கும் கொடுத்தேன். படிக்கச் சொல்லி, விருப்பத்தை போன்ல சொல்லுங்கன்னு சொல்லிட்டு நான் லீவு முடிஞ்சி ராணுவத்துக்கு கிளம்பிட்டேன்.

என்னோட யோசனை பிடிச்சதாலயும் மருத்துவமனையின் தேவையை உணர்ந்ததாலயும், ஊத்துக்குளியைச் சேர்ந்த பல பேர் போன் பண்ணி ஆதரவு தெரிவிச்சாங்க.அதைத் தொடந்து மே மாசம் திரும்பவும் ஊருக்கு வந்து கிராம மக்களை ஒன்று திரட்டி விவாதிச்சோம். அந்தக் கூட்டத்துல ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டுக் கட்டலாம்னு முடிவுபண்ணி ஒத்துமையோட செயல்ல இறங்கினதாலதான் இன்னைக்கு மக்கள் மருத்துவமனையை உருவாக்க முடிஞ்சது" என்று பூரிப்புடன் பகிர்ந்துகொண்டார் முருகசாமி.

மக்கள் மருத்துவமனையின் சேர்மன் மகாலட்சுமி தொடர்கிறார்: ஆஸ்பத்திரி கட்டலாமுன்னு முடிவெடுத்தபிறகு ஈரோட்டைச் சேர்ந்த டாக்டர். ஜீவானந்தத்திடம் ஆலோசனை கேட்டோம். அவரின் வழிகாட்டுதலின் பெயரிலேயே நாங்க செயல்பட ஆரம்பிச்சோம். பலதரப்பட்ட மக்கள் வாழும் எங்க கிராமத்துல பொருளா தாரத்தில் ஓரளவு வசதி படைத்த 120 பேர் ஒன்று சேர்ந்து ஆளுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்ன்னு மருத்துவமனைக்காகப் பணம் போட்டோம். சில மாசத்துலேயே 1 கோடியே 80 லட்சம் ரூபாய் நிதி சேர்ந்துச்சி. அந்தப் பணத்தை மக்கள் மருத்துவமனை அறக்கட்டளை என்ற பெயரிலேயே வங்கியில் போட்டோம்.

பிறகு எங்ககிட்ட சேர்ந்த பணத்துல முதற்கட்டமா மருத்துவமனை கட்ட, 65 சென்ட் நிலத்தை 65 லட்சம் ரூபாய்க்கு விலைக்கு வாங்கி, கட்டிட வேலைகளை ஆரம்பிச்சோம். மருத்துவமனை முழுமையடைய ஒரு வருஷமாச்சி. இடைப்பட்ட நாட்கள்ல எங்களுக்குள்ள கருத்து வேறுபாடுகள் வந்துடக்கூடாதுன்னு, எல்லோரும் ஒத்துமையா ஆர்வத்தோட ஈடுபட்டோம். தேசத்தந்தை காந்தியடிகள் கிராமப்புறங்கள்தான் இந்தியாவின் உயிர்நாடின்னு சொன்னாரு. அதற்கேற்ப காந்திஜியின் நினைவு தினமான ஜனவரி 30-ஆம் தேதி, 2012-ஆம் ஆண்டு மக்கள் மருத்துவமனையை பொதுமக்களின் சேவைக்காக அர்ப்பணித்தோம். இது மக்களே சேர்ந்து மக்களுக்காக உருவாக்கியது என்பதால் மக்கள் மருத்துவமனை என்றே பெயரிட்டோம்" என்று பெருமிதப்பட்டார் சேர்மன் மகாலட்சுமி.

நிர்வாகத் திறமையும், ஏற்கெனவே ஆற்றியுள்ள சமூகப் பங்களிப்பும்தான் மகாலட்சுமியை சேர்மனாக தேர்ந்தெடுக்க முக்கியக் காரணம் என்கிறார்கள் மற்ற செயற்குழு உறுப்பினர்கள். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளைக் கவனிக்க 24 மணி நேரமும் 4 டாக்டர்கள் மற்றும் 10 நர்ஸ் டீம், நோயாளிகள் தங்கி மருத்துவம் பார்ப்பதற்காக 30 படுக்கைகள் வசதி, பெண்களுக்கான பிரசவ வார்டு, தனித்தனியாக ஆண்கள் வார்டு, பெண்கள் வார்டு, ஸ்கேனர் மற்றும் எக்ஸ்ரே வசதி, ரத்தப் பரிசோதனைக் கூடம், ஆம்புலன்ஸ் வசதி என்று பல வசதிகள் இங்கே உள்ளன. பிரபல மருத்துவமனைகளில் பணியாற்றும் சிறப்பு டாக்டர்கள் வாரம் தோறும் வருகை தருகின்றனர்.

இவர்களுக்கான விசிட்டிங் கட்டணத்தை மக்கள் மருத்துவமனை சார்பிலேயே கொடுக்கறோம். மருத்துவமனையில் வேலை பார்க்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுத் தொழிலாளிகள் போன்றவர்களுக்கு சம்பளம் கொடுக்கவும், நோயாளிகளுக்கான மருந்துகளை கொள்முதல் செய்யவும், அரசுக்கு வரி கட்டுதல் போன்ற செலவுகளுக்காகவும் நோயாளிகளிடம் 50 ரூபாய் மட்டும் கட்டணமாக பெற்றுக்கொள்கிறோம். இப்ப ஒரு நாளைக்கு 50 முதல் 90 நோயாளிகள் வரை வந்து போறாங்க. இது எங்க கிராம மக்களோட கூட்டு முயற்சிக்கு கிடைச்ச வெற்றியாவே பார்க்கறோம். ஒவ்வொரு மாதமும் மருத்துவமனைக்கு எத்தனை நோயாளிகள் வந்தார்கள், என்னென்ன தேவைகள் உள்ளன, செய்யப்படவேண்டிய வசதிகள், வரவு, செலவுக் கணக்குகள் என்று அனைத்துத் தகவல்களையும் கிராம மக்கள் முன்னிலையிலேயே செயற்குழுக் கூட்டம் நடத்தி பகிர்ந்துகொள்கிறோம்.

மருத்துவமனை கட்டிடப் பொறுப்பை ஏற்று உரிய காலத்தில் சிறப்பாகக் கட்டிமுடித்த பழனிச்சாமி, சின்னச்சாமி, ஈஸ்வரன் ஆகியோருக்கும், இன்றுவரை எங்கள் மருத்துவமனைக்கு கவுரவ ஆலோசகராக இருந்துவரும் மருத்துவர் ஜீவானந்தத்துக்கும் எங்க கிராம மக்கள் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளோம்" என்று நெகிழ்கிறார், மக்கள் மருத்துவமனையின் செயற்குழு உறுப்பினரும், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியருமான நடேசன்.

இங்கே சிகிச்சை பெற வந்த கல்யாணி கூறுகையில் இங்க வந்தா மருந்து, மாத்திரை டாக்டர் ஃபீஸ் எல்லாத்துக்கும் சேர்த்தே 50 ரூபாய்தான் ஃபீஸ் வாங்குறாங்க. தனியார் மருத்துவமனைகளில் ஒருநாள் பெட் வாடகையே ஆயிரம் ரூபாய்க்கு மேல ஆகும். ஆனா, மக்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற ஒருநாள் பெட் வாடகை வெறும் 100 ரூபாய்தான். இந்த மருத்துவமனை கட்டினதால இந்த ஊர் மக்கள் மட்டுமில்ல... இந்தக் கிராமத்தைச் சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கும் நிம்மதியா இருக்குங்க" என்றார்.

மக்கள் சக்தி மகத்தான சக்தி என்பதை ஒன்றுசேர்ந்து நிரூபித்திருக்கிற ஊத்துக்குளி மக்கள் தென்னகத்திற்கே உதாரண மனிதர்கள் அல்லவா? (பூ. சர்பனா - புதியதலைமுறை)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 28, 2014 9:13 am

மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! 3838410834 மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! 3838410834 மக்களுக்காக மக்களே கட்டிய  மருத்துவமனை! 3838410834 

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Mar 28, 2014 10:59 am

ஆஹா அருமை அருமை .மக்களே வாழ்த்துக்கள் .

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக