ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
இயற்கை விவசாய இன்னிசை! Poll_c10இயற்கை விவசாய இன்னிசை! Poll_m10இயற்கை விவசாய இன்னிசை! Poll_c10 
heezulia
இயற்கை விவசாய இன்னிசை! Poll_c10இயற்கை விவசாய இன்னிசை! Poll_m10இயற்கை விவசாய இன்னிசை! Poll_c10 
mohamed nizamudeen
இயற்கை விவசாய இன்னிசை! Poll_c10இயற்கை விவசாய இன்னிசை! Poll_m10இயற்கை விவசாய இன்னிசை! Poll_c10 
VENKUSADAS
இயற்கை விவசாய இன்னிசை! Poll_c10இயற்கை விவசாய இன்னிசை! Poll_m10இயற்கை விவசாய இன்னிசை! Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
இயற்கை விவசாய இன்னிசை! Poll_c10இயற்கை விவசாய இன்னிசை! Poll_m10இயற்கை விவசாய இன்னிசை! Poll_c10 
heezulia
இயற்கை விவசாய இன்னிசை! Poll_c10இயற்கை விவசாய இன்னிசை! Poll_m10இயற்கை விவசாய இன்னிசை! Poll_c10 
mohamed nizamudeen
இயற்கை விவசாய இன்னிசை! Poll_c10இயற்கை விவசாய இன்னிசை! Poll_m10இயற்கை விவசாய இன்னிசை! Poll_c10 
VENKUSADAS
இயற்கை விவசாய இன்னிசை! Poll_c10இயற்கை விவசாய இன்னிசை! Poll_m10இயற்கை விவசாய இன்னிசை! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கை விவசாய இன்னிசை!

2 posters

Go down

இயற்கை விவசாய இன்னிசை! Empty இயற்கை விவசாய இன்னிசை!

Post by சாமி Thu Mar 27, 2014 5:04 pm

தற்போது விவசாயத்தில் இயற்கை வழி விஞ்ஞானம் அழிந்து ரசாயன ஆதிக்கம் மேலோங்கிவிட்டது. இன்றைய நவீன ரசாயன விவசாயத்திலிருந்து பழைய நிலையை மீட்டெடுக்கும் முயற்சி நிகழ்வதால், விவசாயத்தை இயற்கை விவசாயமா, ரசாயன விவசாயமா என்று பிரித்து நோக்கும் கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.

மேலை நாட்டுத் தொழில் உலகம் கீழை நாடுகளுக்கு வழங்கியுள்ள பல்வேறு இழிவுகளில் வெடிகுண்டு விஞ்ஞானமும் ஒன்று. வெடிகுண்டு விஞ்ஞானத்தால் ஒரு பக்கம் வன்முறையும் மறுபக்கம் ரசாயன விவசாயமும் வளர்ந்தன. வெடிகுண்டுக்கும் விவசாயத்திற்கும் என்ன சம்பந்தம் என்று பலரும் நினைக்கலாம்.

இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்த காலகட்டத்தில் பயன்பட்ட வெடி உப்புக்களான சூப்பர் பாஸ்பேட், ஆல்கலி, பென்சீன் ஆகியவற்றைக் கண்டுபிடித்த வெடிகுண்டு விஞ்ஞானி பேரன் யோஸ்டஸ் வான் லீபக் (ஆஹழ்ர்ய் ஒன்ள்ற்ன்ள் யர்ய் கண்ங்க்ஷண்ஞ்) மேற்படி வெடி உப்புக்களில் உள்ள நைட்ரஜன், பாஸ்பரம், பொட்டாசியம் ஆகிய கூறுகளைப் பிரித்துக் கூடவே ஜிப்சம் (சிந்தட்டிக் சுண்ணாம்பு) சேர்த்துப் பயிர்களுக்கு அடிஉரமாக மண்ணில் இட்டபோது பயிர்களில் கரும்பச்சை தட்டி மகசூலும் கூடுவதைக் கண்டறிந்து விவரமான ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். அதுவே இன்று புழக்கத்தில் உள்ள யூரியா, பாஸ்பேட், பொட்டாஷ் அடங்கிய என்.பி.கே. கலவை.

இந்த என்.பி.கே. ரசாயன உரக் கலவையை மண்ணில் இடும்போது தோன்றும் வெப்பத்தால் (வெடிபொருள் வெப்பம்) மண்ணில் உள்ள இயல்பான தாதுப்பொருள்கள் அதிவேகமாக சுரண்டப்பட்டு, பயிர்களில் மலர்ச்சி காணப்பட்டாலும் அதிவேகமாக மண் மலடாகும் நிலையும் உருவாகிறது. இதைப்பற்றிய கவலை உர நிறுவனங்களுக்கு இல்லை. லீபெக்கின் கண்டுபிடிப்புக்குரிய சன்மானத்தை வழங்கி, அன்றைய போர் காலகட்டத்தில் இயங்கிய வெடிமருந்து தொழிற்சாலைகள் ரசாயன உரத் தொழற்சாலைகளாக மாறின.

இதே காலகட்டத்தில்தான் "பூச்சி மருந்து' என்று சொல்லப்படும் உயிர்க் கொல்லிகளை பயிர்களின் மீது தெளிக்கும் பழக்கம் ஏற்பட்டது. ரசாயன உரப் பயனீட்டால் பயிர்கள் தேவைக்குமேல் பசுமை பொங்கி வழிந்ததால் பூச்சிகள் தேடிவந்தன. இலைகளின் பின்புறம் முட்டையிட்டு குஞ்சு பொறித்தன. இவற்றைக் கொல்ல டி.டி.ட்டி. அறிமுகமானது.

1875இல் பால் ம்யூலர் என்ற விஷ விஞ்ஞானி டி.டி.ட்டி. என்று சொல்லப்படும் க்ண்ஸ்ரீட்ப்ர்ழ்ர் க்ண் ல்ட்ங்ய்ஹ்ப் ற்ழ்ண்ஸ்ரீட்ப்ர்ழ்ங் கண்டுபிடித்தார். இந்த ரசாயனத்தை பயிர்மீது தெளித்தபோது பூச்சி புழுக்கள் மடிவதையும் எடுத்துக் காட்டினார். எனினும் 1939க்குப் பின்தான் பயிர்களில் டி.டி.ட்டி.யைத் தெளிக்கும் பழக்கம் வந்தது. இதன் மரண விளைவு அறியப்படாமல் விவசாயத்தில் இந்த விஷம் பூச்சி மருந்தாக வெற்றியுடன் செயல்பட்டது.

டி.டி.ட்டி. விஷம் தீவனப்புற்கள் மீதும் தெளிக்கப்பட்டது. இந்த தீவனப் புற்களை உண்ட பசுக்களின் மடியில் டி.டி.ட்டி. விஷம் சேமிக்கப்பட்டு பசும்பால் பருகிய தாய்மார்களின் முலைப்பாலில் டி.டி.ட்டி. விஷம் பரவி, பிறக்கும்போதே குழந்தையின் ரத்தத்திலும் டி.டி.ட்டி. விஷம் இருந்ததை அமெரிக்க மருத்துவத்துறை பதிவு செய்தது. அம்மருத்துவத்துறை நடத்திய சோதனையில் 99 சதவீத தாய்மார்களின் பாலில் டி.டி.ட்டி. விஷம் சேமிக்கப்பட்டிருந்ததாம். இது நிகழ்ந்து 70 ஆண்டுகள் ஓடிவிட்டன.

டி.டி.ட்டி. விஷத்தின் கொடுமைகளை பட்டியலிட்டு வெளியிட்ட ராச்சல் கார்சனின் "மௌன வசந்தம்' (நண்ப்ங்ய்ற் நல்ழ்ண்ய்ஞ்) என்ற புத்தகம் முதலில் தடை செய்யப்பட்டது. பின்னர் அமெரிக்க மக்களின் கொந்தளிப்பைத் தாங்க முடியாமல், 1962இல் டி.டி.ட்டி. அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது.

கார்சன் அம்மையார் தன் நூலுக்கு ஏன் "மௌன வசந்தம்' என்று பெயரிட்டார்? அவர் பண்ணையில் அவர் அனுபவித்த இயற்கை விவசாய இன்னிசைகள் ஓய்ந்து, வசந்தத்தில் மரண அமைதி ஏற்பட்டதே காரணம்.

வசந்தம் வந்தால் ராபின் பறவை தன் குரலால் இன்னிசை எழுப்பும். டி.டி.ட்டி. வானத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூவப்பட்டதால் அவர் வீட்டைச் சுற்றியிருந்த மரங்களிலும் புற்களிலும் டி.டி.ட்டி. துகள்கள் விழுந்ததால் மண் புழுக்கள் துடித்தன. அப்படித் துடித்த மண் புழுக்களை தின்ற ராபின் பறவைகள் ஒவ்வொன்றாய் மடிந்து விழுந்தன. வசந்தத்தில் பறவை ஒலி கேட்காமல் சினந்த கார்சன் இந்த நிகழ்ச்சியை மையமாக வைத்து எழுத்தப்பட்ட புத்தகமே "மௌன வசந்தம்'.

இந்தியாவில் டி.டி.ட்டி. மருந்து தடை செய்யப்பட்டாலும், வேறு பெயரில் அதே மருந்து சட்டப்படி புழங்கி வருகிறது. தடைக்குள்ளானது டி.டி.ட்டி. மட்டுமே. ஆனால் அல்ட்ரின், லிண்டேன், என்றீன், டையாசினான், மாலத்தியான், எண்டோ சர்ஃபான், பாரத்தியான், மானோ குரோட்டோபாஸ் போன்ற பல புதிய பெயர்களில் பழைய விஷம் புதிய குப்பிகளில் அடைக்கப்பட்டு உலகை வலம் வந்த வண்ணம் உள்ளன.

இவற்றையெல்லாம் உருவாக்கும் பேயர்ஸ், டூபாண்ட், மான்சென்டோ, டொவ், கார்சில், மெர்க் என்ற வரிசையில் விட்டுப் போன பன்னாட்டு எமதர்ம நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் துறைகள் பெட்ரோலியப் பொருள்கள், ரசாயன உரம், பூச்சி மருந்துகள், மனித மருந்துகள், நவீன பாக்கெட் உணவுகள், பி. ட்டி. விதைகள் போன்றவை.

விஷத்தை பரப்புபவர்களும் அவர்களே. விஷத்தால் நோயுற்ற மனிதர்களுக்குப் புதிய புதிய மருந்துகளைக் கண்டுபிடித்து அளிப்பவர்களும் அவர்களே. வல்லரசு அரசியல் பலம் உள்ளவர்களும் அவர்களே. இவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் புரளுகிறது. இவர்களின் பிடியிலிருந்து மீள ஒரே வழி இயற்கை விவசாயமே. இத்தகைய கொடூரமான பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொத்தடிமைகளாயுள்ள விவசாயப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், இயற்கை விவசாயத்தை ஏளனம் செய்வதில் வியப்பில்லை.

அடி மண்ணை வளமாக்கும் உத்தியே இயற்கை விவசாயத்தின் பால பாடம். மண்ணில் போதிய அளவில் கரிமச்சத்தை (ஏன்ம்ன்ள்) உருவாக்கி விட்டால் பயிர்களுக்கு நோயும் வராது. மகசூலும் கூடிவிடும். நவீன ரசாயன விவசாயத்தில் நைட்ரஜன், பாஸ்பரம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், சோடியம், கந்தகம், தாமிரம், தங்கம், வெள்ளி, மாலிடினம், இரும்பு, துத்தநாகம், மாங்கனீஸ், குளோரின் போன்ற 15 தாதுப் பொருள்கள் பற்றிப் பேசுவார்கள். மண்ணில் உள்ள கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள் பற்றிப் பேசுவதில்லை.

வெடி உப்பைப் போட்டு நுண்ணுயிரிகளைக் கொல்லும் உத்தி தெரியுமே தவிர, மண்ணில் நுண்ணுயிரிகளைப் பெருக்கும் உத்தியை அறியார். நவீன விவசாயத்தில் என்.பி.கே. என்று பேசுவது போல் இயற்கை விவசாயத்தில் கார்பன், நைட்ரஜன் விகிதாச்சாரம் 5:1 என்று பேசு

வார்கள்.

இந்த விகிதாச்சாரத்தில் போதிய அளவு இயற்கை உரம் அமைந்துவிட்டால் நுண்ணுயிரிகள் பெருகி, மண்ணில் இயல்பாகவே உள்ள, முன் கூறப்பட்ட 15 உலோக தாதுச்சத்தை வேருக்கு ஏற்றி, பசுமையையும் மகசூலையும் வழங்கும்.

நிஜமான விஞ்ஞானம் இயற்கையில்தான் உள்ளது. தேவையான இடுபொருள்கள் இருந்தும் பயனாவதில்லை. இது பற்றிய மதிப்பீடும் உண்டு. ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைக் கழிவுகள் 30 கோடி டன். பசுமை இலை, தழை, பசுந்தாள் 5 கோடி டன். கசாப்புக் கடைக்கழிவு 5 கோடி டன் சேர்த்தால் மொத்த நைட்ரஜன் அளவு 40 கோடி டன், கார்பன் அளவுக்கு தானியங்களின் அறுவடைக் கழிவு (தட்டை, வைக்கோல், தென்னை நார்க்கழிவு, பயறுவகைச் சொடிகள், கரும்புச் சோகை, மரத்தூள், மரங்கள் உதிர்க்கும் சருகுகள்) சுமார் 120 கோடி டன். மேற்படி இயற்கை இடுப்பொருள் கொண்டு கார்பன், நைட்ரஜன் விகிதாச்சாரம் 5:1 என்ற அளவில் கம்போஸ்ட் தயாரித்து விடலாமே.

மண்ணுக்குரிய உயர் ஊட்டமான அறுவடைக்கழிவுகளை மக்காக மாற்றாமல், எரிக்கிறார்கள். அல்லது பயோ மின்சாரமாக மாற்றுகிறார்கள். இந்த நிலை மாறினால்தான் இந்திய விவசாயம் உருப்படும்.

நவீன விவசாயம் என்ற பெயரில் ரசாயனங்களைப் பயன்படுத்தும் ஒரு தோட்டத்தில் நாம் காண்பது மயான அமைதி. பூச்சி, புழு, பறவை, தேனீ எதையும் காண முடியாது.

மாறாக, இயற்கை விவசாயத் தோட்டத்தில் நாம் காண்பதெல்லாம் குதூகலம். குயில்கள் கூவித் துயிலெழுப்பும், மர அடர்த்தியில் பதுங்கியுள்ள சிட்டுக்குருவிகள் சீட்டி அடிக்கும். குப்பைக் குவியலில் உள்ள மண் புழுக்களை உண்ணவரும் குருவிகள் கூட்டமாக வந்து "தளபுள தளபுள' என்று தாள வாத்தியம் வாசிக்க, ஆங்காங்கே அணில்கள் கீச்சுக் குரலில் சில சங்கதிகள் சேர்க்க, பூக்களிள் உள்ள தேனை உறிஞ்சவரும் தேனீக்களும், வண்ணத்துப் பூச்சிகளும் மெல்லிய ஒலியில் சுருதி சேர்க்க, ரீங்காரத்துடன் வரும் சிவப்பு வண்டுகளும் செந்தட்டான்களும் குழலோசை வழங்கும்.

இப்படிப்பட்ட இன்னிசையை தினமும் ரசித்து மலரும் பயிர்கள் மகசூலை அள்ளித்தந்து மனிதர்களை நோயின்றி வாழ வைக்கும். இவ்வாறு "அருள்மொழி கூறும் பறவை'களின் இன்னிசைக் கச்சேரி ஒவ்வொரு தோட்டத்திலும் நிகழுமானால், மனிதர்களுக்கு நோய் என்பது ஏது? (ஆர்.எஸ்.நாராயணன் - தினமணி)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

இயற்கை விவசாய இன்னிசை! Empty Re: இயற்கை விவசாய இன்னிசை!

Post by ayyasamy ram Thu Mar 27, 2014 5:18 pm

"அருள்மொழி கூறும் பறவை'களின் இன்னிசைக் கச்சேரியை
காலர் ட்யூனாக வைத்து ரசிக்கிறான் இன்றைய தமிழனை...!!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82762
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum