புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சகுனம் ! Poll_c10சகுனம் ! Poll_m10சகுனம் ! Poll_c10 
60 Posts - 45%
ayyasamy ram
சகுனம் ! Poll_c10சகுனம் ! Poll_m10சகுனம் ! Poll_c10 
54 Posts - 40%
T.N.Balasubramanian
சகுனம் ! Poll_c10சகுனம் ! Poll_m10சகுனம் ! Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
சகுனம் ! Poll_c10சகுனம் ! Poll_m10சகுனம் ! Poll_c10 
3 Posts - 2%
prajai
சகுனம் ! Poll_c10சகுனம் ! Poll_m10சகுனம் ! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
சகுனம் ! Poll_c10சகுனம் ! Poll_m10சகுனம் ! Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
சகுனம் ! Poll_c10சகுனம் ! Poll_m10சகுனம் ! Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
சகுனம் ! Poll_c10சகுனம் ! Poll_m10சகுனம் ! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சகுனம் ! Poll_c10சகுனம் ! Poll_m10சகுனம் ! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
சகுனம் ! Poll_c10சகுனம் ! Poll_m10சகுனம் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சகுனம் ! Poll_c10சகுனம் ! Poll_m10சகுனம் ! Poll_c10 
420 Posts - 48%
heezulia
சகுனம் ! Poll_c10சகுனம் ! Poll_m10சகுனம் ! Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
சகுனம் ! Poll_c10சகுனம் ! Poll_m10சகுனம் ! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
சகுனம் ! Poll_c10சகுனம் ! Poll_m10சகுனம் ! Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
சகுனம் ! Poll_c10சகுனம் ! Poll_m10சகுனம் ! Poll_c10 
28 Posts - 3%
prajai
சகுனம் ! Poll_c10சகுனம் ! Poll_m10சகுனம் ! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சகுனம் ! Poll_c10சகுனம் ! Poll_m10சகுனம் ! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சகுனம் ! Poll_c10சகுனம் ! Poll_m10சகுனம் ! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
சகுனம் ! Poll_c10சகுனம் ! Poll_m10சகுனம் ! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
சகுனம் ! Poll_c10சகுனம் ! Poll_m10சகுனம் ! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சகுனம் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 26, 2014 8:21 pm

சந்தானம், வீட்டுக்குள் நுழைந்தபோது, இரவு, 7:00 மணி; அவன் அம்மா, காபி கோப்பையுடன் தயாராய் நின்றாள். காபியில் இருந்து ஆவி வெளிவந்தது போல், அவன் மனதிலிருந்து, உணர்ச்சிகள் பீறிட்டன. காபியை குடித்து முடித்தவன், கோப்பையை அம்மாவிடம் தந்தபடியே, ''அம்மா, வசந்தி வீட்டுக்குப் போயிருந்தேன்,'' என்று சொல்லி, அவள் முகத்தையே உற்றுப் பார்த்தான்.
''வசந்தியா... எந்த வசந்தி?''''அதாம்மா, எனக்குப் பெண் பார்த்தோமே...''

''அங்கே உனக்கென்னடா வேலை?'' என்று, எரிச்சலுடன் கேட்டாள் அம்மா.''வசந்திய கல்யாணம் செய்துக்கறேன். ஏற்பாடு செய்யுங்கன்னு சொல்லிட்டு வந்துட்டேம்மா,'' சந்தானம் சொல்ல, அவன் அம்மா அதிர்ச்சியில், ஒரு கணம் அப்படியே நின்றாள்.''டேய் என்னடா சொல்ற... முடியவே முடியாது. பெண் பார்த்த அன்னிக்கே... நினைக்கவே பயமா இருக்கு. நான் ஒத்துக்க மாட்டேன்,'' என்றாள்.

''அம்மா... நான் உங்களோட பர்மிஷன கேட்கல. என் முடிவச் சொன்னேன். இது, என்னோட வாழ்க்க; உங்க சம்மதத்தோட நடந்தா, 'ஓ.கே.,' இல்லன்னாலும், வசந்திதான், என் மனைவி. இதுல, எந்த மாற்றமும் இல்ல,'' என்று சொல்லி, தன் அறைக்குள் சென்று விட்டான்.போன மாதம் ஒரு நாள், சந்தானம் அலுவலகம் முடிந்து, வீடு திரும்பியவுடன், அவன் அருகில் வந்து அமர்ந்தாள் அம்மா. அவள் கையில், புது டிகாக் ஷன் காபி; ஆவி மணத்தது.'என்னம்மா, என்ன விஷயம்?'

'நாலு நாள் முன்னாடி, ஒரு ஜாதகம் வந்ததுன்னு சொன்னேனே... ஞாபகம் இருக்கா? பொருந்தியிருக்குன்னு சொல்லி அனுப்பிச்சதும், இன்னிக்கு பெண்ணோட போட்டோவ கொடுத்திட்டுப் போயிருக்காங்க. காபிய குடிச்சுகிட்டே பாரு...' என்று சொல்லி, போட்டோவைக் கொடுத்தாள். அதை வாங்கிப் பார்த்தவன், 'எனக்கு சம்மதம்மா...' பட்டென முடிவெடுத்தான், அலுவலகத்தில் முடிவு எடுக்கும் திறனில்.'அப்ப பொண்ண பாக்க எப்ப போகலாம்?'

'நீங்க சொன்னா, நாளைக்கே நான் லீவு போட்டுட்டு வறேன்...' என்றான்.
சந்தானத்தின் வார்த்தைகளைக் கேட்ட அம்மா, தன் கணவரிடம் விஷயத்தை சொல்ல, உடனே, அவர், தொலைபேசியில், பெண் வீட்டாரை தொடர்பு கொண்டு, பெண் பார்க்க வரும் தகவலை சொன்னார். அவர்கள் சம்மதம் தெரிவிக்க, மறுநாள் மாலை, சந்தானத்தின் குடும்பத்தினர், வசந்தியின் வீட்டிற்கு, சென்றனர்.

வசந்தி, குனிந்த தலையுடன், அனைவரையும் வணங்கி அமர்ந்தாள். இவர்கள், அவளைப் பார்க்கும், அதே வேளையில், சந்தானம் கையில், ரகசியமாய், ஒரு சிறுவன், ஒரு துண்டுச் சீட்டைக் கொடுக்க, சந்தானம் அதை, பிரித்துப் பார்த்தான். 'தயவு செய்து, உங்களிடம் தனியாகப் பேச வேண்டும்...' என, எழுதி இருந்தது. படித்தவன், வசந்தியைப் பார்க்க, அவள் முகத்தில், நாணத்திற்கு பதில், கெஞ்சல் தான் தெரிந்தது.

'மாப்பிள்ளைக்கு பெண்ணைப் பிடிச்சிருக்கா...' பெண்ணின் அப்பா ஆரம்பித்தவுடன், 'சார், நான் வசந்திகிட்ட கொஞ்சம் தனியா பேசணும். உங்களுக்கு ஆட்சேபனை இல்லையே...' என்று கேட்க, வசந்தியின் பெற்றோர், என்ன சொல்வது என்று தெரியாமல், தலையை ஆட்டினர்.தனி அறையில், வசந்தியிடம், சந்தானம், 'என்னிடம் உங்களுக்கு என்ன கேட்கணுமோ கேளுங்க...' என்றான். வசந்தியின் கண்களில் கண்ணீர் திவலைகள்.'ஏன் அழறீங்க வசந்தி?' என்று கேட்டான்.

'நேரே விஷயத்துக்கு வந்துடறேன். இதுவரைக்கும் என்னை, இருபது, முப்பது பேர் பொண்ணு பாத்துட்டுப் போயிட்டாங்க. ஒருத்தருக்கும் என்னைப் பிடிக்கல. என் அப்பா ஒரு ஹார்ட் பேஷன்ட். இதனால், ரொம்ப நொடிஞ்சு போயிருக்காரு. நேத்து ராத்திரி முழுக்க, தூங்காம, இந்த இடமாவது அமையணுமேன்னு புலம்பிக்கிட்டே இருந்தாரு. அதான்... உங்கள கெஞ்சிக் கேக்குறேன். இது உங்க விருப்பம் சம்பந்தப்பட்ட விஷயந்தான். இருந்தாலும், என் அப்பா மேல இருக்கற பாசத்துல, கேக்குறேன். தயவு செய்து பிடிக்கலன்னு மட்டும் சொல்லிடாதீங்க. நான் இப்படி கேக்குறது, தப்புன்னு எனக்குத் தெரியும்...' என்றாள்.
'உங்க போட்டோவ பாத்து பிடிச்சிருந்ததாலதான், பொண்ணு பாக்கவே வந்தேன். எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு; ஆனா, உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கான்னு, உங்க வீட்டு நெலய மறந்துட்டு சொல்லுங்க...'
'ம்... பிடிச்சுருக்கு...' என்றாள் வசந்தி.

வசந்தியுடன் பேசி முடித்து, வந்த சந்தானம், தனக்கு, பெண்ணை பிடித்திருப்பதாக தன் பெற்றோரிடம் கூறினான். அதன் பின், 'உங்க பொண்ணு, கல்யாணத்த எப்படி செய்யணும்ன்னு உங்களுக்குத் தெரியும்; நல்லபடியா செய்யுங்க. நாங்க வரதட்சணை, அது இதுன்னு ஒண்ணும் கேட்க போறதில்ல. உங்களுக்கு, உங்க பெண்ணுக்கு, என்ன செய்யணும்ன்னு தோணறதோ அதைச் செய்யுங்க. எங்கள பொறுத்த வர எங்க வீட்டுக்கு, ஒரு நல்ல மருமக வேணும்; அவ்வளவுதான்...' என்றாள் சந்தானத்தின் அம்மா கோதை.

ஆனால், வீட்டுக்கு வந்த உடன், அப்படி நடக்கும் என, அவர்கள் எதிர்பார்க்கவில்லை. வந்த உடன் சோபாவில் அமர்ந்த சந்தானத்தின் அப்பா, அப்படியே மார்பில் கை வைத்து, சாய்ந்து விட்டார். பதற்றத்தில் கோதை, சந்தானத்தை கைப்பேசியில் அழைக்க, தன் நண்பனைக் காணச் சென்றிருந்த சந்தானம், புயல் வேகத்தில் வர, ஒரு ஆட்டோ பிடித்து, ராகவனை அருகில் இருந்த ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர். 'ஹார்ட் அட்டாக் சார். நல்ல வேளையா மைல்ட் தான். பீபியைக் கன்ட்ரோல்ல வைச்சுக்கணும். இது தான் பர்ஸ்ட் அட்டாக்கா?' டாக்டர் கேட்க, தலை ஆட்டிய கோதையின் கண்களில், கண்ணீர் நிறைந்திருந்தது.
'பயப்பட ஒண்ணும் இல்ல. இன்னும், அவர ஹெல்த்ல அக்கறை எடுத்துக்கச் சொல்லுங்க...' டாக்டர் சொல்ல, இடிந்து உட்கார்ந்தாள் கோதை. மருந்து வாங்கச் சென்றான் சந்தானம்.

மறுநாளே அவரை டிஸ்சார்ஜ் செய்து, வீட்டிற்கு அழைத்து வந்தனர். அப்போது, தொலைபேசி ஒலித்தது, அம்மா போனை எடுத்தாள். 'ஹலோ நான் சேஷாத்ரி; வசந்தியோட அப்பா பேசுறேன். நிச்சயதார்த்தத்துக்கு தேதி சொல்றேன்னு சொல்லி இருந்தீங்க. உங்க போன் வரலையேன்னு தான், நானே போன் செய்தேன். எப்ப வச்சுக்கலாம்ன்னு, தேதி சொன்னீங்கன்னா, நல்லா இருக்கும்...' அவரின் குரலில் தவிப்பு.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 26, 2014 8:22 pm

'எங்களுக்கு, வசந்திய ரொம்பவே பிடிச்சிருக்கு. ஆனா...''என்ன ஆனா...' சேஷாத்ரியின் நடுக்கம், இவர்கள் வீட்டிற்கு கேட்டது.

'விதி எங்கள உங்க வீட்ல சம்பந்தம் வச்சுக்கக் கூடாதுன்னு சொல்லுதோ என்னமோ! வசந்தியப் பெண் பாத்துட்டு, வீட்டுக்கு வந்த அஞ்சாவது நிமிஷம், அவருக்கு, 'ஹார்ட் அட்டாக்' வந்திருச்சு; இப்ப பரவாயில்ல. ஆரம்பமே அபசகுனமா இருக்கு... அதனாலதான், இந்த சம்பந்தம் வேண்டாம்ன்னு நினைக்கிறோம். மன்னிச்சுருங்க...' என்றவள், 'ஹலோ ஹலோ... ப்ளீஸ்...' என்ற, கெஞ்சலைப் பொருட்படுத்தாமல், ரிசீவரை வைத்து விட்டாள்.

'அதுக்கும், இதுக்கும் என்னம்மா சம்பந்தம்... அவங்க வீட்டு நிலை தெரியுமா உனக்கு... சகுனமாவது, ஒண்ணாவது...' அலுவலக வேலை விஷயமாக, ஒரு வாரம் வெளிநாடு பயணம் போகும் அவசரத்தில், காலில் ஷூவை மாட்டியவாறே பேசிய சந்தானம், 'தப்பும்மா... நீ பேசறது...' என்றான். விமான நிலையம் போக நேரம் ஆகவே, 'அப்பாவப் பத்திரமா பார்த்துக்கோம்மா. அக்கா இப்ப வந்துடுவா, அவள ஒரு வாரம் இங்க தங்கச் சொல்லு...' என்று கூறி, வாசலில் தயாராக இருந்த, கால் டாக்சியில் ஏறி, சென்று விட்டான்.
சந்தானம் வசந்தி வீட்டுக்குச் சென்றபோது, 'வாங்க தம்பி...' என்ற, வசந்தியின் அம்மா முகத்தில், குங்குமப் பொட்டு இல்லை; அந்த இடத்தில் விபூதி. ஹாலில் இருந்த சேஷாத்திரியின் புகைப்படத்தில் மாலை போட்டு, ஊதுவத்தி புகைந்து கொண்டிருந்தது.

'என்னை... எங்களை மன்னிச்சுடுங்க. மன்னிப்புக் கேட்கக்கூட, எனக்கு அருகதை இல்ல...' கலங்கினான் சந்தானம்.'நீங்க ஏன் தம்பி, எங்ககிட்ட மன்னிப்பு கேட்கணும்... நீங்க என்ன தப்பு செஞ்சீங்க... பெண்ணைப் பெத்தது தான், நாங்க செஞ்ச தப்பு...' புடவைத் தலைப்பால் பொங்கி வந்த அழுகையைத் துடைத்தபடியே பேசினாள், வசந்தியின் அம்மா.

'வசந்தியப் பிடிச்சிருக்கு, மறுநாளே, நிச்சயதார்த்தத்துக்கு தேதி சொல்றோம்ன்னு சொல்லிட்டு, திடீர்ன்னு நீங்க வேணாம்ன்னு சொல்லப் போய்...' கலங்கியவள், 'எல்லாம் விதி...' என்று, கூறி அழுதாள்.
'என்னை மன்னிச்சுடுங்க; அன்னிக்கு உங்க போன் வந்த வேளையில, நான் ஏர்போர்ட்டுக்கு கிளம்பிக்கிட்டிருந்தேன். ஒரு வாரம் வேலைன்னு, மஸ்கட் போனேன். அப்படியே, பத்து நாள் இன்னொரு ப்ராஜக்டுக்கு துபாய் போகச் சொல்லிட்டாங்க. போயிட்டு நேத்து தான் வந்தேன். என் பிரண்டோட சித்தப்பா, இங்கே நாலாவது வீட்டுல இருக்காராம். அவர் மூலமா கேள்விப்பட்டு, என் பிரண்ட் தான் விஷயத்த சொன்னான். என்ன ஆச்சு...' என்று, கேட்டான்.

'என்னத்தச் சொல்வேன் தம்பி... உங்க அம்மா, 'இந்த சம்பந்தம் வேணாம், அபசகுனமா தெரியுது'ன்னு சொல்லி, போனை வைச்சுட்டாங்களாம். அப்படியே மார்ல கை வைச்சு கீழே விழுந்தவர் தான், எங்கள விட்டுட்டுப் போயிட்டாரு...' அதற்கு மேல் பேச முடியாமல், வசந்தியின் அம்மா மார்பில் கை வைத்து, கதறி அழுதாள். வசந்தி, தன் அம்மாவை கட்டிக் கொண்டு அழ, புழுவாய் துடித்தான் சந்தானம்.
'என்னை மன்னிச்சுடுங்க... எங்களுக்கு மன்னிப்பே கிடையாது. உங்கள, இப்படி தவிக்க விட்டுட்டோமே...' சந்தானமும் அழ, வசந்தியின் அம்மா, ஒரு வழியாக சுதாரித்து, 'ஒரு நிமிஷம் இருங்க தம்பி, காபி போட்டு எடுத்துட்டு வர்றேன்...' என்று கூறி, எழுந்தாள்.

'அதெல்லாம் வேணாம்மா... ஒரு முக்கியமான விஷயம் பேசத்தான் வந்தேன்...' ஆரம்பித்தான் சந்தானம்.
''டேய் என்னடா சொல்றே... அந்த பொண்ண கட்டிக்கப் போறீயா? எங்க சம்மதம் இல்லாமலா?'' என்றாள் கோதை.''சம்மதம் இல்லாமன்னு சொல்லலியே... நீங்க ஒத்துக்கோங்க; உங்க சம்மதத்தோடயே வசந்தியக் கல்யாணம் செய்துக்கிறேன்.''''டேய்... உன் அம்மா தான், அந்த இடம் வேணாம்; அபசகுனமா தெரியுதுன்னு பீல் செய்றாள்ல, அப்புறம் ஏண்டா, அந்தப் பெண்ணையே கட்டிக்கணும்ங்கிற,'' என்று கேட்டார் அப்பா.''பேசி முடிச்சுட்டீங்களா?''

''என்னடா என்னவோ மாதிரி பேசறே... உன்னப் பெத்த அம்மாவ விட, அந்த வசந்தி உனக்கு முக்கியமா போயிட்டாளோ! என்னவோ அவங்க வீட்டுக்கு போனானாம், அவளையே கல்யாணம் செய்துக்கிறேன்னு சொல்லிட்டு வந்துட்டானாம். எங்க சம்பந்தம் இல்லாம, கல்யாணம் செய்துக்கிறேன்னு சொல்ல, உனக்கு எப்படிடா மனசு வந்தது. உன்னப் பெத்து, வளத்து, படிக்க வைச்சு, ஆளாக்கின உன் அப்பா, அம்மாகிட்டயே இப்படி பேசற தைரியத்த உனக்கு யாரு கொடுத்தா,'' பொரிந்தாள் கோதை.

''வீண் பேச்சு தேவையில்லம்மா. வசந்திய ஏன் வேணாம்ன்னு சொல்றே? நேரடியா ஒரே வரியில பதில் சொல்லு.''''அதான், அப்பவே சொன்னேனே... பொண்ணு பாத்துட்டு வந்த அன்னிக்கே, உன் அப்பாவுக்கு, 'ஹார்ட் அட்டாக்' வந்திடுச்சு. சகுனம் சரியில்லைன்னு.''

''வசந்தியப் பெண் பாத்துட்டு வந்த பின்னாடி, என் அப்பாவுக்கு வந்தது மைல்ட் அட்டாக் அவ்வளவு தான். இதோ, என் முன்னாடி நின்னுக்கிட்டிருக்கார். ஆனா, நான் போயி பெண் பாத்ததுனால, வசந்தியோட அப்பாவுக்கு சகுனம் சரியில்லாம, ஒரேடியா போய் சேர்ந்துட்டார் தெரியுமா?'' கத்தினான்.
''என்னடா சொல்றே?'' அதிர்ந்தாள் கோதை.

''என்ன சேஷாத்ரி போயிட்டாரா?'' திடுக்கிட்டார் அப்பா.''அம்மா, 'இந்த சம்பந்தம் வேணாம்'ன்னு சொன்னதக் கேட்டு, அப்படியே மார்ல கை வைச்சு கீழே விழுந்தவர்தானாம்; எழுந்திருக்கவே இல்லையாம்; உயிர் போயிடுச்சாம். நீ, சகுனம் பாக்கற சகுனியா இருந்ததால தான், இப்ப அவரு உயிரோட இல்ல.

''நீங்க, என் கல்யாணத்துக்கு வருவீங்களோ, மாட்டீங்களோ எனக்குத் தெரியாது. அதைப் பத்தி, எனக்கு கவலையும் இல்ல. 'வசந்திதான் என் மனைவி; என் அப்பா, அம்மா ஒத்துக்கலைன்னாலும் நான் என் முடிவுல திடமா இருக்கேன்'னு அவங்ககிட்ட சொல்லியாச்சு. நீங்க, எங்களுக்கு கல்யாணம் செய்து வைக்குறதுன்னா செய்யுங்க. இல்லேன்னா, நானே கல்யாணம் செய்துக்கறேன்,'' என்று சொல்லி, அவர்கள் பதிலுக்குக் காத்திராமல், தொலைக்காட்சிப் பெட்டியை முடுக்கினான் சந்தானம்.

வெ.ராஜாராமன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக