ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாறு காணாத வன்முறை-கல்வீச்சு-தடியடி, சென்னை ஐகோர்ட்டு, போர்க்களம் ஆனது

2 posters

Go down

வரலாறு காணாத வன்முறை-கல்வீச்சு-தடியடி, சென்னை ஐகோர்ட்டு, போர்க்களம் ஆனது Empty வரலாறு காணாத வன்முறை-கல்வீச்சு-தடியடி, சென்னை ஐகோர்ட்டு, போர்க்களம் ஆனது

Post by Admin Fri Feb 20, 2009 5:30 am

வரலாறு காணாத வன்முறை-கல்வீச்சு-தடியடி, சென்னை ஐகோர்ட்டு, போர்க்களம் ஆனது

வக்கீல்கள்-போலீசார் பயங்கர மோதல்

கல்வீச்சில் நீதிபதி காயம்; போலீஸ் நிலையத்துக்கு தீவைப்பு



உலகளவில் தமிழனுக்கு ஏற்பட்ட தலைகுனிவு



வரலாறு காணாத வன்முறை-கல்வீச்சு-தடியடி, சென்னை ஐகோர்ட்டு, போர்க்களம் ஆனது First
காட்டுமிராண்டி காவலர்களின் கண்மூடித்தனமான தாக்குதலில் படுகாயமுற்ற வக்கீல்கள்


சென்னை ஐகோர்ட்டில் போலீசாரும் வக்கீல்களும் பயங்கரமாக மோதிக் கொண்டனர். போலீஸ் நிலையம் தீ வைத்து எரிக்கப்பட்டது.

ஐகோர்ட்டில் வரலாறு காணாத வகையில் நேற்று போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே பயங்கரமான மோதல் நடந்தது.


வக்கீல்கள் கைது

சென்னை ஐகோர்ட்டில் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 20 வக்கீல்கள் மீது ஐகோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இதையொட்டி கினிலியோ இம்மானுவேல் என்ற ஒரு வக்கீல் மட்டும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

மீதியுள்ள 19 வக்கீல்களையும் கைது செய்வதற்காக நேற்று பிற்பகல் 2 மணியளவில் ஐகோர்ட்டில் இணை கமிஷனர் ராமசுப்பிரமணி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது முதலில் விஜயேந்திரன் என்ற வக்கீலை கைது செய்தனர். இந்த நேரத்தில் போலீசார் தேடும் பட்டியலில் இருந்த 13 வக்கீல்கள், போலீசாரிடம் வந்து "நாங்கள் கைதாக தயாராக உள்ளோம். அதே நேரத்தில் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி மற்றும் அவருடன் வந்த ராதாராஜன் மீதும் நாங்கள் கொடுக்கும் புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றும் கோரிக்கை வைத்தனர். போலீசாரும் ஒப்புக்கொண்டார்கள்.



சுப்பிரமணியசாமி மீது புகார்

உடனே சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ரஜினிகாந்த் இதுதொடர்பாக புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த புகாரில் `கடந்த செவ்வாய்கிழமை சுப்பிரமணியசாமியும், ராதாராஜனும் ஐகோர்ட்டுக்கு வந்த போது வக்கீல்களை திட்டினார்கள் என்றும், ரிசர்வேஷன்ஸ்ல வந்துட்டு `இந்த நாய்கள் சத்தம் போடுது' என்று சாதி பெயரை சொல்லி ராதாராஜன் கத்தினார் என்றும், சுப்பிரமணியசாமியும் தகாத வார்த்தையால் திட்டினார்' என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்கள்.

வழக்குப்பதிவு

வக்கீல்களின் கோரிக்கைப்படி அந்த புகார் மனு மீது போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்தனர். வழக்குப்பதிவு செய்தவுடன் அதுதொடர்பான நகல் வேண்டும் என்று வக்கீல்கள் அடுத்தகட்டமாக கோரிக்கை வைத்தனர்.

உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நகலும் வக்கீல்களுக்கு வழங்கப்பட்டது. "உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிவிட்டோம், உடனடியாக போலீஸ் தேடும் வக்கீல்கள் அனைவரும் அமைதியாக வரவேண்டும்'' என்று இணை கமிஷனர் ராமசுப்பிரமணி வக்கீல்களை கேட்டுக்கொண்டார்.

மோதல்

ஆனால், வக்கீல்கள், சுப்பிரமணியசாமியை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்தால்தான், எங்களையும் கைது செய்ய அனுமதிப்போம் என்று புதிய கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து வக்கீல்களுக்கும், போலீசாருக்கும் முதன்முதலில் மோதல் சம்பவம் தொடங்கியது. அப்போது மாலை 3.30 மணி இருக்கும்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

வரலாறு காணாத வன்முறை-கல்வீச்சு-தடியடி, சென்னை ஐகோர்ட்டு, போர்க்களம் ஆனது Empty Re: வரலாறு காணாத வன்முறை-கல்வீச்சு-தடியடி, சென்னை ஐகோர்ட்டு, போர்க்களம் ஆனது

Post by Admin Fri Feb 20, 2009 5:33 am

செருப்பு-கற்கள் வீச்சு

இந்த நேரத்தில் போலீசார் மீது கற்களும், செருப்புகளும் விழுந்தன. இதைத்தொடர்ந்து வக்கீல்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது.

மோதல் அதிகமாகும் சூழ்நிலை ஏற்பட்டதால் ஐகோர்ட்டில் ஏராளமான அதிரடிப்படை போலீசாரும், கமாண்டோ படை போலீசாரும் குவிக்கப்பட்டனர். கோர்ட்டு வளாகத்தில் ஒரு பக்கம் வக்கீல்களும், எதிர்புறம் போலீசாரும் அணிவகுத்து நின்றனர். மாலை 4 மணி அளவில் அதிரடிப்படை போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. வக்கீல்கள் கற்களை தூக்கி வீசியதும், போலீசார் தடியடி நடத்தினார்கள்.

இதையொட்டி, மோதல் கலவரமாகவும், போர்க்களமாகவும் மாறியது.

வக்கீல்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு நின்று போலீசார் மீது சரமாரியாக கற்களை வீசிக்கொண்டு இருந்தனர். செங்கல்களும், கருங்கற்களும் பறந்து வந்தன. வக்கீல்கள் கோர்ட்டு மாடி மேல் நின்றுகொண்டும் சரமாரியாக கற்களை வீசினார்கள். கற்கள் தங்கள் மேல் படாமல் இருக்க போலீசார் இரும்பு தொப்பிகளையும், ஹெல்மெட்டுகளையும் அணிந்திருந்தனர்.

ஒருகட்டத்தில் போலீசாரும் வக்கீல்கள் மீது கற்களை வீசி தாக்கி எறிந்தபடி இருந்தனர். இப்படி மாறி, மாறி கற்களை வீசிக்கொண்டிருந்தனர்.

தடியடி

நிலைமை மோசமானதால் போலீசார் பலமுறை வக்கீல்களை விரட்டி சென்று தடியடி நடத்தினார்கள். தடியடியில் பல வக்கீல்கள் காயம் அடைந்து ரத்தம் சொட்ட, சொட்ட வந்தார்கள். அவர்களை போலீசார் தூக்கி சென்று ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.



ஆனால் போலீசாரின் தடியடியை கண்டு அஞ்சாமல் வக்கீல்கள் குழுவாக நின்று தொடர்ந்து கல் வீசியபடி இருந்தனர். பதிலுக்கு போலீசாரும் கற்களை வீசினார்கள்.

அப்போது இருதரப்பினரும் கடுமையான வார்த்தைகளால் ஒருவர் மீது ஒருவர் திட்டிக்கொண்டனர். நிலைமை மோசமாகிக்கொண்டே போனது. உயர் போலீஸ் அதிகாரிகள், கீழ்மட்ட போலீஸ்காரரை கட்டுப்படுத்தியபடி இருந்தனர்.

கல்வீசி தாக்கியதில் உதவி கமிஷனர் பாலச்சந்திரன் உள்பட 10-க்கும் மேற்பட்ட போலீசாரும் காயமடைந்து ரத்தம் சொட்ட, சொட்ட ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி அனுப்பப்பட்டனர். பத்திரிகை நிருபர்களும், புகைப்படக்காரர்களும் இருதரப்பினரின் தாக்குதலில் காயம் அடைந்தனர்.

நிருபர்கள் பாடு திண்டாட்டம்

வக்கீல்கள் கல்வீசியதை படம் பிடித்ததால் நிருபர்களையும், புகைப்படக்காரர்களையும் வக்கீல்கள் தாக்கினார்கள். தடியடி நடத்தியதை படம் பிடித்ததால் போலீசாரும் எங்களை எப்படி படம் பிடிக்கலாம் என்று கூறி நிருபர்களையும், போட்டோ கிராபர்களையும் லத்தியால் அடித்தனர்.

இருதரப்பினர் இடையே பத்திரிகையாளர்கள் சிக்கிக்கொண்டு பெரும் பாடுபட்டனர். ஐகோர்ட்டு வளாகத்தில் ஒரே கூச்சலும், அம்மா, அய்யோ என்ற அழுகுரலும் கேட்டபடி இருந்தது.

விரட்டி, விரட்டி

நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் மாலை 4.30 மணியளவில் போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன், கூடுதல் கமிஷனர்கள் ஏ.கே.விஸ்வநாதன், சுனில்குமார், இணை கமிஷனர்கள் குணசீலன், ரத்தோர் மற்றும் சென்னையில் உள்ள அனைத்து துணை கமிஷனர்களும், உதவி கமிஷனர்களும் ஐகோர்ட்டு வளாகத்தில் குவிக்கப்பட்டனர்.

வரலாறு காணாத வன்முறை-கல்வீச்சு-தடியடி, சென்னை ஐகோர்ட்டு, போர்க்களம் ஆனது Law

வாகனங்களை அடித்து நொறுக்கி முன்னேறும் நம் வீரர்கள்


சுமார் 5 ஆயிரம் போலீசாரும் இரும்பு தொப்பி அணிந்து அணிவகுத்து வந்தனர். அதன்பிறகு 4 முறை வக்கீல்களை விரட்டி விரட்டி சென்று போலீசார் தடியடி நடத்தினார்கள்.

ஆனால் உயர் போலீஸ் அதிகாரிகள், போலீசாரை கட்டுப்படுத்தியபடி நின்றனர். ஒருபக்கம் போர் நடக்க, இன்னொரு பக்கம் சம்பவத்தில் தொடர்பில்லாத வக்கீல்கள் கோர்ட்டு வளாகத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்களும், கோர்ட்டு ஊழியர்களும் பாதுகாப்போடு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை 20-க்கும் மேற்பட்ட மோதல்கள் ஏற்பட்டு தடியடி நடத்தப்பட்டது. போலீஸ் நிலையம் அருகே உள்ள செசன்ஸ் கோர்ட்டு, சுமால் காசஸ் கோர்ட்டு, குடும்ப நல கோர்ட்டு ஆகிய பகுதிகளில் போலீசார் தடியடி நடத்தினார்கள். தடியடியில் பொதுமக்கள், பெண்கள், வக்கீல்கள் என்று பலதரப்பட்டவர்களும் காயம் அடைந்தனர்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

வரலாறு காணாத வன்முறை-கல்வீச்சு-தடியடி, சென்னை ஐகோர்ட்டு, போர்க்களம் ஆனது Empty Re: வரலாறு காணாத வன்முறை-கல்வீச்சு-தடியடி, சென்னை ஐகோர்ட்டு, போர்க்களம் ஆனது

Post by Admin Fri Feb 20, 2009 5:35 am

நீதிபதி மீது தாக்குதல்

வரலாறு காணாத வன்முறை-கல்வீச்சு-தடியடி, சென்னை ஐகோர்ட்டு, போர்க்களம் ஆனது Jud

நீதிபதிக்கே இந்த கொடூரம் என்றால் பாமர மக்களின் நிலை?

ஐகோர்ட்டு வளாகத்தில் மோதல் நடப்பதை அறிந்ததும் ஐகோர்ட்டை சுற்றி உள்ள கடைகள் அனைத்தையும் மூடிவிட்டனர்.

போலீசாரின் தாக்குதலை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் தற்காலிக தலைமை நீதிபதி முகோபாத்யாவிடம் முறையிட்டனர்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள் சுதாகர், ரகுபதி, ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன், ஜோதிமணி, கே.கே.சசீதரன், வி.தனபாலன் ஆகியோர் மோதலை தடுக்க போலீஸ் நிலையத்தை நோக்கி சென்றார்கள்.

தற்காலிக தலைமை நீதிபதி முகோபாத்யாவும் போலீஸ் நிலையம் நோக்கி சென்றார். இவர்களுடன் பதிவாளர்கள் சின்னையா நாயுடு, விஜயன் ஆகியோர் வந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்து "தாக்குதல் நடத்த வேண்டாம் நிறுத்துங்கள்'' என்று கூறும் வகையில் கையை உயர்த்தி காட்டினார்கள்.

நீதிபதி சுதாகர், வக்கீல்களுடன் இருந்து அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து செல்லும்படி நீண்ட நேரம் போராடினார்.

ஆனால், நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் வக்கீல்களும், போலீசாரும் தொடர்ந்து மோதல் போக்கில் ஈடுபட்டனர்.


இந்த நேரத்தில் நீதிபதி ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன் தலைமீது கல் விழுந்தது. இதனால், அவர் காயமடைந்தார். தலையில் கையை வைத்தபடியே அவர் நடந்து வந்தார்.

அவரை போலீசார் காப்பாற்றி அழைத்து வந்தனர்.

"வக்கீல்களும், போலீசாரும் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். சென்னை ஐகோர்ட்டு மிகவும் பாரம்பரியமானது. இங்கு இதுபோல் சம்பவம் நடந்தது வேதனையாக உள்ளது'' என்று நீதிபதி ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன் வருத்தத்தோடும், வேதனையோடும் குறிப்பிட்டார். பின்னர் அவரை போலீசார் ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

போலீஸ் வாபஸ்

இந்த நிலையில், மாலை 5 மணியளவில் ஐகோர்ட்டு வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்த போலீசார் அனைவரும் திடீரென்று வாபஸ் பெறப்பட்டனர்.

அனைத்து போலீசாரும் தீயணைப்பு நிலையம் அருகே குவிந்திருந்தனர். "யாரும் வக்கீல்கள் மீது தடியடி நடத்தக்கூடாது, பொறுமை காக்கவேண்டும்'' என்று கமிஷனர் ராதாகிருஷ்ணன் போலீசார் மத்தியில் பேசினார்.

போலீஸ் வாபஸ் பெறப்பட்டதும் நூற்றுக்கணக்கான வக்கீல்கள், போலீஸ் நிலையம் நோக்கி படையெடுத்ததுபோல் வந்தனர். ஒரு வக்கீல் முடிந்தால் என் மீது கை வைத்து பார் என்று போலீசாரை திட்டியபடி வந்தார். ஆனால் போலீசார் அமைதியாக நின்றனர். மற்ற வக்கீல்கள் அவரை இழுத்து பார்த்தார்கள்.

ஆனால் அவர் தொடர்ந்து போலீசார் இருந்த இடத்துக்கு வந்து திட்டியபடி இருந்தார். உடனே அந்த வக்கீல் போலீசாரால் தாக்கப்பட்டார். பின்னர் போலீசாரே கீழே விழுந்து கிடந்த அவரை ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.


Last edited by இளங்கோ on Fri Feb 20, 2009 5:39 am; edited 1 time in total
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

வரலாறு காணாத வன்முறை-கல்வீச்சு-தடியடி, சென்னை ஐகோர்ட்டு, போர்க்களம் ஆனது Empty Re: வரலாறு காணாத வன்முறை-கல்வீச்சு-தடியடி, சென்னை ஐகோர்ட்டு, போர்க்களம் ஆனது

Post by Admin Fri Feb 20, 2009 5:36 am

வரலாறு காணாத வன்முறை-கல்வீச்சு-தடியடி, சென்னை ஐகோர்ட்டு, போர்க்களம் ஆனது Law2
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

வரலாறு காணாத வன்முறை-கல்வீச்சு-தடியடி, சென்னை ஐகோர்ட்டு, போர்க்களம் ஆனது Empty Re: வரலாறு காணாத வன்முறை-கல்வீச்சு-தடியடி, சென்னை ஐகோர்ட்டு, போர்க்களம் ஆனது

Post by Admin Fri Feb 20, 2009 5:37 am

போலீஸ் நிலையம் தீ வைப்பு

இதைத்தொடர்ந்து வக்கீல்கள் ஆவேசமாக கூச்சல் போட்டுக்கொண்டு ஐகோர்ட்டு போலீஸ் நிலையம் முன்பு கூடினார்கள். போலீஸ் நிலையம் முன்பு நின்றிருந்த மோட்டார் சைக்கிள்கள் அனைத்தும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தப்பட்டது. போலீஸ் நிலையத்தின் போர்டும், மேற்கூரையும் தீ வைக்கப்பட்டது. போலீஸ் நிலையத்தின் உள்பக்கமும் தீ வைக்கப்பட்டது. அனைத்து ஆவணங்களும் தீ வைத்து கொளுத்தப்பட்டன. தீயை அணைக்க வந்த தீயணைப்பு படை வீரர்களை வக்கீல்கள் விரட்டி அடித்தனர்.

போலீஸ் நிலையம் முழுவதும் நாசமானது. இதைத்தொடர்ந்து வக்கீல்கள் அனைவரும் கலைந்து சென்றுவிட்டனர்.

அதன்பிறகு டி.ஜி.பி. கே.பி.ஜெயின், கூடுதல் டி.ஜி.பி.க்கள் ராஜேந்திரன், அனுப் ஜெயிஸ்வால் ஆகியோரும் ஐகோர்ட்டுக்கு வந்தனர்.

வாகனங்கள் சேதம்

வக்கீல்கள் அனைவரும் கோர்ட்டுகளுக்கு சென்று கதவுகளை பூட்டிக்கொண்டு அறைக்குள் இருந்து கொண்டனர். அதன்பிறகு சுமார் 1/2 மணி நேரம் 5 ஆயிரம் போலீசாரும் அனைத்து கோர்ட்டுகளுக்கும் சென்று வக்கீல்களை விரட்டி விரட்டி தடியடி நடத்தினார்கள்.

வக்கீல்கள் அனைவரும் ஓட்டம் பிடித்தனர். அதன்பிறகு போலீசாரை வக்கீல்கள் எதிர்க்கவில்லை. கோர்ட்டு வளாகத்தில் நின்றிருந்த அனைத்து சொகுசு கார்களும் அடித்து போலீசாரால் நொறுக்கப்பட்டன. 2 சக்கர வாகனங்களும் நாசப்படுத்தப்பட்டன.

சுமார் 6.30 மணியளவில் போர் ஓய்ந்ததுபோல ஐகோர்ட்டு வளாகம் அமைதியானது.

போர் ஓய்ந்த பிறகு போர்க்களத்தில் பிணங்கள் சிதறி கிடப்பதுபோல, ஐகோர்ட்டு வளாகம் முழுவதும் அடித்து நொறுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் சிதறி கிடந்தன.

ஐகோர்ட்டு வரலாற்றில் வக்கீல்களுக்கும், போலீசாருக்கும் இதுபோன்ற உச்சக்கட்ட போர் இதுவரை நடந்ததில்லை. இருதரப்பினரும் பரம விரோதிகளைபோல மோதிக்கொண்டனர். 6.30 மணிக்கு பிறகு அமைதி நிலவியது.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

வரலாறு காணாத வன்முறை-கல்வீச்சு-தடியடி, சென்னை ஐகோர்ட்டு, போர்க்களம் ஆனது Empty Re: வரலாறு காணாத வன்முறை-கல்வீச்சு-தடியடி, சென்னை ஐகோர்ட்டு, போர்க்களம் ஆனது

Post by Admin Fri Feb 20, 2009 5:38 am

வரலாறு காணாத வன்முறை-கல்வீச்சு-தடியடி, சென்னை ஐகோர்ட்டு, போர்க்களம் ஆனது Law3
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

வரலாறு காணாத வன்முறை-கல்வீச்சு-தடியடி, சென்னை ஐகோர்ட்டு, போர்க்களம் ஆனது Empty Re: வரலாறு காணாத வன்முறை-கல்வீச்சு-தடியடி, சென்னை ஐகோர்ட்டு, போர்க்களம் ஆனது

Post by mohan Sun Feb 22, 2009 6:57 pm

Need Army Ruler to india like OPPOSITE HITLER
avatar
mohan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 26/11/2008

Back to top Go down

வரலாறு காணாத வன்முறை-கல்வீச்சு-தடியடி, சென்னை ஐகோர்ட்டு, போர்க்களம் ஆனது Empty Re: வரலாறு காணாத வன்முறை-கல்வீச்சு-தடியடி, சென்னை ஐகோர்ட்டு, போர்க்களம் ஆனது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் அத்துமீறி பார்லி.,க்குள் (கேபிட்டல் கட்டட வளாகம்) நுழைந்தனர்
» பிரான்ஸில் அவசர நிலை அறிவிப்பு? - பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக ‘மஞ்சள் ஜாக்கெட்’ போராட்டம்; வரலாறு காணாத வன்முறை
» மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள்
» ஜெ., மனுத்தாக்கலின்போது தொண்டர்கள் மீது செருப்பு - கல்வீச்சு ; போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்---------அறிமுக நாயகன்
» சென்னை : பேருந்துகள் மீது கல்வீச்சு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum