ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நலம் நலமறிய ஆவல்!

2 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நலம் நலமறிய ஆவல்! - Page 2 Empty நலம் நலமறிய ஆவல்!

Post by சாமி Wed Mar 26, 2014 4:19 pm

First topic message reminder :

உங்கள் மருத்துவச் சந்தேகங்களுக்குத் தீர்வு - பிரபல மருத்துவரும் எழுத்தாளருமான கு. சிவராமன், உங்கள் மருத்துவச் சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார். மருத்துவம், உடல்நலம், ஆரோக்கிய உணவு உள்ளிட்ட அனைத்து கேள்விகளையும் கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு உரிய பதில் கிடைக்கும். மின்னஞ்சல்: nalamvaazha@kslmedia.in முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002

எனது கணவருக்குக் கடந்த 4 ஆண்டுகளாகச் சைனஸ் பிரச்சினை இருக்கிறது. இதற்காக இரண்டு முறை அறுவைசிகிச்சை செய்திருக்கிறோம். ஆனால், பாலிப் வளர்ச்சி கட்டுப்படுத்தப்படவில்லை. அவர் பெரிதும் அவதிப்படுவதால், நன்றாகத் தூங்கவோ, சாப்பிடவோ, சாப்பாட்டின் ருசியை அறியவோ முடியவில்லை. அடுத்த மாதம் மீண்டும் அறுவைசிகிச்சை செய்யத் திட்டமிட்டிருக்கிறோம். அறுவைசிகிச்சை இல்லாமல், இதற்கு வேறு தீர்வு இருக்கிறதா? அதற்கு என்ன செய்ய வேண்டும்?

- ரதிப்பிரியா, உடுமலைப்பேட்டை


சைனுசைடிஸ் நோய் ஒவ்வாமையாலும், உடலின் இயல்பான பித்தம் (சூடு) அளவுக்கு அதிகமாவதாலும் ஏற்படுகிறது. காற்றை நாம் மாசுபடுத்தியதன் விளைவாலும், அவசர வாழ்வில் தினசரித் தலைக்குக் குளிப்பது, வாரம் ஒரு முறையேனும் எண்ணெய் குளியல் செய்வது போன்ற நல்வாழ்வுப் பழக்கங்களைத் தொலைத்ததாலும் தான், இந்தச் சைனுசைடிஸ் நோய் வருகிறது.

குளித்தல் என்றாலே தலைக்கு நீருற்றிக் குளிப்பதுதான் சரியானது. “முடி கொட்டிரும். முகம் வீங்கும். சளி பிடிக்கும். தும்மல் வரும். நேரமே இல்லை” எனப் பல காரணங்களை முன்னிறுத்தி இன்று நம்மில் பலர் கழுத்துக்கும் இடுப்புக்கும் குளிப்பதைக் கலாசாரமாக்கிக் கொண்டிருக்கிறோம். குளிப்பது என்பது அழுக்கு நீக்க மட்டுமல்ல. இரவில் உடலில் இயல்பாய் ஏறும் பித்தத்தை (சூட்டை) தணிக்கவே காலையில் நாம் குளிக்கிறோம். வெறும் அழுக்குப் போக என்றால், இரவில் மட்டும்தானே குளித்துப் பழகியிருப்போம். எனவே, இந்த நோயை அறவே போக்க, தினசரிக் குளியல் முதலில் மிக அவசியம்.

நோய் நீங்கும் காலம் மட்டும், மருத்துவர் ஆலோசனையுடன் சுக்குத் தைலம், சிரோபார நிவாரணத் தைலம், பீனிசத் தைலம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைத் தலைக்குத் தேய்த்துக் குளிக்க வேண்டும். சித்த மருத்துவ மூலிகையான சீந்தில், சைனுசைடிஸ் நோய்க்கான மிகச் சிறந்த தாவரம். இதன் தண்டை வைத்துத் தயாரிக்கும் மருந்துகள் நோய் எதிர்ப்பாற்றலைச் சீராக்கி (Immune Modulation) மூக்கடைப்பைச் சரியாக்கும் எனப் பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. பெருவாரியான நேரங்களில், சைனுசைடிஸ்க்கு அறுவை சிகிச்சை நிரந்தரத் தீர்வு அல்ல. ஏனென்றால், பாலிப்பையும் நாசித்தண்டு வளைவையும் சீர்படுத்துவதைத் தாண்டி, நோய் எதிர்ப்பாற்றலில் உள்ள hypersensitivityயைச் சீராக்காமல், இதை முழுமையாகக் குணப்படுத்துவது கடினம். அதனால், சில காலம் சித்த மருந்துகளுடன், மூச்சுப் பயிற்சி செய்துவாருங்கள்.

யோகாசனக் கிரியா பயிற்சியிலும், பிராணாயாமப் பயிற்சியிலும் மூக்கடைப்பைத் தடுக்க முடியும். நொச்சித் தழையில் ஆவி பிடிப்பதை வாரம் இரு முறையாவது செய்வது நாசித்தண்டு வளைவில் சேரும் கபத்தை இளக்கி, வெளியேற்றிச் சுவாசத்தைச் சீராக்கப் பெரிதும் உதவும்.

உணவில் காரச் சுவை தேவைப்படும் இடத்தில் எல்லாம் மிளகைச் சேர்த்துவருவது மிக முக்கியம். மிளகில் உள்ள piperine, piperidine சத்துகள் நோய் எதிர்ப்பாற்றலைச் சீர்படுத்திச் சைனுசைடிஸைக் கட்டுப்படுத்தும் அற்புத உணவு. இனிப்பு, பால், நீர்க் காய்கறிகளைச் சில காலம் மட்டும் அதிகம் எடுத்துக்கொள்ளாமல் இருப்பதும் அவசியம். thehindutamil


Last edited by சாமி on Wed Mar 26, 2014 4:20 pm; edited 1 time in total
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down


நலம் நலமறிய ஆவல்! - Page 2 Empty Re: நலம் நலமறிய ஆவல்!

Post by Dr.S.Soundarapandian Thu Jun 19, 2014 8:44 pm

ஓகே!!!! ஓகே!!!! 


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum