புதிய பதிவுகள்
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_vote_lcapமீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_voting_barமீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_vote_rcap 
84 Posts - 44%
ayyasamy ram
மீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_vote_lcapமீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_voting_barமீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_vote_rcap 
75 Posts - 39%
T.N.Balasubramanian
மீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_vote_lcapமீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_voting_barமீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_vote_rcap 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
மீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_vote_lcapமீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_voting_barமீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_vote_rcap 
7 Posts - 4%
mohamed nizamudeen
மீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_vote_lcapமீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_voting_barமீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_vote_rcap 
5 Posts - 3%
i6appar
மீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_vote_lcapமீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_voting_barமீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_vote_rcap 
4 Posts - 2%
Balaurushya
மீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_vote_lcapமீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_voting_barமீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_vote_lcapமீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_voting_barமீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_vote_rcap 
2 Posts - 1%
prajai
மீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_vote_lcapமீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_voting_barமீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
மீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_vote_lcapமீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_voting_barமீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_vote_lcapமீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_voting_barமீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_vote_rcap 
441 Posts - 47%
heezulia
மீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_vote_lcapமீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_voting_barமீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_vote_rcap 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
மீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_vote_lcapமீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_voting_barமீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_vote_rcap 
77 Posts - 8%
T.N.Balasubramanian
மீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_vote_lcapமீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_voting_barமீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_vote_rcap 
38 Posts - 4%
mohamed nizamudeen
மீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_vote_lcapமீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_voting_barமீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_vote_rcap 
30 Posts - 3%
prajai
மீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_vote_lcapமீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_voting_barமீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_vote_rcap 
8 Posts - 1%
Srinivasan23
மீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_vote_lcapமீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_voting_barமீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_vote_rcap 
5 Posts - 1%
Karthikakulanthaivel
மீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_vote_lcapமீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_voting_barமீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Mar 25, 2014 4:42 pm

மீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி DlJrBZmIRrmyIfqqchy1+xfish_1809147h.jpg.pagespeed.ic.Cpz1WiCzeo

கரிசல் காட்டுப் பகுதியில் தினமும் மீன் சாப்பிட்ட மக்கள், இன்று மீன் உணவுக்கு ஏங்கித் தவிக்கிறார்கள். அப்பகுதி சம்சாரிகளின் வீட்டில் விவசாய வேலைக்கு இருந்த கருவிகளுக்கு, இணையாக இருந்த மீன்பிடி கருவிகள் இன்றைக்கு இல்லை.

மானாவாரி நிலங்கள் என்றும், கந்தகப் பூமியென்றும், கரிசல் பிரதேசமென்றும் மக்களால் சுட்டப்படுகிற - மழையை மட்டுமே நம்பி, விவசாயம் செய்யும் நிலங்கள் தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் பரந்து கிடக்கின்றன. பல லட்சம் மக்கள் இந்த வகை நிலங்களில் விவசாயம் செய்துவருகின்றனர்.

இந்நிலங்களில் காடுகள் உண்டு. தோட்டங்கள் உண்டு. வயல்களும் உண்டு. விவசாயத்துக்கு ஆதாரமான நீராதாரம் என்று பார்த்தால் கிராமங்கள்தோறும் தவறாமல் இருக்கும் கண்மாய்கள், ஊருணி, கிணறுகள் ஜமீன்களால் உருவாக்கப்பட்டவை.

அத்துடன் மக்கள் பயன்பாட்டுக்குப் பயன்படுத்தப்படும் தெப்பங்கள், நிரவிகளும் உண்டு. இவை பெரும்பாலும் சுற்றிலும் சுவர்களுடன் நான்கு பக்கமும் மக்கள் நீராட உகந்த நீண்ட படிக்கட்டுகள் உடையதாக அமைக்கப்பட்டிருக்கும்.

மழைக்காலங்களில் மேலே சொன்ன நீர்நிலைகள் முழுவதும் நிரம்பிவிட்டால் போதும், சம்சாரிகளின் பாடும் கால்நடைகளின் பாடும் கவலையே இல்லை. அனைவர் வீடுகளிலும் தானிய மூட்டைகளும் பயறு வகைகளும் நிறைந்துவிடும். வயிற்றுக்கு உணவுப் பஞ்சமே கிடையாது.

கண்மாயும் ஊருணியும் நிரம்பிவிட்டால் அனைத்துக் கிணறுகளிலும் நீர் மட்டம் மேலேறித் தரைமட்டத்துக்கு வந்துவிடும். வெறும் கைகளால் தண்ணீரை எட்டித் தொட்டுவிடலாம். கண்மாய்கள், ஊருணிகள், கிணறுகள் பெருகிவிட்டால் எப்படி உணவுப் பஞ்சம் இல்லாமல் போகிறதோ, அதேபோல் வருடம் முழுமைக்கும் மீன் உணவுக்கும் பஞ்சமே இல்லை.

ஒரு சம்சாரியின் வீட்டில் விவசாயத்துக்குத் தேவையான கலப்பை, மேழி, கூனை, மண்வெட்டி, கடப்பாரைக் கம்பி இருப்பது போல், மீன் பிடிக் கருவிகளான தூண்டில், தெள்ளி, வட்டவலை, வீச்சுவலை, தூரி, பத்தல் முதலியன கண்டிப்பாக இருக்கும். ‘தெள்ளி' என்பது கூஜா வடிவத்தில் பிரம்பால் பின்னப்பட்ட கூடு. அகப்படும் மீன்களை அதனுள் போட்டு நீரில் மிதக்கவிட்டு விட்டால், மீன்கள் சாகாமல் உயிருடன் இருக்கும். இதனுள் போட்ட மீன் தானாக வெளியே வர முடியாது.

'தூரி' என்பது வெள்ளத்துடன் வெள்ளமாக ஓடுகின்ற மீன்களைப் பிடிப்பதற்காகப் பிரம்பினால் செய்யப்பட்ட ஓர் அரிய கருவி. 'பத்தல்' என்பது வெள்ளத்தை எதிர்த்து நீந்தி ஏறி வருகின்ற மீன்களைப் பிடிக்கும் அற்புதமான மீன்பிடி கருவி. உருளையான மரக்கட்டையில் ஏராளமான துளைகள் இருக்கும். வட்டவலை தனி நபரும், வீச்சுவலை இருவர் சேர்ந்தும் மீன்பிடிக்க உதவுபவை.

மீன் பிடிப்பில் அற ஒழுங்கு

நிரம்பி வழியும் நீர்நிலைகளில் கிடைக்கும் மீன்களை யாருமே வியாபார நோக்கத்துக்காகப் பிடிப்பதில்லை என்பதுடன், தேவைக்கு அதிகமாகப் பிடித்து வீணாக்குவதும் இல்லை. சிறிய குஞ்சு மீன்கள் கிடைத்தால், அவற்றை அப்படியே தண்ணீரில் விட்டுவிடக் கூடிய அற ஒழுக்கம் கிராமத்து ஜனங்களிடம் இருந்தது.

நீர்நிலைகள் முற்றாக வற்றி, ஊர்சாற்றி மீன் பிடிப்பதை ‘கண்மாய் அழியப் போகிறது' என்று குறிப்பிட்டு, எல்லா ஊர் ஜனங்களும் அன்று மீன்களைப் பிடிக்க அனுமதிக்கப்படுவார்கள். தேவைக்கு அதிகமான மீன்களைச் சொந்த பந்தங்களுக்கெல்லாம் கொடுத்தது போக, களங்களில் வட்டவட்டமாய் வெயிலில் காய வைத்துக் கருவாடாகச் சேமித்து வைத்துக்கொள்வார்கள். அந்த நேரத்தில் ஊரைச் சுற்றியும் மீன்கள் காயும் காட்சி, கடற்கரை கிராமமோ என்று எண்ணத் தோன்றும்.

மீன் வகைகள் என்று எடுத்துக்கொண்டால் வட்டக் கெண்டை, பால் கெண்டை, பாம்புக் கெண்டை, கூனக் கெண்டை, விளிச்சிக் கெண்டை, அயிரை, நரிக் கெழுறு, மஞ்சக் கெழுறு, ஆரா, உளுவை, விலாங்கு, விரால், குரவை என்று வகைவகையாய்க் குமிந்துவிடும்.

இவ்வளவு மீன் வளம் இருந்த மானாவாரி கிராம மக்கள், இன்றைக்குக் குளங்களில் மீன்களையே பார்க்க முடியவில்லை. அவர்கள் மீனுணவை மறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. கரிசல் பிரதேச மக்களில் இந்தத் தலைமுறையினர் மேலே நான் சொன்ன மீன் இன வகைகளைப் பார்த்திருக்கவே மாட்டார்கள். மீன்பிடிக் கருவிகளையும் அறிந்திருக்க மாட்டார்கள்.

இன்று குளங்களை ஆக்கிரமித்திருக்கும் ஒரே மீன் வகை ‘ஜிலேபிக் கெண்டை' அல்லது ‘டெவலப்மெண்ட் கெண்டை'. இந்த இரண்டும் ஒன்றே. தமிழகத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 160 வகை மீன்களில் இது கிடையாது. இதன் உண்மையான பெயர் திலேபியா(Tilapia). இது ஆப்பிரிக்க வகை மீன். 1952இல் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு, 1960களில் தமிழகத்தில் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் அந்தந்தப் பஞ்சாயத்து யூனியன் டெவலப்மெண்ட் ஆபிசர்களால் (பி.டி.ஓ.) கிராமங்கள்தோறும் மீன் குஞ்சுகள் வழங்கப்பட்டன.

கரிசல் காட்டு சம்சாரிகள் வரிசையில் நின்று, இந்த மீன் குஞ்சுகளை வாங்கி வந்தார்கள். அதனுடைய உண்மையான பெயரான திலேபியா மருவி ஜிலேபிக் கெண்டை என்றும், டெவலப்மெண்ட் அதிகாரிகள் குஞ்சுகளைக் கொடுத்ததால் டெவலப்மெண்ட் கெண்டை என்றும் அழைக்கப்படுகிறது.

உள்ளூர் மீன்களின் எதிரி

இன்று கரிசல் பிரதேச நீர்நிலைகளில் இந்த மீனே ஆதிக்கம் செலுத்திவருகிறது. மற்ற வகை பாரம்பரிய மீன்கள் காணாமல் போய்விட்டன. இந்தத் திலேபியா மீன் நம்முடைய பாரம்பரிய மீன்களுக்குப் பரம எதிரி என்பதையோ, உள்நாட்டு மீன் இனத்தையே அழிக்கும் வல்லமை கொண்டது என்பதையோ யாரும் சிந்தித்துப் பார்த்ததில்லை.

தண்ணீர் எவ்வளவு மாசுபட்டு இருந்தாலும், இந்தத் திலேபியா மீன் வகை அதில் வாழும். நம் மீன்கள் சாப்பிடும் உணவு வகைகளை அதிகம் சாப்பிடும். இது போக நம் இன மீன்களின் முட்டைகளைத் தேடிக் கண்டுபிடித்துச் சாப்பிடுவதில் படு கில்லாடி இந்தத் திலேபியா. இனப்பெருக்கத்திலும் திலேபியாவை மிஞ்சிய மீன் இல்லை. பெற்றோர் அக்கறை அதிகம். தன்னுடைய மீன் குஞ்சுகளில் 70 முதல் 80 சதவீதத்தை இது காப்பாற்றி விடுவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

நம்முடைய இன மீன்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை மாதிரியான உணவை உண்ணும். சில மீன்கள் பூச்சி, புழுக்களைச் சாப்பிடும். சில அழுகிய சதைப் பகுதியைச் சாப்பிடும். ஆனால், இந்தத் திலேபியாவுக்கு உணவில் எந்த விதிவிலக்கும் கிடையாது. எல்லாவற்றையும் சாப்பிடும்.

இதே நிலை நீடித்தால், கடைசியில் திலேபியா மட்டுமே மிஞ்சும். திலேபியாவை ஒரு பெரு நோய் தாக்கினால் நம் பகுதிகளில் மீன் இனமே ஒட்டுமொத்தமாக அழியும் பேராபத்தும் இருக்கிறது. வெளிநாட்டு வகைமைகள் நம் நாட்டுக்கு இறக்குமதியாகும்போது, நாம் பல விஷயங்களைக் கவனிக்கத் தவறிவிடுகிறோம். குறிப்பாக, நம்முடைய பாரம்பரியத்தின் மூலவேர்களை.

திலேபியா மாதிரியே இன்னொரு இறக்குமதியுடன், கரிசல் காட்டு சம்சாரிகள் இன்றைக்கு மல்லு கட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், அதை ஒன்றும் செய்ய இயலவில்லை. அதனுடைய பெயர் Prosofis Julifora. சத்தியமாக இது ஹாலிவுட் நடிகையின் பெயர் அல்ல. வேலி கருவேல மரம் அல்லது சீமைக் கருவேல மரம். அது பற்றி இன்னொரு சமயம் பேசுவோம். - சோ. தர்மன், எழுத்தாளர் thehindutamil

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Mar 25, 2014 5:00 pm

நல்ல தகவல் லாபம் தரும் என்பதற்காக மூலதனத்தை நிர்மூலமக்கிவிட்டோம்.

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Thu Mar 27, 2014 8:42 am

ஹர்ஷித் wrote:நல்ல தகவல்.
லாபம் தரும் என்பதற்காக மூலதனத்தை நிர்மூலமக்கிவிட்டோம்.

உண்மை உண்மை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக