ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமியைக் காக்க விளக்குகளை அணைப்போம்

4 posters

Go down

பூமியைக் காக்க விளக்குகளை அணைப்போம் Empty பூமியைக் காக்க விளக்குகளை அணைப்போம்

Post by சாமி Tue Mar 25, 2014 4:40 pm

உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் மின்சாரத்தை அணைத்து வைக்கும் எர்த் அவர் பிரசாரம், இந்த ஆண்டு மார்ச் 29ஆம் தேதி (சனிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இந்தப் பிரசாரத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வீடுகள், நிறுவனங்கள், வணிக வளாகங்களில் தேவையற்ற விளக்குகளை, மின்கருவிகளை இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை அணைத்து வைக்க வேண்டும். உலகில் நடக்கும் சுற்றுச்சூழல் பிரச்சாரங்களிலேயே மிகப் பெரியதாக இது கருதப்படுகிறது.

இப்படி ஒரு மணி நேரம் மின்சாரத்தை அணைத்து வைப்பதால், என்ன பெரிதாக மாறிவிடப் போகிறது என்ற கேள்வி எழலாம். இது ஓர் அடையாளப் பிரச்சாரம்தான். தேவையான நேரத்தில் தேவையான விளக்குகள், மின்விசிறிகள், மின்கருவிகளை மட்டும் பயன்படுத்தி, மற்ற நேரத்தில் அவற்றை அணைத்து வைக்கப் பழக்கப்படுத்த வேண்டும் என்பதே இந்தப் பிரச்சாரத்தின் அடிப்படை நோக்கம்.

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் கடைசி சனிக்கிழமை இந்தப் பிரசாரம் நடைபெறுகிறது. இரவில் நடத்தினால்தான் மின்சாரப் பயன்பாட்டைக் குறைப்பது வெளிப்படையாகத் தெரியும் என்பதால்தான், இந்தப் பிரசாரம் இரவில் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு தமிழகத்துக்கான பிரசாரத் தூதர் இசையமைப்பாளர் அனிருத். மரபுசாரா எரிசக்தி மூலம் மின் கருவிகளை இயக்க வேண்டும் என்பது, இந்த ஆண்டு பிரச்சாரத்தின் நோக்கம்.

இந்தப் பிரச்சாரத்தில் நீங்களும் பங்கேற்கலாம். இந்தப் பிரசாரத்தில் பங்கேற்குமாறு உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர், உடன் பணிபுரிபவர்கள் ஆகிய அனைவரிடமும் நாம் சொல்ல வேண்டிய செய்தி: மின்சாரத்தை அணைத்து வையுங்கள். புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுங்கள்.

தொடக்கம்

உலக இயற்கை நிதியம் (World Wide Fund for Nature) இந்தப் பிரச்சாரத்தை நடத்துகிறது. 2007ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் தொடங்கப்பட்ட இந்தப் பிரச்சாரம், உலகிலுள்ள 7000 நகரங்களில் நடைபெறுகிறது. உலகெங்கும் பல்வேறு நாடுகளில் உள்ள லட்சக்கணக்கான மக்கள், இதில் பங்கேற்கிறார்கள். புவி வெப்பமடைதலைக் குறைக்க மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே இந்தப் பிரச்சாரம் தொடங்கியது.

ஆரம்பத்தில் ஒரு மணி நேரம் மின்சாரத்தை அணைத்து வைக்கும் பிரசாரமாகத் தொடங்கிய இது, இந்த முறை “மாற்று எரிசக்திக்கு மாறுங்கள்” என்ற பிரச்சாரமாக வளர்ந்துள்ளது.

சூரியசக்தி, காற்றாலை, தாவர-உயிர்க்கழிவு எரிசக்தி, நீர்மின் சக்தி உள்ளிட்டவை புதுப்பிக்கத்தக்க அல்லது மாற்று எரிசக்திகள் எனப்படுகின்றன. இவை உலகம் உள்ளவரை உற்பத்தி செய்யக்கூடிய எரிசக்திகள். இவை சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதில்லை. இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் பெட்ரோல், மின்சாரப் பயன்பாட்டுக்கான செலவும் குறையும்.

இந்தியாவில்...

2009 முதல் விளக்கை அணைக்கும் இந்த எர்த் அவர் பிரசாரம் இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. முதல் ஆண்டு 58 நகரங்களில், 50 லட்சம் பேர் இந்தப் பிரசாரத்தில் பங்கேற்றனர். 2012இல் 150 நகரங்களுக்கு இந்தப் பிரச்சாரம் விரிவடைந்தது.

சச்சின் டெண்டுல்கர், வித்யா பாலன், ஆமிர் கான், அஜய் தேவ்கன், அபிஷேக் பச்சன் ஆகியோர் இதுவரை இதன் தேசியப் பிரச்சாரத் தூதர்களாகச் செயல்பட்டுள்ளனர்.

2011இல் குடியரசுத் தலைவர் மாளிகையிலும், நாடு முழுவதும் உள்ள 30 பாரம்பரியச் சின்னங்களிலும் விளக்குகள் அணைத்து வைக்கப்பட்டன. 2010இல் 120 பொது, தனியார் துறைகள் பங்கேற்றன. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் இந்தப் பிரச்சாரத்தில் பங்கேற்று வருகின்றனர்.

மறுமுகம்

ஒருபுறம் இப்படிப்பட்ட முயற்சிகள் அதிகரித்துவந்தாலும், மற்றொரு புறம் மின்சாரமே எட்டிப் பார்க்காத எளியோர் வீடுகளும், கிராமங்களும் நம் நாட்டில் லட்சக்கணக்கில் இருக்கின்றன என்பதையும் இந்த நேரத்தில் யோசிக்க வேண்டும். அவர் களுக்கு மின்சாரம் சென்று சேர்வதையும், இது போன்ற பிரச்சாரங்கள் வலியுறுத்த வேண்டும்.

எர்த் அவர் பிரச்சாரத்திலும் விளக்குகளுக்குப் பதிலாக மெழுகுவர்த்தி ஏற்றப்படுகிறது. ஆனால், இதிலும் எரிசக்தி செலவாகவே செய்கிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். எந்த வகையான ஆற்றலையும் குறைவாகப் பயன்படுத்த வேண்டும் என்பதே இதுபோன்ற பிரச்சாரங்களின் நோக்கமாக இருக்க வேண்டும்.thehindutamil
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

பூமியைக் காக்க விளக்குகளை அணைப்போம் Empty Re: பூமியைக் காக்க விளக்குகளை அணைப்போம்

Post by ayyasamy ram Tue Mar 25, 2014 8:10 pm

பூமியைக் காக்க விளக்குகளை அணைப்போம் L2G56AHnR1KxDfum87ZO+earth-hour4-yabbedoo
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பூமியைக் காக்க விளக்குகளை அணைப்போம் Empty Re: பூமியைக் காக்க விளக்குகளை அணைப்போம்

Post by விஸ்வாஜீ Thu Mar 27, 2014 8:43 am

தமிழ்நாட்டுக்கு இந்த செய்தி சொல்ல தேவையில்லை  புன்னகை புன்னகை 
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

பூமியைக் காக்க விளக்குகளை அணைப்போம் Empty Re: பூமியைக் காக்க விளக்குகளை அணைப்போம்

Post by உதயசுதா Thu Mar 27, 2014 4:27 pm



இந்த ஒரு நாள் மட்டும் இல்லை. எல்லா நாளும் தேவை இல்லாத இடத்தில், தேவையற்ற நேரத்தில் மின்சாரத்தை பயன்படுத்துவதை தவிர்த்தல் நமக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது


பூமியைக் காக்க விளக்குகளை அணைப்போம் Uபூமியைக் காக்க விளக்குகளை அணைப்போம் Dபூமியைக் காக்க விளக்குகளை அணைப்போம் Aபூமியைக் காக்க விளக்குகளை அணைப்போம் Yபூமியைக் காக்க விளக்குகளை அணைப்போம் Aபூமியைக் காக்க விளக்குகளை அணைப்போம் Sபூமியைக் காக்க விளக்குகளை அணைப்போம் Uபூமியைக் காக்க விளக்குகளை அணைப்போம் Dபூமியைக் காக்க விளக்குகளை அணைப்போம் Hபூமியைக் காக்க விளக்குகளை அணைப்போம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பூமியைக் காக்க விளக்குகளை அணைப்போம் Empty Re: பூமியைக் காக்க விளக்குகளை அணைப்போம்

Post by ayyasamy ram Thu Mar 27, 2014 4:42 pm

தமிழகத்தைப் பொறுத்தவரை அரசே
அந்த நேரத்தில் மின்வெட்டு செய்து
நற்பெயர் ஈட்டிக்கொள்ளலாம்..!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பூமியைக் காக்க விளக்குகளை அணைப்போம் Empty Re: பூமியைக் காக்க விளக்குகளை அணைப்போம்

Post by சாமி Thu Mar 27, 2014 4:45 pm

ayyasamy ram wrote:தமிழகத்தைப் பொறுத்தவரை அரசே
அந்த நேரத்தில் மின்வெட்டு செய்து
நற்பெயர் ஈட்டிக்கொள்ளலாம்..!

தமிழக அரசு (முன்னாள் அரசு + இந்நாள் அரசு) ரொம்பநாளா "நற்பெயர்" ஈட்டிக்கொண்டுதானே இருக்கிறது இந்த விசயத்தில்... என்ன கொடுமை சார் இது 
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

பூமியைக் காக்க விளக்குகளை அணைப்போம் Empty Re: பூமியைக் காக்க விளக்குகளை அணைப்போம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum