ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 20:03

» வா.ஃக்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Today at 19:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 18:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 15:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 14:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:09

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 13:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:34

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 0:37

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:59

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 20:40

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 20:35

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 18:31

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:20

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 0:38

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 0:34

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி!

3 posters

Go down

கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி! Empty கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி!

Post by சிவா Mon 24 Mar 2014 - 20:05

கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி! Bold%284%29 கொத்தமல்லி சாதம் 


கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி! P56c
தேவையானவை: கொத்தமல்லி - ஒரு கட்டு, கறிவேப்பிலை - ஒரு பிடி, புளி - கோலி அளவு, உப்பு - தேவைக்கு ஏற்ப, மிளகு - 10, வரமிளகாய் - 3, கடுகு - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், கலப்பு எண்ணெய் - ஒரு டீஸ்பூன் (விவரம் அட்டவணையில்), வடித்த சாதம் - 3 கப்.

செய்முறை: கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகு, வரமிளகாய், புளி, உப்பு இவற்றை சிறிது நீர் சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு தாளிக்கவும். இதில் அரைத்த விழுதைச் சேர்த்து நீர் சுண்டக் கிளறவும். ஆறவைத்த சாதத்தை இதில் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும். தயிருடன் சேர்த்துச் சாப்பிட ருசியாக இருக்கும்.

நன்மைகள்:


கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி! Dot%2811%29 கறிவேப்பிலையில் பாஸ்பரஸ், கால்சியம், புரதம், ஊட்ட நார்ச் சத்து அதிகம் உள்ளது.

கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி! Dot%2811%29 கொத்தமல்லியில் கால்சியத்தை கிரகிக்கத் தடையாக இருக்கும் ஆக்ஸாலிக் அமிலம் குறைவு.

மலச்சிக்கலைத் தவிர்க்க உதவும் பொட்டாசியமும், ஊட்ட நார்ச் சத்தும் இதில் அடங்கி உள்ளது. மசக்கை அதிகம் உள்ள கர்ப்பிணிகளுக்கு, இந்த உணவு நாக்குக்கு ருசியாக இருக்கும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி! Empty Re: கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி!

Post by சிவா Mon 24 Mar 2014 - 20:06

கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி! Bold%284%29 மிக்ஸ்டு வெஜிடபிள் கிரேவி 


கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி! P56d
தேவையானவை: பொடியாக நறுக்கிய கேரட், குடமிளகாய் - தலா அரை கப், காலிஃப்ளவர் துண்டுகள் - ஒரு கப், முருங்கைக்காய் - 5, 6 துண்டுகள், பெரிய வெங்காயம் - 2, பூண்டு - 5 பல், இஞ்சி - சிறிய துண்டு, புதினா - அரை கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - கால் கப், மஞ்சள்தூள் - 2 சிட்டிகை, தக்காளி - 1, கறிவேப்பிலை - 3 கொத்து, கடுகு - கால் டீஸ்பூன், பட்டை, கிராம்பு - தலா 1, கலப்பு எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்ப் பொடி - அரை டீஸ்பூன், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: அரை டேபிள்ஸ்பூன் எண்ணெயில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, புதினாவை வதக்கிக்கொள்ளவும். இதனுடன், கொத்தமல்லி, தக்காளி, வறுத்த பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை சேர்த்து அரைக்கவும். மீதி எண்ணெயில் கடுகு தாளித்து பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, சுத்தம் செய்த எல்லாக் காய்கறிகளையும் சேர்த்து லேசாக வதக்கவும். இதில் மிளகாய்த்தூள், தனியாத்தூள் மஞ்சள்தூள் சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு வேகவிடவும். அதிக நேரம் வேகவிடக் கூடாது. காய் வெந்ததும், அரைத்த விழுதைச் சேர்த்து உப்பு, தண்ணீர் விட்டு இரண்டு நிமிடங்கள் கொதித்ததும் இறக்கவும்.

நன்மைகள்:


கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி! Dot%2811%29  கேரட்டில் வைட்டமின் - ஏ, குடமிளகாயில் வைட்டமின் - ஏ மற்றும் வைட்டமின் - சி, கால்சியம் சத்து உள்ளது. காலிஃப்ளவரில் கால்சியம் நிறைந்து உள்ளது. இந்த உணவில் நார்ச் சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலை எளிதில் தவிர்க்கலாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி! Empty Re: கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி!

Post by சிவா Mon 24 Mar 2014 - 20:06

கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி! Bold%284%29 முள்ளங்கி சப்பாத்தி


கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி! P56f

தேவையானவை:
முள்ளங்கி - 1, கோதுமை மாவு - முக்கால் கப், சோயா மாவு - 2 டீஸ்பூன், மிளகுத் தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு, கலப்பு எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: முள்ளங்கியைத் துருவி, மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்திக்கு மாவு பிசையவும். கலப்பு எண்ணெய் விட்டு சப்பாத்தியாக சுட்டெடுக்கவும். இதற்கு கலவைக் காய் கிரேவி ருசியாக இருக்கும்.

நன்மைகள்:



கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி! Dot%2811%29  முள்ளங்கியில் கால்சியம் சத்து, கோலின் எனப்படும் வைட்டமின் அதிகம் உள்ளது. கோலின், சிசுவின் மூளை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது. சோயா மாவு சிறந்த ஆன்டிஆக்ஸிடென்ட். கோதுமை மாவில் புரதம், வைட்டமின்கள் மற்றும் கால்சியம் உள்ளிட்ட தாது உப்புகள் உள்ளன.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி! Empty Re: கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி!

Post by சிவா Mon 24 Mar 2014 - 20:08

கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி! Bold%284%29 ஜிஞ்சர் சிரப்

கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி! P56g


தேவையானவை: துருவிய இஞ்சி, எலுமிச்சை சாறு - தலா 2 டீஸ்பூன், வெல்லம் - ஒரு டீஸ்பூன் அல்லது சர்க்கரை - 2 டீஸ்பூன், உப்பு - அரை சிட்டிகை, நீர் - 250 மி.லி.

செய்முறை: துருவிய இஞ்சியை நீரில் நன்றாகக் கொதிக்கவிடவும். இறக்குவதற்கு முன் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து வடிகட்டவும். இதில் எலுமிச்சை சாறு, உப்பு, தேவையான அளவு சுத்தமான தண்ணீர் சேர்த்துப் பருகவும். இதை காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் அருந்துவது நல்லது.

நன்மைகள்:


கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி! Dot%2811%29  மசக்கை நேரத்துக்கு உகந்த பானம். பசியைத் தூண்டும், நாக்குக்கு ருசியைக் கொடுக்கும். வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி! Empty Re: கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி!

Post by சிவா Mon 24 Mar 2014 - 20:08

கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி! Bold%284%29 சிமிலி


கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி! P56h

தேவையானவை:
கேழ்வரகு மாவு - ஒன்றரை கப், வெல்லம், வறுத்த வேர்க்கடலை - தலா அரை கப், உப்பு, எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை: கேழ்வரகு மாவில் உப்பு சேர்த்து வெந்நீர் விட்டு, அடை மாவு போல் இறுகப் பிசையவும். சிறிது எண்ணெய் விட்டு, அடைகளாக தட்டி வேக விடவும். வறுத்த வேர்க்கடலை மற்றும் பொடி செய்த வெல்லம் இரண்டையும் ஒரு சுற்று மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன் வெந்த கேழ்வரகு அடையை துண்டுகளாக்கி சேர்த்து மிக்ஸியில் இரண்டு அல்லது மூன்று சுற்றுகள் சுற்றி எடுக்கவும். பிறகு உருண்டைகளாகப் பிடிக்கவும்.

நன்மைகள்:


கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி! Dot%2811%29  கேழ்வரகில் புரதம், கால்சியம், இரும்புச் சத்தும், வெல்லத்தில் இரும்புச் சத்தும், வேர்க்கடலையில் புரதச்சத்தும் அதிகம் உள்ளன. இந்த மூன்று கலவையும் சேர்வதால், இந்தச் சத்துக்கள் ஒருங்கே கிடைக்கும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி! Empty Re: கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி!

Post by சிவா Mon 24 Mar 2014 - 20:10

கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி! Bold%284%29 கர்ப்பிணிகள் செய்ய வேண்டியவை:


கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி! Dot%2811%29 நேரத்துக்கு உணவினை உண்ணவேண்டும்.

கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி! Dot%2811%29 தித்திப்பு உணவு வகைகளான பழக்கூட்டு, பழச்சாறு, வெல்ல அடை, ஜிஞ்சர் சிரப், வெல்லப் பலகாரங்கள், பேரீச்சம் பழம் போன்றவையில் தினம் மூன்று வகைகள் என்று எடுத்துக்கொள்வது நல்லது.

கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி! Dot%2811%29 இரண்டு துண்டுகள் பப்பாளிப் பழம் உண்ணலாம்.

கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி! Dot%2811%29 மீன் சாப்பிடும்போது, தோலை அகற்றிவிட வேண்டும். 

கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி! Dot%2811%29 15 நிமிடங்கள் கொதிக்கவைக்கப்பட்ட நீரைப் பருகுதல் அவசியம்.

கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி! Dot%2811%29 கையை சோப்புப் போட்டுக் கழுவிய பிறகு சாப்பிடுவது மிகவும் முக்கியம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி! Empty Re: கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி!

Post by சிவா Mon 24 Mar 2014 - 20:10

கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி! Bold%284%29 கர்ப்பிணிகள் செய்யக் கூடாதவை:


கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி! Dot%2811%29 விரதம் கடைப்பிடிக்கக் கூடாது.

கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி! Dot%2811%29அதிக காப்பி அருந்தினால், சிசுவின் உடல் எடை குறைந்துவிடும்.

கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி! Dot%2811%29 சமையலில் அளவுக்கு அதிகமாக பூண்டு சேர்க்கக் கூடாது.

கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி! Dot%2811%29 அதிக பாதரசம் உள்ள சுறா, கத்தி மீன், வால்மீன், காணான் கெளுத்தி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியைத் தவிர்க்க வேண்டும்.

கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி! Dot%2811%29 நிறம் மாறிய கோழி, ஆட்டு இறைச்சி போன்றவற்றை உண்ணக் கூடாது.

கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி! Dot%2811%29 பச்சை முட்டை மற்றும் அரைவேக்காடு முட்டை சாப்பிடக் கூடாது.

கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி! Dot%2811%29 பச்சை முட்டை சேர்த்த Moyanaise  மற்றும் Mousses இரண்டையும் உணவில் சேர்க்கக் கூடாது.

கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி! Dot%2811%29 காலிஃப்ளவரை சமைக்கும்போது, இளம் சூடான உப்பு நீரில் பத்து நிமிடங்கள் வைத்திருந்து பிறகு சமைக்கவும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி! Empty Re: கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி!

Post by சிவா Mon 24 Mar 2014 - 20:11

கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி! Bold%284%29  கலப்பு எண்ணெயின் விகிதம்


கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி! P56aஒமேகா 3 போல், கொழுப்புச் சத்தில் அடங்கிய மற்றும் ஒரு சத்து ஒமேகா 6. தாய் மற்றும் சேயின் உடல் நலத்துக்கு அவசியம் தேவைப்படும்.  இவை இரண்டும் சரியான விகிதத்தில் (4:1) அமைந்திருப்பது நல்லது. இந்த சத்துக்களைப் பெற, கலப்பு எண்ணெயை உபயோகித்தல் முக்கியம். மூன்று டேபிள்ஸ்பூன் அளவுக்கு ஒரு நாளைக்கு சமையலில் உபயோகிக்கலாம்.

எண்ணெய் - விகிதம்
சூரிய காந்தி எண்ணெய்:சோயாபீன்ஸ் எண்ணெய் - 1:1
சூரிய காந்தி எண்ணெய்: பாமாயில்: கடுகு எண்ணெய் - 1:1:1
நல்லெண்ணெய்: சோயா பீன்ஸ் எண்ணெய் - 1:1
சோயா பீன்ஸ் எண்ணெய்: பாமாயில் - 1:1
மக்காச்சோள எண்ணெய்: நல்லெண்ணெய் - 1:1


விகடன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி! Empty Re: கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி!

Post by மாணிக்கம் நடேசன் Tue 25 Mar 2014 - 10:14

இப்ப தான் தெரியுது, ஏன் உங்க பொண்ணு எப்பவுமே கடு கடுன்னு இருக்காங்கன்னு. இருக்கட்டும் இருக்கட்டும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி! Empty Re: கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி!

Post by krishnaamma Tue 25 Mar 2014 - 13:16

அருமையான திரி சிவா புன்னகை தொடருங்கள் !  அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி! Empty Re: கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum